Jump to content

மல்லிகை வாசம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1662
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by மல்லிகை வாசம்

  1. 1) இந்தோனிஸியா (18000ம் அதிகமான தீவுகள்) 2) யு.எஸ் ( ??? )
  2. ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள், இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம் இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்! 'என் சோகத்தை மறக்கச்செய்த இயற்கையே உனக்கு நன்றி... உனை வருத்தி என்னை கூட்டி வந்த கால்களே உனக்கும் நன்றி... என் நிலை அறிந்த மூளையே உன் சிந்தனைக்கு கோடி நன்றி...' என்று நன்றி கூறி மகிழ்ந்தது எந்தன் தெளிந்த மனம்
  3. துள்ளினான் காளை இவன் - தன் உள்ளம் அள்ளிச் சென்ற கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர.. அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம் கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால், புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான்.
  4. அன்றொருநாள் பொன் அந்தி மாலை நேரம் அமைதியான அழகு கடற்கரை ஓரம் அன்பே நீயும் நானும் அமர்ந்திருந்து ஆசை மொழி பேசி மகிழ்ந்த நினைப்பிருக்கா? 'விரிந்த அந்த வான வெளியினிலே பறந்த ஜோடி பறவைகள் போல் - கவலை மறந்து உன்னுடன் நான் உலகை ரசிப்பேன்' என்று உறவே நீ அன்று சொன்னது நினைவிருக்கா? 'அருகே நின்ற இரட்டை தென்னை மரங்களாய் ஒரு கணமும் உயிரே நான் உன்னை பிரியாது ஈருடல் ஓருயிராய் வாழ வேணும்' - அன்பே உருகி நானும் சொன்ன வார்த்தை நினைப்பிருக்கா? கடலின் கரை சேரா அந்த படகு போல - உன் காதலி நானிங்கே உனை சேர ஏங்குகிறேன். கசக்கி எறிந்த ஓவியம் போல் என்னை நீயும் எறிந்தாலும் - நம் காதலை நான் மறக்க மாட்டேன் என்னுயிர் வாழுமட்டும்.
  5. நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு பலர் இந்நூலை முன்பே ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும். என்றாலும் இதைப்பற்றி அறியாதவர்களுக்காக இந்த குறிப்பை எழுதுகிறேன். நான் இங்கு எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் விரும்புவது நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்து உணர்ந்து பயன் பெறுவது தான். 'Seven Habits Of Highly Effective People' என்பதுதான் இந்த புத்தகத்தின் பெயர். அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் ஆர். கொவே (Stephen R Covey) ஆல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் 1989ல் வெளியானதிலிருந்து இற்றை வரை 15 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (துரதிஷ்டவசமாக, தமிழில் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை). அவ்வளவிற்கு இந்த புத்தகம் ஏன் பலரை கவர்ந்த்தது என்பதை நான் இதை வாசித்தபோது உணர்ந்து கொண்டேன். நமது அன்றாட வாழ்க்கையில் நாம் முகம் கொடுக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வுகாண இப்புத்தகம் உதவிபுரிகிறது. (உண்மையில் இப்புத்தகம் உளவியல் சார்ந்த புத்தகம்). அப்படியென்றால், ஒவ்வொருவருடைய வாழ்வில் எற்படும் குறிப்பான பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு இந்த புத்தகத்தில் உண்டு என்று அர்த்தம் அல்ல. ஆனாலும், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள இப்புத்தகம் உறுதுணையாக இருக்கும். இப்புத்தகத்தின் சாராம்சம் என்ன என்று சொல்வது மிகக்கடினம். எனென்றால், என்னை கவர்ந்த, வியக்கவைத்த நிறைய கருத்துகள் இப்புத்தகத்தில் உண்டு. புத்தகத்தின் தலைப்பு சொல்கிறபடி நாம் செய்யும் கருமங்களை மேலும் வினைத்திறனுள்ளதாக செய்வது எப்படி, அன்றாடம் நாம் மற்ற மனிதர்களுடன் பழகும்போது வரக்கூடிய சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பவற்றை உதாரணமாக குறிப்பிடலாம். எல்லவற்றையும் இங்கு எழுத நேரமும், பொறுமையும் இல்லை. எனவே நீங்களே இந்நூலை வாசித்து உணர்தல் பிரயோசனமாக இருக்கும். நூலாசிரியர் சொல்வது போல, இங்கு சொல்லப்பட்ட பல விஷயங்கள் 'Common Sense' தான். ஆனால், Common Sense எல்லாம் Common Practice (பொதுவாக பழக்கத்தில் உள்ளவை) அல்ல. இப்புத்தகதை எனக்கு பிடித்த காரணம் ஏன், எப்படி, எப்போது இப்பழக்கங்களை கையாள்வது என்று மிக ஆழமாக கருத்துகளை சொன்ன விதம் தான். இப்புத்தகத்தின் பிரதிகள் அனேகமான நூலகங்களில் கிடைக்கும். எனவே, வாங்க வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனாலும், என்னை பொறுத்தவரை இதை புத்தகம் என்று சொல்லவதை விட, நல்ல ஒரு ஆசான், வாழ்க்கை முழுவதும் கூட வரும் தோழன் என்று சொல்லுவேன். எனவே, இரவல் எடுத்து வாசியுங்கள். பிடித்தால் வாங்கலாம்.
  6. ***உனக்கு என்ன தெரியும் என்பதை விட, உனக்கு யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியமானது. நீ சந்திக்கும் மனிதர்கள் புத்தகங்கள் போல நிறைய அறிவை, விஷயங்களை தருவார்கள். ***முயற்சி செய்யவில்லையே என்று வருத்தப்படுவதன் வலியானது, விடாமுயற்சியின் வலியை விட மிகவும் வேதனை தரக்கூடியது. எனவே, விடாமுயற்சி செய். ***ஒரு விஷயத்தை தெரிந்தால் மட்டும் போதாது. அதனை நடைமுறையில் பயன்படுத்தவும் தெரியவேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படாத விஷயம், உனக்கு அந்த விஷயம் தெரியாமல் இருப்பது போலானது. ***வழிகாட்டும் ஒளியாக இரு (உனக்கோ, உன்னை சூழ இருப்பவர்களுகோ); உன்னையோ, மற்றவர்களையோ விமர்சிக்காதே
  7. கனடா, சீனா என்பது சரியான விடை. நன்றி
  8. உலகிலேயே பரப்பளவில் 1வது பெரிய நாடு ரஷ்யா. 2வது, 3வது நாடுகள் எவை?
  9. நன்றி தமிழ்சிறி, நுணாவிலான்... கோலா எனப்படும் கரடி சரியான விடை... குரங்கு??? சரியா என தெரியவில்லை... எமது மூதாதையர் என்ற ரீதியில் சரியாக இருக்குமோ தெரியாது... தேடிப்பார்க்கிறேன்...
  10. எந்த விலங்கின் விரல் ரேகையின் அடையாளம் (fingerprint), மனிதனின் விரல் ரேகை அடையாளத்தை வடிவத்திலும், உருவத்திலும், கோலத்திலும் (shape, size & pattern) மிகவும் ஒத்தது?
  11. கந்தப்பு அண்ணைக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எந்த நாளும் இந்த நாள் போல் நல்லா இருக்க இறைவன் அருள் புரிவார்.
  12. உறவுகளுக்கு இனிய வணக்கங்கள். யாழ் களத்தின் ரசிகன் நான். இங்கு நான் படிக்கும் பல கருதுக்கள் என்னை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. ஆனால், நான் இன்று தான் யாழில் இணைந்தேன். எனது கருத்துகளை எழுத விரும்புகிறேன். மட்டுறுதினரின் அனுமதிகாக காத்திருகிறேன். தயவுசெய்து அனுமதி தருவீர்களா? நன்றி
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.