Jump to content

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4856
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by புலவர்

  1. ஒரு பலமான வெளிநாடொன்றின் பூரணமா ஆதரவின்றி தமிழ்மக்கள் சிறிலங்காவின் தேர்தல்கள் மூலம் வெளிக்காட்டும் முடிவுகள் சர்வதேச அந்தஸ்தைப் பெறாது.தமிழ்மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதும். ஒட்டு மொத்த தமிழ்க்கட்சிகளும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பமதும் ஒரே செய்தியைத்தான் சர்வதேசத்துக்குச் சொல்லும். 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது.தமிழக்காங்கிரஸ் சார்பில் குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் நின்று கணிசமான தமிழ்வாக்குகளைப் பெற்றிறிருந்தார்.இப்பொழு தமிழ்க்காங்கிரஸ் தொடர்ச்சியாக ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்து வருவதால் அதன் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன?
  2. விஜயகாந் ஒரு நல்ல மனிதர். ஈழத்தமிழர்கள் பால் அதிக கரிசனை கொண்டவர். ஒரு மனிதனின் சாவு எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியவர். அனைத்து மக்களும் இரங்கலைத் தெரிவிக்கிறார்கள்;. தமிழ்சினிமாவுக்கே பொருத்தமில்லாத கநறப்பு நிறத்தில் சினிமாவில் சாதித்துக்காட்டியவர். ஜெயலலிதா கருணாநிதி அரசியலில் உச்ச நிலையில் இருந்தபொழுதே துணிவாக அரசியலுக்கு வந்து குறகிய காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தவர். தன:னடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு சமமான உணவை கொடுத்துத மனித நேயம் படைத்தவர். ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். உல்லாவற்றுக்கும் மேலாக தமிழக ஊடகவிபச்சாரிகளுக்கு நேராக காறித்'துப்பியவர். தமிழினத்துரோகி கருணாநிதி போல பக்கா அரசியல்வாதியாக இருக்காமல் நல்ல மனித நேயத்தோடு கூடிய மனிதன். கருணாநிதி இறந்த பொழுது ஈழத்தமிழர்கள் மகிழ்சியடைநதார்கள். கப்டனின் இழப்புக்கு எல்லோரும் இரங்கல் தெரிவிக்கிறார்கள். இதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நஜவாழ்வில் நடிக்கத்தெரியாத மனிதன்.
  3. உரம் விக்கிற விலையில மாட்டுச்சாணியை இவர்களுக்கு வேஸ்ட் பண்ணக்குடாது வேணுமெண்டால்......
  4. அந்தப் பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட முடியுமா?இன்னும் அந்தப்பிரகடனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று என் போன்ற அப்பாவி மக்களுக்குத் தெரியவில்லை.
  5. https://www.bbc.co.uk/news/uk-england-london-67770604 இப்பதான் பிபிசி செய்தியைப் பார்த்துவிட்டு யாழைத்தட்டினேன். செய்தியை இணைக்கலாம் என்று அதற்குள் கோஷான் செய்தியைப் பகிர்ந்து விட்டார்.செஸ் விளையாட்டில் தொடர்ந்து தமிழர்கள் முன்னிலை வகிப்பதற்கு ஏதோ ஒரு காரணம். இருக்க வேண்டும். அவர்கள் மரபணுவில் ஊறியிருக்கிறது.
  6. ஆனால் மக்;களால் தெரிந்தடுக்கப்பட வேண்டிய நாட்டின் தற்போihயஜனதிதியாகிய ரணில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மக்களால்நிராகரிக்கப்பட்டவர்.ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியவர். இந்தியாவின் நாணயங்களை இலங்கையில் புளக்கத்திற்கு விட தீர்மானித்துள்ள நிலையில் அந்த நாட்டுக்கு இறையாண்மை எங்கே இருக்கின்றது?
  7. யாழப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்ததற்கு பாரட்டலாம். மாணவர்களிடம் அதிகம் பணம் அறவிடாமல் நியாயமான பணத்தைப் பெற்று நடத்தினால் நல்லது.
  8. https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Ftenor.com%2Fview%2Fvadivel-memes-gif-20634850&psig=AOvVaw0dkYowK-LvTdEZ3L6g_PQ7&ust=1702754157837000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBEQjRxqFwoTCPj6-euTkoMDFQAAAAAdAAAAABAD உனக்குத் தொடர்பில்லை ஓக்கே....ரணிலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னா பாரு!!!
  9. என்னையா இது?பெளத்த சாசன அமைச்சுக்கே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இமாலயப் பிரகடனம் பற்றி ஒன்றுமே தெரியாதாம்!!!!!!!
