யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

nochchi

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  3,484
 • Joined

 • Last visited

 • Days Won

  2

nochchi last won the day on October 3 2013

nochchi had the most liked content!

Community Reputation

447 ஒளி

About nochchi

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  Germany
 • Interests
  புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Recent Profile Visitors

2,762 profile views
 1. சுவாதீனமற்றவரென்று (சும்-ஐ) சரியாக அறிந்துதான் மொழிபெயர்ப்பாளர் கூறியுள்ளார். இவர்கள் எப்படியாம் தமிழருக்கு தீர்வைக் கொண்டுவருவார்கள் என்று நம்புவது?
 2. கிளிநொச்சியில் ஒரு துண்டுக் காணி கூட விடுவிக்கப்படவில்லை! - சிறிதரன் குற்றச்சாட்டு [Sunday 2017-12-31 19:00] கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக, படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “கிளிநொச்சி - இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களுடைய காணிகளை இன்னமும் அரசாங்கம் விடுவிப்பதற்கு தயாராகவில்லை. அதைவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில், நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை படையினர் விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள போதும், அதில் பழைய நீர்த்தாங்கியை அகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். எனினும், இதுவரை ஒரு துண்டு காணி கூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குளேயே சேரும்” எனத் தெரிவித்தார்.http://www.seithy.com/breifNews.php?newsID=196669&category=TamilNews&language=tamil
 3. காடுகளைப் பாதுகாக்க இராணுவ முகாம்களை அமைக்கத் திட்டம்! [Monday 2018-01-01 09:00] காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.' நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வனவிலங்கு அழிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இலங்கையில் 50 வளர்ந்த தந்தங்களையுடைய யானைகள் காணப்பட்டன, எனினும் தற்பொழுது அந்த எண்ணிக்கை 30 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வளர்ந்த தந்தங்களை உடைய ஐந்து யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யும் ஒரு தரப்பு சுற்றுலாப் பயணிகள் யானைத் தந்தங்களினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கின்றனர். இதனால் இவ்வாறு யானைகள் கொல்லப்படுகின்றன. யானைகள் கொல்லப்படுதல், காடழிப்பு, வன விலங்குகள் வேட்டையாடப்படுதல் உள்ளிட்டனவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் வனவிலங்குப் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுகள், இராணுவப் பிரிவுகள், விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சரணாலயங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காவலரண் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=196695&category=TamilNews&language=tamil
 4. காஷ்மீரில் இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த முஸ்லிம் தாய்மார்கள்! [Friday 2017-12-29 17:00] ஜம்மு-காஷ்மீரில் லீவ்டோரா கிராமத்தில் பாபி கவுல் என்பவரின் ஒரே ஓர் இந்து குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. மற்றவர்கள் இஸ்லாமிய மக்கள். பாபி கவுலின் கணவர் மகராஜ் கிஷன் கடந்த ஆண்டு இறந்தார். கணவர் இறப்பைத் தொடர்ந்து, வயதுக்கு வந்த இரு மகள்கள் உட்பட நான்கு குழந்தைகளுடன் சரியான வருமானம் இல்லாமல் பாபி கவுல் தவித்தார். இதையடுத்து, உள்ளுர் மக்கள் எம்.எல்.ஏ உதவியுடன் அவருக்கு அரசு வேலை வாங்கித் தந்தனர். இந்நிலையில், உடல்நிலைக் குறைவு காரணமாக 44 வயது பாபி கவுல் திடீரென்று இறந்துபோனார். தாயை இழந்த குழந்தைகள் கதறினர். இஸ்லாமிய பெண்கள், அந்தக் குழந்தைகளை அரவணைத்து ஆறுதல் அளித்தனர். இஸ்லாமிய மக்களே முன்னின்று பாபி கவுலுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து உடல் தகனம் செய்தனர். இத்துடன், தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கிராம மக்கள் கருதவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். முதல்கட்டமாகத் தங்களிடம் இருந்த அரிசி, காய்கறிகளை விற்று அதிலிருந்து கிடைத்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை குழந்தைகள் பெயரில் வங்கியில் செலுத்தினர். மேலும் படிப்பு, உணவுச் செலவையும் கிராம மக்களே ஏற்றுக்கொண்டனர். பாபி கவுலின் வீடு, சேதமடைந்து இருந்தது. தற்போது, அதைக் கிராம மக்கள் புனரமைத்து வருகின்றனர். ஆதரவற்று தவிக்கும் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க லீவ்டோரா மக்கள் உறுதி பூண்டுள்ளனர். தந்தையை இழந்த சமயத்திலும் இதேபோல் நிதி திரட்டி, அந்தக் குடும்பத்துக்கு கிராம மக்கள் உதவியிருக்கின்றனர். http://www.seithy.com/breifNews.php?newsID=196511&category=IndianNews&language=tamil
 5. தொடர்ச்சியாக எம் தலைவனைத் தேடியிணைக்கும் தமிழ்சிறி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
 6. யாழ்கள உறவுகள் அனைவருக்கும் நலமும் வளமும் பலமும் பலவும் பல்கிப் பெருகி நல்லாண்டாய் அமையட்டும் இந்த ஆண்டு! இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
 7. களமிறங்குகிறாராம் கோத்தா! [Saturday 2017-12-30 19:00] 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த அணி நாடாளுமன்ற ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 2019 அல்லது 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கோத்தபாய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாகும்போது, நிறைவேற்று அதிகாரம் மிக்க பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டுவருவோம். இதனூடாக மஹிந்த - கோத்தா யுகத்தை நாட்டில் உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=196588&category=TamilNews&language=tamil
