Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  4944
 • Joined

 • Last visited

 • Days Won

  5

Everything posted by அன்புத்தம்பி

 1. தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல். கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் எத்தனையோ கலம்பகங்கள் இருப்பினும் "நந்திக் கலம்பக'த்தை வெல்ல எந்தக் கலம்பகத்தாலும் இயலவில்லை. காரணம், தமிழுக்காக உயிர் துறந்த மன்னனின் தியாக வரலாறு இதில் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் இதை இயற்றியவர் பற்றிய விவரம் அறியப்படவில்லை. இதில் காதல், வீரம், நகைச்சுவை, சோகம் போன்றவை சிறப்பிக்கப்படுகின்றன. தெள்ளாற்றில் நந்திவர்மன் பெற்ற வெற்றிக்குப் பின்பு அந்த வெற்றியைப் புகழும் நோக்குடன் எழுதப்பட்டதே இந்த நந்திக் கலம்பகம். இதில் பல பாக்களில் தெள்ளாற்று வெற்றியே பேசப்படுகிறது. இதனால்தான் அவன், "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான். பகை காரணமாக இவனுடைய நெற்றிக்கண் சிவக்குமேயானால், பகைவர்களுடைய நகரம் யாவும் நெருப்பால் அழியும். அவனுடைய புருவங்கள் துடிதுடிக்கத் தொடங்குமேயானால், அவனைத் தொழ மறுத்த எதிரிகளின் இடம் துடிக்கும். ஒளிமிக்க அவனது வாளானது உறையை விட்டு வெளியே வருமானால் பகையரசர்களுடைய துணைவிமார்களின் கொங்கைகளின் மேலேயுள்ள நகைகளும் முத்து மாலைகளும் பிறவும் அறுந்து போகும். முரசொலியைப்போல சங்கும் ஒலி செய்யுமானால் அவனுடைய பகை மன்னர்களுடைய உள்ளமானது பேரதிர்ச்சியால் கதிகலங்கும். இத்தகு வீரத்திலகமான அவன் தன்னைச் சரணடைந்தவர்களுக்கு, தண்கதிர் நிலவாக தயவு காட்டுவான். புலவர்களுக்கு வாரி வழங்குவான் என இந்நூல் வழி அறிய முடிகிறது. நந்திக் கலம்பகம் ஏன் எழுந்தது? அது எப்படி முடிந்தது? என்ற கேள்விக்கான விடை அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. பல்லவ மன்னன் தந்திவர்மனுக்குக் கதம்ப அரசன் மகள் (காமக்கிழத்தி) வயிற்றில் தோன்றியவனே நந்திவர்மன். மன்னன் இவனுடைய ஆற்றலைக் கண்டு தனக்குப்பின் இவனே அரசாள தகுந்தவன் என முடிசூட்டி, மாமன்னனாக்கி மகிழ்ந்தான். நாமிருக்க அண்ணனுக்கு மணிமுடியா? என பட்டத்தரசிக்குப் பிறந்த ஆண் மக்கள் நால்வர் ஆர்த்தெழுந்தனர். அவனை ஒழித்துக்கட்ட பல வழிகளில் முயன்று முடியாமல் போகவே, வசை பாடி உயிர் இழக்கச் செய்யும் ஒரு வகைக் கலம்பகச் செய்யுளைக் கற்று, அதன்மூலம் அவனை ஒழிக்கத் திட்டமிட்டனர். நால்வரில் ஒருவன் அதைக் கற்றான். அதன்படி இக்கலம்பகம் தோன்றியது. இதன் ஒரு பாடலை எப்படியோ கேட்ட நந்திவர்மன், அனைத்துப் பாடல்களையும் கேட்டு இன்புற விரும்பினான். அரசனின் ஆணையால் அனைத்துப் பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டது. வேற்று நாட்டுப் புலவனைப் போல மாறுவேடமிட்டு வந்த அவனது தம்பி, இதைப் பாட முன் வந்தான். பாடுவதற்கு முன் அவன் விதித்த நிபந்தனையாவது, "அரண்மனையில் இருந்து இடுகாடு வரை பச்சை ஓலைகளால் நூறு பந்தல்கள் அமைக்க வேண்டும்; ஒவ்வொரு பாடலைப் பாடும்போது நந்திவர்மன் அந்தப் பந்தலின் கீழ் அமர்ந்து கேட்க வேண்டும்; பாடல் முடிந்தவுடன் பந்தல் எரிந்துவிடும். கடைசிப் பாடலைப் பாடும்போது இடுகாட்டில் விறகுகளை அடுக்கிப் பிணத்துக்குரிய அனைத்துச் சடங்குகளையும் செய்துவிட்டு, நந்திவர்மன் பிணத்தைப் போல் படுத்துக் கொண்டே பாடலைக் கேட்க வேண்டும். இறுதிப் பாடல் முடிந்ததும் விறகோடு அரசன் எரிந்து விடுவான். இதற்குச் சம்மதமானால் நான் பாடுகிறேன்' என்றான். செந்தமிழில் ஆழ்ந்த பற்றுகொண்ட நந்திவர்மன், தமிழுக்காக தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சம்மதித்தான். பாடல்களைப் பாடத்தொடங்கினான் தம்பி. நந்திவர்மன் தமிழின்பத்தை