• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  9,116
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by நிலாமதி

 1. மனிதனை தேடி அலைகிறேன் இருந்தால் சொல்கிறேன் இறைவன் கேட்கிறான் மனிதன் இருக்கிறானா ? கள்ளமில்லா பிஞ்சு உள்ளம் குள்ளனரிக்கூடம் நடுவே திக்கி திணறினாள் மனிதம் வாழுமா?
 2. வணக்கம் உதயம் ........ முரண் ...உரையாடல் நன்று அதை முரண்பாடு ...என்று எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து . புலம் பெயர் நாடில் இப்படியும் .....இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் ....இது . மேலும் உங்கள் ஆக்கம் தொடர வாழ்த்துகள் நன்றியுடன் நிலாமதி
 3. வணக்கம் புஷ்பாவிஜி ................ கதை அருமை .காலத்துக்கு ஏற்ற கதை . புரிபவர்களுக்கு புரியும் .மேலும் தொடர வாழ்த்துகள். தோழமையுள்ள நட்புடன் நிலாமதி
 4. இந்த உலகத்தில் உயிரின் விலை என்ன ? உயிருக்கு மதிப்பே இல்லையா ? கொடுமை யிலும் கொடுமை .....
 5. இறைவா உனக்கொரு கோவில் உண்டு இரவும் பகலும் தீபம் உண்டு எனகுஎன இருபது ஓர் விளக்கு அதனுடன் தானா உன் வழக்கு " .......
 6. காதோடு தான் நான் பேசுவேன் " மலரோடு தான் நான் பாடுவேன் விழியோடுதான் நான் உறவாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் " இது சரியா?
 7. வணக்கம் காவலூர் கண்மணி ........ "வெற்றியின்..... ...முழங்குது பார் ". நல்ல கவி .காலத்துக்கு ஏற்ற கவி. பார்க்கவேண்டியவர்கள் பார்க்க வில்லை ...கேட்கவேண்டியவர்கள் கேட்கிறார்கள் இல்லையே (சர்வதேசம் ) ஏன்... இன்னும் தாமதம் .? நன்றி வணக்கமுடன் நிலாமதி
 8. வணக்கம் முரளி .... கு . தா . சொன்னது சரி ...அப்ப " கடலைக்கு கடலை ." .உறவு தேடும் படலமாக மாறிவிட்டதோ ? அது எவ்வளவு காலம் ஓடும் .?
 9. வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ... அவனும் காதலிச்சான் ...நானும் காதலிச்சன் ... .கதை நன்றாக இருக்கிறது .ஆனால் ....... ஒரு சிறு விளக்கம் தரவும் எனக்கு ...அவன் காதலிச்சான் ..காயத்திரியை அது .... சரி .. .பின் தாயகத்தை ..அதுவும் சரி. நான் காதலிச்சன் ? எதை ? .....குடி .?..சிகரட் .....? . மதிக்கு ஒரு விளக்கம் தரவும் . சரியான வேளையில் , தேவையான போது அமைந்த கதை .மிக மிக நன்று . நிலாமதி
 10. போனதே .....என் வெண்ணிலா மீண்டும் வருமா? வாழ வருமா? நீயும் நானும் சேர்ந்து தான் புது உலகம் காணலாம் ...நீ வா நீ வா .....என்று தொடங்கவும்
 11. "அது ஒரு வசந்த காலம் .............". துள்ளித்திரிந்த பருவம் ...கொஞ்சம் அடங்கி ..... பத்தாம் வகுப்பு இறுதி வருட சோதினைக்கு தயார் படுத்தும் காலம். பாட சாலை முடிந்து (துஷன்) பிரத்தியேக வகுப்புக்கு போவதுண்டு . முதல் தடவை ஏழு பாடம் ,கணிதம் தவிர சித்தியடைந்தேன் .கணிதம் கோட்டை விட்டதால் ,வீட்டில் அனுமதி பெற்று , அயல் கிராமத்துக்கு படிக்க போவதுண்டு . காலை ஏழு மணிக்கு ஒரு வகுப்பு... .மாலையில் எட்டரைக்கு பாடசாலை ..