Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரதி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  14,102
 • Joined

 • Days Won

  31

Everything posted by ரதி

 1. நன்றி நானும் உப்பு போடுவதில்லை ...ஆனால் இங்கு பல பேர் உப்பு போடுவதை கண்டு இருக்கிறேன் ...டயட் இருப்பவர்கள் கூட சலாட்டுக்கு உப்பு போடுவார்கள்.
 2. அது சரி நீங்கள் வேங்கைப் புலி பரம்பரைக்குத் தானே சப்போட் பண்ணோணும்
 3. அந்த சீட்டில் அமர்வதற்காய் சம்மந்தரின் இறப்பை அவரது கட்சிக்காரர் தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கினம்
 4. இணைப்பிற்கு நன்றி ...அந்த காலத்தில் போராட்டங்களுக்கு போனவர்களுக்கு பல விதமான அனுபவங்கள் இருக்குது ...இந்த கதை எழுதி சில காலங்கள் இருக்குமென நினைக்கிறேன்
 5. இங்கு யார், யார் சலட் செய்யும் போது உப்பு போடுவீர்கள்?...ஹெல்த்தியான சலட்டுக்கு உப்பு சேர்ப்பது சரியா
 6. உண்மையிலேயே இப்ப பிரித்தானியாவில் வறுமையா?...பலர் அரசிடம் உதவியும் பெற்றுக் கொண்டு கைக் காசுக்கு வேலை செய்யினம். வேலைக்கு போறாக்கள் தான் அந்த டக்ஸ் ,இந்த டக்ஸ் என்று கட்டுறம் ...பெனிபிட் எடுக்கிறவை எங்கட காசில நல்லாயத் தான் இருக்கினம்
 7. ரிசாதத்தின் மாமனாரும் , மச்சானும் தான் இதில் நேரடியாய் சம்மந்தப்பட்டு இருப்பினம் ...அவர்கள் வெளியே வந்தால் மகிந்தா சகோதரர்களை விட அப்பாடக்கிகளாய் இருக்கோணும்
 8. இத் திரியில் எனது நோக்கம் நான் சொல்வது சரி என நிறுவுவதில்லை ...சிலவற்றை தெரிந்து கொள்ளவே எழுதினேன் ...என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை ....உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ...உங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ....மீண்டும் வேறொரு தலைப்பில் சந்திப்போம் ...நன்றி
 9. இப்பவும் அனுராதபுரம் போன்ற பகுதிகளில் தமிழ் வியாபாரிகள் பேரும் புகழுடன் இருக்கின்றனர்....போய்ப் பாருங்கோ . எனது பார்வையில் நாட்டை தமிழனிடம் கொடுக்காததற்கு காரணம் ,கொடுத்திருந்தால் எந்த சிங்களவர்களும் இன்று நாட்டில் இருந்திருக்க முடியாது ...அன்றைய கால கட்டத்தில் சிங்களவரை விட ,தமிழர் தான் கல்வியறிவிலும், பெரிய பதவியிலும் இருந்தார்கள் ...அப்படியிருந்தும் சிங்களவர்களிடம் நாட்டை கொடுக்க என்ன காரணம் ?
 10. இந்த திரியில் வெட்கமே இல்லாமல் கருணாவை முதலில் கொண்டு வந்தது யார் ?... பொறுக்கிகளை எல்லாம் இயக்கத்தில் வைத்திருந்த உங்கட தலைவரும் ....தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்கிறீர்கள் ...அதற்கு ஒரு பச்சை வேற ...புலிகளையும் ,தலைமையும் அவமானப்படுத்த எதிரி தேவையில்லை ...உங்களை போன்றவர்களே போதும்
