யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,049
 • Joined

 • Days Won

  7

Everything posted by நிலாமதி

 1. இன்பம் எங்கே...........இன்பம் எங்கே என்று தேடு மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம் சிறுமிக்கு விழாது பொம்மை மீது இன்பம் மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம் பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம் மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும் பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம் கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின் (************** ) விரும்பியதை போட்டு வாசிக்க தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம் தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம் பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம் வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம் ு யாழ் களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம் மனிதருக்கு இன்பத்தை தேடி தொலைக்கும் வாழ்வு பாடையில் போனபின் நித்திய இன்பம்
 2. புதியவனாய் இருக்கவேண்டும் தொடங்கிய தீர்மானம் செய்து முடிப்பதில் நாலு பேருக்கு மத்தியில் நல்லவனாய் நீதி நேர்மை காப்பதில் வீரனாய் சமூக சேவை முனோடியாய் சாதனை செய்வதில் வீரனாய் சொன்ன சொல் தவறாமை செயல்களில் திறமை வழுவாமை அன்பு பண்பு ஆளுமை தொட்டில் பழக்கம் தொடர்ந்துவர கட்டுக்கோப்பாய் உடல் வலிமை கருத்தாய் கடமை கண்ணியமாய் .....(கண்ணியமாய் தொடர்க )
 3. வணக்கம் கண்மணி ........... முழுக்குடும்பத்தையும் தமிழ் ஈழத்துக்கு அழைத்து சென்ற தங்களுக்கு மிக்க நன்றி .
 4. அன்புடன் தூயாவிற்கு ... கள உறவுகளை உங்கள் உறவுகளாக பாவித்து சோகத்தை பகிர்ந்து கொண்ட உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன் .அவர் ஆன்மசாந்திகு என் வேண்டுதல்கள் . நிலாமதி
 5. வணக்கம் முரளி அண்ணா ............ தங்கள் முகம் கனடா மப்பில் இலை காசில் தெளிவாக இருக்கிறது சில நாட்களாக கவனித்தேன் சொல்ல மறந்து போனேன் . நிலாமதி
 6. வணக்கம் முரளி ............. நானும் புட்டு சாப்பிட தட்டு கழுவி உட்காந்தால் ... அது சோளப்பொரி எல்லோ வருகிறது ............ ......கணணி யுகம் அல்லோ கணணி யோடு குடும்பம் நடத்துபவர்களுக்கு சரியாக இருக்கலாம் . யானை பசிக்கு சோளப்பொறி நல்லாக இருக்கு . நிலாமதி
 7. வணக்கம் நுனாவிலான் ... கதை நன்றாக இருக்கிறது( தொடரும் ........)..என்று ஒரு வார்த்தை போட்டு விடுங்கள் . மீதியை படிக்க ஆவல் உடையேன் . நிலாமதி
 8. வணக்கம் சங்கிலியன் ......... எனக்கும் வலிக்கிறது...நல்ல கதை உண்மை சம்பவமா ? சில. எழுத்து பிழைகள் . திருத்தி வாசித்து ,பயன் பெற்றேன் . நிலாமதி
 9. வணக்கம் ,நன்றி சுப்பண்ணா ,தூயா ............. ஆமாம் .... காதல் தோற்கவேண்டும் . நிலவை பிடிக்க ஆசை படுகிறீர்கள் அது கையில் கிடைத்தால் அதன் அருமை சிறிது காலம் இருக்கும் . பின் தெவிட்டி போய்விடும் ...அது போல அன்பு , காதல் , கிடைத்து அது அலட்சியப்படுத்தும் பொது ...இதுவும் பத்தோடு பதினொன்று .... என்று என்ன தோன்றுகிறது ...........வர வர காதல் கசக்குதடி ........ எல்லாம் வேலையிலாத .....வீண் பொழுது இருப்பதால் ....
 10. நன்றி கறுப்பி ...சரியான பாடல் ,எனக்கு மிகவும் பிடித்தது
 11. உள்ளம் என்பது ஆமை அதி ல் உண்மை என்பது ஊமை சொல்லில் தெரிவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி ..... .இது பொருந்துமோ தெரியாது .. ொடங்கவேண்டியசொல் ........நெஞ்சில்
 12. வணக்கம் புஷ்பா விஜி ........... ஒரே மூச்சிலே கவிதை பூங்காவில்லும் கதை களத்திலும் புகுந்து விளையாடி இருகிறீங்க .எங்கே அண்ணா சுட்டீங்க ... உபதேசம் எல்லாம் செய்யுறீங்க ....சொந்த அனுபவமோ ... கணணி யுகமா? பொண்ணுங்க நல்ல ஸ்மார்ட் என்று சொல்ல வந்தேன் ... தேடி இணைத்தமைக்கு நன்றிகள் .பயனுள்ளதாக உள்ளது மீண்டும் நன்றியுடன் விடை பெறும் நிலாமதி .