பின் ஐந்து மணிக்கு மறு துஷன் வகுப்பு . இப்படியாக பாடசாலையும் டுஷன் வகுப்புமாக இருந்த காலம் . .காலை பரபரப்பில் ஒரு பாண் துண்டு கடியுடன் போவதுண்டு . மதிய " சாப்பாடு " அமுதம் போல் இருக்கும் . நான் மாமிச பிரியன் (சைவம் ) இறங்காது .எனக்காக அம்மா அதி காலையில் எழுந்து ,பொறித்த கத்தரிக்காயும் றால் கருவாடும் போட்டு ஒரு கறி வைத்து தருவா? சில சமயம் பாது காப்பு அற்ற வகுப்பு அறையில் மத்திய உணவை காகம் கொண்டு போனதும் உண்டு...அந்த அளவு இந்த சாப்பாட்டு ராமனுக்கு போதாது. ஆனாலும் இல்லாமல் முடியாது. ஒரு தடவை டுஷன் வாத்தியார் படிப்பில் .பத்தும் பத்தாமலும் என்பதற்கு விளக்கமாக (மதியான சாப்பாடு) போல என்று சொன்னார் . .படிப்புடன் ..கண்களும் சுழன்றன . ஒரு மாணவி அழகான , அலை போன்ற கூந்தலுடன் வருவா . அவ மீது ஒரு கண் .எல்லோருக்கும் ..முன்னும் பின்னும் திரிவோம் . .மற்ற அயல் பாடசாலை பையன்கள் கண் போடாதபடி .....அவவின் சைக்கில் காற்று போனால் கடையில் காற்று அடித்து கொடுப்பதுண்டு .அதற்கு அவ மீது காதல் என்று சொல்ல முடியாது ஆனால் அவள் மீது கவனம் . ஒரு நாள் வராவிடால் மனம் தேடும் ...இது காதலா ?.... .வாத்தியாருக்கு வகுப்புகளை தவற விடுவது பிடிக்காது . வாத்தியார் சொல்வார் ... .நீ ..செத்தால் அல்லது உன் வீட்டில் சாவீடு என்றால் வகுப்புக்கு வராமல் இருக்கலாம் .என்று அப்படி கண்டிப்பானவர் . அவர் காசுக்காக மட்டும் இல்லை .,சித்தி அடைதல் . .என்ற கவனமுடனும் படிப்பித்து இறுதியில் எனக்கு அதி திறமை டி சித்தி கிடைத்தது . வகுப்பில் பதினைந்து பேர் ஐந்து பேருக்கு மட்டும் சி தரம் . மற்ற ஒன்பது பேருக்கும் டீ தரம் .ஒருவன் மட்டும் எஸ் .இப்படியாக.......... என் கள உறவுகளுடன் பகிர்ந்து கொண்ட " அந்த வசந்த காலம் " தேன் போன்றது .
 12. வணக்கம் சஹாரா ......... கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள், படத்தில் உள்ள பூவில் ,சமாதான புற எழுகிறது . வழமையாக ..பூவில் வண்டு தான் மொய்க்கும் . வித்தியாசமாக இருக்கு .எம் இதய மலரில் எழும் சமாதானம் எனும் விடுதலை புறாவோ ? நிலாமதி
 13. தம்பி சுதேசிகன் வணக்கம்..... கொஞ்ச பதிவுகளை எழுதி தலையை சீ.. ச்சீ ....... எழுத்தை காட்டு ராசா ,அப்ப உங்களை பத்தி புரிஞ்சு.....வேறு இடங்களில் ,.... எழுத விடுவினம் . நன்றி வளர வாழ்த்துக்கள் . நிலாமதி அக்கா
 14. ஜமுனா அம்பி ....அச்சச்சோ ... இது என் பெரிய அக்கா வின் மகள் .....நேற்று அவர்கள் வீடு சென்றிருந்தேன் . மனம் பாரமாக உள்ளது .நான் இன்னும் மகளுக்கு ....மகனுக்கு ..... தாயாக வில்லை .. .இன்னும் ........இல்லை . நன்றி ஜம்மு பேபி (.நிலாமதி அக்கா )
