அகவை இருபத்தைந்து காணும் என் இனிய ஆலமரமாம் யாழ்களமே வாழ்க நீடூழி . எத்தனையோ தடங்கல்கள் சோதனைகள் பிரச்சினைகள் வந்த போதும் கட்டிக்க காத்த நிர்வாகிக்கும் மட்டுறுத்தினருக்கும் சக யாழ் உறவுகளுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் முதலில் கண்ட தமிழ் உரையாடும் பொழுது போக்குத் தளம். எததனையோ பறவைகளாக வந்தவர்களும் இடையில்பறந்தவர்களும் கருத்து மோதலும் சண்டை சமா தானங்களும் கண்ட களம். இன்னும் காலூன்றி நிற்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். புதிய உறவுகள் வருவது தற்போது குறைவு. வந்தாலும் தரித்து நிற்பதில்லை .சிலரின் வேடிக்கைகளும் சிரிப்புக் கருத்துக்களும் உயிரோடடமாய் வைத்திருக்கின்றன. ஆனாலும் சில அலடடல்களுக்கும் குறைவில்லை. எந்த புயலடித்தாலும் சந்ததி சந்தியாக யாழ் களம் வாழ வேண்டும். நானும் பதினைந்து வருடங்களாக இணைந்து இருப்பதில் பெருமை படுகிறேன் . வாழ்க தமிழ். வாழ்க யாழிணையம் .