Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1005
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by vasee

 1. எனது கருத்து தவறாக இருக்கலாம். ஏன் இலங்கை தற்போதய நிலையில் கடன் வாங்கி மீள முடியாது எனக்கூறினேன் என்றால். கிட்டத்தட்ட 46% அரச செலவில் கடனுக்கு வட்டி செலுத்துவதிலேயே செலவாகிறது என நினைக்கிறேன் (சரியாக நினைவில் இல்லை). கடந்த ஆண்டு இலங்கையின் வரி வருமானத்தில் இலங்கையின் கடனுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 70% அளவில் இருந்தாக நினைவில் உள்ளது. இந்த நிலையில் மேலதிக கடனால் வட்டி செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்குமேயன்றி குறையாது என நினைக்கிறேன். அரசினால் ஒருநிகர பாதீட்டினை உருவாக்க முடியாமல் உள்ள நிலையில் எவ்வாறு மேலதிக கடனுக்கான வட்டியினை செலுத்த முடியும்? இது வருமானம் குறைந்தவர்கள் கடனட்டையினை பயன்படுத்துவது போல ஒரு மோசமான விளிவை உருவாக்காதா? ஆனால் அன்னிய செலாவணி இருப்பு தொழில்துறைக்கு அவசியமாகிறதுதான், ஆனால் இப்போது வாங்கும் கடனில் பெரும் பகுதி நுகர்வு செலவாக உள்ளது. உங்கள் கருத்து தவறு என்று நிறுவ முயலவில்லை, ஆனால் இந்த கேள்விகள் எனது மனதில் உள்ளது, அ த்துடன் எனக்கு ஒரு சிறிய தெளிவே இது தொடர்பாகவுள்ளது.
 2. https://www.smh.com.au/politics/nsw/we-can-t-wait-nsw-victoria-demand-urgent-action-on-worker-shortages-20220526-p5aou6.html https://immi.homeaffairs.gov.au/visas/getting-a-visa/visa-listing/temporary-skill-shortage-482/short-term-stream https://immi.homeaffairs.gov.au/visas/working-in-australia/skill-occupation-list
 3. இது ஓர் ஆலோசனை அல்ல, அத்துடன் இதனை இங்கு எழுதுவதும் சரியல்ல, ஆனால் அங்குள்ள நிலமையினை பார்க்கும் போது, எனது கடந்த கால அனுபவத்தினை கூறுகிறேன், மத்திய கிழக்கு நாடுதான் என்றில்லை கிழக்காசியாவிலும் வாய்புகள் உண்டு, முகவர்களுகு பணம் செலுத்த வேண்டியதில்லை. எங்கெல்லாம் தமிழ் பேசும் மக்கள் உள்ளார்களோ அங்கு சென்றால் அவர்கள் உங்களை அரவணைப்பார்கள் ( எவ்வாறு மேற்கு நாடுகளில் இலங்கை தமிழர்கள் பிறநாட்டு தமிழர்களை அரவணைப்பது போல). அது கடினமான பயணமாக இருக்கும், வேலை பெறுவதற்கு முன்னரான காலப்பகுதியினை தாக்கு பிடிக்க வேண்டும், கடினமான வேலைகள், அங்குள்ளவர்கள் செய்ய விரும்பாத நீண்ட கடினமான வேலைகள் இலகுவாகக்கிடைத்துவிடும், ஆனால் போவதற்கு முன் தொடர்புகள் எடுத்து விட்டு சென்றால் வசதியாகவிருக்கும், நான் போன போது எந்த தொடர்போ, காசோ இல்லாமல் அவசரமாக சென்றதனால் மிகவும் கடினமாகவிருந்தது.
