அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  633
 • Joined

Community Reputation

34 Neutral

About அன்புத்தம்பி

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. P U சின்னப்பா - கண்ணாம்பா P U சின்னப்பா - MGR - கண்ணாம்பா
 2. திரைக்கு வராத சிவாஜி படம் சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி – சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், உருப்படியாய் திரைக்கு வரவேயில்லை. அன்புடன், பொன்.செல்லமுத்து
 3. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
 4. SD சுப்புலட்சுமி நெல்லை மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் துரைசாமி என்ற நாடக நடிகருக்கு மகளாக பிறந்து, சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், கொஞ்ச காலம் மதுரையில் தங்கிஇருந்து ஸ்பெஷல் நாடகங்களில் நடித்திருந்தவர். வசனங்களை தெள்ள தெளிவாக உச்சரிப்பதில் வல்லவராக விளங்கினார். சமயயோசித புத்தி கூர்மை உள்ளவர் உள்ளவர். இந்த பண்பு இவருக்கு நார்ட்டன் சுப்புலட்சுமி என்ற சிறப்பு பெயரை வாங்கி தந்திருந்தது, அதாவது அந்த காலத்தில் நார்ட்டன் என்னும் இங்கிலீஷ் பாரிஸ்டர் , சென்னை உயர் நீதி மன்றத்தில் எதிரி வக்கீல்களை பேச்சு திறமையால் திணற அடிப்பாராம் . அத்தகைய பேச்சு திறமை உள்ள SD சுப்புலக்ஷ்மியிடம், நாடகத்தில் கதாநாயக நடிகர்கள் எதிர்பாராமல் கேட்கும் சில வினாக்களுக்கு, ஒரு வினாடி கூட யோசிக்காமல், விடை கொடுத்து மறு கேள்வி கேட்காதவாறு மடக்கிவிடுவாரம் . பேச்சு திறமை மட்டும் அல்ல, பாடுவதிலும் வல்லவர். கதாகாலசெபகலையை, "காலட்சேப கலா பூசனம்" C பனிபாய் அம்மையாரிடம் முறையாக பயின்று நிகழ்ச்சிகள் கொடுத்தவர்.
 5. தமிழின் முதல் பின்னணிப்பாட்டு முதல் இரவல் குரல் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாயிருக்கும். தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்ப காலத்தில், சரீர அழகும் சாரீர அழகும் உடையவர்களே வெள்ளித்திரையில் முன்னணியில் மின்னினார்கள். அப்படியோர் புதிய வரவே கே.அஸ்வத்தம்மா ஒரு நடிகையின் தேவைக்கு மிஞ்சிய சரீர அழகும், பாட்டுத்திறனும், கீச்சுக் குரல் தமிழ்ப்பேச்சுத் திறனுமான சாரீர அழகும் இவருக்குமிருந்தன. ”கன்னடத்துப் பைங்குயில்” என்று தாரளமாக அழைத்திருந்திருக்கலாம்... பாகவதரின் மூன்றாவது படமான ‘சிந்தாமணியி’ல், அவருக்கு ஜோடியாக சிந்தாமணியாக நடித்து பலரைப் பைத்தியமாகியவர் இவர். ஒருவருடத்திற்கும் மேலாக வெற்றிவாகை சூடிக்கொண்டு ஓடிய சிந்தாமணியின் புகழ் வெளிச்சத்தோடு கே.