Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

nochchi

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3,949
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by nochchi

 1. என்னதான் இடது வலது சிவப்பு ........ என்றாலும் சிங்களத்தின் நிறம் ஒன்றுதான். அது இனவாத நிறம். முதலில் வடகிழக்கு மாகாணசபையைப் பிரித்தனர். அதனூடாக கிழக்கிலே தமது ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியதோடு, இன்று மாகாணசபையையே இல்லாமற் செய்ய முனைகின்றனர் என்றால் இவர்களிடம் ஒருபோதும் மனமாற்றம் வரப்போவதில்லை. இனவாதத்தைத் தலைமுறைதலைமுறையாக மடைமாற்றி எம்மை அழிப்பார்கள். இந்த அவலட்சனத்தில் ஒரு கூட்டம் இணக்க அரசியலாம்.
 2. கிந்திய ஆக்கிரமிப்புப் படையால் படுகொலைசெய்யப்பட்ட அப்hவிப்பொதுமக்களுக்கும் யாழ். மருத்துவமனையின் செயற்றினளார்களனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். அழித்தவர்களுக்கான தண்டனை கிடைக்கவில்லைஇ கிந்தியா ஒரு மன்னிப்பாவது கேட்டதா என்றால் இல்லை. ஏன் புலத்திலே இருககும் அவர்களது உறவுகள் அல்லது அமைப்புகள் மனித உரிமை மையங்களில் மனு ஒன்றை சமர்பித்தால் என்ன?
 3. இணைப்புக்கு நன்றி. இன்றும் அனைவரும் ஒன்றிணைந்து நகரவேண்டிய சூழலில் தேவையானதொரு இணைப்பு. ஒரு குடையின் கீழ் தமிழ்பேசுவோரை இணைத்த ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம். சிங்களம் விரும்பாத விடயமும் கூட.
 4. அதிகம் தமிழர்களின் விடுதலைக்கு எதிராக நிற்பது இந்த இடதுசாரிகளே. குறிப்பாக அனைவருக்கும் சமத்துவம் என்று செங்கொடியோடு ஆயுதம் ஏந்திய ம.வி.மு கூடத் தமிழரது சுயநிர்ணய உரிமையை நிராகரித்து நின்றது. முடிந்தால் இவர் வெற்றுவாய் மெல்வதை விடுத்து சிங்கள இடதுகளை இந்த வாக்கெடுப்புக்குத் தயார்படுத்தமுடியுமானால் இவரது கூற்றுப் பொருந்தும். தொடர்ந்து சிங்களத்தின் தமிழின அழிப்புவாதத்திற்கு சார்பான நிலையெடுத்து ஐ.நா மனிதஉரிமை அவையிலே சிங்களத்துக்கு ஆதரவாக இருக்கும் பெரும்பாலான நாடுகள் பெயரளவிலான இடதுசாரிகளால் ஆளப்படும்(சீனா முதல் கியூபாவரை) நாடுகளே என்பதாவது இவருக்குத் தெரியுமோ அல்லது ஆள் கோமாவில் இருந்தாரோ தெரியவில்லை. அதேவேளை, ஏதோ இந்த மேற்குலகு தானாக வலிந்து பயங்கரவாதப்பட்டம் என்று ஒரு பொய்யையும் அடித்துவிடுகிறார். 1961இல் அமைதிவழிப்போராட்டாத்தை ஒடுக்கச் சிங்களப்படைகளை யாழுக்கு அனுப்பியது, யே.ஆரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவதத் தடைச்சட்டம் போன்றவை என்வென்று கூறுவாரா? அதாவது தமது(சிங்களவரின்) இருப்பும் ஈழத்தீவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்ற ஐயத்தினால் எழும் குரல். சிங்களவர் எதிர்காலத்தில் அன்னிய ஆக்கிரமிப்பினால் அவதியுறுவது தவிர்க்முடியாததாகவேவரும். துண்டு துண்டாக விற்க்கப்படும் நாடு நாளை வாங்கும் நாடுகளின் கட்டுப்பாட்டில் வரும்போதுதான் புரியும். அவர்களுக்குத் தேவையெனில் சிங்களப்படைகளையே தமது அடியாட்களாகவும், ஆட்சியாளர்களாகவும் மாற்றிவிடுவர். வராலற்றுக்குமுற்பட்ட காலம் முதல் இன்றுவரை ஈழத்தீவை அந்நியரிடமிருந்து காத்தது தமிழர். காட்டிக்கொடுத்தது சிங்களவர் என்பதை இராஜசிங்கன் என்ற கண்டியரசனின் வீழ்ச்சியே சாட்சி.
