Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1782
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. நன்றி, உங்களது பார்வையில் எனது கருத்து சரியாக உள்ளது ஆனால் இன்னொருவரின் பார்வையில் தவறாக இருக்கும், எனக்கு தெரிந்த தரவுகளினடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்கிறேன்(எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்).
  2. நன்றி, நீங்கள் எனது கருத்தினை தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டுவிடுவீர்களோ என கவலைப்பட்டேன் ஆனால் நீங்கள் சாதாரணமாக எடுத்து கொண்டது மகிழ்ச்சி. ஆரம்பத்தில் கருத்தினை பதியாமல் விடவே முயன்றேன், கருத்தினை பதிந்தபின் அதற்காக வருந்தினேன், அதனை தவிர்த்திருக்கலாம் என, நல்ல வேளையாக நீங்கள் அதனை பெரிதாக எடுக்கவில்லை நீங்கள் உண்மையில் பெரிய மனிதர்தான்.
  3. பிரெடென்ட் வூட் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா தங்கத்தின் பெறுமதியில் அமெரிக்க நாணயத்தின் மதிப்பை பேணும் முடிவிலிருந்து பின் வாங்கியபின் அமெரிக்க நாணயத்தின் பெறுமதியினை 6 நாடுகளின்(EUR 57.6%, JPY 13.6%, GBP 11.9%, CAD 9.1%, SEK 4.2%, CHF 3.6% இதில் JPY dirty float) நாணயத்தின் மதிப்புடன் (கூடை நாணய முறைப்படி) பெறுமதி செய்தே தற்போதுள்ள நடைமுறையில் அமெரிக்க நாணயம் அன்னிய செலாவணியாக இருக்கின்றது, தனிய இந்திய நாணயத்தினை அன்னிய செலாவணியாக ஏற்றுக்கொண்டால் தற்போதுள்ள இந்திய நாணய கொள்கை சரியான மதிப்பினை பேணமுடியாது, அதனால் எந்த நாடும் தனிய இந்திய நாணயத்தினை தமக்கிடையே அன்னிய செலாவணியாக ஏற்று கொள்ளுமா என்பது தெரியவில்லை.
  4. இந்த இணையத்தளத்திலிருந்த தகவலையே கருத்தாக பதிந்திருந்தேன், நான் கேட்ட கட்டுரை நீங்கள் குறிப்பிட்ட பரணிகிருஸ்ணரஜனி கட்டுரை. உங்களது கருத்துகள் எமது கருத்தாடலுக்குள் இடையூறாக உள்ளது என்பதனை பூடகமாக கூறினேன், குறையாக கூறவில்லை ஆனால் சில வேளை சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அதனை இரசிக்க மாட்டார்கள்(பொதுவாக கூறுகிறேன்).
  5. பரணி கிருஷ்ணரஜனி எழுதியதை இணைக்க முடியுமா? டொக்ரர் சதாசிவம் என்ன தவறு செய்தார்? தனது தவறினை நியாயப்படுத்த எதற்காக குறிப்பாக மேற்கினையும் ஜப்பானையும் குற்றம் சாட்ட வேண்டும்? உண்மையாக எனக்கு விளங்கவில்லை, நீங்கள் பொதுவாக முதலில் கருத்து தெரிவித்தமையால் தரவுகளினடிப்படையில் நீங்கள் புலிகளை கூறுவதாக விளங்கிக்கொண்டேன் இதில் எனது தவறும் உள்ளது. ஜஸ்ரின் கூறியது எனக்கு, நீங்கள் புரியாமல் உங்கள் மீது அவதார் குத்துவதாக கருதுகிறீர்கள்(புரியும் என நம்புகிறேன்).
  6. நீங்கள் கூறுவது போல புலிகள் தமது தவறினை மறைக்க இப்படி ஒரு கட்டு கதையினை கட்டி விடுவதால அவர்களுக்கு என்ன இலாபம்?