அஸ்வத்தம்மா நடித்த இரண்டாவது படம் 39ல் வெளியான “சாந்த சக்குபாய்” “சாந்த சக்குபாயி’ன் படப்பிடிப்பு முக்கால் பகுதி முடிவடைந்த நிலையில், அதற்கு முந்திய ஏழு வருடங்களாக கண்டிராத புதிய பிரச்சனை ஒன்று தமிழ் பேசத்தொடங்கியிருந்த திரையுலகிற்கு தோன்றியது. திடீரென அஸ்வத்தம்மா உடல் நலம் குன்றினார்; படுத்த படுக்கையானார். மீண்டும் இவரால் எழுந்திருக்க முடியாதென்பதைத் தெரிந்துகொண்ட தயாரிப்பாளரும், இயக்குனரும் தவித்துப் போனார்கள். சாந்த சக்குபாயை என்ன செய்வது? அப்படியே கைவிட்டு விடுவதா? முதல் போட்ட தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஸ்டமாகும்? இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்ணிக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. வலைவிரித்தார்கள். அஸ்வத்தம்மாவின் உயரம், அகலம், உருவம்கொண்ட ஒருபெண்மணி சிக்கினார். அவரை அழைத்துவந்து, க்ளோஸப் காட்சிகளைத் தவிர்த்து, தூர இருந்தே படம்பிடித்துவந்து சாந்த சக்குபாயை நிரப்பிவிட்டார்கள். இதேபோலவே அஸ்வத்தம்மாவின் குரலோடு ஒத்திருந்த வி.ஆர்.தனம் என்ற ஒருவரைப் பாடவும் பேசவும் வைத்தார்கள். காட்சியும் கானமும் ஒரே நேரத்தில் கமிராவில் பதிவு செய்யப்பட்ட காலமது. இதிலிருந்தே, ஒருவருக்காக இன்னொருவர் இரவல் குரல் தரும் புதிய யுக்தி, அதாவது பின்னணி ஒலிப்பதிவு முறை தமிழில் அறிமுகமாகியது. தமிழில் முதல் பின்னணிப் பாடகர் என்ற பெருமை வி.ஆர்.தனம் அவர்களை சேர்ந்தது. சாந்த சக்குபாயில் டி.எஸ்.கிருஸ்ணவேணி என்ற நடிகைக்கும் வி.ஆர்.தனம் அவர்களின் குரலை இரவல் வாங்கியிருந்தார்கள். முதல் இருமொழி நட்சத்திரம் என்னும் பெருமையுடன் அஸ்வத்தம்மா 1944ல் காசநோயால் காலமானார். மதனன் மலரம்பால் எய்தனன் என்மேலே படம்: சாந்த சக்குபாய் 1939 பாடல் வரிகள்: பாபநாசம்சிவன் இசை: பாபநாசம்சிவன்+ராஜகோபால சர்மா பாடியவர்: வி.ஆர்.தனம் அநாமிகன்
 6. ஜெயலலிதா அறிமுகமான படம் "வெண்ணிற ஆடை'. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுடன் நிர்மலா, மூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோரும் அறிமுகமானார்கள். அதில் மூர்த்தியும், நிர்மலாவும் "வெண்ணிற ஆடை'யைத் தங்கள் பெயருக்கு முன் போட்டுக் கொண்டனர். "காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் படத்தைத் தயாரித்து வெற்றி கண்ட ஸ்ரீதர், அடுத்த படத்தை முற்றிலும் மாறுபட்ட படமாகத் தரவிரும்பினார். . பி.ஆர்.பந்துலுவின் "சின்னத கொம்பே', கன்னடப்படத்தின் ரஷ்களைப் பார்த்த ஸ்ரீதர், அதில் நடித்த சின்னப் பெண் யார் என்று கேட்டார். அவர் நடிகை சந்தியாவின் மகள் ஜெயலலிதா என்று கூறினார்கள். தான் எடுக்கவிருக்கும் "வெண்ணிற ஆடை'யின் நாயகி என அவரை முடிவு செய்துகொண்டு, சந்தியாவுக்குத் தகவல் தந்தார். அவரும் தன் மகளைக் கூட்டிக் கொண்டு "சித்ராலயா' அலுவலகம் போனார். படத்தின் கதாநாயகி