
Sabesh
கருத்துக்கள உறவுகள்-
Posts
1228 -
Joined
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Sabesh
-
இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது? இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல். நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்
-
வடக்கிலிருந்து கையால் குப்பை தொட்டிக்குள் போடுவதிலும் பார்க்க தெற்கில் இருந்து காலால் உதைத்து குப்பை தொட்டிக்குள் தள்ளினால் இன்னும் சிறப்பு
-
அலுவலகம் மட்டும் தானா? வீடு இல்லையா?
-
ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாங்கள்.
-
எனது தமிழ் சாப்பாட்டுக்கடை கொள்வனவு சரியான குறைவு. சாப்பாடு (சோறு புட்டு இட்லி பிரியாணி) என்று ஒரு நாளும் வாங்கியது இல்லை (ஓரிரு தடவை வேறு வீடுகளுக்கு அவசரமாக கொடுக்க வேண்டிய தேவைகளைத் தவிர). நான் வாங்குவது அப்பப்போ கொத்து ரொட்டி, ரோல்ஸ், சமோசா/பற்றிஸ், மோதகம் மற்றும் ரோஸ்ற் பாண். வெறும் உருளைக்கிழங்குகை (10 இறத்தல் 3 டாலர்) அவிச்சு அதை மட்டன் gravy ஓட கலந்து மாவிலை உருட்டி பழைய எண்னிக்கை போட்டு குடுக்கிற ரோல்லஸிற்கு ஏன் 1.50 என்று இன்னும் விளங்கவில்லை. அதே போல சமோசா பற்றிஸ் எண்ட பேர்ல வெறும் மாவை எண்னிக்கை போட்டு விற்கிறார்கள் விக்கிரங்கள் 2/$. 10-20% கூட்டுறது பரவாய் இல்லை. 50-100% கூட்டுறது கொஞ்சம் கூட. நீங்கள் நினைப்பது போல சாப்பாட்டுக்கடை வருமானமில்லாமல் இல்லை. 100% லாபம் எடுக்கும் ஒரே வியாபாரம். பலர் பூட்டியதுக்கு காரணம் 1. ஏற்கனவே 4 சாப்பிட்டு கடை இருக்கிற இடத்தில திறக்கிறது. 2. வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறை இல்லை. எதோ நாங்கள் வில்லங்கத்துக்கு போற போல நினைப்பு. 3. தரம்.
-
உக்ரைன் மீண்டும் எழுச்சி பெறும் – பிரதமர் பொரிஸ் ஜோன்சன்
Sabesh replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
கனடாவும் அதே தான் உசுப்பேத்தி வழக்கிறதே தப்பிக்க தானே -
உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை
Sabesh replied to கிருபன்'s topic in உலக நடப்பு
இன்று விழிக்கவில்லை. அவர்கள் வசதிக்கேற்ப கண்களை மூடித் திறக்கும் காட்டு நரிகள். -
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!
Sabesh replied to கிருபன்'s topic in உலக நடப்பு
எனக்கும் அதே டவுட்டா தான் இருக்கு -
ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!
