Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  888
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by vasee

 1. கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யவில்லை, ஆரம்பத்தில் இருந்தே அதன் மீது ஆர்வம் ஏற்படவில்லை (5 அல்லது 6 வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன் ஆரம்பத்தில் திரவத்தன்மை குறைவாக இருந்தது வாங்கலாம் ஆனால் இலகுவாக விற்க முடியாது) FOMO (fear of missing out) இது வரை ஏற்படவில்லை, அனால் சிறிய முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் (penny stock) வாங்கி விற்றுள்ளேன் ( சில சமயத்தில் 1 மணித்தியாலத்திலேயே விலை இரட்டிப்பாகும் அல்லது அரைவாசியாக குறைவடையும்) ஒரு முறை (2014 ?) PDY எனும் நிறுவனத்தின் பங்கினை அவர்களால் வெளியிடப்பட்ட செய்திக்கமைய 0.04 சதத்திற்கு வாங்கினேன் காலை 10 மணியளவில், வேலை முடித்து விட்டு வந்து பார்த்தபோது (மாலை 3:30 மணியளவில்) அதன் பங்கு வர்த்தகத்தை தடை செய்து விட்டார்கள் (காரணம் போலியான தகவலை வெளியிட்டமையால்). ஒரு மாதத்தின் பின் மீண்டும் வர்த்தகத்தை ஆரம்பித்தார் வாங்கின விலையில் 10 இல் 1 மடங்கு விலைக்கு விற்று பெரும் பண இழப்பு ஏற்பட்டது. https://www.delisted.com.au/company/padbury-mining-limited/
 2. வங்கித்துறை அதிகளவில் பாதிப்படையாது என கூறப்படுகிறது.
 3. சீன வங்கித்துறை இதனால் அதிகளவில் பாதிப்படையுமா? சீன பொருளாதாரத்திற்கு மிக பெரிய பாதிப்புதான், உலக பொருளாதாரத்தில் சீனாவின் பங்கு அதிகம், அதன் பிரதிபலிப்பு நிட்சயமாக உலக பொருளாதாரத்தில் இருக்கும், 2008 அமெரிக்க பொருளாதார சரிவு எவ்வாறு உலக பொருளாதார சரிவை தூண்டியது போல் ஒரு நிலமை ஏற்படக்கூடாது.
 4. அவுஸ்ரேலியாவிலும் காலம் காலமாக வீட்டு விலை மிகைப்படுத்ததாகத்தான் சொல்கிறார்கள், விலை குறையவில்லை, 2020 முதல் காலாண்டில் 26% விலை குறைவு ஏற்பட்டது (பொதுவாக பொருளாதாரத்தில் 20% மேலானா வீழ்சியை பொருளாதார சரிவு என்பார்கள்) ஆனால் எந்த பாதிப்புமில்லாமல் வீட்டு விலைகள் வரலாற்று உச்சத்தை எட்டி நிற்கிறது. மேலே இணைத்த புள்ளி விபரங்கள் பார்க்கும் போது வீட்டு விலைகளுக்கும் வீட்டு உரிமையாளர்களின் வருமான இடைவெளி அதிகரிப்பது போல தோன்றுகிறது. உலகெங்கிலும் சீன முதலீட்டாளர்களின் முதலீடுகள் பெருமளவான வீட்டு விலை அதிகரிப்பிற்கு காரணமாக இருந்தது அந்த நிலை தொடரும் பட்சத்தில் வீட்டு விலை சரிவு காணாது எனவே தோன்றுகிறது. https://www.investopedia.com/terms/t/tulipmania.asp#:~:text=Tulipmania is the story of a speculative bubble%2C which took,some houses at the time.
