Jump to content

சுபேஸ்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3833
  • Joined

  • Last visited

  • Days Won

    34

Posts posted by சுபேஸ்

  1. இருந்தும் ஓர் ஆதரவற்ற தாயின் அந்திம காலத்தில் அவரது தாகம் தீர்க்கும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் தந்த வரமாக எண்ணி பிரியா இறைவனுக்கு நன்றி கூறினாள்.

    நன்றி அக்கா..நல்ல ஒரு பகிர்விற்கு..இப்படியான இல்லங்களில் வேலை செய்பவர்களிடம் இப்படி பலநூறு கதைகள் இருக்கும்...நீங்களும் இந்த துறையிலேயே வேலை செய்வதால் தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களை பதியுங்கள் அக்கா...

  2. சில நேரங்களில் சிலமனிதர்கள் நம்மை ஆச்சரியங்களாக கடந்துபோவார்கள்...சில பேர் வாழ்க்கை மீதான பிடிப்புக்களை ஏற்படுத்துவார்கள்...சில மனிதர்கள் வாழ்க்கையையே புரட்டிப் போடுவார்கள்..சில மனிதர்கள் ஒரே கருத்துக்களில் சந்தித்து புருவங்களை உயர்த்த வைப்பார்கள்...உங்களைப்போலவே கருத்துக்களை எண்ணங்களை கொண்டவர்களை நாளந்த வாழ்க்கையில் சந்திப்பது பலருக்கு இலகுவாக இருக்கும்..பலருக்கு கடினமாக இருக்கும்..நான் சந்தித்த மனிதர்களில் என் கருத்தியலை சிந்தனையை கொண்ட மனிதர்கள் என் முன்னால் உள்ள உலகத்தில் நான் சந்தித்தது மிகச்சிலரே...எனது நண்பர்கள் பலரும் எல்லோரையும் போலவே சாதரண நடைமுறை வாழ்க்கையில் சிக்கி சுழன்று அவை பற்றி சிந்திப்பதும் பேசுவதுமாகவே இருப்பது எனக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும் யாதார்த்த உலகம் அதுதான் என்பதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது..ஆனால் யாழ் இணையம் அந்த குறையைப் போக்கி இருக்கிறது..எனது சிந்தனைகள் பொருந்திப்போகும் பல மனிதர்களை இங்கு சந்தித்ததால்தான் யாழை விட்டு என்னால் விலகிப்போக முடியலை போலும்..அப்படி சந்தித்த மனிதர்களில் நிழலி அண்ணாவும் ஒருவர்..என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...

  3. யாழின் முன்னைய உறுப்பினர் சந்திரவதனா அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...எனது ஆரமபகாலங்களில் எழுத்துலகின்மீது ஈடுபாட்டை கொண்டுவரவைத்த எழுத்துக்களில் உங்களதும் ஒன்று அக்கா...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் அக்கா..
     
  4. நவம் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...நாம் எம் வாழ்நாளில் இனி பார்க்கவே முடியாத ஒரு விசேட திகதியில் (12-12-12) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்...இப்படி ஒரு திகதி இனி இன்னும் நூறு ஆண்டுகளின் பின்பே வரும்...மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் அண்ணா...

  5. மனசுகளை அணிந்து கொண்டிருக்கும் ஆகாயம்..

    - லால் சலாம்.

    என்னிடம்

    எந்த வலையுமில்லை

    வீசிப்பிடிக்க,

    நீ வெறும் மீனுமல்ல

    துள்ளிக்குதிக்க.

    பாச

    நீரூற்றுத்தான்

    மனிதர்கள்.

    நீ

    உன்

    அன்பை தெரியப்படுத்தினாய்

    அங்கீகரித்தேன்

    பிறகு

    உன் அன்பை

    எடுத்துக்கொண்டு போகிறேன்

    என்கிறாய்

    மெளனம் காத்தேன்.

    என்

    பிரியத்துக்குரிய பெண்ணே

    அன்பை

    கொடுக்கவும் முடியாது

    எடுக்கவும் முடியாது

    அது

    மனசுகளை

    அணிந்து கொண்டிருக்கும்

    ஆகாசம்,

    ஆழம் காணா கடல்,

    அவ்வளவுதான்....

  6. [size=5]வனப்பூ[/size]

    [size=5]-நிலாரசிகன்.[/size]

    [size=6]நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது

    எதனுடனும் ஒப்பிட முடியாதது.

    கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறும்

    விரல்களின் சிலிர்ப்பில் மின்மினிகள்[/size]

    [size=6]உடலெங்கும் மின்னி மறையும்.[/size]

    [size=6]விடியலுக்காக காத்திருக்கும் பறவைகளின்

    செளந்தர்ய மெளனமென[/size]

    [size=6]மடியில் புரள்கின்றன உன் மோனங்கள்.

    இதழ்களில் பதிந்து பிரியும்

    இதழ்களில் நிரம்பித்தளும்புகிறது

    காதலென்னும் பெருங்கடல்.

    காட்டிடையே அமைந்திருக்கும்

    சிறுகுடியில் நடுவே

    உடலெங்கும் பூக்கள் மலர

    சிவந்திருக்கிறாய்.

    வனப்பூக்களின் வசீகர வாசம்

    நம் அறையெங்கும் படர்ந்திருக்கிறது.

    நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது

    எதனுடனும் ஒப்பிட முடியாதது.

    ஒரு

    வனப்பூவின் உயிர் நிரப்பும்

    அதீத மணத்தைப்போல..[/size]

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.