Vatha

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  200
 • Joined

 • Last visited

Posts posted by Vatha


 1. உயிரை உருக்கி

  நெய்யாக வார்த்தவர்கள்!

  மாவீரர்கள்! யார் இவர்கள்?

  தன்னலம் கருதாத தியாகிகள்!

  தமிழ்நலம் கருதிய ஞானிகள்!

  எங்களுக்காக தங்கள்

  உயிரையே துறந்த துறவிகள்!

  தமிழர் இதயங்களில் என்றும்

  நிலைத்து வாழும் தெய்வங்கள்!

  கடலிலும் தரையிலும் காற்றிலும்

  கலந்து இருப்பவர்கள்!

  எங்கள் சுவாசத்தினூடக

  எம் உதிரத்தில் கலந்து

  எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!

  விடுதலைத் தீ அணைந்து போகாமல்

  தம் உயிரை உருக்கி

  நெய்யாக வர்த்தவர்கள்!

  தாம் உருகி உலகத்திற்கு

  ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!

  கல்லறைக்குள் உறங்குகின்ற

  கார்த்திகைப் பூக்கள்!

  சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!

  தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்

  துயில் எழுப்பி!

  துயிலும் இல்லங்களில்

  மீளாத் துயில் கொள்பவர்கள்!

  தமிழர் இதயங்களில்

  ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்

  அணையாத நந்தா விளக்குகள்!

  உலகத்தின் மனச்சாட்சியை

  உலுப்பி விட்ட உத்தமர்கள்!

  சாவுக்கு தேதி குறித்த

  சாகா மறவர்கள்!

  தமிழன் என்றொரு இனமுண்டு!

  தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று

  தரணிக்கு உணர்த்திய

  தாயகப் புதல்வர்கள்!

  உலகத் தமிழனை உயர்த்தி வைத்த

  உன்னத மறவர்கள்!

  இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்

  முடிவில்லை………..

  ஆம் மாவீரன் சங்கரிலே

  தொடங்கியது தியாகம்!

  ஈழம் விடிந்த பின்பும்

  முடியுமா இவர்களின் ஈகம்!

  காத்து நிற்பார்கள் ஈழத்தின்

  எல்லையை காலாகாலம்!

  மாவீரர்களே! உங்கள்

  கல்லறைகள் கருத்தரிக்கும்!

  அதில் இருந்து ஆயிரமாயிரம்!

  வேங்கைகள் தோன்றுவார்கள்!

  அவர்களால் உங்கள்

  தாகங்கள் தீர்க்கப்படும்!

  உங்கள் தியாகத்திற்கு!

  நீங்கள் நிர்ணயித்த

  விலைதான் பேசப்படும்!

  தமிழர் உரிமைகளைப் பேரம் பேச

  நாங்கள் தயாரில்லை!

  உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!

  இது உங்கள் கல்லறைகள் மேல்

  நாம் செய்யும் சத்தியம்!!!

  தினமும் உங்கள் உணர்வுகளோடு

  பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்

  இதைச் சாதித்தே தீருவார்!

  ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!

  உங்கள் துயிலும் இல்லங்களுக்கு

  பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!

  மிக விரைவில் வருவோம்!

  வெற்றிச் செய்தியோடு!

  ஐக்கிய நாடுகள் சபையிலே!

  புலிக்கொடி பறக்கும்!

  தமிழ் குடி சிறக்கும்.

  “தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

  நாரந்தனையூர் கவிநயன்!

   

  அற்புதமான படைப்பு, நன்றிகள்.

   


 2. (இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது)

  நீங்கள் பிறந்த இந்நாள்

  Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010

  Prabaharan01.png

  மெளனங்களாய்

  உங்கள் நினைவேந்திக்

  கரைகிறது இந்நாள்…..

  முப்பதாண்டுத் தவம்

  முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு

  மூச்சறுந்த நிலையில் எல்லாம்

  உறைந்து போய்க் கிடக்கிறது……

  வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்

  வரலாறாய் பதித்துவிட்டு

  வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே

  வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்

  இந்த மெளனங்களும் ஊகங்களும்

  வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

  உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்

  இப்போ நல்ல மழை பெய்கிறது…..

  நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை

  உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

  உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு

  உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு

  உயிர் கொடுக்கப் போனவர்கள்

  தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்

  பிழைகாணும் வீர(ண)ர்கள்

  இடுகின்ற ஊழைகளில் உண்மையும்

  நீதியும் உயிர் சிதைகிறது….

  உண்மையாய் வாழ்ந்தோரை

  இந்த ஊனக்கண்களும்

  உக்கிய வாய்களும்

  ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..

  நீங்களாய் மாற நிறையவே நரிகள்

  பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

  நீங்கள் பிறந்த இந்நாள்

  வருடாவருடம் வந்து போன

  நாட்கள் போலில்லை…..

  என்றுமே உணர்ந்திராத

  வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

  பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க

  உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்

  மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..

  26.11.10

  http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_26.html

   

  நன்றி சாந்தியக்கா, அண்ணனில்லா வேதனைகள்.

  "யாதுமானவனே... நீயில்லாக் காலைகளில் களத்திலும் புலத்திலும் நரிகள் தொல்லை தாங்கமுடியவில்லையே...."

   


 3.  

  தமிழன்னையின்  தவப்புதல்வா...

  தாயகத்துத் தங்கமகனே

  புறநானூற்றின் புதுத் தொடரே...

  உனக்கின்று இன்னோரகவையாம்...

  காலத்தின் கட்டளையே கரிகாலா...

  உனக்கும் அகவையேதுமுண்டோ?

  நீ வாழி..

  நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

   

  அருமையான  வரிகள்

  நன்றி  கவிக்கும் நேரத்திற்கும்...

   

   

  நன்றி விசுகு.

   


 4. நாலு வரிகளுக்குள் காலத்தைப் புதைத்திருக்கின்றீர்கள் வேதா!

   

  நன்றிகள்!

   

  பின்னூட்டத்திற்கு அன்புகலந்த நன்றிகள்...புங்கையூரன் :)

   


 5. தமிழன்னையின்  தவப்புதல்வா...

  தாயகத்துத் தங்கமகனே

  புறநானூற்றின் புதுத் தொடரே...
  உனக்கின்று இன்னோரகவையாம்...

  காலத்தின் கட்டளையே கரிகாலா...

  உனக்கும் அகவையேதுமுண்டோ?

  நீ வாழி..
  நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

   

  http://www.yarl.com/forum3/index.php?showtopic=132638&hl=


 6. அழகிய கவிதைக்கு நன்றி, வதா.

   

  நன்றி தமிழ் சிறி உங்கள் பதில்க் கருதீடுக்கு. அத்துடன் இதைக் கவிதையென குறிப்பிட்டதற்கு இன்னொரு நன்றி, எனெனில் இதைக் கவிதையாக நினைத்து எழுதவில்லை. இது உண்மையிலேயே கவிதையெனின் இதுவே என் "முதற் கவிப் பிரசவம்/பிரசுரம்", எனில் அந்நன்றி யாழுக்கும், முதலில் அங்கீகரித்த உங்களுக்குமே உரித்தாகும். :)

   

  (அப்ப எனக்கும் கவிதை எழுதவருமோ?) :rolleyes:

  நன்றி, வதா

   

  நன்றி தேவரே... :)


 7. இல்லாது இருப்பவன்
  இருந்தும் இல்லாதவன்
  வரிகொண்டவன்

  வரிப்புலிகண்டவன்

  முழுத்தமிழர்க்கும் முகவரிதந்

  தவர்மனங்களில் முடிசூடினன்

  இயற்கையின் நண்பன்
  இமாலய சாதனையின் தொண்டன்

   

  தமிழன்னையின்  தவப்புதல்வா...

  தாயகத்துத் தங்கமகனே

  புறநானூற்றின் புதுத் தொடரே...
  உனக்கின்று இன்னோரகவையாம்...

  காலத்தின் கட்டளையே கரிகாலா...

  உனக்கும் அகவையேதுமுண்டோ?

  நீ வாழி..
  நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!


 8. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!!

   

   

  அனந்தி சசிதரன்  

  வடமாகாணசபை உறுப்பினர்

   

  நல்வரவு அனந்தி அக்கா.

  'வீழ்த்தப்பட்டோம்' என்றிருந்த மனங்களிலெல்லாம் 'எனினும் எழுந்துவிட்டோம்' என உங்கள் செயலால் நிரூபித்துவிட்டீர்கள். இலட்சியப் பயணத்தில் உங்களுக்குத் தோள்கொடுப்போம்.