 13. என் காதல் ...............................தோற்கவேண்டும் நினைத்து கிடைத்து விட்டால் ,கிடைத்ததற்கு மதிப்பு இல்லை தேடியது கிடைத்து விட்டால் சற்று நேர சந்தோசம் மனச்சிறையில் பூட்டி வைத்து கோவில் கட்டி வாழ்ந்து இருந்தேன் கண் திறந்து பார்த்த போது கண்ட சுகம் கொஞ்சம் கொஞ்சம் வேண்டாப் பெண்டாடி கால் படால் குட்டம் கை பட்டால் குற்றம் நினைத்து நடந்தது கேட்டது கிடைத்தது போட்டது வந்தது அருமை தெரியவில்லை ,நினைத்து ,கேட்டு , கிடைத்தபோது காதல் தோற்க வேண்டும் ,வாழ்வில் விளங்கும் வலியும் ,வழியும் குன்றில் ஏறி வைத்து இருந்தால் குத்து விளக்கும் ஒளி வீசும் குடத்துள் விளக்காக கூனி குறுகி ,எரிகிறது எண்ணையின்றி அருமை பெருமை தெரியவில்லை கண் கெட்ட சூரியனுக்கு இரவில் தெரியும் ஒளியின் அருமை காலம் பதில் சொல்லும்
 14. கோவில் தான் ஆலயம் ,அது தான் உன் இதயம் உள்ளம் எனும் ஆலயத்தில் தெய்வம் வேண்டும் என் அன்பே வா நீ இல்லாத் மாளிகையை பார் மகளே பார் ,உன் நினைவில் வாழ்கிறேன் புலம் பெயர் தேசம் சென்றாலும் புதுமைகள் பலவும் கண்டாலும் தாய் நிலம் என்றும் வர வேண்டும் தாய் அன்பை எனக்கு தர வேண்டும்
 15. மனிதனை தேடி அலைகிறேன் இருந்தால் சொல்கிறேன் இறைவன் கேட்கிறான் மனிதன் இருக்கிறானா ? கள்ளமில்லா பிஞ்சு உள்ளம் குள்ளனரிக்கூடம் நடுவே திக்கி திணறினாள் மனிதம் வாழுமா?
 16. வணக்கம் உதயம் ........ முரண் ...உரையாடல் நன்று அதை முரண்பாடு ...என்று எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து . புலம் பெயர் நாடில் இப்படியும் .....இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் ....இது . மேலும் உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகள் நன்றியுடன் நிலாமதி
 17. வணக்கம் புஷ்பாவிஜி ................ கதை அருமை .காலத்துக்கு ஏற்ற கதை . புரிபவர்களுக்கு புரியும் .மேலும் தொடர வாழ்த்துகள். தோழமையுள்ள நட்புடன் நிலாமதி
 18. இந்த உலகத்தில் உயிரின் விலை என்ன ? உயிருக்கு மதிப்பே இல்லையா ? கொடுமை யிலும் கொடுமை .....
 19. இறைவா உனக்கொரு கோவில் உண்டு இரவும் பகலும் தீபம் உண்டு எனகுஎன இருபது ஓர் விளக்கு அதனுடன் தானா உன் வழக்கு " .......
 20. காதோடு தான் நான் பேசுவேன் " மலரோடு தான் நான் பாடுவேன் விழியோடுதான் நான் உறவாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் " இது சரியா?
 21. வணக்கம் காவலூர் கண்மணி ........ "வெற்றியின்..... ...முழங்குது பார் ". நல்ல கவி .காலத்துக்கு ஏற்ற கவி. பார்க்கவேண்டியவர்கள் பார்க்க வில்லை ...கேட்கவேண்டியவர்கள் கேட்கிறார்கள் இல்லையே (சர்வதேசம் ) ஏன்... இன்னும் தாமதம் .? நன்றி வணக்கமுடன் நிலாமதி
 22. வணக்கம் முரளி .... கு . தா . சொன்னது சரி ...அப்ப " கடலைக்கு கடலை ." .உறவு தேடும் படலமாக மாறிவிட்டதோ ? அது எவ்வளவு காலம் ஓடும் .?