 8. ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்றுதான் இடைக்கால அறிக்கை கூறுகிறது! -சுமந்திரன் [Saturday 2017-12-30 19:00] தீர்ப்பு எழுதி பதின்நான்கு வருடங்கள் ஆகியதால் மறதி வந்து விட்டதாகவும் காங்கிரஸின் கொள்கை காற்றில் பறந்துவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம்தலைமையில் நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடா்பான விளக்கமளிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஒற்றையாட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளதுடன் தற்போதும் ஆசிரியர் தலையங்களில் எழுதிக்கொண்டிருக்கின்றது. இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும். இன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களிற்கு தமிழிலே எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதனை படித்து பார்த்து மக்களிற்கு சொல்ல முடியாமல் திண்டாட்டத்தில் இருக்கின்ற ஊடகங்கள் தான் எங்கள் மத்தியில் இருக்கின்றன.112 பக்கம் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுவிடுங்கள் முதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள். சமஸ்டி, ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது, ஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது. இது எங்களது பின்னனைப்பில் இல்லை. அனைத்து கட்சிகளும் சேர்ந்து எழுதிய இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது என்று எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் இதைபற்றி பொய் பரப்புரை செய்யப்படுகிறது. இந்த பொய் பரப்புரையை வைத்துக்கொண்டு ஒரு கட்சி மக்களிடத்தே கோருகிறார்கள் இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற வாக்காக இந்த உள்ளுராட்சி தேர்தலை பாவியுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள்தான் ஒற்றையாட்சி நிலைப்பாட்டை கொண்ட கட்சியினர். நாங்கள் சமஸ்ஸ்டியை கோருகின்ற கட்சியினர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒற்றையாட்சி கோட்பாடு கொண்ட கட்சி. சரித்திர பூர்வமாக சமஸ்டி தீர்வை எதிர்த்த கட்சி. இன்று கூறுகிறார்கள் நாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுவிட்டோம். அதனால் இந்த தேர்தலிலே இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கின்றனர். அவர்களது ஒற்றையாட்சி கொள்கை பொருத்தமற்றது என்றுதான் இந்த இடைக்கால அறிக்கை கூறுகிறது. 2010இல் இரு தேசம் ஒரு நாடு என்றனர் பின்னர் 2015இல் குறைத்து வாசித்தனர்.பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இதைதான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம். சமஸ்டியை பாட்டன், தகப்பன், மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள். இப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள்தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர். படிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். படித்தவர்கள் என சொல்பவர்கள் பல தீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை. இடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். ஒருமணித்தியாலயத்தின் பின் சொல்கிறார்கள் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள். படித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள். அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று பதிநான்கு ஆகியதால் மறதி வந்துவிட்டதா என தெரிவித்தார். .http://www.seithy.com/breifNews.php?newsID=196594&category=TamilNews&language=tamil
 9. இந்த ஆர்வமானது குறைத்து மதிப்பிடமுடியாதது. அதுதோடு தமது போராட்டத்தின் வெற்றியை அனுபவிக்கும் ஆவலின் வெளிப்பாடுமாகும். அதேவேளை புலத்திலே கணிசமான பராயவயதுடையோர் தமது ஊரெதென்று தெரியாமல் வளர்க்கப்படும் அவலமும் நிகழ்வது வேதனைக்குரியதாகும்.
 10. இவர்கள் யாரென்று யாருக்காவது தெரியுமா? புலிகளால் உருவாக்கப்படவில்லை என்று அதன்தலைவரே கூறிவரும் நிலையில் இவர்கள் ஏன் இப்படி ஒரு பரப்புரை. மக்கள் மீது அக்கறை கொண்டோராக இருப்பின் மக்களைச் சுயமாகச் சிந்திக்கவும் சரியாக வழிகாட்டுவதையும் செய்வதே பொருத்தமாகும்.
 11. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்திய இராணுத்தின் வருகை - முப்பதாண்டுச் சாட்சியங்கள் என்ற கவியினுடைய(அது கவியல்ல தமிழரது துயரம் தோய்ந்த அனுபவம்) இறுதி வரி என்னுள் எழுப்பிய எண்ணங்களைப் பதிவிட்டுள்ளேன். பச்சைப்புள்ளிகளிட்ட புங்கையூரானவர்களுக்கும் சுவியவர்களுக்கும் நன்றி!
 12. தமிழிசையினது வாழ்த்து பா.ஜ.கவின் கூட்டு என்பதாக எடுக்கலாம் போன்று தோன்றுகிறது. தினகரது கை ஓங்கிவிட்டால் ரஜனி என்ற கைத்தடியூடாக தமிழகத்தைச் சீரழிக்கலாம் (இப்போதும் அப்படித்தான் இன்னும் படுமோசமாக) என்ற ண்ணத்தோடு, ஒரு இந்துத்துவவாதியும்வேற்றுமொழியாளனுமான இவரை முன்னோக்கித் தள்ளுவது தமக்குப் பயன்தரலாம் என்பதோடு, சோவினது பிரதியான குருமூர்த்திபோன்றவர்களது குட்டுகள் வெளிப்பட்டுள்ள சூழலில், எ.ப.சா சக ஓ.ப.செ போன்றவர்கள் எவளவுதூரம் இனிவளைவார்கள் என்ற நிலையில், பா.ஜ.கவினுடைய முன்மொழிதலாகவும் இவரது நகர்வு அமையலாம். தமிழக இளைய குமுகாயம் தமிழகம் குறித்து மிகத்தெளிவாகச் சிந்திக்க வேண்டிய சூழலில் வெறும் திரைக்கதாநாயக விம்பத்துட் சிக்கிச்சீரழிகின்ற பெரும் துயரம் நிகழ்வது தமிழகத்தின் சாபக்கேடாகவுள்ளது. தமிழன் தமிழனாகச் சிந்திக்காதவரை மாற்றங்கள் ஏற்படா.