ஆரம்பத்தில் பைத்தியம் பிடித்தவளாக இருப்பாள். பின்னர் இளமை பொங்கும் கதாநாயகியாக வந்து தன்னைக் குணப்படுத்திய டாக்டரை காதலிப்பார். இந்த இளம் விதவையின் பாத்திரம் பல்வேறு உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாத்திரம் என்று கதையைச் சுருக்கமாகக் கூறி, இதில் இந்த வேடத்தில் உன்னால் நடிக்க முடியுமா என்று ஸ்ரீதர் கேட்டார். முடியும் என்றார் ஜெயலலிதா. "உனக்கு நம்பிக்கை இருக்கிறதா' என்ற கேள்விக்கு "இருக்கிறது' என்று உறுதியாகப் பதில் தந்தார் அவர். உடனே கதாநாயகியாகவும் ஆனார். வண்ணத்தில் உருவான "வெண்ணிற ஆடை' 1965ஆம் ஆண்டு வெளிவந்தது. துள்ளித்திரியும் சிறுபெண்ணை அறிமுகம் செய்து, இளைஞன் ஒருவனைக் காதலிக்க வைத்து, இன்னொருத்தியை போட்டிக்கு உருவாக்கி, அந்தச் சின்னப் பெண் கல்யாணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழப்போகிறாள் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, கடைசியில் அவள் விதவை என்று பயங்கரக் குண்டைத் தூக்கி ரசிகர்கள் தலையில் போட்டு அவளை வெள்ளாடை அணிந்து வரச் செய்து திடுக்கிட வைத்தார் ஸ்ரீதர். சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த, ராகினி ரிக்ரியேஷன் நாடகக் குழு நடிகர்களில் ஒருவராக நடித்துவந்த, வெங்கட்ராமனை ஸ்ரீகாந்த் என்ற பெயரில் நாயகனாக அறிமுகம் செய்தார் ஸ்ரீதர். அவரது ஜோடியாக ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹேமமாலினி மிகவும் ஒல்லியாக இருந்ததால், அவரைப் படத்திலிருந்து நீக்கிவிட்டு, "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடிக்க வந்து நிராகரிக்கப்பட்ட நிர்மலாவைத் தேர்வு செய்தார். ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்ட ஹேமமாலினி பம்பாய் போனார். இந்தி சினிமாவின் கனவுக் கன்னி ஆனார். இந்தப் படத்தில் அறிமுகமானவர்களில் ஜெயலலிதாவின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. இந்த ஒரே படத்தில் அவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். "அம்மம்மா காற்று வந்து' "சித்திரமே சொல்லடி' , "கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல' "என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே' போன்ற கண்ணதாசனின் பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் இசையில் தித்தித்தன.பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் மிக அருமையாக அந்தப் பாடல்களைப் பாடியிருந்தனர். இந்தப் படத்துக்கு முதலில் வரவேற்பு குறைவாக இருந்தபோதிலும், போகப் போக கூட்டம் அதிகரித்து படம் நூறு நாட்கள் ஓடியது. ஜெயலலிதா திரையுலகில் நம்பர் ஒன் நாயகி அளவுக்கு உயர இந்தப் படம் அடிகோலியது.