 23. வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ... அவனும் காதலிச்சான் ...நானும் காதலிச்சன் ... .கதை நன்றாக இருக்கிறது .ஆனால் ....... ஒரு சிறு விளக்கம் தரவும் எனக்கு ...அவன் காதலிச்சான் ..காயத்திரியை அது .... சரி .. .பின் தாயகத்தை ..அதுவும் சரி. நான் காதலிச்சன் ? எதை ? .....குடி .?..சிகரட் .....? . மதிக்கு ஒரு விளக்கம் தரவும் . சரியான வேளையில் , தேவையான போது அமைந்த கதை .மிக மிக நன்று . நிலாமதி
 24. போனதே .....என் வெண்ணிலா மீண்டும் வருமா? வாழ வருமா? நீயும் நானும் சேர்ந்து தான் புது உலகம் காணலாம் ...நீ வா நீ வா .....என்று தொடங்கவும்
 25. "அது ஒரு வசந்த காலம் .............". துள்ளித்திரிந்த பருவம் ...கொஞ்சம் அடங்கி ..... பத்தாம் வகுப்பு இறுதி வருட சோதினைக்கு தயார் படுத்தும் காலம். பாட சாலை முடிந்து (துஷன்) பிரத்தியேக வகுப்புக்கு போவதுண்டு . முதல் தடவை ஏழு பாடம் ,கணிதம் தவிர சித்தியடைந்தேன் .கணிதம் கோட்டை விட்டதால் ,வீட்டில் அனுமதி பெற்று , அயல் கிராமத்துக்கு படிக்க போவதுண்டு . காலை ஏழு மணிக்கு ஒரு வகுப்பு... .மாலையில் எட்டரைக்கு பாடசாலை ..பின் ஐந்து மணிக்கு மறு துஷன் வகுப்பு . இப்படியாக பாடசாலையும் டுஷன் வகுப்புமாக இருந்த காலம் . .காலை பரபரப்பில் ஒரு பாண் துண்டு கடியுடன் போவதுண்டு . மதிய " சாப்பாடு " அமுதம் போல் இருக்கும் . நான் மாமிச பிரியன் (சைவம் ) இறங்காது .எனக்காக அம்மா அதி காலையில் எழுந்து ,பொறித்த கத்தரிக்காயும் றால் கருவாடும் போட்டு ஒரு கறி வைத்து தருவா? சில சமயம் பாது காப்பு அற்ற வகுப்பு அறையில் மத்திய உணவை காகம் கொண்டு போனதும் உண்டு...அந்த அளவு இந்த சாப்பாட்டு ராமனுக்கு போதாது. ஆனாலும் இல்லாமல் முடியாது. ஒரு தடவை டுஷன் வாத்தியார் படிப்பில் .பத்தும் பத்தாமலும் என்பதற்கு விளக்கமாக (மதியான சாப்பாடு) போல என்று சொன்னார் . .படிப்புடன் ..கண்களும் சுழன்றன . ஒரு மாணவி அழகான , அலை போன்ற கூந்தலுடன் வருவா . அவ மீது ஒரு கண் .எல்லோருக்கும் ..முன்னும் பின்னும் திரிவோம் . .மற்ற அயல் பாடசாலை பையன்கள் கண் போடாதபடி .....அவவின் சைக்கில் காற்று போனால் கடையில் காற்று அடித்து கொடுப்பதுண்டு .அதற்கு அவ மீது காதல் என்று சொல்ல முடியாது ஆனால் அவள் மீது கவனம் . ஒரு நாள் வராவிடால் மனம் தேடும் ...இது காதலா ?.... .வாத்தியாருக்கு வகுப்புகளை தவற விடுவது பிடிக்காது . வாத்தியார் சொல்வார் ... .நீ ..செத்தால் அல்லது உன் வீட்டில் சாவீடு என்றால் வகுப்புக்கு வராமல் இருக்கலாம் .என்று அப்படி கண்டிப்பானவர் . அவர் காசுக்காக மட்டும் இல்லை .,சித்தி அடைதல் . .என்ற கவனமுடனும் படிப்பித்து இறுதியில் எனக்கு அதி திறமை டி சித்தி கிடைத்தது . வகுப்பில் பதினைந்து பேர் ஐந்து பேருக்கு மட்டும் சி தரம் . மற்ற ஒன்பது பேருக்கும் டீ தரம் .ஒருவன் மட்டும் எஸ் .இப்படியாக.......... என் கள உறவுகளுடன் பகிர்ந்து கொண்ட " அந்த வசந்த காலம் " தேன் போன்றது .