Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5416
  • Joined

  • Last visited

  • Days Won

    6

Posts posted by nochchi

  1. On 14/4/2024 at 04:33, ரஞ்சித் said:

    தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா? 

    இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம். 
    நன்றி  

    • Thanks 1
  2. On 16/4/2024 at 18:08, kandiah Thillaivinayagalingam said:
    "சிலுவையை மீண்டும் சுமப்போம்!"
     
     
    "உன்னைக் காட்டி கொடுத்தான் ஒருவன்
    சிலுவையில் நீ நின்றாய்!
    அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன்
    சிலகாசுக்கு விலை போனான்!"
     
    "அன்று முளைத்த இந்த வஞ்சகன்
    சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
    இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான்
    சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!"
     
    "உன்னைக் நேசித்த உன் தொண்டர்கள்
    சிலுவையை தோலில் சுமந்தனர்!
    அன்னை பூமி முழுவதும் உன்
    சிந்தனையில் வழி காட்டினர்!"
     
    "அன்று கண்ட மனித நேயம்
    சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
    இன்று நாம் உரிமையாய் வாழ
    சிலுவையில் எம்மை அறைகிறோம்!"
     
    "உன்னைக் கண்டதால் தியாகம் அறிந்தோம்
    சிலுவையின் பெருமை உணர்ந்தோம்!
    அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம்
    சிறந்த பண்பு கண்டோம்!"
     
    "அன்று நம்பி மோசம் போனதால்
    சிதைந்து மதிப்பு இழந்தோம்!
    இன்று படும் துயரம் போக்க
    சிலுவையை மீண்டும் சுமப்போம்!"

    தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 

    • Like 1
  3. 34ஆவது அகவை நிறைவின் மகிழ்வில் தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி.

    K800__DSC5714-300x200.jpgதமிழினம் புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் சூழலில், தமது அடையாளத்தை அடுத்த தலைமுறை தொலைத்துவிடாதிருக்க தாய்மொழியைக் கற்பித்தல் அவசியம் என்ற உயர்சிந்தனையின் விளைவாகத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. யேர்மனியிலும் தமிழ்க் கல்விக் கழகம் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துத் தமிழ்மொழி, கலை, பண்பாடு என்பவற்றை ஊட்டிவரும் செயற்பாட்டில் 34 ஆண்டுகளைத் தொட்டுநிற்கிறது.

    அதன் ஆண்டுச் செயற்பாட்டு நிரலின் அறுவடையாக ஆண்டுதோறும் அகவை நிறைவு விழாவை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் தனது நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களிலும் அகவை நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ளது. முதலாவதாக மத்திய மாநிலத்தின் நெற்றெற்றால் அரங்கிலே தனது 34ஆவது அகவை நிறைவு விழாவை 06.04.2024 சனிக்கிழமை கொண்டாடியது. பொதுச்சுடரேற்றலோடு தொடங்கி, அமைதிப்படையென வந்து ஆக்கிரமிப்புப் படையாகத் தாயகத்திலே சொல்லொணா அவலங்களைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அந்நியப் படைக்கெதிராக அறப்போர் புரிந்து வீரகாவியமாகி நாட்டுப்பற்றின் குறியீடாகத் திகழும் “நாட்டுப்பற்றாளர்” அன்னை பூபதி அவர்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அகவை நிறைவு விழா மங்கல விளக்கேற்றலோடு தொடங்கியது.

    சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்த கால்டன்கிற்சன் நகரசபைத் தலைவர் திருமதி கிளவ்டியா வில்லெற்ஸ், கொனிக்ஸ்பாக் தொடக்கப்பள்ளியின் மேலாளர் திருமதி ஈவா கபெங்ஸ்ட், கால்டன்கிற்சன் சிறுவர் பூங்கா மேலாளர் திருமதி பேற்றா கவுசர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.தர்மலிங்கம் இராஜகுமாரன், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திருமதி கலா ஜெயரட்ணம், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாண”| திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், முன்சன்கிளாட்பாக் தமிழாலய நிர்வாகி திரு.கிமேஸ் ஹரிஹரசர்மா மற்றும் யேர்மன் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் கேதீஸ்வரன் சயந்தன் ஆகியோர் மங்கலவிளக்கேற்றி வைக்க, அகவை நிறைவு விழாத் தொடங்கியது.

    தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மதிப்பளிப்புகள் தொடங்கின. அனைத்துலகப் பொதுத்தேர்வு, தமிழ்த்திறன் ஆகியவற்றில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும் மற்றும் 5,10,15ஆண்டுகள் பணியாற்றிய ஆசான்களுக்குமான மதிப்பளிப்போடு, 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் வாரிதி” என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு “தமிழ் மாணி” என்றும், 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முப்பது ஆண்டுகளைக் குறிக்கும் மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கமும் வழங்கிப் பட்டமளிப்பும் நடைபெற்றது.

    கும்மர்ஸ்பாக் தமிழாலயத்தின் ஆசிரியை “தமிழ் மாணி” திருமதி நிர்மலாதேவி பாலச்சந்திரன் அவர்கள் 30 ஆண்டுகள் பணிநிறைவுக்கான மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
    பொதுத்தேர்வு, தமிழ்த்திறன், கலைத்திறன் போன்றவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களின் செயல்திறன்களை ஒன்றிணைத்ததன் விளைச்சலால் தமிழாலயங்கள் பெற்ற புள்ளிகளினடிப்படையில் சிறந்த தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்றன. நாடுதழுவிய மட்டத்தில் அனைத்துலகப் பொதுத்தேர்வில் காகன், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் தமிழ்த்திறன் போட்டியில் காகன் தமிழாலயம் 2ஆம் நிலையையும் கலைத்திறன் போட்டியில் கிறீபெல்ட் தமிழாலயம் 3ஆம் நிலையையும் கலைத்திறன் மாநிலப் போட்டியில் கிறீபெல்ட், முன்சன்கிளாட்பாக், நொய்ஸ் ஆகிய தமிழாலயங்கள் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் நிலைகளையும் பெற்றுக்கொண்டன.

    மழலையராக இணைந்து 12ஆம் ஆண்டை நிறைவுசெய்த மாணவர்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலே அழைத்துவரப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் உரை, கவிதை, விடுதலைக் கானங்கள் மற்றும் எழுச்சி நடனங்கள் எனக் கலைநிகழ்வுகளுமாக நடைபெற்ற அகவை நிறைவு விழா, தாயகத்தின் விடியலுக்கான பற்றுறுதியோடு 19:00மணிக்குச் சிறப்பாக நிறைவுற்றது. எதிர்வரும் வாரங்களில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறைக்கேற்ப வகுக்கப்பட்டுள்ள ஏனைய நான்கு மாநிலங்களிலும் அகவை நிறைவு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

