கோகிலா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  37
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About கோகிலா

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

962 profile views
 1. யுத்த காண்டம் அணித்துரை.......வழங்கியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தூயவனின் இன்னுமொரு மருத்துவப்போர் நாவலாக யுத்த காண்டம் வெளிவந்தது. திருதராட்டினனுக்கு கண்தெரியாத காரணத்தினால் சஞ்சயன் தன் ஞானக்கண்ணால் பாரத்தப்போர் நடவடிக்கைகளை தன் அகக்கண்ணால் கண்டு கூறியது போல் தூயவன் எங்களுக்கும் போர்முக செயற்பாடுகளைத் தன் ஊனக்கண்ணால் கண்டு கூறுகின்றார். யுத்த காண்டம் ஒரு படையணி நகர்வினை நுணுக்கமாகச் சித்தரிக்கும் நாவலாக அமைகிறது. புற நானூறுப் பாடலொன்று( 225) படை நகர்வினைச் சிறிது உயர்வு நவிற்ச்சியாகக் கூறுகின்றது. சோழன் நலன்கிளியினுடைய படையின் நகர்வு தொடங்கி விட்டது. முன்னணி வீரர் பனையின் நுங்கினைக் குடித்துச் செல்கின்றனர். இடையணி வீரர் பனம் பழம் உண்டு செல்கின்றனர். இவ்வாறு சோழன் நலன்கிளியின் படைபெருக்கத்தை ஆலத்தூர் கிழார் மிகைப்படக்கூறுகிறார். ஆனால் தூயவனோ 32 கிலோ மீற்றர் தூரத்தினை ஒரு படையணி நடந்து நகர்ந்து செல்வதை உடன் நகர்ந்து விவரிக்கிறார். ஒரு படப்பிடிப்புக் கருவியைக் கையில் கொண்டு அதன் வில்லையூடாகப் பலவற்றை தூரப் பார்வையாகவும் அண்மித்த பார்வையாகவும் எமக்கு வழங்குகிறார்.இப்படையணி நகர்வினைக் காண ஆயிரம்கண்கள் வேண்டுமெனக் கூறப்படுகின்றது. ஆண் போராளிகளும் பெண் போராளிகளும் தங்களிற்குறிய ஆயுதங்களுடன் நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையுமாக விரைந்து வரும் காட்சி மனதில் ஒரு புதிய உட்சாகத்தினை ஏற்படுத்துகிறது. இந்த படையணி புரியும் சமர், அச்சமரிலேகாயமுற்ற வீர வேங்கைகளின்னை, மருத்துவப்போராளிகள் பாராமரிக்கும் பக்குவம் இந்த நாவலிலே சித்தரிக்கப்படுகின்றது. தமீழப்போர் வரலாறு பல வியக்கத்தக்க சாதனைகளைத்த தன்னுள் அடக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று காயமடையும் போராளிகளைக்காப்பாற்றும் மருத்தவ நடவடிக்கையாகும். தூயவன் ஒரு மருத்த போராளி. முன்னணியிலே போர் நடக்க பின்னணியிலே காயமுற்றவரைக்காப்பாற்றும் போர், இப்போரிலே தூயவன் அதனை மீன்டும் யுத்த காண்டத்திலே விபரிக்கிறார். தமீழீழவானிலே மிதந்து, இனிய கானங்களை பாடிய சிட்டு, யுத்த காண்டம் சித்தரிக்கும் களத்திலேயே மாவீரனாகின்றான். பாரிய காயத்துடன் வரும் அவ்வரிப்புலிக்குயிலினைக் களமுனையினை விட்டு வேகமாக வெளியேற்ற முயற்ச்சிக்கும் போது இன்னுமொரு எறிகணை அங்கு விழுந்து காயமடைந்த அம்மறவனை மாவீரனாக்கிறது. என் எழுத்துப்பணி தொடரும்... ஆம் ஈழ விடுதலைக்காக உறுமிய புலியொன்று தன் பேச்சடங்கி மாவீரராய் வீழ்ந்து வீர காவியமாகியது.