 5. அவுஸ்ரேலிய வீட்டு உரிமை விபரம் https://www.aihw.gov.au/reports/australias-welfare/home-ownership-and-housing-tenure https://www.abs.gov.au/statistics/economy/national-accounts/australian-national-accounts-distribution-household-income-consumption-and-wealth/latest-release https://www.smh.com.au/business/the-economy/the-rich-the-comfortable-middle-and-the-rest-australia-s-wealth-and-income-ladder-revealed-20201216-p56nzl.html
 6. நன்றி கோசான், பிரபா பொதுவாக வங்கிகள் தமது வீட்டுக்கடன் மூலம் ஏற்படும் இழப்பை முன்னரகாவே கணித்து அதற்கேற்ப செயற்படுவார்கள்தான் EL (Expected loss)=PD (probability of default) X LGD (loss given default) X EAD (exposure at default) ஆனால் எதிர்பாராமல் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளை கையாளக்கூடிய நிலையில் நிதி நிறுவனங்கள் உள்ளனவா? பணச்சந்தையில் திரவநிலையில் ஏற்பட்ட தேக்கமும் ( வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் மூலம் பெறப்பட்ட பண இழப்பு) சங்கிலித்தொடராக பொருளாதாரத்தினை சரித்தது. அவுஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு விலைகள் சீராகும்போது (market correction) அது பணச்சந்தையில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்? இப்போதிருக்கும் வீட்டின் விலையில் கடன் கட்டணம் அதிகர்த்தமையால் மோசமான கடன் கட்டணம் செலுத்துபவர்கள் மற்றும் கோவிட் தாக்கம், அரசின் அதிகரித்த சமூக செலவுகள் பணச்சந்தையில் மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. அது தவிரவும் அவுஸ்திரேலிய அரசு உருவாக்கும் பூகோள அரசியல் சர்ச்சைகளும் பொருளாதாரத்தில் அழுத்தங்களை உருவாக்குகிறது.
 7. அவுஸ்திரேலியாவில் சாதாரண சூழ்நிலையில் 10 வருடத்தில் உங்களது வீட்டு முதலீட்டின் பெறுமதி இரு மடங்காகும் என கூறுகிறார்கள் (நகர்புற முதலீட்டில்), இது ASX 200 index முதலீட்டிற்கு ஒப்பானதாகும் (8 வருடத்தில் இரட்டிப்பாகும் எஙிறார்கள்) இந்த இரண்டு முதலீடுகளும் கடந்த ஆண்டு ஆரம்பபகுதியில் 26-28 விகிதம் சரிவை கண்டு பின்னர் வரலாறு காணாத உயர்வை எட்டியது. ஆனால் ஒப்பீட்டளவில் வீடுகளில் முதலிடுவது பாதுகாப்பானது, இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே,நடை முறை கோவிட் தாக்கத்தினால் 10 இல் 1 தமது வீட்டுக்கடனை கட்டமுடியாமல் போகலாம் என கூறுகிறார்கள், ஆனாலும் அவுஸ்திரேலியாவில் 50% வீட்டுக்கடன், வீட்டு உரிமையாளர் வசிக்கும் வீடுகாளாக உள்ளது அத்துடன் நீங்கள் கூறியது போல மிக குறைந்த வட்டி விகிதமும் குறைந்த வேலையின்மை விகிதம் உள்ளமையால் அதிகம் வீட்டு விலை சரிவு ஏற்படாது ( எனது தனிப்பட்ட கருத்தாகும்) ஆனால் ஏற்கனவே வீட்டு விலை அதிகரிப்பு சராசரி நுகர்வோர் விலையை மீறிவிட்டது(affordability), அத்துடன் குடி நுழைவு நிறுத்தப்பட்டுள்ளது, வேலை இன்மை விகிதம் 20% உயர்ந்தால் வீட்டு விலை சரிவு ஏற்படலாம் என சொல்கிறார்கள். 2008 இல் அமெரிக்காவில் வீட்டு விலைகள் சடுதியாக உயர்ந்து பின்னர் விலை உயர்வு மந்த நிலையுற்று பின்னரே வீட்டு விலை சரிவு ஏற்பட்டதாக கூறுகிறார்கள், அதற்கு காரணம் மோசமான வங்கிக்கடன் ஒரு காரணமாகும், அவுஸ்திரேலியாவில் மோசமான வங்கி கடன் இருப்பதாக உணரவில்லை. ஆனால் தற்சமயம் வீட்டு விலைகளை பார்ர்கும் போது ஆபத்தான முதலீடாக இருக்குமா? உங்களது அபிப்பிராயம் என்ன? இந்த கருத்து முன்னர் பதிவு செய்த ஒன்று பின்னர் அழித்து விட்டேன், எனது அபிப்பிராயம் தவறாக இருக்கலாம் என்பதால்.