 7. இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்கள்... பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை அமரன் மட்டுமே. அமர்சிங் என்ற கங்கை அமரன் அடிப்படையில் நல்லதொரு இசைக்கலைஞன், தன் அண்ணன்மார் பாவலர் வரதராஜன், ராசய்யாவோடு ஊர் ஊராய்ப் போய்ப் பாட்டுக் கட்டியவர். ஆரம்பத்தில் பெண் குரலுக்குப் பொருத்தமாக ராசய்யாவின் குரல் பவனி வந்து கொண்டிருந்து ஒரு கட்டத்தில் அவரின் குரல் நாண் ஆண் சுருதி பிடித்தபோது பெண் குரலுக்கு அடுத்த ரவுண்ட் கட்டியவரே இவராம். பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வந்த காலகட்டத்தில் "புதிய வார்ப்புகள்" படத்தில் கதாநாயகனாக அரிதாரம் பூசக்கிடைத்த பாக்கியத்தை இன்னொரு ராஜ் பறித்துக் கொண்டதால் கதாநாயக அவதாரம் மட்டும் திரையில் கிட்டாது போனாலும் இவரின் பாட்டுக் கட்டும் பணி மட்டும் ஓயாது தொடர்ந்தது. இளையராஜாவின் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிட்டிய எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதை "செந்தூரப்பூவே செந்தூரப் பூவே சில்லென்ற காற்றே" என்று தேன் கவியைக் குழைய விட்டு அண்ணனுக்குப் பெருமை சேர்த்தார் கவிஞர் கங்கை அமரன். "கோழி எப்படிய்யா கூவும்" என்று சீண்டினார் இவரைப் போல அன்று இளவட்டக் கவிஞராக இருந்த வைரமுத்து கங்கை அமரன் எடுக்கவிருந்த "கோழி கூவுது" படத் தலைப்பைக் கேட்டு விட்டு. "உங்க பேரில் வைரமுத்து இருப்பதால் வைரமும் முத்தும் கொட்டியா கிடக்குது?" என்று விட்டுக் கொடுக்காமல் பதிலடி கொடுத்த அறிமுக இயக்குனர் கங்கை அமரனுக்கும் இயக்குனராக நல்லதொரு அங்கீகாரம் கிட்டியது. கோழி கிராமங்களைத் தாண்டி நகரங்களுக்கும் கூவியது. இசையமைப்பாளன் கங்கை அமரன் பற்றி. "இவன் மட்டும் ஒரே வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சிட்டிருந்தால் ஒரு நல்ல இசையமைப்பாளர் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பார்" சொன்னவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அல்லவா. கங்கை அமரனின் பாடல்களைக் கேட்டால் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பும், 70 களில் இருந்த இளையராஜாவின் பாணியும் இருக்கும். இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது அப்போது பிரபலமாக இருந்த காஜா இயக்கத்தில் "விடுகதை ஒரு தொடர்கதை" மூலம். அந்தப் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் காலங்கள் கடந்த பின்னும் தேனாக இனிக்கும். ஒன்று "விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.ஜானகி பாடும் பாடல். இன்னொரு பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடும் "நாயகன் அவன் ஒரு புறம்" சம காலத்தில் வந்த இன்னொரு படம் "மலர்களே மலருங்கள்". இந்தப் படத்திலும் கங்கை அமரனுக்குப் புகழ் சேர்த்தவை பி.