Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

zuma

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  632
 • Joined

 • Last visited

Everything posted by zuma

 1. ஹாரி ஆனந்தசங்கரிக்கு ஒரு அமைச்சர் அல்லது துணை அமைச்சர் பதவி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
 2. நான் உட்பட பலரும் பெரும் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு ஜஸ்டின் ட்ரூடோ மீது கடுப்பில் தான் இருந்தோம். ஆனால் கன்சர்வேடிவ் கட்சியின் ஆளுகைக்கு உட்ப்பட்ட Alberta மாகாணத்தில் கோவிட்டை கட்டுப்படுத்துவதில் படுமோசமாக தோல்வி கண்டு உள்ளார்கள். அறியப்படாத தேவதையை விட அறியப்பட்ட பிசாசு நல்லது என அய்யாதுரைக்கு (JT) வாக்களித்து உள்ளனர். அதைவிட டிரம்பை போல் கடும் வலதுசாரியான Maxime Bernier அவர்கள் கன்சர்வேடிவ் வாக்குகளை பிரித்துள்ளார். எதிர் காலத்தில் எதுவும் நடைபெறலாம்
 3. நேற்றைய தேர்தலில் உண்மையான தோல்வியாளர் பசுமை கட்சி ஆகும். அதன் தலைவர் Annamie Paul அவர்கள் தனது கனவரின் மதமாகிய யூத மதத்துக்கு அண்மையில் மாறியவர் ஆவார் , அத்துடன் zionism எனும் தீவிர இஸ்ரேல் சார்பு நிலை கொண்டவர்.
 4. ஜஸ்டின் ட்ரூடோவினால் சட்டபூர்வமாக்கப்பட்ட சிவமூலிகை அடிச்சு போட்டு சொல்லியிருப்பார். ஜஸ்டின் ட்ரூடோ, சர்தார்ஜின் உதவியுடன் ஆட்சி அமைக்கவுள்ளார்.
 5. எதிர் பார்த்தது போல், ட்ரூடோவின் தாராளவாத கட்சி சிறுபான்மை அரசாங்கமாக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் டோரோண்டோ, மொன்றியல் .பகுதிகளில் அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளார்கள்.
 6. ஐயா.. அது நையாண்டியாக சொன்ன கருத்து. இந்த அறிவியல் வளர்ந்த காலத்திலும், சில விசில் அடிச்சான் குஞ்சுகள் இன தூய்மைவாதத்தை உண்மை என நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
 7. ஜனாதிபதி கோட்டா... தனது தாய் நாட்டை சென்றடைந்தார், என தலையங்கம் வந்து இருக்க வேண்டும்.
 8. யாழ்ப்பாணத்தில் எங்கட பக்கத்தில் திருவலை பலகை என அழைப்போம். துருவுபலகை மருவி திருவலை பலகை ஆகியிருக்க கூடும்.
 9. கனேடிய பாராளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை( நாளை ) நடைபெற இருக்கின்றது. தாராளவாத கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது, சனநாயக(NDP) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இம்முறை பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுற்றுச்சூழல், வீட்டு வசதி என்பன முக்கிய தொனிப்பொருட்களாக இருக்கின்றது. கனேடிய மாகாணங்களும், அவற்றின் ஆசன எண்ணிக்கையும். மொத்த ஆசன எண்ணிக்கை 338 ஆகும், பெரும்பான்மைக்கு 170 இடங்களின் வெல்லப்பட வேண்டும். மேற்கு பகுதி Alberta – 34 seats British Columbia – 42 seats Manitoba – 14 seats Saskatchewan – 14 seats மத்திய பகுதி Quebec – 78 seats Ontario – 121 seats கிழக்கு பகுதி New Brunswick – 10 seats Newfoundland and Labrador – 7 seats Prince Edward Island – 4 seats Nova Scotia – 11 seats பாரம்பரியமாக மேற்கில் பழமைவாத கட்சிக்கும், கிழக்கில் தாராளவாத கட்சிக்கும் அதிக ஆதரவு உண்டு. ஆனால் , வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது மத்திய பகுதியாகும், அங்கே தான் அதிக ஆசனங்கள் உள்ளன. இலங்கையில் பிறந்து வளர்ந்து, பல்கலை கழக கல்வியை முடித்து, 6 வருடங்கள் வேலை செய்தும், ஒரு தடைவை கூட தேர்தலில் வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், குறைந்த வருடங்கள் கனடாவில் வாழ்ந்தாலும், இங்கே வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைக்கப் பெறுள்ளது, எனது சனநாய கடமையை மீண்டும் செய்ய ஆவலாய் உள்ளேன். உசாத்துணை: https://newsinteractives.cbc.ca/elections/poll-tracker/canada/
 10. என்னையா இந்த நாடு, மதுபான சாலைகள் திறக்க அனுமதி அளித்துள்ளார்கள், ஆனால் பட்டமளிப்புக்கு அனுமதி மறுத்துள்ளார்கள்.ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் முடிவு எடுப்பவர்கள் பயங்கர அறிவாளிகள். வழமையான ஆடம்பர விழாவாக இல்லாமல், சாதாரணமாக நடத்த அனுமதி அளித்திருக்கலாம்.
 11. முதலுக்கே ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள், என்ன அண்ணா...