 15. என் செல்லத்துக்கு ஒரு மடல் ......ஒரு தாயின் கண்ணீர் ... காலங்களுக்கு தான் எத்தனை வேகம் . மழலையாய் , தவழ்ந்து ,எழுந்து ,நடந்து , நின்று , ஓடி , துள்ளி விளையாடி ,என் செல்ல மகளாகி (மகனாகி ) படித்து ,பல்கலை புகுந்து ,பட்டம் பெற்று.... இன்று மேற் படிப்புக்காய் ,வெளி நாடு செல்கிறான் (செல்கிறாள் ).பிரிவு என்றும் துன்பம் தான் நீ மேலே வர வேண்டும் என்று நான்,,,,, கீழே ......,பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன் .நானும் ஒரு மகளாய் ,மேல் படிக்க சென்றபோது , என் தாய் என kகு சொன்னதை நான் இன்று....... தாயaக உனக்கு சொன்ன போது... நெகிழ்ந்து தான் போனேன் . கண்மணி கவனமடி , கல்லூரி வாழ்க்கை , மலர்கள் உள்ள தோட்டம் மணம் உண்டு ,அழகு உண்டு ,முள்ளும் உண்டு . .தொட்டா சுடுவது நெருப்பாகும், சுவருக்கும் கேட்கும் காthuு உண்டு . வழி எல்லாம் பள்ளம் மேடு . பார்த்து நட ,போய் வா மனே /மகளே , வரும் வரை வழி மீது விழி வைத்து பார்த்து இருக்கும் ,அம்மா ,l
 16. வணக்கம் சுப்பு .. உங்கள் பெரிய ஆசை எது ? அது தான் சொல்லிவிட்டேனே .. "தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை "தலைவனின் ஆட்சியில் மண்ணை , தமிழ் ஈழத்தை . ,அடைந்து வாழ ஆசை .நன்றிகள் சுப்பண்ணை... நிலாமதி
 17. வணக்கம் பரணீ............. வாசித்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு நன்றி .
 18. சின்ன சின்ன ......ஆசை வானத்து நிலவை பிடித்துவிட ஆசை முகில் மீது சவாரி செய்ய ஆசை பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ...... தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை முற்றத்து மண்ணில் விளையாட ஆசை துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை பனைமர நுங்கும் ,பழமும்தின்ன ஆசை மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ........... ************ தலைவனின் மண்ணை முத்தமிட ஆசை **********
 19. வணக்கம் பரணீ.......... கவிதை சிறிது என்றாலும் நன்றாக இருக்கிறது ... அழிவில்லாத உயிர் இல்லை ............... பரணீ என்றும் தரணீ (பூமி ) ஆழ வாழ்த்துக்கள் நட்புடன் நிலாமதி
 20. பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........
 21. வணக்கம் சுப்பு அண்ணை.............. சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க .சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது . நன்றிகள் .நிலாமதி
 22. "முதன்முதலில் பார்த்த நாளை-உன் முதுமையிலும் உதடுகள் முணுமுணுக்கும" வணக்கம் இதயநிலா ......... தூய்மையான காதலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்து. நன்றிகள் தொடர வாழ்த்துக்கள் . நிலாமதி ்
 23. வணக்கம் இதயநிலா ....... தங்கள் பதிவு நன்றாக உள்ளது . தொடருங்கள் மீதியை படிக்க ஆவலாக உள்ளேன் .நன்றி நிலாமதி
 24. வணக்கம் சுகன் ................. பச்சைகிளியின் கதை அருமை ...உகந்தநேரத்தில் பதிந்த தங்களுக்கு நன்றிகள் .பகுத்தறிவுள்ள மனிதர் ஏனோ பாடம் படிக்க மறுக்கின்றனர் ..கதை அருமை. சொலிய பாங்கும் மிக அருமை . நன்றிகள் . வணக்கம் நிலாமதி
 25. வணக்கம் இதய நிலா ......... உங்கள் வருகை நாள் வரவாகுக ....தொடர்ந்து இணைந்து இருங்கள் நன்றி நிலாமதி