 8. The Three Skills of Top Trading: Behavioral Systems Building, Pattern Recognition, and Mental State Management master the markets இரண்டு புத்தகங்களும் இணையத்தில் தரவிறக்கலாம்.
 9. https://www.amazon.com/Buy-Side-Street-Traders-Spectacular/dp/0770437176 இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாகவும் தரவிறக்கம் செய்யலாம் என நினைக்கிறேண், இந்த புத்தகத்தில் முறையற்ற பங்கு சந்தை வர்த்தக செயற்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது, இந்த புத்தகத்தில் ராஜ் ராஜரத்தினத்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது.
 10. இலாபத்தை மட்டுமே எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது ஆரம்பத்தில் அதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே கவனம் இருக்கும், எந்த பாதுகாப்பு நடவடிக்கையின்றி முழுப்பணத்தையும் முதலீடு செய்து விட்டு எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் போது சந்தை எமெக்கெதிராக மாறும் போது தொடர்ச்சியாக பல தவறுகளை செய்வோம் கடைசியாக முழுப்பனத்தையும் இழப்போம்.
 11. பங்கு வர்த்தகம் சவால்கள் நிறைந்த ஒன்றுதான், முன்பு குறிப்பிட்டது போல யூ டுயூப் விடியோ மற்றும் புத்தகங்களில் வாசித்து விட்டு எப்படி மூளை அறுவை சிகிச்சை செய்ய முடியாதோ அதே போல் பங்கு வர்த்தகமும். ஒருவர் பங்கு வர்த்தகத்திலோ அல்லது நவீன தொழில் முறையில் வெற்றி பெறுவதற்கு எமது உள்ளுணர்வு தடையாகவிருக்கிறது என கூறுகிறார்கள். கற்கால மனிதனின் சுய பாதுகாப்பு பொறிமுறை அதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகிறார்கள். fxcm என்ற நிறுவனம் ஒரு ஆய்வினை மேற்கொண்டது, அதில் 90% அவர்களது வாடிக்கையாளர்கள், தமது பணத்தினை இழப்பதாக வெளியிட்டிருந்தது. அதன் விபரம் கீழே இணைத்துள்ளேன். அதன் பின்னர் இடம்பெற்றது இன்னும் வேடிக்கையானது, அந்த நிறுவனம் நாணயச்சந்த்தையில் CFD முறையில் வர்த்தகத்திலீடுபட்டது 90% எப்படியோ பணத்தை இழக்கப்போகிறார்கள்தானே அதனை நேரடியாக தமது வங்கியில் போட்டு விட்டார்கள் (Hedge செய்யவில்லை). 2018 தை அல்லது மாசி ஆக இருக்கலாம் ஒரு பாகிஸ்தானிய நாணய வர்த்தகரால் போலியான விற்றல் வாங்கல்களை கணனியில் உருவாக்கியதன் மூலம் ஒரு சடுதியான சரிவை குறுகிய நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது (flash crash) இதனால் பல பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் சந்தையை கட்டுபடுத்துவர்கள் பாதிக்கப்பட்டார்கள் இதனால் அவரை சாதாரண நாணய வர்த்தகர்கள் ரொபின் கூட் வர்த்தகர் என கூறுகிறார்கள், இந்த நிகழ்வின் போது fxcm நிறுவனம் ஏறத்தாழ வங்குறோத்து நிலையை எட்டியது.
