Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,484
 • Joined

 • Last visited

 • Days Won

  10

Posts posted by நிலாமதி

 1. ஒரு கிராமத்தில்  முதலாளி ஒருவர்   இருந்தார் . அவருக்கு கீழே   சில வேலையாட்களும் வேலை செய்தார்கள். அந்த முதலாளி சரியான கஞ்சன் .  ஒரு நாள் அவன் தன் நிறுவனத்துக்கு  செல்லும் போது, தெருவோரத்தில் ஒரு இளைஞ்சன்      செருப்பு தைத்து கொண்டிருப்பதைக் கண்டான். அவரிடம்  அவருக்கு விருப்பமான, வார்  அறுந்த செருப்பு  காரில் இருந்தது . இளைனனுக்கு அருகில் சென்று  ஏய்  இங்கே வா ...இதை தைத்து கொடு ..எவ்வளவு ஆகும் என்றார். 

  அவனும் ஐயா 50 ரூபாய் ஆகும் என்றான். தன் சடடைப்பையில்   கை வைத்து   ஒரு நூறு ரூபாத் தாளை எடுத்து , காட்டி என்னிடம் சில்லறை இல்லை .மீண்டும் வரும் போது தருகிறேன் என்றார் . பையன்  சற்று  தயங்கி  ஐயா ...ஒரு பத்து ரூபா தருவீர்களா? என்றான். அட  நீயும் அட்வான்ஸ் வேறு கேட்கிறாயா ? என்று காரை  கிளப்பி சென்று விட்டார்.   மீண்டும் அந்த வழியால் திரும்பி வரும் போது   பையனின்  கடை  பூட்டி இருந்தது . நான்காம் நாள்  அவன் கடையை திறந்து .வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 

  தூரத்திலே பஸ் தரிப்பில் , முதலாளியை போன்ற உருவம் உள்ள ஒருவர்  காணப்படடார்    . பையன்  செருப்பை கடதாசிப் பையில் சுற்றிக் கொண்டு ஓடிச்சென்று பார்த்தான் அது அவரே தான். இவனைக் கண்டதும்   ஏன் உன் கடை சில நாடளாய்   பூட்டி இருந்தது  என்றார். அவன் ஐயா என் தந்தை, நோயாளி, அன்று  அவருக்கு மருந்து வாங்க தான் அந்த பத்து ரூபாய் கடன் கேட்ட்டேன் ,, இறந்து  விடடார் . அவரது காரியங்களை முடிக்க வேண்டி இருந்தது அதனால் தான் கடைப் பூடடப்பட்ட்து.. என்றான். . சரி என்று மீண்டும் முன் சடடைப் பையில் காசு எடுக்க முற்படடார். மீண்டும் நூறு ரூபா தாளைக் காட்டி தம்பி என்னிடம் சில்லறை இல்லையே என்றார். பையன் பரவாயில்லை ஐயா, ..மீண்டும் உங்களை காணும் போது தாருங்கள் என்றான். 

  அவனிடம்(கூலி கொடாமல் )  கடன் பட்ட்து  . அவருக்கு செருப்பால் அடித்து போன்ற ஒரு பாடத்தை தந்தது. .பரவயில்லை என்று அந்த நூறு ரூபாயை கொடுத்திருக்கலாம் அவரது வசதிக்கு. ஆனால் கஞ்சத்தனம் இடம் கொடுக்க வில்லை. .

  • Haha 1
 2. கடிகை  

  கை  

  கடி (இடுப்பு )

  கடி

  kaṭi   n. kaṭi. Waist; இடுப்பு கடிக்கீழ்த் தொடிற் கைகழுவுக (சைவச. பொது 220).  kaṭi   n. prob. ghaṭī. cf. கடிஞை Beggar's bowl; இரப்போர்கலம். கைவளை பலியொடுங் கடியுட் சேர்ந்தவால். (W.)  

