Jump to content

Sabesh

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1329
  • Joined

Posts posted by Sabesh

  1. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

     

  2. ஈழப்பிரியன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.  ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

    • Thanks 1
  3. உண்மைச் சம்பவத்தைத் தழுவிய கதையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    தொடரும் என்று இல்லாமல் முடித்ததில் மகிழ்ச்சி :)
    இரண்டாம் பகுதி இறுதியில் முடிவு தெரிந்தாலும் உங்களின் சுவாரசிய எழுத்தும், ஊர் விடுப்பு ஆர்வமும் தொடர்ந்து வாசிக்காத தூண்டியது.

  4. On 12/10/2023 at 05:18, goshan_che said:

    இப்ப என்ன?

    ரஸ்யா உக்ரேனில் போட்டது அனுமான்

    மத்தாப்பு….

    இஸ்ரேல் காசாவில் போட்டது வெள்ளை பொஸ்பரஸ் ….

    சரி ஓக்கே விடுங்கோ🤣.

    https://www.cbc.ca/news/world/israel-white-phosphorous-gaza-lebanon-1.6994539

  5. 17 hours ago, goshan_che said:

    உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது.

    பேசாமல் திரியின் தலைப்பை “இஸ்ரேல் கமாஸ் மோதலில் நன்னியின் வகிபாகம்” என மாற்றிவிடுமாறு கோரலாம் என நினைக்கிறேன்🤣.

    நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது.

    எனக்கு அவர் மேல் இருந்த/இருக்கும் விம்பம் ஒன்றேதான்.

    இந்த தளத்திலேயே இளையவர், எமது போராட்டத்தின் வரலாற்றை மிகுந்த சிரத்தை எடுத்து, தன்னளவில் நேர்மையாக தொகுக்கிறார். 2009 இன் பின் “நீ என்ன செய்தாய்” என ஆளை ஆள் கேட்டு வாயால் வடை சுட்டு கொண்டிருந்த நம் மத்தியில் இந்த தளத்தை உருப்படியான வகையில் பயன்படுத்தியுள்ளார். இன்னும் 50 வருடத்தில் வந்து பார்த்தால் இங்கே அவர் பதிவுகள் மட்டுமே பிரயோசனமானவையாக இருக்கும்.

    இது மட்டுமே நான் நன்னியின் மீது வைத்திருக்கும் விம்பம். இது அப்படியேதான் இருக்கிறது.

    இதை தவிர அவர் நல்லவர், வல்லவர், முஸ்லிம்களை வெறுக்கமாட்டார், சிகெரட், தண்ணி அடிக்கமாட்டார், ஜல்சா படம் பார்க்கமட்டார், பீடா போட மாட்டார் ….இப்படி எந்த விம்பமும் அவர் மேல் எனக்கு இருந்ததில்லை. இனியும் இராது.

    "நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது." 

    நான் அந்தளவு முட்டாள் இல்லை என்று தான் இன்று வரை நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். 

    எல்லோரின் நீண்ட கருத்துக்களையும் முழுமையாக வசிப்பது இல்லை.  சிலரின் கருத்துக்களை வசிப்பதுண்டு.  அந்த மாதிரியான விம்பமேயன்றி வேறொன்றும் இல்லை.

    "உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது."

    இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.

    • Like 2
    • Haha 1
  6. 3 hours ago, goshan_che said:

    இங்கே நன்னி ஏன் கடுமையாக இலக்கு வைக்கப்படுகிறார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

    யார் அவரை இலக்கு வைக்கிறார்கள் என்பதையும் நான் கண்டு கொள்கிறேன்.

    நான் மட்டும் அல்ல, வாசிப்பவர்களும் இதை காண்பார்கள் என்றே நினைக்கிறேன்.

    காய்கும் மரம்தான் கல்லடி படும் என்பார்கள். நன்னி சிலருக்கு உவப்பிலாதா பழ தோட்டங்களையே உருவாக்கி வைத்துள்ளார்.

    கடுப்பாகுமா இல்லையா🤣.