 12. https://www.babypips.com/learn/forex இந்த இணையத்தளத்தில் உங்களை பதிவு செய்து (அல்லது செய்யாமலும்) இதில் உள்ள பாடத்திட்டத்தை இலவசமாக தொடரலாம், குறிப்பாக முக்கியமான விடயங்களை இந்த பாடத்திட்டத்தில் உள்ளடக்குகிறார்கள். பங்கு சந்தை வர்த்தகத்தில் 90% தோற்கிறார்கள் என கூறுகிறார்கள். https://www.fxcm.com/au/education/traits-successful-traders/ இந்த விகிதாசாரம் வியாபாரத்துறையில் தோல்வியடைவோரின் விகிதாசாரமும் சரியான அள்விலே உள்ளது. Fundamental analysis இல் பங்கு சந்தை நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை ஆனால் இந்த புத்தகம் படிக்கும் போது ஆர்வமாக இருந்தது உங்களுக்கு உபயோகப்படலாம். இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம். yahoo finance google finance fundamental analysis தகவல்களை இலவசமாகப்பெறலாம். முதலீட்டின் பரவலாக்கலாம் https://www.amazon.com.au/Intelligent-Asset-Allocator-Portfolio-Maximize-ebook/dp/B005XM6NRY இதனை இலவசமாக இணையத்திலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம். இவை தவிர "beta"பயன்படுத்தி முதலீட்டின் பரவலாக்கலாம் உதாரணமாக "beta" 2 பங்குகள் மொத்த சந்தை 1 விகிதமாக அதிகரித்தால் குறித்த பங்கு அதனை விட 2 புள்ளி அதிகரிக்கும் என்பார்கள் உதாரணம் கனிய வள பங்குகள் ஆனால் மருத்துவ துறை பங்குகள் 0.5 விகிதம் மட்டும் மாறும், அதனால் அதன் "beta" 0.5 எனக்கு நீண்டகால முதலீட்டில் அனுபவம் இல்லை, அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம். முதலீடுகளுக்கு ஒரே ஒரு விடயம் முக்கியம் என்பார்கள் " மூலதன பாதுகாப்பு". பங்கு வர்த்தகத்தில் 90% உளவியல் என்பார்கள், அதற்கு பிறகு பணப்பராமரிப்பு அதன் பின்னரே மற்றதெல்லாம் என்பார்கள். https://www.youtube.com/watch?v=blQZ_bF468c
 13. சம் சும் ஐ நா கடித விவகாரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா?
 14. இந்த வகை Technical analysis 19ஆம்நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் selling climax (Shake the weak hand, இயல்பாக அதிகளவான volume காணப்படும். சிவப்பு bar selling volume நீல bar buying volume) ஏற்படும். பின்னர் பெரிய முதலீட்டாளர்கள் விலையை அதிகரிக்காமல் மெதுவாக பங்குகளை வாங்கி குவிப்பார்கள். பொதுவாக சந்தை மீண்டும் அதே விலையை தொட முயற்சிக்கும் (Re-test) விலையை வலிந்து உயர்த்துவதற்கு முன்பாக மீண்டும் அந்த குறைந்த விலைக்கு கொண்டு சென்று ஏதாவது பங்குகள் இருக்கிறதா என அவதானிப்பார்கள் அதன் போது அந்த விலையில் யாரும் விற்பதற்கு ஆர்வம் காட்டாவிடில் விற்கப்படும் பங்குகளைன் (Volume) அளவு குறைவாக இருந்தால் அதன் பின்னர் வலிந்து விலயினை அதிகரிப்பர் ( ஏற்கனவே அவர்கள் பங்குகள் இல்லை என்பதை பரீட்சித்து விட்டமையால் விலயினை உயர்த்தும் போது அந்த நேரம் யாரும் பங்குகளை விற்று அவர்களுக்கு நட்டம் ஏற்படுத்த முடியாது). இந்த நடவடிக்கையினை அவதானிக்கும் சில்லறை முதலீட்டாளர்கள், பெரிய முதலீட்டாளருடன் சேர்ந்து முதலிடுவர் ( Test level) சந்தை திட்டமிட்டபடி உயராமல் கீழிறங்கினால் அவசரகால வெளியேற்றமாக அந்த பங்குளை Low volume failed sell off இல் விற்பதற்கு திட்டமிட்டிருப்பர் (stop loss). எதிர்பாராமல் நிகழும் நிகழ்வின் போது ஏற்படும் இழப்பை முன்னராகவே திட்டமிடுவர் ( உதாரணமாக மொத்த முதலீடாக 10000 இருந்தால் அதில் stop loss 1% என எடுத்து கொண்டால் 100). பல முறைகள் technical analysis இல் உள்ளது, ஒரு உதாரணத்திற்கே இந்த முறையை குறிப்பிட்டுள்ளேன். இதன் அடிப்படையில் ஒரு முறைமையை பரீட்சித்து பார்த்து (Back test) அதன் தரவுகளின் அடிப்படையில் அந்த முறைமையில் முதலீடு செய்யும் போது எமது முதல் பாதுகாக்கப்படுமா என்று கணக்கியல் ( Risk or Ruin calculator) ரீதியாகப்பரீட்சித்த பின்னரே முதலிடுவார்கள். http://bettersystemtrader.com/riskofruin/ திட்டமிடாத முதலீடுகள் சூது என்றே கூறுகிறார்கள்.