சுசீலா பாடிய சுட்டும் விழிச்சுடர் தான், "அப்போல்லாம் இளையராஜாவை சந்திக்கவே முடியாத அளவுக்கு மனுஷர் பிசியா இருந்த காலத்தில் நம்ம ரேஞ்சுக்கு ஏற்றவர் கங்கை அமரன் தான் என்று முடிவு பண்ணி அவரோடு சேர்ந்து படம் பண்ணினேன்" இப்படிச் சொல்கிறார் இயக்குனர் பாக்யராஜ். சந்தர்ப்பம் அப்படி அமைந்தாலும் இயக்குனராக பாக்யராஜ் செய்த படங்களில் முந்தானை முடிச்சு நீங்கலாக இளையராஜாவோடு இணைந்து அவர் பணியாற்றிய படங்கள் பெரு வெற்றி பெற்றது இல்லை எனலாம். ஆனால் சங்கர் கணேஷ், எம்.எஸ்.விஸ்வநாதன் இவர்கள் வரிசையில் கங்கை அமரனோடு சேர்ந்து பணியாற்றிய சுவரில்லாத சித்திரங்கள், மெளன கீதங்கள் படங்களும் வெற்றிப் படங்கள் வரிசையில் சேர்ந்து கொண்டன. 1990 களில் ஒரு ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு கங்கை அமரன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பரிவாரங்களோடு வருகின்றார். கங்கையும் எஸ்.பி.பியும் சேர்ந்தால் கிண்டலுக்குக் கேட்க வேண்டுமா. "இவனெல்லாம் இசையமைச்சு நான் பாடவேண்டியதாப் போச்சு பாருங்க" என்று சொல்லி ஓய்கிறார் எஸ்.பி.பி மேடையில் வைத்து. அரங்கம் அந்த நேரம் ஒரு கணம் நிசப்தமாக இருக்கிறது. அடுத்த கணம் "நீலவான ஓடையில்" பாடலை ஒரே மூச்சில் பல்லவி முழுக்கப் பாடி விட்டு கங்கை அமரனை உச்சி மோந்து கட்டிப் பிடிக்கிறார் எஸ்.பி.பி. மலையாளத்தில் "நீலவானச் சோலையில்" என்த்று பாடிச் சென்றவர் கே.ஜேசுதாஸ்."வாழ்வே மாயம்" கங்கை அமரனுக்கு வாழ்நாள் சொத்து. அதே மேடையில் அடுத்துப் பாட வருகின்றார் எஸ்.ஜானகி. "பாலு மாதிரியே நம்ம கங்கை அமரன் இசையில் எனக்குப் பிடிச்ச பாட்டு ஒண்ணு சொல்லணும்" என்று சொல்லி விட்டு பின்னணி வாத்தியங்களைச் சைகை காட்டி விட்டுப் பாட ஆரம்பிக்கின்றது அந்தப் பாட்டுக் குயில் "அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா". அப்போது தான் வெளி வந்த படமான "அத்த மக ரத்தினமே" படத்தின் பாடலை முதல் தடவையே அரங்கத்தில் கேட்டவர்களின் ஊனுக்குள் புகுந்து உள்ளத்துச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது அந்தப் பாடல். "ஜீவா" என்றொரு படம் வந்தது. சத்யராஜ் நடித்த அந்தப் படத்தில் ஒரு பாட்டு "சங்கீதம் கேளு இனி கைத்தாளம் போடு". இளையராஜாவின் பாடல்களையே ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்த சென்னை, தூத்துக்குடி, திருச்சி வானொலிகளின் அன்றைய உங்கள் விருப்பம் நிகழ்ச்சிகளில் பங்கு போட்டுக் கொண்டது இந்தப் பாடல். கிட்டார் இசையும், கொங்கோ வாத்தியமும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு கைத்தாளம் போட வைக்கும் பாட்டு இது. இடையிசையில் வீணை லாவகமாகப் பயன்படுத்தப்பட்டு மெல்ல மெல்ல மேற்கத்தேயக் கலப்புக்கு இசை நகரும் சிறப்பே அழகு. நன்றி பவிதரன்
