Jump to content

மல்லிகை வாசம்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1650
 • Joined

 • Days Won

  4

Posts posted by மல்லிகை வாசம்

 1. சுவியண்ணா, இதை இங்கே பகிரலாமோ தெரியவில்லை. இரு வர்ணப் பழைய பாடற் காட்சி; ஆனால் பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையமைத்தது! மீண்டும் வேறு யாரோ குரலில் பாடியதை இணைத்திருக்கிறார்கள். 😊

   

   

  • Like 2
 2. 3 hours ago, ராசவன்னியன் said:

  சூர்யாவின் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை, ஜவ்வாக கதையை இழுத்த மாதிரி உணர்வு. 🙄

   

  29 minutes ago, கிருபன் said:

  சூர்யா பார்ட் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம்.

  லோகேஷின் அடுத்த படத்துக்கான lead என்கிறார்கள்; பார்ப்போம். 😊

  3 hours ago, ராசவன்னியன் said:

  முடிவாக, மற்றொரு கைதி2 படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

   

  32 minutes ago, கிருபன் said:

  இரண்டாவது பாதி கைதி படத்தின் (தற்செயலாக போனவாரம்தான் பார்த்தேன்) தொடர்ச்சி போலிருந்தது.

  படத்தில் வரும் நரேனின் பாத்திரம், இறுதிக் காட்சியில் தோன்றும் சில பாத்திரங்கள் உண்மையிலேயே ''கைதி' உலகத்திலிருந்து' வந்தவை தான்! நடிகர் கார்த்தியின் குரல் கூட இறுதிக் காட்சியில் வருகிறது! 😀

 3. 5 hours ago, தமிழ் சிறி said:

  வாவ்.... ஈழத்தமிழரில், இப்படி.. ஒரு சினிமா விமர்சகரா?  ❤️

  நான் திரைப்படங்கள் பார்ப்பது மிக, மிக குறைவு.
  அதில்.. ஆர்வமும் அதிகம்  இல்லை. 

  ஆனால்... அபூர்வமாக சினிமா விமர்சனங்களை வாசிப்பதுண்டு.
  அது போல்... மல்லிகை வாசம் எழுதிய விமர்சனத்தை வாசித்து ஆச்சரியப் பட்டேன். 👍

  பிரபல பத்திரிகைகளில் கூட... இப்படி அழகாக விமர்சனத்தை 
  எழுதும் ஆற்றல், அந்த விமர்சகர்களுக்கு இல்லை.

  குறை கண்டு பிடிக்க முடியாதபடி... அனைத்து விடயங்களையும்...
  உன்னிப்பாக அவதானித்து, எழுதிய விமர்சனத்தை ரசித்து வாசித்தேன். 👏

  பாராட்டுக்கள்.. மல்லிகை வாசம். 🙂

  தமிழ் சிறி அண்ணா, நானும் சமீப காலமாகத் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. ஆனால் இது போன்ற திரைப்படங்களைத் தவிர்க்க முடியவில்லை! இப்படம் ஏற்படுத்திய தாக்கம் தான் என்னை இங்கு எழுத வைத்தது. 😊

  நான் எழுதியது முழுமையான விமர்சனம் இல்லை; படத்தின் தொழிநுட்ப அம்சங்களைப் பற்றி நான் பெரிதாக எழுதவில்லை.

  பொறுமையாக வாசித்து என்னைப் பாராட்டிய உங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி தமிழ் சிறி அண்ணா! இந்த ஊக்குவிப்புத் தான் என் போன்றவர்களைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகிறது! 😊

  மிக்க நன்றி குமாரசாமி அண்ணா. 😊🙏

  3 hours ago, ராசவன்னியன் said:

  குறிப்பாக வேலைக்கார பெண்ணின் அதிரடி அதகளம் எதிர்பார்க்காத ஒன்று. 👌

   

  1 hour ago, கிருபன் said:

  ஏஜென்ற் ரீனா ஆச்சரியம்.  

  ராசவன்னியன் அண்ணா, கிருபன்,

  பலரையும் ஆச்சரியப்பட வைத்த காட்சி இது. இவர் கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடன இயக்க உதவியாளராக / நடனக் கலைஞராக இருந்திருக்கிறாராம் என்பது கூடுதல் ஆச்சரியம்! 

  • Thanks 1
 4. 16 hours ago, suvy said:

  தரமான விமர்சனம்..........நன்றி மல்லிகை வாசம்........!  👍

  மிக்க நன்றி சுவி அண்ணா. 😊🙏❤️

  16 hours ago, கிருபன் said:

  இன்று வெண்திரையில் பார்க்கவா, விடவா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். முடிவு கிட்டிவிட்டது😀

  கிருபன், வெண்திரையில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய திரைப்படம் இது. 

  படம் பார்த்தவுடன் உங்கள் விமர்சனத்தையும் அறிய ஆவல்! 😊

 5. இது 'விக்ரம்' திரைப்படம் பார்த்த பின்னரான எனது எண்ணத் துளிகளே. இது ஒரு முழுமையான விமர்சனம் அல்ல.

  ********************************

  🔥 இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கே உரித்தான இதன் கதை, கதைக்களம் மட்டுமல்ல பார்வையாளரின் சிந்தனைக்குத் தீனி போடும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும் என்னை வெகுவாக ஆச்சரியத்துள்ளாக்கின!

  🔥 முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இல்லாமல், ஆங்காங்கே அவசியமான உணர்வோட்டமான காட்சிகள், பரபரப்பான சம்பவங்கள், திருப்பங்கள் நிறைந்ததாக அமைந்தமை என்னைப் படத்துடன் ஒன்ற வைத்தது.

  🔥 வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் சில தருணங்களும் உண்டு; பாடல்களும் கதையோட்டத்துக்குத் தேவையான மட்டுப்படுத்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை படத்தின் விறுவிறுப்பைக் குறைக்காத அதேவேளை, நமது நெஞ்சின் படபடப்பைக் குறைக்கப் பயன்பட்டன எனக்கொள்ளலாம்! 

  🔥 இயக்குனரின் முன்னைய திரைப்படமான 'கைதி' திரைப்படத்தில் தோன்றிய சில கதாபாத்திரங்கள் / சில சம்பவங்கள் தொடர்பான குறிப்புக்கள் 'விக்ரம்' படத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன; அத்துடன் 1987 இல் வெளியான கமலின் 'விக்ரம்' பற்றிய குறிப்புகளும் இப்புதிய 'விக்ரம்' படத்தில் உள்ளன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது புதுவித அனுபவம் என்பதால், சிலருக்கு சுவாரஸ்யமாகவும் ஏனையோருக்கு குழப்பமாகவும் இருக்கலாம். (இது எப்படி என்றால், ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தில் வீமனைச் சந்திக்கும் நிகழ்வு போன்றது எனவும் கூறலாம்!). 

