Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1662
 • Joined

 • Last visited

 • Days Won

  4

மல்லிகை வாசம் last won the day on January 5 2021

மல்லிகை வாசம் had the most liked content!

Contact Methods

 • Website URL
  mallikaiv.blogspot.com.au
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  மல்லிகை, பூந்தோட்டம், கீழே அடியில்
 • Interests
  தமிழிசை, மெல்லிசை, திரைப்படம், பயணம், வரலாறு, எழுத்து

Recent Profile Visitors

19478 profile views

மல்லிகை வாசம்'s Achievements

Experienced

Experienced (11/14)

 • Reacting Well Rare
 • Very Popular Rare
 • Conversation Starter
 • First Post
 • Collaborator

Recent Badges

624

Reputation

 1. அள்ள அள்ளக் குறையாத நீரூற்றாய் சிந்தனைகளைத் தூண்டிவிட்டது உங்கள் கட்டுரை ஐயா! 😊 இன்னும் ஒன்று, சிறு வயதில் படித்த ஞாபகம்; மிகச் சுருக்கமாக என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன்: இது நடந்தது அமெரிக்காவோ / ஐரோப்பாவோ தெரியவில்லை. வறுமையில் வாடிய ஒரு இளைஞன் ஒரு முறை ஏதோ ஒரு பணத் தேவை காரணமாகப் பலவாறு யோசித்துக் குழப்பத்தில் இருந்தார். அப்போது கையில் கிடைத்த ஒரு சிறு உலோகக் கம்பியை அங்கலாய்த்தபடியே எவ்வித நோக்கமும் இல்லாமல் வளைத்தபடி இருக்கும்போது சட்டென அவர் மனதில் தோன்றியதே நம்மில் பலர் இன்னமும் பாவிக்கும் safety pin (சட்டை ஊசி). அதை அந்த இளைஞன் கண்டுபிடிப்பாகப் பதிவு செய்து அதன் மூலம் பொருளீட்டினான் என்று படித்த ஞாபகம். அவர் பெயர் தெரியவில்லை. எனவே கையறு நிலை மனித குலத்துக்கு வேண்டிய சில பல பொருட்களையும் கண்டுபிடிக்க வைத்துள்ளது எனக் கூறலோமோ! 😊 கையறு நிலையிலும் நமக்கென்று பல வழிவகைகள் ஒளிந்திருக்கும். அவற்றை அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனிடம் சரணாகதி அடைந்தோ, அல்லது நம் புத்தியைப் பயன்படுத்தியோ தேடிக் கண்டுபிடிக்கலாம் போலும்! 😊
 2. அருமையான வெளிப்பாடும் நல்ல உதாரணமும் ஐயா. இப்படிப் பல உதாரணங்கள் புராண, இதிகாசங்களில் உண்டல்லவா! மணிவாசகர் 'யாரொடு நோவேன்! யார்க்கெடுத்து உரைப்பேன்!' என இறைவனிடம் சரணாகதி அடைந்தது போன்று இன்னும் பல நாயன்மார்கள் கதையையும் இதில் உள்ளடக்கலாம். இந்த சரணாகதி, தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளாக வெளிப்பட்டு இன்றும் பல அடியார்களுக்குப் பயன்படுவது அற்புதம்!
 3. இவற்றுடன் போராட்டமாகவும் வெளிப்படலாம். அண்மையில் இலங்கை உதாரணத்தைக் கொள்ளலாம். தவிரவும், இந்தக் கையறு நிலையை நகைச்சுவையாக மாற்றியோரும் உளர் என்பதை நீங்கள் அறிவீர்கள் ஐயா. பல நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பார்த்தால் புரியும். 😊 கையறு நிலையில் வரும் அறச் சீற்றத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றி அறப் போராட்டமாக, அந்நிலையிலுள்ள பலரை இணைத்து அவர்கள் போல் இருக்கும் பலருக்கு நல வாழ்வு தரும் தொண்டு நிறுவனங்களை அமைப்பதாக என்று ஆரோக்கியமான பாதைகளை உருவாக்குவோரும் உளர். சிந்தனையைத் தூண்டிய அருமையான கட்டுரைக்கு நன்றி ஐயா. 🙏