 8. பவளக்கொடி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த தியாகராஜ பாகவதர் 1937ஆம் ஆண்டில் நடித்து வெளிவந்த படமான சிந்தாமணி 52 வாரங்கள் தொடர்ந்து ஓடி, அதுவரை வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்றது. (இன்று 52 நாள் ஓட திக்கு முக்காடும் படங்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்). . மதுரை ராயல் டாக்கீஸ் தயாரித்த இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னடத்தில் பிரபல பாடகியாகத் திகழ்ந்த அஸ்வத்தம்மா, பாகவதருடன் போட்டி போட்டு, தமிழில் பாடி நடித்தார். படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ். (நடிகை லட்சுமியின் தந்தை). வசனங்களை அய்யாலு சோமயாஜுலு எழுதினார். பாடல்களை எழுதியவர் பாபனாசம் சிவன். ஒய்.பி. வாஷிகர் என்பவர் கேமராவைக் கையாண்டார். செருகளத்தூர் சாமா, அரங்கநாயகி, நாராயணராவ், எஸ்.எஸ். ராஜாமணி போன்ற தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கிய அருமையான தயாரிப்பு இது. படக்கதை: பில்வமங்கள் என்ற ஆணழகன் ஒரு தாசியின் வலையில் சிக்கி, கடைசியில் திருந்தி பக்திமானாக மாறி முக்தி பெறுவதே கதை. பெரும் செல்வந்தரின் மகனான பில்வமங்கள் தாசி சிந்தாமணியின் அழகிலும், நாட்டியத்திலும் மயங்கி அவளே சரணாகதி என கிடக்கிறான். மகனின் இந்தச் செயல் கண்டு, பில்வமங்களின் தந்தை வாசுதேவ மூர்த்தி சுகவீனமடைந்து படுத்த படுக்கையாகிறார். பில்வமங்களின் மனைவி சுசீலா தன் விதியை நொந்தவாறு மாமனாருக்குப் பணிவிடை செய்கிறாள். மனவேதனையால் உயிர்துறக்கும் தறுவாயில் வாசுதேவமூர்த்தி தனது சொத்துக்களை மருமகள் சுசீலா பேருக்கு எழுதி வைத்து விடுகிறார். அதை கணவனின் கால்களில் அர்ப்பணித்து அவனது அன்பை யாசிக்கிறாள் அவள். சிந்தாமணி மீதான மோகம் அவனது நெஞ்சைக் கல்லாக்கிவிடுகிறது. கொட்டும் மழையில் இறந்த தந்தையின் உடலையும், மனைவியையும் புறக்கணித்து விட்டு சிந்தாமணியைத் தேடிப் போகிறான் பில்வமங்கள். கணவனைத் தேடி இருட்டில் ஓடிய சுசீலா, கங்கையில் விழுந்து உயிர் விடுகிறாள். படகு இல்லாத காரணத்தால், மிதந்து வரும் மனைவியின் சடலத்தின் மீது ஏறிக் கரையைக் கடந்து சிந்தாமணி வீட்டை அடைகிறான். ரத்தக்கறை படிந்த மேனியுடன் வந்து நின்ற பில்வமங்களைப் பார்த்து திகைத்த சிந்தாமணி காரணத்தை வினவ, நடந்ததைச் சொல்கிறான். சிந்தாமணி ஓடி வந்து கரையோரம் பார்க்க, அது சுசீலாவின் சடலம் என்பது தெரிகிறது. இருவரும் கதறியழுகிறார்கள். அதிலிருந்து பில்வமங்கள் மனம் மாறுகிறான். சிறந்த பக்திமானாகி, கிருஷ்ண பரமாத்மாவை அனுதினமும் தியானிக்கிறான். கடைசியில் பில்வமங்களும், சிந்தாமணியும் கடவுள் அருளுடன் மோட்ச கதி அடைகிறார்கள். "ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே' "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி'போன்ற 25 பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருந்தன. மதுரையில் நியூ சினிமா உள்பட பல இடங்களில் இப்படம் ஓராண்டாக ஓடியது. இலங்கையிலும் பெரும் வெற்றி பெற்றது. தியேட்டர்காரர்களாக பார்த்து, படத்தை எடுக்காத வரை கூட்டம் குறைவதற்கான வழியே