Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5414
  • Joined

  • Last visited

  • Days Won

    6

Everything posted by nochchi

  1. அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு Posted on July 28, 2022 by தென்னவள் 12 0 செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நாகை கைலாசநாதர் கோவிலில் உள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிலை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செம்பியன் மகாதேவி சிலை சோழ வம்சத்தை சேர்ந்த 1000 வருடத்திற்கும் மேல் பழமையான உலோக சிலையாகும். 10ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழப் பேரரசர் கண்டராதித்தரின் பட்டத்தரசி செம்பியன் மகாதேவி என்பது வரலாறு. செம்பியன் மகாதேவி உலோக சிலையை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி சிலை கண்டுபிடிப்பு – குறியீடு (kuriyeedu.com)
  2. போராட்டத்தை ஒடுக்குவதோடு, எதிர்காலத்தில் இப்படியொரு மக்கள் போராட்டம் வரக்கூடாதென்பதற்கான அடக்குமுறை தொடரப்போவதற்கான அறிகுறியாகவே இந்தக் கைது நடவடிக்கை. தெரிந்தெடுத்துக் கைதுசெய்வதன் ஊடாக தனிமனிதக் குற்றமாக்கித் தனிமைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கைது நடவடிக்கை.
  3. குடுகாரனைவிட மோசமானது அரசபணத்தை சூறையாடுவது. 64மில்லியன் கையூட்டுப் பெற்று நிரூபிக்கப்பட்டு, 25மில்லியன் தண்டப்பணமும், ஈராண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் பெற்ற குற்றவாளி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர். அதுசரி குற்றவாளிகளின் கூடாரம்தானே இலங்கை நாடாளுமன்றம். உங்களையும், உங்கள் கொலைப்படையையும் விட மேலானவராகப் பிரபாகரன் அவர்களை விழித்ததோடு, எங்கே தாங்கள் பயங்கரவாதி என்று நம்பவைத்த இனவாத அரசியல் விம்பம் உடைந்துநொருங்கிவிட்டால் சிங்கள அரசியல்வாதிகளுக்கான அரசியல் இல்லாமற்போவதோடு, மக்களாற் துடைத்தெறியப்படுவோம் என்ற அச்சத்தின் வெளிப்பாடும், வீட்டை இழந்த கடுப்பின் வெளிப்பாடுமே போராட்டக்காரர்களைப் பார்த்து 'குடுகாரர்' என்று கொதிப்படையக் கரணியமாகும். சரியான மானரோசமுள்ள அரசியல்வாதிகளென்றால் இன்னேரம் தேர்தலுக்கல்லவா சென்றிருக்க வேண்டும்.
  4. ஒருவேளை வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டாலும், இப்படி ஒரு வழக்கைத் தாக்கல் செய்வதூடாக ஆளைப் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைப்பதற்கான செயற்தளத்தை அமைத்துள்ளார்கள். நாமும் விசாரிக்க வேண்டும். எனவே ஆளை ஒப்படைக்குமாறு கோரி அழைத்துப் பாதுகாப்பதே நோக்கம். அதேவேளை சிங்கப்பூர் அரசு கைதுசெய்யப்போவதுமில்லை. அதேவேளை இந்தியா சீனா போன்றனவும் தடுக்கும்.
  5. இணைப்புக்கு நன்றி. பெரும் துயரமானதொரு பதிவாகவும், கடத்தப்பட்டோரின் ஒட்டுமொத்தநிலையினை அறியத்தருவதாகவும் உள்ளது. சாட்சிகளைக் கேட்கும் உலகமன்று ஏன் இந்தச் சாட்சி கூறிய முகாம்களைப் பார்வையிட முயற்சிக்கவில்லை.
  6. அப்படியென்றால் தற்போதுள்ளவர்களுள் மிகப்பொருத்தமானவர்( மேற்குக்கு ஜால்ரா போடுவதற்கு ) எங்கட மதியா பரணம் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களே. எப்படி வசதி மக்களே!
  7. புலிகளின் அறிமுகம் என்ற மனநிலை மாற்றம் ஒன்று ஏற்படுவதோடு, அரசியல் ஆற்றலும் செயற்றிறனும் மிக்க இளையோரைக்கொண்ட அணியொன்று களத்திற்கு வரவேண்டும். அதுவரை இந்திய ஏகாதிபத்தியத்தின் கைத்தடிகள்தான் நாடாளுமன்றம் போகும். என்ன இருக்கை எண்ணிக்கைகள் மாறலாம்,அவளவே.