 5. நீர்வேலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , காவல்துறையினரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் வாள் வெட்டுக்குழு ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு புகுந்த வாள் வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.https://www.kuriyeedu.com/?p=365713
 6. அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். சென்னை கண்ணகி நகரில் அரசு மாநகர பேருந்தில் திடீரென ஏறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும், மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பெண்களிடம் கேட்டறிந்தார். தி.நகர்-கண்ணகி நகர் வரை சென்ற M19B பேருந்தில் ஏறிய முதலமைச்சருடன் பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். https://www.kuriyeedu.com/?p=365856
 7. கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள். https://www.kuriyeedu.com/?p=364956
 8. துரோகிகள் என குறி வைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் உள்ளனர் – மனோ விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து வெளியாகியிருந்த செய்திக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார். 2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என தெரிவித்தார். காலத்தின் கட்டாயத்தினாலேயே ஆயுதப்போர் இடம்பெற்றது என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அதில் எது தவறு எது சரி என தீர்ப்பு வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.https://www.kuriyeedu.com/?p=365882
 9. இது முடிவல்ல ஆரம்பம் ! அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,& பெருந்தோட்ட கம்பெனிகளின் அடாவடி நிர்வாகத்திற்கு பதிலடி தரும் நோக்குடனும், உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் இன்றைய தினம் வடிவேல் சுரேஷ் தலைமையில் அப்புத்தளை நகரில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய தோட்டத் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான பதாதைகளை ஏந்தியவாறு கூச்சலிட்டபடி இப்போராட்டம் அப்புத்தளை நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது. இப்போராட்டத்தின் விளைவாக கொழும்பு, பதுளை பிரதான வீதி வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது குறிப்பிடத்தக்கது ஒப்பாரி வைத்தும், சவப்பெட்டியை ஏந்தியும் போராட்டகாரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர். இதன்போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ், அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கை திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது. குழந்தைகள் குடிப்பதற்க்கு பால் மா இல்லை, அரிசி தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலை மேலும் 1000 ரூபாய் சம்பளம் என்ற கபட நாடகத்தில் சிக்கித் தவிக்கின்ற பெருந்தோட்ட மலையக மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கின்ற பெருந் தோட்ட நிர்வாகங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. மலையக மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்ள இன்று வீதிக்கு இறங்கி இருக்கின்றோம் இது முடிவல்ல ஆரம்பம் என்றார்.https://www.kuriyeedu.com/?p=365899
 10. அன்புமணி ஐயா இதிலுமா உங்கள் அரசியல்? ஏன் நிதியுதவியைச் செய்து சென்னையிலுள்ள சிறிலங்கா துணைத்தூதுவரோடு கலந்துரையாடி உடலத்தைக்கொண்டுவர நடவடிக்கை எடுக்கலாமே. அதுவும் ஒரு முன்னாள் அமைச்சரும் இன்னாள் மாநிலங்களவை உறுப்பினருக்கும் முடியாததா?
 11. உண்மைதான். எந்த ஒப்பந்தங்களுமின்றி தமிழீழத்திற்கான அத்தியாவசியமான பொருட்கள் முதல் வாகனங்கள்வரை கொண்டுவரப்பட்ட காலமொன்றைக் கொண்டிருந்தபோது, நடைமுறை அரசும் நலிவுறா நேர்மையான பார்வையுமுள்ள தமிழீழத் தலைமையின் வழிகாட்டலில் செம்மை இருந்தது. இன்று அப்படியா? தமிழகத் தமிழரையும் தமிழீழத் தமிழரையும் பல்வேறுகூறுகளாக்கிச் சிதைத்ப்பதற்கான வழிகளில் ஒன்றாக இந்த மீனவர் விடயம் சிறிலங்கா – கிந்திய அரசுகளால் கொம்புசீவி விடப்படுகிறது. அதேவேளை அபின், கஞ்சா கடத்தலில் ஈடுபடுவது பெருமுதலைகள். அது இருபகுதியிலும் உள்ளார்கள். அரசுகளின் அனுசரிப்பும் பெரும் பணக்கைமாறல்களுடன் மில்லியன்களில் நடைபெறும் „டீல்கள்' இவை. அன்றாடம்காய்ச்சிகளாய் கடலிலே காயும் மீனவர்களின் வாழ்வு மட்டுமே கருகிப்போகிறது. அவர்களுக்கான (தீர்வு) வாழ்வுதான் என்ன என்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும்.