   


 9.  

  karuppy.jpg?w=464&h=261

   

  வெல்ல வையுங்கள்

  வெட்டி வீழ்த்துகிறோம்

  வீர வசனம் பேசி

  இரத்தத் திலமிட்டு

  வீடுகள் தோறும்

  தன்னாட்சிக்கு உரிமை கேட்டு

  உரிமையோடு வர..

  மக்களோ

  அள்ளிக் கொடுத்து

  நம்பிக் கெட்ட

  காலம் ஒன்று..

  70 களில் வந்து போனது..!

   

  மீள அது

  மீளாதிருக்க

  தம்பி வழியில்

  போர்த் தரையில்

  இட்ட விதை..

  மக்கள் இரத்தம் சொரிந்து

  மாவீரர் தியாகத்தால்

  உரமிட்டு

  வளர்த்து விட்டது

  தமிழ் தேசிய விருட்சமாகி

  இன்று..

  ஊர் கூடி

  தேர் இழுக்கும்

  தேரடியாகி நிற்குது.

   

  மீண்டும்

  “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்”

  அண்ணல் திலீபனின்

  நோன்பிரு நாளில்

  ஓர் வெற்றிச் செய்தி

  “கோட்டை வீழ்ந்ததாம்”

  என்றது போல் ஆனது

  செவிகள் இனிக்க

  கடந்து போன

  துயரங்கள் நினைவில் ஆட..!

   

  பிபிசி.. ராய்டர்

  எல்லாம் உற்று நோக்க

  நடந்து முடிந்திருக்கு

  தேரோட்டம்.

  “தன்னாட்சியை விரும்பும்

  தமிழர்கள்..”

  “அதையே கேட்டனர்

  தமிழ் புலிகள்”

  செய்திகள்…

  நாம் அன்று கத்திச் சொல்ல

  கேட்டிராத செவிகளும்

  இன்று பேசுது அதையே..!

   

  முள்ளிவாய்க்கால் முடிவல்ல..

  தம்பி ஒன்றும்

  மிச்சம் வைக்காமல் போகல்ல..

  உலகம் இன்று

  எம்மை உற்று நோக்க

  தமிழ் தேசிய விதை விதைத்து

  விருட்சமாக்கி விட்டதும்..

  தம்பி செய்த காரியமே..!

  நாம் – இன்று

  பாதகர்

  பாதையில் குவிந்து நிற்கவும்

  துணிந்து எழுந்து

  தேரிழுத்து முடிக்கவும்

  தம்பி தந்த..

  நம்பிக்கை தான்

  துணை நின்றது.

   

  தேரிழுத்து

  அரோகரோச் சொல்லி ஓட

  இது..

  அம்மன் கோவில் தேரோட்டம் அல்ல.

  மக்கள் எதிர்பார்ப்பு.

  மாவீரர் இலக்கு.

  வென்று காட்டுங்கள்

  அள்ளி வழங்கிய

  வாக்குறுதிகளை

  சர்வதேசத் துணை வைச்சே..!

   

  அண்டையரின்

  தொப்புள் கொடி உறவுகளின்

  தூர உறவுகளின்

  அன்பும் அரவணைப்பும்

  எமதானால்

  வெற்றி என்பது…

  நிச்சயம் ஆகும்..!

  புரிந்து நின்று

  நிதானமாய் செயற்படுங்கள்..!

  மீண்டும் ஒருமுறை..

  மக்கள் ஆணையை

  ஆற்றில் விட்ட

  மண் குதிரை

  ஆக்க வேண்டாம்..!

   

   

   


 10.  

  எனக்கும் விளங்கவில்லை ...............நீங்கள் பார்ப்பது மக்களின் மனங்களில் இருந்து வந்த உறங்கி கிடந்த உணர்வையா ,உண்மையையா ..............அல்லது ஏதோ ஒன்றை பழிவாங்கவேணும் என்பதற்காக தேடலின் ,மூலம் இலக்கை அடைவதற்காக பரிந்துரைக்கப்பட்ட விடை தேடிய கருத்துக்களையா .............அல்லது அர்த்தமற்ற பழிவாங்கும் நடவடிக்கையை காட்டும் உங்கள் தாழ்வு மனப்பான்மையா ................உண்மையாய் விளங்கவில்லை 
   