  எனவே, மேற்கூறிய இரு திரைப்படங்களினதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி மேலோட்டமாகவேனும் அறிந்து கொண்ட பின்னர் இப்படத்தைப் பார்ப்பது சிறந்தது. (பரீட்சைக்குச் செல்லும் முன்னர் சில பாடங்களை மீண்டும் ஒரு முறை revision செய்வது போல!)

  🔥 விஜய் சேதுபதியின் புதுமையான முகபாவனைகள், உடல் மொழிகள் பிரம்மிக்க வைத்தாலும், வசனம் பேசுவதை இன்னும் மெருகூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. 

  பஹத் பஸிலி்ன் மிடுக்கான நடையும், இயல்பான நடிப்பும், காதற் காட்சிகளில் சற்றே கனிந்து கசிவதும் ஒரு அற்புத நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் கண்களாலேயே மாயவித்தை செய்பவர்! 

  கமலைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ! பல ரகங்களிலான நடிப்பை ஒரே படத்தில் தந்தது அவரது சிறப்பான மீள்வருகையாக அமைந்துள்ளது. நரேனுக்கு அறிவுரை கூறும் அந்த ஒரு காட்சியும், கழுகின் விழிகளும், சிங்கத்தின் கர்ஜனையுமான சண்டைக் காட்சிகளிலும் என்னை வெகுவாகக் கவர்ந்தார்.

  சூர்யாவின் சில நிமிடங்களேயான திரைப்பிரசன்னம் ஆச்சரியம்! அவரது கதாபாத்திரமும் நான் எதிர்பாராதது! செம்பன் வினோத் ஜோஷ், நரேன், அர்ச்சனா ஆகியோரின் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. 

  இத்தனை பிரம்மாண்ட நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது போல் அமைவது மிக அரிது.

  🔥பின்னணி இசையும், ஒளிப்பதிவும், சண்டைக் காட்சி இயக்கமும் இப்படத்துக்குக் கூடுதல் பலம் என்று நான் எழுதுவது சம்பிரதாயத்துக்காக அல்ல; என்னைப் படம் நிகழும் சூழலுக்கே மனோரீதியாகக் கடத்திச் சென்றன இவை!

  நான் சண்டைக்காட்சிகளின் ரசிகன் அல்ல; எனினும், இப்படத்தில் அவை எனக்குச் சலிப்பூட்டவில்லை. அதிலும் ஒரு காட்சி திகைப்பூட்டுவதாகவும், அற்புதமாகவும் இருந்தது! பார்த்தவர்களுக்கு எதுவென்று புரியும்!

  🔥 இவை நிற்க, இது U/A சான்றிதழ் பெற்ற படம் தான்;  எனினும், சிறுவர்களுக்கு உகந்த படமல்ல; வன்முறை, சண்டைக் காட்சிகளைக் காணத் தாங்க இயலாதோருக்கும் உரியதல்ல இப்படம்.

  🔥 வசனங்கள் குறைவான, பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் சில பல காட்சிகள் சிலருக்குத் தெளிவின்மையை ஏற்படுத்தலாம்; இதனால் இப்படத்தை மீண்டும் பார்க்கவும் தோன்றலாம்! - பரவாயில்லை, மீளப் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் இது! 

  🔥 இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சிறு குறைகள் இல்லாமல் இல்லை; அவற்றை எழுதி படத்தின் கதை/கதையோட்டம் பற்றிய தகவல்களை வெளியிட விரும்பவில்லை - No spoiler! 
  (VFX காட்சிகளின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.)
  தவிரவும், வழமை போல இப்படத்தின் விறுவிறுப்பான கதையும், காட்சிகளும், நடிப்புலக ஜாம்பவான்களின் திரைப் பிரசன்னமும் இச் சிறு குறைகளை மற/றைக்கச் செய்கின்றன! 

  ************************************

  🔥🔥🔥மொத்தத்தில் 'விக்ரம்',

  🔥 எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்திருந்தேனோ அதையும் விஞ்சி என்னை வியக்க வைத்த தரமான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.

  🔥 Class actorsஇன் mass & class ஆன, classicஆக காலங்கள் கடந்தும் நிலைத்திருக்கப்போகும் ஒரு உன்னதமான திரைச்சித்திரம்! 

  🔥தமிழ் சினிமா என்ற வட்டத்தையும் தாண்டி, இந்திய, உலக சினிமா எனத் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளது / விரிவுபடுத்தும். கூடவே, இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையையும் விரிவுபடுத்தியுள்ளது!

  🔥இது ஓர் masterpieceஆ என்று தெரியாது; ஆனால், நிச்சயமாக தமிழ் / இந்திய சினிமாவில் இது ஒரு trendsetter ஆக அமைந்துள்ளது. 

  🔥🔥🔥அந்த வகையில் இயக்குநரும், மொத்த படக்குழுவும் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். 👏👏👏

  நன்றி 😊

  • Like 5
  • Thanks 1
 6. வணக்கம் நிர்வாகம்,

  வழமை போல நீண்ட நாட்களுக்குப் பின் இங்கு உள்நுளைந்ததால் என்னால் கருத்துக்கள் பதிய இயலவில்லை.

  தயவுசெய்து இக்குறையை நிவர்த்தி செய்வீர்களா?

  நன்றி 😊

  பி.கு: யாழ் மூடப்படவிருந்த செய்தியை இன்று தான் படித்து அறிந்தேன்/ அதிர்ந்தேன். தொடர்ந்து இயங்கும் என அறிந்ததில் மிகுந்த மனநிறைவாக இருக்கிறது. நன்றி மோகன் அண்ணா மற்றும் நிர்வாகம். 🙏 

 7. On 5/8/2021 at 02:28, ரஞ்சித் said:

  அவள் தானாக வெட்டிக்கொண்டிருக்கும் இந்தக் குழிக்குள்ளிருந்து அவளை எப்படியாவது இழுத்துவரவேண்டும். அவளது அவலங்களுக்குக் காரணம் என்று தன்னைத்தானே நிந்திக்கும் அவளது எண்ணத்தை எப்பாடுபட்டாவது மாற்றிவிடவேண்டும். உலகில் தன்னைப்போன்ற துர்ப்பாக்கியசாலி எவரும் இல்லையெனும் அவளின் எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடவேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் எவருமே தன்னை நேசிப்பதில்லையென்றும், தன் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லையென்றும் அவள் எண்ணுவதை தடுத்திடவேண்டும். தனக்கென்று உலகில் எவருமேயில்லை என்று தனக்குள் உள்முடங்கும் அவளின் மனதை மீண்டும் வெளியே எடுத்துத் துளிர்விக்க வேண்டும்.