ஏற்படாமல் திரையரங்குகளில் திருவிழாக் கூட்டம்தான். இந்தப் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் ராயல் டாக்கீசார் ஒரு திரையரங்கையே கட்டி, அதற்கு சிந்தாமணி என்று பெயரிட்டனர். சிந்தாமணி பெண்ணுக்கு பெருமை தரும் பெயராக இருந்ததால், காதல் நாயகனாக பிரகாசித்த பாகவதரின் பொருட்டு படத்திற்கு சிந்தாமணி அல்லது பில்வமங்கள் என்று பெயர் வைத்தனர். சிந்தாமணி படம் பெரும் வெற்றி பெற்றதால், இந்தப் படத்தின் பாடல்களை இசைத் தட்டாக வெளியிட தயாரிப்பாளர்கள் கருதினார்கள். ஆனால் பாடலை இசைத் தட்டாக வெளியிட்டால், படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என பாகவதர் கருதி, அதற்கு மறுத்துவிட்டார். எனினும் அஸ்வத்தம்மா பாடிய கிருஷ்ணா, கிருஷ்ணா, ஈனஜென்மம் எடுத்தேன் ஆகிய பாடல்களை இசைத் தட்டுக்களாக வெளி யிட்டனர். படத்தில் அஸ்வத்தம்மா, பாகவதருடன் பாடிய டூயட் பாட்டான "மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம்'என்பதை துறையூர் ராஜகோபால் சர்மா என்பவரைக் கொண்டு பாட வைத்து இசைத்தட்டாக வெளியிட்டனர். பாகவதரின் குரலை அவரது குரல் ஒத்திருந்த போதிலும், மக்களுக்கு அது பாகவதர் பாடாத பாட்டு என்பது தெரிந்துவிட்டது. இடையில் சமரசம் பேசியதையடுத்தும், படத்தின் வசூல் இசைத்தட்டு வெளியீட்டால் பாதிக்கப் படாததாலும், பாகவதர் தான் தனியாகப் பாடிய பாடல்களை இசைத்தட்டுக் களுக்காக மீண்டும் பாடினார். அவை வெளிவந்து இசைத்தட்டு விற்பனையில் வரலாறு படைத்தன.
 9. பார் போற்றும் பாவேந்தர் - 4 படங்களில் பாவேந்தர் பாடல்கள் படம் பாடல்.............குரல் பாலாமணி (அல்லது) பக்காத்திருடன்-1937 1.கார்குகா சண்முகா 2.திருவருள்நீ 3.சந்தோஷ வாழ்வினைப் 4.மண் பெண் பொன் 5.நில்லாத இந்த வாழ்வு 6.திருமண விஷயமாய் 7.சகலமும் முடிந்ததினி 8.காத்தருள் புரிதெவி 9.வாசத்தென்றல் வீசுதே 10.வதியெலாம் மாமலைபோல் 11.சிந்தை நோக 12காதலெலாம் அவன் 13.சதா சோகம் தாளேனே 14.தேவி நான் பாவியைப் 15.பணமே உனதொரு 16.கண்டு உன்னில் 17.பாவையே உன்மீதில் காளமேகம்-1940 18.வானஜோதி 19.தகதக தேஜோந்மய 20.பூலோகம் எல்லாம் 21.எனதாசைக் குகந்தவன் நீ 22.வருவதாய் உரைத்துச் 23.பாடுறேன் நானே 24.மதமா? காதலா? 25.ஆடிடும் மயில்மிசை 26.தாயே அருள்வாய் 27.பத்தினித்தனம் புரிஞ்சி 28.இருகாதலர் சீர்சொல்லி 29.எளியேனையாள் உலகநாயகி 30.என்ன உதாரம் தேவி 31.கொஞ்சும் கிளிகள் 32.உனைப்பற்றிய கவி 33.சுகித்திட வாராயோ 34.சீருள்ள வெண்குடை 35.நாதா ப்ரியமான 36.வாழ்க்கை உடம்பினில் ஸ்ரீராமானுஜர்1938 37.வாழிய எழில் 38.கேட்பதெல்லாம் 39.யோகி தேகநிலை 40.ஓர் அணுவினை மேரு 41.கோவிந்த ராஜா ஹரி 42.வாராயோ கண்ணா 43.மாதவனே கருணாகரனே 44.மனிதர்கள் சமமே 45.வந்தால் வரட்டும் 46.எப்பக்கஞ் சாமி விலகச் (தொடரும்) என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து பார் போற்றும் பாவேந்தர் - 5 படங்களில் பாவேந்தர் பாடல்கள் படம் பாடல்.............குரல் ஓர் இரவு - 1951 47.துன்பம் நேர்கையில் ..........................M.S.