 4. நீங்கள் கூறுவதும் சரிதான், இலங்கை இந்த பொருளாதார புதைமணலில் வெளிவருவதாயின் பிற நாட்டுக்கடனை நம்பியிருக்கக்கூடாது, அது பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினை அதிகரிக்குமேயன்றி குறைக்காது. புலம்பெயர் இலங்கையினர் ஒரு நல்ல தெரிவுதான். இலங்கையின் அமைவிடம், உயர் கல்வியறிவு ரீதியாக இலங்கை சந்தைப்பொருளாதாரத்திற்கு சிங்கப்பூரினை விட சாதகமானது. ஆனால் இலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள், சிறுபான்மை சமூகத்திற்கு செய்த அநீதி, எவ்வாறு கிட்லர் சாமானிய ஜேர்மனியினரின் வளங்களை கொள்ளையிட்டு யூதர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள் என்பது போல முன்பு தமிழர்கள் பொருளாதார உச்சநிலைக்கும் சிங்களவர்களின் வறுமைக்கு காரணம் (வருமான ஏற்றத்தாழ்வு) தமிழர்கள் என்ற ரீதியில் தமிழர் சொத்துகளை அபகரித்து (நில உச்ச வரம்பு சட்டம்) பெரும்பான்மையினருக்கு கொடுத்தல், இனக்கலவரங்களை உருவாக்கி தமிழரின் வளங்களை பிற சமூகம் அபகரித்தில் இருந்து ஆரம்பித்து இலாங்கையின் சாபக்கேடு. புலம்பெயர் தமிழர்கள் இனி எந்த அடிப்படையில் இந்த பெரும்பான்மை சிங்கள அரசினை நம்பி பயணிப்பார்கள் என்று தெரியவில்லை, ஆனால் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தமிழர்களையும் பாதிக்கும். இலங்கையின் அரசியல் அமைப்பிற்குள் வட கிழக்கு மாகாண அரசினால் எதுவும் செய்ய முடியாது, நிதி, காணி, காவல்துறை அதிகாரங்கள் கூட இருந்தாலும் (தற்போது அந்த அதிகாரங்கள் கூட இல்லை), இலங்கை பணம், இலங்கை மத்திய வங்கியினூடாக வட கிழக்கு மாகாணங்களால் எதுவும் செய்துவிட முடியாது.
 5. அரசு தற்போது ஐ எம் எப் கடனை எதிர்நோக்கியுள்ளது, அதனால் அரசின் செலவுக்கு வரி அதிகரித்தல் அல்லது பணத்தினை அச்சிடுவதினை தவிர வேறு தெரிவு அரசுக்கு இருப்பதாகத்தெரியவில்லை. இதனால் பொருளாதாரம் மேலும் மேலும் சீரழியும். எதிர்வரும் காலத்தில் இப்போது அரசினால் நட்டத்தில் இயக்கப்படும் துறைகள் தனியார் மயப்படுத்தப்படும், அதன் போது இவ்வாறான தேவையற்ற ஊழியர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள். அவுஸ்ரேலியாவில் தனியார்துறையில் பொருளாதார சூழ்நிலைகளை காரணம் காட்டி சம்பளமில்லாமல் வீட்டில் நிறுத்தி வைக்கும் அதிகாரத்தினை அடிப்படை வலது சாரி அரசு வழங்கியுள்ளது. இது சரியான முடிவுதான், அண்மையில் எமது நிறுவனமும் இந்த நடைமுறையினை அமுல்படுத்தவுள்ளதாகக்கூறியுள்ளது (மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்). கல்வி, மருத்துவம் இந்த இரண்டிலும் அரசு கைவைக்கப்போகிறது என்பது போல தெரிகிறது (நுணாவிலான் இரணிலின் ஒளிப்பதிவொன்று பதிவேற்றியுள்ளர்). பல தற்காலிக ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம்.