  7. இந்தியா மிக இறுக்கமான currency band பயன்படுத்திவதாக நினைவில் உள்ளது (1%), இதனால் பணச்சந்தை வர்த்தகர்கள் இந்திய நாணயத்திற்கெதிராக ஜோர்ஜ் சோரோஸ் செய்ததை போல இந்திய நாணயத்தின் பெறுமதிகெதிராக வர்த்தகத்திலீடுபட முடியும் இந்தியா தற்போதுள்ள dirty float இல் அன்னிய செலாவணி நாணயமானால். இந்திய நாணயம் reserve currency ஆக பாவிக்கும் போது நன்மையுண்டு அதே நேரம் பல பாதகங்களும் உண்டு இந்தியாவுக்கு, ஆனால் நாணயத்தினை Free float ஆக வைத்திருக்காவிட்டால் வர்த்தக பங்காளி நாடுகள் அந்த நாணயத்தின் மீதான நம்பிக்கை அற்று போகும், வெளிநாட்டு வர்த்தகத்தில் reserve currency ஆக்குவதற்காக கட்டுப்பாடற்ற மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கையினை பின்பற்றினால் அதன் monetary policy இல் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என கருதுகிறேன் அத்துடன் தொடர்ச்சியாக மத்திய வங்கி தலையீடு தவிர்க்க படமுடியாததாகி விடும் என கருதுகிறேன். இந்திய நாணயம் இலங்கையில் நாணயமாக பயன்படுத்தலாம் என முன்னர் கருத்து தெரிவித்திருந்தேன், ஆனால் அதற்கும் உலக அன்னிய செலாவணி என்ற நிலைக்கு இந்தியா செல்ல வேண்டுமாயின் எதிர்நோக்கும் நடைமுறை சவால்கள் பற்றியே தற்போது கேள்வி எழுப்பியுள்ளேன். உண்மையாக இந்தியா இந்த சவாலினை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது எனக்கு புரியவில்லை. அதனை பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்.
  8. 2008 மாவீரர் தின உரை பற்றி குறிப்பிட்ட சிங்கள இராணுவதளபதி அடுத்த மாவீரர் தின உரையினை காட்டுக்குள் இருந்துதான் நிகழ்த்த வேண்டும் அதன் பின்னர் இரண்டு வருடங்களில் துடைத்தழிப்பு முடிவிற்கு வந்து விடும் என்பதாக கூறியதாக நினைவிலிலுள்ளது(சரியாக நினைவில்லை).
  9. இந்திய ரூபாவினை அன்னிய செலாவணியாக உப்யோகிப்பதில் சிக்கல் இருப்பதாக கருதுகிறேன்(எனது கருத்து தவறாக இருக்கலாம்), காரணம் இந்தியா dirty float எனும் முறையினை பின்பற்றுகிறது, இது காசின் உண்மையான பெறுமதியினை பிரதிபலிக்காது, இது இந்தியாவுடன் வர்த்தகம் புரியும் நாடுகளுக்கு பாதகமான அம்சம் ஆகும்.
  10. புரெஜெக்ட் பீகன் நீங்கள் கூறுவது போல ஒரு கட்டுக்கதையாக இருக்கலாம் (இல்லாமலும் இருக்கலாம்), 2010 - 2011 கால கட்டத்தில் முதலில் கேள்விப்பட்டதாக நினைவுள்ளது, அந்த திட்டத்தினை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்,நோர்வே மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளினால் 2005 மார்கழியில் ஒஸ்லோவில் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மே மாதம் 2006 இல் ஆரம்பிக்கப்படும் திட்டம் மே மாதம் 2009 வரை தொடரும் எனவும் அதன் பின்னர் 2 ஆண்டுகளில் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. போர் நடைபெறும் காலத்திலே புலிகளின் உறுப்பினர் யோகி இது பற்றி கீழுள்ள காணொளியில் கூறுகிறார். https://eelam.tv/watch/project-beacon-to-destroy-ltte-yogi-speech_vmWvdTiCQJxBqr1.html இது பற்றிய ஆதாரம் ஏதாவது விகிலீக்ஸில் இருக்கக்கூடும். அது தவிர இரகசிய ஆவணங்கள் வெளியாவதற்கு வாய்ப்பில்லை.
