• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மல்லிகை வாசம்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  1,347
 • Joined

 • Days Won

  3

Everything posted by மல்லிகை வாசம்

 1. மிகவும் அருமையான சிந்தனை, கோஷன். நீங்கள் இங்கு பயன்படுத்திய Facetime உதாரணம் போலவே நானும் Email, Fax தொழில்நுட்பங்களை உதாரணமாகப் பயன்படுத்துவதுண்டு. இவை பற்றி எல்லாம் கற்பனையே செய்ய முடியாத ஒரு காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்கள் எல்லாம் supernaturalஆகத் தான் அன்றைய மனிதர்களுக்கு இருந்திருக்கும். இன்னும் சில பல மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இன்று supernaturalஆகத் தோன்றுபவை நிஜத்தில் சாத்தியமாகலாம். ஒரு பேச்சுக்கு அப்போது உலகம் பிரளயத்தால் சூழ்ந்து மனிதர்கள் உட்பட உயிரினங்கள் பல அழிந்து உலகின் சில பாகங்களில் அதுவும் சில மனிதர்கள் மட்டுமே எஞ்சுகின்றனர் என்ற நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போதிலிருந்து இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மீண்டும் மனித இனம் இவ்வுலகில் வளர்ச்சி பெறும் போது அப்போதிருக்கப் போகும் மனிதருக்கு உலக அழிவுக்கு முன்னர் இருந்த தொழில்நுட்பங்களை நம்ப இயலாமல் இருக்கும் ஒரு நிலை ஏற்படலாம். இதே சிந்தனையுடன் தான் நானும் இற்றைக்கு பல ஆயிரம் /லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை அன்றைய மக்கள் பயன்படுத்தி இருக்கலாம். இன்றைய காலத்தில் அவை நம்ப முடியாத புழுகுகளாக நமக்குத் தோன்றலாம் என்பதே எனது கருத்து. சித்தர், முனிவர்களின் supernaturalசக்திகள் என்று நாம் கதைகளில் படிப்பதும் இவ்வாறு முன்பு ஒரு காலத்தில் இருந்திருக்கலாம், எதிர்காலத்தில் விஞ்ஞானமும் அவ்வாறான நிகழ்வுகளைச் சாத்தியமாக்கிக்காட்டலாம். எனவே சிலர் பாஷையில் அது எல்லாவற்றுக்கும் மேலான சக்தி, ஏனைய சிலர் பார்வையில் அவை சித்து விளையாட்டுகள். பெயர்கள் தான் வெவ்வேறு; விஷயம் ஒன்று தான். மதங்களுக்கும் இது பொருந்தும். நம்பிக்கை / செல்லும் மார்க்கம் தான் வேறு; நம் எல்லோருக்கும் மேலான சக்தி ஒன்று தான் - இறைவன் ஒன்று தான். இதை உணர்ந்தோர் தான் யோகர் உட்பட்ட பல மகாஞானியர்.
 2. யோகர் சுவாமிகளால் தொடங்கப்பட்ட சிவதொண்டன் நிலையத்தின் இணையத்தளத்துக்கான இணைப்பு இதோ: http://www.sivathondan.org யோகர் சுவாமிகள் பற்றிய குறிப்புகள், நிலையம் பற்றிய விபரங்கள், அவர்களின் வெளியீடுகள், நற்சிந்தனைப் பாடல்கள் போன்ற விடயங்களை இங்கே காணலாம். நற்சிந்தனைத் திருத்தாண்டகத்தினை ஒலி வடிவில் கேட்க, http://www.sivathondan.org/நற்சிந்தனை-திருத்தாண்டக/
 3. யோகர் சுவாமிகள் நற்சிந்தனைகள்: "தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்வதனால் ஞானம் உண்டாகும்." "உங்களுடைய வேலைகளைச் செவ்வனே செய்யுங்கள். அதே யோகம்." "பாடுபடல் வேண்டும். ஒரு சிலர் தான் உண்மையை அறிவார்கள். மற்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் போகிறது தானே."