  இவை அனைத்துமே பேசுவதற்கும், எண்ணுவதற்கும் எனக்குச் சுலபமாகத் தெரியலாம். அவளின் பிடிவாதமும், வைராக்கியமும் நான் அறியாததல்ல. என் முன்னே அவள் மலைபோல குவித்துவைத்திருக்கும் அவளின் வேதனைகளை என் வாழ்நாளில் துடைத்தழித்திட என்னால் முடியாதென்பெது நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால், அந்த மலையினைக் கடக்கும்  நம்பிக்கையினை அவளுக்குக் கொடுக்கலாமா என்பதை எனது இறுதி முயற்சியாக எடுத்திருக்கிறேன்.

  இந்தப் புரிதலும், நல்ல நோக்கமும், நேர்மையான முயற்சியுமே அவசியம்.

  அருமையான கதைக்கு வாழ்த்துக்கள். 

 8. 4 minutes ago, குமாரசாமி said:

  அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁

  விருந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போயிடோணும். கொஞ்ச நாள் தங்கிப் பார்த்தால் உபசாரமும், மரியாதையும் குறைஞ்சிடும். அப்படியா அண்ணை! 😀

  • Like 1
 9. 50 minutes ago, நந்தன் said:

  ஆடி அமாவாசை எண்டு வராமல், இங்கே பாயை போட்டு படுங்கள் பிரச்சனை வராது. 

  அதுவும் சரி தான் அண்ணை. 😊

  தொடர்ந்து யாழில் இருக்க விருப்பம் தான். ஆனால் மற்றவர்கள் குறிப்பிட்டது போல வேலைப் பழு தான் தடையாக உள்ளது. 

   

 10. உலகின் பல்வேறு தேசங்களிலும் பரந்து வாழும் நாம் இன்றளவுக்கும் எத்தனையோ பொதுமுடக்கங்களை / பயணத்தடைகளை எதிர்கொண்டு சமாளித்து வருகிறோம். எனவே, இவ்வாறான சவாலான சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவத்தையும் நம்மில் பலர் பெற்றிருக்கக்கூடும். 

  எனினும், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த அசாதாரணமான சூழல் நாம் வாழும் தேசங்களிலோ, தாயகத்திலோ நீடிக்கப் போகிறதோ என்று எவருக்கும் தெரியாது. 

  இந்த நிலையில் இவ்வாறான பொதுமுடக்க / பயணத்தடை காலங்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது பற்றிய சில வழிமுறைகளைக் கீழே தருகிறேன். நம்மில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்த / பலரும் கைக்கொள்ளும் வழிமுறைகளாக இவை இருக்கலாம். எனினும், இந்த விடயத்தில் உதவி தேவைப்பட்டோருக்கும், ஒரு நினைவூட்டலுக்காகவுமே இந்தப் பதிவை இங்கு எழுதுகிறேன். 

  இனி, அந்த வழிமுறைகளைப் பார்க்கலாம்: 


  1) கோயில்களே ஆயினும் அவை பலரும் புழங்கும் பொதுவெளிகள் ஆகும்; எம்பெருமான் சந்நிதியில் மனிதர்க்கு மட்டுமன்றி கொறோனாக்கும் இடம் உண்டு தானே! எனவே, வீட்டுப் பூஜை அறை, வீட்டு வளவில் உள்ள சிறு கோயில்களை இயன்றவரை வழிபாட்டிற்காகவும், வீட்டிலுள்ளோரின் கூட்டுப் பிரார்த்தனை / பஜனைகளுக்காகவும் பயன்படுத்துவது சிறந்தது.

  இது நமது ஆன்ம பலத்தை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்; குடும்ப உறவுகளும் வலுப்பெறும்.

  2) அடிக்கடி பொழுதுபோக்காகவோ, வேலை நிமித்தமோ பயணம் செய்து பழகியோருக்கு பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே மணி/நாட்கணக்கில் முடங்கியிருப்பது மன அழுத்தத்தைத் தரலாம். அவர்கள் தமது கவனத்தைத் திசை திருப்பத் தமக்குப் பிடித்த ஓரிரு பொழுதுபோக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, வீட்டுத் தோட்டம் செய்வது, வீட்டிலுள்ள சிறுவர்களுக்குக் கற்பிப்பது, சமையல், தையல் போன்றவற்றைப் பழகுவது, ஆடல், பாடல், எழுத்து, ஓவியம், பேச்சு, இசைக்கருவிகள் இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் பயிற்சி செய்வது போன்றவற்றைக் கூறலாம். 


  இதன் மூலம் நம் திறமைகளை வளர்ப்பது மட்டுமன்றி, நமது மனமும் பலவழிகளில் சிதறாது ஒருமுகப்படுத்தப்படுகிறது. உள்ளத்தில் இனம்புரியாத ஆனந்தமும், தன்னம்பிக்கையும் தோன்றுகிறது. அத்துடன் நம் வாழ்க்கையை வண்ணமயப்படுத்துவதுடன், மனநிறைவையும் தந்து நாம் வாழ்வதன் அர்த்தத்தையும் நமக்குப் புரிய வைக்கிறது.

  3) நம் வாழ்வில் எவை வேண்டியன, எவை வேண்டாதவை என்பதை ஆற அமர இருந்து யோசித்து வேண்டாதவையைக் கழிக்கவும், வேண்டியவற்றைத் தேடவும் இந்தப் பொதுமுடக்க காலம் உகந்தது. அவை பொருட்களாக இருக்கலாம்; அல்லது உங்கள் நம்பிக்கை/கொள்கை போன்றனவாகவும் இருக்கலாம்.

  எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பு - வெறுப்புக்களை அலசி ஆராய்ந்து அவற்றை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் அரிய சந்தர்ப்பமே இந்தப் பொதுமுடக்க காலம். அதை உங்கள் கற்பனா சக்தியிடமே விட்டுவிடுகிறேன்! 

