Jump to content

zuma

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    839
  • Joined

  • Last visited

Posts posted by zuma

  1. 30 minutes ago, தமிழ் சிறி said:

    இரவில் மின் வெட்டு வரும் போது… என்ன விளக்கு பாவிக்கின்றனீங்கள்.

     

    ஞாபகம் வருகின்றதோ......நான் ஜாம் போத்தல் விளக்கில் தான் O/L உம்  , A/L உம்  படித்தேன். அதனால் தான் இன்றுவரை மின்சாரத்தை சிக்கனாக பவிக்கின்றேன்.

    No photo description available.

  2. 7 minutes ago, Sasi_varnam said:

     

    இது ஒரு கேடு கெட்ட. படிப்பறிவு இல்லாத.. சுத்த அயோக்கியத்தனம்!!!
    எது? ... உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும்  நிகழும் தற்போதைய போர்  அல்லாத ஒரு வீடியோவை,
    அதாவது 2014 இல் நடந்த ஒரு ராணுவ சண்டை; அதில் இறந்துகிடக்கும் ராணுவ வீரர்கள் உக்ரைன் நாட்டவர்;  தாக்குதல் நடத்தியது (உக்ரைன் கிழக்கு பிராந்தியத்தில் ) ரஷ்ய ஆதரவரோடு இயங்கும் பயங்கரவாதிகள்.  இந்த உண்மையை அப்படியே உல்டா பண்ணி, பிளேட்டை மாற்றி இது உக்ரைன் படைகளின் வன்மம் என செய்தி போடுவது.
    இதை நான் சொல்லவில்லை உலக செய்தி நிறுவனங்கள் நிரூபித்து உள்ளன.

    இப்போதைய யுத்தம் நடப்பது குளிர் காலத்தில், கொட்டும் பனியில் குறைந்த பட்சம் அதையாவது கவனித்து இந்த மாதிரியான அப்பட்டமான பொய் வீடியோக்களை இணைப்பதை தவிர்த்து இருக்கலாம்.

    நம்மளுடைய கருத்தை மற்றவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படியான போலியான திரை கதை, டைரக்ஷன், முகநூல் கட்டுரை, பின்னூட்டங்களோடு வருவோர் எமது சமுதாயத்துக்கே வில்லங்கமானவர்கள் என்பது எனது கருத்து.

    https://www.altnews.in/video-from-2014-shared-as-slain-soldiers-in-the-russia-ukraine-conflict/

     சமூக ஊடகங்களில் வெட்டி பயல்கள் பரப்புகின்றார்கள் என்று, இங்க கொண்டு வந்து ஒடாமல் இருப்பதற்கு சொந்த புத்தி தேவை அல்லவா.🤪

  3. அமெரிக்காவுக்கு எப்படி ஈராக், ஆப்கானிஸ்தான் அமைந்ததோ, அதே போல் ரஸ்யாவுக்கு இன்னுமொரு ஆப்கானிஸ்தான் ஆக அமைய வாழ்த்துக்கள்.90 களில்  ஆப்கானிஸ்தான் போருக்கு பின்னர் தான் சோவியற் யூனியன் உடைந்தது பல இனக்குழுமங்கள் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்தியது, அதேபோல் இம்முறையும் எஞ்யுள்ள  இனக்குழுமங்களும் தங்களை சுதந்திர நாடுகளாக பிரகனப்படுத்த முன்கூட்டிய  வாழ்த்துக்கள்.