    1.jpg
    2.jpg
    3.jpg
    4.jpg
    5.jpg
    6.jpg
    7.jpg
    8-rotated.jpg
    9-rotated.jpg
    10-rotated.jpg
    K800__DSC1573.jpg
    K800__DSC1575.jpg
    K800__DSC1576.jpg
    K800__DSC1577.jpg
    K800__DSC1582.jpg
    K800__DSC1584.jpg
    K800__DSC1604.jpg
    K800__DSC1611.jpg
    K800__DSC1614.jpg
    K800__DSC1620.jpg
    K800__DSC6221.jpg
    K800__DSC6225.jpg
    K800__DSC6230.jpg
    K800__DSC6245.jpg
    K800__DSC6315.jpg
    K800__DSC6353.jpg
    K800__DSC6355.jpg
    K800__DSC6362.jpg
    K800__DSC6364.jpg
    K800__DSC6378.jpg
    K800__DSC6380.jpg
    K800__DSC6384.jpg
    K800__DSC6388.jpg
    K800__DSC6403.jpg
    K800__DSC6417.jpg
    K800__DSC6418.jpg
    K800__DSC6427.jpg
    K800__DSC6438.jpg
    K800__DSC6444.jpg
    K800__DSC6449.jpg
    K800__DSC6454-rotated.jpg
    K800__DSC6510-rotated.jpg
    K800__DSC6460.jpg
    K800__DSC6478.jpg
    K800__DSC6484.jpg
    K800__DSC6487.jpg
    K800__DSC6493.jpg
    K800__DSC6499.jpg
    K800__DSC6505.jpg
    K800__DSC6507.jpg
    K800__DSC6513.jpg
    K800__DSC6573.jpg
    K800__DSC6576.jpg
    K800__DSC6584.jpg
    K800__DSC6589.jpg
    K800__DSC6595.jpg
    K800__DSC6604.jpg
    K800__DSC6608.jpg
    K800__DSC6612.jpg
    K800__DSC6618.jpg
    K800__DSC6622.jpg
    K800__DSC6624.jpg
    K800__DSC6626.jpg
    K800__DSC6629.jpg
    K800__DSC6630.jpg
    K800__DSC6632.jpg
    K800__DSC6634.jpg
    K800__DSC6638.jpg
    K800__DSC6640-rotated.jpg
    K800__DSC6644-rotated.jpg
    K800__DSC6646-rotated.jpg
    K800__DSC6649-rotated.jpg
    K800__DSC6652.jpg
    K800__DSC6654.jpg
    K800__DSC6658.jpg
    K800__DSC6662.jpg
    K800__DSC6664.jpg
    K800__DSC6667.jpg
    K800__DSC6668.jpg
    K800__DSC6670.jpg
    K800__DSC6673.jpg
    K800__DSC6675.jpg
    K800__DSC6703-rotated.jpg
    K800__DSC6722-rotated.jpg
    K800__DSC6678.jpg
    K800__DSC6680-rotated.jpg
    K800__DSC6684.jpg
    K800__DSC6686.jpg
    K800__DSC6692.jpg
    K800__DSC6699.jpg
    K800__DSC6707.jpg
    K800__DSC6727.jpg
    K800__DSC6730.jpg
    K800__DSC6738.jpg
    K1024__DSC5515.jpg
    K1024__DSC5536.jpg
    K1024__DSC5839.jpg
    K1024__DSC5841.jpg
    K1024__DSC5870.jpg
    K1024__DSC5895.jpg
    K1024__DSC6529.jpg
    K1024__DSC6533.jpg
    K1024__DSC6545.jpg
    K1024__DSC6548.jpg
    K1024__DSC6567.jpg
    K1024__DSC6776.jpg
    K1024__DSC6778.jpg
    K1024__DSC6803.jpg
    K1024__DSC6820.jpg
    K1024__DSC7009.jpg
    K1024__DSC7021.jpg
    K1024__DSC7051.jpg
    K1024__DSC7144.jpg
    K1024__DSC7146.jpg
    K1024__DSC7167.jpg

    கல்வி

    K800__DSC5552.jpg
    K800__DSC5559.jpg
    K800__DSC5567.jpg
    K800__DSC5577.jpg
    K800__DSC5580.jpg
    K800__DSC5590.jpg
    K800__DSC5598.jpg
    K800__DSC5607.jpg
    K800__DSC5614.jpg
    K800__DSC5620.jpg
    K800__DSC5630.jpg
    K800__DSC5638.jpg
    K800__DSC5644.jpg
    K800__DSC5647.jpg
    K800__DSC5654.jpg
    K800__DSC5659.jpg
    K800__DSC5667.jpg
    K800__DSC5675.jpg
    K800__DSC5680.jpg
    K800__DSC5689.jpg
    K800__DSC5695.jpg
    K800__DSC5699.jpg
    K800__DSC5703.jpg
    K800__DSC5704.jpg
    K800__DSC5714.jpg
    K800__DSC5728.jpg
    K800__DSC5743.jpg
    K800__DSC5745.jpg
    K800__DSC5750.jpg
    K800__DSC5769.jpg
    K800__DSC5779.jpg
    K800__DSC5785.jpg
    K800__DSC5787.jpg
    K800__DSC5793.jpg
    K800__DSC5795.jpg
    K800__DSC5804.jpg
    K800__DSC5808.jpg
    K800__DSC5814.jpg
    K800__DSC5817.jpg
    K800__DSC5824.jpg
    K800__DSC5832.jpg

