Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. இது தான் சொல்றது காசை சேர்த்துவையுங்கோ என்று காசை வீசினால் எல்லாம் காலடியில். வேலைக்கு ஆள் வைப்பதிலிருந்து .கழுவி துடைப்பது வரை எல்லாம் நடக்கும். தனக்கு கண்டு தான் தானம். ஆனால்முடிவதில்லையே ? .(பிள்ளை கஷ்ட பட பெற்றவர் மனம் இரங்கும்) முதியவர்களுக்கு தாம் வாழ்ந்த பழகிய இடங்களை விட பிரிய மனம் வராது.
  2. புலம் பெயர்ந்த அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டுரை . எழுதியவருக்கும் பகிர்ந்தவருக்கும் நன்றி . இவ்விடயம் எல்லோருக்கும்போய் சேரவேண்டும்.
  3. போதை ஆசாமிகளும் குறுக்கு வழியில்பணம் சேர்ப்வர்களும் எதுவும் செய்வர்கள். நீதி நேர்மை மரணித்துவிடட நாட்டில் வாளும் கத்தி பொல்லும்அடக்க நினைக்கிறது. பயந்துவாழும் வாழ்க்கையாகி விட்ட்து.
  4. இந்நிலையில் இரண்டாவது தினமான இன்றும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர். மாணவர்கள் விழுந்ததை அவதாணித்த பிரிதொரு மாணவன் கடமையில் இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர், பாடசலையில் ஒரு தவறு நடந்தால் அதிபரிடம் தானே கேட்ப்பார்கள். ஆத்திரம் கவலை கண்ணைமறைக்க அதிபரை தாக்கியிருக்கிறார்கள். தவ்ருத்தலாக எ விழுந்ததை கண்ட மாணவர் தான் சொல்லியிருக்கிறார். அவர்களது விதி ...அவ்வ்ளவு தான்.
  5. தனி எழுதிய பதிவுகளில் மிகவும் திறமையான பதிவு இது தான் . சம்பவத்தை மெருகூடட கற்பனைக் குதிரையை ஓட விட்டு நல்ல புனைவுகளை கோர்த்து எழுதி சென்ற விதம் அழகோ அழகு . பாராட்டுக்கள். இது எல்லா வயதானவர்களும் சந்திக்கும்பிரச்சினை. நாடு இனம் மதம் என வேறுபாடின்றி முதுமையில் இத்தகைய கஷ்டங்களும் வரும். நாம் தான் முன்னேற்பாடாக ஆயத்தங்கள்செய்து வைக்க வேண்டும். சேமிப்பு அவசியம் . சொத்துக்களை தனக்குப்பின் என எழுதவேண்டும். "தனக்கு கண்டு தான் தானம்". அதிக இடைவெளி விடாது தொடர்ச்சியாக எழுதியது கண்டு மிக்க மகிழ்ச்சி.மேலும் தொடர வாழ்த்துக்கள்.
  6. தலைவரின் மனைவி , மகளுடன் இருக்கிறார் என்ற காணொளி யில் உரையாடிய சகோதரி ஏதும் நிர்பந்தத்தின் மத்தியில் உரையாடி இருக்கலாம். அவரது முகத்தில் ஒருவகை இறுக்கம் ,யாரோ பின்புலத்தில் சொல்ல சொன்னதை ஒப்புவிப்பதுபோல் இருக்கிறது . ஒரு வேளை அவர்கள் இருந்தால் ....நன்றி கெடட துரோகமும் காட்டிக் கொடுப்பும் சுருட்ட்லும் நிறைந்த இந்த இனத்துக்காக அவர்கள் அரசியலுக்கு வரவேண்டியதில்லை. நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப்போகட்டும். உரையாற்றியவருக்கு பிரச்சினை வரும் என தெரிந்தும் ஏன் இந்த சூழலுக்கு தள்ளப்படடார்? இதனால் யாருக்கு லாபம் ? . ஈழமக்களை ஏன் குழப்ப வேண்டும்?
  7. எனக்கு இது ஊரிலிருந்த போது சாப்பிடலாமெனத் தெரியாது . இங்கு கடைகளில் பார்த்திருக்கிறேன் பின்பு தான் புரிந்துகொண்டேன். ஒரு தோடடமாகவே விளைவிக்கிறார்கள். ( அறியாமை கள் பல ....கத்தாழை குறிஞ்சா இலை பிரண்டை பூசணியின்துளிர் )
  8. தவறானவை சரியானது பசும் பால் .....> பசுப்பால் (பசுவின் பால்) தேனீர் ..........> தேநீர் ( தேயிலை நீர் ) எண்ணை .........> எண்ணெய் ( எள் = நெய் )
  9. அக் குடும்பத்தின் மீது தனிப்படட விரோதமாக இருக்கலாம் தானே? பணம் வெளிநாட்டில் இருந்து மட்டும்தான் வருகிறதா ? ஏன் வெளிநாட்டுப்பணம் வந்து என சொல்ல வேண்டும். அவர்கள்வீடு வெளிநாட்டிலிருப்பவர்கள்தா ? அவர்களை எழுப்ப நினைக்கிறார்களா ?