 4. இத்தகைய குரங்கு மனத்தை நெறிப்படுத்திச் சமநிலையில் வைப்பது என்பது வாழ்நாள் நீண்ட ஒரு போராட்டம் தான். இதில் வென்றோர் ஞானியர். அவர்கள் கூட எத்தனையோ சோதனைகளைத் தாண்டியே பல்வேறு பயிற்சிகள் மூலம் தான் ஞான நிலையை அடைந்தனர். 😊 சிந்திக்கத் தூண்டும் கவிதையைத் தந்தமைக்கு நன்றி உதயன். 😊
 5. நல்லதோர் அனுபவக் கவிதை அக்கா. இந்த மாதிரியான தருணங்களில் ஆன்மிக, தத்துவார்த்தமான சிந்தனைகள் மனதில் எழுவது இயல்பு. கஷ்டமான காலங்களைக் கடப்பதற்கு மட்டுமன்றி, இனி வரும் காலங்களில் வாழ்க்கையை முதிர்ச்சியான மனநிலையுடன் அணுகுவதற்கும் இந்த சிந்தனைகள் உதவும். வாழ்த்துக்கள் அக்கா. 😊💐
 6. நிச்சயமாக அக்கா. இதுவும் கடந்து போகும். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள். 💐
 7. தமிழ் சிறி அண்ணா, நானும் கீதையைக் கற்கும் மாணவன் தான். கீதை பற்றி விரிவாகக் கற்பது இதுவே எனக்கு முதல் முறை. நீங்கள் குறிப்பிட்ட வாசகங்கள் தொடர்பான விளக்கங்களை இந்த ஆசிரியர் இனி வரும் காணெளிகளில் தான் தருவார். நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 😊 இவை கூட மேம்போக்கான வசனங்கள் தான். தவறு எனக் கூறுவதை விட ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டிய பல விடயங்கள் இது போன்ற வாக்கியங்களுக்குப் பின்னால் இருக்கின்றன என்பதே பொருத்தமானது. 😊
 8. நீங்கள் அறிந்திராத விடயங்கள் அல்ல இவை சுவி அண்ணா!😊 எனினும் இது பற்றிய தேடலில் உள்ள எவரும் கேட்டுப் பயன் பெறட்டும் என்ற எண்ணத்தில் இங்கு பகிர்ந்தேன். எனக்கும் உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி சுவி அண்ணா. 😊🙏
 9. பொறுமையாகக் கேட்டு, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை இக்காணொளிகளில் தந்துள்ளார் இந்த ஆசான். ஒவ்வொருவர் புரிதலும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை தானே. எனவே தான் இதனை இங்கு அறிமுகப்படுத்துவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்கிறேன். அவரவர் தேடலுக்கேற்பக் கேட்டுப் பயன் பெறலாம் என்பதே என் எண்ணம் அண்ணா.😊 கீதையை வெவ்வேறு ஆசான்களிடமிருந்து முழுமையாகக் கற்ற பின்னர் தான் எல்லோரும் இது பற்றிக் கலந்துரையாடுவதும் சிறந்தது என நினைக்கிறேன். அதுவும் இணையத்தில் எழுத்து மூலமான கருத்துப் பரிமாற்றங்களில் பல்வேறு புரிந்துணர்வுச் சிக்கல்கள், நேர விரயம் ஏற்படுவதால் வாய் மொழி மூல உரையாடல்களை நேருக்கு நேர் சந்தித்தோ அல்லது Zoom போன்றவற்றின் ஊடாகவோ செய்தலே ஆரோக்கியமானது என நினைக்கிறேன். அதற்கான காலம் கனியட்டும்! 😊 நன்றி அண்ணா. 😊
