Jump to content

சுபேஸ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  3831
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Posts posted by சுபேஸ்

 1. அறிந்த நாளில் இருந்து சொல்லவும் எழுதவும் வார்த்தைகள் இல்லாமல் பேரதிர்ச்சியாக இருக்கிறது.. எழுத ஆயிரம் நினைவுகள் இருக்கிறது.. தனிமையையும் வெறுமையையும் போக்க அவருக்கு நண்பர்கள் எல்லாம் எழுத்தின் மூலம் கிடைத்தவர்களே.. அந்த எழுத்து உலகும் யாழின் மூலமே அவருக்கு அறிமுகமானது.. யாழ் ஒவ்வொரு காலப்பகுதியில் ஒவ்வொரு விதமானதாக கருத்தாளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும்.. நெடுக்ஸ் கூறியதுபோல் அவர் யாழில் எழுதிய காலங்கள் சுய ஆக்கங்களின் பொற்காலம்.. அவருக்கு முன்னாடியே சென்றுவிட்ட தமிழ் இலக்கிய உறவுகளிடம் சென்று சேர்ந்து நிம்மதியாக இருப்பார் என்று நம்புகிறேன்..

   

 2. 15027805_10154220717804891_199258905311715037092_10154220717869891_530533692590915079016_10154220717864891_2365051551384

  மனவருத்தமாக இருக்கிறது அவர் மனதை புண்படுத்திவிட்டோமோ என்று இப்பொழுது நினைக்க. கருத்துகூறுகிறோம் என்று சில மனித மனங்களை கூறுபோட்டிருக்கிறோமே.. என்று...

 3. மிகவும் மனவருத்தமான செய்தி.. தீவிரமான கடவுள் பக்தர்... மதம் பற்றிய விமர்சனப்பதிவொன்றிற்காக என்னுடன் முரண்பட்டு முகநூலில் இருந்து நீக்குவதாக சொல்லிவிட்டு நீக்கி இருந்தார்.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

 4. ஆயிரம் விருப்பு புள்ளிகளை அள்ளிக்குவித்த தம்பி சுபேசுக்கும் சுமோ அக்காவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்! தம்பி சுபேசு சொல்வளி கேட்டு ஓடாமல் யாழில் நிக்கனும் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன்..நான் இவ்வாறன திரிகளுக்குள் எல்லாம் வாறதில்லை..பட் வேறை இடங்களில் அதிகம் நேரம் செலவிடுவதில்லை,எழுதுவதில்லை அதனால் சிலரை முடிந்தவரைக்கு இந்த இடத்தில் நிற்க வைக்கனும் என்று விருப்பம்..இதற்கு மேல் உங்களை வற்புறுத்திக் கேக்க மாட்டன்.

  My dear akka.... எப்பவும் என்னை ஊக்குவிப்பவர்களில் ஒருத்தங்க நீங்க... யாழ் என்னை தூக்கி வளர்த்தது அ ஆ எழுத.. அதனால் யாழில் எழுதாமல் விடுவதா.. நன்றி அக்கா அன்புக்கு இனிமேல் நிறைய நேரம் கிடைக்கும் கண்டிப்பா பழையபடி எழுதுவேன் அக்கா..

  சுபேஸ், சுமே ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.

  நன்றி நுணா அண்ணா... வேலைகளிற்கு நடுவில் யாழை மட்டுறுத்தியபடி இப்படியான திரிகளிலும் கலந்து கொள்கிறீர்கள்...

 5. யாழில் நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் மெசோ ஆன்ரிக்கும் சுபேஸுக்கும் வாழ்த்துக்கள்.