அள்ளி, அள்ளிப் பருகினான். ஆனால் தம்பியின் உள்ளம் நெகிழ்ந்தது. அண்ணனைக் கொல்ல நினைத்தவன் மனம் மாறினான். ""வேண்டாம் அண்ணா, என்னை விட்டுவிடு, மேலும் பாட என் நா மறுக்கிறது. என்னை மன்னித்துவிடு'' என்று மண்டியிட்டான். ஆனால் நந்திவர்மன் அசையவில்லை. தன் உயிர் போனாலும் பரவாயில்லை இறுதிப் பாடலையும் கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வேறு வழியின்றி இறுதிப்பாடலைப் பாடினான் தம்பி. கலம்பகத்தின் இறுதிப்பாடல் கனலாக எழுந்தது. ""வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்தவுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் புக்கதுன் தேகம் நானும் என் கவியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயா பரனே!'' கலம்பகத்தின் இறுதிப்பாடல் முடிந்தது. நந்திவர்மன் படுத்திருந்த சிதையும் எரிந்தது. தமிழைச் சுவைத்தபடியே அருந்தமிழ்க் காவலனான நந்திவர்மனும் உயிர்நீத்தான். தமிழால் பலர் உயர்ந்தனர்; தமிழால் பலர் வாழ்ந்தனர்; வாழ்கின்றனர். ஆனால் நந்திவர்மனால் தமிழ் உயர்ந்தது; இன்னும் வாழ்கின்றது என்றால் அது மிகையாகாது.
 2. இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்! டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டு புத்த மதத்தை தழுவினார். 'நான் இந்துவாக சாக மாட்டேன்!;' என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள். பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன். கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன். இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன். பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும். நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன். பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன். பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன். அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன். சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன். புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன். தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன். எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன். பொய் சொல்லமாட்டேன். திருட மாட்டேன். காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன். போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன். முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன். பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன். பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன். நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன். நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன். பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது. பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள். பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது. +++++++++++++ +++++++++++ +
 3. Starring : Srikant,Sudhakar, Latha, Radhika Music Director : R.Ramanujam Director : R.Pattabiraman Year : 1980 பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே
 4. movie Sondham starring Muthuraman, K.R Vijaya, Pramila, Sivakumar எட்டுக்கன்னு விட்டெறிக்கும் உன்னைக்கண்டா.... உந்தன் கட்டாணி முத்துப்பல்லு எனக்கு உண்டா....?( சிரிப்பு ) கண்ணுபட போகுது கட்டிக்கடி சேலையே பெண்ணுக்கே ஆசை வரும் போட்டுக்கடி ரவிக்கைய....