  11. ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன். Confirmation bias
  12. எச்சரிக்கை! எந்தவித அரசியல் பின்புலமுமற்ற(Non - Biased) பார்வையாளர்களுக்கு மட்டும். இந்த காணொளியில் அமெரிக்க வங்கிகளின் நிலையினையும் அதனை மூடி மறைக்க முற்படும் அரசியல்வாதிகளை நகைச்சுவையாக கூறுவதால் சில பார்வையாளர்களை பாதிக்கக்கூடும்.
  13. கட்டணம் 235 யுரோ செலுத்தியுள்ளேன், தவறுதலாக 180 அமெரிக்க டொலர் என குறிப்பிட்டுள்ளேன், யாழ் கள உறவுகள் இந்த மாதிரியான நிதிநிறுவனங்களின் தகுதிகாண் போட்டியில் ஈடுபட்டுள்ளீர்களா? அப்படியாயின் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
  14. மன்னிக்கவும் எனது தவறு, நீங்கள் கூறுவது போல நடந்திருந்தால் உக்கிரேன் மிக கேவலமாக நடந்துள்ளது.
  15. முன்பு ரஞ்சித் மத்திய வயது பிரச்சினை தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியதாக நினைவுள்ளது, இந்த வகை பிரச்சினைகளுக்கான மூலகாரணமாக இந்த மத்திய வயது பிரச்சினை இருக்குமா? என்பது தொடர்பான யாழ்கள துறைசார் நிபுணர்களது கருத்தினை எதிர்பார்க்கிறேன்.
  16. உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது, அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார், ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.
  17. Proprietary trading firms பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என கருதுகிறேன், இவை தமது காசினை உங்களுக்கு தற்காலிகமாக வழ்ங்குவார்கள் உங்களது வர்த்தகத்திற்காக பின்னர் அதில் ஏற்படும் வருமானத்தில் ஒரு பகுதியினை எடுத்து கொண்டு மிகுதியினை உங்களுக்கு இலாபமாக கொடுப்பார்கள், முன்னர் அவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் வேலைக்கமர்த்தி பயிற்சி கொடுத்து வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள். தற்போது இணையத்தில் பல நிறுவனங்கள் இணையத்தினூடாக இந்த வேலையினை வழங்குகின்றார்கள். அவர்களுடைய பணநிர்வாகத்தினடிப்படையில் வர்த்தக மாதிரி போட்டியில் ஈடுபட்டு உங்களது இயலுமையினை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கு தமது நிதியினை வர்த்தகம் செய்வதற்காக வழங்குவார்கள். ஆரம்பத்தில் உங்கள் இயலுமையினை தெரிவிக்கும் தகுதிகாண் போட்டிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பல போட்டியாளர்கள் ஆர்வமாக கலந்து கொள்வதால் ஒரு நிறுவனம் ஒரு போட்டி மாதிரியினை உருவாக்கி ஆண்டு ஒன்றிற்கு அதில் வேலை செய்யும் வேலையாளர்களுக்கு கிட்ட தட்ட 20 மில்லியன் பணத்தினை வழங்கியுள்ளது, ஆனால் அதே நிறுவனம் இவ்வாறு போட்டியில் கலந்து தோற்று