
Sabesh
கருத்துக்கள உறவுகள்-
Posts
1250 -
Joined
About Sabesh
- Birthday 09/11/1994
Profile Information
-
Gender
Male
-
Location
Canada
Recent Profile Visitors
Sabesh's Achievements
-
கந்தையா அண்ணையின்.... தாயார், இறைபதம் எய்தினார்.
Sabesh replied to தமிழ் சிறி's topic in துயர் பகிர்வோம்
கந்தையா அண்ணாவிற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் -
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
Sabesh replied to colomban's topic in செய்தி திரட்டி
-
யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !
Sabesh replied to colomban's topic in செய்தி திரட்டி
அனுஷ்கான் இல்லை அனுசன். கான் ஐ சேர்த்து விட்டீர்களே. உண்மை தான் முதலாமவரின் பெற்றோர் அல்லலோயா மதத்துக்கு மாறி விட்டினம் அதன் பிரகாரம் அவர்களின் பிள்ளைகளும் மாறி அதனைத் தொடர்ந்து அவர்களை மணம் முடித்தவர்களுக்கு மாறினார்/மாற்றப்பட்டனர். ஆரம்பத்தில் அப்பப்போ லேசான மதச் சாயல் இருந்தது. இப்போது அப்படியான மத சாயல்கள் வெளிப்படையாக காணொளிகளில் இல்லை. இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு யூடூபில் சேனல் வைத்து செய்கிறார்கள். அதுவும் ஒரு வகையான வருமானத்தை ஈட்டும் முயற்சி ஆகவே அதில் குறை கூற எதுவம் இல்லை. இரண்டாமவர் அனுசன். அவர் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவர். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அம்மா மட்டும் தான். இவரின் சிறு வயதில் தாய் கல்லுடைத்து வரும் வருமானத்தில் இவரை வளர்த்துள்ளார். இவர்கள் சைவ குடும்பம். வயதில் சிறியவர் (22) ஆனாலும் மிகவும் பக்குவமானவர். இவர்களின் இருவரின் உதவிகள் அனைத்துமே வெளிப்படையானது. உதவி செய்தவர்கள் பெயரைக் வெளிப்படுத்த வேண்டாமென்று கூறினாலும் அவர்களின் நாடு தொலைபேசி இயக்கத்தின் இறுதி 4 இலக்கங்களை தெரியப்படுத்தி, உதவிய தொகையை காணொளிகளில் வெளிப்படுத்துவார்கள். உதவி பெறுபவர்களை முடிந்தளவு தீர விசாரித்து உதவி செய்வதுடன் சில வேளைகளில் மீண்டும் சென்று பார்வையிடுகிறார்கள். உதவி செய்பவர்களுக்கு ஒரு மன திருப்பதி கிடைக்கிறது. இவர்களின் செலவு (குறைந்தது): போக்குவரத்து செலவு, காணொளி / ஒலி வாங்கி இதர உபகாரங்களின் செலவு, திருத்த வேலைகள், பாவிக்கும் வாகன திருத்த வேலைகள் நேரம். நேரம் என்று பார்த்தால் போக்கு வாரத்துக்கு சில 1-4 மணித்தியாலம், காணொளி எடுக்க 3-4 மணித்தியாலம், எடுத்த காணொளியை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்ய 1-2 மணித்தியாலங்கள், தரவேற்றம் செய்யும் நேரம், இன்டர்நெட் செலவு இவர்களின் வருமானம் யூடுப் வழங்கும் விளம்பர வருமானம், அதுவும் நாங்கள் விளம்பரங்களை ஸ்கிப் பண்ணி பார்த்தல் பெரிதாக வராது. ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பதை விட விளம்பரங்களை கிளிக் பண்ணி பார்த்தால் தான் கூடுதல் வருமானம் கிடைக்கும். மற்றபடி இவர்களின் நலன் விரும்பிகள், இவர்களூடாக உதவி செய்பவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பண உதவிகள். அதில் குறை எதுவும் இல்லை. தமது சொந்தங்களுக்கு உதவுவது போல இவர்களுக்கும் அனுப்புகிறார்கள் அதை அவர்கள் காணொளியில் பதிவிடுவதால் எமக்கு தெரிகிறது. அது அவர்களின் பெரும்தன்மையே. -
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து - தமிழர்கள் இருவர் பரிதாபமாக பலி.