 11. என்னை பொறுத்த வரைக்கும் இனத்திற்காக போராட போனவர்களை விட வேறு காரணங்களுக்காய் எதற்காய் போராட போகின்றோம் என்ற தெளிவு இன்மையால் போராட போனவர்களே அதிகம் முஸ்லீம்களுக்கு எதிராய் சிங்களவர் கலவரத்தை தூண்ட காரணம் அவர்கள் நடந்து கொண்ட முறை ...அத்து மீறி போனதால் அவர்களை அடக்க வேண்டிய தேவை சிங்களவர்களுக்கு உண்டு . அதே போல அந்த காலத்திலும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சிங்களவர்களுக்கு சில ,பல காரணங்கள் இருந்திருக்க கூடும் ...தம்மை மீறி போய் விடுவார்கள் ,தமிழர்களின் அசுர வளர்ச்ச்சி , நாட்டை துண்டாக்கி விடுவார்கள் என்ற பயம் எல்லாவற்றையும் விட நீங்கள் சொன்ன பண்டாரநாயக்கா போன்ற அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சுயநலனுக்காய் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தார்கள் அதைத் தான் நானும் சொன்னேன்...தமிழர்களுக்கு முயற்சி இருகிறது ,வசதி இருக்கிறது சிங்களவர் பகுதியில் போய் குடியேறுகிறார்கள்.... சிங்களவர்களுக்கு அந்த வசதி இல்லை ...ஆகவே தமிழர்களிடம் இருந்து புடுங்கி எடுக்கிறார்கள் . தமிழர்கள் பிழைப்புக்காய் தமிழர் பிரதேசங்களை விட்டு சிங்களவர் பகுதியில் போய் குடி இருப்பதால் தானே சிங்களவர்கள் தமிழர் பகுதிக்கு வருகிறார்கள் ...அடாத்தாய் பறிப்பதை தவிர்த்து பார்த்தால் சிங்களவர்களிலும் பிழை இல்லை
 12. என்ன தலைப்பு வைக்கிறது நீங்களே யோசித்து சொல்லுங்கோ
 13. இங்கே இருக்கும் பிள்ளைகள் விடுமுறையில் பாட் டைமா வேலைக்குப் போறதும். அந்த பிள்ளைகள் பள்ளிக்கே போகாமல் குழந்தை பருவத்தை அனுபவிக்காமல் வறுமை காரணமாய் வேலைக்கு போவதும் ஒன்றா அண்ணா
 14. எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல
 15. தமிழ்சிறி கோசான் நீங்கள் சொன்ன மாதிரி தலைப்பை மாத்த சொல்லி நிர்வாகத்தினரிடம் சொல்லி இருக்குது ...பார்ப்போம்
 16. நான் முதலே எழுத நினைத்தது மறந்து விட்டது ...தமிழ் இளைஞ்ர்கள் முதலில் போராடியிருக்க வேண்டியது தமிழ் அரசியற் கட்சிகளுக்கு எதிராய் ...அவர்கள் உருப்படாதவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் அந்த கட்சியில் சேர்ந்து அல்லது ஒரு புதிய கட்சி தொடங்கி தமிழ் மக்களுக்காய் சேவை செய்திருக்க வேண்டும்
 17. நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா
 18. தமிழருக்கு எதிராய் கலவரங்கள் அதிகம் நடக்க காரணம் அவர்கள் திருப்பி அடித்தது தான் ...முஸ்லீம்கள், மலையக தமிழர் இந்த விடயத்தினை சுமுகமாய் கையாண்டனர் ..அதனால் அவர்களுக்கு எதிரான கலவரங்கள் குறைவு
 19. ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை இரு ஊசி போட்டவர்களுக்கும் கொரோனா இருக்கும் ...அவர்கள் தான் தாங்கள் ஊசி போட்டு விட்டோமே என்று கவலையீனமாய் இருப்பார்கள் ...அவர்கள் மூலமாய் தான் முக்கியமாய் மற்றவர்களுக்கு பரவ கூடும் ...நான் பொதுவுடத்தில் ,வேலையிடத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு தான் நிக்கிறேன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.