  4) வீட்டிலுள்ள உறவுகளுடன் நமது தொடர்பாடல் திறனை அதிகரிக்க நமக்குக் கிடைத்திருக்கும் கால அவகாசமாகவும் இந்தப் பொதுமுடக்க காலத்தைக் கொள்ளலாம். 'தொடர்பாடல் திறனா!' என நீங்கள் ஏளனமாக நகைக்கலாம். ஆனால் நம்மில் பலர் நினைப்பது போல நாம் தொடர்பாடலில் சிறந்தவர்கள் அல்ல. தினமும் தெரிந்தோ, தெரியாமலோ ஏராளமான தொடர்பாடல் தவறுகளைச் செய்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகள் சில சமயங்களில் பாரதூரமாகவும் இருக்கின்றன. எனவே சிறந்த தொடர்பாடல் திறனை வளர்ப்பதில் அதிக சிரத்தையையும், நேரத்தையும் தற்போது எடுத்துக்கொள்ளல் நீண்ட கால நோக்கில் மிகவும் பயனுள்ளது. ஆம், இது ஒரு மிகச் சிறந்த முதலீடு தான்!

  தொடர்பாடல் பற்றி YouTubeஇலும் பல்வேறு காணொளிகள் உள்ளன. அவற்றில் தரமானவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து கற்று உங்கள் தொடர்பாடல் திறனை விருத்தி செய்யலாம். இது பெரும் சமுத்திரம் போல் பரந்த விசாலமான விடயம். ஓரிரவில் வளர்த்துக் கொள்ளும் திறனல்ல. எனினும் இன்றே அதனைப் பயிற்சி செய்யத் தொடங்குதல் உங்கள் உறவு, நட்பு, சமூகத்துடன் நல்ல ஆரோக்கியமான உறவைப் பேண உதவும். (Search in YouTube 'Communication skills', 'listening skills' etc.)

  5) பொதுமுடக்க காலத்தில் நாம் வீட்டிலிருந்து அலுவலக வேலை பார்க்கும்போதோ, அல்லது சமையல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டுவேலைகளைச் செய்யும்போதோ பின்னணியில் அமைதிதரும் இசையை இசைக்கவிட்டுவிட்டு நம் கருமங்களை ஆற்றும்போது ஓர் நேர்மறையான சூழலில் இருப்பதாக உணர்வோம். இது நாம் செய்யும் கருமங்களை மனமொன்றிச் செய்ய உதவும். அது மட்டுமன்றி வீட்டுச் சூழல் நிம்மதியானதாகவும், நேர்மறை எண்ணங்களைத் தருவதாகவும் அமைய இனிய இசை உதவும். 

  YouTubeஇல் வீணை, வயலின், புல்லாங்குழல், சக்க்ஷபோன், பியானோ இசை வடிவங்கள் இந்தியா, சீனா போன்ற கீழைத்தேச இசைவடிவங்களிலும், இன்னும் பல மேலைத்தேச இசை வடிவங்களிலும் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. தவிரவும் எத்தனையோ meditation music கோர்வைகள் பலவும் மணிக்கணக்கான videoகளாக உள்ளன. (உங்களிடம் unlimited internet வசதி இருந்தால் இன்னும் நல்லது!) 
  அமைதியான இசை நாம் இருக்கும் சூழலை இனிமையானதாகவும், நிம்மதியானதாகவும் மாற்றவல்லது. 😊

  6) பிரார்த்தனை: வீட்டுப் பூஜை அறையிலோ அல்லது ஒரு அமைதியான இடத்திலோ அமர்ந்துகொண்டு சற்று நேரம் சுவாசப்பயிற்சி செய்து நம் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதிப்படுத்திக்கொண்டு, நமக்கெல்லாம் மேலான பிரபஞ்சப் பேராற்றலை / இறைவனை வணங்கிவிட்டுப் பின்வருவனவற்றை நாம் நமது கற்பனா சக்திக்கேற்பச் செய்யலாம்: 

  1. நன்றியுணர்ச்சியை வெளிக்காட்டுதல் - உதாரணத்துக்கு, நமக்கெல்லாம் சக்தியையும், வளங்களையும் தந்து நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி! இந்தச் சவாலான சூழலில் நம்மைக் காக்க இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் நாட்டு/நகர/பிரதேச நிர்வாகத்துக்கு நன்றி! வைத்திய நிலையங்களில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவர், தாதியர் போன்ற சுகாதாரத் தொழிலாளர்களுக்கு நன்றி! நம்முடன் கூட இருக்கும் உறவுகளுக்கு நன்றி! - இப்படி யாருக்கெல்லாம் நாம் நன்றி சொல்ல விரும்புகிறோமோ அதை நாம் உளமாரவும், உண்மை அன்புடனும் உணர்ந்து சொன்னால் நம்முள்ளேயே ஒரு பெரிய ஆத்ம திருப்தியும், நேர்மறை எண்ணங்களும் உருவாகும். இந்த உணர்வு நமது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம். 

  2. இதுபோலவே, 'மன்னிப்பு (கேட்டல்/கொடுத்தல்)', 'வாழ்த்துதல்' போன்ற ஏனைய நல்ல உணர்வுகளுக்கும் உங்கள் கற்பனா சக்தியைப் பொறுத்துச் செய்யலாம். இந்தப் பயிற்சி ஒரு வேடிக்கையானதாகவோ, கேலிக்குரியதாகவோ தோன்றலாம். எனினும் அதைப் பயிற்சி செய்து அனுபவித்தால் அவற்றின் நன்மை உங்களுக்கே புரியும். 😊

  7) பொதுமுடக்கத்தால்/பயணத்தடையால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில், எவ்வளவு தான் நாம் நேர்மறை எண்ணங்கள் மூலம் அதனைச் சமாளிக்க முயன்றாலும் ஒருவித சலிப்புத் தன்மை, வெறுமை, மன அழுத்த உணர்வு போன்றவை அவ்வப்போது தோன்றுவது இயல்பு. இந்த இயல்பான உணர்வுகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகினால் மேலும் மன அழுத்தமடைவதை நாம் தவிர்க்கலாம்.