   
  ஒன்றுமட்டும் கூறுகிறேன் இந்த தேர்தலின் வெற்றியில் மகிழ்ச்சியடையா எந்த தமிழனும் தமிழனாய் இருக்க முடியாது ........எனனில் அடக்கி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கும் எம் உறவுகள் வீரமாக ,உணர்வாக தம் உண்மை முகத்தை காட்டினார்கள் அதற்காகவே .வேறொன்றுக்காகவும் இல்லை ,.......... 
  உண்மைதான், நானும் மிக்கமகிழ்வுடன் இருக்கிறேன்...உப்புச்சப்பற்ற மாகாணசபையென்றாலும், இதைவைத்து எதையும் செய்யமுடியாதென்றாலும், "நாம் வீழ்ந்தது உண்மையாயினும் வீழ்ந்தே கிடக்கவில்லை" என்றெழுந்து, அடித்தவன் முகத்திலேயே திருப்பியடித்து தங்கள் மனதிருந்த கோபத்தையும் வெளிப்படுத்திவிட்டனர்.
   
  சிறு விடயம் பாதுகாப்பான நாடுகளில் வாழும் நாமே எம் முகத்தை காட்டாமல் கணனிக்கு கணனி கருத்தேழுதும்போது .............அத்தனை பாதுகாப்பற்ற நிலையிலும் உண்மை முகத்தை காட்டிய  அந்த உறவுகளின் உள்மனதில் இருந்து வந்ததை ,அந்த விடுதலைப்புலிகள் காலத்து வீரத்தை வெற்றியாக கொண்டாடாமல் எந்த உணர்வுள்ள தமிழனும் இருக்க மாட்டான் .......................பொறுத்திருங்கள் இன்னும் பல உண்மைகள் உங்களுக்கு புலப்படும் .

  துப்பாக்கிகளால் அடக்கியாளப்பட்ட உணர்வுகள்...பொங்கிவெடித்து புதுயுகம் படைத்தன.

  "சுதந்திர வேட்கையைச் சுடுகலன்களும் வெல்லுமோ?"

   


 11.  

  ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி..
   
   
   
  நானென்பது யாதென்பேன்..?
  -------------------------------------------
   
  நானென்பது யாரெனப் 
  புரியவில்லை...
   
  தேடித் தேடிக் களைத்து
  முதிர்ந்த மனக்காலத்தின்
  ஒரு மூலையில்
  பெருங்கேள்விக்குறியுடன்
  விழித்துக் கிடக்கிறது அறிவு...
   
  நானென்பது யாதென்பேன்..?
   
  எனை வனைந்த அனுபவங்களா..?
  மூளைத்திரட்சிகள் எங்கும்
  நீந்திக்கொண்டிருக்கும்
  நினைவுகளின் தொகுப்புகளா..?
  படித்து முடித்த புத்தகங்களா..?
  நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..?
  ஜீன்களின் வழி புகுந்த
  காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும்
  மூதாதைகளின் கனவுகளா..?
   
  சொல்லற்று நிற்கிறேன்...
   
  விளங்க முடியாப் புதிராக
  வெளியிலிருந்து பார்க்கையில்
  வியப்பாய் விரிகிறது
  "நான்"...
   
  ஆயினும்..
   
  விலக்கமுடியாமல்
  வழமைபோல்
  ஆயிரம் கேள்விகளாய்
  மனக்கடலை நிறைக்கின்ற
  இன்னுமொரு நாள் துவங்குகிறது..
   
  மலைகளில் இருந்து
  இறங்கி
  பெருக்கெடுத்தோடும் அருவியாய்
  கேள்விகள்...
   
  தேடித்தேடி திரிகிறேன்..
   
  பெருவெளியில்
  கழிவிரக்கத்துடன் படர்ந்துகிடக்கும்
  காலத்தைப்போலவே
  புரிகின்றனவே இல்லை
  நள்ளிரவில்
  எனை எழுப்பும் கேள்விகள்..
   
  அழகின் வடிவம் 
  ஒளிரும் இரவே
  சொல்...
   
  நானென்பது யாதென்பேன்..?