    எனக்கு அவரின் மேலிருந்த விம்பம் இந்த திரியில் அவர் எழுதிய கருத்துக்களின் பின்னர் உடைந்து விட்டது. :) 🙂

    • Confused 1
  7. நல்ல கதை.  இரண்டாம் பகம் வசிக்கும் போதே கதை இபப்டித்தான் செல்கிறது என்று ஊகிக்க முடிந்தாலும் முடிவை வாசிக்கும் ஆர்வம் இருந்தது.  வாழ்த்துக்கள்.
    தலைப்பில் உடன்பாடு இல்லை.  பெண்கள் என்றால் இப்படித்த்தான் /பொதுவானது என்ற தோற்றப்பாட்டை உருவாகிக்கிறது

  8.  

    பழைய செய்தி தான் ஆனாலும் தொடர்புடையது

     

    https://archives1.thinakaran.lk/2021/04/10/குற்றம்/66081/தெல்லிப்பழை-யூனியன்-கல்லூரி-மாணவர்கள்-மீது-தாக்குதல்

     

    தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

     

    கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

    இந்நிலையில், நேற்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

    எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

  9. 27 minutes ago, Justin said:

    இந்த வீடியோவில் குறிப்பிடும் சில தகவல்கள்  "அப்பிடி இப்பிடித்" தான் இருக்கின்றன, அவதானமாகப் பரிசீலித்துக் கொள்ளுங்கள்.

    13 நாடுகளில் இருப்போருக்கு அவர்கள் முன்னர் 10 வருடங்களுக்குள் கனேடிய விசா எடுத்திருந்தால் அல்லது அமெரிக்காவில் ஏதாவதொரு விசாவை இப்போது வைத்திருந்தால் மட்டும் விசா எடுக்காமல் ETA இல் வரலாம். இது இரண்டும் இல்லையெனில் விசா எடுத்துத் தான் வர வேண்டும். இதை விசா இல்லாத பயணம் என்கிறார், எவ்வளவு சரியெனத் தெரியவில்லை.

    அமெரிக்காவில் H1B இருப்போர் 3 வருட கனேடிய open work permit இற்கு விண்ணப்பிக்கலாம் என்ற  சலுகையும் ஜுலை 17 ஓடு முடிந்து விட்டது - இப்போது இது இல்லை.

    STEM Visa என்றொரு விசேட விசா கனடாவிற்கு இருக்கிறதா? STEM (Science, Technology, Engineering & Mathematics)  என்பது விஞ்ஞான தொழில் நுட்ப துறைகளின் வகைப்படுத்தல். இது  Science, Technology, Entrepreneurship and Management அல்ல!

    ஒரு பக்கம் போம் நிரப்ப 1000 டொலர் என்று பகல் கொள்ளைக் காரர் தொல்லை, இன்னொரு பக்கம் தமக்கே முழுவதுமாகத் தெரியாத விடயங்களைப் பற்றி ஏனையோருக்கு ஆலோசனை கொடுப்போரின் தொல்லை! கனடா இமிகிரேசனைத் தான் வைய வேணும்!   😂 

    நன்றி.  நான் ஆழமாக உன்னித்துப் பார்க்கவில்லை.  நீங்கள் கூறிய படி இது தான் சரி.
    STEM Visa என்றொரு விசேட விசா கனடாவிற்கு இருக்கிறதா? STEM (Science, Technology, Engineering & Mathematics)  என்பது விஞ்ஞான தொழில் நுட்ப துறைகளின் வகைப்படுத்தல்.

    ஆனாலும் எம்மவர்களின் கற்பனை கதைகளுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்

     

  10. 3 பேர் போராடும் போராட்டத்திற்கு 30 மீடியாஸ் இருக்குது போல

    1 hour ago, தமிழ் சிறி said:

    12.07.2023 அன்று  நடந்த சம்பவத்தின், காணொளி.

     

  11. 51 minutes ago, இணையவன் said:

    சாதாரண வேக நடை மணித்தியாலத்துக்கு 8 கிமீ

    குறுகிய தூர வேக நடை உலக சாதனை 5 கிமீ - சுமார் மணித்தியாலத்துக்கு 16 கிமீ வேகம்.