  சுபேஸின் கவிதை, கதைகளைப் படித்துக் கனகாலமாகிவிட்டது. புதிதாகக் குட்டி ஒன்றை மாட்டிவிட்டதால் இலக்கியம் படைக்க நேரமில்லைப் போலும்! :unsure:

  மாட்டியது பிரெஞ்சுக் குட்டி என்பதால் இப்பொழுது பிரெஞ்சு மொழியில் இலக்கியம் படைக்க ட்றை பண்ணுறன்... :D நன்றி அண்ணா அன்புக்கும் வாழ்த்துக்கும்.. :)

  ஏதோ ஒரு இடத்திலை படைக்கிறம்தானே இலக்கியம்.. :lol:

  அடிங்... நக்கலு... :D கொன்னுபுடுவன் கனடா மகளிர் அணிட்ட சொல்லி மவனே... :D

 6. அண்மையில் பச்சைகளை குவிச்ச சுமே, சுவி மற்றும் சுபேஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி சுவாமிஜி :D

  பச்சைப்புள்ளிகளால் 1000 ஐ தாண்டிய சுபேஸ் மற்றும் சுமே அக்காக்கு பாராட்டுக்கள். அவர்களை வாழ்த்தப் பதிவிட்ட தமிழ்சிறீ அண்ணாக்கு வாழ்த்தும் நன்றியும். :)

  நன்றி நெடுக்ஸ் அண்ணா

  என்னை வாழ்த்திப் பதிவிட்ட உடையார், தமிழ்ச் சிறி ஆகியோருக்கு நன்றி. மற்றும் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மனதோடு நன்றி கூறிக்கொள்கிறேன்.

  சுபேசுக்கு ஆயிரம் பச்சைப் புள்ளிக்கான வாழ்த்துக்கள்

  நன்றி அக்கா

 7. சுமே அக்கா சுண்டல் மற்றும் பச்சைப்புள்ளிகளை பெற்ற அத்தனை உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. இந்தப்பக்கம் அடிக்கடி வராததால் நிறையப்பேரை மிஸ் பண்ணிட்டன்.. அத்தனை பேருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்.. என்றும் யாழுடன் இணைந்திருந்து யாழை யும் தமிழையும் வளப்படுத்துங்கள்...

  தம்பி ஓங்கி அடிக்கிற கை கவனம்

  ஓங்கி அடிச்சா ஒண்டரை டண் வெயிற்.. :D

 8. காலங்கள் நகர்ந்தாலும்,

  கனவுகள் மறைந்தாலும்,

  கடந்து போன சோகங்கள்...,

  கரங்கள் தழுவி விடை தந்த சொந்தங்கள்...'

  மூக்கில் இன்றும் மணக்கும் மண் வாசனை..,

  என எதையும் மறக்காதவன் !

  எழுதும் கவிதைகள் கூட,

  ஏக்கம் மட்டும் சுமந்து வரும்..!

  இளமைக்காலம் முழுதும்,

  பனியில் கரைந்து போகின்ற,

  பிரமை தாங்கி நிற்கும்!

  பணத்தையும், பகட்டையும்,

  பன்னீர் தெளித்து...,

  மறைக்கப் பட்ட வேர்வையையும்,

  மெதுவாய்த் தொட்டுச் செல்லும்!

  இருந்தும்....,

  கவிதைகளை மட்டும்,

  எங்கோ ஒளித்த படி,

  எங்களுக்கு நிலாக் காட்டுகிறாய்! :D

  வாழ்த்துக்கள் சுபேஸ்!

  You made me cry Anna.... நன்றி அண்ணா...

  ஆயிரம் அல்ல பல்லாயிரம் பச்சை வாங்க வேண்டிய சுபேஸ் ,தன் மௌனத்தை கலைக்க வேண்டும் .இல்லையேல் இழப்பு எங்களுக்குத்தான் .மீண்டும் இயல்பாக களமாட வா நண்பா :)

  நன்றி தலைவா திண்ணையில் நமது கோழிக்கடை அரட்டைகள் ஞாபகம் வருது.. :D

  வாழ்த்துக்கள் சுபேசு..! :D

  நன்றிங்கண்ணா.. :) அவ்.. :D

  1000 பச்சை புள்ளிகளைப் பெற்ற சுபேஸுக்கு, இனிய வாழ்த்துக்கள். :wub:

  இவர் இணைந்த புதிதில், திண்ணை உட்பட எல்லாப் பகுதிகளிலும்......

  ஆர்வத்துடனும், நகைச்சுவையுடனும் எழுதிக் கொண்டிருந்தவர்.