   

  உனை நீ உணர்... அழகான தேடல்...நன்று. இங்கும் ஒருவர் "நான்" க்கு பதில் கண்டுள்ளார்... :)

   

  http://www.youtube.com/watch?v=ZOfTuEPq-3g&gl=SG&hl=en-GB

   


 12. bhindi.jpg

  தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

  எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

   

   

  முயற்சி செய்துபார்க்கிறேன், நன்றி அண்ணா. உண்மையாத்தானே சொன்னீங்கள்?? :)

   


 13. மாத்திரை

   

  எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

  முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.

  ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

  அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

   

  ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.

  இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

  அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.

   

  உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)

   

  நெடில்  2 மாத்திரை

   

  குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

   

  மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை

   

  மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை

   

  இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

   

  நல்லவேளை.. தூக்கமாத்திரை இல்லாமற்போனது, இல்லையென்றால் தமிழே தூங்கியிருக்கும்.

  வாத்தியார், தமிழை நன்றாகப் படிக்க ஏதும் ஊக்க மாத்திரை கிடைக்குமோ..?

  பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

   


 14. எழுத்துக்களின் பிறப்பிடம்

   

  உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.

   

  இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.

   

  உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.

   

  மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன

   

  அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்

  ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.

   

  த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.

   

  ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.

   

  என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.

   

  ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.

   

  என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

   

  என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

   

  என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.

   

  ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

   

  ஆய்தம் தலையில் பிறக்கின்றது

  ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்

  ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

   

  பிறப்பிடத்தை birth place என்று சொல்லலாமோ வாத்தியார்...?

   


 15.  

   
  mp3  ஐ விட என்ன தரம் உங்களுக்கு  தேவை??

   

   

  mp3 என்பது Compressed file. அது original இல்லை. கே.வி. யின் கேள்வி சரியானது. அதை CD யாகவே வாங்கவேண்டியிருக்கும்.ஏனெனில் அதன் கொள்ளளவுபெரியது (more than 5MB). இணையத்தில் இருந்து இலவசமாக பெறுவதென்பது அரிது.


 16. விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

   

  அங்கு அவள் விழியோ நர்த்தனம் ஆடுகையில் இங்கு

  இவன் விழியோ புத்தியிருந்தும் சித்தமிருந்தும்

  இரண்டும்கெட்டு திண்டாடுகிறது, தன்னிலை

  மறந்து தடுமாறுகிறது...

  அன்று மலர்ந்த செந்தாமரையோவென பறந்துவந்த

  வண்டு தடுமாறுகிறதாம்...

  ஐந்தறிவுகொண்டதுக்கு இந்நிலை

  ஆற்றிவுகொண்டோனுக்கும் அந்நிலை அது

  பெண்ணைப் பருகியபோதை இயற்க்கையின்

  பாதை அது "விழியில் விழுந்து (அதுதான் விதி)

  இதயம் நுளைந்து உயிரில் கலந்த(து) உறவே(வு)"

  • Like 1

 17. இப்பொழுதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்தேன். கதை புதிதொன்றுமில்லை இருந்தாலும் பார்க்க பிடித்திருந்தது. ஒரு காட்சியில் நாயகி புருவத்தை வளைத்து ஒரு பார்வையை படர விடுவாள்....

  மப்படித்த மறுநாள் மண்டை குடைவதைப் போல சில படங்களின் காட்சிகளும் சிலமணி நேரங்களாவது சிந்தையைச் சுழலச் செய்யும்.அந்த தாக்கம் தான் இந்த உளறல் ...கள் போலவே காதல் நினைவுகளும் உளறலை உற்பத்தி செய்கிறது ....

  ஊடலுக்கு கூடலுக்கும் கண்களே உரிப்பொருள். சில காவியத்திற்கும் ஓவியத்திற்கும் கண்களே கருப்பொருள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவையே முதற்பொருள்.

  வேல்விழி, வாள்விழி , மான்விழி, மலர்விழி, மதுவிழி, பூவிழி, கருவிழி, கயல்விழி, செவ்விழி.......

  மதர்க்கண், மழைக்கண், குவளைக்கண், கழுநீர்க்கண் ....

  விழிகளில் இவ்வளவு விந்தை எப்படி முடிகிறதோ இந்தப் பெண்களால் !!??

  இதழில் சுழியும், மோகன முறுவலும், கருவிழிகளில் கர்வமும், நுதலில் வளைவுகளையும் நொடிகளில் பிரசவிக்க இவர்களால் மட்டுமே முடியும்.

  மனம் ஒரு மாயச் சக்கரம்... விழிச் சுற்றலில் வீழ்வது  விந்தையொன்றுமில்லை.....