  அது தவிரவும், பொதுமுடக்கத்தை எதிர்கொள்ளும் நம்மில் பலர் யுத்தகாலத்தில் ஊரடங்கிற்கு நன்கு பழக்கப்பட்டிருப்போம். அதே யுத்த காலங்கள் தாம் நம் சமூகத்திடையே நெருக்கமான நல்ல உறவுகளைப் பேண உதவின என்று சொல்வது மிகையல்ல. நமக்கெல்லாம் பொதுவான ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய அந்த யுத்தச் சூழலில் நாமெல்லாம் ஒற்றுமையாக உறவு, நட்புக்களை மதித்து கூட்டுறவாய் வாழ்ந்தோம். பின்னர் வந்த நுகர்வோர் கலாசாரம், அவசர வாழ்க்கை முறை இந்தக் கூட்டுறவு வாழ்க்கையைச் சாத்தியமற்றதாக்கிவிட்டது.

  எனினும் தற்போது நாம் எதிர்கொள்வதும் உலகளாவிய ரீதியில் ஒரு பெரும் யுத்த சூழ்நிலையைத்தான் - அதுவும் கண்ணுக்குத் தெரியாத அந்தக் கிருமி தான் நம் எதிரி. 

  எனவே ஊரடங்கு காலங்களைச் சமாளித்து  இன்றளவும் நலமாக வாழும் நாம் தற்போதய பொதுமுடக்க காலத்தையும் தைரியமாக எதிர்கொள்வோம். இதுவும் கடந்து போகும் என்ற உறுதியான மனநிலையுடன் பொதுமுடக்க விதிமுறைகளை மதித்து அநாவசிய ஊர் சுற்றல்களைத் தவிர்ப்போம் - இயன்றவரை வீட்டு வளாகங்களுக்குள்ளே இருப்போம். 

  உறவுகளை வளம்படுத்த அரிய ஓர் சந்தர்ப்பமாக இந்தப் பொதுமுடக்க காலத்தைப் பயன்படுத்துவோம். வீட்டிலுள்ள உறவுகளோடு செலவழிக்க நேரமில்லையே என்ற குறை முன்பு இருந்திருக்கும். எனவே தற்போது கிடைத்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். நிலைமை சுமுகமடைந்ததும் பின்னாளில் இப்படி ஓர் வாய்ப்பு அமையுமோ தெரியாது. எனவே நல்ல இனிய நினைவுகளைச் சேகரிப்போம். ❤️ அன்பே சிவம். ❤️
   

  8 ) 📖வாசிப்புப் பழக்கம்: இதில் நான் சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை. எனினும் இதை ஒரு நினைவூட்டலாக (reminder) எழுதுகிறேன். அதுவும் இந்த பொதுமுடக்க காலம் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவோ, மீள ஆரம்பிக்கவோ உகந்ததாக இருக்கும் என்பதாலேயே இதையும் குறிப்பிடுகிறேன்.

  வாசிப்புப் பழக்கத்தின் நன்மைகளையும் நான் சொல்லித் தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லை. எனினும் நினைவூட்டலாக சில நன்மைகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்:
  1. அறிவு வளர்ச்சி மட்டுமல்லாது, ஒரு மொழியில் ஆளுமையையும் வளர்க்கிறது. அதாவது வாசிப்புப் பயிற்சியால் புதிய சொற்களை, வசன அமைப்புக்களை, அவற்றை எந்தச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவைத் தருகிறது. வெறுமனே இலக்கணத்தைக் கற்பதாலும், சொற்களை மனப்பாடம் செய்வதாலும் எந்த ஒரு மொழியிலும் புலமை பெற்றுவிட முடியாது. இவற்றுடன் வாசிப்புப் பழக்கத்தையும் சேர்த்தல் மிகவும் அவசியமாகும். வாசிப்புப் பழக்கம் உங்களது மொழிப் பயிற்சியை துரிதப்படுத்துகிறது. உங்களுக்குப் பிடித்த விடயங்கள் சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பது அதனை இன்னும் துரிதப்படுத்தும். 

  2. மனமொன்றி வாசிப்பதில் மூழ்குவது ஒருவிதத்தில் தியானப் பயிற்சி போன்றது. 'அதே தியானமாக இருக்கிறார்' என்று பேச்சுவழக்கில் சொல்வது இதைத்தானோ என்று தெரியவில்லை! மனதை ஒருமுகப்படுத்த வாசிப்புப் பயிற்சி மிகவும் உதவுகிறது. நித்திரைக்குச் செல்லும் முன் தொலைக்காட்சி, செல்போன் இவற்றில் மூழ்குவதை விட, புத்தக வாசிப்பைச் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. நிம்மதியான உறக்கத்தைத் தரலாம்; கண்களுக்கும் பாதகமில்லை. 

  எனவே, பொதுமுடக்கத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் ஒரு வழியாக வாசிப்புப் பழக்கத்தையும் நடைமுறைப்படுத்தலாமே! 😊📚
   

  9) 🏃🏃‍♀️உடற்பயிற்சி: பொதுமுடக்கமல்லாத சூழ்நிலையில் பல்வேறு அலுவல்கள் நிமித்தம் ஓடியாடித் திரிந்த நமது இயக்கத்தை இந்த அசாதாரண சூழல் மட்டுப்படுத்துவதால் ஏற்படும் விசனம் இயல்பானதே. இதனை ஆரோக்கியமாகக் கையாளும் வழிமுறைகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருந்தேன். 

  எனினும், பலருக்குத் தெரிந்திருந்தாலும் நடைமுறைப்படுத்த தயங்கும் ஒரு செயல் இந்த உடற்பயிற்சியாகும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதன் அவசியம் தற்போது அதிகரித்துள்ளது. பொதுவெளிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நமது உடல் இயக்கத்துக்கு ஓரளவுக்கேனும் மாற்றீடே இந்த உடற்பயிற்சி. 

  வீட்டில் இருந்து நொறுக்குத் தீனிகளை அதிகம் உண்ணும் வாய்ப்பு இருப்பதால் நமது உடல் எடையும் அசாதாரணமான அளவுக்கு அதிகரிக்கலாம். எனவே உடற்பயிற்சி அவசியமாகிறது.

  பரந்த வளவுடன் கூடிய வீட்டில் வாழ்ந்தாலும் சரி, சிறு பிளாட்டில் வாழ்ந்தாலும் சரி நம் சூழலுக்கும், உடல்நிலைக்கும் உகந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இது பற்றிய பல காணொளிகள் YouTubeஇல் உண்டு. எனினும், அவற்றைப் பின்பற்றும்போது உங்கள் பொது அறிவையும் பயன்படுத்துதல் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள உதவும்! உங்கள் வைத்திய நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்றுனர்கள் போன்றோரின் ஆலோசனையை இந்த விடயத்தில் பெறுவது சிறந்தது. 😊

  10) 'சின்னச் சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே எங்கும் எங்கும் கொட்டிக் கிடக்கு!' என்ற சினிமாப் பாடலை நாம் கேட்டிருப்போம். அதன் அர்த்தம் இன்றைய காலத்தில் இன்னமும் ஆழமானதாகத் தோன்றுகிறது. எத்தனை பெரிய சவாலான சூழல் வந்தாலும், நம்மைச் சூழவுள்ள சின்னச் சின்ன நல்ல விடயங்களையும் ரசித்து அனுபவிக்கக் கற்றுக்கொள்வோம். 

