Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. கோட் சூட்  ரை என்பது  ஒரு டிரஸ் கோட்   ...பெரும் சபையில்  இருக்க கூடும்.   படித்தவர் பண்பாளர் தான் சபையில் இருப்பர். அவர்கள் நாகரீகமாக   நடப்பர். சபையில் இருக்க தகுதியற்றவர் எனப்பொருள் பட சொன்னேன். 

    18 hours ago, goshan_che said:

     பிரெக்சிற் நேரம் பாராளுமன்றங்களின் தாயில் செங்கோலை எடுத்து கொண்டு ஓடியதையும்தான் பார்த்தோமே🤣.

    தாயில்  ....... இதன்பொருள் என்ன ?

  2. கோட் சூட் உம் ரை யும்  கட்டி  என்ன பயன். சபையில் ஒழுங் காக   இருக்க  தெரியவில்லையே ? "படித்த மனிதர் " மாதிரி நடக்க தெரியவில்லையே 😃

    • Like 1
  3. “அதுதான் மகளும் பேசுறாள். பொத்திப் பொத்தி வளத்தீங்கள் இப்ப தேடுங்கோ எண்டிறாள்

    இக்காலத்தில்பல பெற்றோரின் ஆதங்கம் இது தான். படிப்பித்துவிட்டு தங்களுக்கேற்ற  பெண்ணை /ஆணை கொண்டுவா என்றால் எங்கேபோவது. 
    அப்படிகொண்டுவந்தாலும்  அவர்களுக்குப்பிடிக்க வேண்டுமே. படிப்பு , அழகு 
    பதவி பணம் என்று பார்த்துக் கொண்டிருந்தால் .கனவுலகில் தான் வாழவேண்டும். 

     

    • Like 1
  4. அவர்களுக்கென்ன  வெளி நாட்டு வாழ்க்கை! .

    காரென்ன வீடென்ன  மேசையில் சாப்பாடென்ன ? என நினைப்பவர்களுக்கு  ....காருக்கு எரிபொருள் வீதிக்கு இன்சூரன்ஸ் ...கடனில் எடுத்த காருக்கும் வீட்டுக்கும்  கட்டும் வட்டி படிக்கும் கடனுக்கான வட்டியும் முதலும்  , என்பவற்றுக்கு மழையிலும் என்புருக்கும் பனியிலும் தகிக்கும் வெயிலிலும் உடலை  வலியோடு வருத்தி உழைப்பதில், வாழும்  வாழ்க்கை கரைகிறதென்று. 

     

    ஒரு சிலருக்குத் தான் ஏ    சி   ரூமில்  நாரிக்   கடுப்பிலும் ...மூளையை கசக்கி மனேஜருக்கு (பயந்து )பணிந்து வேலை யும் அமையும் என .......வருந்தி உழைத்தால்தான் வாழ்கை . 

  5. கனடாக்கு  நானும் போறேன். சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும்.  வாய்ச்சொல் வீரரின் கதையைக் கேட்டு ஏமாறாதீர்கள்.

    பொது அறிவு இல்லாமல் கால நிலைக்கேற்ற ஆடையின்றி, பயண விபரம் தெரியாமல் ,கப்பலில் ஏறி கடலோடு சங்கமம் ஆகாமல்   தப்பிய அந்த நிகழ்வு ஒருபாடமாக இருக்கட்டும்.   முன் பின் தெரியாதவர்களை நம்பி இறங்காதீர்கள்.        

    po

  6. 2 hours ago, நிழலி said:

     

    கனடா விசா தொடர்பான இந்தக் காணொளி, ஓரளவுக்கு பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சில தகவல்கள் உள்ளன. பின்னூட்டங்களையும் வாசிக்கவும்.

    இதில் சொல்லப்படாத விடயம்: விசிட்டர் வீசாவில் வந்த பின் எவ்வாறு வேலை எடுக்க முடியும் என்பது.
     

     

    நிழலி நான் ஏற்கனவே 6 ம் திகதி பதிந்துள்ளேன் என தெரிவிக்கிறேன். 