    தமிழ்த்திறன்

    • Like 2
  4. On 2/4/2024 at 22:21, ரசோதரன் said:

    காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான்.

    அழகான எழுத்துநடை. எனக்கு முறிப்புக் குளத்தால் ஏறி அப்படியே கோணாவில் ஊடாக மல்லாவி வரை ஓடிய நினைவைத்தருகிறது. அந்த வீதியிலும் விளாமரங்களைக் காணலாம். இன்று இயற்கை தொலைந்த செயற்கை வாழ்வினுள் தொலைந்துகொண்டிருக்கின்றோம். நாம் நாட்டை மட்டுமல்ல எம்மையும் சேர்த்தே தொலைக்கின்றோம்.
    நன்றி

    • Thanks 1
  5. 8 hours ago, ரஞ்சித் said:

    தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

    தமிழினவிடுதலைக்கும், விடுதலை உணர்வுக்கும் மற்றும் தனிமனித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இடையேயான ஊடாட்டம் என்பது சம்பவச்சூழலை மையங்கொண்டே நகரும். கூட்டுச்சேர்ந்து அழிகப்படுகின்றோம், கொல்லப்படுகின்றோம், கொடுமைகளுகுள்ளாக்கப்படுகின்றோம் என்ற சிந்தனையோடு வீதியால் செல்லும் ஒருவரது கண்ணிலே, தனது இனத்திற்கு எதிரான அவதூறாளனைக் காணும்போது உணர்சிமேலீட்டினால் இயல்பாக எழுகின்ற கொந்தளிப்பு வன்முறை எதிர்ப்பாக வடிவம் பெறுகிறது. மனித நடமாட்டப் பகுதிகளில் அது சில மணித்துளிகளில் குழுச் செயற்பாடாகப் பரணிமிக்கிறது. சிலர் இதனை ஏன் மிதிப்பான் எனக் கடந்துவிட சிலரோ அகற்றிவிட முனைந்து அதன்மேல் வீழ்தல் நிகழ்கிறது.
    தமிழர்களுள்ளே பண்டாரவன்னியன் காலம் முதல் தொடர்கதைதானே. இதுபோன்ற பிழைப்புவாதிகள் இருக்கவே செய்வர். சமகாலத்திலே சட்டாம்பிள்ளை; சும் செய்யததை, செய்வதை நாம் கடந்து செல்வதுபோல் இதுபோன்ற தரங்கெட்டோரைக் கடந்துவிட வேண்டும். ஈடுபட்டவரால் கடந்துவிட முடியவில்லை. கைக்கூலிகளை நாம் இனங்காணவேண்டும். வெளிப்படுத்த வேண்டும் என்ற அளவிலே இருப்பதற்கான கருத்தாடல்கள் வலுப்பெற வேண்டும். 
    நட்பார்ந்த நன்றியுடன்
    நொச்சி 

    • Like 1
  6. 18 hours ago, suvy said:

    யூ டியூபில் இருக்கின்றது.......நானும் கொஞ்சம் பார்த்தேன் ....நல்ல படம் பிரியன் ....... அதுதான் அது பெரிதாகப் பேசப்படவில்லை.......உண்மையை சொல்வதென்றால் இதுபோன்ற படங்கள் நிறைய வரவேண்டும்......வசூல் பெறவேண்டும்........!  👍