  10. புலிகள் இருந்த வரை இந்தியாவுக்கு தெற்குப் பகுதியில் எந்த நாட்டுக்கப்பல்களினதும் நடமாட்டம் இருந்திருக்க வில்லை.இந்தியாவின் ஒரே பாதுகாப்பு அரணாக இருந்த தமிழர்களையும் பகைத்துக் கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றி வி;டு சீனாவுடன் உறவாடும் சிறிலங்காவை பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றி வர பகை நாடுகளை வைத்துக் கொண்டு இந்தியா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?இறைமை மிக்க தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பானது. ஆனால் இந்தியா அதை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இனி இநைமை மிக்க தமிழர் தேசம் உருவானாலும் அது இந்தியாவுக்கு ஆதரவாக மனத்தளவில் இருக்குமா என்பதும் சந்தேகமே.
  11. இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வு முயற்சி என்றால் சம்பந்தப்பட்வர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம்?ஏன் ஒரு தமிழ்பத்திரிகையிலோ இணயத்தளத்திலோ இன்று வரை இதூன் இமாலயப் பிரகடனம் என்று குறிப்பிடக்கூடிய அளவில் செய்திகள் வரவில்லை.பிரிஎவ் அமைப்பே தங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறது.உலகத்தமிழர் அமைப்பால் ஒரு 50 பேர் கொண்ட கூட்டத்தையாவது கூட்டி விடயத்தைத் தெரிவிக்க முடியாத கையறு நிலையில்தான் காணப்படுகிறது.இது போலித்துவாரகாவின் மாவீரர்நாள் உரை போல இந்த இமாலயப் பிரகடனும் பிசுபிசுத்துப் போகப் போகின்றது.இப்படி ஒரு பிரகடனத்திற்கு புத்த பிக்குகள் எ பிரதான எதிர்கட்சிகள் ஆதவளிப்பதில் இருந்தே சந்தேகம் மேலும் வலுக்கிறது. இந்த பிரகடனத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்தாகக் கூறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கறிவைத்து ரணில் போடும் குள்ளநரித்திட்டம்தான் இது.
  12. சஜித் பீரேமதாசாவின் தேர்தல் விஞ்ஙாபனத்தில் மூன்றில 2 பங்கு இமாலயப் பிரகடனமாம் என்றால் யோசித்துப் பாருங்கள் தீர்வுத்திட்டம் எவ்வளவு பலவீனமானதென்று. அதனால்தான் இந்தத்தீர்வுத்திட்டத்தை பிக்ககள் எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்க். அதுமட்டுமல்லாமல் தமிழர் அடையாளத்தை அழிக்கச் சொல்லி சஜித் சொல்கிறார் அது படிப்படியாக நடைபெறும் என்று சுரேன் சொல்கிறார். இது தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் இல்லை. தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் குள்ள நரி ரணிலின் தீர்வுத்திட்டம்.
  13. ஆனால் இந்த இமயமலைப் பிரகடனத்தை யாரும் சிலாகித்துப் பேசியதாகத் தெரியவில்லை. துவாரகாவின் மாவீரர் உரை அளவுக்குக் கூட தமிழ் ஆய்வாளர்களோ அல்லது பத்திரிகையாளர்கனோ அது பற்றிப் பேசவில்லை. நாட்டுநடப்புகளை நீண்டகாலமாக அவதானித்து வரும் எனக்கு உலகத்தமிழ்ப் பேரவை சரேன் சிறிலங்காவுக்குச் சென்ற பின்னர்தான் இந்த இமயமலைப் பிரகடனம் தெரிய வந்தது. திம்புப் பிரகடனம் இந்தோ சிறிலங்கா பிரகடனம்>ஒஸ்லோப்பிரகடனம் எல்லாம் உடனே தெரிய வந்த மாதிரி என் இந்தப் பிரகடனம் தெரியவில்லை. இந்த இமயமலைப்பிரகடனம் ஏதாவது தமிழ்ப்பத்திரிகையிலோ அல்லது தமிழ் இணையத்தளத்திலோ வந்திருப்பதாக நான் அறியவில்லை.வேறுயாராவது அறிந்திருக்கிறீர்களா?.
  14. இருவரையும் விட சட்டத்தரணி தவராசா இதற்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறேன்.
  15. அதென்னப்பா!இமயமலைப் பிரகடனம். மகாநாயக்கர்களுக்கும் அதுபற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறதாம். ஆனால் தெரிய வேண்டிய தமிழ்மக்களுக்குத் தெரியவில்லையே. இமயமலைப் பிரகடனம் என்றால் இந்தியா இதற்குள் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதானே பொருள். யாரெல்லாம் இந்தியாவுக்குகாவடி தூக்குகின்றனரோ அவர்கள் பங்கெடுக்கும் பேச்சுவார்தைகளால் எந்தப் பயனும் கிடையாது . ஆகவே அவர்கள் பங்குபெறத்தேவையில்லை. இது பட்டறிவு.