    8 கிமீ வேகத்தில் நித்திரை ஓய்வு இன்றி நடந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

    யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான 140 கிமீ தூரத்தை 9 மணித்தியாலத்தில் கடந்துள்ளனர். மணிக்கு 15.5 கிமீ வேகம். 😳

    ஏதோ சுற்றுகிறார்கள். 🤣

    நானும் அதையே தான் நினைத்தேன்.  அங்கத்தையே வெயில், பாதை நிலவரத்துக்கு 5km /hour நடக்கிறதே கடினம்

  12. இலங்கை உள்நாட்டுப் பிரச்னை.  இது ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்க நினைப்பதாக நினைத்ததால் மூட்டிவிடப்பட்ட சண்டை.  வித்தியாசம் இருக்கே.

    • Thanks 2
  13. On 9/6/2023 at 20:03, Justin said:

    இயற்கை இளநீரில் 10 கிராம் வரை சீனி இருக்கிறது என்பதைக் கவனித்து அதற்கேற்ப நுகர வேண்டும். 

    உங்கள் விளக்கங்களிற்கு நன்றி.
    நீரிழிவை இரண்டாக பகுக்கிறார்களே, இன்சுலின் resistance, அதிகளவு சீனியை உட்கொள்வதால் சிறுநீரகம் process  பண்ணாமல் விடுவது (கேள்விப்பட்டது/புரிந்தது இப்படித்தான் பிழையாகவும் இருக்கலாம்).
    இரண்டிற்குமே இயற்கை சீனி (பழங்கள், தனியங்கள்) ஆகாதோ?

  14. சரி நிலை நிறுத்தினால்தான் என்ன.  கியூபா ஒரு தனி நாடு தானே.  அவர்ககளின் நாட்டு முடிவுகளை அவர்களே எடுக்கும் உரிமை இருக்கும் தானே. 

    • Haha 1
  15. 10 minutes ago, Justin said:

    பிரச்சினையின் மையத்தூணைத் தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள். உண்மையில், வறுமை கல்வியைப் பாதிக்காமல் இருக்க போதிய உதவிகள் ஏற்கனவே கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன - வெளியேயிருந்தும், உள் நாட்டிலிருந்தும்.

    இதற்கு மேலதிக நிதி அவசியமில்லை என நான் நினைக்கிறேன், என்னுடைய அனுபவத்தின் படி.

    ஆனால், எங்கே பிரச்சினை இருக்கிறது? கல்வி அடைவு வீதத்தை உயர்த்துவதில் பள்ளி நிர்வாகங்களிடம் உண்மையான அக்கறை இல்லை. எப்படி மேற்கு நாடுகளின் சில உயர்கல்வி நிலையங்களில் மில்லியன் டொலர்கள் நன்கொடை பெறும் விளையாட்டுத் துறையைத் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்களோ, அதைப் போன்ற பெரும் நிதியை உள்வாங்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

    உண்மை.  அவர்களிடம் கேள்விகளைக் கேட்டாலோ அல்லது கல்வி மேம்பட்டு தொடர்பாக கதைத்தலோ, மறைமுகமாக உங்கள் உதவிகள் தேவையில்லை என்று இன்னொரு அமைப்பை அல்லது நபரைத் தேடுவார்கள்.
    பகட்டுக்கும், பேருக்கும் உதவி செய்யும் செல்வந்தர்கள் போல வாழும் பலர், புலம்பெயர் நாடுகளில் இருப்பதும் எமது சமூகத்தின் சாபக்கேடு.

  16. On 2/6/2023 at 11:45, MEERA said:

    நான் நினைக்கிறேன் இந்த விடயத்தில் தான் நானும் ஜஸ்ரினும் முதன் முதலாக ஓர் கோட்டில் நிற்கின்றோம்

    நானும் தான் :)

  17. On 2/6/2023 at 03:11, MEERA said:

    வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் உதவி செய்யணும் ஊரில் உள்ளவர்கள் செய்ய கூடாதா? 

    ஊரில் உள்ளவர்களும் பாடசாலை சமூகமும் பெளதீக வளர்ச்சிக்குக் காட்டும் அக்கறையும் முனைப்பும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு காட்டுவதில்லை என்பதை பல இடங்களிலும் உரையாடல்களிலும் உணர்தேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.