 3. மூங்கில் மரம் 

  முதல் நீக்கின் வாயு

  கடை நீக்கின் வீழ்ச்சி

   

  கழி (மூங்கில்)
  கழி(வு )
  கழி(முகம்)

   

  மெளடம் [மூங்கில் சாவு  (ஒரேதடவையில் அழி  தல்)}
   

 4. ஒரு  சோற்றுப் பருக்கை 

  அழகான வயல்  வெளிகளும் உயர்ந்த மரங்களும்  நிழல் பரப்பி   நிற்க ,சிறு நீரோடைகளும்  , விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் கொண்ட  அந்தக்குக் கிராமம்.  சொக்கனும் அவன் மனைவியும் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான்.  அவ்வூர்  மக்கள் மிகுந்த முயற்சி  உள்ளவர்கள். ஆடு மாடுகள் மேய்ப்பதும் , தென்னையின் ஓலைகள் பின்னி  வியாபாரத்துக்கு அனுப்புவதும் , சிலர்  குளங்குட்டை களில் மீன் பிடிப்பதையும்  கொண்டவர்கள். 

  சொக்கனும்  நெற்பயிர்ச்செய்கையில் மிகுந்த அனுபவமும்  ஆர்வமும் உள்ளவன். ஓலையால் வேயப்படட  ஒரு வீடும் , சில மாடு கன்றுகளும் தான்  அவனுக்கு சொந்தம்.  அவ்வூரில்  சற்று வசதிபடைத்த ஒரு நிலச்சொந்தக் காரரிடம்   நாலு வயல் காணிகளை குத்தகைக்கு எடுத்து  அவனும் மனைவியும்  நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்தார்கள் பிள்ளைகள்,இருவரி ல் மகள் எடடாம்   வகுப்பிலும்  மகன் ஆறாம் வகுப்பிலும் படித்து கொண்டு இருந்தனர் .விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக இருப்பார்கள். மனைவியும் பால் மாடுகளில்  பால் கறந்து வீட்டுக்கு தேவைக்கு  எடுத்து மீதியை    மூன்று வீடுகளுக்கு வாடிக்கையாக  கொடுத்து வந்தாள் .அவர்களுக்கு கஷ்டம் இருந்தாலும் மகிழ்வாக வாழ்ந்தனர் . ஒரு  விடுமுறை நாளில் எல்லோரும்   தந்தையின் அருகில்  மதிய உணவு உண்ணும் போது மகன் சாதத்தை  சிறிது சிந்தி  விடடான் .அப்போது  தந்தை அவனை நோக்க அது  சிறிதளவு தானேப்பா !

  தந்தை: குட்டி பையா  இந்த சோறு எங்கிருந்து வந்தது தெரியுமா ? 

  மகன்: அப்பாவின் வயலில் விளைந்த நெல்மணிகளால் 

  தந்தை : நெல் மணிகள் எப்படி வீட்டுக்கு வந்த்ன? 

  மகன்: கதிரடித்து , மூடடை கட்டி  சிவலை மாட்டு வண்டியில் . 

  தந்தை: நெல் மணி எப்படி சோறாகியது ?  

  மகன் : அம்மா அவித்து  காய விட்டு  செல்வம் மில்லிலே அரிசியாக்கி , பின்  உலையிலிட்டு சோறாக்கினார் .

  தந்தை : இவ்வளவு பாடு  பட்டு  விதை நெல்லை   விதைத்து , நாற்று நாட்டு , நீர்பாய்ச்சி வரம்புகாட்டி , களை பிடுங்கி , விளைந்த பின் கதிரறுத்து , அதை அடித்து  மூடடை கட்டி வீடு வர அப்பா எவ்வ்ளவு பாடு  பட்டிருப்பார். எனவே மகனே உணவை சிந்தாமல் சாப்பிடு , எத்தனையோ மக்கள் உண்ண வழியில்லாமல் இருக்கிறார்கள்.  

  மகன்: மன்னித்து விடுங்கள் அப்பா இனி மேல் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடுவேன். வளர்ந்த பின் நானும்  விவசாயம் செய்வேன் .  

   விளைந்து வீடு வர ஒரு விவசாயி படும் பாடுகள் எத்தனை?   இப்படி எத்தனை வீடுகளில்  உணவு விரயமாக்க படுகிறது .சிந்தித்து திருந்துவார்களா ? நம்மவர்கள்  ???