போவர்களிடம் இருந்து பெறும் பணமாக 220 மில்லியனுக்கு மேலாக குறித்த ஆண்டில் பெற்றது அந்த நிறுவனம். முழு நேர வேலையாக நிதிச்சந்தை வர்த்தகத்தினை ஈடுபட விரும்புவர்கள் சரியான புரிதல் இல்லாமையால் தமது பணத்தினை தகுதி காண் போட்டியில் இழக்கிறார்கள் என்பதால் ஆரம்பத்தில் பல நிறுவனங்கள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டன, அதில் சில வெறுமனே ஏமாற்று நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டன அவை காணமல் போயும் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள் உண்மையாக இருக்கலாம், அப்படி உண்மையான நிறுவனமாக இருக்கும் என நான் கருதும் ஒரு நிறுவனத்தில் மிக சிறிய கணக்கு ஒன்றிற்காக 180 அமெரிக்க டொலர் போட்டி கட்ட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து அதில் தேர்வு பெற்றுள்ளேன். இந்த நிறுவனத்தில் பொருளாதார முக்கியத்துவம் உள்ள செய்திகள் வரும்போது உங்கள் வர்த்தகம் மூடப்படாமல் இருந்தாலும் உங்கள் ஒப்பந்தம் முறிக்கப்படாது, வார இறுதியிலும் உங்கள் வர்த்தகத்தினை மூட வேண்டும் எனும் விதிமுறை இல்லை என்பதால் எனது வகை வர்த்தகத்திற்கு ஏற்ற மாதிரியுள்ளது, ஆனால் பங்கு பிரிப்பு மட்டும் 50/50 எனும் அடிப்படையில் பாதகமாக உள்ளது ஆனால் இது ஒரு உண்மையான நிறுவனம் என நான் கருதுவதால் இந்த நிறுவனத்தில் இணைந்துள்ளேன். பகுதிநேர வேலையாக இணைந்துள்ளேன். ஒவ்வொரு 10% அதிகரிப்பினை கணக்கில் ஏற்படுத்தும் போது அந்த கணக்கினை இரட்டிப்பாக்குவார்கள்.
  18. இந்த செய்தியில் உள்ள நிகழ்தகவினை அடிப்படியிலானது எனது கருத்து. இந்த செய்தியில் முற்று முழுதாக நன்மை இல்லை என கூற முடியாது என்பதனை ஒத்து கொள்கிறேன்(எமது தரப்பில் இதுவரை சிறிய சாதகமான விடயமும் நிகழவில்லை, கடலில் தத்தளிப்பவன் கையில் அகப்பட்ட துரும்பு போல). இந்த செய்தியினை தலைப்பினை பார்த்தவுடன் மனதில் உடனடியாக தோன்றும் எண்ணம், சரி வடக்கில் சிங்கள குடியேற்றம் தொடங்க போகிறார்கள் என தோன்றியது பின்னர் அந்த செய்தியினை வாசித்த போது அதனை அறிவித்தவர் தமிழர் என அறிந்தவுடன் வடக்கில் உள்ள ஏழை மக்களுக்கு கூறுகிறார் என இயல்பாக நினைக்கதொன்றும். எமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கலாம், ஆனால் தாயகத்தில் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்காமல் தீர்வு என ஏமாற்றுவதற்கு நாங்களும் உடந்தையாக கூடாது என்பதற்காக கூறப்பட்டது. இந்த திரியினை வளர்க்க விரும்பவில்லை, அதே நேரம் பதில் கருத்தெழுதாமல் கடந்து செல்வது முறையற்றது என்பதலாலேயே பதில் இட்டேன், அதனால் மேற்கொண்டு குறித்த நாட்டின் இந்த விடய அரசியல் பற்றி கருத்திடவில்லை.