    • Like 1
  4. நான் மேலைத்தேய நாடுகளுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, நிச்சயமாக அவர்களின்  தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படிபப்படட தலைவர்களை சனநாயக ரீதியாக நாம் அகற்ற முடியும், அகற்ற வேண்டும் . புட்டின் ஒரு அதிகார வெறிபிடுத்த manic, கடந்த 25 வருடங்களாக  ரஷ்யயாவை இரும்பு பிடியுக்குள் வைத்திருக்கின்றார், அவரை ஆதரிப்பவர்கள்  மண்டையை பரிசோதிக்கவேண்டும்,சனநாயக நாட்டில் இருந்து  டிரம்ப் போற வரையறைகள் அவரை ஆதரிப்பார்கள்.

    https://www.theguardian.com/us-news/2022/feb/27/donald-trump-defends-calling-putin-smart-hints-at-2024-presidential-bid

  5. ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி. சில பேர் சனநாயக விழுமியங்கள் உயர்வாக உள்ள நாட்டில் இருந்து  ,  அதனை சுகித்து கொண்டு புட்டினின் ரஷ்யயாவை ஆதரிக்கிறார்கள், அவர்களை பொதி செய்து ரஷ்யயாவுக்கு அனுப்பி புட்டினின் வைத்தியம் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சுகமடைவார்கள்.🤪

  6. 36 minutes ago, குமாரசாமி said:

    நீங்கள் பிறக்கும் போது எந்த உடையுடன் என்ன மானத்துடன் பிறந்தீர்கள்? :cool:

    சாரம் உங்களுக்கு நக்கலாக தெரிகின்றது.

     
    குசா அண்ணை,
    நான் சாரத்தை குறை சொல்லவுமில்லை, நினைக்கவுமில்லை. இப்பவும், கடும் சமருக்கு அங்கமெல்லாம் காற்றுப்பட சாரம் உடுத்து, வீட்டின் பின்னால் இருக்கும் மேப்பில் மரத்தின் கீழ் படுத்து இருப்பது தான் எனக்கு விருப்பமான செயல், அது ஒரு தனி சுகமானது.
  7. நல்ல நேரம் பட்டம் விடும்போது டவ்சர் போட்டிருந்தார், சாரம்  உடுத்திருந்தால் பட்டத்தோடு சேர்ந்து தம்பி மானமும்  காற்றில் பறந்திருக்கும். 😜
    • Haha 2
  8.  சீனா மத்திய வங்கி  கிரிப்டோகரன்ஸிகள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை சட்டவிரோதமானது என்று   அறிவித்து இருக்கின்றது.

    https://www.theguardian.com/world/2021/sep/24/china-declares-transactions-cryptocurrencies-illegal

  9. 2 hours ago, goshan_che said:

    திரு விக்னேஸ்வரன் இருந்த போது ஒரு நிதியம் அமைத்து புலம்பெயர் நிதியை வடக்கிற்கு கொண்டுவர முயன்றார். 

    ஆனால் சில விடயங்களில் இலங்கை மிக தெளிவாக இருக்கிறது.

    அவற்றில் ஒன்று எந்த வகையிலும் பொருளாதார/நிதி  சுதந்திரத்தை தமிழர்கள் கையில் கொடுப்பதில்லை என்பது.

    உதாரணமாக ஸ்டாலின் தடுப்பூசிகளை நேரடியாக வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்கிறார். தியாகராஜன் ஜேசி ஜக்சனுடன் டீல் போடுகிறார்.

    ஆனால் இலங்கையில்?

    89 இல் இணைந்த வட-கிழக்கு மாகாணசபை ஒரு டெண்டர் பேப்பரில் வெளியிட்ட போது, Provincial Government என போட, மறுநாளே அதை பிரேமதாசா Provincial Council என மாற்றும்படி செய்தார். 

    மாகாண சபைகளுக்கு காணி, பொலீஸ் அதிகாரம் வழங்காமையும் இதனால்தான்.

    ஆகவே எம்மிடம் பெரும் பொருளாதார வளம் புலம்பெயர் நாட்டில் இருந்தாலும் (இருந்தாலும்), அதை நாம் பொது நோக்கில் ஒருங்கிணைத்தாலும் (ஒருங்கிணத்தாலும்- நடக்கிற காரியமா இது?) அதை நாட்டில் எப்படி முதலிடுவது என்பது பெரும் கேள்வி குறி.