  உதாரணத்துக்கு, வீட்டுத் தோட்டத்தில் உள்ள மலர்களின் அழகை ரசிக்கலாம்; அதைக் கவிதையால் வர்ணிக்கலாம்; கமராவில் படமாக்கலாம். 

  அவரவர் விருப்பங்களுக்கேற்ப ரசிக்கக்கூடிய ஏராளமான சின்ன விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்கு, வாய்க்கு, தோலுக்கு என ஐம்புலன்களுக்கும் விருந்தாகும் விடயங்கள் பல உள்ளன. அவற்றைக் கண்டறிந்து ரசிப்போம். 

  ஐம்புலன்களை அடக்க வேண்டியதில்லை; ஆரோக்கியமான முறையில் நெறிப்படுத்துதலே முக்கியம். நல்ல ரசனையாலும் அவை நெறிப்படுத்தப்படும் - நல்ல ரசனையும் ஒரு வித தியானமே! 😊

  ************************************

  நான் கற்ற, அனுபவித்து உணர்ந்த வகையில் மேலுள்ள தகவல்களை எழுதியுள்ளேன். 

  இந்த விடயத்தில் நம் எல்லோருக்கும் பயன் தரக்கூடிய உங்களது ஆலோசனைகளை / தகவல்களையும் கீழே பின்னூட்டமாகப் பதியலாம். 
   

  நன்றி 😊

   

   

  • Like 2
 11. 17 hours ago, மியாவ் said:

  ஆன்மீகத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே கருதுகிறேன்... 

  மியாவ்,

  ஆன்மீகம் நமது ஆன்மா சம்பந்தப்பட்டது. நம்மை உணர்தலும், சக உயிர்கள் உட்பட்ட இப்பிரபஞ்சத்துடனான நமது தொடர்பு பற்றிய அறிவையும் பற்றியது.

  ஆனால் விஞ்ஞானமோ பல்வேறு துறைகள் பற்றிய ஆராய்ச்சி முறைகளை உள்ளடக்கியது. அது உலகம் சார்ந்ததாகவோ பரந்துபட்ட பிரபஞ்சம் பற்றியதாகவோ இருக்கலாம். 

   

  17 hours ago, மியாவ் said:

  வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதனை ஊழ்வினை என்கிறோம்...

  ஐசக் நியூடன் ஒரு வினை ஆற்றினால் எதிர்வினை கண்டிப்பாக இருக்கும் என்பதனை குறிப்பிடுகிறார்... இதனை இயற்பியல் என்கிறோம்...

  ஆங்காங்கே overlaps இருக்கலாம். உங்களது உதாரணமும் அப்படி ஒரு இணைப்புப் புள்ளியே. பல துறைகளில் இப்படியான இணைப்புப் புள்ளிகள் இருக்கலாம்.

  தவிரவும், என் அறிவுக்கு எட்டியவரை ஆன்மீகத்துக்கும், உளவியலுக்கும் இணைப்புப் புள்ளிகள் அதிகம் என்பேன். 

  • Like 2
 12. On 7/5/2021 at 19:56, மோகன் said:
  On 7/5/2021 at 18:56, மல்லிகை வாசம் said:

  மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

  நன்றி 

  சரி செய்யப்பட்டுள்ளது

  நன்றி மோகன் அண்ணா. மீண்டும் இதே நிலை. பல நாட்களாக எதுவும் பதிவிடாததால் வந்த வினை!😀

  தயவுசெய்து நிவர்த்தி செய்வீர்களா?🙂

   

 13. 'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. 

  இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேறு விதமான வாழ்க்கை தொடர்பான பார்வைகள் உங்களுக்கோ எனக்கோ இருக்கலாம்; சமூக, உளவியல், பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்திலும் உங்கள் வாழ்க்கை தொடர்பான பார்வை இருக்கலாம். அவையும் அவசியமானவை தான். எனினும் என்னைப் பொறுத்தவரை இந்த தத்துவ, ஆன்மீக, கலைத்துவமான கண்ணோட்டங்கள் இந்த வாழ்க்கை, உலகம், பிரபஞ்சம் தொடர்பான விரிவான பார்வையை எனக்குத் தந்து ஒருவித சுதந்திரமான, நிம்மதியான, ஆனந்தமான உணர்வை பல நேரங்களில் அளித்து வருகின்றன என்பேன். 

  இங்கே ஆன்மீகம், தத்துவம் இவற்றுக்கும் நமது கலைகளுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம். ஆன்மீக, தத்துவ சிந்தனைகள் வறட்சியான, அர்த்தமற்ற விடயங்களாக அவ்வப்போது தோன்றும்; இவ்வுலக வாழ்க்கைக்கு அவை பொருந்தாததாக ஒரு பொய்த் தோற்றம் தோன்றும் பொழுதுகளில் கலை வந்து கைகொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை இசை, நடனம், ஓவியம், சிற்பம், நாடகம் போன்ற கலைகள் பொழுதுபோக்குக்கு மட்டுமானவை அல்ல; நான் மேலே குறிப்பிட்ட சலிப்பானவையாகத் தென்படும் ஆன்மீக, தத்துவ விடயங்களைக் கூட அவரவர் புரிதலுக்கும், ரசனைக்கும் ஏற்ப சுவாரசியமான விடயங்களாக மாற்றிவிடக் கூடிய வல்லமை இந்தக் கலைகளுக்கு உண்டு. உதாரணத்துக்கு, ஒரு தத்துவப்பாடலை வரிகளாக மட்டும் வாசிப்பதைவிட இசைப் பாடலாகக் கேட்டு ரசிப்பது அல்லது பாடி அனுபவிப்பது சுவாரசியத்தைத் தருவது மட்டுமன்றி அப்பாடலின் ஆழ்ந்த கருத்துக்கள் நம்மனதில் பதிந்துவிடவும் உதவுகின்றது. இப்படி உலகியல் வாழ்வில் தத்தளிக்கும் வேளைகளில் உலகியலுக்கும் ஆன்மீகம், தத்துவம் போன்ற பரந்துபட்ட, சுதந்திரமான, நிம்மதியான, ஆனந்தமான விடயப்பரப்புகளுக்கும் இணைப்புப் பாலமாக இக் கலைகள் விளங்குகின்றன. (ஆன்மீகம், தத்துவங்கள், கலைகள், ஆசாரங்கள் இவை கலந்தவை தான் மதங்கள் என்பது எனது இன்னொரு கண்ணோட்டம். இது பற்றி இப்போது விபரமாக எழுதாமல் தவிர்க்கிறேன்.)