 5. பீநாறி  (பூநாறி )

  பீறி   (நீராவி பீறியடித்தல் )

  பீனா 

   

  மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் பீனா (Bina) நதி பாய்கிறது.

 6.  ஊரில் நானும் ஒரு விடயம் கேள்விப்பட்டு   இருக்கிறேன்.  மிக வயது முதிர்ந்த ஒருவர் மரணத்துக்கு  காத்திருக்கும் நிலை வரும் போது  செம்புக்   காசை தாய்ப்பாலில் உரைத்து அந்த பாலை வாய்க்குள்  ஊற்றுவார்களாம்  நான் நினைக்கிறன் செம்பின் (செழும்பு )  நஞ்சு என்று . 

  A. Palliative care is whole-person care that relieves symptoms of a disease or disorder, whether or not it can be cured. Hospice is a specific type of palliative care for people who likely have 6 months or less to live. In other words, hospice care is always palliative, but not all palliative care is hospice care.

   என்று இருக்கிறது .இறக்கும்     நிலையில் இருக்கும் ஒருவரை அப்படியே நீராகரம் 
  மட்டும் கொடுத்து (திண்ம உணவு சுவாசத்துக்கு பிரச்சனையாகலாம்   ) சுத்தமாக வைத்து இருப்பார்கள் நோயாளியொரு மயக்க சோர்வு நிலையிலிருப்பார் .ஆறு மாதங்களுக்குள் அவர் பரகதியடைந்து விடுவார். 

  • Sad 1
 7. அகில் உண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை - அகிற் புகையினைக் கொள்ள விரித்த அழகிய மெல்லிய கூந்தலாகிய மேகத்தின் உள்ளே தோன்றும், மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் - முகமாகிய மதியினிடத்துள்ள புருவமாகிய வளைந்த கரிய வில்லின்கீழ் அமைந்த, மகரக்கொடியோன் மலர்க்கணை துரந்து - மகரமீனைக் கொடியாகவுடைய மன்மதனது மலரம்பு களையோட்டி, சிதர்அரி பரந்த செழுங்கடைத் தூது - சிதறிய செவ்வரி பரந்த கொழுவிய கண்ணின் கடையாகிய தூது, மருந்தும் ஆயது இம் மாலை என்று ஏத்த - முன்னர்ப் பாசறைக்கண் நமக்கு வருத்தஞ் செய்ததேயன்றி இம் மாலையில் அதற்கு மருந்தும் ஆகியது என்று புகழ

  அனுமனின் மனைவி பெயர் சுவர்ச்சலா, மகன் பெயர் மகரத்வஜன். இந்தக் கோலத்தில் இருக்கும் அனுமனே 'கல்யாண ஆஞ்சநேயர்'

  முரி    மகரக்கொடியோன்   மகத்வஜன்   கல்யாண ஆஞ்ச நேயர் 

   

  முரி  கல்யாண ஆஞ்ச நேயர் 

  • Like 1
 8. எனக்காக பிறந்தாயே எனதழகி
   இருப்பேனே   மனசெல்லாம் உனை எழுதி
  எனக்காக பிறந்தாயே எனதழகி
  இருப்பேனே   மனசெல்லாம் உனை எழுதி

  உனக்கு மாலையிட்டு  
  வ்ருஷங்கள்  போனாலென்ன 
  போகாது ஒன்னோட பாசம்

  எனக்கு எம்மேல தான் ஆச இல்ல
  ஒம்மேல தான்   வச்சேன்
   என்னை ஊசி இன்றி நூலும் இன்றி
  ஒன்னோட தான் தச்சேன்

  ஒனக்காக பொறந்தேனே எனதழகா
  பிரியாமல் இருப்பேனே பகல் இரவா
  என்ன (னை) ஊசி இன்றி நூலும் இன்றி
  ஒன்னோட தான் தச்சேன் 

  அழகான ஒரு பாடல் 

  • Like 4
 9. பீர்க்கங்க்காயை வேண்டாத மரக்கறிகளுடன் ஒதுக்கி வைப்பதுண்டு . இப்படி அரைத்து செய்யலாமென்றால் முயற்சி செய்து சமைக்க ஆவலாய் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி 

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.