  10. சரணாலயம் ...நன்றாக இருக்கிறது ..ஆங்கிலப் சொற் பதங்கள் குறைத்து எழுதினால் உ = ம் போன் (தொலைபேசி.. அழைப்பு) மிக மிக சிறப்பு. ஏற்கனவே சுட்டி காட்டியுள்ளேன் தனியின் ...எழுத்துநடை மிகவும் நல் மாற்றமடைந்து உள்ளது என தொடருங்கள்.பாராட்டுக்கள்.
  11. இன்றைய நாள் இனிதாக அமையவும் இதுபோன்று பல பிறந்தநாட்களை கொண்டாடவும் இறைவன் அருள்புரிய வேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமார் அண்ணா.
  12. நல்லதொரு விடயம் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பெற்றோருக்கு கல்வி ஒரு முக்கிய செல்வம். அதைக் காலகாலமாக பேணி வருகிறார்கள். இடைக்காலத்தில் சூழ்நிலை காரணமாக பிள்ளைகள் திசை திருப்தி விடப்பட்டு விடடார்கள் . கலாச்சர சீர்கேடு போதை பெரியவர்களை மதியா மை போன்றவிடயங்கள். இவை கண்டிப்பாக மீள கட்டியெழுப்ப வேண்டும். பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்.?
  13. இப்படியும் ஒரு பயணம். மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழும் சூழலினால் நிர்ணயிக்க படுகிறது அவனும் அதற்கேற்ப இசைவாக்கமடைந்து விடுவான். சிலருக்கு இப்படியும் வாழ்க்கை அமைந்து விடுகிறது .அந்தரத்தில் வாழ்க்கை . சர்க்கஸ் ஆடுவது போன்றது.நெஞ்சத்துணிவு கொண்ட ஒருபெண்ணின் பயணம். சற்று சறுக்கினாலும் மரணம் தான். வேகமாய் ஓடும் நீரோட்ட்துக்கும் சாய்வான கற்ப்பூமிக்குமிடையில் ஒருபயணம்.அவர்களுக்கு அது சாதாரணம் நமக்கு ..?விரும்பினால் பாருங்கள்.
  14. இந்திரன் : டேய் சந்திரன் மாஸ்டர் க்கும் ஹெட்மாஸ்டர்க்கும் என்னடா வித்தியாசம். சந்திரன் : இது தெரியாததா? ஒரு கூட்டினில் சிங்கம் புலி போன்ற மிருகங்களை வைத்துசமாளிப்பவர் மாஸ்டர்(றிங்மஸ்டெர்)ஒரு வீட்டில் அம்மா வையும் மனைவியையும் வைத்து சமாளிப்பவர்ஹெட் மாஸ்டர். இந்திரன் : ....????? ( ஓட்டுக்கேடட மனைவி அங்க என்ன சத்தம்) சந்திரன் : ஒடடமெடுத்தபடி ...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். . படித்ததில் பகிர்ந்தவை
  15. ஒவ்வொரு சம்பவ மும் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமையும் அவளது வாழ்வில் குழந்தை அவளுக்கு நல்லதோர் வாழ்வுக்கான காரணியாக அமைந்துவிட்ட்து .கதையை பகிர்ந்தமைக்கு நன்றி
  16. தனிக் காட்டு ராஜா ...இந்தக் கதை உங்கள் அனுபவமென தவறாக கணித்து விடடோம் மன்னிக்கவும். இது ஏனையோருக்கு பயன்படும் என்ற நல் நோக்கத்து டன் பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.
  17. எல்லோருக்கும் வாழ்க்கையில் காதல் வரும் . அது எழுத்தாளனாக இருந்தாலும் சரி எவராக இருந்தாலும் சரி. அவரவர் தனிப்பட்ட் விருப்பம். (நானும் அவரது காதல் கதையை வாசித்திருந்தேன்) "என்னுடைய ஒரு சந்தேகம் அசோகமித்திரனை இப்படி யாராவது காதலித்திருப்பார்களா?" Posted 9 hours ago by ஆர். அபிலாஷ் இது அபிலாஷின் கருத்து . இது யாழ்களத்துக்கு தேவையற்ற பதிவு என்றே எண்ணுகிறேன்.