 5. சிவாகமங்களின் வழி நூல்கள் 207. சிவாகமங்களின் சார்பு நூல்கள் 8. பன்னிரு திருமுறைகள் வேதத்தின் வழி அல்லது சார்பு நூல்களாகும். 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள 'திருமுகப்பாசுரம்' சிவனால் அருளப்பட்டது என்பர். எஞ்சியவை சிவஞானம் கைவரப்பெற்ற ஞானிகளால் பாடப்பட்டவை. வேதாகமே தமிழ் வேதமாகக் கருதப்படுகிறது. இவற்றைவிட வேதங்கள், சிவாகமங்கள், புராணங்கள், திருமுறைகள் வழிவந்த 14 சித்தாந்த சாத்திரங்களும் உண்டு. இவற்றை திருவியலூர் உய்யவந்த தேவர் (திருவுந்தியார்) திருக்கடவூர் உய்யவந்த தேவர் (திருக்களிற்றுப் பாடியார்) மெய்கண்ட தேவர் (சிவஞானபோதம்) அருணந்தி சிவாச்சாரியார் (சிவஞான சித்தியார், இருபாலிருபது)திருவதிகை மனவாசகம் கடந்தார் (உண்மை விளக்கம்) மறைஞான சம்பந்தர் (சதமணித்திரட்டு) உமாபதி சிவாச்சாரியார் (சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாக 8 சாத்திரங்கள்). இவர்கள் 13-14 வது நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். பதினான்கு சித்தாந்த சாத்திரங்களின் மூலமும் உரையும் கொண்ட நூல் மட்டும் 1206 பக்கங்கள் கொண்டவை. குரானை முயன்றால் நெட்டுருச் செய்து கொள்ளலாம். பைபிளை படிக்க மாதங்கள் எடுக்கலாம். ஆனால் இந்து வேதாகமங்களைப் படிக்க வாழ்நாள் போதாது! கோயில் அர்ச்சகர்கள் உட்பட வேதாகமங்களைப் படித்த சைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பதி (இறைவன்) பசு (உயிர்) பாசம் (ஆணவம், மாயை, கன்மம்) ஆதி சங்கரரின் (கி.பி. 788-820) அத்துவைதம் (உயிர்களும் உலகமும் பிரமத்தின் தோற்றமே என்ற மாயாவாதம். இரண்டன்மை) சங்கரரின் அத்துவைதத்தை மறுக்கும் இராமனுசரின் (கி.பி. 1017-1137) விசிட்டாத்துவைதம் (சித்து அசித்து இரண்டும் ஈசுவரனும் ஒன்றே) மத்துவரின் (கி.பி. 1199-1278) துவைதம் (சீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு) இந்தக் கோட்பாடுகளை படித்து பொருள் உணர்ந்து கொண்டவர்கள் அரிது. இதனால் சைவ சமயத்தவர்கள் அர்ச்சனை அபிசேகம் போன்ற சரியை கிரிகையோடு நின்று விடுகிறார்கள். இஸ்லாம், கிறித்தவம், இந்து சமயங்களுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது அவர்களது மத நூல்கள் அந்தந்த மதக் கடவுள் வாக்கு என்பது. வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை. மனிதர்களால் இயற்றப்படாமல் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. தேய்ந்து வருகிற சமயங்களில் இந்து சமயம் முன்னணியில் நிற்கிறது. இதற்குக் காரணம் அந்த மதத்தில் காணப்படும் வர்ண பேதமும் சாதி அமைப்பும் வடமொழி -பிராமணிய மேலாண்மையும் ஆகும். கடந்த ஐப்பசி 16ஆம் நாள் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் நடந்த புத்த மாநாட்டில் நூற்றுக் கணக்கான தலித் இந்துக்கள் மொட்டை அடித்து புத்த மதத்தில் இணைந்தனர். பெரம்பலூர் மாவட்ட அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு அமைப்பினரும், பன்னாட்டு பவுத்த இளைஞர் இயக்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கான விழாவுக்கு அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி மாநில தலைவர் கே.கந்தசாமி தலைமை தாங்கினார். டாக்டர் வேணு அண்ணாமலை முன்னிலை வகித்தார். கே.பி.தம்மசென் வரவேற்றார். 'இந்த மத மாற்ற நிகழ்ச்சி ஒரு ஆரம்பம் தான். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இன்னும் சமூக நீதி கிடைக்கவில்லை. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. கிராமங்களில் இன்னும் இரட்டை தம்ளர் முறை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கத்தான் தாழ்த்தப்பட்டோர் புத்த மதத்தில் சேருகின்றனர். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை புதுப்பிக்கிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்த மடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று' தலைவர் கந்தசாமி கூறினார். பவுத்த தேரர் பாதிதம்மா மற்றும் பவுத்த தேரர்கள் புத்தர் சிலைக்கு அபிசேகம் செய்தனர். அடுத்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாலிமொழியில் மந்திரம் ஓதினர். பின்னர் புத்த மதத்தில் சேர விரும்பிய அனைவரும் பவுத்த தேரர் போதிதம்மா தலைமையில் 22 உறுதிமொழிகளைச் செய்து தீட்சை பெற்றுக் கொண்டனர். டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார். இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.