 4. யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: "பொன் மண்ணுக்குள் உளது. அதை எடுத்துச் சேகரித்துப் பக்குவம் பண்ணவேண்டும். ஆன்ம சக்தியும் அப்படியே."
 5. "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை..." "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்... நீ இல்லையே நான் இல்லையே...!"
 6. உங்கள் தாயாரின் ஆன்மாவுக்கு எனது பிரார்த்தனைகள், சுவி அண்ணா.
 7. யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: "விளக்குக் கண்ணாடி புகை பிடித்திருந்தால் வெளிச்சம் எப்படித் தெரியும்? மனம் அழுக்கடைந்திருந்தால் ஆன்மாவின் ஒளி எப்படித் தெரியும்?"
 8. ஈழப்பிரியன் அண்ணை, இனிமேல் இணைக்கும் போது அவ்வாறு செய்கிறேன். நன்றி
 9. ஜூட், உங்கள் கருத்து சரியானது. எனினும் இங்கு சொல்லப்படுகிற விடயம் ஞானிகளின் பற்றற்ற நிலை. அவர்களின் விருப்பு வெறுப்பற்ற சமநிலையான மனநிலையில் அவர்களுக்கு எல்லா மதங்கள் மீதும் பற்றோ, வெறுப்போ இல்லை என்பதைத் தான் எழுதினேன்.
 10. யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: "ஒருவனிடமுள்ள பத்து நல்ல குணங்களை விட்டு விட்டு இரண்டொரு குறைகளை மாத்திரம் எடுத்துப் பேசுதல் எவ்வளவு பேதைமை!'
 11. வணக்கம் அண்ணை, உண்மை, நானும் இதனை உணர்ந்திருக்கிறேன். முகநூல் உறவுகள் சிலரும் தாம் ஒதுங்கிக் கொண்டு விட்டதாகச் சொன்னார்கள். எதற்காக என்று கூறவில்லை. நான் கூட அவ்வப்போது தான் எட்டிப்பார்த்திருக்கிறேன், கடந்த 10 வருடங்களாக. அப்படி வரும் போது கூட சில திரிகளில் தோற்றுவிக்கப்படும் எதிர்மறை உணர்வுகளால் அவற்றில் எழுதக் கூடாது என்று என்னை நானே கட்டுப்படுத்தியிருக்கிறேன். மதவாதத்தைத் தூண்டாத நமது பண்பாடு, கலாச்சார விழுமியங்களை சிறந்த முறையில் வளர்க்கக் கூடிய திரிகள் பல அவசியம். ஏற்கனவே அவ்வாறான திரிகள் இங்கு இருக்கலாம். அவை மீண்டும் செயற்பட வேண்டும்.
 12. நிழலி, ஏனைய பல திரிகள் போல இதுவும் வீண் விவாதம் புரியும் இடமாக இருப்பதைத் தவிப்பதற்கே நற்சிந்தனைகளை, யோகர் சுவாமி தொடர்புடைய நல்ல விடயங்களை மட்டுமே பகிரும் திரியாக இதனை ஆரம்பித்தேன். எனினும் இங்கு மேலே சில எதிர்மறையான கருத்துக்கள் இத்திரியின் நோக்கத்தை குழப்புவதாக உள்ளன. இதனை அறிந்தும் நிர்வாகத்தில் உள்ள சிலர் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களை அனுமதிப்பது யாழ்களம் வீண் விவாதங்களை மட்டுமே ஊக்குவிக்கிறது என்றும், நற்சிந்தனைகள் பற்றிய திரியில் கூட எதிர்மறை எண்ணங்களைப் பரப்புவதை தடுக்காது என்றும் எண்ணத் தோன்றுகிறது. இது எந்த அளவுக்கு ஆரோக்கியமான போக்கு என்று தெரியவில்லை.
