உங்களது கூற்று இந்த விட்யத்தில் சரி என்றே என்னளவில் கருதுகிறேன், உலகம் பல துருவங்கள் கொண்ட பொருளாதார அமைப்பிற்கு மாறும்ப்போது, மேற்கு நேரிடியாக பாதிப்பிற்குள்ளாகும்.
1. வியாபார மையமாக உள்ள மேற்கு என்ற நிலை மாறி ஆசியா அந்த இடத்தினை பிடிக்கும்.
தற்போதுள்ள வழங்கல் பாதையில் மாற்றம் ஏற்படும்(Supply chain) இதனால் ஒப்பீட்டளவில் மேற்கில் பொருள்களின் விலை அதிகரிக்கும்.
உதாரணமாக நியூசிலாந்து உலகின் ஒரு கோடியில் உள்ளது அதன் சனத்தொகை 5 மில்லியன் மட்டுமே அங்கு பொருள்களின் விலை அதிகமாக காணப்படுவது இதனாலேயே.
2. மேற்கின் பொருளாதார பலமே சுரண்டல் பொருளாதாரம், அடிப்படையில் மேற்கின் உற்பத்தி பொருள்கள் அதிகரித்த விலையில் 3ஆம் உலக நாடுகளுக்கு சந்தைப்படுத்தப்படும்(அதிகரித்த சனத்தொகை), ஆனால் 3ஆம் உலக நாடுகளின் பொருள்கள் ஒப்பீட்டளவில் பல மடங்கு குறைவாக இருக்கும். இந்த மாற்றம் இந்த 3ஆம் உலக நாடுகளின் பொருள்களின் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம், அதனால் மேற்கில் வதியும் ஆசியர்களின் வாழ்க்கை செலவு ஒப்பீட்டளவில் மற்றைய மேற்கத்தவர்கலை விட அதிகரிக்கும்.
3.மேற்கு நாடுகளுக்கிடையே அமைதியின்மை ஏற்பட்டு அவர்களுக்கிடையே போர் மூழும் ஆபாயம் ஏற்படலாம்.
ஆனாலும் இந்த பல்துருவ பொருளாதாரம் பல நன்மைகளையும் கொண்டுள்ளது தற்போதுள்ள உற்தியற்ற பொருளாதார நிலை இல்லாமல் போகும்.
உலகில் பட்டினி சாவு குறைவடையும், போசாக்கின்மை, தாய் மற்றும் சேய் மரணவிகிதம் குறையும்.
ஒப்பீட்டளவில் உலக கல்வியறிவு அதிகரிக்கும், அதனால் நீண்ட கால அடிப்படையில் போர் குறைவடையலாம்.
இந்த பல்துருவ உலக பொருளாதார மாற்றம் ஒட்டு மொத்த உலகிற்கு நன்மை தரும் விடயம், ஒரு தரப்பு பாதிப்படையலாம் ஆனால் உலக நன்மையுடன் பார்க்கும்போது அது பரவாயில்லை என கருதுகிறேன்.
இப்படிதான் நடக்கும் என்றில்லை, எனது கருத்து தவறாக இருக்கலாம்.