 6. Movie Name: Chakravarthi Thirumagal Starring: MGR, Anjali Devi, N.S. Krishnan Music Director: G. Ramanathan Album Year: 1957 உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது.. என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது.. என்னாளும் நமக்கு இனி கிடையாது சுந்தரியே .. அடி சுந்தரியே… கண்ணு சுந்தரியே.. அந்தரங்கமே மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே… சுந்தரியே அந்தரங்கமே… அத்தானும் நான் தானே..
 7. Album : Kanavugall Karpanaigall Singer : Paraui, S.P. Balasubrahmanyam, Music Director : Gangai Amaran Star Cast : Roopa, Rani Padmini, Sarath Babu வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே! இன்ப வீணை போலே கானம் பாடுங்களே! வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே! இன்ப வீணை போலே கானம் பாடுங்களே!
 8. வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக் கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், மருந்துகள் முதலியவற்றின் உதவியால் அவ்வாறு உடலைப் பக்குவப் படுத்துவார்கள். இதனைக்"காய சித்தி" அல்லது "காயகல்பம்" என்று கூறுவார்கள். காயம்" என்பது உடல். இறவாமையை நாடும் சிலர், அவ்வாறு நீண்ட காலம் இருந்தபின்னர், ஏதோ காரணம் பற்றி அவர்களுடைய உடலை மேலும் யன்படுத்த முடியாமற் போனால், அந்த உடலைபோட்டு விட்டு, வேறொரு உடலுக்குள் பிரவேசித்துவிடுவார்கள். அவ்வுடலிலேயே வாழ்வார்கள். இந்த முறையை "பரகாயப்பிரவேசம்" அல்லது "கூடு விட்டுக் கூடு பாய்தல்" என்று கூறுவார்கள். காயகல்பத்தில் பயன்படுத்தும் மருந்துகள் பல இருக்கின்றன.அவற்றில், வீரம், பூரம், அயம் எனபவை சில. அயம் என்றால் இரும்பு. இரும்பை நெருப்பில் வேக வைத்து, "அய காந்த செந்தூரம்" போன்ற செந்தூரங்களைச் செய்து உட்கொள்வார்கள். வேக வைத்த இரும்பு = வெந்த அயம் = செந்தூரம் வேறு வகையான சித்தர்கள், ரிஷிகள் இருக்கிறார்கள். அவர்கள் வந்த வேலையை மட்டுமே பார்ப்பார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையைச்செய்துவிட்டு, அவர்களுடைய கர்மவினைகளைக் கழித்துவிட்டு வந்த வழியே போகவேண்டிய இடத்திற்குப் போய் விடுவார்கள். பட்டினத்தார், ரமணர்,பரமஹம்ஸர் போன்றோர். இவ்வகைச்சித்தர்கள் உடலைப் பாரமாக நினைப்பார்கள்.கடைசியில் நான்கு பேர் தூக்கவேண்டிய பாரத்தை ஒருவனாகத் தூக்க வேண்டியிருக்கிறதே என்று துக்கிப்பார்கள். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் பாடியதாக அமைந்ததே இந்தப் பாடல். வெங்காயம் = வெறுமையான, கூடான உடல் சுக்கு = உலர்ந்த இஞ்சி; சரக்குகளிலேயே மிக நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கக் கூடியது சுக்குதான். எகிப்திய பிரமிடுகளில் ஐயாயிரம் ஆண்டு வயதான சுக்கு கிடைத்திருக்கிறது. சித்தர் பரிபாஷையில் சுக்கை "சுப்பிரமணி" என்றுதான் அழைப்போம். வெங்காயம் சுக்காவது = வெறும் உடம்பு காயகல்பமாகி விடுவது வெந்தயத்தால் ஆவது = அதன் பின்னர் வெந்த அயம் போன்ற Tonic மருந்துகளும் தேவையில்லை. ஆனாலும், இவ்வாறு காயகல்பமாகிவிட்ட இந்த சா£ரத்தில் நீண்ட நாள் உயிர் வாழ்வதால்தான் என்ன பயன்? இது ஒரு வீண் பாரம்தானே? ஆகவே, இங்கு ஆர் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உடலை? ஏரகம் என்பது சுவாமிமலை. குருவாய் இருந்து உபதேசம் புரிந்த இடமல்லவா அது. முருகனை "செட்டி" என்று குறிப்பிடும் வழக்கு ஒன்று இருக்கிறது. தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார், "செட்டியப்பன்" என்று சிவனைக் குறிப்பிடுகிறார். செட்டியாகிய முருகனின் அப்பன் சிவன். அருணகிரிநாதர் பல இடங்களில் செட்டி என்று முருகனைக் கூறுவார். செட்டியென்று மனமேவி