 13. இவர் 'ODHA' என்று உச்சரிப்பதைப் பார்ப்பதற்காகவே பலமுறை இவரது காணொளிகளைப் பார்த்ததுண்டு. வகுப்பறையைக் கட்டுக்குள் வைத்திருக்க முயலும் ஆசிரியர் போல் இவரது பேச்சு அமைந்திருக்கும்.
 14. யோகர் சுவாமிகள் நற்சிந்தனைகள்: ***"மலையேறுவதற்கு உதவும் ஊன்றுகோலைப் போலவே ஒழுக்கத்தை ஆன்ம வளர்ச்சிக்கு அனுசரிக்க வேண்டும்." ***"தன்னைத் திருத்தாது யாத்திரைக்குப் போவதனால் ஆவதென்ன?" ***"உங்களுக்கு ஒரு குறைவுமில்லை. உங்களை இன்னார் என்று அறியாதது தான் குறை."
 15. யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: "பூகம்பம் கெடுதி செய்தால் யாம் திருப்பிக் கெடுதி செய்கிறோமா? பேசாமல் இருப்போம். அதேபோல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; எல்லாங் கடவுளே."
 16. நற்சிந்தனை பற்றிய திரியில் எதிர்மறை எண்ணங்களைத் தூண்டி விவாத களமாக்கும் கருத்துக்களைத் தவிர்க்கவும். நன்றி
 17. யோகர் சுவாமிகள் நற்சிந்தனை: "எல்லோரும் எனது ஆசான்களாகும். நான் எல்லோரிடமிருந்தும் கற்கிறேன். நான் ஒவ்வொருவரிடமிருந்தும் எனக்குத் தேவையானதை எடுத்து மேலும் செல்கிறேன். மற்றவர்களும் அவ்வாறே; நீ இதனை அனுபவத்தில் அறிய வேண்டும். அப்போது உண்மையை அறிவாய்." இந்த நற்சிந்தனை தொடர்பான எனது புரிதல்: இந்த நற்சிந்தனை ஓரளவுக்கு எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியது. "எல்லோரும் எனக்கு ஆசான்களாகும்" என்பது பற்றிய எனது புரிதல் 'நம் வாழ்வில் நாளாந்தம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் - சிறியவர் முதல் பெரியோர் வரை, அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், நமக்கு ஏதோ ஒரு வகையில் கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது பேச்சு, செயல்கள் அவர்கள் அறியாமலே நமக்கு ஏதோ ஒரு பாடம் புகட்டும். எனவே எவரையும் தாழ்வாக எண்ணக்கூடாது என்றும் கொள்ளலாம். இங்கு "உண்மை" என்பது நமக்கு மேலான ஒரு சக்தியை - இறைவனை அறிவதைப் பற்றியதாக இருக்க வேண்டும். எல்லோரிடமிருந்தும் பெற்ற அறிவுகளின் தொகுப்பால் பெற்ற உயரிய ஞானம் என்பதாகவும் இருக்கலாம். கள உறவுகளே, இந்த நற்சிந்தனை பற்றி உங்களுடைய புரிதலையும் இங்கு பதியலாம். 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' எனும் வள்ளுவன் வாக்கிற்கு அமைய உங்கள் விளக்கமும் இந்த நற்சிந்தனையின் தெளிவான பொருளை அறிய எங்கள் எல்லோருக்கும் உதவும். "எல்லோரும் எமக்கு ஆசான்களே!"
 18. சங்கராபரணம் திரைப்பட சங்கீதப் பாடல்கள் தமிழில்... "ஓங்கார நாதங்கள் அரசாளும்..." 'சங்கரா... நாதசரீராபரா..." 'ராகம்... தானம்... பல்லவி..." 'கிடைக்குமா இது போன்ற சேவை...'
 19. நல்ல முயற்சி. சனத்தொகை நெருக்கம் கூடிய இந்திய மாநிலங்களில் இவ்வாறான முன்னெடுப்புகள் அவசியம். நல்ல பகிர்வு அம்பனை.