-
Posts
4940 -
Joined
-
Last visited
-
Days Won
5
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Status Updates posted by nochchi
-
ரஞ்சித் அவர்களே வணக்கம்,
நீங்கள் இவற்றை பதிவுசெய்து வைப்பதோடு, ஒரு நூலுருவில் வெளிக்கொணர வேண்டிய தேவையும் உள்ளது என்பது எனது கருத்தாகும். அப்படியொரு முயற்சிக்கு எனது பங்களிப்பும் இருக்கும்.
அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி-
வணக்கம் நொச்சி,
இந்தத் தொடர் முழுமையாகும் முன்பே சபாரட்ணம் அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், சங்கம் இணையம் கூட சில பகுதிகளைத் தொலைத்துவிட்டதாக அவ்விணையத்தில் கூறப்பட்டிருக்கிறது.
ஆகவே, இத்தொடர் முழுமையாக இருக்காது. ஆனாலும், அவர் பதிந்த விடயங்கள் பாதுக்காக்கப்பட்டு எதிர்காலச் சந்ததிக்கும் கடத்தப்படவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
நூலாக வெளியிடுமளவிற்கு இது தலைவரின் வாழ்க்கையினை முழுதாக பதிவிடவில்லை. அடுத்தது, நான் எழுதும் எழுத்துநடை நூலாகத் தரவேறுவதற்கும் உகந்ததில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
உங்களின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
நட்புடன்
ரஞ்சித் -
-
-
-
- nochchi
- வாழ்த்துக்கள். என் இறுதிமூச்சுவரை இந்திய கொள்கை வகுப்பில் இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளை புரிதுகொண்டு உள்வாங்க ஓயாமல் அழுத்தம் கொடுப்பேன்.
-
-
-
நன்றி. குமாரசாமி ஐயா. நீங்கள் மட்டும்தான் காணாமற்போனோர் தொடர்பான திரியைத் தேவை கருதியதாக எண்ணியிருக்கின்றீர்கள்.
நீங்கள் நினைக்கலாம் ஏன் தனிமடலில் என்று. அண்மைக்காலமாக யாழில் தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் கை பலமாகி வருவதாகவே தெரிகிறது. தமிழ்த் தேசியத்தை எள்ளிநகையாடுவது முதல் அனைத்தும் நடக்கிறது. இதுபோன்ற (காணாமற்போனோர்..) பல திரிகள் கவனிப்பாறற்றே போகிறதைப் பார்க்கும்போது தேசியத்தின் பலவீனமா என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிலர் தேவையற்ற விவாதங்கனைத் தொடக்கித் தமிழ்த் தேசியத்தை கரைத்துவிட முனைகின்றமையையும் காணமுடிகிறது. அதனோடு போராட வைத்துச் சலிப்படைய வைப்பதோடு, நேரவியத்தை ஏற்படுத்தித் தாக்கம் தரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டிய விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது.
யாருடனவாது பகிரவேண்டும் போலிருந்தது. எதுவுமே எம்கையில் இல்லையென்றபோதும் அதற்காக முயற்சிசெய்யாதிருக்க முடியாதல்லவா?
நன்றி.
-
தமிழ்த் தேசியத்தை எள்ளிநகையாடுவது முதல் அனைத்தும் நடக்கிறது. இதுபோன்ற (காணாமற்போனோர்..) பல திரிகள் கவனிப்பாறற்றே போகிறதைப் பார்க்கும்போது தேசியத்தின் பலவீனமா என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு சிலர் தேவையற்ற விவாதங்கனைத் தொடக்கித் தமிழ்த் தேசியத்தை கரைத்துவிட முனைகின்றமையையும் காணமுடிகிறது. அதனோடு போராட வைத்துச் சலிப்படைய வைப்பதோடு, நேரவியத்தை ஏற்படுத்தித் தாக்கம் தரவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டிய விடயங்கள் மழுங்கடிக்கப்படுகிறது.
உண்மை....
-
-
வணக்கம் நுணாவிலான் அவர்களே.நான் நலம். நன்றி.
என்னால் பின்னூட்டுங்களையோ கருத்துகளையோ பதிவேற்ற முடியவில்லை. உதவமுடியுமா?
-
வணக்கம் ஈழப்பிரியன்.பெருவிரலில் ஒரு விபத்து. அதன்பின் களஉறவுகளின் ஆக்கங்கள் கருத்துகள் என்று வாசிப்பதோடு இணைந்திருந்தேன். எழுதவில்லை. நலன் வினவியமைக்கு நன்றி.