  16. இந்த சுரேன்தான் சோனியா அம்மையார் கருணையோடு பேசினார். அவர் முகத்தில் கருணையைத்தன்னதால் பார்க்க முடிந்தது என்று அறிக்கை விட்டவர்.இனப்படுகொலைைப் பங்காளிக்கு வக்காலத்து வாங்கின ஆள் பேச்சுவார்ததைக்குப் போனால்என்ன நடக்கும்?. மேலும் உலகத்தமிழர் பேரவையில் இம்மானுவல் அடிகளாரையும் சுரேன் என்ற 2 பேரையும் கொண்ட அமைப்பு. வேறுயாராவுது மக்களுக்கு அறிமுகமானவர்கள் இருக்கின்றார்களா?
  17. ஒரு லோயருக்கு 3 இலட்சம் ஈயூரோக்கள் தேவை என்டுறது நம்பக் கூடியதாக இல்லை. அதுவும் ஓரேயடியாக செலுத்துவதென்பது முடியாத காரியம். 300 யூரே 400 யூரோ என்றால் நம்பலாம். இது சேர்க்கும் காசை ஒரேயடியாகச் சேர்க்க வேண்டும் என்று நினைத்துச் செயற்பட்டவர்களின் வேலையாக இருக்கலாம். ஆனால் இந்தத் தொகை ஒருவர் வாழ்நாள் பூராவும் உழைத்தாலும் சேர்க்க முடியாத தொகையாக இருக்கிறது. நிராஸ் டேவிட் அதிகமாக அறுப்பதை விட்டு விட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கதைக்க விடுவது நல்லது.
  18. முதல்ல மழைக்காலங்களில் வீதியில் எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!
  19. இந்தியா மீட்பரே கிடையாது. தமிழுழு விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் அமெரிக்க சார்பு நிலை எடுத்த சிறிலங்காவை தட்டி லவக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதனால் பேராளிகளுக்குப் பயற்சிகளை வழஙக பிரதமர் இந்திராகாந்தி முன்வந்தார்.அப்போது பனிப்போர்காலம். அணிசேரா நாடு என்று இந்தியா சொல்லிக்கொண்டாலும் ரஸ்யாவுடனான நெருக்கம் அதிகமாக இருந்தது. வெளியுறவுச்செயலராக தமிழரான பாரத்த சாரதியை நியமித்தார். பார்த்தசாரதி கடும் அழுத்தம் காரணத்தால் 87 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பொழுது பாரத்தசாரதியை நுpக்குமாறு ஜேஆர் விடப்பிடியாக நின்றார். அதனால் தமிழர்களின் விரோதியான மலையாளி தீக்சிற் உள்ளே கொண்டுவரப்பட்டார். அரசியலில் பழுத்த அரசியல்வாதியான ஜேஆர் ராஜீவ் காந்தியை எளிதாகக்கையாண்டார்.87 ஒப்பதத்தந்துடன் அனைத்து இயக்கங்களும் இந்தியாவின் கட்டளைக்கமைய ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்தனர்.ஆனால் இந்தியாவின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவுடனேயே மோதும் நிலைப்பாட்டுக்கு வந்தார். 87 நிலமை இப்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.அன்று அமெரிக்கா இருந்த இடத்தில் இன்று சீனா மிம மிக ஆழமாகக் கால்பதித்து விட்டது.அதற்கான செயற்பாடுகள்தான் போலித்துவாரகா வின் வெளிப்படுகையும் இந்தியாவின் துணையுடன் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்ற காசியானந்தனின் அறிக்கை.அன்று தலைவர் இந்தியாவை நம்பவில்லை அனால் தமிழ்மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களும் இந்தியாவை நம்பத்தயாரில்லை. அத்துடன் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் இந்தியாவையோ உலகநாடுகளையோ நம்பத்தயராக வில்லை. துவாராக விடயம் பிசுபிசுத்துப் போனதால் இந்தியா நேரடியாக சிறிலங்கா அரசுடன் பேசவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டார்கள்.
  20. இருவருமே தமிழரசுக்கட்சியின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள். சுமத்திரனுக்கு ஆளுமை இருக்கிறது. ஆனால் இனநலன்சார்ந்த சிந்தனையோ ஏனையோரை அரவணைத்துச் செல்லும் பக்குவமோ அற்றவர். சிறிதரன் பாம்புக்கு வாலும் மீனுக்குத்தலையும் காட்டக்கூடியவர். அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். இருவரில் ஒருவர்தான் என்றால் சிறதரனே எனது தெரிவு. சுமத்திரன் தலைவராக வந்தால் கட்சி மேலும் பிளலவுபடும்.சுமத்திரன் சிறிதரன் என்று வரும் போது சிறிதரனே அனத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்.
  21. நிலாந்தனின் மீட்பர் இந்தியாதான்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.