• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    9,107
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Posts posted by நிலாமதி


  1. காதிலே கேடட ஒரு செய்தி ...இவரது நெருங்கிய உறவினர் தேர்தலில் தோல்வியடைந்தவரின்   தந்தையின்  நெருங்கிய ஆலோசகராம். 


  2. காலத்தால் அழிக்க முடியாத நாளை பிறந்த தினமாக கொண்ட , மண்ணுக்காய் போராடிய தலைவனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். 


  3. வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது.
     
    அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார்.
     
    பக்கத்து வீட்டு மாடு, பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாத இந்த மாடு, தானும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒத்துக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றதும், மாடு மறுபடியும் வந்து, தன் புல்லின் அளவை அதிகரிக்கச் சொல்லிக் கேட்டது.
     
    அதற்கு வியாபாரி “மாடே, அதிக பாரம் ஏற்றியதால், நம் பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது, எனவே இப்பொழுது ஒரு புதுவண்டி செய்யச் சொல்லியுள்ளேன், அதற்கு ஆகும் செலவையும் நான் பார்க்க வேண்டும், இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுத்துக் கொள், புல்லின் அளவை நிட்சயம் அதிகரிக்கிறேன்” என்றார்.
     
    வேறு வழியின்றி, மாடும் ஒத்துக் கொண்டது. புது வண்டியும் வந்து ஆறு மாதங்களும் ஆன பின்பு, மாடு திரும்பவும் சென்று புல்லின் அளவைக் கூட்டச் சொல்லிக் கேட்டது.. அதற்கு வியாபாரி..
     
    “மாடே, இப்போதெல்லாம் உனது வேகம் மிகக் குறைந்துவிட்டது, பக்கத்து ஊருக்குச் செல்ல, முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய், இதனால என் வியாபார நேரம் குறைந்துவிட்டது, எனவே உனக்கு அதிக புல் தருவது, இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றார்.
     
    கோபமடைந்த மாடு “எஜமான், இப்புது வண்டியின் பாரம், பழைய வண்டியை விட அதிகம், இந்தக் கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியிருப்பதாலேயே என்னால முன்பு போல விரைவாகச் செல்ல முடியவில்லை” என்றது... அதற்கு வியாபாரி..
     
    “மாடே!.. நீ என்ன காரணம் சொன்னாலும், உன்னால் எனக்கு அதிக லாபத்தைப் பெற்றுத்தர முடியவில்லை, நான் வேண்டுமானால் உன்மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன், ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றார்.
     
    தன் இத்தனை வருட உழைப்பும் வீணாகிவிடும் எனப் பயந்த மாடு “வேண்டாம் எஜமான், நான் எப்படியாவது வேகமாகச் சென்று, உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்”.. என்றது.
     
    மறுநாள் தொடங்கி, மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும், முன்பு தான் எடுத்துக் கொண்ட நேரத்திலேயே வியாபாரியைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஆனால், மிகக் கடின உழைப்பால், ஒரு மாதத்திலேயே நோயுற்று, படுத்த படுக்கையானது. வழமையாகச் சாப்பிடும் புல்லைக்கூட, அதனால் உண்ண முடியவில்லை.
     
    சில நாட்கள் அதற்கு மருந்து கொடுத்த வியாபாரி, ஒருநாள் அதனிடம் “மாடே, உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார், அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றார்.
     
    “எஜமான், நான் இப்போதிருக்கும் நிலையில், என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாதே, இப்போ எதுக்கு என்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றது.
     
    “உன்னை அவர்கள் வேலை செய்ய வாங்கவில்லை, உன்னைக் கொன்று, தோலை எடுக்கவே கேட்கிறார்கள்” என்றார் வியாபாரி. வியாபாரியின் பேச்சைக் கேட்ட மாட்டுக்கு அழுகை வந்தது, அழுதழுது மாடு சொன்னது..
     