 10. நாம் சிறு வயது முதல் பல்வேறு அறிவுரைகளைக் (advice) கேட்டு வளர்ந்திருப்போம். அவற்றில் அநேகமானவை முழுமையானவையாக இருப்பதில்லை எனக் காலம் செல்லச் செல்லவாவது உணர்ந்திருப்போம். ஒருவர் எதிர்கொள்ளும் சவாலை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல், அந்த நேரத்தில் அவரைச் சமாளிப்பதற்காகவே மேம்போக்காக அவருக்கு வழங்கப்படும் வெறும் 'வெத்து வேட்டாட்டான' அறிவுரைகள் பயனற்றவை மட்டுமல்ல பல சமயங்களில் ஆபத்தானவையும் கூட. அந்த வகையில் 'கடமையைச் செய்!; பலனை எதிர்பாராதே!' எனும் கீதாசாரம் எனப் பிரபலமாக உலவும் அறிவுரை கூட உண்மையிலேயே மிகச்சரியான / நேர்த்தியான கருத்து அல்ல! 'கடமையைச் செய்யும் அதிகாரம் மட்டுமே உன்னிடத்தில் உண்டு; அதன் விளைவான பலனைத் தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடத்தில் இல்லை. அந்தப் பலனின் தன்மையானது பல்வேறு புறக்காரணிகளிலும் தங்கியுள்ளது என்பதுடன், அதற்கான பலன் உரிய நேரத்தில் கிடைத்தே தீரும்!' என்பதே மிகத் திருத்தமான உட்பொருளாகும். கீதை இதனை மட்டுமா வலியுறுத்துகிறது? மேற்கூறிய வாசகத்தை மட்டுமா நம்மில் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம்? நிச்சயமாக இல்லை! பகவத் கீதை எனும் முழுமையான சுவைமிக்க, சத்தான மாம்பழத்தின் ஒரு சிறு துண்டின் சாற்றின் துளிகள் தான் மேற்கூறிய ஒரு வாசகம்! முழுமையான மாம்பழத்தின் சுவையும், சத்தும் அதைப் பிழிந்து சாறாக நாம் அருந்தும்போது நமக்குக் கிடைப்பதில்லை. அது யாரால், எவ்வளவு நேர்த்தியான செயன்முறை மூலம் பிழியப்படுகிறது என்பதில் தங்கியுள்ளது என்பது ஒரு விடயம்; கழிவான சக்கையை நீக்குவதால் இழக்கப்படும் சத்து, சுவை போன்றவை மறு விடயம்; மாம்பழத்தின் தோலை ஆர்வத்துடன் உரிப்பது முதல், அதை ஆசையாகக் கடித்து ருசித்து உண்டு, மீதமுள்ள அதன் விதையையும் ருசித்துவிட்டு அதனை மண்ணில் விதைப்பது வரை நாம் பெறும் திருப்தியான அனுபவத்தைத் தவறவிடுவது இன்னுமோர் முக்கியமான விடயம். அந்த வகையில், கீதை எனும் முழுமையான மாம்பழத்தை அதன் சுவையும், சத்தும் குன்றாமல் எவ்வாறு ரசித்து, ருசித்து இன்புற்றுப் பயனடைவது என்பதை இந்த YouTube தொடர் மூலம் நமக்குக் கற்பிக்கிறார் இந்த நல்லாசான். கீதையின் சமஸ்கிருத மூல சுலோகங்கள், அதன் பதங்கள் மற்றும் தமிழில் விரிவான விளக்கம் மட்டுமன்றி தற்காலத்தில் - நடைமுறையில் எவ்வாறு இந்த அறிவுரைகளை நாம் கைக்கொள்ளலாம் என்பது போன்ற விடயங்களையும் உள்ளடக்கியது சிறப்பு. சுவாமி சின்மயானந்தா அவர்களின் உரையை அடிப்படையாக வைத்தே இந்த ஆசான் நமக்கு இந்தப் பாடங்களைக் கற்பிக்கிறார். இத்தொடர் இன்னும் முடிவடையவில்லை; இன்னும் ஏராளமான சுலோகங்கள் வர இருக்கின்றன. எனினும் மாம்பழத்தின் சிறு பகுதியைச் சுவைத்து இன்புற்ற மகிழ்ச்சியில் இம்மாங்கனி பற்றி உங்களுக்கும் சொல்வதில் நான் ஆனந்தமடைகிறேன்! சுவைத்தலிலும், பகிர்தலே பேரின்பம் அல்லவா! ***இன்னோர் விடயம்; 'கீதை உண்மையில் கிருஷ்ணரால் தான் உபதேசிக்கப்பட்டதா?', 'அவர் பரமாத்மாவா?', 'உண்மையில் இது நிகழ்ந்ததா?', 'போர் செய்து உயிர்களைக் கொல்வதை ஏன் கீதை நியாயப்படுத்துகிறது?' எனும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். ஆனால் நம்மை