 12. இருபக்கத்தினதும் தொலைநோக்கற்ற அரசியற் செயற்பாட்டின் துன்பத்தைச் சுமப்பது அப்பாவி மீனவர்களேயாகும். இவர்களது இழுபறி ஆட்டத்தில் அப்பாவி மீனவர்கள் பலியாவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
 13. உலகிலே அனைத்துலகக் கடற்பரப்புத் தொடர்பான விதிமுறைகளை இருபகுதியினரும் கடைப்பிடிப்பதோடு, புரிந்துணர்வின் அடிப்படையிற் செயற்படுவதே இருதரப்புக்கும் நன்மை. போராட்டத்தின் பின்தளமாக இருந்து தார்மீக ஆதரவைத்தந்த தமிழக மக்கள்திரளை அரைவேக்காட்டுத்தனமான அரசியலோடு ஒப்பீடு செய்து முடிவுகளை எட்டுதல் சாத்தியமற்றது. இருபகுதினரும், குறிப்பாக மீனவத் தொழிற்றுறையினர் ஒருசேர மேசையில் இருந்து உரையாடி கடலமைப்புமுதல் பாவிக்கவேண்டிய கருவிகள்வரையான வரையறைகளைப் பகிர்ந்து இருபகுதிக்குமானதொரு பொதுப்பிரகடனத்தை உருவாக்கிப் பின்பற்றுவதில் ஏதாவது தடைகள் இருக்கின்றதா? மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றாக இருக்கும் நாம் சிங்கள மற்றும் கிந்திய சதிவலைக்குள் வீழ்ந்துவிடாது கடல் பிரித்தாலும் கரைகளால் இணைந்து பயணிக்கச் சிந்தைகொள்வதே சிறப்பாகும். முதல்வர் ஸ்ராலினவர்கள் வெறும் அறிக்கை வீரராக இல்லாமல் ஆக்கபூர்வமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம்கொடுத்து செயலாக்க வேண்டாம். கடல் தொடர்பான பிணக்குத் தனியே சட்டங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாதென்பதற்கான அண்மைய எடுத்துக்காட்டாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய மீன்பிடித்தல் விவகாரம் உள்ளதையும் நாம் காணலாம்.
 14. எந்தவொரு தரப்பும்(கட்சியென்று தனித்துச் சுட்ட முடியாது) ஒற்றுமையாவதற்கான ஒரு புள்ளியையும் தெரியவில்லை. எல்லாத்தரப்புகளும் தமது தலைமைப் பதவியைக் காக்கவும் அல்லது தலைமையாகவும் சிந்திக்கும் நேரத்தைத் தமிழினவிடுதலைக்காக சிந்தித்தால் மட்டுமே நீங்கள் கூறுவது சாத்தியம். ஆனால், யாரும் தமிழினவிடுதலை குறித்து கடந்த 12ஆண்டுகளில் சிந்தித்ததாகத் தெரியவில்லை என்பதே எனது கணிப்பு. சிந்தித்திருந்தால் குறைந்தது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாவது குட்டிபோடாமல் இருந்திருக்கும்.
 15. உண்மைதான்! ஒற்றையாட்சியில் பாலாறும் தேனாறுமாக ஓட, அதில் சுதந்திரமாக வாழ, அதை இனவாதம்பேசிக் கெடுக்கப்பார்க்கிறார். வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். பயங்கவாதச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 16. ஊடகங்களுக்குத் தலைப்பெழுதக்கூடத் தெரியாத வறுமையா தமிழ்.அதென்ன சிறைமாறுகிறார்கள். ஏதோ கைதிகள் விரும்பி மாறுவதுபோல் தலைப்பு." அமைச்சரின் அச்சுறுத்தலால் தமிழ்க் கைதிகள் யாழ் சிறைக்கு மாற்றம்". என்று போட்டால் என்ன?
 17. இணைப்புக்கு நன்றி. அது ஒரு பொற்காலம். தற்போது கனாக்காலம். (கனவு மட்டுமே) மருத்துவர் அனுபவித்துப் படைத்திருக்கின்றார். எங்கள் கிணற்றடியை கண்முன்னே கொண்டுவந்தது இப்பதிவு. தலைப்பைப் பார்த்து ஏதோ அரசியலாக்குமென்றால், இங்கும் மனிதர்கள் பல்வேறு ஞானநிலைகளைக் கடக்கும் இடம்தானே..... நன்று.
