Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    10980
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. இரண்டாம் முறை அப்பாவான தனிக்கு வாழ்த்துக்கள். கதை அடுத்து என்ன என்ற உணர்வில் விறு விறுப்பாக  போகிறது. ஒருவருடைய பட்ட்றிவு போல இருக்கிறது . தொடருங்கள் வேகமாக .... . 

  2. நடை பயிற்சிக்காக சென்றபோது விபத்து

    மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் துன்பியல் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.

    ஆழ்ந்த அனுதாபங்கள். எண்பதுகளில்  மிகவும் பிரபலமான அழகுதமிழ் வாசிப்பில்  சிறந்த  பண்பாளர். 

  3.  வாருங்கள்  பேசுவோம் !

    இன்றைய கால கடடத்தில்   நம் சமுதாயம்   தாயகத்தில்  எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல அதில் இதுவும்  மிக முக்கியமான ஒன்று .  "போதை காடடும்பாதை ".  நம் இளைய சமுதாயம்  சீர் கெட்டுப்போகிறது. வெளி நாட்டுக்கு காசு ...பெற்றோரின் கவனிப்பு இன்மை . உடல் உழைப்பின்மை  அரச இயந்திரத்தின் திட்ட் மிட்ட் சதி ..போதையூட்டும்  மருந்துகளின் தாராளா  வரவு. என்பன ,. இதை தடுக்க என்ன செய்யலாம். உளவள ஆற்றுப்படுத்தலின் மையங்கள்  ஒரு சில தான் உள்ளன.  பணம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. 
     

     

    • Sad 1
  4. மிகவும் கவலையான   மரணங்கள்    நடக்கின்றன . உயிர் காக்கும் மருத்துவமனையே    கொலைக்  களமாக மாறுகிறது. வைத்தியர்களின் கவனயீனமா ?  கால தாமதமா ? போதிய பயிற்சியற்ற ஊழியர்களா ?   

  5. சிறிய உயிரினங்களின்  பெருக்கம்  காலநிலை மாற்றத்தலும்  உணவுப்பற்றாக குறையி னாலும் இடம் மாறுவதும் சூழல் மாற்றத்தாலும்   நடைபெறலாம். வெப்ப நிலையம்   அதிகரித்து செல்கிறது . 

  6. இலங்கையொரு நாடு   அதை யார் நாடு என்று அனுமதித்தது?. அங்கு வாழும் மக்கள். 

    கருத்துக்கு பதில் சொல்லாம் ஆனல் விதண்டாவாதத்துக்கு?
    பாப்பாண்டவரின் பிரதி நிதி இலங்கையை தரிசிக்க வந்து வடபகுதிக்கு சென்று அங்கு முக்கிய இடங்களை தரிசித்தார் அவ்வ்ளவு தான்.

    சமயம் (கத்தோலிக்கம், வத்திக்கான்  பற்றிஅறியவிரும்பினால் தேடிப்பெறவும் (படித்தவர்கள் தேடு தளங்கள், சமயக் குருவானவர்.) எனக்கு கற்பித்த சிற்றறிவின்படி இதை எழுதுகிறேன்.) எனக்கு தெரிந்தது இவ்வ ளவுதான்.   

  7. வத்திக்கான் ஒரு நாடா? அல்லது மத பீடமா?

    ஒரு நாடு எனில் அதற்கு அந்த அந்தஸ்தை யார் கொடுத்தார்கள்? ஏன்?

    கத்தோலிக்க திருச்சபையின் முதன்மை, ஸ்தாபன நோக்கம் என்ன?  

    Vatican City is the world's smallest fully independent nation-state.

    The Vatican is the home of the Catholic Church. 

    the Vatican is indeed a city-state and the smallest country in the world.

    Vatican City, ecclesiastical state, seat of the Roman Catholic Church, and an enclave in Rome, situated on the west bank of the Tiber River

  8. குடை கூடப்பாரம் தான் மழைக்கு பின்.

    ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யதே . எவ்வ்ளவு சொல்லியும் பயனில்லை என்றாலே ஒரு சொல்லை யும் விரயமாக்காதே 

    எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது  ஏமாற்றங்களும்  அதிகமாகும் 

    யார் உன்னை வெறுத்தாலும்  யார் உன்னை விட்டு ஒதுங்கினாலும் மனம் தளர்ந்து விடாதே. மரம் சாய்ந்தாலும்  கிளை  முறிந்தாலும் அங்கு அமரும் சிறு குருவி தன்  இறக்கையை நம்பியே  பறக்கிறது

     தோல்வி உன்னை வீழ்த்தும் போது  குழந்தையாகவே விழு ,மீண்டும் எழுந்து  நடக்க

    வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள் நம்முடன் யாரும் இறுதி வரை வரப்போவதில்லை 

    யாரும் வெறுக்காத அளவுக்கு நம் வாழ்க்கை அமையுமானால் எவரும் மறக்காத   அளவுக்கு நம் மரணம் அமையும் 
    • Like 1
  9. இவர் அடிப்படையில்   களவு எடுக்கும் குணம் கொண்டவர்  இவரை நம்பலாமா ?
    படத்தை   பார்த்து மயங்கும்  குணமும் இரக்கமும் கொண்டவர் . காலம் இவருக்குப் பதில் சொல்லட்டும்.  

  10. கடன்சா(kadancha )     வணங்கமுடி  கோசன் ... . ஆர்வத்துடன் கலந்து கொள்வது கண்டு   என் மகிழ்ச்சியும் என் நன்றிகளும். 

     

    பரம்பரை - என்பது தமிழ் வேர்ச்சொல்லே!

    பரனும் பரையும் இணைந்தே பரம்பரை என்ற பெயர் தோன்றியது. பரம்பரை - நம் மூதாதையர் வரிசையில் முதலான மேல்நிலை.

     

    இதன் வேர்ச்சொல் விளக்கத்தைப் பார்ப்போம்.

    பர் > பர, புர் > புர - ஆகிய மூலங்களில் இருந்து தோன்றிய சொற்கள் பொதுவாக - உயரிய, மேன்மையான, அனைத்திலும் சிறந்த பண்புகளுடன் தொடர்புடைய - பொருள்படுபவற்றினைக் குறித்து அமைந்தவையாகும்.

    * பரன் - என்றால் எல்லாவற்றிலும் மேலானவன் ; கடவுள். ( சிவன்).

    * பரம்பொருள் = இறைவனை - the Supreme Being, the Ultimate , the highest of highest - ஆகிய பொருள்பட குறிப்பிடும் தமிழ்ச்சொல்லே பரம்பொருள்.

    * பரமம் - என்றால் சிறப்பு மிக்கது , மாண்பு மிகுந்த, மகத்துவம் மிக்க , தெய்வீக நிலையைக் குறித்தது. பரம்பொருள் , பரமசிவன் - ஆகியன இறைவனை - அவனின் உச்ச பண்புகளைப் பாராட்டியமைந்த அழகான தமிழ்ப்பெயர்கள்.

    * பரம + ஆனந்தம் = பரமானந்தம். (Supreme bliss).

     தகவல்   ...quora   இலிருந்து .

     

     

  11.  விக்கிப்பீடியாவிலிருந்து ...........

    ஒருவருடைய தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, ஓட்டன், ஓட்டி பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், சகோதரர் ஆகியோர் உயிரியல் முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் இரத்த உறவு எனப்படுகின்றது. ஏற்கனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய கணவன் அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை மண உறவு ஆகும். அது மட்டுமன்றி மனைவி அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் புனைவியல் உறவு எனப்படும். நாம் முதல் தலைமுறை தந்தை/தாய்-இரண்டாம் தலைமுறை பாட்டன்/பாட்டி- முன்றாம் தலைமுறை பூட்டன்/பூட்டி- நான்காம் தலைமுறை ஒட்டன்/ஒட்டி- ஐந்தாம் தலைமுறை சேயோன்/சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்/பரை-ஏழாம் தலைமுறை 'தடித்த எழுத்துக்கள்'பரன்+பரை=பரம்பரை.

     ஓடடன் ஒட்டி   என்பது மருவி   கிராமிய வழக்கில்  கொப்பாடட ன்    கொப்பாட்டி  என அழைக்கப்பட்டிருக்கலாம்  .

     கொப்பாட்டன் Great_great Grandfather. .

  12.  பரம்பரை 

    நம் அழகான தமிழில் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது? தமிழைப் போல

    அர்த்தம் நிறைந்த உறவு முறை எங்கும் காணவில்லை.

     

    நாம் (முதலாவது தலைமுறை )

    எமது பெற்றார்  2 வது  தலைமுறை )               அப்பா   அம்மா 

    அவரது பெற்றார் ..3 ம் தலைமுறை (நமக்கு) பாடடன்   பாட்டி 

    அவர்களது பெற்றார்  4 ஆம் தலைமுறை ..பூட்டன்  பூட்டி 

    அவர்களதுபெற்றார் 5ஆம் தலைமுறை   ஒட்டன்  ஒட்டி 

    அவர்களதுபெற்றார்  6ஆம் தலைமுறை   சேயோன்   சேயோள் 

    அவர்களது  பெற்றோர் 7 ஆம் தலைமுறை   பரன்      பரை   

     

     இந்த ஏழு தலைமுறைகளும் பரன் பரை  என அழைக்க படும் .அவை  மருவி  பரம்பரை என்றானது. 
      

