Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. நிழலி! உங்கள் உதவிக்கு நன்றி . தெரியாமல் உருபெருகியை ( Magnifier ) அழுத்தி விடடேன். அதனால் எல்லாமே மாறிவிட்ட்து .நிலைதடுமாறி ,பதடட மடைந்து தற்போது ஓரளவு மீண்டுவிடடேன். நன்றிகள் பல உறவுகளே.
  2. இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை அண்ணா.முயற்சிக்கிறேன்.
  3. வணக்கம் யாழ் உறவுகளே ....இன்று எனது கணணித்திரையில் சிறு குழப்பம். மிகவும் விரிவடைந்து (enlarge ) , சுட்டியிலும் (cursor ) எதோ தவறு . ஒரே குழப்பமாய் இருக்கு. இதனால் ஏதும் தடங்கல் ஏற்படின் மன்னிக்கவும்.
  4. நானும் நீங்களும் ஒத்துபோகலாம் இந்த விடயத்தில் ஆனால் எல்லோரும் ஒத்து போவார்களா ?
  5. எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை செல்போனை நாம்பயன்படுத்துகிறோமா அல்லது அதற்கு அடிமையாய் இருக்க நம்மைஆக்கிவைத்திருக்கிறதா ? உணர வேண்டிய காலம்.
  6. முத்ததுக்கும் இடம் காலம் நேரம் நாடு வயது இனம் வேறுபடும் .கள்ளம் இல்லாத முத்தம் கலவரம் இல்லை 😀
  7. விட் டுக் கொடுப்பவர்களுக்கு கோப படத் தெரியாது என்று எண்ணாதீர்கள் அவர்களுக்கு யாரையும் புண்படுத்த தெரியாது என புரிந்து கொள்ளுங்கள். மனம் ஒரு மாயச்சாவி முடியும், என்று நினைத்து விடடால் எத்த்னை பெரிய பூட்டுக்களையும் திறந்து விடும். முடியாது என்று நினைத்து விடடால் தான் சாவி என்பதை மறந்து விடும். வெற்றியும் தோல்வியும் இரு படிகளே ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய் மற்றோன்றில் உன்னைத்திருத்தி கொள்வாய்.
  8. எண்பத்தி மூன்றினிலே எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத்தி...) தேயிலைத் தோட்டத்திலே - அந்தத் தெற்கு இலங்கையிலே ஆயிரமாயிரமாய்த் தமிழ்ச் சோதரர் அன்று இனவெறியாற் கொலையுண்டதும் நாயிலும் கீழ்க்கடையாய் - எம்மை நாடற்ற பேர்களாய் ஆக்கிய பின்னரும் காயும் இனவெறியால் - எம்மேல் காறியுமிழ்ந்ததும் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...) வெலிக்கடைச் சிறையில்-மனம் வெம்பிக் கிடந்த எம் சோதரர் தன்னையே... சிலிர்க்குதேயுடலம்...அந்தோ! சிந்தனை செய்திடவும் மனம் கூசுதே... பலிக்கு வெட்டினரே... பத்மாசனப் புத்தன் முன் கண்களைக் குத்தியே படையலிட்டனரே - அந்த பாதகம் எங்களின் நெஞ்சை விட்டேகுமோ (எண்பத்தி...) ஆண்ட அரச படை - எங்கள் அன்னையர் தங்கையர் மானம் பறித்ததும் மூண்ட பெருந்தீயில் - செல்வம் முற்றும் இழந்து நாம் ஏதிலரானதும் மாண்டவர் கண்களையே - அந்த மானமிலாதவர் தோண்டி மகிழ்ந்ததும் மீண்டும் நினைவலையில் - வந்து மேவிட வெந்துயர் ஆவியைத் தீய்க்குது (எண்பத்தி...) சிங்கள பௌத்தவெறி - எங்கள் செந்தமிழ்த் தாயைச் சிதைத்த கொடுமையை எங்கு முறையிடுவோம் - எமக்(கு) ஈழத்தையன்றியே யாதும் புகலுண்டோ! தங்கையர் தம்பிகளே! - தமிழ் ஈழ சரித்திரம் நாளும் படித்து நீர் பொங்குக பொங்குகவே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாயினோம் (எண்பத்தி...) மேற்குலகந்தனிலே - பொருள் மேவிய வாழ்வொடு வாழினும் எங்களின் நாட்டை மறப்போமோ! - எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே-அன்னை வீட்டை மறப்போமோ! - என்று விம்மியழுது புலம்பிடும் எம்குரல் கேட்டிருப்பாய் காற்றே - அந்த கேவலைக் கீழ்த்திசை சென்றெமதீழத்தில் மீட்டு முரையாயோ - நாங்கள் விம்மியழவும் திறன் கெட்டுப் போயினோம் (எண்பத்தி...) ஆற்றல் இழந்தவராய்- எங்கள் அன்னை மொழியை மறந்தவராய்ப்-பெருங் காற்றிற் கலந்தவராய் - கலாச் சாரம் கலைகள்அழிந்தவராய்- நாம் மாற்றினமாகுவதோ - இல்லை மானத் தமிழர்களாய் என்றும் வாழ்வதோ சாற்றிடுவாய் தாயே - ஹே! சாமுண்டி காளீ! வீரகராளீ! (எண்பத்தி...) 