 2. இறுதிச்சமர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலே, ஈழத்தின் விடுதலைப்புலிகளின் கட்டளைத்தளபதி திரு.தீபன் உலக மக்களுக்கு விசேட ஒரு செய்தியினை வழங்கியிருக்கும் இந்த வேளையிலே, யுத்தம் நடந்துகொண்டிருக்கும் யுத்த களங்களில், தமிழீழ விடுதலையை தம் இறுதிமூச்சாக கொண்டு கடும் சமர் புரிந்துகொண்டிருக்கிறார்கள
 3. ஓவியம் வரைய விரும்பிய மாணவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விருப்பமுள்ள கருத்துக்கள உறுப்பினர்களுடன் உரையாட விரும்புகிறேன். முதலில் அறிமுகம் அதன் பின்பு அற்புதமான ஆக்கங்களை இதே யாழ் மண்ணில் படைப்போம். முதலில் நான் பென்னிசிலினால் வரையும் ஓவியங்களினையே இங்கே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு இயந்திரம் இயங்க எப்படி இயற்கையின் வெப்பவியல், ஒலியியல், ஒளியியல் தத்துவங்கள் அவசியமோ, அதே போன்று ஓவியக்கலையிலும் சில தத்துவங்கள், கோட்பாடுகள், விதிகள் உண்டு. அந்த விதிகளை நாம் தெளிவாக புரிந்துகொண்டால் எல்லோராலும் இலகுவாக ஓவியம் வரைய முடியும். ஓவியம் வரைவதற்கு ஒரு காட்சியினை மனதில் அமைத்து பதிப்பது முதலில் அவசியம். உதாரணத்துக்கு ஒரு மனிதனின் உடலினை வரையவேண்டுமென்றால், மனிதர்களின் கைகள், கால்கள், தலை, நெஞ்சு, வயிறு, தோல்பட்டை, விரல்கள், தொடை இப்படியான அடிப்படையானவற்றை முதலில் நாங்கள் மிக அவதானமாக நோக்கவேண்டும். ஒரு மூட்டையில் இருந்து வெளிவரும் கோழிக்குஞ்சுகள் எப்படி ஒரு ரகமாக இருக்குமோ அப்படியே மனிதர்களும். முக அமைப்பு மனிதனுக்கு மனிதன் வேறுபட்டாலும் அதன் அளவுகளில் ஒன்றாகவே இருக்கும் என்பதை நாம் முதலில் கவனமாக கற்றறியவேண்டும்.
 4. சுயமரியாதையுள்ள தமிழன் நான். ரொம்ப மனவேதனை இந்த பதிலை வாசிக்க . சரி நீங்கள் சொல்லாவிட்டாலும் நாங்கள் எங்கள் வழியிலேயே திரும்பிப்போகின்றோம்.
 5. படம் இணைப்பது எப்படி? How to use BB code? யராச்சும் உதவினா நல்லாவிருக்கும். எனக்கு கம்பியூட்டரன்னா வேப்பங்காய்போல!
 6. வணக்கமுங்கோ ஆதிசேசா. அதுக்கென்ன யமாய்த்திடலாம். அது சரி எப்படியுங்க மற்றைய இடங்களில பதில் எழுதுவது? படம் இணைப்பது? கம்பியூட்டரில நான் வீக்குங்க.
 7. தாயகனுக்கும் நன்றிகள் உரித்தாகுக. அழகு வெளியழகில் இல்லை. உள்ளழககில் உண்டு. உள்ளம் அழகுபெற வெளிப்புறம் அழகுபெறும். ஆமா என்னை வரவேற்றுள்ளீர்களே. பல பதில்களை பார்க்காது தாண்டி பதில்போட்டுள்ளீர்கள். நான் ஒரு ஓவியன் அதுதான் என் சிறப்பம்சம். உங்களுடன் தொலைபேசியில் கதைத்தபடியே உங்கள் முகத்தினை என்னால் ஓரளவுக்கு வரையும் ஆற்றல் சிறிதளவு கொண்டிருக்கிறேன். அவ்வளவே!
 8. அண்ணை, நிற்கிற இடத்தில நிண்டு ஒண்ணுக்கு அடித்து நிலத்தில தான் கீறமுடியும். அதை பதிப்பது எப்படி எண்டது எனக்கு சத்தியமாய் தெரியாது.