  8. நாடாளுமன்றிலே தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வாக(அது முழுமையானதாக இல்லாதபோதும்) முதன் முறையாக இலங்கை அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 42 ஆவதின் பிரிவின் படி 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 20 ஆண்டுகளின் பின் இலங்கை ஜனநாயகக் குடியரசின் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படி 16 ஐப்பசி 2006ம் திகதி இணைந்த வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகமானதுவடக்கு மாகாண நிர்வாகம், கிழக்கு மாகாண நிர்வாகம் என இரு வேறு நிர்வாக அலகுகளாக பிரிக்கப்பட்டது. சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி ஹக்கீம் அவர்களின் கூற்றுப்படி எப்படி இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. முரணாக இல்லையா. தமிழ்ச் சட்ட அறிஞர்கள் அல்லது அரசியல் நிபுணர்களால் கவனிக்கப்படவில்லையா?
  9. உண்மையில் ஸ்டாலின் இறந்தார். ஸ்டாலின் இறந்தபோது தடைசெய்யப்பட்ட அல்லது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திரைப்படமான "டெத் ஆஃப் ஸ்டாலின்" பற்றிய வெளிவரும் கதை தொடர்பாக, வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வின் விவரங்களை விசாரிக்க முடிவு செய்தேன். இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில், ஸ்டாலின், விசித்திரமாகத் தோன்றினாலும், மிகவும் மர்மமான நபர் என்பதில் சந்தேகமில்லை. அவரது வாழ்க்கை வரலாறு, அவர் ஆட்சிக்கு வந்த கதை, அவர் இறந்த கதை, அவரது காப்பகத்தின் கதை, உண்மையில் இல்லாதது - அவரது தனிப்பட்ட ஆவணக் காப்பகம் மறைந்துவிட்டது. அவருடைய உத்தியோகபூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற சுயசரிதைகள் சுமார் நூறு எழுதப்பட்டிருந்தாலும், நிறைய படங்கள் படமாக்கப்பட்டுள்ளன - ஆயினும்கூட, அவரது மரணத்துடன் தொடர்புடைய பல மர்மங்கள் உள்ளன. உண்மையில் ஸ்டாலின் இறந்தார். ஸ்டாலின் இறந்தபோது (rt82.ru) நெடுங்கட்டுரையாகவும் கூகிள் மொழிபெயர்ப்புப்போலும் உள்ளது. உறவுகளே நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். நன்றி
  10. இவளவு பட்டபின்னும் மக்களும் இவர்களை மாறி மாறி தெரிவுசெய்கிறார்களே.
  11. இந்த நிலமை எவளவு காலத்துக்கு என்ற வினாவும் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் மக்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்களா? அல்லது பக்சயாக்களுக்கு நடந்ததுபோல்................... அதற்கான வாய்ப்பு உண்டா?
  12. பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! Posted on July 24, 2022 by சமர்வீரன் 12 0 பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! – குறியீடு (kuriyeedu.com)
  13. ஆள் சரிவரமாட்டாரென்றுதானே, மக்களே கைகழுவிட்ட நரியாரைக் கொண்டுவந்திருக்கிறியள். அவர்தயாராக வேண்டாமோ?
  14. இதில் இன்னுமொரு விடயமும் கவனத்திற்குரியது.முதலவனவர்கள் கேட்துபோல், அமைந்துள்ள அரசு ஒரு 'சர்வகட்சி' அரசல்ல. முழுமுழுக்க மொட்டுக் கட்சியின் அரசு.ரணிலுக்குப் பின்னால் இருப்பது மொட்டு. அவர் அதைமீறிச் சிந்தித்தால் ஒரு நம்பிக்கையில்லாப்பிரேரணையோடு ஆள் காலி. விமல் வீரவண்ச கேத்தாவுக்க எதிராக் கருத்துகளை வைத்திருக்காவிடின் சிலவேளை மொட்டுக் கட்சியின் தெரிவாக அவரே இருந்திருப்பார். ஆனால் உள்-வெளியக நிலமைகள் ரணிலை முன்தள்ளி தாம் தப்பவேண்டியிருந்ததால், கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் இருக்கை நா.உ. பிரதமாராகி, சனாதிபதியாகியுள்ளார். முதல்வனவர்கள் நிறைய எதிர்பார்த்துவிட்டாரோ? எண்ணெயில் இருந்து நெருப்புக்குள் வீழ்ந்த நிலைதான். பொருத்தமான பதிலோடிணைந்த கந்தையா அவர்களுக்கு நன்றி.