1983 ஆடி 24 இல் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை நினைவு கூர்வோம். பாடியோர்: மாட்டின் சோபியா பாடல்களும் மெட்டும்: யுகசாரதி (எஸ். கருணானந்தராஜா) இசை: சதீஸ் குழுவினர் பாடலும் ,பாடல் வரிகளும், இசையும் மீண்டும் நினைவுக்கு கொண்டு செல்கிறது. ஆடி மாதம் என்றாலே ஈழத்தமிழருக்கு சோக கீதங்கள் நெஞ்சை வாட்டும். கண்களிலே கலக்கம் மாறாத வடுக்களும் தீராத சோகமும் நிழலாடும். பகிர்வுக்கு மிக்க நன்றி
  9. சில மெத்தப் படித்த அறிவாளிகள்(தீர ஆராயாமல் ) Over active இப்படி நடப்பதுண்டு😀
  10. சிங்கத்தின் கதை சில சமயம் மிகைப்படுத்தலோ,என எண்ணத்தூண்டுகிறது
  11. நம்பிக்கை துரோகத்துக்கு " முடி "பரிசாக கிடைத்திருக்கிறது. முடி தானே வளர்ந்து விட்டுப்போகிறது. 😀
  12. அவர்களின் "எதிர்பார்ப்பு "வேறு வகையாக இருக்கிறது போலும்.
  13. அடிமட்டம் பிழையுங்கோ! முதலாவதில் நுனி உடைந்து விட்டது
  14. "பொடி நடையாய் போறவரே! பொறுத்திருங்க நானும் வாறன் " கோவில், பாடசாலை கடைத்தெரு சந்தை போன்றவற்றுக்கு ஒடடமும், நடையிலும் சைக்கிளிலும். மாட்டு வண்டியிலும் இருந்த காலத்தில் நோய் நொடியும் இல்லை. நடையின் பெறுமதி உணரப்படவில்லை. வாழ்க்கையே நடை யாய் நகர்ந்தது .
  15. பல கிராமங்களில் இப்படி நடப்பதுண்டு தலைவர் காலத்துக்கு முன். தற்போது வேறு வடிவங்களில் போதை மயக்கத்தில் வாள் கத்தி பொல்லு கோடாரி ...கொண்டு நடக்கிறது .
  16. படிக்க தவறிய புத்தகம் தந்தை படிக்க விரும்பும் புத்தகம் அன்னை படித்தும் பிடித்து போகும் புத்தகம் மழலை தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை மரணத்தை விட கொடியது போலி வார்த்தைகளுக்கு அடிமையாக இருந்தோம் என்பது . பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம் செல்லுபடியாகாது என்று .... அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால் மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ... எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் நாளை உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர் எட்டிக் கூடப் பார்க்க மாடடார். இன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து நாளையும் இப்படி இருக்கும் என்று எண்ணி விடாதே உன் நிலமையை மாற்ற இறைவனின் ஒரு நொடிபோதும். தீயை படித்து தெரிந்து கொள் வதை விட தீண்டிக் காயம் பெறு அந்த அனுபவம் எ ப்போதும் சுட்டுக் கொண்டே இருக்கும். நா .முத்துக் குமார்.
  17. தயவு செய்து நான் தொடங்கிய இந்த தலைப்பை தொடரவேண்டாம் எனக் கேட்க்கிறேன். ஏற்கனவே விளக்கங்களும் அனுபவ குறிப்புகள் கருத்துக்களும் தடடச்சு வழி எடுத்துரைத்தாயிற்று. இதை வாசிப்பதற்கு மட்டும் விடவும் என நிர்வாகத்தை கேட்க்கிறேன். விரும்பியவர்கள் யாராவது வேறு திரி தொடங்கி எழுதவும். .
  18. சாதாரண மக்களை மனதில் வைத்துக்கொண்டே.. அவர்கள் எப்படியாவது நேர்மையான வழியிலோ(டிரைவர்,முதியோர்களைபராமரிப்பார்கள்..எக்ஸட்ரா) அல்லது களவாகவோ(விசிட் விசாவில் வந்து அகதியாகவோ) வந்து செட்டிலாகட்டும் என்ற எண்ணத்திலேயே.. செட்டிலாவது முன்பு போல இலகுவாக இல்லை என்பது தான் சொல்ல விழைகிறோம்.
  19. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ம் திகதியே ஆடி அமாவாசை விரதமாகும் இதை முன்னமே சொல்லி இருக்க கூடாதா? 😀
  20. தமிழ் மொழி உலகமெல்லாம் பரவ வேண்டும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.