    எதையும் சட்டபடி செய்ய முடியாது எனும் போது இரு வழிகள்தான் உள்ளன.

    1. நம்பி ஒரு அமைப்பிடம் இதை சட்டத்துக்கு அப்பாற்பட்டு செய்யுங்கள் என கொடுப்பது. அப்படி ஒரு அமைப்பும் 2009 க்கு பின் இல்லை. 2009 க்கு முன் அவர்களிடம் கொடுத்தால் பணம் சரியாக பயன்படும் என்று நம்பிக்கை இருந்ததது.

    இப்போ?

    புலம் பெயர் நாட்டில் ஒரு உண்ணாவிரதத்தில் கூட பல சந்தேகங்கள் - யாரை நம்பி கொடுப்பது?

    2. தனி மனிதர்களாக, ஊர் ஒன்றியங்களா செயல்படுவது. @விசுகு அண்ணை @விவசாயி விக். இருவரும் இதற்கு நல்ல உதாரணங்கள். ஆனால் அவர்களே பலமுறை எழுதி உள்ளார்கள் - ஏற்படுத்தபடும் தடங்கல்கள் பற்றி.

    இதை விட நடைமுறை சாத்தியமாக வேறு எதையும் இப்போது செய்யமுடியும் என என் அறிவிற்கு எட்டவில்லை.

    சீன வரவால் புவிசார் அரசியலில் இலங்கையை ஒட்டி ஒரு மாற்றம் ஏற்பட்டு எமக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தால் ஒழிய - இதுதான் கள நிலை.

    ஆகவே அங்கே இருக்கும் மக்கள் இப்படியான வசதிகளை, அது ஏர்போர்ட்டோ, கலாச்சார மண்டபமோ பயன்படுத்தத்தான் முனைவார்கள்.

    நாம் வெளிநாட்டில், மைதானம், ஆடிடோரியம், சகல வசதிகளையும் அனுபவிக்கிறோம். ஆகவே நாம் அவர்களை எமது பெரும் புலம் பெயர் பொருளாதார உதவி வரும் வரை பொறுங்கள் என ஈசியாக கேட்கலாம்.

    ஆனால் அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு 18 மாடி கட்டிடம், இத்தனை வசதிகளோடு கிடைத்தால் அதை எப்படி பாவிக்கலாம் என்றே யோசிப்பார்கள்.

    பிகு:

    புலிகள் சுனாமி நேரத்தில் PTOMS என்ற ஒரு கட்டமைப்பை கோரினார்களே, நியாபகம் உள்ளதா?

    அதை இலங்கை நிராகரிக்கவும் இதுதான் காரணம். வெளிநாட்டு பண வரவை கையாளும் சுதந்திரம் தமிழர் கைகளில் இருக்க கூடாது.

     

    இலங்கை அரசாங்கம் தமிழர் தரப்பு நிதியை கையாளுவதற்கு ஒருபோதும்/ தற்போதைக்கு விடமாட்டார்கள்.இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுக்கமுடியாது( தங்களுடைய மக்களுக்கு செல்லவேண்டிய நிதியையே ஆட்டை போடுகின்றவர்கள், தமிழர் நிதி என்றால் சொல்லவா வேண்டும்). நேரடியாகவும் செய்ய பல முட்டுக்கட்டைகள்  உள்ளன.

    புலம்பெயர்ந்த தமிழர் தமது நாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து பங்களிப்பு செய்யமுடியுமா எனப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு,  இலங்கையில் கனேடிய சர்வதேச உதவி.

    https://www.international.gc.ca/world-monde/issues_development-enjeux_developpement/priorities-priorites/where-ou/sri_lanka.aspx?lang=eng

    இலங்கை உதவி செயல்திறன் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திக்கு   ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, கனடாவும் பிற நன்கொடையாளர்களும் இலங்கை அரசுக்கு நேரடியாக நிதி கொடுப்பதில்லை . நன்கொடையாளர்கள் இலங்கையில் தங்கள் பணிகளை வழிநடத்துவதற்கும், சாத்தியமான இடங்களில் கூட்டு மதிப்பீடுகளை நடத்துவதற்கும் ஒரு பொதுவான கொள்கைகளை உருவாக்கி உதவிசெய்வார்கள்.