அர்ஜுனனாகவும், நம் வாழ்வைப் போர்க்களமாகவும் உருவகம் செய்த மனநிலையில் இதில் கூறப்படும் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்டுப் பின்பற்றினால் மேலுள்ள கேள்விகள் நமக்கு அவசியமில்லை. கீதையிலோ, அதற்கான விளக்கம் தரும் இந்த ஆசான் கூறும் கருத்துக்களிலோ ஆங்காங்கே மிகச்சில ஏற்றுக்கொள்ளமுடியாத விடயங்கள் ஏதும் இருப்பின் மாம்பழத்தின் அழுகிய மிகச்சிறு பகுதியை நீக்கிவிட்டு உண்பது போல இதனையும் ருசித்துப் பயனடைவோம்! மற்றொன்று, மாம்பழத்தின் சுவையும், சத்தும் நமக்குக் கிடைப்பது மாம்பழத்தில் மட்டும் தங்கியிருப்பதில்லை; நாம் எந்த மனநிலையில், எப்படி உண்கிறோம் என்பதிலும் பெருமளவு தங்கியுள்ளது. கீதை போன்ற மிகச் சிறந்த அறிவுரைகளைக் கேட்ட பயனும் அவ்வாறே! - நமது வாழ்க்கை அனுபவங்களால் நாம் பெற்ற பக்குவத்தின் அளவிலும் தங்கியுள்ளது. அத்துடன் மேலும் பக்குவமடைய நாம் காட்டும் முனைப்பிலும் தங்கியுள்ளது எனக் கூறி கீதை எனும் மாங்கனியின் விதையை என் பங்கிற்கு இங்கு விதைக்கிறேன்! 🙏 நன்றி 🙏 👇YouTube இணைப்பு கீழே👇 https://youtu.be/VlvcYzm6mk0 (இந்த இணைப்பு தொடரின் முதலாவது காணொளி மட்டுமே. அந்த YouTube channelஇல் playlist பகுதிக்குச் சென்று 'ஶ்ரீமத் பகவத் கீதை' எனும் தலைப்பில் இத்தொடரில் இதுவரை வெளியான 57 காணொளிகளையும் காணலாம்.)
 11. சுவியண்ணா, இதை இங்கே பகிரலாமோ தெரியவில்லை. இரு வர்ணப் பழைய பாடற் காட்சி; ஆனால் பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது! மீண்டும் வேறு யாரோ குரலில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். 😊
 12. லோகேஷின் அடுத்த படத்துக்கான lead என்கிறார்கள்; பார்ப்போம். 😊 படத்தில் வரும் நரேனின் பாத்திரம், இறுதிக் காட்சியில் தோன்றும் சில பாத்திரங்கள் உண்மையிலேயே ''கைதி' உலகத்திலிருந்து' வந்தவை தான்! நடிகர் கார்த்தியின் குரல் கூட இறுதிக் காட்சியில் வருகிறது! 😀
 13. தமிழ் சிறி அண்ணா, நானும் சமீப காலமாகத் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் இது போன்ற திரைப்படங்களைத் தவிர்க்க முடியவில்லை! இப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை இங்கு எழுத வைத்தது. 😊 நான் எழுதியது முழுமையான விமர்சனம் இல்லை; படத்தின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி நான் பெரிதாக எழுதவில்லை. பொறுமையாக வாசித்து என்னைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா! இந்த ஊக்குவிப்புத் தான் என் போன்றவர்களைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது! 😊 மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. 😊🙏 ராசவன்னியன் அண்ணா, கிருபன், பலரையும் ஆச்சரியப்பட வைத்த காட்சி இது. இவர் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடன இயக்க உதவியாளராக / நடனக் கலைஞராக இருந்திருக்கிறாராம் என்பது கூடுதல் ஆச்சரியம்!
 14. மிக்க நன்றி சுவி அண்ணா. 😊🙏❤️ கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.