    “எஜமான், நிங்கள் செய்வது ரொம்ப அநியாயம், உங்கள் பேச்சை நம்பி, மாடாய் உழைத்ததாலேயே நோயுற்றேன், இல்லை எனில் நீண்டகாலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன், நீங்கள் செய்வதெல்லாம் துரோகம்” என்றது. அதைக் கேட்ட வியாபாரி..“நான் செய்வது துரோகம் இல்லை
     
     ஒரு  முதலாளியின் லட்சியம், தன் தொழிலாளியிடம், முடிந்த அளவு வேலை வாங்கி அதிக லாபம் பெறுவது. அதையே நானும் செய்தேன், உன் மூலம் 5 ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை 3 ஆண்டுகளிலேயே சம்பாதித்து விட்டேன், இப்போ உன்னை விற்பதன் மூலமும் பணம் ஈட்டப்போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெறும் நோக்கம் நிறைவேற, உன்னுடைய ஆசையை என் மூலதனமாக்கிக் கொண்டேன். நீ ஆரம்பித்திலேயே சுதாகரித்துக் கொண்டிருந்தால், தப்பித்திருக்கலாம்” என்றார்.
     
     
    தன் முட்டாள்தனத்தை எண்ணி, மாடு நொந்து அழுதது.
     
    இப்படித்தான் சில நிர்வாகங்களின் நோக்கமும், ஊழியர்களிடமிருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிக்கொள்வார்கள். எனவே ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
     
     
     படித்ததில்   பிடித்தது 
     
    • Like 4
    • Thanks 2

  4. போட்டியை நேரமெடுத்து தரவுகளைச் சேகரித்து   வெற்றி வீதம் அறிவித்த கோசானுக்கு பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகுக.  ஆனால் இடையிடையே  காணாமல் போகாதீர்கள். 😀

    • Thanks 1

  5. எங்களையும்  யாழ்ப்பாணத்துக்கு  அழைத்து செல்வது போலிருக்கிறது .எடுத்த படங்களையும் எங்களுடன் பகிர்ந்தால் இன்னும் ரசனையாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி  தொடருங்கள்.
     


  6. ராஜா ராஜா சோழன் நான் எனும் .................அங்கத்தவர் அல்லாதோர் கருது எழுத  முடியாதா ?  எங்களை எல்லாம் அனுமதிக்க மாடீர்களா ?😀

     

    சிறி ஜெயந்தன் ஈழ தமிழர் என அறிந்தேன். இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுக்கணும். ஈழ தமிழர் தமிழ் திரைப்படங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஈழ தமிழர் கள் குரல் கொடுக்கணும். இல்லாவிட்டால் திரைப்படங்களை புறக்கணிக்க வேண்டும். அடிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும். இப்படிதான் மேற்கு நாடுகளில் செய்வார்கள்.

     

    யு ........... ரூப்  இலிருந்து 

     
     
     
     
     
     
     

  7. கஞ்சா கன்னியாஸ்திரிகள் என அழைக்கப்படும் இவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. தாங்கள் எந்தவிதமான மதத்தையும் சாராதவர்கள். சொல்லப்போனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனச்சொல்லும் இவர்கள்.....

     

    கஞ்சா கன்னிகள் என சொல்லலாம்.இந்த கன்னிகளால் ...துறவிகளுக்கு அவப்பெயர் .
     

    • Like 1

  8. 1. இந்த தேர்தலில் எதாவது ஒரு வேட்பாளர் 1ம் சுற்றில் 50% வாக்குகளுக்கு மேலாக எடுப்பாரா?( 10 புள்ளிகள்).

    இல்லை


    2. 1ம் சுற்றில் அதிக வாக்கை பெறுபவர் யார்? (10 புள்ளிகள்).

     சஜித் 


    3. 1ம் சுற்றில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் யார் வெல்லுவார்? (10 புள்ளிகள்).

    கோத்தா


    4. வடமாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

    சஜித்


    5. கிழக்கு மாகாணத்தில் அதிக வாக்குகளை யார் பெறுவார்? (10 புள்ளிகள்).

     கோத்தா 


    6. யார் ஜனாதிபதி என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்குமா? (10 புள்ளிகள்).  

    இல்லை


     7. இந்த தேர்தலில் வென்று ஜனாதிபதியாக 2020 ஜனவரியில் யார் பதவி ஏற்பார்? (40 புள்ளிகள்).