இன்பரச சத்தியின் செயனினாளை அன்புறாகத் தெட்டிவந்து புலியூரின் மன்றுள் வண் பெருமாளே! -சேவல் விருத்தம் புத்திப்ரியத்தன் - வெகு வித்தை குணக்கடலன் - புகழ் செட்டி சுப்பிரமணியன் - திருப்புகழ் இனமெனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க - ஷண்முகக் கவசம் பாம்பன் சுவாமிகள் சீரகம் = சீர் அகம் = மோட்சத்தைக் குறிப்பது பெருங்காயம் என்பது பல பிறவிகளில் ஏற்படும் பல வகையான உடல்களைக் குறிக்கும். முருகன் மோட்சத்தைக் கொடுத்துவிட்டால் பிறவி எடுக்க வேண்டியிராதல்லவா? ஏதோ ஒரு பலசரக்குக்கடைச் செட்டியாரிடம் கடைச்சரக்கைக் குறிப்பிடுவது போல் பாடல் அமைந்திருக்கிறது அல்லவா? ------------------------------ கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
 9. இன்னும், சூலை நோயின் கடுமை குறித்து, 'சுடுகின்றது சூலை' எனவும், 'வலிக்கின்றது சூலை' எனவும், 'என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்திட்டேன்' எனவும்,'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் ...என் வேதனை' என்றும் பாடுகிறார். நம் காலத்துக் கவிஞரான கவிமணியை சிரங்கு நோய் வருத்துகிறது. என்ன மருந்து எடுத்துக் கொண்டும் சிரங்கு ஆறுவதாய் இல்லை. வேதனையான அவ்வனுபவத்தை நகைச்சுவையுடன் பாடுகிறார். சிரங்கை தாஜா செய்ய 'சிரங்கப்பராயர்' என்று உயர்வு நவிற்சியில் விளிக்கிறார். சிரங்கப்பராயர் தனக்குத் தந்த சீதனம் பற்றிப் பட்டியலிடுகிறார்: முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம் பத்தியொளி வீசும் பதக்கமெல்லாம் - சித்தன் சிரங்கப்பராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம். சிரங்கு நீங்க மேற்கொண்ட மருந்துகளால் பயன் இல்லாததைச் சொல்லி முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்: செந்தில்குமரா திருமால் மருகா என் சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்த இம் மெய்யிற் சிரங்கை விடியுமட்டுஞ் சொரிய கையிரண்டும் போதாது காண். வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன் சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம் குறைந்திடக் காணேன் குமரா சிரங்கு மறைந்திடத் தா நீ வரம். முருகனிடம் முறையிட்டும் பயனில்லை. எனவே 'சாட்சிக்காரன் காலில் விழுவ திலும் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்று சிரங்கப்பராயரிடமே சரணடை கிறார்: உண்ட மருந்தாலும் உடல் முழுவதும் பூசிக் கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு சிரங்கப்பராயா சினம் மாறிக் கொஞ்சம் இரங்கப்பா ஏழை எனக்கு. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று சொன்னார் அல்லவா வள்ளுவர்? அதன்படி கவிஞரிடம் வேதனையிலும் வெண்பா கொஞ்சி விளையாடுகிறது. இவரது அற்புதமான வெண்பாவில் உளம் பறிகொடுத்ததால் தான் ரசிகமணி, தன் ஒரே மகனின் இழப்பையும் மறந்து அவர் அனுப்பிய இரங்கப்பாவைப் பாராட்டுகிறார். ரசிகமணி டி.கே.சி அவர்களின் ஒரேமகனும் சிறந்த கவிஞருமான செல்லையா என்று செல்லமாய் அழைக்கப்பட்ட தீபன் என்கிற தீத்தாரப்பன்- இளம் வயதில் அகால மரணம் அடைந்தபோது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள், மனம் உருக கீழ்க்கண்டவாறு ஒரு இரங்கற்பாவினை அனுப்பி வைத்தார். எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா என் அப்பா அழகிய செல்லையா நான் - இப்பாரில் சிந்தை குளிரச் சிரித்தொளிரும் உன் முகத்தை எந்தநாள் காண்பேன் இனி. 'அப்பா' என்ற அருமைச் சொல்லைப் படித்ததும் அழுது புலம்ப வேண்டாமா தந்தை? ஆனால் ரசிகமணி எந்நிலையிலும் நல்ல கவிதையை ரசிப்பவர் அல்லவா? அதனால் அவர் தன் இழப்பை மறந்து "இப்படி ஒரு பாடல் கிடைக்குமானால் எத்தனை பிள்ளை களையும் இழக்கலாமே" என்றாராம்.