 9. நன்றிகள் குமாரசாமி அண்ணை, கறுப்பி (அண்ணா +அக்கா) விரும்பியதை போட்டுக்கொள்ளுங்கோ. விடுதலை,வறுமை,கொடுமை என ஒருங்கிணைத்த ஒரு ஓவியத்தை தரமுடியுமா? ஏன் தரமுடியாது? எதுவும் தரமுடியும் என்னால். மனித முக அமைப்பினை அக்குவேறு ஆணிவேராக பிரித்தறிந்துவைத்திருக்கிற
 10. நன்றிகள் சுவே, புலவர், புஸ்வாவிஜி,தூயா, நுனாவிலன், தமிழ்சிறி. உங்களிடம் ஏதேனும் கருக்கள் இல்லையெண்டு நான் நினைக்கவில்லை. கேட்க தயக்கம். தயக்கம் இல்லாது சிந்தனையினை குதிரைபோல தட்டி ஓடவிடவேண்டும். அப்போது ஒழிந்திருக்கும் பல இயற்கை வினோதங்கள் ஓவியமாக வெளிவரலாம். உதாரணமாக புஸ்ஸுக்கு எறிந்த சப்பாத்தினை நாமெல்லோம் பார்த்தோம். பல கார்ட்டூண்கள் வெளிவந்தன. எல்லோரும் புஸ்ஸினை வேதனையில் ஆழ்த்த முனைப்புக்கொள்ள நான் என் தூரிகைகளால் அந்த சப்பாத்து எவ்வளவு அவமானப்பட்டிருக்கும், கவலைகொண்டிருக்கும் "போயும் போய் இந்த மனுசன் பத்திரிகையாளன் ஒரு அடி முட்டாளுக்கு எறிந்துவிட்டானே என்று". அதன் முகக்கவலைகளை வர்ணிக்க என்னால் முடியும்? யாராவது இப்படி கேள்விகள் கேட்க்கமாட்டீர்களா? முனிவர் பாடச்சாலையில் சைட் அடிப்பது பற்றி சொல்லிய நீங்கள், பின்னால் பெரியவர்கள் வருவதுபற்றிசொல்லிய நீங்கள், ரசனையாக எதனையும் சொல்லவில்லை. கரு இங்கே இல்லை.
 11. ம.வா என்னால் வேறு தலைப்புகளில் நுழைய முடியவில்லையே. முடிந்தால் முகத்தில் முதலில் கோர ரேகைகளை போட்டுவிட்டு அதன் பின்பு கலர் அடிக்கும் போது வெப்பத்துக்கும், பசுமைக்குமிடையிலான வித்தியாசத்தினை அவரின் முக தசையிலேயே காட்டமுடியும். சுப்பண்ணை: மாலைகண் பெண் மங்கி மங்கித்தெரியும் தன்கண்களால் சிமிட்டி சிமிட்டி தன் காதலனை ஏங்கி தேடுவதும், அதனால் கண்டுபிடித்த களிப்பில் மகிழ்வதும் போல என்னால் நேரம் வரும் போது கீறி உங்களுக்காக காட்டுகிறேன். மழை நேரத்தில் ரோஜா ப்பூவின் இதழில் எப்படி நீர் முத்துமணிகள், மாலை நேர மஞ்சளான சிவப்பு கலர் சூரிய ஒளியில் மினுமினுக்குமோ அதை இந்த பெண்ணின் நெற்றியிலே, இமையின் மேலேயே படம் பிடித்தும் காட்டுகிறேன். பொறுத்திருங்கள். வணக்கம் முனிவரே தாங்கள் என்னிடம் ஏதேனும் கேட்கமாட்டீர்களோ என்று ஒரு கணம் ஜோசித்தேன். முனிவரின் தவக்கோல முகத்தில் இருக்கும் அந்த அமைதி, சாந்தம். என்ன நினைக்கிறீர்கள். ஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் வரமுடியாத அமைதி அது!! மிகவும் கஸ்டமானதொரு முகச்சாயலாக இருக்கும்.