    கோத்தா

     

     

    பிரச்சினைகள் எழாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம் 


  9. வாதவூரனுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
    அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

     

  10. திங்கள், 1 ஜனவரி, 2018

    "திங்க"க்கிழமை : காசி அல்வா - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

    நான் இருக்கற ஊர்ல வருடம் முழுவதும் பூசணிக்காய் கிடைக்கும், ஆனால் எல்லாம் பிஞ்சுப் பூசணி (சின்ன சைஸ்). நம்ம ஊர்ல கிடைக்கற மாதிரி முத்தல் பூசணி இங்கு கிடைக்காது. இங்க பூசணின்னு நான் சொல்றது, வெண் பூசணி (மேலே பச்சைத் தோல்). அதுனால சென்னைலேர்ந்து வரும்போது, முத்தல் பூசணி ஒரு கீத்து, முடிந்தால் வாங்கிவருவேன் (சும்மா ஓரு கூட்டு, குழம்புத் தான் என்று போடத்தான்). தீபாவளி முடிந்து இங்கு திரும்பியபோது, காய்கறி மார்கெட்டில் 2 முத்தல் பூசணிகளைப் பார்த்தேன். அதில் ஒன்றை வாங்கினேன். இதுதான் முதன் முதலில் இந்த ஊரில் நான் வாங்கிய முத்தல் பூசணி. அதை வாங்கும்போதே காசி அல்வா செய்வது என்று நினைத்துக்கொண்டேன்.

     
    வட நாடுகளில் பூசணியை வைத்துச் செய்யும் இனிப்புகள் புகழ் பெற்றது. ஆக்ரா பேதா (Agra Petha) என்பதில் பல வகைகள் உள்ளன. எல்லாமே சுவையா இருக்கும். ஆனா பூசணியை வைத்துச் செய்யும் இந்த அல்வாவுக்கு மட்டும், காசி அல்வான்னு பெயர். ஒருவேளை வட நாட்டுல, காசில இந்தப் பூசணியை வைத்து அல்வா செய்தார்களா இல்லை, PUMPKINக்கு ஹிந்தி பெயரான காஷி ஃபல் என்பதிலிருந்து மருவியதா என்பது தெரியவில்லை. (காஷி ஃபல்-பறங்கிக்காய் குடும்பத்துக்கான பெயர், சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, வெண் பூசணி என்று எல்லாவற்றிர்க்கும் காஷி ஃபல் தான் பெயரா என்று ஹிந்தி பண்டிட் ஸ்ரீராம் அல்லது தில்லிப் பதிவர் வெங்கட் சொன்னால்தான் உண்டு. ஹிந்தி பண்டிட் என்றவுடன், ‘ஏக் காவு மே ஏக் கிசான் ரகு தாத்தா’ ஞாபகம் வரக்கூடாது, ஸ்ரீராம் ஞாபகம் மட்டும்தான் வரவேண்டும்)
     
    பேதா வகை (நான் பூசணி ஸ்வீட்ஸ்னு சொல்லுவேன்) இனிப்பு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அப்புறம் டயட்ல இருந்த காலத்துல, காலை உணவிற்கு, கார்ன் ஃப்ளெக்ஸ், பாலுடன், சிறிது பேதா இனிப்பையும் கிள்ளிப்போட்டுக்கொள்வேன். புரியணும்கறதுக்காக பேதா ஸ்வீட்ஸ் படங்களை நெட்டிலிருந்து சுட்டுப் போட்டிருக்கிறேன்.
     
    சரி.. நாம இப்போ காசி அல்வாவுக்கு வருவோம். இது செய்வது ரொம்ப ரொம்ப சுலபம்.
     
    தேவையான பொருட்கள்
     
    வெண் பூசணி ஒரு பெரிய கீத்து (துருவினால், 3 1/2 கப் வரணும்)
    ஜீனி – ¾ - 1 கப்
    முந்திரி – 10
    நெய் – 2 மேசைக் கரண்டி
    குங்குமப் பூ – 10-12 நூல்.  எனக்கு சட்டுனு தேட முடியாததால், நான் கேசரிப் பவுடர் உபயோகப்படுத்தினேன்.
    ஏலக்காய் தூள் கொஞ்சம்
    எலுமிச்சம் பழம் – 4-5 சொட்டு ரசம்
    பச்சைக் கற்பூரம்
     
    செய்முறை
     
    ·         நெய் விட்டு, முந்திரியை வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
     
    AE1.jpg
     
     
    ·         வெண்பூசணி தோலை எடுத்துவிட்டு, விதைகளை நீக்கி, துருவிக்கொள்ளுங்கள்.  ஒரு மெல்லிய துணியில் பூசணி துருவல்களைப் போட்டு வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டும்போது பூசணி ஜலத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரளவு நீர் எடுத்த பூசணித் துருவல்களை எவ்வளவு இருக்குன்னு அளந்துகொள்ளுங்கள். (3 கப்பா, 3 ½ கப்பா என்று)
     
    AE2.jpg
     
     
    ·         இப்போ, பூசணி ஜலத்தில் பாதியை கடாயில் விட்டு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்தவுடன், வடிகட்டி எடுத்த பூசணி துருவல்களைச் சேர்த்து நன்றாக வேகவிடவும். அவ்வப்போது கிளறிக்கொடுக்கவும். அளவைப் பொறுத்து, இதற்கு 10-15 நிமிடங்களாகலாம்.
     