 15. கடஞ்சா Actual margin, Variable margin மற்றும் future பற்றி மிக இலகுவான ஒரு உதாரணத்தை வேறு ஒரு திரியில் கூறியிருந்தார், Rogue Trader இலும் Actual margin, Variable margin மற்றும் future பற்றி கூறியுள்ளார்கள் ஆனால் புரியாவிட்டால் கதையை தொடர்வது கடினமாகவிருக்கும் என்பதால் கடஞ்சா கூறிய உதாரணத்தை இங்கு மறு பதிவிடுகிறேன். நாம் வீடு வாங்கும் போது மொத்த வீட்டின் பெறுமதியில் ஒரு 5% வைப்பாக(Actual margin) இட்டு வீட்டை வாங்குவோம், வீட்டின் பெறுமதி சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும் (Variable margin). future தோன்றிய வரலாறு பற்றி கூறுவார்கள் முன்பு (19 ஆம் நூற்றாண்டிலாக இருக்கலாம்) ஒரு விற்பனை பிரதிநிதி விளைநிலங்கள் அதிக விளைச்சல் ஏற்படுவதை கணித்தார், அவருக்கு ஒரு சிந்தனை உருவாகியது அறுவடைக்காலத்தில் அறுவடைக்கு தேவையான இயந்திரங்களின் மதிப்பு அதிகரிக்கலாம் அதனால் கடைக்கு சென்று ஒரு ஒப்பந்தம் இட்டாராம் இந்த இயந்திரங்களை இப்போதிருக்கும் வாடகை விலைக்கு எதிர்காலத்திற்கு தருமாறு ( உதாரணமாக 7 மாதற்கு பின்). மாதா மாதம் செலுத்தும் வட்டியும் பகுதி முதலும் வீட்டின் விலை குறைதல் பாதிப்பை (Variable margin) நடைமுறையில் வெளிக்காட்டாது.ஆனால் பங்கு சந்தையில் நீங்கள் விலை உயரலாம் என்று வாங்கிய Actual margin future விலை குறைந்தால் அந்த நட்டத்தில் Actual margin விகிதத்தினை வைப்பிலடக்கூறுவார்கள் (margin call). எனக்கு Future மற்றும் Option அனுபவம் இல்லை, ஆனால் CFD அனுபவம் உண்டு, இதுவரை margin call ஏற்படவில்லை என்பதால் எனது தரவுகள் பிழையாகவும் இருக்கலாம்.
 16. சட்டத்தரணியின் மூலம் சட்ட சிக்கல்களை அணுகுவதுதான் சரியாகவிருக்கும், சில வேளை நீங்கள் தவறாகப்புரிந்து கொள்ளக்கூடும், எதற்கு தேவையில்லாத சவால், ஆச்சரியமான விடயம் என்ன வென்றால் அசமந்த போக்கில் செயற்படும் அரச இயந்திரம் ஒரு புகாருக்கு குற்றபுலானாய்வு துறை எல்லாம் ஒடோடி வருகிறதா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.