 6. இலங்கைக்கு கடன் வழங்கும் சில நாடுகள் வெறும் தமது பொருளாதார நலனை அடிப்படையாகக்கொண்டு கடன் வழங்குகின்றன, குறிப்பாக ஜப்பான், பங்களாதேசம் போன்றவை அவர்களிடம் இலங்கை கடன் பெறலாம் என நினைக்கிறேன் (சில வேளை அவர்களும் அரசியல் இலாபத்தினை நோக்காகக்கொண்டு உதவி செய்கிறார்களோ தெரியாது). ஒரு நாட்டிற்கு கடன கொடுப்பதால் எவ்வாறு கடன் கொடுக்கும் நாட்டிற்கு நன்மை? உதாரணத்திற்கு சீனாவினது நிகர ஏற்றுமதி நிலுவையால் ( இறக்குமதியினை விட ஏற்றுமதி அதிகம்) அவர்களது பணத்தின் பெறுமதி அதிகரிக்கும் அது அவர்களது ஏற்றுமதியினை பாதிக்கும் ( சீனாவின் பொருள் விலை அதிகமாகிவிடும்), அதனை தடுக்க இரண்டு வகையினை கையாள்கிறார்கள் 1. அமெரிக்க பணமுற்யினை வாங்குதல், அதாவது அமெரிக்க அரசுக்கு கடன் கொடுத்தல் அதன் மூலம் தமது அன்னிய செலாவணி இருப்பினை குறைத்தல். 2.தமது நாணயத்தினை நடைமுறைக்கு விரோதமாக அதிகமாக அச்சிடுதல். இதனை dirty float என்பார்கள். இந்தியாவிடம் கடன் பெறும்போது அதனை இந்திய பொருளை வாங்க வேண்டும் என்ற நிபந்தனையில் செய்யப்படுவதால், இதில் இந்தியாவிற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும் தனது ஏற்றுமதியினை அதிகரிப்பதுடன், தமது நாணயப்பெறுமதியினை குறைப்பதற்கும் வழி உண்டு, அத்துடன் அரசியல் ரீதியாக இலங்கை மீது ஆதிக்கமும் செலுத்தலாம்.
 7. இலங்கை நாணயம் மதிப்பிழந்த பின் வேறு நாட்டு நாணயங்களை விட இலங்கைக்கு, இந்திய நாணயம் சிறந்த தெரிவாக இருக்கும் என நானும் நினைக்கிறேன், சில மாதங்களின் முன் அது பற்றி வேறு ஒரு திரியில் குறிப்பிட்டதாக நினைவில் உள்ளது. இவ்வாறு பல நாடுகளில் நடைமுறை உள்ளது, அதனை டொலரைசேசன் எனக்கூறுவார்கள்.
 8. மகிந்த 2.0? பொது மக்களை ஒருவழி ப்ண்ணாமல் விடமாட்டார்கள் போல இருக்கு!
 9. இலங்கையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முற்றாக வெளியேறும் நிலை ஏற்படும், குறிப்பாக ஆடை தாயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருளை பெற்று கொள்ளுவதற்கு தேவையான அன்னிய செலாவணியில், ஏற்கனவே உள்ள தட்டுப்பாடு, அடிப்படை பொருளாதார கட்டமைப்பிற்கான செலவீடு குறையும் போது ஏற்படும் வினியோகச்சிக்கல், உற்பத்தி செலவு அதிகரித்தல் என்பன நீண்டகால அடிப்படையில் இலங்கை வெளிநாட்டு முதலீட்டிற்கு ஏற்புடையதற்ற நாடாக உருவாகியுள்ளது. https://tradingeconomics.com/sri-lanka/manufacturing-pmi பொதுவாக PMI 50 இற்கு குறைவாகும்போது பொருளாதார சுருக்கம் ஏற்படும் என்பார்கள், இலங்கையின் PMI (Leading indicator) சித்திரை மாதம் 36.4 வீதத்தினை எட்டி உள்ளது. இலங்கையின் பொருளாதார சரிவு எதிர்பார்த்ததினை விட அதிகரித்த விகிதத்தில் நிகழ்கிறது. ஐ எம் எப் கடன் இலகுவில் கிடைக்காது என முன்பே யாழில் கூறப்பட்டுள்ளது, ஐ எம் எப் இடமிருந்து தற்போது வெளியாகும் சமிஞ்சைகள் அதனை ஓரளவு உணரக்கூடியதாகவுள்ளது. ஐ எம் எப் கடன் ( 4 பில்லியன்) கூட இலங்கை