    உண்மை,
    தமிழகத்திரைத்துறை ஆடம்பரங்களுக்கு அளிக்கும் முன்னுரிமையை ஆக்கங்களுக்குக்கொடுப்பதில்லை என்பது தொடர்ந்துவரும் நிலை. விஜய் அல்லது அஜித் போன்றவர்கள் நடித்திருந்தால் ஆகா ஓகோ என்று பேசப்பட்டிருக்கலாம். இன்று இயற்கையைகாக்க அரசுகளும் ஆர்வலர்களும் படும்பட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் 'காடு' . சுவியவர்களுக்கு நன்றி 

  7. On 6/4/2024 at 10:38, suvy said:

    உங்களுடைய விமர்சனம் நன்றாகவே உள்ளது.......நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்க வில்லை......ஒருமுறை தேடிப்  பார்க்கத்தான் வேண்டும் .......!  👍

    நன்றி நொச்சி .......!  

     

    19 hours ago, ஈழப்பிரியன் said:

    உங்கள் விமர்சனத்துக்காகவே ஒருமுறை காடு படத்தைப் பார்க்க வேண்டும் போல உள்ளது.
    நன்றி நொச்சி.

    விமர்சனத்தை படித்துக் கருத்தையும், விருப்பையும் பதிவுசெய்து உற்சாகமூட்டும் சுவியவர்களுக்கும், ஈழப்பிரியனவ்ர்களுக்கும் மற்றும் வாசித்த உறவுகளுக்கும் நட்பார்ந்த நன்றி. 

  8. On 15/3/2024 at 20:32, நியானி said:

    இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

    வணக்கம், காடு திரைவிமர்சனம் வண்ணத்திரை பகுதியிற் பதிந்துள்ளேன். அகவை26க்கான பகுதியில் மாற்றி இணைத்துவிட முடியுமா? 