Sabesh replied to ஈழப்பிரியன்'s topic in வாழும் புலம்
உண்மை தான்... கேட்ட நேரத்தில் இருந்து மனதுக்குள் ஒரு அமைதியின்மை. விபத்து நடந்த நேரத்தில் நண்பரொருவர் பக்கத்தில் உள்ள பிளாசாவில் நின்று இப்படியொரு பெரிய விபத்து நடந்திருப்பதாக தகவல் அனுப்பியிருந்தார். அந்த பகுதியில் நிறைய நண்பர்கள் உறவினர்கள் வசிப்பதால் உள் மனதில் ஒரே குடைச்சலாக இருந்தது. மாலை தான் இன்னார் என்று தகவல் வந்தது. மிகவும் அதிர்ச்சியும் கவலையுமான விடையம். யார் என்றாலும் உயிர் தான் என்றாலும் தமிழர்கள் சிறார்கள் என்றதும் என்னையறியாமல் அதிக அழுத்தமும் கவலையும் அளிக்கிறது. விபத்து நடத்த காணொளிகள் இரண்டு பார்த்தேன் ஒன்று எதிர்திசையில் வந்த வாகனத்தில் இருந்து dash காம் இல் பதிவு செய்யப்பட்டது. அதன் படி அந்த வாகனம் நின்று (எதிர் திசையில் என்பதால் ஒரே சிக்னல்) சில வினாடிகள் பின்னர் தான் விபத்துக்குள்ளான கனரக வாகனம் சிக்னல் க்கு கிட்டவே வருகிறது. அப்போது அம்பர் இல் இருந்து 100% சிவப்பு விளக்கு மாறி இருக்கும். ஆனால் வேகத்தை குறைக்கும் எந்த அறிகுறியும் இல்லை. கவலையீனம் / கவனச்சிதறல். இரண்டாவது காணொளி பக்கத்து பிளாசாவில் இருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது பார்த்தேன். இவர்கள் பயணித்த வாகனம் சிவப்பு விளக்கில் காத்திருந்து பச்சை மாறியதும் மற்ற வாகனங்களை விட வேகமாக வாகனத்தை எடுக்கிறார்கள் (எனது கருத்து மிக வேகமாக). சாரதியும் சந்தியின் இருபக்கமும் பார்க்கவில்லை என்பது தெரிகிறது. இங்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு வாகனம் டிரைவ் test செய்யும் போது இதை முக்கியமாக பார்ப்பார்கள். சந்தியை அண்மிக்கும் போது, தொடருந்து கடவையை அண்மிக்கும் போது, நடை பாதையை அண்மிக்கும் போது இரு பக்கமும் பார்க்க வேண்டும் இல்லாவிடில் 95% fail தான். டிபென்சிவ் ட்ரிவிங் என்பதும் மிக முக்கியமானது. அதை இவர்கள் தவறியுள்ளார்கள். சட்டப்படி பாரவூர்தி மீது தான் தவறு ஆனால் இவர்களும் பொறுமையாகவும் கவனமாகவும் வாகனத்தை செலுத்தியிருந்தால் 100% தவிர்த்து இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். *எழுத்து பிழை திருத்தம்* -
சிறப்பான முயற்சி புத்தன். வாழ்த்துக்கள். முன்னர் இலங்கை தமிழர்களின் youtube பார்ப்பது வளமை. அவர்களுக்கும் view and ஊக்கம் கிடைக்கட்டுமென்று , ஆனால் பலரின் அலப்பறை தாங்கமுடியாமல் தற்போது பார்ப்பதில்லை
-
துறைத்தலைவர் பதவி கோரி யாழ்.பல்கலை பேராசிரியர் உயிர் மாய்க்க முயற்சி
Sabesh replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நான் ஏறி இருந்தால் அதே பூவரச மர தடி புடுங்கி பூசை நடந்து இருக்கும். ஒருக்கா கோவில் திருவிழாக்கு என்று சொல்லி கோயிலுக்கு போய் வெளிவழிய ஓடி திரிய எதோ கடிச்சு போட்டுது. நாலு ஐந்து பேர் வீட்டை கூடி வர, வேப்பம் குருத்து சப்பினா விஷம் ஏறின கசக்காது என்று வெப்பம் குருத்தை தர... அது படு கசப்பு. துப்பின உடனை அதே வேப்பம் தடியால் நடந்த பூசைக்கு பிறகு கோயிலுக்கு போன வெளிய பத்தை வழிய ஓடி தெரியிறதில்லை -
நிலாமதி அக்கா முழுமையான சுகம் பெற வேண்டுகிறேன்
-
என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி
Sabesh replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in வாழும் புலம்
தன்னார்வமான பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கற்பிப்பது கடமை. ஆனால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை பரீடசை, இதர வகுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று விதிவிலக்கு ஆனால் ஊரார் பிள்ளைகள் தமிழுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், மற்றைய செயற்பாடுகளை போன்று தமிழுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அல்லது பெற்றோரை கடிவது எப்படி சரியாகும். தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல. இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து. கற்பிப்பது மட்டும் தான் சற்று இடிக்கும் விடையம். அதுவும் இங்கு வியாபாரமாக ஒரு பரீடசைக்கு 50-100 டாலர் வாங்கி சான்றிதழ் கொடுப்பதில் எப்படி தமிழ் வளர்கிறது என்பது எனக்கு புரியவில்லை. பிள்ளைகளுக்கு அர்த்தமே தெரியாத சொற்பிரயோகங்களை மனபபடமாக்கி ஒப்புவிப்பதற்கு 100$ எதற்கென்றே விருப்பமில்லாமல் எமக்காக கடமைக்கு போய் வந்த பிள்ளைகளை மேற்கொண்டு போக கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டோம். பல இடங்களில் (நிறுவங்கள்) தமிழ் கற்பிப்பது ஒரு பெரிய வியாபாரம். -
இங்கையும் இறால் அப்படி தான், ப்ரொஸின் ஐ இளக வைச்சு பிரெஷ் எண்டு விக்கிறது. இப்ப நானே ப்ரொஸின் ஆகா வாங்கி விடுவேன். அவர்களுக்கென வீண் சிரமம்
-
இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது? இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல். நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்