  நல்ல எழுத்தாற்றல் இருந்தும், அண்மைக்காலமாக அமைதியாக இருப்பதாக உணர்கின்றேன்.

  அருமைத்தம்பி சுபேஸ், தனது மௌனத்தை கலைத்து...

  முன்பு போல்.... யாழில் எழுத வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். :)

  நன்றி அன்பு அண்ணா...

  1000 பச்சை புள்ளிகளைப் பெற்ற

  சுபேஸுக்கு வாழ்த்துக்கள்

  நன்றி வாத்தியார் அண்ணா.. என்ன பள்ளிக்குடத்தை இப்பிடி இழுத்து மூடிப்போட்டியள்? தமிழ் சிறி அண்ணை சிலேட்டும் கையுமா திரியிறார்.. :D

  வாழ்த்துக்கள் தம்பி சுபேஸ்..

  நன்றி அண்ணா.. பரிமளம் அக்காவை சுகம் கேட்ட தாய் சொல்லவும்... :D

  ஆயிரம் விருப்பு புள்ளிகளை அள்ளிக்குவித்த தம்பி சுபேசுக்கும் சுமோக்காவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

  1000-large.jpg

  நன்றி அன்பு அக்கா..

  1000 பச்சைப்புள்ளிகளை பெற்ற சுபேஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி துளசி..

 9. அதை மறக்க முடியுமா? :rolleyes: புங்கை, சுபேஸ், ஜீவா ஒருத்தரும் மறக்க மாட்டினம்.. :lol:

  கீ கீ கீ.. பயங்கர ஞாபக சக்தி.. இன்னும் ஞாபகம் வச்சிருக்கிறியள்.... :D

  want9164-1cIOLP1383287193.jpgphoto-5023.jpg?_r=1402922221Moving-picture-flashing-pulsing-twinklin

  1000 பச்சை புள்ளிகளைப் பெற்ற சுபேஸுக்கு, இனிய வாழ்த்துக்கள். :wub:

  இவர் இணைந்த புதிதில், திண்ணை உட்பட எல்லாப் பகுதிகளிலும்......

  ஆர்வத்துடனும், நகைச்சுவையுடனும் எழுதிக் கொண்டிருந்தவர்.

  நல்ல எழுத்தாற்றல் இருந்தும், அண்மைக்காலமாக அமைதியாக இருப்பதாக உணர்கின்றேன்.

  இனிய நண்பன் சுபேஸ், தனது மௌனத்தை கலைத்து...

  முன்பு போல்.... யாழில் எழுத வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். :)

  நன்றி தலைவா.. தங்கள் வழியில் இத்தொண்டன் பயணிப்பான் என்று இத்தால் உறுதி எடுத்துக்கொள்கிறேன்.. (மேசையில் ஓங்கி அடித்து சத்தியம் செய்வதாக கற்பனை செய்து கொள்ளவும்..) :D

 10. அன்பும் மிகுந்த பிரியங்களும் வாழ்த்துக்களுக்கு சாந்தி அக்கா,துளசி,இணையவன் அண்ணா,நெடுக்ஸ் அண்ணா,புத்தன் அண்ணா,சுமே அக்கா, வாத்தியார் அண்ணா,அன்புத்தம்பி,யாயினி அக்கா,நிழலியானந்தா சுவாமிகள்,தமிழினி அக்கா :) , கு.சா அண்ணா,  தமிழ் சிறி  அண்ணா, உடையார் அண்ணா, புங்கை அண்ணா, நுணா அண்ணா, கறுப்பி,அலை அரசி.. 

 11. இனிய அண்ணணிற்கு அன்பும் வாழ்த்துக்களும்... காவோலை வேலி இன்னமும் காதுக்குள் சரசரக்கிறதோ..? யாழில் புழுதிமண்வாசத்தையும்,காவோலைவேலிகளின் சரசரப்புகளையும் எப்போதும் கிளப்பிக்கொண்டிருங்கள்...ஊர்க்காற்றை உங்கள் எழுத்துக்களில் அப்பப்ப ஆழ்ந்து இழுக்கவேண்டும்...

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.