     

     

    • Thanks 1
  10. நல்ல விடயம், தொகுப்பாளர் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.
    இந்தியன், சீனா, அமெரிக்கா, சிறிலங்கா யார் உதவி செய்தாலும், அதனை நாம் தாம் சிறப்பாக பயன்படுத்தவேண்டும். இப்படித்தான் யாழ் புகையிரத பாதை .போடும் பொழுதும் நொட்டை கதை சொன்னவர்கள் பலர், ஆனால் அதனால் அடைந்த நன்மைகள் பல.
     

    • Like 1
  11. 1 hour ago, தமிழ் சிறி said:

    படங்களை...  எப்படி  விம்பகத்தில் இணைப்பது?
    இலகுவான... விரிவான விளக்கம் தருபவர்களுக்கு....
    அன்பான... முத்தம் தரப்படும்.  💓 

     

    உங்கள் படத்தை முகநூலில் ஏற்றி விட்டு( அப்படத்தை நீங்கள் மாத்திரம் பார்க்க கூடியதாய் privacy setting மாற்றிவிடுங்கள்) , பிறகு இங்கே கருத்து எழுதும் பெட்டியில்  வெட்டி ஒட்டுங்கள்.

  12. 2 hours ago, விசுகு said:

    கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

    அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

    அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

    அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

    அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

    அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

    அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

    எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

    அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

    முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

    அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

    ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

    அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

    எம்  அனுபவங்களை 

    அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

    பொய்யாக்கி 

    நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

    எம்மை தலைகுனிய  செய்து  விடும்

    ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

    வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

    கூடி  வாழ்தல் சார்ந்து

     

    இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

    எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

    அவள் சாதாரணமாக  சொன்னாள்

    அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

    அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

    எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

    ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

    முற்றும்.

     

    பிள்ளை உருவாக்குதல், கலவி,  பாலியல்  உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில்  சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய  விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள். 
     

    • Thanks 1
  13. நிழலி 
    உங்களிடம் அதீத கற்பனை வளமும், சிறந்த எழுத்தாற்றலும் உள்ளது, மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.
    அதேபோல், நீங்கள் பாலியல் fantasy இல் நாட்டம் உள்ளவர் போல் தெரிகின்றது. கட்டுப்பெட்டியான தமிழ் சமூகத்தில் பிறக்காமல், பிரஞ்சு போன்ற  திறந்த மனமுடைய (open minded) சமூகத்தில் பிறந்து இருக்க வேண்டியவர்.
     

  14. 30 minutes ago, ரஞ்சித் said:

    இதுவரை எவருமே இத்திரியில் கருத்து எழுதாததால் , இதனை எவருமே கவனத்தில்க் எடுப்பதில்லையென்று எண்ணிவந்தேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி

     

    உங்களின் ஆதரவுக்கு நன்றி சுமா

     

    நன்றி சிறி, இந்தத் திரியை எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சில நாட்களுடன் அது தானாகவே நின்றுவிடும், இதன்மீதான எனது ஆர்வமும் நின்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நடந்த சம்பவங்களைத் தேடிப் பார்க்கும்போது, பல விடயங்கள் மிகுந்த வருத்தத்தினையும், கோபத்தினையும் தருவதால் இதுபற்றி அனைவரும் அறியவேண்டும் என்கிற அவாவே இப்போது தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.

    மூலங்களை,  மேற்கோள் அல்லது உசாத்துணைகளுடன்   குறிப்பிட்டால் , இது ஒரு வ்ரற்லாறு ஆவணமாக இருக்கும்.

    • Like 3
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.