பொருளாதார சரிவிற்கு உதவாது. தற்போது இலங்கையினில் நிகழும் விபரீதத்தினை புரிந்து கொள்ளவேண்டுமாயின் அதனை டொமினோவின் விளைவுடன் ஒப்பிடலாம். டொமினோவில் உள்ள ஒவ்வொரு டொமினோவும் அதன் 150% விளைவினை ஏற்படுத்த கூடியது, டொமினோவை வைத்து ஒரு மலையினை புரட்டி விடலாம் என கூறுவார்கள், தற்போது இலங்கையின் பொருளாதர வீழ்ச்சி அந்த அடிப்படையில் நிகழ்கிறது. முன்பு சொல்வார்கள் தமிழர்களது போராட்டம் தமிழர்களை பொருளாதார ரீதியாக 40 வருடம் பிந்தள்ளி விட்டது என்று ஆனால் இப்போது இலங்கையில் நிகழும் பொருளாதார அனர்த்தம் அதனை விட மோசமானதாகும்.
 10. இலங்கையின் அன்னிய செலாவணி கையிருமப்பு 3 மாத கால அளவினை விட குறைந்த பின்பே இறக்குமதி செய்ய்யப்படும் செயற்கை உரத்தடை இலங்கையரசினால் கொண்டுவரப்பட்டதாக நினைவில் உள்ளது ( கடந்த ஆண்டு யூன் அல்லது யூலை காலப்பகுதியில் என நினைக்கிறேன்). இல்ங்கையரசு அன்ன்னிய செலாவணி நெருக்கடியினாலேயே அந்த முடிவுக்கு வந்தது. Sky news, 2GB, மற்றும் சில பத்திரிகைகள் வலது சாரி கட்சியினது கொள்கை பரப்பு ஊடகங்கள் (ரூபர்ட் மெர்டொக் ஊடகங்கள்). 2008 இல் உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது பாட்டாளிக்கட்சி, பொருளாதாரத்தினை தூண்டுவதற்காக பொது செலவினை அதிகரித்து, குடும்பங்களுக்கு காசு வழங்கி (Baby boomers) பொருளாதாரத்தினை தூண்டிய விடயத்தினை, மக்களிடம் பாட்டாளிக்கட்சியின் தவறான கொள்கை என ஆழமாக ஏற்படுத்திவிட்டார்கள். ஆனால் கோவிட் காலத்தில் வலதுசாரி லிபரல் அதனை விட மிகப்பெரிய பற்றாக்குறை பாதீட்டினை உருவாக்கியமையினை பாராட்டும் அதே ஊடகங்களே ஒரு காலத்தில் மற்ற கட்சிக்கெதிராக கருத்து தெரிவித்தவை. இதே ஊடகங்கள் காலநிலை மாற்றம் பொய்யென பெருமளவில் பிரச்சாரம் செய்து அதனை பெருமளவிலான மக்கள் நம்பியிருந்த காலகட்டத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு என்பன மக்களை யதார்த்தத்தினை உணர வைத்துள்ளன (காலனிலை மாற்றம் பொய்யென அவர்கள் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம்). இந்த ஊடகங்களில் உள்ள பிரபலங்கள் துறைசார் நிபுணர்கள் அல்ல, ஆனால் எந்தவித குற்ற உணர்வுமின்றி கருத்துகளின் உண்மைதன்மை பற்றிய கவலை இன்றி கருத்து தெரிவிப்பார்கள். புதிய பொருளாதாரத்தில் Digital eco system ஒரு முக்கியமான விடயம், ஆனால் அதனை, வெள்ளை யானை, அறைக்குள் யானை வந்துவிட்டது என்று சொல்லுவார்கள். இந்த ஊடகங்கள் மக்கள் உணர்வுகளை தூண்டிவிடும் வகையிலும், ஒரு வியாபாரப்பொருளை சந்தைப்படுத்துவது போல தமது கருத்திணை மக்களின் மீது திணிக்கின்ற நிலை காணப்படுகிறது. இதன் பின்புலத்தில் பெருமளவு காசு புரள்கிறது. வர்த்தக நிறுவனக்கள் நெறிமுறைப்படுத்தப்படுவது போல ஊடகத்துறையினை நெறிப்படுத்தினாலேயே மக்களுக்கு உண்மை சென்றடையும். அத்துடன் ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு ஊடகத்தர்மம் என்ன என்பது தெரிந்திருக்கவேண்டும்.