    • Like 1
  13. வடமாகாணத்தின்  யாழ் மக்களின் வாழ்வை முன்னிலை படுத்தும் ஒரு விடயம் கல்வி . என்ன கஸ்ட படடாலும்  குழந்தை களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என  என்னும் சமுதாயமாக வாழ்ந்தார்கள் .பள்ளிச்  சீருடை முதல் கொப்பி  பென் பென்சில்  என தேவையான அத்தனையும் கடன்  பெற்றாவது   வாங்கி கொடுத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்துக்கு மேற்படட பிள்ளைகள்  இருப்பார்கள். குடும்ப வறுமையிலும் கல்வியை கைவிடுவதில்லை. பாலர் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை  கிராமத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட் பாடசாலைகளிருக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல சமூகத்தில்,ஆசிரியர்களை கல்விமான்களை   மதித்தர்கள்.  

    நகருக்கு  சற்று தொலைவில்  பெண் பிள்ளைகள் மட்டுமே படிக்கும்  பெண் ஆசிர்யர்களை  கொண்ட அந்த பெண்கள் பாடசாலை அமைந்திருந்தது  .அதில் கிடட  தடட முந்நூறுக்குமேற்படட மாணவிகள் கல்வி கற்று  கொண்டிருந்தார்கள்.  அந்தக் கல்லூரியின்  ஆசிரியர் குழுவில் மிகவும்  கண்டிப்பான  தமிழ் ஆசிரியை வரதா  டீச்சர். 

     எடடாம் வகுப்பின்   தமிழ் கற்பிக்கும் அவர் அடுத்த வகுப்பில்  சில பாடல்களும் கருத்துரைகளையம்  மனனம் செய்யும்படி கேட்டிருந்தார். மறுநாள்  தனித்தனியாக் கேள்வி    கேட்பதாக  சொல்லியிருந்ததார் . அந்த வகுப்பில் வானதியும்  வசந்தாவும்   இணை பிரியாத தோழிகள் . எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே இருப்பார்கள். அவர்களது நேசம் கண்டு பொறாமைப்படடவர்களும் உண்டு.

    அன்று ஒரு வெள்ளிக்கிழமை,தமிழ் பாடநேரம் வகுப்பு ஆரம்பித்தது .   எல்லோரும் வணக்கம் சொன்ன பின் பாடம்  ஆரம்பித்து . அவர் சொல்லியபடியே  ஒவ்வொருவராக எழுந்து அவர் கேட்கும் பாடலையும் கருத்தையும்  ஒப்புவிக்க வேண்டும். யாராவது விடை தெரியாது மறந்து நின்றாலோ... அல்லது  ..அருகிலிருப்பவர் சொல்லிக் கொடுத்தாலோ .. அவரது அளவு கோல் (அடிமடடம்) கைவிரல் என்புகளை (மொழி)ப்பதம் பார்க்கும். மிகவும்  "விண் "  என  வலிக்கும். அடிவாங்கியபின் கையை உதறிக்  கொண்டு இருக்குமிடத்துக்கு வருவார்கள். வானதியின் முறை வந்தது .  பாடலை ஒப்புவிக்கும்  போது  இடையில் மறந்து விடடார். ஆசிரியை அதை மீண்டும் ஆரம்பித்து சொல்லக் சொன்னார்.  அப்போதும் அவள் ..நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அருகில்  வசந்திக்கு தெரியும் தோழியின்  நிலைகண்டு பொறுக்க முடியவில்லை. மெதுவாக அவள் மூக்கை மூடுவதுபோல்   கையை  வைத்து சொல்லிக் கொடுத்துவிட்டார். ஆசிரியை கண்டு விடடார். பிறகென்ன ...உங்களுக்கு புரிந்திருக்கும் . வசந்தி இங்க வா ...."நான் சொல்லவில்லை மிஸ்" "அவளுக்கு அடிச்சா  உனக்கு வலிக்கும், நீயே வாங்கிக் கொள்". இன்று நீ அவளுக்கு சொல்லிக் கொடுத்தால் அவள் அக்கறை எடுத்துபடிக்க மாடடாள்.  இன்று ஒப்புவிக்க தெரியாமல் அடி  வாங்கினால் அடி  நினைவிருக்கும் மீண்டும் முயற்சி எடுத்து இன்னும் அதிக தடவை  மனனம் செய்து ஒப்புவிப்பாள். மெளனம் காக்க தெரியவேண்டும். நாவடக்கம் வேண்டும். இன்று கற்றுக் கொள் என்றார். 