  18. வெளிநாடுகளில் குழந்தைகள் மீது அரசாங்கம் மிகவும் தனிப்பட்ட் அக்கறை எடுத்துக் கொள்கிறது . பாடசாலைகளில் கூட சிறு காயம் இருப்பின் ஆசிரியர் எப்படி வந்ததென்று வினவி சந்தேகமிருப்பின் மேலிடத்துக்கு அறிவிக்க படும்.
  19. உன் உணர்வுகளை மதிக்காத இடத்தில் உரிமைக்கு இடம் கொ டாதே. தன உடம்புக்கு முடியாத போதும் ஓய்வெடுக்க விடாமல் உழைக்க சொல்கிறது குடும்ப சுமை உழைக்காத பணமும் உதவாத உறவும் என்றும் நமக்கு நிரந்தரமில்லை. மனைவி கோப படும் போதும் விரக்தியில் புலம்பும் போதும் அமைதியாக இருங்கள் ஏனென்றால் கணவனை விட சிறந்த உறவாக யாரும் இருக்க முடியாது கோபமும் ஒரு வகைப் பாசம் தான் அதை எல்லோரிடமும் காட்டி விட முடியாது. நம் மனத்துக்கு நெருங்கியவர்களிடம் தான் காடட முடியும். ஜெயிக்கும் வரை தன்னம்பிக்கை அவசியம். ஜெயித்த பின் தன்னடக்கம் அவசியம். இர க்க மில்லாத மனிதரிடம் கையேந்தி நின்று விடாதே .இறக்க நேர்ந்தாலும் பரவாயில்லை வைராக்கியத்தோடு வாழ்ந்து விடு. என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்தாலும் சாக்கடையில் விழுந்தால் எழுந்து வர வேண்டுமே தவிர அதில் நீச்சல் அடிக்க கூடாது.
  20. தன்நிலை தாழ்ந்து போனாலும். முயற்சியை கைவிடான்.
  21. தணியாத தாகம் தன்னந் தனிமையிலே தள்ளாடும் வயதினிலே ஜன்னல் ஒர வான் வெளியை வெறித்துப்பபார்க்கிறேன். வாகன ஒடடம் ஜன நடமாட்டம் விரைந்து செல்கிறது எதையோ தேடி ஓடுகிறார்கள்.அன்றாடம் இது ஆடி ஓடி ஓய்ந்து போன கிராமத்துக்கட்டை காலனின் காகித வரவுக்காய் காத்திருக்கிறேன் ஆனாலும் ஒரு தாகம் என் தாயகம் நோக்கி இருப்பினும் முன்பு ஒரு தடவை சென்று தான் பார்த்தேன். என் வீடு தரைமடடமாகி புல் பூண்டு முட் செடிகள் மூத்தவன் ஒரு தடவை ஆள் வைத்து துப்புரவாக்கியவன் இருப்பினும் பஞ்ச பூதங்கள் தீ நிலம் நீர் ஆகாயம் காற்று பொய்த்துப்போகவில்லை மீண்டும் அவை முளைத்திருந்தன நான் நண்பனுடன் குளித்த கிணறு ஓடிவிளையாடிய மைதானம் சாமி கும்பிடும் கோவில் எல்லாம் தூர்ந்து போய் இருந்தன பாடசாலை மட்டும் புலம்பெயர் வாழ் மக்களால் மீள வடிவமைக்க பட்டு இருந்தன. என் வகுப்பு என் இருக்கை என் ஆசான் சக மாணவர்களின் கூச்சலை. தேடுகிறேன் என்ன வளம் இருந்ததில்லை என் நாட்டில் ? பச்சைப்புல் வெளிகளின் வாசம் கால்நடைகளின் சாணி மணம் புல்லுக் கட்டு சுமந்த வேலையாட்கள். புகையிலை மிளகாய் தக்காளி வெங்காயப் பாத்திகள் விளைந்த நிலம் கவனிப்பாரற்று, எல்லைகள் அற்று முட்புதர்களும் புற்களும் நிறைந்து என் செல்வம் தந்த பூமி பாழ் பட்டுக் கிடந்தது நீண்ட பெருமூச்சாய் என் சுவாசம் மேலெழுகிறது கொட்டிய கொத்துக் குண்டுகளும் கறல் பிடித்து சிதையுண்டவாகன எச்சங்களும் அந்நிய முகங்களுமாய் செல்லடிக்குப்பயந்து ஓடி ஒழிய அடைக்கலம் தந்த " பங்கேர்" எனும் நிலக்குழியை காணவில்லை. உயிர்காக்க ஓடி கற்களும் கண்ணடி ஓடுகளும் குத்த கொட்டும் மழையிலும் கால் நடையாய் நடந்து கிராமம் கிராமமாய் இடம் பெயர்ந்து கட்டிய துணியும் கையில் குழந்தைகளும் சிறு மூடடை முடிச்சுகள் சகிதம் காவல் நிலையங்களில் அச்சத்துடனும் பயத்துடனும் பாஸ் ..