    நட்பார்ந்த நன்றியுடன்

    நொச்சி


  9.                                        எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்...
    உயிரிகளின் வாழ்வானது காட்டிலேயே மையங்கொள்கிறது. என்னதான் மனிதன் புதிய தேடல்களுள் முகிழ்ந்து மகிழ்ந்தாலும் மன ஆறுதலுக்காக எங்கே போகின்றான். இயற்கையை நோக்கித்தானே. இயற்கை என்றதும் முதலில் எம்முன் தோன்றுவது காடும் மலையும் அவற்றின் வனப்பும் அமைதியுமே எனில் மிகையன்று. எதேச்சையாக இந்தத் திரைப்படத்தை நேற்று எப்போதாவது வீட்டிலே போடப்படும் தொலைக்காட்சியிலே ஆதவன் காணொளியலையினூடாகப் பார்த்தேன். காட்டையே வாழ்வாகக் கொண்ட மக்கட் கூட்டத்திலே நண்பர்கள் இருவர். ஒருவன் காட்டைப் பாதுகாக்க நினைக்கும் கதாநாயகன். மற்றவனோ நண்பனைப் பணயம் வைத்துக் காட்டதிகாரியாகிக் காட்டையழித்து மரங்களைக் கடத்தத் துணைபோகும் ஒருவன் என இருவருக்கிடையே நிகழும் சில சம்பவங்களின் தொகுப்பாக நகர்ந்தாலும் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதைப் பேசப்படும் சொல்லியங்களூடாகவும் எளிமையாக வாழும் மக்களின் வாழ்வியல் ஊடாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.  
                           காடும் காடுசார்ந்த கிராமமுமாகக் கதை படமாக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே இளையோடும் காதல், காதலன் கைதானபோது ஏற்படும் தவிப்பு, நண்பனை அப்பாவியாக நம்பும் நண்பனான கதாநாயகன், காட்டைப் பாதுகாக்க நினைத்துக் ஏமாறும் காட்டு அதிகாரி எனப் பாத்திரங்களின் இயல்பான நடிப்பெனப் பார்க்கக்கூடிய படமாக உள்ளது. கதாநாயகன் சிறைப்படுத்தப்படுவதும் அந்தச் சிறைக்கு நந்தாவாக வரும் சமுத்திரக்கனியின் நடிப்பும் காட்சிகளும் வலுவானவை. சிறையிலே கூத்துக் கலைஞராக வரும் நடிகரின் இயல்பான நடிப்பெனப் பல்வேறு சம்பவங்களையும் சொல்லி நகர்கிறது. சிறைக் கலவரத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கத் தானே சாவை ஏற்கும் நந்தாவின் துணிவும் மனிதாபிமானமும் ஒருவகை. அது சேகுவேரா அவர்கள் சாவை எதிர்கொண்டதை நினைவுபடுத்துவதாய் உள்ளது.கைதிகளிடையேயான கூட்டு வாசிப்பு இன்றைய நவீன உலகில் அருகிவரும் வாசிப்புக்கலை குறித்த பதிவாகக்கருதலாம். கருணா என்ற பெயர்தாங்கி வில்லனாக வரும் பாத்திரம் எம் தேசத்தையும் நிiவுபடுத்தி நகர்கிறது. மரங்கள் குறித்தும் காடு குறித்தும் கதாநாயகன் பேசும் சொல்லியங்கள் நோக்குதற்குரியவை.எட்டுத் திக்கும் எங்கள் பக்கம் என்று தொடங்கும் பாடல் எழுச்சிப்பாடல்கள் போன்று உள்ளது. 
                                               விதார்த்(வேலு)சம்ஸ்கிருதி செனாய் (பூங்கொடி) முத்துக்குமார்(கருணா) நந்தா (சமுத்திரக்கனி) என பெரும் ஆரவாரமில்லாத நடிகர்களை வைத்து நல்லதொரு கருவைப் படமாக்கியுள்ளார். பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருந்தால் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும். இயற்கையை மீட்டெடுக்க முனைவோருக்கு காடு திரைக்கதை ஆதரவாக நிற்கிறது. ஸ்ராலின் இராமலிங்கம் அவர்கள் எழுதி இயக்க, கே என்பவர் இசையமைக்க நேருநகர் நந்து என்பவர் தயாரித்துள்ளார்.
    குறிப்பு: இதனை எழுதத் தூண்டியவர் வீரப்பனவர்கள். யாழிலே உள்ள திரியிலே அவரது மகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதான செய்தியைப் படித்தபோது இதனை எழுதத் தோன்றியது. நானொரு திரைப்பட விமர்சகனல்ல. ஒரு பார்வையாளனாக எழுதியுள்ளேன்
    நட்பார்ந்த நன்றியுடன்
    நொச்சி 

    • Like 4
  10. 37 minutes ago, Kapithan said:

    அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கட்சியினரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தீவிர தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இதுதான்?

    ☹️

    சிலவற்றை மாற்றமுடியாது.  மாற்றமடையாதது குயிலின் குரலோசை.ஆண்மயிலின் நடனம். யானையின் பிளிறல்.புலியின் உறுமல், சிங்கத்தின் கர்சனை, எனப் பல உள்ளன. ஆனால் முன்னவர் செய்த அரசியல் பிழையென்றால் அதிலே தொங்குவதை விடுத்து பின்னவர் நல்லதைச் செய்யலாம் அல்லவா? 
    நன்றி

  11. 22 hours ago, valavan said:

    நிகழ்கால பொருளாதார நெருக்கடியும், நாகரிக வளர்ச்சியும் அனைவரும் ஒன்று இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொள்ள அவர்களோ இஸ்லாத்தை உலகமெங்கும் பரப்பவேண்டுமென்ற கொள்கைப்படி எந்தவித கட்டுப்பாடுமின்றி இனவிருத்தி செய்கிறார்கள்.