 12. மற்றைய இனக் குழுமங்கள் எல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து வந்தவர்கள்.நாமெல்லாம் லெமூரியா கண்டத்தில் இருந்து, மண் தோன்றா, கல்தோன்றா காலத்தில் தோன்றிய தூய இனக் குடிகளாகும். தக்கன பிழைக்கும் என்பது கூர்ப்புக்கும் மாத்திரம் அல்ல, இருப்புக்கும் பொருந்தும்
 13. முதலுக்கும் மோசம் செய்ய சிறிலங்கா அரசாங்கம், வழிவகை செய்யுது. நல்ல காலம் 2019 இல் சென்ற போது NRFC கணக்கை மூடிப்போட்டன்.
 14. களத்தில் கன பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் போல் உள்ளது, பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம் பெறவேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் தடுப்பூசி எடுத்தும், சமூக இடைவெளியை பேணியும் எல்லோரும் கவனமாக இருக்கவும்.
 15. அப்பாக்களின் கதை என்னையும் நனவிடை தோய வைத்து விட்டது. எனது அப்பாவும் மன்னாரில் ஆசிரியராக வேலை பார்த்தவர், 1984 ஆண்டு மன்னார் படுகொலை வரை.அப்படுகொலையில் அரும்பொட்டில் தப்பியவர் . இக்கதையில் வரும் அநேக சம்பவங்கள் எனது குடும்பத்துடன் ஒத்து போகின்றது.
 16. இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 மாதக் காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளார். மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/நியமனக்-கடிதத்தை-பெற்றார்-கப்ரால்/175-280940 இடி அமீன் படத்தில் இருந்து ஒரு காட்சி, தற்போது இலங்கை நிலைமைக்கும் சரியாக பொருந்துகின்றது.
 17. வெளிநாட்டு உள்ளாடைகள் அவசியமா எனக் கேக்கும் அரசியல்வாதிகள், பகிரங்கமாக தமது கீழ் ஆடைகளை கழற்றி தாம் போட்டு இருப்பது உள்நாட்டு ஜட்டியா, வெளிநாட்டு ஜட்டியா என பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.
 18. பாவனையில் இல்லாத பொருளுக்கு ஜட்டி அணிந்தோ, அனியாவிட்டாலோ எல்லாம் ஒன்றுதான்.
 19. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் தூய்மைவாதம் பேசுபவர்களை, நல்ல மனநல மருத்துவரிடம் அனுப்பி அவர்களின் மண்டையை சோதிக்கவேண்டும்.
 20. அப்பன்ர பெயரை மண்ணாக்கிடாதை என்றுதான் ஜீவானந்தம் சேர் பூசை தருவார். அப்பாவை கறிக்கடைக்கிளை கண்டால், மகன் கொங்சம் குழப்படி கவனித்துக்கொள்ளும் என்று சொல்லுவார், மிகுதி பூசை வீட்டிலேயும் தொடரும். நம்மில் பலபேர் பிற்றோ ஹால்(Peto Hall) காலை அசம்பிளியில் ஒன்றாய் இருந்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.
 21. யாமும் அங்கே தான் குப்பை கொட்டினோம், அவருடைய தம்பியின் வகுப்பு.
 22. சுளகின் பல technical விடயங்களை அங்கத சுவையுடன் எழுதியுள்ளார். இவர் பரி.யோவான் கல்லூரி 92 உயர்தர மாணவனா?.
 23. ஏதோ, ராகவன் அவர்கள் மனைவியுடன் படுக்கை அறையில் இருந்ததை எவனோ ஒருவன் திருட்டுத்தனமாக ஜன்னல் வழியே வீடியோ எடுத்து வெளியிட்டால் எப்படி கொந்தளிப்பாரே, அப்படி கொந்தளிக்கிறார் அண்ணாச்சி சீமான் . இங்கு குற்றசாட்டே கட்சியை சார்ந்த பெண் ஒருவரை, தமது செல்வாக்கை பயன்படுத்தி இச்சைக்கு உள்ளாக்கினார் என்பது தான்.அது கூட யாரும் வெளியிலிருந்து வீடியோ எடுத்ததல்ல.அவரின் செல்ஃபோன் மூலம் வீடியோ உரையாடல் நடத்திய காட்சி தான் கசிந்திருக்கிறது. தவிர, இந்துக்கள் புனிதம் என கருதும் பூஜையறையை அதற்கு பயன்படுத்தியது அவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அப்படி இருக்கையில், யாரும் செய்யாததையா செய்தார் என்று இவர் கேட்பதன் பொருள் என்ன?.அரசியலில் இருப்பவர்கள் அனைவருமே தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி இது போன்று கட்சி பிரமுகர்களிடம் அத்துமீறுவார்கள் அதெல்லாம் சகஜம், அதை கண்டுகொள்ள கூடாது என்று சொல்ல வருகிறாரா சீமான் அவர்கள்? சம்மந்தப்பட்ட ராகவனே, இப்படி எதுவும் நடக்கவில்லை என தட்டிக் கழிக்க தான் பார்க்கிறார். அப்படியிருக்கையில், இப்படியொரு முரட்டு முட்டு கொடுக்கும் அளவுக்கு சீமானை நிர்பந்திப்பது எது?. இதெல்லாம் தப்பு என சொல்லி விட்டால், "நீ என்ன பெரிய யோக்கியமா?" என்று விஜயலட்சுமி வந்து கேட்டு விடுவார் என்ற பயத்தினால?. பிஜேபி இன் தமிழ்நாட்டு கிளையில் பிராமணருக்கு, பிராமணர் அல்லாதவருக்கும் இடையில் நடைபெறும் அதிகார பேட்டியே இக்காணொளி வெளியானதுக்கு காரணமாகும். பிராமணர் அல்லாதவர் தலைவர் ஆனாலும், பிராமணர்களே தற்போது அதிகாரம் மிக்கவர்களாய் இருக்கின்றார்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.