  சுருங்கச் சொன்னால் சிலருக்கு மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் செய்யும் வேலையை ஆரோக்கியமான வழியில் கலைகள் செய்கின்றன!😀(கவி கண்ணதாசன் குடிபோதையில் தன் மனதில் தோன்றிய தத்துவங்களைப் பாடலாக வடித்தது வேறு விடயம். இருந்தாலும் கலைப் போதை தான், அவர் வாழ்வில் பட்ட கஷ்ட அனுபவங்களை தத்துவப் பாடல்களாக எழுத வைத்தன என்பதே நிதர்சனம்.) 

  இனி, இந்த ஆன்மீக, தத்துவ, கலை மீதான ஈடுபாடு எந்த வழிகளில் எனக்குத் துணை புரிந்துவந்துள்ளது என்பதை மிக, மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கை அனுபவங்களுடன் இவற்றைத் தொடர்புபடுத்திப் பார்த்தால் நான் சொல்ல வருவது நன்றாக உங்களுக்குப் புலப்படலாம் என நம்புகிறேன். 

  ஆன்மீக, தத்துவ, கலைசார்ந்த சிந்தனைகள்,
  1) வாழ்க்கை தொடர்பான தெளிவான, மிகப் பரந்துபட்ட பார்வையை எனக்குத் தந்து வாழ்க்கையில் எனக்கு எது முக்கியம், எந்த வாழ்க்கைப் பாதை எனக்குப் பொருத்தமானது, அர்த்தமுள்ள, நிம்மதியான, மனநிறைவான வாழ்வை எப்படி வாழ்வது போன்ற கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் பதில் தந்தன. (இன்னும் தேடல்களும், பதில்களும் இருக்கும்!)

  2) இவற்றில் மூழ்கித் திளைப்பதும் பல சமயங்களில் ஓர் அழகான நிம்மதியான சுதந்திரமான பயண அனுபவத்துக்கு ஒத்ததாக இருக்கும். குறிப்பாக, லொக்டௌன் காலங்களில் வீட்டில் இருந்து பாடினாலும் மனதில் ஏதோ உள்ளார்ந்த பயணம் செய்த உணர்வு. இதை வெளிப்புறப் பயணங்கள் கூட தந்திருக்குமா என்று கூட யோசித்ததுண்டு. சற்று நேர தியான, மூச்சுப் பயிற்சியும் இந்த அனுபவத்தை தந்ததுண்டு. 

  3) மனம் தளர்வுற்ற பொழுதுகளில் புகலிடமாகவும், தோழமையாகவும் இவை இருந்ததுண்டு. இவை மனம் சார்ந்த உணர்வுகள். நல்ல கலைப்படைப்பு ஒன்றில் லயித்திருப்பது நல்ல நண்பனுடன் நேரம் செலவிட்ட உணர்வைத் தரும்; இலக்கியமோ, இசையோ, நடனமோ, ஓவியமோ எதுவாகவும் இருக்கலாம். ஆன்மீக சிந்தனை ஓர் சுதந்திரமான, மனநிறைவான இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்று புகலிடமாக அமையலாம். தற்காலிக உணர்வு என்றாலும் அதன் பயன் அளப்பெரியது. தத்துவார்ந்த சிந்தனைகளும் அவ்வாறே.

  4) விஸ்தீரணமான இவ்வுலகிலோ அல்லது பிரபஞ்சத்திலோ அனைத்துவகையான ஜீவராசிகளுக்கும் ஓர் இடமுண்டு. ஆகவே நமக்கும் ஓர் இடமுண்டு என்ற நிம்மதியான உணர்வைத் தந்து அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்தன. பல்வேறு மதங்கள், தத்துவங்கள், கலை வடிவங்கள் போன்றன பல்வேறு வகையான மனிதர்களின், குழுக்களின் வெளிப்பாடே என்பதை உணரும்போது நாமும் அந்த மனித ஜாதியில் ஒருவர் தாம் என்ற பெருமிதம் ஒருபுறமும், கல்லாதது உலகளவு என்ற உண்மையை உணரும்போது நாம் ஒவ்வொருவரும் மட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டுள்ளோம் என்ற பணிவும் ஏற்படுகிறது.

  இவற்றை விட வேறு காரணங்கள் இருக்கலாம். இருந்தால் அவற்றைப் பின்னர் எழுதுகிறேன். 

  தவிரவும், கலை, தத்துவம், ஆன்மீகம் இவற்றில் மூழ்கித் திளைத்தலும் பேரின்பமே! இவற்றைக் கற்பதோ, இவற்றில் ஈடுபாடு கொள்வதோ, அந்த அறிவை பரஸ்பரம் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் இனிய அனுபவமோ வாழ்நாள் நீளம் கொண்டது; நம் வாழ்நாள் தான் அவற்றின் எல்லை. 

  வகுப்பறை, புத்தகங்கள், காணொளிகளையும் தாண்டிய கல்வி அது. வைரமுத்துவின் வரிகளில் "வானம் எனக்கொரு போதிமரம்; நாளும் எனக்கொரு சேதி சொல்லும்!" என்பது போல எல்லையற்ற பிரபஞ்சம் கற்பிக்கும் பாடங்களின் ஒரு சிறு பகுதியே நாம் கற்று அனுபவிப்பது. எனவே, இந்த ஆன்மீகம், தத்துவம், கலை சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு இருப்பின் அதைத் தாராளமாகத் தொடரலாம். அவை உங்கள் வாழ்க்கையை மேலும் வளப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஏனையோருக்கும் பயனுள்ளதாக அமையட்டும். 