    என்னுடன் சிரியாவைச் சேர்ந்த குர்திஸ் இனத்து முசுலிம் ஒருவர் வேலை செய்கிறார். அவர் ஒரு குர்திஸ் என்னோடு உரையாடுவார். கடந்த வியாழன் உரையாடும்போது தனது மகனதும் மகளினதும் பிந்தநாளை ஒரு சிலநண்பர்களோடு கொண்டாட உள்ளதாகக் கூறினார். அப்போ நான் மண்டபத்திலா என்று கேட்க, இல்லை வீட்டிலே என்றார். வீடு காணுமா என்றேன் மெய்பாட்டினூடாகச் சமாளிக்கலாம் என்றவர். தனது நண்பனுக்கு எட்டுப் பிள்ளைகள் என்றார்.நான்கு சிரியாவிலும் நான்கு துருக்கியிலும் பிறந்ததாகக் கூறினார். அப்போ நான் இங்கு என்றேன். இங்கு இல்லை என்றார். இங்கும் நாலென்றால்.... யேர்மனியில் ஒரு சிறிய முசுலிம் கிராமம் உதயமாகிவிடும். இதுதான் யதார்த்தம். நாமோ இருவராக வந்து ஒருவரோடு அல்லது இருவரோடு மட்டுப்படுத்தி நிற்க அவர்கள்  சுயமாக விட்டுள்ளார்கள். மற்றவரைக் குறைகூறி யாது பயன்.  

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா... என்ற கணியன் பூங்குன்றானாரவர்களது வரிகள் நினைவுக்கு வருகின்றன. 

    நன்றி

  12. 13 minutes ago, satan said:

    மக்கள் ஏமாளிகளாய் இருந்தால், எத்திப்பிழைக்கும் கூட்டம் பெருகிக்கொண்டே போகும். இந்த துரோகிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் போகத்தான் போகுது.  

    இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளோ தமக்குள் குத்திமுறிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களோ அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் அவலநிலை. இதில் எப்படியொரு நிலைபேறான அரசியல் முனையைத் திறப்பதெனச் சிந்திக்காதவரை மாற்றங்கள் வராது. குறைந்த பட்சம் யாழ். இந்துவில் நடந்த கருத்தாடலையாவது செவிமடுப்பார்களா?
    நன்றி
     

    • Like 1
  13. On 28/3/2024 at 18:18, பெருமாள் said:

    ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.

    ஏன் தமிழ்த்தேசிய சார்பு நிலை வாக்குகள் ஈ.ம.ஜ.க வைநோக்கிச் செல்கின்றன என்பதற்கான ஒரு சிறந்த பார்வை. இனியாவது தமிழ்த் தேசியம் பேசும்(பேசும்) கட்சிகள் சிந்திக்க வேண்டும். சும் மைப்பற்றிய பார்வையை பல யாழ்க்கள உறவுகளே பல ஆண்டுகளின் புட்டுபுட்டு வைத்துவிட்டார்கள். அவற்றினது தொகுப்பாகவே இந்தக் கட்டுரை அமைத்துள்ளபோன்று உள்ளது.

    நன்றி

    • Like 1
  14. 50 minutes ago, satan said:

           துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....

    தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம்.

    நன்றி

    • Like 2
    • Thanks 1
  15. On 1/3/2024 at 09:08, suvy said:

     

                                                                                                மயிலம்மா.

      நினைத்தால்  இனிக்கும்  மோகனம் .....!