ராஜேஸ்வரி, வர்மா வளையாபதி - 1952 48.குலுங்கிடும் பூவிலெல்லாம் ........................................T.M.S., K.ஜமுனாராணி 49.குளிர் தாமரை மலர்ப்பொய்கை ...........................................T.M.S., K.ஜமுனாரணி பராசக்தி - 1952 50.வாழ்க வாழ்க வாழ்கவே ...................................M.L.வசந்தகுமாரி என்தங்கை - 1952 51.காதல் வாழ்விலே பணம் - 1952 52.பசியென்று வந்தால் ஒருபிடிசோறு கல்யாணி - 1952 53.அதோ பாரடி அவரே என்கணவர் அந்தமான் கைதி - 1952 54.அந்த வாழ்வுதான் எந்தநாள் பூங்கோதை - 1953 55.தாயகமே வாழ்க தாயகமே திரும்பிப்பார் - 1953 56.பாண்டியன் என்சொல்லை ரத்தக்கண்ணீர் - 1954 57.ஆலையின் சங்கே நீ ஊதாயோ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954 58.வெண்ணிலாவும் வானும் போலே ..................................ராதா(R).ஜெயலஷ்மி என் மகள் - 1954 59.சங்கே முழங்கு கோமதியின் காதலன் - 1955 60.நீலவான் ஆடைக்குள் உடல் நானே ராஜா - 1956 61.பொன்மேனி காட்டி உனை - ஜிக்கி 62.ஆடற் கலைக்கழகு தேடப்பிறந்த ........................P.லீலா, M.L.வசந்தகுமாரி ரங்கோன் ராதா - 1956 63.தலைவாரி பூச்சுடி உனை - P.பானுமதி குலதெய்வம் - 1956 64.(இன்ப வருக்கமெல்லாம்)வெட்கமில்லை ........................................C.S.ஜெயராமன் பெற்ற மனம் - 1960 65.ஒரேஒரு பைசா தருவது பெரிசா ..........................சூலமங்கலம் ராஜலட்சுமி 66.புதியதோர் உலகம் செய்வோம் ..........................சீர்காழி கோவிந்தராஜன் 67.பாடிப்பாடி வாடி வானம்பாடி ..................................J.P.சந்திரபாபு 68.மனதிற்குகந்த மயிலே ..................................J.P.சந்திரபாபு கலங்கரை விளக்கம் - 1965 69.சங்கே முழங்கு சங்கே முழங்கு சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா, குழுவினர் பஞ்சவர்ணக்கிளி - 1965 70.தமிழுக்கும் அமுதென்று பேர் - P.சுசீலா சந்திரோதயம் - 1966 71.புதியதோர் உலகம் செய்வோம் ................சீர்காழி கோவிந்தராஜன் மணிமகுடம் - 1966 72.(சிரம் அறுத்தல்)வலியோர் சிலர் - T.M.S. நம்மவீட்டுத் தெய்வம் - 1970 73.எங்கெங்கு காணினும் சக்தியடா ..........................T.M.சௌந்தரராஜன், குழுவினர் நான் ஏன் பிறந்தேன் - 1972 74.சித்திரச் சோலைகளே - T.M.S. பல்லாண்டு வாழ்க - 1975 75.புதியோர் உலகம் செய்வோம் T.M.சௌந்தரராஜன், வாணிஜெயராம், குழுவினர் கண்ணன் ஒரு கைக்குழந்தை - 1978 76.காலை இளம்பரிதியில்(குறும் பாடல்) .........................S.P.பாலசுப்பிரமணியம் நிஜங்கள் - 1982 77.அம்மா உந்தன் கைவளையாய் .........................வாணிஜெயராம் புரட்சிக்காரன் - 2000 78.தூங்கும் புலியை பறைகொண்டு - நித்யஸ்ரீ எத்தனை கோணம் எத்தனை பார்வை 79.புகழ் சேர்க்கும் (குறும் பாடல்) ...............................மலேசியா வாசுதேவன் என்றுமன்புடன் பொன்.செல்லமுத்து