Vatha

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  200
 • Joined

 • Last visited

Everything posted by Vatha

 1. கல்யாணி... வணக்கம் பாருங்கோ.... வாரும், இரும், படியும், நாலு கிறுக்கும்.... ஆனால் எல்லாம் தமிழ்த் தேசியத்தைக் குவிமையப்படுத்தியிருந்தால் மிக மிக நன்றாயிருக்கும்... எது எப்படியோ... தேசத்தின்பால் உள்ளக்கிளர்ச்சிகொண்டு யாழில் பிரவேசித்துள்ளீர்.... கொட்டட்டும் உம் உள்ளக்கிளர்ச்சிகள் வார்த்தைகளாகவும் செயல்களாகவும்....
 2. வணக்கம் ஈழமகன், நல்வரவு.... நீங்கள் தமிழ்ச்சொல்லை நேரடியாக ஆங்கிலதில் தட்டச்சு செய்யுங்கள்.
 3. நன்றியப்பா இரதி... நான் நிறைய எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். தம்பர் ஐயா... வணக்கமும் அன்பு நன்றியும். முடிந்தளவு எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.
 4. நண்பர்களே... இப்படியான பேச்சுக்களை தயவுசெய்து தவிருங்கள். இது வெட்டிப்பேச்சுக்கான நேரமல்ல. இத்தால் யாரையும் குறிப்பிட்டுத் தாக்கவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை. குறிப்பு: சிங்களவரை கொங்சம் பாருங்கள். தமிழ்-சிங்கள பிரச்சனை என்று வரும்போது, எதிர் கட்சியோ ஆளும் கட்சியோ, இப்போது எல்லோரும் ஓரணியில். நாங்கள் மட்டும் இன்னும் கொழுத்தாடு பிடித்துக் கொண்டு......
 5. வாங்கோ ரதி, நல்வரவு. நீங்க என்ன ரதி? அந்த உலகத்து ரதியோ? வந்தாச்சு, இனி என்ன, எழுதித்தள்ளலாம்ல...
 6. வணக்கம் முகிலொளி. நீர் ஒரு தமிழன் தானே. இணைவதில் என்ன தயக்கம். காட்டுங்கள் உங்கள் வீரியத்தை தமிழனுக்காக தேன் தமிழில்.
 7. வாருங்கள் தீயா... உங்கள் ஆழமான கருத்தினை முன்வையுங்கள்.
 8. வாரும் முல்லை சதா. நானும் உம்மை வரவேற்கிறேன்.
 9. வாரும் நிகே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
 10. வாங்கோ ஈழம்சப்போட்டர்.... வந்து வீசுங்கோ உங்கள் எழுத்துக்கணைகளை.....
 11. வணக்கம் சுப்பண்ணை, ஏன் அண்ணை இவ்வளவு சுணக்கம்... ஒன்றும் மாயம் இல்லை அண்ணை, நான் எல்லாமே வெளிப்படையாகத்தான். இப்பதான் அண்ணை காலெடுத்து வைத்திருக்கிறேன். அதுக்குள்ளை எப்படிக் கலக்கிறது...
 12. வணக்கம் வில்லன். நன்றிகள் உங்கள் இனிய வரவேற்பிற்கு. "நீங்கள் உண்மையான வில்லனா, சும்மா வில்லனா?" , எதுக்கு வில்லன் என்று சொன்னால், புரிந்து நடந்துகொள்ளலாம்.
 13. பிரமச்சாரி, நல்வரவேற்பிற்கு நன்றிகள். எனக்கொரு சந்தேகம் பிரமச்சாரியாரே...தீர்த்துவைக
 14. நன்றி பிரசாந், உங்கள் இன்முக வரவேற்பிற்கு. மீண்டும் இணைவோம்.
 15. நன்றி முல்லைசதா. உங்களை நானும் அன்புடன் வரவேற்கிறேன். முல்லை என்றதும், சுனாமியின்பின் அங்கு வேலைசெய்த நாட்கள்தான் என் மனத்திரைக்கு வருகிறது. அளவிடமுடியாத அன்பை அள்ளிவழங்கிய அந்த மண்ணின் மக்களும் அடக்கப்படமுடியாத அவர்களின் வீரமும் மனத்துணிவும். நன்றி, மீண்டும் வருவேன்.
 16. நுணாவிலான், நன்றி, உங்கள் இனிய வரவேற்பிற்கு. நுணாவில் என்றதும் '95 இன் இடப்பெயர்வும் வேரக்கேணி கந்தசுவாமி கோவிலும்தான் நினைவுக்கு வருகிறது. தவிர்க்கமுடியாத நிகழ்வு. எனினும் அடைக்கலந்தந்த வீடுகளுக்கு நன்றிகள். மீண்டும் சந்திப்போம்.
 17. சகோதரி நிலாமதி, தங்கள் நல்வரவேற்பிற்கு எனதுளப்பூர்வ நன்றிகள். எனக்கு நினைவுள்ளவரை, 2005 ம் ஆண்டிலிருந்து "யாழ்" இன் வாசகன். "அப்ப ஏன் இவ்வளவு காலமும் களத்தில் எழுதவரவில்லை/எழுத முயற்சிக்கவில்லை" என்று உங்கள் உள்மனதில் எழும் இக்கேள்வி நியாயமானது. என்ன செய்வது, சில பல சிக்கல்கள். இப்பொழுதுதான் ஓரளவு தீர்ந்திருக்கிறது.
 18. நன்றி முனிவர்ஜி. எப்படி இருக்கிறீர்கள்? நான் முன்னமே எழுததொடங்கிவிட்டேன். ஆனால் நீண்ட நாட்களாக அனுப்ப முயற்சித்தேன், எப்பொழுதுமே "பிழை" என்பதாகவே பதில் வந்தது. இறுதியாக நேற்றுத்தான் வெற்றிகொண்டேன். அன்புடன், வதா
 19. கறுப்பி, நான் ஏற்கனவே பல கையெழுத்துக்களை அனுப்பிவிட்டேன். அம்மா,அப்பா,அண்ணாக்கள்,தம்பி
 20. இப்பதான் தவழத்தொடங்கியிருக்கிறேன். படிப்படியாகத்தான் நடைபயிலமுடியுமப்பா. சின்னப்பிள்ளைதானே...
 21. கறுப்பி, எனதன்பு நன்றிகள், உங்கள் இனிய வரவேற்பிற்கு. "வலிகொண்டதுதான் வாழ்க்கை" என்பது உண்மையாயினும், அதை "இன்பமான வலி"யாக மாற்றும்போது வாழ்க்கையும் சற்று இனிப்புக்கொள்ளுமல்லவா. இருப்பினும் வலி என்ற ஒன்று இருப்பதால்தான் "வலியின்மை" என்ற ஒன்றையும் எம்மால் உண்ரமுடிகிறது.