    அன்று எதிர்க்காலக்கல்வி தேவையை உணராத காலத்தில், துள்ளித்திரிந்த காலத்தில் கடமைக்காக  படிக்காவிடடாலும் அந்த அளவு கோலின் அடிக்கு (வலியை தவிர்க்க ) பயந்து  படித்தவர்கள் ஏராளம். 

    ஆசிரியையின் கண்டிப்பு எத்தனையோபேரை கல்வியில் சிறப்புற  வைத்து இருக்கிறது. பத்தாம்  வகுப்பு பரீட்ச்சை  முடிந்து பெறுபேறு வரும்போது  தமிழுக்கு  "D   " எடுத்த பெருமை அந்த ஆசிரியையே சாரும். 

     நாவடக்கம் இன்றியமையாத ஒன்று. நமது நாவினால் ஒழுங்காக பேச தெரியவேண்டும்.பேசாமலும் இருக்க தெரிய( நாவடக்கம்) வேண்டும்.  நேரம் அறிந்துபேசவேண்டும். என்ன பேசுகிறோம் என் அறிந்து பேசவேண்டு ம்  யாரிடம் எப்படிப் பேச வேண்டும் எனஅறிந்துபேசவேண்டும். பேச தெரிந்த உன்னத படைப்பு  மனிதன்.  .  

     

     

  14. அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என

     

    ஆலய நிர்வாகத்தினர் அழைத்திருந்தார்கள்.....

    இது தான்  மதிப்பு ( உலக மதத்தலைவரின்  பிரதிநிதிக்கு )  பண்பு  மனிதபிமானம்

  15. ஆலயத்தை சென்று பார்க்க விரும்பியவர்  உலக கத்தோலிக்க மத தலைவரின் பிரதி நிதி . வேறு நாட்டு , வேற்று இனத்தவர் . இனம் மதம் பாராமல் நல்லூர்   கோவிலை இலங்கையின் முக்கிய வழிபாட்டு தலத்தை   தரிசிக்க விரும்பினார்  இந்நிலையில் நல்லூர் ஆலய நிர்வாகம் அவ்ருக்கு மதிப்பளித்து ஆடையுடன் அனுமதித்தது நியாயமானதே .

    வேற்று நாட்டு விருந்தினரை அவமரியாதையா   செய்ய போகிறீர்கள். அனுமதி  பெற்றுத்தான்   நுழைந்தார்கள்.ஆதரிக்க ஒரு கூட்ட்ம் இருந்தால் அதற்குள் ...நொடடை சொல்லவும் ஒரு சிலர் நுழைந்து விடுவார்கள். மதங்களுக்குமதிப்பு கொடுக்க வேணுமே தவிர " மதம்" பிடித்து அலையக்   கூடாது. ஒரு பேச்சுக்கு பெண் ஆக இருந்தால் என்ன சொல்வார்களோ ?அப்போதும் கடைப்பிடிப்பீர்களா? 

    • Like 2
  16. மறதி நோய்  வந்த போதும் அவரது பண்பு மாறவில்லை. எனக்கும் ஒரு சிறு அனுபவம் உண்டு ...வேறு ஒரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்  

    அண்மைக் காலங்களில் கவி அருணாசம் அவர்களின் பகிர்வுகளை அடிக்கடி காண்பதில் மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்களும்  நன்றியும். மேலும் தொடர வாழ்த்துக்கள். .  

  17. தோற்றாலும் பரவாயில்லை முடிவுகளை எடுத்துக் கொண்டே இருங்கள் சில வேளை  அந்த முடிவே வாழ்வின் திசையை மாற்ற  கூடும். 

    உலகத்திலே சிறந்த ஜோடி பாதணி தான் ஒன்றை பிரிந்தால் மற்றோன்று வாழாது. 

     பெண்களின் வாழ்வில் வலி அதிகம் ,ஆனாலும் அதை தாங்குகிற  வலிமை அதிகம்.

    மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்வாழ்க்கையோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க  முடியும் 

    • Like 2
  18. 23 minutes ago, தமிழ் சிறி said:

    பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வர் !

    பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வர் !

     

    😀

     ஒரு  அல்ல குரு        முதல்வர்கள். 😀😄

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.