  15. தமிழ் ஊடகங்கள் பல மனித உரிமைகள் மற்றும் அரசியல் விவகாரங்களில் மெத்தனப்போக்கைப் பின்பற்றிவருவதன் வெளிப்பாடே இதுபோன்ற தலைப்புகளைப்போடுவதற்க் கரணியமாகின்றன. ரணில் பேசாத ஒரு விடயத்தை செய்தியாக்குவது கண்டணத்திற்குரியதோடு, அந்தத் தவறான செய்தி திருத்ததப்படவேண்டியதுமாகும். ஒரு மூத்த ஊடகம் என்ற வகையிலே 'வீரகேசரி' பொறுப்புணர்வோடு செயற்படவேண்டும். ரணில் உண்மையில் அப்படியொரு வினாவைத் தொடுத்திருப்பின் அது நாடாளுமன்ற உறுப்பினரொருவரை அவமதித்ததோடு, நாடாளுமன்றையும் கேலிக்குள்ளாக்கியதாகவே கொள்ளவேண்டும். நன்றி
  16. ரஞ்சித் அவர்களே இணைப்புக்கு நன்றி. மிகக் குறைந்தோரைக்கொண்ட அமைச்சரவையாக உள்ளதே. சிறிலங்கா நாடாளுமன்றப் பாரம்பரியம் மீறப்பட்டுவிட்டது. என்ன மொட்டு மறைஞ்சிருந்து ஆட்டுவிக்குது.
  17. மேற்கினது அடிப்படையே பணம்தான். உற்பத்தி மற்றும் விற்பனை. இதில் யார் பலியானாலும் கடந்து சென்றுவிடுதல் என்ற கொள்கை. தமது மக்களது அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்து அமைதியாக வைத்திருப்பது. மக்கள் தெருவுக்கு இறங்காதிருக்குமாறு பார்த்துக்கொள்வது. எரிவாயு திருத்தவேலைகளுக்காக(ரஸ்யக் கூற்றுப்படி) நின்றபோது நாடாளுமன்றிலே அதிர்வலைகள்.நிதியமைச்சர், தொழிற்றுறையமைச்சர் என எரிவாயுப் பேச்சு. பாவனையைக் குறைத்தல். (ஒருவேளை குளிக்காமல் இருக்கச் சொல்வார்களோ யாராறிவார்) அது இது என்று பேசினார்கள். ஆனால், ரஸ்யாவிடமிருந்து எரிவாயு பெறுவதை தமக்கு சாதகமானதொரு நிலையில் நிறுத்திவிடுவார்கள். ரஸ்ய உக்ரேனிய யுத்தத்தில் ரஸ்யா வென்றால் உலகில் சில மாற்றங்கள் நிகழவாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை தோன்றாதிருப்பதைத் தடுக்கவே மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு அள்ளிக்கொட்டுகிறார்கள். யுத்தம் நீடிக்குமாயின் உக்ரேனானது வட - தென் உக்ரேன்களாக தோற்றம் பெறுவதில் முடிவடையலாம். தற்போதுள்ள நிலையில் பேச்சுவார்தைமூலம் முடியுமாயின் புதிய எல்லைகளை ஏற்கவேண்டிவரலாம். ஆனால், யுத்தத்தை நடாத்தும் மேற்குலகு ஒத்துக்கொள்ளுமா(?) என்பதும் புரியாதவிடயம். குறித்த ஒரு இலக்கில் உதவுவதோடு, ஒருகட்டத்திற்குமேல் மேற்கு உக்ரேனைக் கைவிட்டாலும் ஆச்சரியப்பட முடியாது. இதிற் பொதுமக்களே பலிக்கடா. ஆனால் அதிகார சக்திகள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லைத்தானே. நன்றி
  18. சிறிலங்காவில், இடம்பெறும் கிளர்ச்சியானது ஓர் அரசியல் புரட்சி அல்ல என்ற புரிதல் இங்கு அவசியமாகின்றது. புரட்சி என்றால் ஏதேனும் ஒரு கொள்கையோடு நடத்தப்பட்டிருக்க வேண்டும். இங்கே கிளர்ச்சியாளர்கள் பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள் இல்லாமை போன்ற காரணங்களை முன் நிறுத்தி கோட்டாபயவுக்கு எதிரான கிளர்ச்சிகளை நடத்தியுள்ளனர்.சிறிலங்காவில் கோத்தபாயவிற்கு எதிராக, ராஜபக்சக்களிற்கு எதிராக , கோட்டா கோ கம என்னும் குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட , ஒப்பந்த அடிப்படையிலான ஜனநாயகப் போராட்டம் தனது இலக்கை அடைந்து விட்டதாக எதிர்காலத்தில் , போராட்டக்காரர்களால் அறிவிக்கப்படலாம். சிறிலங்காவை கிடுக்கிப் பிடியில் கொண்டு வருவதற்காக மேற்கின் ஆசியோடு தொடங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான போராட்ட காரர்களை நேற்று நள்ளிரவில் இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். மேற்கும் ,இந்தியாவும் தங்களுடைய இலக்கை ஓரளவிற்கு எட்டி விட்டனர். ஆனால் இதுவும் கடந்து போகும். முற்போக்கு இளையோரினால் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடாத்தப்படலாம். ஆனால் அதற்கான விநியோகங்கள் சீராக நடைபெற மாட்டாது. ஆகவே அவையெல்லாம் கருவிலேயே அழிந்துவிடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. சனாதிபதித் தேர்தலில் யாரை வெல்ல வைக்கவேண்டும் என்ற திட்டக்கணக்கு ஒன்று ஏற்கனவே இருந்தது. அதன்படியே அனைத்தும் நடந்தது. தமிழர்கள் மீதான இனவாதத்தை தூண்டி ரணிலை வெல்ல வைக்கும் திட்டத்தில் , தமிழர் தரப்பில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு , களமிறக்கப்பட்டது. கூட்டமைப்பு. அழகப்பெருமவிற்கு வாக்களிக்கும் என்ற செய்திகள் ரணில் தரப்பினால் கடுமையாக பரப்பப்பட்டது. ஆகவே இனத்துவேசம் கொண்டு, எதிரணிகள் கூட தமிழர் விரோதப் போக்கினால் , ஒன்றாகி ரணிலுக்கு வாக்களித்தனர். நரியின் தந்திரமும். கூட்டமைப்பின் தந்திரமும். மேற்கு. இந்தியாவின் தந்திரமும் ஒன்றாகவே பலித்தது. இங்கே நரி வடைகளை தந்திரமாக பறித்துச் சென்றது. மேற்கின் பூகோள, வர்த்தக நலன்களிற்கு விரோதமான ஆட்சியை அகற்றுவதற்கு தேவையான போராட்டமாக திட்டமிட்ட தொடங்கப்பட்ட "கோட்டா கோ கம" இன்று இராணுவத்தின் இரும்புக்கரங்களினுள் சிக்கியுள்ளது. இனிமேல் உலகம் இதைக் கண்டு கொள்ளாது. காலம் எவரையும் விட்டு வைக்காது அது தன் கடமையைச் செய்யும் . விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது. குறிப்பு: இது எனது கருத்தல்ல. ஒரு புலனம் குழுவிலே பகிரப்பட்டதை இணைத்துள்ளேன் நன்றி
  19. மேற்கூறியவை அவதானத்திற்குரியவை. புட்டின் உக்ரேன் மீதான போர்ஊடாக உலகை அச்சுறுத்தவதாவேபடுகிறது. உணவு முதல் எரிபொருள் வரை பொருண்மியம் வீழ்ந்துவிட்டது. இதா அவர் காணவிரும்பும் உலகு. பட்டினிச்சாவு.
  20. உங்கள் வினாவே தவறானது. நான் யாரையும் தண்டிக்குமாறு சுட்டவில்லை. அரசுகளின் எதேச்சதிகாரத்திற்கு மக்கள் பலியாகிறார்கள் என்பதைத்தான் கூறினேன். புட்டினுக்குப் பலதெரிவுகள் இருந்தன. ஏன் வலிந்த யுத்தத்தைத் தெரிவு செய்தார்.
  21. உண்மை,ரஸ்யாவில் தங்கியிருத்தலை முடிவுக்கொண்டுவரக் காலமெடுத்தாலும் அதற்கான செயற்பாடுகள்(தாமதமானபோதும்) முடுக்கிவிடப்பட்டுள்ளன. எரிவாயுமூலமான வருமான இழப்பு ரஸ்யப் பொருளாதாரத்துக்குப் பின்னடைவாகவே இருக்கும். அரசுத் தலைமைகள் பொருண்மிய் சுமைகளால் அவதியுறுவதில்லை. அப்பாவி மக்களே அழிவதும் அவதியுறுவதும் எழுதாத விதியாக உள்ளது.
  22. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்பதை மீண்டும் உறுதிசெய்துள்ளது.
  23. அவரைப்போல் அவரது மனமும் வெள்ளையாக்கும். சிங்களத் தலைமைகளில் இனவாதம் இல்லையென்றால்தான் ஆச்சரியம். பின்னர் சிங்களவரே தப்பித்தப்பித் தப்பாக நினைத்துவிடார்.
  24. பாவம், தூதுவர்களால் கவலைப்படுவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும். பரவாயில்லை, கவலைப்படவாவது செய்தார்கள். தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோதும் கவலைப்பட்டார்களா? யாருக்காவது நினைவிருக்கிறதா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.