    குமுகாயத்தின் சாரளங்களாக விரியும் இலக்கியப் பரப்பிலே சிறுகதை, குறுநாவல் என்பன விரைந்து வாசிக்கவும், இன்றைய அவசர உலகுக்குமான ஒரு படைப்பலகாகத் திகழ்கின்றது. அந்த அலகுக்கூடாக மயிலம்மாவை அழகோடு நகர்த்தியது அருமை. காதல், காமம் என்று அல்லாமல் ஒரு கிராமத்து வாழ்வியலில் இளையோடும் நுட்பமான தவறுகளையும் யதார்த்தமான பார்வையுள் வாசகனிடம் கொண்டுவருதல் சிறப்பு. வாமனின் பயிலரங்கு சற்று நெருடலானபோதும், அதனை அனுமதித்த மயிலம்மாவின் தாகமும் கரணியமாகிறது. இலக்கிய நயத்தோடும், இளமைத்துள்ளலோடும் படைத்துள்ளமை சிறப்பு. உங்கள் குறுநாவலூடாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிராமத்துக்குச் சென்றுவர வைத்துவிட்டீர்கள். யாழ்க் களத்தின் "கதைவாரிதி,, என்றே தங்களை அழைக்கலாம் என்பது எனது பார்வை. சுவியவர்களே தொடரட்டும் உங்கள் எழுத்தாக்கப்பணி. யாழ்க்கள ஓவியரின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள ஓவியங்கள் குறுநாவலுக்கு மற்றொரு சிறப்பு.
           இப்படிப் பல படைப்பாளர்களை ஒருங்கிணைக்கும் யாழுக்கும், அதன் நெறியாளர்களுக்கும் மற்றும் இலக்கியக் கடலிலே யாழெனும் படகின் சுக்கானைப் பிடித்து நகர்த்திவரும் மோகன் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி. 

    • Like 1
  16. On 23/3/2024 at 06:53, ஏராளன் said:

    ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

    ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே.
    நன்றி 

    • Like 3
  17. நேற்றும் அழித்தனர் எழுந்தோம்
    இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம்
    நாளையும் எழுவோம் 
    தலைவா நின் நாமமே 
    அடிநாதமாய் நிமிரும்
    காலத்தேரேறி வரும் மக்கள்படை 
    தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! 

    நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.

  18. 3 hours ago, தமிழ் சிறி said:

    சாந்தன்,  கல்லீரல் செயலிழப்புக் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

    ஆழ்ந்த இரங்கல், மெதுவாகக் கொன்றுவிட்டார்கள். ராஜீவுக்காக ஒரு இனத்தையே அழித்த மாபாதக அரசு. இந்த அரசிடம் நீதியை எதிர்பார்ப்பது எவளவு மடமை என்பதை சாந்தன் தனது உயிரீகத்தூடாக மீண்டும் நிறுவியுள்ளார். 

    • Like 1
  19.  

    அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா

    நன்றி - யூரூப்

  20. 10 hours ago, ஏராளன் said:

    மரணதண்டனை விதிக்கப்பட்ட ஸ்மித்தைக் கட்டி வைத்து, அவரது உடலில் ஒரு கொடிய ரசாயன கலவையை செலுத்த முயன்றனர்.

    ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது

    சனங்களை நாய்களாக என்னும் சனநாயக நாடாம் அமேரிக்கா. மரணதண்டனையைக்கூடச் சரியாக நிறைவேற்றத்தெரியாமல் சித்ததிரவதை செய்துகொல்லுதல், எவளவு அநியாயமனது.  
     

    • Like 2
  21. On 21/1/2024 at 09:47, தமிழ் சிறி said:

    இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

    நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நெருக்கடியான சூழலில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவருக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் இணைத்துப் பயணிக்கத் துணிய வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தலைமையாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய அரசியலில் உதிரிகளாக நின்று எதையும் அடையமுடியாது என்பதைப் புரிந்து கொண்டு புதிய தலைவர் செயற்பட்டால் மட்டுமே தமிழருக்கு நன்மை.

    • Like 1
  22. On 20/1/2024 at 23:37, குமாரசாமி said:

    சொந்த மண்ணில் கேரள/ஹிந்திய நடனங்கள் முளைக்க புலத்தில் எமது பாரம்பரிய கலைகளை முன்னெடுக்கும் எம்வவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

    உண்மை, கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.