Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  2,339
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Everything posted by அன்புத்தம்பி

 1. சிலரின் மௌனங்கள் சிலருக்கு கேள்வியாகின்றன.. சிலரது கேள்விகளுக்கு சிலரது மௌனங்கள் பதிலாகின்றன.
 2. சத்யானந்தா சுவாமி கிண்டி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்துக்குள் இவரது சமாதி உள்ளது .
 3. Thirumalai Thenkumari Directed by A. P. Nagarajan Written by A. P. Nagarajan[1] Produced by C. Paramasivan Starring Sivakumar Kumari Padmini Sirkazhi Govindarajan Manorama Cinematography W. R. Subba Rao Edited by T. Vijayarangam Music by Kunnakudi Vaidyanathan Sree Vijayalakshmi Pictures Release date 15 August 1970
 4. மூளாய் ஊரின் வதிரன்புலோவில் மூத்த விநாயகர் திருக்கோலம் மூஞ்சுறு மேலது காண்பவர்க்கெல்லாம்
 5. Starring: S. A. Ashokan, Manimala, Gemini Ganesan, R. S. Manohar, Manorama, Savitri, Thangavelu Director: R. Sundaram Music: Vedha Year: 1965 நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை!
 6. இயக்கம் நந்தலால் யசுவந்தலால் தயாரிப்பு என். ராஜகோபாலன் திரைக்கதை கே. சுப்பிரமணியம் இசை எஸ். ராஜேஸ்வர ராவ் கல்யாணராமன் நடிப்பு கே. பி. வத்சால் ஜி. பட்டு ஐயர் எம். ஆர். எஸ். மணி எஸ். வி. வெங்கட்ராமன் வத்சலா பேபி சரோஜா ஜி. சுப்புலட்சுமி கே. என். கமலம் ஒளிப்பதிவு ஆதி எம். இரானி கலையகம் மதராசு யுனைட்டட் ஆர்ட்டிசுடு கார்ப்பரேசன் விநியோகம் சித்திரா டாக்கீசு வெளியீடு மார்ச்சு 27, 1941 காமதேனு (Kamadhenu) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தலால் யசுவந்தலால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர், பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்
 7. ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். . இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்குபவர் அப்போது அங்கு வந்தார். அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..! . இறந்தவரின் மனைவி சொன்னாள்.. ”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..? நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..! . குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை... . கடைசியில் அவர் கேட்டார் ”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்” தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார். பின் சொன்னார்.. ”இறந்தவர் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம். இறந்தவர் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..! . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை. அவர் இறந்தவரின் தந்தையைக் கேட்டார்” ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?” . தந்தை சொன்னார் ”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்” . தாயைக் கேட்க அவள் சொன்னாள் ”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?” . மனைவி சொன்னாள் ”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்” . குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார் ”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?” . அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள் ”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?” . குருஜி சொன்னார் ”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால் இவருக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..! ”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்” “பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”. எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.
 8. தமிழ் மொழியின் இனிமையும்! எளிமையும்!! நமது தாய்மொழியின் பெயர் "தமிழ்". தமிழை "உயர்தனிச் செம்மொழி" என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்" என்பதற்கு "அழகு" எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் "தமிழ் தழுவிய சாயல்" என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை" எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்"ழை உடையது "தமிழ்" எனப் பொருள் கூறுவதும் உண்டு. தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்" வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். தமிழுக்கு "முத்தமிழ்" எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது. சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு" என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்" என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்" எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது. வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்" எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்" எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும். நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு" என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை"யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும். "தமிழுக்கும் அமுதென்று பேர்", தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து" என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. "தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்"" எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம். இனிமைச் சிறப்பு "தமிழ்" என்பதற்கு "இனிமை" என்றும் ஒரு பொருளுண்டு. இதனை "இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்" என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும். "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்" என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது: "போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?" என்னே தமிழின் சுவை! "அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்" எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா? "தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்"" என்பதே. என்னே தமிழின் இனிமை! தன்னைப் "பித்தன்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், "தமிழால் வைதான்" என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் "தமிழால் வைதாரையும் வாழவைப்போன்" என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, "தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்" என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது. நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்க்ஸ்" என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா" என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, "இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது" என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை! கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான். "நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்"" என்று. நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்" எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்" என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை! எளிமைச் சிறப்பு! தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது. தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே. இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது. தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.http://www.tamilandam.com/பதிவு/3-தமிழ்-மொழியின்-இனிமையும்-எளிமையும்
 9. கச்ச தேவயானி 1941 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு துன்பியல் காதல் கதையைக் கூறுவதாகும். இதில் கொத்தமங்கலம் சீனு, டி. ஆர். ராஜகுமாரி, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்
 10. oru kopayile nterpretT. M. Sounderarajan, P. Susheela, L. R. Eswari, T. M. Sounderarajan AlbumRaktha Thilakam காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் நான் காவியத் தாயின் இளையமகன் காதல் பெண்களின் பெருந் தலைவன் பாமர ஜாதியில் தனி மனிதன் நான் படைப்பதனால் என் பேர் இறைவன்
 11. பெயர்:எங்க பாட்டன் சொத்து ஆங்கில பெயர்:Enga Pattan Sothu நடிகர்கள்:ஜெய்சங்கர் , சிவகுமார் & more இயக்குனர்:கர்ணன் இசை:சங்கர் கணேஷ் தயாரிப்பு:Vijayachitra Films வெளியீடு:01-01-1975 ஆத்து மீனு கரையில் ஏறுது –அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது.
 12. கோலாப் பூரி சாமி மற்றும் ஏழுமலை சுவாமி இருவரும் சாங்கு சித்தரின் சீடர்கள் இவர்கள் இருவரின் சமாதிகளும் அவர்களது குரு சாமி சித்தர் சமாதியில் அருகில் உள்ளன.http://brihadeshwarar.blogspot.com/2019/04/blog-post_11.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.