 12. பின்னிப்போட்டீங்க மல்லிகைவாசம். நல்ல சிந்தனையில் உருவான கரு இது. இதையே நான் யுத்ததேசத்தின் குண்டுத்தாக்குதல்களினிடையே நின்று போராடாடும் ஒரு போராளியின் வெடித்த குண்டுகளினால் உருவாகும் வெப்பத்தின் அகோரத்தனமான சூட்டுக்கு தன் முகத்தினை கொடுத்தவாறு இருக்கும் ஒரு கட்டத்தில், முகத்தில் மழைத்துளிகள் விழும்போது என்னால் அவரின் முக உணர்வுகளில் ஏற்படும் குளிர்மையின் பசுமையான உணர்வுகளை என்னால் என் தூரிகையினூடு ஓவியமாக உருவாக்கிக் காட்டமுடியும். நெஞ்சில் நிறுத்திவைத்துக்கொண்டேன் நான்.!
 13. ஒருபெண் மாலைநேரம் மழைநேரம் வீதியால் சென்றுகொண்டிருக்கிறாள். எப்படி உப்படியெல்லாம் சிந்திக்கமுடியுது சுப்பண்ணை. மாலைக்கண் பெண் மாலைநேரத்தில் அதுவும் மழைநேரம் ஆகையால் இருள்மங்கிய வேளையில் போகின்றாள் என்று எடுக்கலாம். ஏனென்றால் இருள இருள அவளால் பார்க்கமுடியாது அப்படி சொல்லவாறீர்கள் என்று எடுக்கலாம். இங்கே ஒரு முகத்தின் கண்களுக்கே நான் முக்கியத்துவம் கொடுப்பேன் . சரி வீதியில மரம் செடிதானிருக்கும். இல்லாமலும் இருக்கும் அதையேன் சுப்பண்ணை இதுக்க எடுத்தீர்கள்? மீண்டும் ஒரு கன்பியூசன் இங்கே, இன்னுமொரு அவள், அவளது கண்ணாளன் வந்தாள் அதுவேன் இந்த மாலைக்கண் பெண்ணுக்கு வெட்க்கம் வரவேண்டும்? சரி அந்த கண்ணாளன் இந்த பெண்ணின் கண்ணாளனாகவும் இருந்திருந்தால் கெட்ட கோபம் அல்லவா வந்திருக்கவேண்டும்? முன்னோக்கிப்போகும் பெண்ணால் அவளின் பின்புலத்தினை எப்படி பார்க்கமுடியும்? அவளாளேயே பார்க்கமுடியாது போனால் என்னால் எப்படி கீறமுடியும். ஒரே கன்பியூசனாக இருக்கு. உங்களை அண்டைக்கு வாத்திமார் கோவிச்சது சரிதான். எப்படியிங்க இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்க. என்னால் இப்படியெல்லாம் அசிங்கமா கீறமுடியாதுங்கோ. அரசியலா அவுத்துவிடுங்கோ.
 14. நன்றிகள் என்னை ஊக்குவித்த உங்களுக்கு. ஓம் ஓம் சுப்பண்ணை எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது. உங்களுக்கும், மல்லிகைவாசத்திற்கும் அழகியற்கலை எண்டு நான் சொல்லியது வடிவாக விளங்கவில்லையெண்டு புரியுது. கலை பலவகைப்படும் அதில் நான் இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் எண்டு சொல்லியது ஓவியற்கலையையே!. இதற்கு ஓட்டையுள்ள ஊசியும் தேவையில்லை. கத்தரிக்கும் கோலும் தேவையில்லை. கருமையான பென்சிலும் வெண்மையான சுவருமிருந்தால் அதுவே போதும். என் திறமையினைக்காட்ட நீங்களே ஒரு கார்ட்டூண் கருவினை இங்கே எடுத்துவிடுங்கள் நான் உங்களுடன் சேர்ந்து முதலில் கீறிக்காட்டுகிறேன். கருவை சிசுவாக்கி பிரசவித்துக்காட்டுகிறேன். எங்கே சொல்லுங்கள். விரும்பினால் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆசிரியனாக!