Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1,639
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by மல்லிகை வாசம்

 1. நீங்கள் இங்கு நல்லொழுக்கத்தைத் தானே குறிப்பிடுகிறீர்கள் பாஞ்ச் அண்ணா? ஒழுக்கமுடைய வாழ்க்கைமுறையை இடைவிடாது கடைப்பிடித்தால் முதுமையிலும் இளமையான மனதுடனும், திடமான தேக ஆரோக்கியத்துடனும் வாழலாம் என்பது தானே?
 2. நீங்கள் சொல்வது சரி அண்ணா. இதை எழுதியதால் நான் ஏதோ தடைகள் இல்லாமல், அவை எல்லாவற்றையும் எப்போதும் செய்கிறேன் என்று அர்த்தமல்ல! அத்துடன் நீங்கள் குறிப்பட்டபடி சமூகமும் தடையாக இருக்கலாம்; அதனால் தான் அவ்வப்போது கூட்டத்தில் இருந்து விலகி நின்று சிந்திக்க வேணும் என்பார்கள். அதற்கு மிகுந்த துணிச்சலும், மனவுறுதியும் அவசியம். இந்த lockdown / கொறோனா காலம் பலருக்குத் தனித்திருக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கும். நம் வாழ்வை மீளாய்வு செய்து தேவையற்றதைக் களைந்தும், புதிய நல்ல விடயங்களை உள்வாங்கியும் நம் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக, மனநிறைவானதாக மாற்றியமைக்க இக்காலம் ஓர் அரிய சந்தர்ப்பம். அவரவர்க்கு இயன்றவரை சிறு சிறு மாற்றங்கள் செய்தாலே அதன் பலன் நிச்சயம் உண்டு. 'தனித்திரு! பசித்திரு! விழித்திரு!' என்ற ஞானியர் வார்த்தையின் அர்த்தம் இந்த கொறோனா காலத்தில் நன்கு புரிந்தது! ('கூட்டத்திலிருந்து விலகிச் சிந்தித்து, அறிவுத் தேடலில் ஈடுபட்டுத் தெளிந்து ஓர் விழிப்புணர்வு நிலையில் இரு!' என்பதே இதன் பொருள்.)
 3. எம்மவர்கள் இப்படியான கலைகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைக்கிறேன். நம்மூரிலும் பல நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான உரிய மதிப்புக்கொடுக்கப்படுகிறதா எனத் தெரியவில்லை. நல்ல இசைக்கான பரந்துபட்ட ரசிகர்கள் கூட்டம் அங்கு இல்லை என நினைக்கிறேன். ஒரு காரணம், நாம் வைத்தியர், பொறியாளர், கணக்காளர், தகவல் தொழிநுட்ப வேலையில் உள்ளோர், அரசாங்க வேலையில் உள்ளோர் இப்படியானவர்களையே மதிக்கிறோம்; அப்படியான வேலைகளைத் தேடியே ஓடுகிறோம். ஒருவர் கலைத்துறை சார்ந்த கல்வியைத் தொடர விரும்பினால், Artஆ என ஏளனமாகப் பார்த்தும், அது உனக்குச் சோறு போடாது எனவும் கூறி அந்தக் கனவை வீணடித்துவிடுகிறோம். கலைத்துறை சார்ந்தோர் பொதுவாகவே வேலைக்காகத் திண்டாடுபவர்கள் என்பது உண்மை தான். கர்நாடக இசை போன்ற பாரம்பரிய இசைக்கு மதிப்பு பெரிதாக இல்லை; மக்களின் ரசனையும் குறைந்துவிட்டது. இதனால் தான் கலைஞர்களுக்கான தேவை மற்றய துறைகளை விட மிக மிகக் குறைவு. இருந்தாலும், வேலைவாய்ப்புக்காக