Sabesh replied to கிருபன்'s topic in உலக நடப்பு
டிரம்ப் பற்றி என்னத்தை சொன்னாலும், அந்தாள் இருந்த காலத்தில் இப்பிடியான ஸ்டண்ட் ஒன்றும் செய்யவும் இல்லை புதிய போர் எதையும் ஆரம்பித்ததும் இல்லை. சொல்லப்போனால் அதிக நாடுகளுடனான சுமூக நேச உறவையே பேணினார் -
நம்ம நாட்டிலே எல்லா வளமும் இருக்கு முயற்சி தான் இல்லை. சும்மா அது விலை இது விலை என்று குறை கூறிக்கொண்டே சனம் திரியுது. ஒரு காலத்தில மரங்களுக்கு கீழே விழும் இலைகுலைகளே எருவாக பயன்பட்டது.... ஒரு இடத்தில் சேர்த்துவிட்டு, கொஞ்சம் உங்க, வெட்டி தாட்டு அதுக்கு மேல நாலு மரக்கறி பயிரிட்டால் தானா வந்திட்டு போகுது. கழுவி ஊத்துற தண்ணி போற இடத்தில ஒரு மரம், குளிக்கிற தண்ணி போற இடத்தில ஒரு தென்னை என்று வேலை செய்வது தெரியாமலே செய்யலாம்
-
வாழ்த்துக்கள் சுமே அக்கா
-
இந்தியாவில் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர் ; விசாரணை
Sabesh replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்
பைசர் தான் வயாகிறா செய்றது எண்டு ஆரும் சொல்லியிருப்பார்கள் -
சரியாக சொன்னீர்கள். ஆரம்பத்தில் நம்மவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று பார்த்தேன். இப்போது அநேகமானவர்களின் காணொளிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஆரோக்கியமில்லாத சமூகத்தை உருவக்குகிறோம் என்பது மட்டும் விளங்குகிறது. பலர் ஒரே பொய்யும் புரட்டும். மேலே உள்ளவரில் எனக்கு தூண்டளவும் நம்பிக்கை இல்லை. அதே போல இவர் குறை சொல்லும் you-tuber உம் குறைந்தவர் இல்லை
-
விசுகு அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
-
நல்ல கதை புத்தன் அண்ணா. கிட்டத்தட்ட என் கதையும் அது தான். அந்த காலத்தில பலருக்கு இப்படித்தான் இருக்கும். வெளியிடப் பாடசாலைக்கு 6ம் வகுப்பில் சேர்ந்ததும் வீட்டில ஒரு புதுசா பழசோ சைக்கிள் கேக்க தொடங்கி ஒரு வருசத்துக்கு பிறகு நடந்தது. அதுவரை ஊரில் இருந்து அந்த பாடசாலைக்கு செல்லும் அண்ணா மாரிடம் கதைத்து விடுவார்கள். விடிய வெள்ளன அவர்கள் சொல்லுற நேரத்திலும் பார்க்க 5 நிமிடம் முதலே அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் சென்று வந்தேன். அப்படி ஏற்றிச் சென்ற அண்ணன் ஒருத்தர் உங்கள் நாட்டிலும் இருக்கிறார் இந்த u-tubers ஐ நானும் சில வாரங்களாக பார்க்கிறேன். அவர்களுக்கும் அட் வருமானம் வரட்டுமென்று பார்ப்பேன். சிலர் மிகவும் சிறப்பாக செய்வது போன்று தான் தோன்றுகிறது. நீங்கள் பயன்தரு மரங்கள் வளர்க்க உதவிய காணொளி பார்த்தேன் அதன் பின்னர் நன்றாக பராமரிப்பவர்களுக்கு வழங்கிய பரிசுத்தொகை காணொளியும் பார்த்தேன். சில நேரங்களில் கஸ்ர பட்டு வேலை செய்வது கஸ்ரம் போன்ற தொனியில் உதவிகள் கேக்கும் போது கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்கிறது. சிலரது சூழ்நிலையை புரிந்து கொண்டாலும், பலர் கஸ்ர பட்டு வேலை செய்வதே ஒரு பிரச்சனையாக கூறுகிறார்கள். சிலர் அடிப்படை உதவியாக என்ன வேணுமென்று கேட்டல், வலு சிம்பிளா ஒரு சைக்கிள் எண்டு சொல்லுகினம். பெடியை பார்த்தா 3-4 ஆம் வகுப்பா தான் இருக்கும். O/L அல்லது A/L படிக்கிற பிள்ளை என்றால் பரவாய் இல்லை. நானா கொடுக்கிறேன் ...குடுக்கிறவை குடுக்கட்டும் என்று கடந்து போகிறேன்.
-
நானும் பார்த்தேன். பரவாயில்லாமல் செய்யிற ஒன்று இரண்டில் அவர்களும் ஒன்று என்று நினைக்கிறேன்.