  விழி உமிழும் ஒளியே !! . உன் தழுவலில் துளிர்க்க காத்திருக்கும் இந்த தளிர்யிதயத்தை விட்டுச் செல்லாதே...

   

  பாரதியே அன்று பாடினான்..'சுற்றும் விழிச்சுடரரே கண்ணம்மா...',  

  இப்போ ஒருவன் பாடினான் 'சுற்றும் விழிச் சுடரே... சுற்றும் விழிச் சுடரே... என் உலகம் உன்னைச்சுற்றுதே.. "

  இப்பிடியும் ஒருவன் பாடினான்...

  http://www.youtube.com/watch?v=QCqG3tXF4k4


 18. காமத்தில் கடவுளைக் காண்பது என்பது பம்மாத்து. காமம் அது தன்பாட்டுக்கு இருக்கட்டும், நீங்கள் கடவுளைக் காணவேண்டுமாயின் வேறு வழிகளில் முயற்சிக்கலாம். இதைவிட்டுட்டு ஆட்டுக்கை மாட்டை விட்டு....

  --------------------------------

   

  ஓஷோ'வும் ஒரு மோசடிச் சாமியார்தான். அவர் படித்திருந்ததால் அவர் 'தத்துப் பித்துவங்களால்' படித்தோரும் ஏமாறுகிறார்கள்.

   

  http://en.wikipedia.org/wiki/Bhagwan_Shree_Rajneesh

   

  http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

   

  சோறு - வயிற்றுப்பசிக்கு, காமம் - உடற்பசிக்கு. இவை இரண்டையும் மனத்தை அடக்குவதன்மூலம் கட்டுப்படுத்தலாம், ஆனால் நிறுத்தமுடியாது. ஆதாரம் என்னிடம் இப்போது இல்லாவிடினும் படித்ததில் சேதாரமின்றி என் மனதில் பதிந்தது.

  காமத்தால் கடவுளை அடையமுடியுமெனில், திருமணமானபின்னும் எதற்காகக் கோவிலுக்குச் செல்கிறோம்? இருக்குமிடத்திலேயே கடவுளை அடையலாமே....?

   


 19. தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

  விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம்.

   

  தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன.

   

  இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும்.

   

  இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல்  எழுதி  வ ரவும்  கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும்.

  அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம்.

   

  பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் மொழிக்கு இலக்கணமும் துணையாக இருக்கின்றது. 

   

  இலக்கணத்தைப் பற்றி விரிவாகப் படிப்பதற்கு இந்த ஆக்கம் எல்லோருக்கும் உதவியாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

   

  ஏதாவது தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கள உறவுகளை வேண்டிக்கொள்கின்றேன்  

   

  கனம் தமிழ் ஆசான் அவர்கட்கு,

  தமிழை மேலும் படித்து இன்னும் பல குசும்புகளைத் தமிழில் செய்யவேண்டுமென்ற ஆர்வக்கோளாறினால் தங்களின் அனுமதியின்றி வகுப்பறைக்குள் நுளைந்து இதுவரையில் நிகழ்த்திய அனைத்துப் பாடங்களையும் மென்று சுவைத்துத் தின்றுவிட்டேன். மேலும் சுவைக்க ஆவல்லாயுள்ளேன், தயைகூர்ந்து என்னையும் தங்கள் மாணாக்கர்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்ளும்படி இத்தால் வேண்டிக்கொள்கிறேன்.

  இங்ஙனம்,

  சுயசீர்திருத்தமடைந்த மாணவன்.

   


 20. எ, யா முதலும், ஆ, ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகுமே !

  (நன்னூல்)

   

  நான் சரியா வாத்தி யார்?

   

  இப்ப ஞாபகம் வருகிறதே.... என் தமிழ் வாத்தியார் பத்தாண்டுகளுக்கு முன் செப்பினது.

   


 21. எல்லோருக்குமே பிரையோசனமான தொடர் . பெரும்பகுதியான பிழைகள் வல்லின , மெல்லின , இடையினங்களிலேயே வருவது கண்கூடு .  தொடருங்கள் வாத்தியார் :) :) .

   

  மெல்லினங்களைப் புரிந்துகொள்வதே எனக்கு இப்பொது மெத்தச் சிரமமாக இருக்கிறது...