• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மொழி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  299
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About மொழி

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 07/15/1988

Contact Methods

 • ICQ
  0
 • Yahoo
  tamil.magan@rocketmail.com

Profile Information

 • Gender
  Male
 • Location
  தமிழீழம்
 1. அர்ஜுன் அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். இறுதிநேரத்தில் பெற்ற தாயை மடியில் சுமக்கும் அரியவாய்பு உங்கள் மனைவிக்கு கிட்டியிருக்கிறது இதைநினைத்து நீங்கள் மனநிறைவு கொள்ளவேண்டும்.
 2. வணக்கம் நல்ல கதை நிலாமதி அக்கா வாழ்த்துக்கள் இதில் ராஜ சுந்தரம் தனது தேவையை நிறை வேற்ற முடியவில்லை என்று கவலைப்பட்டாலும் தன் சகோதரியின் மகளுக்கு தன்னால் முடிந்தவற்றைச் செய்து கொடுத்தோம் என்ற மனதிருப்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் ராதிகாவிற்கு தனது தவறை உணரும்போது மகிழ்ச்சி என்பது வாழ்நாளிலேயே இல்லாது போய்விடும். நன்றி
 3. வணக்கம் நல்ல முயற்சி முடிந்ததை செய்கிறோம். நன்றி
 4. வணக்கம் நண்பர் செந்தமிழாளன் கூறியது போன்று எமது தமிழீழ வரலாற்றினை கருப்பொருளாகவைத்து தமிழ்த்தின போட்டிகளை சர்வதேசமட்டத்தில் நடத்துவது எமது மொழியையும் தழிழீழ வரலாற்றினையும் இலகுவாக அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லமுடியும். அதேபோன்று எமது இனவிருத்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணங்களை நடத்துவதற்கு முடிந்த உதவிகளைச்செய்யலாம் குழந்தைகளை ஒன்று இரண்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் கூடுதலாக பெற்றெடுக்கவேண்டும். அதற்கான ஊக்கிவிப்புக்களையும் முன்னெடுக்க வேண்டும். பல பிள்ளைகள் உள்ள பெற்றோரை இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கலாம். கோவில்களில், சிறப்புநிகழ்ச்சிகளில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். பொருளாதார ரீதியில் எம்மவரை மேம்படுத்த வேலைகளை தேடிக்கொடுக்கலாம் நம்மவரின் கடைகளிலேயே பொருட்களை வாங்கலாம் நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் நம்மினத்தை மேம்படுத்த முடியும். தமிழை நேசித்து தமிழராய் வாழ்வோம். தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்கிறேன். தொடருவோம் நன்றி
 5. வணக்கம் இங்கே சில உறவுகள் எம்மினத்தை இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்கள் எப்படி முடிகிறது உறவுகளே உங்களால் எம்மினத்தை இழிவுபடுத்துவதற்கு அது உங்கள் பெற்றோரை இழிவுபடுத்துவது போன்றதல்லவா நான் இதை படிக்கும்போது என்னை நீங்கள் இழிவுபடுத்துவது போன்று உணர்கிறேன் சிலவேளைகளில் நீங்கள் வசிக்கும் நாடுகளில் குடியுரிமை பெற்றிருப்பதால் இப்படி உங்களால் முடிகிறதா சற்று சிந்தித்து பாருங்கள் இழிவாக நீங்கள் எழுதியுள்ள வரிகளை ஈழத்தில் இருக்கும் உங்கள் பெற்றோரோ அல்லது சகோதரர்களோ வாசித்தால் அவர்கள்மனம் கவலை கொள்ளாதா? இங்கே நாம் அனைவரும் எமது முகத்தை மறைத்து புனைபெயருடன் தான் கருத்தெழுதுகிறோம். ஆனால் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியே செய்கிறோம். உறவுகளே நாம் ஒன்று சேர்வோம் நல்லவற்றை விவாதிப்போம் கருத்துவேறுபாடுகளைக் களைந்து கொள்வோம். நம்மை நாம் நேசிப்போம் நண்பர்களாய்ச் சேர்ந்திருப்போம். உங்கள் மனங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனங்களைப் புண்படுத்துவதல்ல எனது நோக்கம் எம்மினம் ஒன்சேரவேண்டுமென்பதே ! தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் திருத்திக் கொள்கிறேன். தொடருவோம்! நன்றி
 6. வணக்கம். நன்றி நல்ல தலைப்பைத்தொடங்கியிருக்கிறீர்கள் முடிந்தவரை ஆக்கபுர்வமாக விவாதிப்போம் நாம் எல்லோரும் தமிழர்களே எம்மினத்தை நாமே இழிவுபடுத்த வேண்டாம். சிங்களஅரக்கர்களின் சித்திரவதைக்கூடங்களில் சிக்கியிருக்கும் தமிழீழ உறவுகளும் ஈழமண்ணும் புலம்பெயர் உறவுகளால் நிச்சயம் விடிவுகிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்னசெய்யபோகிறோம்? இங்கே எழுதுவதில் யாருக்கும் துரோகிப்பட்டம் கொடுக்காதீர்கள் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவோம் முடிந்தவரை திருத்த முயற்சிசெய்வோம் தமிழனாக இருக்கும் வரை நிச்சயம் அவர்களும் திருந்தி சேர்ந்து வருவார்கள் இல்லையெனில் அவர்கள் மனிதஇனமல்ல என்று விட்டு விடுவோம். சுவாசிப்பததல்ல வாழ்க்கை நேசிப்பதுதான் வாழ்க்கை. முயற்சிசெய்வோம் முடிந்தவரை இவ்வளவு அழிவுகளுக்கும் முகம்கொடுத்து அடக்குமுறைக்குள்ளும் தமிழனாய் நல்ல மனிதனாய் வாழ வேறுயாரால் முடியும்? நம்மினத்தால் மட்டுமே இதுவேசாதனைதான். தவறுசெய்யாமல் வாழ நாம்கடவுளல்ல தவறுகளை சுட்டிக்காட்டுவோம் திருந்திக்கொள்வோம். இது எனது கருத்து உங்கள் மனங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். தவறுகளிருப்பின் சுட்டிக்காட்டுங்கள் நிச்சயம் திருத்திக்கொள்வேன் நானும் மனிதனே! தொடருவோம்.... நன்றி
 7. கூட்டுகிறேன் குப்பைகளையல்ல நம்மவரை. கொழுத்துவதற்கல்ல சேற்பதற்காக.
 8. சுவாசிப்பதல்ல வாழ்க்கை நேசிப்பதே வாழ்க்கை

 9. வணக்கம் மோகன் அண்ணா சிரமத்தைப் பார்க்காது எனது பெயரை மொழி என்று மாற்றித்தந்தமைக்கு மிக்க நன்றி.
 10. வணக்கம் வாருங்கள் உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மிக்கமகிழ்ச்சி.
 11. http://http://www.youtube.com/watch?v=-eKhon1gqnM Samy-S - Appu Aachi
 12. வணக்ககம் மோகன் அண்ணா. எனது பெயரை மொழி அல்லது கலை என்று மாற்றித்தருவீர்களா? சிரமத்துக்கு மன்னிக்கவும். அன்புடன் A to Z
 13. வணக்கம் மோகன் அண்ணா எனது பெயரை தமிழ் என்று மாற்றித்தருவீர்களா? சிரமத்துக்கு மன்னிக்கவும். நன்றி அன்புடன் அருஸ்