 11. கடந்த காலங்களில் பாட்டாளிக்கட்சி அரச கட்டுப்பாட்டு பொருளாதார கொள்கை கொண்ட கட்சியாகவும் (Fiscal policy), பெரிய பாதீடு அதிக வரி அதிக அரச செலவு என்ற கொள்கையுடைய கட்சி. வலதுசாரி லிபரல் கட்சி சிறிய பாதீடு, குறைந்த வரி, குறைந்த அரச செலவு என்ற அதிகளவில் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டு பொருளாதார கொள்கையுடைய கட்சியாகவிருந்தது (monetary policy), ஆனால் கோவிட் லிபரல் கட்சியினை பொருளாதார தூண்டல் செய்வதற்காக பாட்டாளி கட்சி போல செயற்பட வைத்து பாதீட்டில் மிகப்பெரிய பற்றாக்குறையினை ஏற்படுத்தியிருந்தது (சரியான முடிவுதான்). எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதில் குழப்பம் இருந்தது, எனது குழந்தைகள் (11 வயது - பசுமைக்கட்சி, 8 வயது - லிபரல், 5 வயது - பாட்டாளி கட்சி) வாக்களிக்க சொன்னார்கள். வயதில் இளைய இரண்டு குழந்தைகளும் கட்சி தலைவர்களின் பெரைக்கூறி அவர்களது கட்சிக்கு வாக்களிக்க சொன்னார்கள், ஆனால் மூத்த குழந்தை மட்டும் ஏன் பசுமைக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என காரணத்தினை கூறினார். இப்போதுள்ள இளைய சமுதாயத்தின் சிந்தனை மாறுபாடு அரசியலில் பிரதிபலிக்கின்றது. இந்த teals லிபரல் கொள்கையும், பசுமைக்கட்சியின் கொள்கையும் கொண்டவர்கள் (blue + green) எனக்கூறுகிறார்கள், காலத்திற்கேற்ப கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள் என நினைக்கிறேன்.