    AE3.jpg
     
    ·         பிறகு, துருவல் அளவில், மூன்றில் ஒரு பங்கு ஜீனியை கடாயில் சேருங்கள்.  நெய்யும் இப்போது சேருங்கள்.
     
    AE4.jpg
     
    ·         இனி, கிளறவேண்டியதுதான். ஜீனி கரைந்து, பூசணியுடன் பாகாய்க் கலந்து அல்வா பதத்துக்கு வரணும்.
     
    AE5.jpg
     
    ·         இந்தச் சமயத்தில் கொஞ்சமா கேசரிப் பவுடர் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறவும். இப்போ 4 சொட்டு எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.

    இதைத் தானே ..........நீங்கள் சொல்ல வந்தது   வெண் பூசணி என்றும் சொல்வார்களாம். 

    • Thanks 2

  11. நான்கு நாட்களாக இந்த செய்தியை தேடித் தேடி படித்துக்கொண்டு இருந்தேன் .மீட்பதற்கு  கால தாமதமாகி விட்ட்து என்பது என் கருத்து  தற்போது  அவன் காலமாகிவிட்ட்தாக செய்தி ...அவனது பெற்றோருக்கும்  ஊர் மக்களுக்கும் ஆறாத துயரம். பெற்றோருக்கு தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் . அவனது ஆன்மா அமைதியாய் உறங்கட்டும்   .


  12. நான்  நேற்று  வாசித்திருந்தேன் . நான் இதில் எழுதியதையே மறந்து விடடிருந்தேன். ஐந்து வருடங்களாகி விடடதல்லவா ...எனக்கு ஆடசேபனை   இல்லை  இதன் முடிவு   எழுதப்பட்டு விட்ட்தா ? அப்படியானால் மீளவும் ஒரு கதையாக   பதிந்தபின் ...சரி பிழை பார்த்து ...வெளியிடலாம். 

    • Like 1

  13. சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை

    ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமுமில்லை

     நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா தாண்டா

    நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலாட 

     

    அருமையான பாடல் நன்றி 

    • Like 1

  14. தனிமை கொடிது ....ஒரேயொரு நாள்

    கட்டிலோடு மெத்தையும் தலையணையும்  

    .கதவை .திறக்க எழும்பாத  நிசப்தத்தில் .

    ...மீளாத தூக்கம் .ஆறடி நிலமே தஞ்சம். 

    • Like 2

  15. சாவி - போர்த்துகீசியம்

    பிரோ - பிரெஞ்சு

    துட்டு - டச்சு

    கோணி - இந்தி

    பாப்பாளி - மலாய்

    சப்போட்டா - இசுப்பானியம்

    கொய்யா - பிரேசிலியன்

    சுமார் - பெர்சியன்

    வயது - சமற்கிருதம்

    கில்லாடி - மராத்தி

    ஆட்டோ - கிரேக்கம்

    ரிக்ஷா - சப்பானியம்

    தகவல் - அரபி

    போலீஸ் - இலத்தீன்

    ஏட்டு - ஆங்கிலம்

    துப்பாக்கி - துருக்கி

    தோட்டா - உருது

     

     

    ( கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழனா தமிங்கிலனா' என்ற நூலில் மேற்கண்ட மொழிக்கலப்பு சுட்டிக்காட்டப்படுள்ளது )

    நன்றி நுணாவிலான் .... பழைய  யாழ் பதிவில் இருந்தது July 24, 2008 in தமிழும் நயமும்

     

     


  16. எதோ கை தடுமாறி ..காந்தி காந்தி என்று எழுதினதில  மாறிபோட்டுத்தாப்பா  அதற்காக இப்படி வறுத்தெடுக்கிறதா சிரித்தம்பியை 😀

     

    • Haha 1