அனுமதி எடுத்து சிறு நகரம் அடைந்து சற்று ஆசுவாசப்படுத்தி அடுத்து என்ன என்ற கேள்வியெழ நிர்க்கதியாய் நின்று,கற்ற கல்வியும் கந்தனின் துணையும் கையில் இருந்த பணமும் வழிகாட்ட் என் நிலம் விட்டு என் உரிமைகளற்று உறவுகளற்று புலத்தில் அகதியாய் உயிர் காக்க ஓடி இந்நாட்டுக்கு வந்த சோகம். மொழி கற்று கடின வேலை கற்று கெடுபிடிகள் மத்தியில் கால நிலை வேறு பாடாய்படுத்தி கால ஒடடத்தில் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து சற்று ஆறி அதுவே கடமையாய் மாறிகாலங்கள் நாற்பத்தை கடந்த போது... .திரும்பி பார்க்கிறேன். கட்டிய மனையாளும் பெற்றபிள்ளைகளும் பேராக் குழந்தைகளும் உறவுகொண்டாட நிலத்தில் முப்பதும் புலத்தில் நாற்பதுமாய் காலங்கள் ஓடி மறந்திருந்தன . கட்டிய மனையாளும் காலன்அழைத்தான் என மேலுலகம் சென்று விட பெற்ற மகள் வழிப் பேரப்பிள்ளைகள் துணையுடன் சில காலம் வங்கிக்கடன்பட்டுக் கட்டிமுடித்த என் வீட்டில் வாழ முடியாமல் வயோதிப இல்லத்தில் . வார விடுமுறையில் வந்து வந்து போனார்கள். கூடவே என் முதுமையம் சில நோய் நொடிகளையும் சேர்த்து கொள்ள தனிமையில் அமைதியில் நீள்நினைவுகள் அசை போட நாட்களைஎண்ணிக் காத்திருக்கிறேன் சென்ற நாட்கள் மீண்டும் வருமா ?
  22. ஆனைக்கொரு கலாம் வந்தால் பூனைக்குமொரு காலம் உண்டு ... இதில் ஆனை பூனை என ஒரே சந்தத்தில் வருகிறது . எனக்கும் ஒரு காலம் வராமலா போகும் என கருத்துக் கொண்டது எண்ணியிருந்தேன். நேற்றைய ஒரு காணொளியில் .... ஆனை .....ஆ + நெய் மற்றும் பூ + நெய் இங்கு ஆ நெய் என்பது ...பசு நெய் . நெய் சேர்த்த உணவுகள் ருசியானவை . இலகுவில் இளையோருக்கு சமிபாடடையும். பூனை என்பது தேன், தேன் சுவையானது . முதுமையில் மருந்து மாத்திரை தேனில் உரைத்து கொடுப்பார். நெய் ஆகாது . இலகுவில் செமிபாடடையது. எனவே பசு நெய்யையும் தேனையும் தான் பெரியவர்கள் கருதி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என கொள்ளலாம். இளமை என்ற ஒரு காலம் வந்தால் முதுமைக்கும் ஒரு காலம் வரும். . .
  23. . பெரும் கண்டத்தில் ( தத்து ) இருந்து மீண்டது போல ஒரு உணர்வு ...தத்தளித்தவனுக்கு படகு கிடைத்துபோல ....ஒரே மூச்சில் வாசித்தேன்.இந்தமட்டிலாவது மீண்டது நீங்கள்செய்த புண்ணியம். அது சரி நீங்கள் இருப்பது ஆசியாக் கண்டம் ..அவுஸ்திரேலியாவுக்கு கண்டம் விட்டுக் கண்டம் போகிறோமே அதுவும் படகில் என்ற பொது அறிவு கூட ..இல்லையா ? முகவர் என்ன கடவுளா ? நாளும் பத்திரிகையில் படிக்கிறோம் இதுபற்றி .... பகிர்வுக்கு நன்றி நல்லதோர் அனுபவ பாடம்.
  24. இப்படியான அம்மம்மாவின் கவனிப்பில் தேவையறிந்து உதவும் குணத்தோடு கைமருந்தில் நோய் தீர்க்கும் ஒரு காலத்தில் வாழ்ந்தோம் என்று பெருமைபட்டுக் கொள்ளத்தான் முடியும் .தற்போது இயந்திரமயமான வாழ்வு , இராசயனம் கலந்த உணவு , நோய் தீர்க்க மருந்து மாத்திரை என வேறுபடட உலகில் வாழ்கிறோம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.