 12. உண்மைதான் உயிரை பணயம் வைக்குமளவிற்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கமல்ல ( எனது தனிப்பட்ட கருத்து). படகில் வருபவர்களின் விண்ணப்பங்களை எவ்வாறு அவுஸ்ரேலிய அரசு எடுத்து கொள்கிறது என தெரியவில்லை ஆனால் கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் சட்ட ரீதியாக வேறு வடிவங்களில் வருவது சிறந்த முடிவு என நினக்கிறேன், அண்மையில் எமது குடும்ப நண்பர் ஒருவரது சகோதரி ஒருவர் பார்வையாளர் அனுமதியில் வந்து, மாணவ அனுமதி எடுத்துள்ளார். காலப்போக்கில் அதனூடாக வதிவிட அனுமதி பெற்றுவிடலாம் என நம்பிக்கையிலுள்ளார்கள். இது எந்தளவிற்கு சாத்தியமாகும் எனத்தெரியவில்லை? அத்துடன் இங்குள்ள பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர்கள் புதிதாக வருபவர்கள் மீது வெறுப்புடன் காணப்படுகிறார்கள், நான் அவுஸ்ரேலியாவிற்கு வந்த ஆரம்பத்தில் என்னுடன் கதைத்த, பல வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர் ஒருவர், கடைசியாக சொன்னார், அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழாக்கள் மற்ற நாட்டில் உள்ள எங்கடை ஆக்கள் போல் இல்லை, ஏனெண்டால் இங்கை இதுக்கு முந்தி இருந்த ஆக்கள் எல்லாம் படித்த ஆக்கள் எண்டு சொன்னார் (எனது கல்வி விபரங்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டு விட்டார்). அவர் என்னைதான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என தெரிந்தாலும், தெரியாதபோல கடந்துவிட்டேன். இன்னொருவர் இங்கு தமிழர்கள் செறிவாக வாழும் பகுதியில் தெருக்களில் நிகழும் வழிப்பறிகளுக்கு புதிதாக வருபவர்களை குறை சொல்லுவார் (அதற்கு எந்த ஆதாரமுமில்லாமலேயே). அத்துடன் புதிதாக வருபவர்களை அடிமட்ட (அடிப்படை கூலியின் அளவினை விட மிக குறைவான கூலி) சம்பளத்தில் எம்மவர்கள் வேலை வாங்கும் நிலை காணப்படுகிறது, அவர்களுக்கும் சட்ட ரீதியாக வேலை செய்வதில் பிரச்சினை இருக்கலாம். இன்னும் சிலர் முகத்திற்கு நேராகவே சொல்வார்கள் " நீங்கள் எல்லாம் இலங்கையில ஒரு பிரச்சினையில்லாவிட்டால் இங்கை உங்களால் வந்திருக்கவே முடியாது என்று, (அவர்கள் மாணவ அனுமதியில் வந்து பின்னர் அகதியாக அனுமதி பெற்றவர்கள் என்பது எமக்கு தெரியாது என நினைத்து கொள்வார்கள்).
 13. பொதுவாக பாட்டாளி கட்சி அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கொள்கையுடைய கட்சி, கடந்த காலங்களில் எதிர்கட்சிகள் அக்கட்சிக்கெதிராக அதனை ஒரு ஆயுதமாகப்பாவித்திருந்தனர், வாக்களிப்புநாளில் (சனிக்கிழமை), இலங்கையிலிருந்து ஒரு படகு அவுஸ்ரேலியாவிற்கு வந்துள்ளது என liberal கட்சி, மக்களின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது. அந்தளவுக்கு அகதிகள் விவகாரம் அவுஸ்ரேலியாவில் அரசியலாக்கப்படுகிறது, இந்த நிலையில் இந்த புதிய அரசு அகதிகளுக்கு சார்பானநிலை எடுக்காது என்பது தெளிவாகும். குறிப்பாக இலங்கையிலிருந்து வரும் அகதிகளை பொருளாதார அகதிகள் என போர் முடிவிற்கு பின்னர் முத்திரை குத்திவிட்டார்கள், ஆனால் அதற்கு முன்னர் வந்தவர்கள் நிலமை வேறாக