  19. அமெரிக்காவின் இந்த தடைதமிழர்களிற்கு எந்த நன்மையினை செய்யபோகிறது? அமெரிக்கா இலங்கை படைகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்கி வருகிறது, இந்த நிலையில் சில இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு தடை வழங்குவதன் மூலம் இலங்கை இராணுவததிற்கு வெள்ளை அடிக்கும் முயற்சியிலேயே அமெரிக்கா ஈடுபடுகிறது. முன்னர் ஐ எம் எப் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என கோரும் என தவறான கருத்தினை வெளியிட்டு அது சமூக வலைத்தளத்திலிருந்து சிந்தி சாதாரண மக்களிலிருந்து தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான கால அவகாசத்திற்காக (மக்களை ஏமாற்ற) அதனை பயன்படுத்தி பின்னர் எல்லாம் ஒன்றும் அற்ற ஏமாற்றமாக முடிவடைந்துவிட்டது. இது போன்ற ஒரு ஒரு நிகழ்வினை தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பதால் இதற்கு யாழ்கள உறவுகள் இரு அணியாக பிரிந்து இந்த அமெரிக்காவின் வெள்ளை அடிப்பு முயற்சியினை பிரபலமாக்காமல் இருப்பது நல்லது.
  20. தற்போதுள்ள அன்னிய செலாவணி வரலாற்றினை பார்க்கும் போது நீங்கள் கூறும் இந்த காரணத்தால்தான் அமெரிக்க நாணயதிற்கு அன்னிய செலாவணி அந்தஸ்து கிடைத்தேன நான் கருதவில்லை.
  21. Bretton Woods தீர்வு வருவதற்கு முன்பு கடுமையான இறக்குமதி வரி, நாணய பெறுமதி குறைப்பு என மேற்கு நாடுகளே தமக்குள் பொருளாதார ரீதியாக மோதிக்கொண்டிருந்தன. அதுவும் Great depression மேற்கு நாடுகளில் ஏற்பட காரணமாக இருந்தது இதனால் தங்கு தடையற்ற வர்த்தக நோக்கில் உருவாக்கப்பட்ட Bretton Woods தீர்வு திட்டம் Adjustable pegged foreign exchange system. இதில் தங்க பெறுமதியுடன் காசின் பெறுமதியினை இணைத்து நாணயத்தின் முழுப்பெறுமதியில் அன்னிய செலாவணியாக அமெரிக்க நாணயம் உருவாக்கப்பட்டது. இதில் எந்தவித ஏமாற்றுத்தனமும் இருக்காது. இடையில் அமெரிக்கா அதிகளவில் 1.5% கூடுதலாக காசினை அச்சடித்த போது அமெரிக்க நாணயத்துடன் Peg செய்திருந்த சில மேற்கு நாடுகளுக்கு நட்டம் ஏற்பட அவை நாணயத்திற்கு பதில் தங்கத்தினை கோரினர், பின்னர் வியட்னாம் போரின் போது அமெரிக்கா தங்கத்தினை தனது நாணய மதிப்பினை அளவிட கொண்டிருந்த அளவு கோலினை கைவிட்டது. இதுவே Fiat currency இன் தோற்றத்திற்கு காரணமாக வந்த்து, இந்த முகப்பெறுமதி நாணயம் தற்போதுள்ள பணவீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. Floating currency இல நாணய்த்தின் மதிப்பினை பல காரணிகள் தீர்மானிகின்றன அதில் Balance of Payment இனை தம்து நாணய்த்தின் பெறுமதியினை வலிந்து குறைப்பதற்காக பயன்படுத்துகிறார்கள்(அமெரிக்க அரச பணமுறிகளை கொள்வனவு செய்து). அமெரிக்க நாணயத்திற்கு பதிலாக இன்னொரு நாட்டு நாணயம் அன்னிய செலாவணி அந்தஸ்தினை எட்டுமா? தற்போதுள்ள முகப்பெறுமதி நாணயத்தில் எந்த ஒரு நாட்டினையும் மற்ற நாடு நம்புமா? சில நாடுகள் குறிப்பாக மலேசியா போன்ற நாடுகள் Dirty float பின்பற்றுவதாக கருதுகிறார்கள்(மிதக்க விடப்பட்ட நாணயத்தில் மத்திய வங்கி தலையிடுவதனை வெளியில் கூறுவதில்லை). இப்படியான ஒரு நாட்டின் நாணயத்தினை reserve currency ஆக ஏற்க விரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு நாடு தனது நாணயத்தினை தங்கத்தின் பெறுமதியுடன் இணைத்து முழுப்பெறுமதி நாணயத்தினை உருவாக்கி அதன் உலக வர்த்தக வகிபாகம் அதிகம் இருந்தால் அதனை ஏற்பதற்கு மற்ற நாடுகள் தயாரகலாம். ஒற்றை அன்னிய செலாவணி முறைமை பல நடைமுறைமை சிக்கல்களை தீர்க்கிறது, ஆனால் எதிர்காலத்தில் இப்படி ஒரு ஒற்றை நாணயம அன்னிய செலாவணி முறைமை வருவதற்கான சாத்தியம் இல்லை என நான் கருதுகிறேன்.