    • Thanks 1
  7. 16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

    எங்க பார்த்தாலும் ஏஜென்சிக்காரன் சொல்லுறதா சொல்லுறாங்கள் கோடிக்கணக்கில் அவன் உழைக்க போறான் சில நேரம் தகடும் விழும் போல

    நேர்மையாக ஒழுங்கு முறைப்படி  கணணித் தேடுதல் , மூலம்  கனேடிய வெப் சைடு மூலம்  பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா   ஏஜெண்சியையா?  நியமித்து இருக்கிறது.  ஏஜென்சியை நம்ப வேண்டாம் , கனடாவில் வாழும் படித்த அனுபவமுள்ள குடிவரவு பற்றி அறிந்த கற்ற்வர்கள் மூலம் அணுகவும் என்பது    என் நேர்மையான வேண்டுகோள். 

    • Like 5
  8.  நாணயம் 

    சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான  சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு   பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில்  பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி  கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள்.  மாப்பிள்ளை   வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம்.   பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர்.  திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது  பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள்   இந்த மாப்பிள்ளையும்   பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட்டு வாழ்கை ஓடியது

    .பெண் குழந்தை  வயதுக்கு வந்தாள் .அதைக் குடும்பத்துடன்  கொண்டாட நாள் பார்த்து  ஆயத்தங்களை செய்தார்கள்.  சிறுமிக்கு நகை செய்ய எண்ணி வங்கியில் வைத்திருந்த நகைகளில்  தந்தையின் ஏழு பவுன் சங்கிலியை எடுத்து அழித்து
    சங்கிலி காப்பு  செய்ய கனடாவில் உள்ள நகை கடை ஒன்றை அணுகினர். அவரும் நிறுத்து பார்த்து எடை சரிபார்த்தார்.  அவர்களுமொடர் கொடுத்து வாயிலை விட்டு நீங்கி   சில செக்கன்களில் அந்த நகை கடை முதலாளி 
    சங்கிலியை உரைத்துப்பார்த்து.  இவர்களை மீண்டும்  கடை பையனை விட்டு அழைத்து. சொன்னர் இது நிறைய ( கலப்பு )கலப்படம் இருக்கிறது .பெறுமதி இல்லை என.  அவர்களுக்கு இடி விழுந்தது போல ஆனது . ஓடரை கான்சல் செய்து  மீண்டும் வருகிறோம் என சென்று விட்ட்னர்.

    வீட்டில் அந்த நகை செய்த்த்வரைப்பற்றி  ஒரே அதிர்ச்சி . கிட்ட தடட பதினைந்து மேற்பட்ட் வருடங்கள் இருக்கும். தங்கள் ஏமாந்து விடடோமே என எண்ணி கவலைப்பட்ட்னர். செய்தவரை எங்கே தேடுவது நியாயம் தான் கிடைக்குமா ? 

    சில ர்  பேச்சு வழக்கில் சொல்வார்கள். அவர் ஓர் நல்ல மனிதர் , நாணயமானவர் , என்று .அந்த நாணயம் என்பது ..நா நயம்,  சொல் பிறழாமை. அனுபவப்படடவர் சொன்ன கதை. பெயர்கள் யாவும் கற்பனை.

    • Like 2
    • Haha 1
  9. 12 hours ago, ஏராளன் said:

    என்னை வையாத வரைக்கும் மகிழ்ச்சி.

     

    தம்பி ஏராளன் இனி மேல் கசமுசா செய்திகளையும்  வன் செயல் செய்திகளையும் அயல் நாட்டு செய்திகளையும் முக்கியம் கொடுக்கமால் தாயக   இலங்கை செய்திகளில் கவனமெடுக்கும்  படி பணிவாக கேட்க்கிறேன். புரிந்து கொள்வார் என எண்ணுகிறேன். 

    • Like 1
  10. காதலுக்காக கணவரை துறந்து இந்தியா வந்து இந்துவாக மாறிய.......

    கணவர் 2019 ...2023   டுபாயில் ...எனவே அவர் காதலை தேடி குழந்தைகளுடன் வந்துள்ளார். 