இருக்கலாம். பல்வேறு தரப்பு மக்களை அவுஸ்ரேலியாவில் பார்த்துள்ளேன், என்னைப்பொறுத்தவரை தமிழர்கள் போல நேர்மையான, கடுமையான உழைப்பாளிகளை பார்த்ததில்லை, அவுஸ்ரேலியா இவர்களுக்கு புகழிடம் கொடுத்தால், அவுஸ்ரேலியாவின் பொருளாதாரத்திற்கே அதிக நன்மை (எனது தனிப்பட்ட கருத்து). பெரும்பாலும் மக்கள் நகர்ப்புறங்களிலே குடியிருக்க விரும்புகின்ற நிலையில் கிராமப்புற விவசாய பகுதிகளில் வேலை ஆட் களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. https://www.smh.com.au/politics/federal/labor-to-investigate-asylum-seeker-boat-arrival-as-frontbench-takes-shape-20220523-p5ansx.html
 14. கடந்த 3 தவணைகள் liberal ஆட்சி கொண்டிருந்தது அடிமட்ட உழைப்பாளர்களின் ஊதிய உயர்வை கட்டுப்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்தியினை அடையலாம் என்ற அடிப்படையில் வருமான கட்டுப்பாடுகளை பிரயோகித்து வந்திருந்தது. இதனால் வருமான பங்கீடு மக்களிடயே சரியான விகிதத்தில் பங்கீடு செய்யப்படாதநிலைல்யில் ஒரு சிறிய தொகுதி மக்கள் நாட்டின் 63% வளத்தினை கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது ( இது நீண்டகால நிகழ்வு). ஏற்கனவே ஊதிப்பெருத்த balance sheet ஐ வைத்திருக்கும் மத்திய வங்கி, 43 வருட குறைந்த வேலையின்மை வீதம் ,கொவிட் QE. வீட்டு விலை உள்ளடங்கலாக அனைத்து விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பெரும்பான்மை சாதாரண மக்களால் அவர்களது வீடுகளைக்கூட காப்பாற்ற முடியாது. ஆனால் அதிகரிக்கும் பண்வீக்கத்தினை கட்டுப்ப்டுத்த வேண்டும் அத்துடன் பாட்டாளி மக்களின் வருமானத்தினையும் உயர்த்த வேண்டும் அவ்வாறு உயர்த்தினால் அது மேலும் பணவீக்கத்தினை தூண்டும். அவுஸ்ரேலியா மற்ற நாடுகளைப்போல பொருளாதார நெருக்கடிக்குள் உள்ள நிலையில் புதிய அரசு அமைந்துள்ளது.
 15. 151= 72 பாட்டாளி கட்சி + 51 வலது சாரி கட்சி+ 10 சுயாதீனம் + 2 பச்சை கட்சி + 2 மற்ற கட்சிகள் + 14 முடிவுகள் தபால் வாக்களிப்பு முடிவுகளை எதிர்பார்த்துள்ளமயால் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
 16. தங்க விலை தொடர்பான மிகவும் சுவாரசியமான ஒளிப்பதிவு.
 17. தங்கம் விலை அதிகரிக்கலாம் அல்லது விலை சரியலாம் என கருதுகிறேன், வ்ரும் வாரத்திற்கான Trade analysis. எதிர்வரும் காலத்தில் எனது வர்த்தக நடவடிக்கைகளுக்கான Trade analysis இனை வார இறுதியில் யூருயூப்பில் தரவேற்ற முயற்சிக்கிறேன். இனி யாழின் மூலமாக உங்களது நெறிப்படுத்தலை பெறமுடியாதலால், எனது வர்த்தக நடவடிக்கையின் சாதக பாதகங்களை நீங்கள் குறித்த ஒளிப்பதிவின் கீழ் முடிந்தால் இணைக்கவும். வார இறுதிகளில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தலா 12 மணித்தியாலங்கள் வேலை செய்வதால் சில வார இறுதியில் பதிவிட முடியாத நிலை ஏற்படலாம்.
 18. https://www.barchart.com/etfs-funds/quotes/GLD/put-call-ratios எதிர்வரும் ஆண்டு ஆரம்பம் வரை தங்கத்தின் market sentiment பாதகமாகவுள்ளது போல உள்ளது (உறுதியாக சொல்ல முடியாதுள்ளது).