  22. மன்னிக்கவும் குழப்பகரமாக எழுதிவிட்டேன். நீங்கள் விசயம் அறிந்தவர்களிடம் ஒரு தற்காப்புக்காகத்தான் நான் " எனது கருத்து தவறாக இருக்கலாம் " என எழுவதாக குறிப்பிட்டதற்கு பதிலாக அதனை பதிவிட்டேன் ஆனால் அதனை குழப்பமாக வழமை போல எழுதிவிட்டேன். எனது மொழிபெயர்க்கும் நண்பர் 50 வயதிற்கு மேற்பட்ட நபரிடம் செல்வது அவர் படிவங்கங்கள் நிரப்புவதில் விடயம் தெரிந்தவர் என்பதால். ஆனால் அதே நண்பர் " எங்களுக்கே இன்டர்நெட் பற்றி படிப்பிக்கிறார் " என எனது நண்பர் கூறுவதற்கு காரணம், எனது நண்பர் கணனியினை பொறுத்தவரை அந்த 50 வயது அண்ணாவினை விட தெரிந்தவராக இருந்தமையால். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் தெரியும், நான் உங்களிடம் பல விடயங்களை கற்று கொண்டமாதிரி. யாழ் இந்த வகையில் வரப்பிரசாதாம், எமது சிந்தனைகளை விசாலப்படுத்துகிறது, இதில் தவறான கேள்விகளும் இல்லை, தவறான பதிலும் இல்லை. முன்பு ஒரு திரியில் நான் ஒரு தவறான விடயம் ஒன்றினை பதிந்திருந்தேன் (அதனை பின்னர் தேடி இணைக்கிறேன்), கிருபன் அதனை சுட்டி காட்டியிருந்தார், தவறான விடயத்தினை சரி என்ற அடிப்படையில் எனது வேறு முடிவுகளை எடுக்கும் போது அது தாக்கத்தினை ஏற்படுத்தும், ஆரம்பத்தில் தவறினை சுட்டி காட்டினால் அதனால் இலாபம் ஏற்படுவது எனக்குதான். இந்த திரியில் ஜஸ்டின் கூறிய கருத்துகள் இது வரை நான் கொண்டிருந்த புரிதல்களை மேலும் விரிவாக்கியுள்ளது அது எனது அன்னிய செலாவணி வர்த்தகத்திற்கு உதவியாக இருக்கும்.
  23. வேறு ஒரு திரியில் இதனை பற்றி குறிப்பிடும்போது இது மன்னாரில் என தவறாக குறிப்பிட்டுள்ளேன், இந்த கட்டுரையில் புத்தளத்தில் என்பதனை பார்க்கும் போது தவறினை உணருகிறேன்.