ஓடுவது என்பதை மட்டும் வாழ்வின் இலட்சியமாக் கொள்ளாது, இசை போன்ற நல்ல கலைகளையும் பயிலுதல், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலை நிகழ்வுகளில் பங்கு பெறுதல் இவை மூலம் நம்மவர்களும் தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். மிக முக்கியமான ஒன்று பெற்றோர் தம் குழந்தைகளை சிறு வயதிலேயே இதற்காகத் தயார் பண்ணுவது; பல இந்தியர்கள் இதைச் செய்து தான் நல்ல பல இசைக் கலைஞர்களை உருவாக்குகிறார்கள். குழந்தைக்கு ஆர்வம் இருந்தால் அதை ஊக்குவித்து, நல்ல ஆசிரியர் ஒருவரிடம் முறையாகப் பயிற்றுவித்து, பிள்ளையும் அதை மிகுந்த ஈடுபாட்டுடன் இடைவிடாது பயின்று கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தினால் அதுவும் வளர்ந்து பெரிய கலைஞனாகலாம். ஆனால் புலமைபரிசில் பரீட்சை, சா/த, உ/த பரீட்சை, பல்கலைக்கழகம், தொழில், திருமணம், குழந்தை பெறுதல் என முடிவில்லாத வாழ்க்கை ஓட்டத்தில் பலரின் கலையார்வம் குன்றுகுறது/ முடக்கப்படுகிறது/ முற்றிலும் மறக்கடிக்கப்படுகிறது. இந்தியர்களுக்குள்ள இன்னொரு அனுகூலம், இசைப்பரம்பரையில் காலம்காலமாக ஊறி வந்த குழந்தைக்கு சங்கீதஞானம் இயற்கையாகவே வந்துவிடுகிறது. எனவே இசைக்கல்வி மூலம் அதனை வளர்த்து மெருகூட்டுவது எளிது. கூடவே அவர்களின் வாழ்க்கை முறையோடு கலந்தது இசை; திருமண விழாக்களில் இசைக்கச்சேரி முக்கிய அம்சமாக இருக்கும்போதும், சுப தினங்களில் இசை மூலம் இறைவனை வழிபடும்போதும், மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இசை பெரிதாகக் கொண்டாடப்படும்போதும் அச்சூழலில் வாழும் குழந்தையும் இசையை நோக்கி இயல்பாக ஈர்க்கப்படுகிறது. அது இசையைப் பயில சமூகம் ஊக்குவிக்கிறது; அது இசை நிகழ்ச்சி வைக்கும்போது சமூகம் கொண்டாடுகிறது. இதனால் இசைக்கலைஞர்கள் பலர் இந்தியாவில் உருவாவதும், கொண்டாடப்படுவதும் அதிசயமல்ல. அத்துடன் இன்று வளர்ந்துவரும் / புதிய கலைஞர்கள் கைவசம் வேறு தொழிலையும் வைத்திருக்கின்றனர். பலர் பகுதி நேரகமாக இசை நிகழ்வுகளை வழங்குகின்றனர். எனவே நம்மவர்கள் இசை போன்ற கலைகளை மதித்துப், பரந்த அளவில் கொண்டாடினால், அவற்றைப் பயில்வது ஊக்குவிக்கப்பட்டால், கலைஞர்களுக்கான வாய்ப்புக்களும் பெருமளவில் பல்வேறு நிகழ்வுகளில் வழங்கப்பட்டால் நம்மிலும் நல்ல பல கலைஞர்கள் உலக அரங்கில் பிரகாசிக்கமுடியும். இன்றைய இயந்திர வாழ்வில் மனிதத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தக் கலைகள் மிகவும் உதவும் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே கலைகளை இயன்றால் பயில்க, ஆற்றுகை செய்க! இல்லாவிட்டால் ரசித்தலுடன், ஊக்கமும் தருக!
 4. 'கிரிதர கோபாலா...' எம்.எஸ்.சுப்புலட்சுமி (பாடகி & நடிகை) மீரா திரைப்படம் (1945)
 5. 'வசந்தகால நதிகளிலே வண்ணமணி நீரலைகள்' மூன்று முடிச்சு (1976) எம்.எஸ்.வி|கண்ணதாசன்|ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம்.எஸ்.வி
 6. கோவில்கள் நிறைந்த நான் பிறந்த ஊரில் அதிகாலை கோவில் மணி ஓசையே நமக்கு அலாரம் போலாகும். அதிகாலை 4, 4:30, 5:00, 5:30 என மணியோசை ஒன்றுக்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து ஒலிக்கும். அப்போது கிடைக்கும் தெய்வீக உணர்வுநிலை மீண்டும் ஊருக்குச் சென்று அனுபவித்தால் தான் கிடைக்குமோ என்னவோ! இந்தப் பாடல் வரிகளும், மணியோசை போன்ற கணீர் குரலை உடைய சீர்காழி கோவிந்தராஜனின் குரலும், இசையும் என்னை என்னூரின் அதிகாலை வேளைக்குக் கொண்டு செல்கின்றன. கூடவே வருவன கள்ளம்கபடமற்ற சிறுவயது நினைவுகளும், அப்பருவத்தின் கவலைகளறியா மனநிலையும் தான்!
 7. நிச்சயமாக இவை பெரிய மாற்றங்களே. விஜய் சேதுபதியே மனதில் பெரிதும் நிற்கிறார். விஜய்க்குள்ளும் ஒரு நல்ல நடிகர் இருக்கிறார். மசாலாப் படங்களே வேண்டும் என்ற அவரது mainstream ரசிகர்களின் எதிர்பார்ப்புத் தான் அவர் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்பதற்குத் தடையாக இருக்கிறது. மாஸ்டரின் தாக்கம் இனிவரும் படங்களில் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
 8. முன்னர் இந்த மாறனின் விமர்சனங்களைப் பார்த்துவிட்டே படங்களுக்கு முன்பதிவு செய்வேன். ஆனால் சில நல்ல படங்களையும் விமர்சித்தபோது புரிந்தது, எல்லோரும் எப்போதும் நடுநிலையான விமர்சனங்களை வைக்கமாட்டார்கள் என்று. பல விமர்சனங்களைப் படிக்கலாம், பார்க்கலாம். இறுதியில் நமது பார்வையே நமக்கு முக்கியமானது.
 9. புரிகிறது நாதமுனி. வியாபாரத்தில் மட்டுமல்ல, எந்தத் துறையிலும் இந்தப் பார்வை உடையோருக்கு அவர்கள் தம்மையும் தாம் சார்ந்த துறையையும் வளர்த்துக்கொள்ளப் பெரிதும் உதவும். அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர், பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர், மருத்துவர் எனப் பட்டியல் நீண்டு செல்லும்! பல நாள் யோசித்த விடயங்கள். பல வினாக்கள். நிச்சயம் அவர் மூலம் இந்த சந்தேகங்கள் தீருமென நம்புவம்.
 10. நீங்கள் கூறியதில் 'திறமை வளர்த்துக்கொள்வது' என்ற கருத்துடன் உடன்படுகிறேன். நிச்சயமாகக் கடின உழைப்பின் மூலம் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் திறமை. நான் சொல்லவந்தது, பிறப்பினால் கிடைத்த திறமைக்கான அடிப்படைக் காரணிகளைப் பற்றி. ரிச்சர்ட் பிரான்சனை எடுத்துக்கொண்டால், அவர் பெரிதாகப் படிக்காவிட்டாலும் கூட படித்த குடும்பத்தில் பிறந்தமையால் திறமைக்கான சில காரணிகள் அவருக்குப் பிறப்பிலேயே இயற்கையாகக் கிடைத்திருக்கக்கூடும். அதற்காகத் தந்தை போல நீதிபதியாக வேண்டிய அவசியமில்லை. சட்டத்துறையில் அவருடைய தந்தைக்கு big picture view இருந்திருக்கக்கூடும். அவருடைய மகளுக்கு மருத்துவத்துறையில் இந்தப் பார்வை இருக்கக்கூடும். பிரான்சன் வியாபாரத்தில் அந்தத் திறமையைப் பயன்படுத்தினார். இதனுடன் உழைப்பின் அளவும், கிடைத்த வாய்ப்புக்களும், timingம் ஒவ்வொருவரின் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும். ஏனைய திறமைகள் அவருடைய தாயார் மூலமோ, பாட்டன், முப்பாட்டன் மூலமோ பிறப்பினால் வந்து அவையும் அவருக்குக் கைகொடுத்திருக்கும். ஒரு திறமையை வளர்க்க அது மரபணு மூலம் ஒருவருக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதும், அப்படிக் கிடைக்காத ஒன்றை வளர்க்க முடியாது என்பதும் எனது கருதுகோள். (உயிரியல் விஞ்ஞானத்தில் வல்லவர்கள் யாராவது இதைப் பற்றித் தெளிவுபடுத்தவும். தவறென்றால் சொல்லவும்.). ஆகவே, எனது கண்ணோட்டத்தில், பிறப்பால் வராத ஒரு திறமையை வளர்க்க முடியாது; பிறப்பில் இயற்கையாக வந்தது என்பதற்காக அதை உழைப்பின் மூலம் வளர்க்காவிட்டாலும் அது தானாக வெளிப்படாது. பிறப்பால் பல திறமைகள் கலவைகளாக ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளன; ஆனாலும் எல்லோரிடமும் எல்லாத் திறமையும் இருப்பதில்லை. கலவைகளாகப் பல திறமைகள் இருந்தாலும் கல்வி, அனுபவம், உலகத்துக்கு அவற்றுக்கான தேவை, கிடைத்த வாய்ப்புக்கள், பெற்றோரின் வளர்ப்பு இவையெல்லாம் சேர்ந்தே அவற்றில் எந்தத் திறமைகள் தனியாகவோ, கலவையாகவோ வளர்க்கப்பட்டு ஒருவரைப் பிரகாசிக்கச் செய்யும் என்பது எனது நம்பிக்கை. இது நான் வாசித்து, அனுபவபூர்வமாக உணர்ந்து, பிற மனிதர், குடும்பங்களை அவதானித்து உருவாக்கிய கருதுகோள். மீண்டும், யாராவது உயிரியல் நிபுணர்களின் உதவி இங்கு தேவை. தெரிந்தால் இதற்கு மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டவும். நன்றி
 11. உங்கள் ஊகங்களுடன் உடன்படுகிறேன் கோஷன். அவுஸில் முதல் முறையாகக் காலடிவைத்த முதல் ஐரோப்பியரான ஒல்லாந்தர் (தற்போதய நெதர்லாந்து) ஓரிரு தடவை இங்கு வந்துவிட்டு இங்கே குடியேற்றங்கள் அமைக்கும் எண்ணத்தைக் கைவிட்டதன் காரணமாகச் சொல்லப்பட்டவை: அவர்களின் வர்த்தக, ஆதிக்க நோக்கங்களைப் பூர்த்தி செய்ய அவுஸ் உகந்த இடமல்ல. பழங்குடிகள் பற்றிய பயமும், அவுஸ் எந்தளவு பரந்துவிரிந்த தேசம் என்பதை அவர்கள் அறிந்திராமையும் மேலதிக காரணங்களாக இருக்கலாம். பின்னர் வந்த பிரித்தானியரின் துணிச்சல் அவர்களுக்கு இருக்கவில்லை. (அவுஸின் பழைய பெயர் New Holland என்பது மேலதிக தகவல்!).
 12. 'பொன்னியின் செல்வன்' நாவலாசிரியர் கல்கியின் அருமையான வரிகளிலும், நித்யஶ்ரீ மகாதேவனின் தேன் குரலிலும்... பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மாமயில் மீது மாயமாய் வந்தான். பொன்முகம் அதனில் புன்னகை பொங்க இன்னமுதென்ன இன் மொழி பகர்ந்தொரு மின்னலைப்போலே...மறைந்தான். பனி மலரதனில் புது மணம் கண்டேன் வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன் தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன் தனிமையில்...இனிமை கண்டேன். வீரவேல் முருகன் மீண்டும் வருவான் வள்ளி மணாளன் என்னை மறவான் பேரருளாளன் எனக்கருள்வானெனும் பெருமிதத்தால் மெய் மறந்தேன்!
 13. நான் முன்னர் குறிப்பிட்ட time & space போன்ற புறக்காரணிகள் தவிர்த்து / அவற்றை விடவும் முக்கியமானது நீங்கள் குறிப்பிட்ட big picture view. அல்லாவிடின் lockdownல இருக்கும் எல்லாரும் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருப்பார்கள்! (நியூட்டன் ஆராய்ச்சியில் மூழ்கிக் கண்டுபிடித்தார்; ஆனால் lockdownஆல் பலர் மன அழுத்தத்துக்குள்ளாகி வேறு பல பாதகமான முடிவுகளைத் தேடினர்!) கல்வி, வளர்ப்பு, அனுபவங்கள் இவை தவிரவும் ஒருவரின் பிறப்பிலும் இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். சில திறமைகள், குணாதிசயங்கள் பெற்றோர் மற்றும் முன்னைய மூதாதையர் மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம். Big picture viewம் பிறப்பாலும், வளர்ப்பு, கல்வி, அனுபவங்கள் மூலமாகவும் ஒருவருக்குக் கிடைத்திருக்கலாம். இந்தப் பார்வையுடன், கடின உழைப்பும், timeம், spaceம் சேர்ந்தால் நமக்குப் பொருத்தமான துறையில் நாம் பிரகாசிக்கலாம் என்று கொள்ளலாமா!
 14. தகவலுக்கு நன்றி கோஷன். '1787' என்ற தலைப்பில் இங்கு வெளியான புத்தகத்தில் மக்காசர் உட்பட ஏனைய வெளிநாட்டவரின் ஆரம்பகால வருகையையும், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த உலக வல்லரசுகள் பற்றியும் பல சுவாரசியமான தகவல்கள் உண்டு. கிடைத்தால் நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.
 15. அவர்களது இந்தத் தாக்கம் அபோறிஜினல் இசையிலும் உள்ளதாக ஒரு யூரியூப் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகம். அது மக்காசர் முஸ்லிம்களது தாக்கமா அல்லது அரேபிய முஸ்லிம்கள் நேரடியாக அரேபியாவிலிருந்து அவுஸ்திரேலியாவின் வடபகுதியின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் குடியேறியதன் (?) தாக்கமா என்று நான் ஆராயவில்லை. ஐரோப்பியர் தென்கிழக்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தமுன்னர் அரபுதேசத்தவர்கள் அங்கே பலம்பெற்றிருந்தனர். இது 15ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னராக இருக்கக்கூடும். அநேகமாக இந்தோனேசியாவின் ஒருபகுதி முஸ்லிம்களான மக்காசர் இவர்களது வழித்தோன்றலாக இருக்கவேண்டும். இந்த மக்காசர் எப்போது அவுஸ்திரேலியாவிற்கு முதலில் வந்தனர் என்பது பற்றிய தெளிவான தகவல் நான் அறிந்தவரை இல்லை. வெள்ளையர்கள் வரத் தொடங்கியபோது தான் இந்த ஆண்டுக் கணக்கெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப்பட்டன. அதற்கு முன்னர் வந்த மக்காசரின் வழித்தோன்றல்கள் நாகரீக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த அபோறிஜினல்கள் வாழ்க்கைமுறையைப் பின்பற்றியதால் அவர்கள் அந்த ஆண்டுக் கணக்கை நினைவில் வைத்திருந்து தம் வழித்தோன்றல்களுக்குச் சொல்லியிருப்பரோ என்பதும் சந்தேகமே. இது பற்றிய குறிப்புக்கள் இந்தோனேசியாவில் மக்காசர் வாழ்ந்த பகுதியில் இருந்தோரிடம் இருக்கலாம். அந்த முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கை பதிவு செய்திருக்கக் கூடும். என் மனதில் எழுகின்ற இன்னொரு கேள்வி 'மக்காசருக்கும் முன்னர் அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனரா' என்பதே. இப்படிப் பல வினாக்கள். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 14ஆம், 15ஆம் நூற்றாண்டுகள் கூட வரலாற்றுக்கு முற்பட்ட புராதன காலம் தான். எனவே இந்த ஆராய்ச்சி மிகச் சிக்கலானது. இவை பற்றிய மேலதிக தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் இங்கேயோ இன்னொரு திரியிலோ பகிர்ந்து கொள்ளும்படி வேண்டுகிறேன். (ரொம்ப முக்கியம் தான்! ஹி ஹி...) அடிலெய்ட்டில் வசித்த காலத்தில் தூரத்தில் அந்த ரயிலைப் பார்த்திருக்கிறேன், நிறையத் தடவை விளம்பரங்களிலும் பார்த்துண்டு. The Ghan Express. வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்ததுண்டு. ஆனால் இந்த வரலாற்றை நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.
 16. நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை. எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு! சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்! https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535
 17. நான் இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. வாட்ஸ்ஆப், யூரியூப் இவை போன்ற சமூகவலைத்தளங்களில் வரும் நம்பகத்தன்மையில்லாத தகவல்களைத் தொகுத்து, சிறுபிள்ளைத்தனமாகப் படத்தை எடுத்திருக்கறார்கள் என்பதே பல விமர்சகர்களின் பொதுவாக கருத்து. நன்றாகக் கள ஆய்வு செய்து எடுத்திருந்தால் சொல்லவந்த நல்ல நோக்கமும், ஜெயம் ரவி போன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்கும் நடிகரின் உழைப்பும் வீணாகியிராது என்கிறார்கள்.
 18. Time & space இரண்டும் creativityக்கு அவசியம் என எங்கோ கேட்ட ஞாபகம். Lockdownல் கால அவகாசமும், சக மனிதரது சிந்தனைகள், கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்படாத தனிமையான ஓர் இடமும் நியூட்டனின் சிந்தனாசக்தி தங்குதடையின்றித் தொழிற்பட்டு உலகிற்குப் பயனுள்ள விடயங்களைக் கண்டுபிடிக்க உதவியிருக்கிறது. இன்னொரு விதத்தில், உலகத்தின் தேவையும், நியூட்டனின் சிந்தனாசக்தியை ஏதோ வழியில் பயன்படுத்தவேண்டும் என்ற அவருக்கான தேவையும் தகுந்த இடம், நிறைவான கால அவகாசம் இவற்றின் துணையோடு அவரைத் தூண்டியிருக்கும் என்றும் கொள்ளலாமோ! என்னைச் சிந்திக்கவைத்த பதிவுக்கு நன்றி நாதமுனி.
 19. அருமையான திரி அண்ணை. இன்று தான் நான் கவனித்தேன். இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு 80களின் நிறைவுப்பகுதிகளிலும், 90களிலும் நம்மூரில் நிகழ்ந்த திருமணக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்றிருந்த அளவு குதூகலம் இன்றைய கொண்டாட்டங்களில் இருக்கிறதா என்பது ஐயமே. பாடல்வரிகள் தாமாகவே அந்த இனிய உணர்வுகளைப் பேசுவதால் விரிவாக எழுதவேண்டிய அவசியமில்லை.
 20. 'கண்டேன்... கண்டேன்... கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா!'
 21. 'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா!' 'என் அண்ணன்'|K.V.மகாதேவன்|கண்ணதாசன்|ரி.எம்.எஸ்
 22. 'உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்'
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.