  வாழ்க வளமுடன்! 😊

  நன்றி 🙏

  (குறிப்பு 1: இதை வாசிக்கும் பெரியோர் என்னைவிடப் பன்மடங்கு அனுபவசாலிகளாக இருப்பர். எனினும் இவை பற்றிய சிறியேனின் அனுபவப்பார்வை ஏனையோருக்குப் பயனுள்ளதாக அமையலாம் எனும் நோக்கில் இதை இங்கு பகிர்கிறேன். எனவே, பெரியோரே குறைகள் பொறுத்தருள்க!; ஏதும் தவறுகள் இருப்பின் உங்கள் கருத்துக்களைத் தாராளமாகத் தெரிவிக்கலாம். 

  குறிப்பு 2: ஆன்மீகம், தத்துவம், கலை என்பவை பரந்துபட்ட விடயப்பரப்புகள். இவற்றை இக்கட்டுரையில் மிகச் சரியாக வரையறை செய்ய இயலவில்லை. எனவே அவை சார்ந்த தேடலை உங்களிடமே விட்டுவிடுகிறேன். (தவிரவும் இது வாழ்நாள் நீளமான கற்றலும், அனுபவித்தலும் மட்டுமன்றி அவை மீதான ஆர்வமோ ஈடுபாடோ தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்தது.)

  குறிப்பு 3: நேரச் சுருக்கம், வாசிப்போரின் பொறுமை இவற்றை மனதில் கொண்டு மிக மிகச் சுருக்கமாகவே இவற்றை எழுதியுள்ளேன். ஏதும் தெளிவற்ற தன்மை இருந்தால் நீங்கள் அவற்றைக் கேள்விகளாக முன்வைக்கலாம்; நாம் எல்லோரும் கலந்துரையாடலாம்.

 14. On 3/1/2021 at 03:53, மோகன் said:

  நீண்ட காலத்திற்கு களத்தில் கருத்துக்கள் வைக்காத ஒருவர் பார்வையாளர் என்ற பிரிவுக்கு தானியங்கி நகர்த்திவிடுகின்றது. மீண்டும் அவர்கள் பதிவுகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு உறுப்பினர்கள் என்ற உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டாவது பொறிமுறை சரியாக இயங்காமையினாலேயே உறுப்பினர்கள் திருத்தங்களை மேற்கொள்ளவோ புள்ளிகள் இடவே முடியாதுள்ளது.

  மீண்டும் இக்குறை எனக்கு ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிவர்த்தி செய்வீர்களா மோகன் அண்ணா / நிர்வாகம்.

  நன்றி 

 15. On 24/4/2021 at 10:35, putthan said:

  எல்லோருக்கும் தனது சித்தாந்தங்களை இன,மொழி,மதம் கடந்து சமதர்மத்துடன் பரப்பி சோசலிச பார்வையுடன் சிவப்பு வெள்ளத்தில் மூழ்கடித்தான்.வென்றது அவனது புரட்சி ..

  👍

  • Like 1
 16. சிறு வயதில் பஞ்சதந்திரக் கதைகளை விரும்பிப் படித்ததுண்டு. அதில் சொல்லப்பட்ட நீதிகளை விட கதை என்ற அம்சமே அப்போது என்னைக் கவர்ந்தது. 

  இப்போது அவற்றை மீண்டும் படித்தால் இக்காலத்துக்கும் பொருத்தமான பல உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படும் என நினைப்பதுண்டு. 

  கால ஓட்டத்தில் நாம் பெறும் அனுபவங்கள் நமது கண்ணோட்டத்தையும் தொடர்ச்சியாக மாற்றி பல புதிய விஷயங்களை நமக்குக் கற்பிக்கின்றன.

  அந்த வகையில் உங்களது இந்தத் திரி என்னை மிகவும் கவர்ந்தது விசுகு அண்ணா. உங்கள் கோணத்தில் இருந்து நீங்கள் பார்த்ததை படிக்க நானும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள்.

  • Thanks 1
 17. இக்காலத்து நிதர்சனங்களைப் பதிவுகளாகத் தொடரும் குமாரசாமி அண்ணருக்கு மிக்க நன்றி. எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் அன்னைக்கு நிகரான சொந்தம் எதுவுமில்லை.

 18. 16 hours ago, பசுவூர்க்கோபி said:

  கடுகளவு உண்மையை

  மடுவளவு பெரிதாக்கி

  வதந்திய பரப்பிவிட்டு

  வாயமூடு நமக்கேன்-ஊர் 

  வம்பு என்று சொல்ல..

  தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. 

  முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. 

  கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன!

  விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.

   

   

   

   

   

  • Like 1
 19. 6 minutes ago, ஜெகதா துரை said:

  இப்படத்தை நான் எடுக்கவில்லை.

  நன்றி அக்கா. வித்தியாசமான நல்ல படங்களை இங்கு இணைக்கிறீர்கள்.

  மேலே மாங்காய்க்குத் தான் பகிடியாய் ஏதோ எழுதினேன். உங்களுக்கல்ல. தவறாக நினைக்க வேண்டாம் அக்கா. 

  11 minutes ago, நிலாமதி said:

  எப்படியும் பழம் விழுந்து தானே ஆகும்.? அவசரபட்டால்  இப்படித்தான் 😀

  ஆனாலும் அதன் வளர்ந்து முன்னேற வேணும் என்ற துடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு!

  • Thanks 1
 20. 1 minute ago, உடையார் said:

  சரியான பதில், பாராட்டுக்கள்👏, அதி விரைவாக கண்டு பிடித்துவீட்டீர்கள் விரைவை👍

  நன்றி உடையார். நானும் அவ்வாறே நினைத்தேன்! மற்றச் சொற்களை விட இதுவே விரைவாக நான் ஊகித்தது. 

  மொழி என்றதும் தமிழ் தான் நினைவுக்கு வந்தது முதலில். அதிலிருந்து கதவை ஊகித்தேன். பின்னர் கூகிழில் கதழைத் தேட வேகம் என்ற பொருளைக் காட்டியது. உடனே வேகமாக வந்து விடையைப் பகிர்ந்தேன் நிலாமதி, ஜெகதா அக்காமார், புங்கை அண்ணா கண்களில் பட முன்னம்! 😆

  • Like 1
 21. 9 minutes ago, உடையார் said:

  விரைவு

  முதல் நீக்கின் ஒரு மொழி நடுவிழந்து நிற்கின்றது

  கடை நீக்கின் வீட்டில் ஒரு பகுதி கடையிழந்து நிற்கின்றது

  கதழ் (விரைவு)

  த(மி)ழ் (நடுவிழந்த மொழி)

  கத(வு) (வீட்டின் ஒரு பகுதி)

  • Like 1
  • Thanks 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.