 18. கம்பேர்க் தமிழாலயத்தில் இடம்பெற்ற 2ஆம்.லெப்.மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு. 16.10.2021 சனிக்கிழமை இன்று யேர்மனி கம்பேர்க் நகரில் உள்ள தமிழாலயத்தில் முதற் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நினைவுகூரப்பட்டது. இந் நிகழ்வில் கம்பேர்க் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி வணக்கத்தினைச் செலுத்தினர். https://www.kuriyeedu.com/?p=364341
 19. சசி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அதேவேளைஅண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
 20. பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2021 யேர்மனி. அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகமும் பாரதி கலைக்கூடமும் இணைந்து நடாத்திய பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 16.10.2021 சனிக்கிழமை யேர்மனி ஆலன் நகரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக தடைப்பட்டிருந்த இத்தேர்வு அதன் விதிமுறைகளுக்கு அமைவாக மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடந்தேறியது. இத்தேர்வில் யேர்மனி தென்பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மிகத்திறமையாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினர். இத்தேர்வில் நடன ஆசிரியர் பரதக்கலைவித்தகர் நாட்டிய கலாரத்தினம் திருமதி. மிதிலா விஜித் அவர்களின் மாணவி திருமதி. சர்மிளா தர்சன் அவர்களும் நாட்டிய முதுகலைமானி திருமதி. அற்புதராணி கிருபராஜ் அவர்களின் மாணவி திருமதி. துர்கா ராமேஸ் அவர்களும் யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியர் திருமதி வசுந்தரா சிவசோதி (B.A Diploma in Dance and Education) அவர்களிடம் தரம் 1-6 வரை கற்று பின்னர் நடன ஆசிரியர் பரதக்கலைவித்தகர் நாட்டிய கலாரத்தினம் திருமதி மிதிலா விஜித் அவர்களிடம் தரம் 7 பயின்ற, இவர்களின் மாணவியான திருமதி. நிவாஷினி வீரேஸ்வரன் அவர்களும் தேர்வில் கலந்துகொண்டனர். அணிசேர் கலைஞர்களாக: குரல் இசை. மதுரக்குரலோன், எழிலரசு வேந்தன் திரு. எஸ். கண்ணன் மிருதங்கம். திரு பிரசாந்த் பிரணவநாதன் வயலின். திரு நீருஐன் செகசோதி. நடுவர்களாக: முனைவர் மதிவதனி சுதாகரன் முதுகலைமானி ஞானசுந்தரி வாசன் முதுகலைமானி அனுசா சற்குணநாதன். அவர்களும் கலந்து சிறப்பித்தனர். https://www.kuriyeedu.com/?p=364800
 21. நன்று, நன்றி சுவியவர்களே, அப்படியொரு வாய்ப்பு வரும்போது கூறுங்கள்.
 22. ஆம், நானும் வந்திருந்தேன். நடன ஆற்றுகைத் தேர்வு நன்றாக இருந்தது. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது கவலையாக உள்ளது.
 23. கண்மணி அக்கா தமிழினி ஆகியோரின் சகோதரியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
 24. சிறந்ததொரு குமுகாயத்தின் வளர்ச்சிக்குக் கல்வியே கால்கோள் என்பதை அறியாமலா வட-கிழக்குக் கல்வியிலாளர்கள், அறிவாளார்கள், அரசியல்வாதிகள் இருக்கின்றனர். இந்தச் சூழலை வென்றிட.............. சனசமூக நிலையங்கள், நூலகங்கள், ஆலயங்கள், தேவாலாயங்கள், மசூதிகள், கடைகள், அரச மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் என அனைத்தும், அனைத்து நிலைகளிலும் ஒரு கருத்தியற் பரப்புரையொன்றை செய்வதோடு, புலம்பெயர் தளத்திலே இருந்து பொருண்மிய உதவிகளை வழங்கி அடுத்த ஐந்து ஆண்டுகள் என்ற அடைவு இலக்கைக் கொண்டு செயற்பட்டால் வெற்றிபெற வாய்ப்புண்டு. சாதி, சமயங்களைக் களைந்து இனமாக ஒன்றிணைவது மிகவும் முதன்மையானதாகும்.
 25. தீண்டிய நாகபாம்மை பிடித்த சிறுவன். தன்னை தீண்டிய நாகபாம்புடன், 15 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலைக்கு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில், இன்று (17) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்த போது, பாம்பு கடிக்கு இலக்கானார். இதையடுத்து, குறித்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து அந்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்துக் கொண்டு, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இதன்போதே, சிறுவனை கடித்தது நாகபாம்பு என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.kuriyeedu.com/?p=364436
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.