 19. உலக பொருளாதாரம் தனது இறங்கு முகத்தினை ஆரம்பித்துள்ளதா (Bear Market)? அல்லது இது ஒரு தற்காலிக பின்னடைவா (Market Correct)? தற்காலிக பின்னடைவு என்றால் முதலீட்டிற்கு வாய்ப்பான நேரம் ஆனால் சந்தை சரிவு நிலையினை அடைந்தால் அது எவ்வளவு தூரம் செல்லும் என தெரியாது. DOW theory இன் படி சந்தை ஆகக்கூடுதலான விலையிலிருந்து 20% விலை வீழ்ச்சி அடைந்தால் சந்தை இறங்குமுகம் என குறிப்பிடுகிறது, அத்துடன் தற்காலிக பின்னடைவு எனில் அதிக பட்சம் 3 மாதங்கள் வரை நீழும் எனககூறுகிறது, ஏற்கனவே 3 மாதங்களுக்கு மேலாக விலைகள் சரிவடைந்து செல்லுகிறது. அத்துடன் நஸ்டாக் குறியீடு 20% மேலாக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் S&P 500, DIJ இன்னும் 20% அளவு கோலை எட்டவில்லை. கடந்த மாதம் 10 வருட பண முறியும் 2 வருட பண முறியும் வட்டி வீதன் 2.40, 2.42 எட்டியது Market recession முன்னோடி அறிகுறி எனக்கூறப்படுகிறது, இவ்வாறு கடந்த 9 Market recession ஐயும் சரியாக எதிர்வு கூறியுள்ளது. ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் அல்லது எவ்வளவு தூரம் விலை சரிவடயும் என்பதுதான் முக்கிய விடயமாகவுள்ளது( 2019 இல் விலை 27% சரிவடைந்தது ஒரு வருடத்திற்குள்ளாகவே விலை மீண்டும் உயர்ந்து விட்டது). இரஸ்சிய உக்கிரேனிய போர் உலக பொருளாதாரத்தினை வெகுவாகப்பாதிக்கின்றது, எமது நிறுவனத்தில் பங்குனி மாத ஆரம்பத்தில் (யுத்த ஆரம்ப காலத்தில்) கூடிய கூட்டத்தில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் வருகை யுத்தத்தினால் பாதிப்புறும் ஆனால் 3 மாத இருப்பு இருப்பதனால் சமாளித்துவிடலாம் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அனைத்து மூலப்பொருளும் இக்கட்டான அளவுநிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா, இந்த போரை முடிவுக்கு கொண்டுவராமல் மக்களையும் உலக பொருளாதாரத்தினை அழிக்கிறார்கள் (இரஸ்சியாவினை மட்டும் குறைகூறவில்லை மேற்கு நாட்டினையும் சேர்த்துதான் சொல்கிறேன்)
 20. எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை. கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.
 21. இங்கு சிங்களவர்களை குறை சொல்ல முடியாது, இது இயற்கை, பல ஆயிரமாண்டிற்கு முன்பு மனிதன் காடுக்ளில் திரிந்த போது கூட்டமாக தனது பாதுகாப்பினை கருதி வாழ்ந்துள்ளான், இந்த கூட்ட மனப்பான்மை அந்த கூட்டத்தின் முடிவெடுப்பவர்க்ளின் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு தனது தவறாகவே நினைத்து நியாப்படுத்துகின்ற நிலைப்பாடுதான். காலம் மாறினாலும் மனிதனது கற்கால தற்காப்பு பொறிமுறை மாறாது, தானாகவே கற்காலம் போலவே செயல்படுகிறது. தமிழர்கள் எவ்வாறு தம்மை விட சிறுபான்மையாக உள்ள இனத்துடன் செயற்படுகிறார்கள்? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் காத்தான் குடி படுகொலைகளை பற்றிய துண்டு பிரசுரம் வினியோகிப்பட்டால் எவ்வாறு தமிழர்கள் எதிர்வினையாற்றுவார்கள்? என்ற கேள்வியினை எமக்கு நாமே கேட்டுக்கொண்டால், இனவாதத்திற்கு எமக்கும், சிங்களவர்களுக்குமிடையே உள்ள இடைவெளி புரியும். இந்த கருத்து யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல, அவ்வாறு யாராவது புண்பட்டிருந்தால், மன்னிக்கவும். எமது பார்வையிலும் மாற்றம் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஒரு முன் மாதிரியான இனமாக இருக்கவேண்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.