  24. அமெரிக்கா தந்து அன்னியசெலாவணி நாணயம் எனும் அந்தஸ்தினை இழந்தால் இலங்கை போல என்பதற்காக GDP உதாரணமாக கூறினேன். அமெரிக்க அரச கடன் முறிகளை வெளிநாட்டு அரசுகள் வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு தமது ஏற்றுமதி இறக்குமதியினால் ஏற்படும் தேறிய இலாபம் அவர்களது நாணயத்தின் பெறுமதியினை அதிகரிக்கும் அது அவர்களது பொருள்கள் சேவைகளை சந்தையில் விலை அதிகரிப்பினை உண்டாக்கும் அதனை தவிர்க்கவும் அத்துடன் வலிந்து தமது நாணய பெறுமதியினை இழக்கவும் இந்த முறையினை கையாழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பணமுறியினை திரும்ப விற்கும்போது உலக வர்த்தகத்திற்கு தேவையான டொலரினை உடனடியாக பெறமுடியும்(Liquidity இது முக்கிய காரனம், அமெரிக்க அன்னிய செலாவணி நாணய அந்தஸ்தினை இழந்தால் அவர்கள் அமெரிக்க பணமுறிகளை வாங்க மாட்டார்கள், அதற்கு பதில் அவர்கள் வர்த்தக பங்காளர்களின் நாணயத்தில் வர்த்தகம் செய்யும் போது அவர்களது பணமுறிகளை வாங்கினால் உடனடியாக அவர்களது நாணயமாக மாற்றலாம்). டொலருக்கு பதில் தங்கத்தினையும் வாங்கலாம் அது பணவீக்கதிற்கெதிரான Hedging போல பயன்படும் ஆனால் அதிலிருந்து பணமுறி போல இலாபம் வராதுYeild, மற்றது Diversify. ஆரம்பத்தில் அமெரிக்காவிற்கும் சவுதிக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு அடிப்படையில் எண்ணெய் வளம் டொலரில் வர்த்தகம் செய்யும் நிலையினை உருவாக்கியது, தற்போது ஒபெக் மற்றும் ஒபெக் + நாடுகள் டொலரில் வர்த்தகம் செய்யாமல் இரட்டை வர்த்தக முறை மூலம் வர்த்தகம் செய்தால், தமது நாணயத்தில் வர்த்தகம் செய்யும் போது மாற்றுவிகிதத்தில் ஏற்படும் தேவையற்ற செலவீடுகள் இல்லாமல் அது அவர்களுக்கு நன்மை உண்டாகும். தற்போது உலக வர்த்ககத்தில் பல நாடுகள் நேரிடையாக அமெரிக்காவுடன் எந்த வர்த்தகங்களிலும் ஈடுபடுவதில்லை ஆனால் அமெரிக்க நாணயத்தினை வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டி உள்ளது மறுவளமாக மத்திய கிழக்கு நாடுகளுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக பங்களிப்பு உள்ளது, அதனால் இரண்டு தரப்பாரும் நேரிடையாக தமது நாணயத்தில் வர்த்தகம் செய்வது அவர்களுக்கு நன்மை. அமெரிக்கா தனது அன்னிய செலாவணி நாணய தகுதியினை இழக்கும்போது தற்போது போல பணத்தினை புதிது புதிதாக அச்சடித்தால் இலங்கையில் ஏற்பட்ட stagflation ஏற்படும் (பணவீக்கம் போலல்லாமல் அதனைவிட அதிக பாதிப்பு ஏற்படும்). தற்போது அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள நாணய்த்திற்கு அண்ணளவான அமெரிக்க நாணயம் அன்னிய செலாவணியாக உள்ளது அது திரும்பவும் அமெரிக்காவிற்குள் வரும்போது என்னவாகும்(M2 அல்ல M0), அதனைவிட அரசபணமுறிகளை வாங்கியுள்ள வெளிநாட்டு அரசுகளின் கடன் தொகை அமெரிக்க உள்நாட்டு உண்மை பணத்தினளவை விட ஏறத்தாழ 140% அதிகம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.