    😃😃

    • Like 1
  11. 3 hours ago, வாலி said:

    முதலில் இந்தியர் அனைவருக்கும் wash room கட்டிக்கொடுத்து அதனை பயன்படுத்தும் முறையினை சொல்லிக்கொடுங்கப்பா, அதுக்கு அப்புறம் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பலாம்😂

    மிகப்பெரிய பணக்காரர்களும் அதிக ஏழைகளும் வாழுமிடம் கிந்தியா 

  12. இப்படி ஒரு காவடி தேவையா? இவர்களுக்கு இது தேவையா? மனதில் நல்லது நினைக்கவேண்டும் மற்றும் நல்லவற்றையே செய்ய வேண்டும். ஆண்டவன் உங்களுடன் இருப்பார். இந்த முள்குத்தி ஆடும் காவடியென்பது எல்லாராலும் முடியாது அதனால் அந்த இளைஞன் தாங்கமுடியாமல் கத்தும்போது வலியால் துடிக்கும்போது பாடடைபோடு  என்று கத்துவது கேட்க்கிறது.அதைச் செய்யத் தூண்டுவது ஞாயமில்லைதான் சிலர் எல்லோரும் செய்கிறார் நானும் செய்துபார்த்தாலென்ன என்றிட்டு முயன்று பார்க்கிறது. (பதிந்தவர்கள் கருத்திலிருந்து)

     

    பக்தி என்பது உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வேண்டுவது .மற்றவர்களுக்கு நல்லதையே செய்வது. நேர்த்தி வைப்பது கடவுளுக்கு செய்வது, கொடுக்கல், வாங்கல்பிசினஸா?ஆண்டவன் ஆ டம்பரங்களைக் கேட்கவில்லை. மனிதனை மனித தன்மையோடு வாழு என்றுதான் கேட்க்கிறான் .ஊரிலொருகாலத்தில் நடந்தது நேர்த்தி வைத்தவர்களுக்கு மன வலைமை இருந்தது.  காலம் மாறுகிறது .இது ஒருவகை மனித வதையாக   தான் பார்க்கிறேன்(.எனதுகண்ணோட்ட்ம் மட்டுமே). 

     

     

     

    • Like 1
    • Sad 1
  13. மனிதர் செய்வாய் வெள்ளிகளில் விரதம் இருப்பதில்லையா😃 அதுபோலத்தான்இதுவும்.விரதம் உடல் நலத்துக்கு தேவை.

    • Like 1
  14. மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று.

     . மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி.  இதன் இலை வெல்வெட் போன்று மிருதுவாகவும், நீர்ச்சத்து நிறைந்தும், தடிமனாகவும் காணப்படும். அரை அடி நீளமுள்ள, கனமான தண்டை நட்டு வைத்தாலே கற்பூரவல்லி எளிதாக வளர்ந்துவிடும். இதற்கு நேரடி சூரிய வெளிச்சம், குறைவான தண்ணீர், சாதாரண தோட்ட மண்ணே போதுமானது. 

    செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள் கற்பூரவல்லி இலையை சாதாரணமாக அப்படியே மென்று சாப்பிடலாம். இந்த இலையுடன் கல் உப்பு சேர்த்து கசக்கி சாறு பிழிந்து குடிக்கலாம். தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கியும் பருகலாம். 

    தேனீக்களை தோட்டத்துக்கு வரவழைக்கும் செடிகள் வீட்டுத் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களையும், அதைச் சுற்றி ரீங்காரமிடும் தேனீ, பட்டுப்பூச்சிகளையும் பார்ப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். இந்த சூழலை உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் உண்டாக்கலாம். சூரியகாந்தி, டேலியா, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செம்பருத்தி, உன்னி செடி, நீல சம்பங்கி, பவளமல்லி, சிறுபுனைக்காலி, காசி தும்பை, அரளி, துலுக்க செவ்வந்தி, நீல முல்லி, பன்னீர் பூ, சீமையல்லி மற்றும் லாவண்டர் செடிகளை வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம். இவற்றின் மணமும், இதில் உருவாகும் தேனும், தேனீ மற்றும் பட்டுப்பூச்சியை ஈர்க்கும் தன்மை கொண்டவை.

     

    நன்றி : தினத்தந்தி 

    • Like 1
  15. மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். 

    (கருத்துக் சொன்னவர்.)

    கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே!  ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு. 
     

    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.