 10. சாதியும் தீண்டாமையும் இந்து மதத்தை பீடித்துள்ள நோய்கள்! இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இது கேட்பதற்கு கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இதற்கு அந்த மதத்தின் எளிமை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த, உருவம் அற்ற ஒரு கடவுளை வணங்குவது காரணமாக இருக்கலாம். இஸ்லாம் மதத்தின் வேத நூல் குரான் மட்டுமே. அரபு மொழியில் எழுதப்பட்ட குரானில் 114 அத்தியாயங்கள், 6,666 வசனங்கள், 1,709 பக்கங்கள், 336,233 சொற்கள் காணப்படுகின்றன. குரானை கபிரியல் என்ற தேவ தூதன் 23 ஆண்டு (கி.பி. 610-கி.பி.632) காலப் பகுதியில் முகமது நபிக்கு அருளியதாகச் சொல்லப்படுகிறது. கிறித்தவ மதத்தின் வேத நூல்களின் எண்ணிக்கை 66. அத்தியாயங்கள் 1,709. வசனங்கள் 31,173. பக்கங்கள் 1,709, சொற்கள் 774,746 காணப்படுகின்றன. 66 புத்தகங்களும் (27 பழைய ஏற்பாடு) 3 மொழிகளில் கிட்டத்தட்ட 1,500 ஆண்டு காலம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை ஹீப்புரூ மொழியில் எழுதிய முதல் மனிதர் மோசஸ். அதை எழுதி முடிக்க 1,000 ஆண்டுகள் எடுத்தது. அதில் சில அத்தியாயங்கள் அறாமிக் (யுசயஅiஉ) மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு கி.மு. 300 ஆண்டளவில் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாடு கி.பி. 50-கி.பி. 100 இடைப்பட்ட காலப் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. சைவசமயத்தின் அடிப்படை நூல்கள் வேதங்களும் சிவாகமங்களும் ஆகும். 'வேத நன்கினும் பெய்ப் பொருளாவது" என்ற சம்பந்தர் தேவராரத்தில் குறிப்பிட்ட இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால் வேதங்களையும் வியாசர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டவை. அவை மந்திரங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் எனப்படும். இருக்கு வேதத்தில் 1,028 பாசுரங்கள் உள்ளன. இதில் இந்திரனுக்கு 250, அக்னிக்கு 200, சோமனுக்கு 120, வருணனுக்கு 12 பாசுரங்கள் பாடப் பெற்றுள்ளன. இந்தப் பாசுரங்கள் வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தங்கள் கருப்பு நிற எதிரிகளான தஸ்யூக்களை அழிக்குமாறும் அப்படி அழித்த கடவுளர்க்கு சோமபானம் படைத்து நன்றி பாராட்டுவன ஆகும். ஓ! உலகம் போற்றும் இந்திரனே!சுஷ்ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றியொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுககிக் கொன்று ஆரியர்களுக்கு உதவிபுரிந்தாய். (இருக்கு வேதம் மண்டலம் மந்திரம் 53, ஸ்லோகம் 9 அதர்வணவேதம் காண்டம் ஓஓ மந்திரம் 21, சுலோகம் 9) சோமன் என்பது உருவகம். சோமச் செடியில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் கள்ளைக் குறிப்பது. அதை ஆரியர்கள் தாங்களும் குடித்து கடவுளர்க்கும் படைத்தார்கள். மேலே குறிப்பிட்ட நான்கு வேதக் கடவுளர்க்கும் வழிபாடு இப்போது இல்லை என்பது கவனிக்கத்தக்கது. வேதாங்கங்கள் ஆறு 1) சிக்கை - வேதங்களை உச்சரிக்கும் முறை. 2) கற்பம் - வேதக் கருமங்களை அனுட்டிப்பதைக் கூறும். 3) வியாகரணம் - வேதங்களின் எழுத்துச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுவது. 4) நிருத்தம் - வேதங்களில் உள்ள சொற்களின் பொருளை அறிவிப்பது. 5) சந்தோவிசிதி - வேதங்களின் காயத்திரி, அதன் சந்தங்கள், எழுத்தின் அளவு என்பவற்றைக் கூறுவது. 6) சோதிடம் - வேத மந்திரங்களைச் சொல்வதற்கு காலங்களைக் குறிப்பது. வேதத்தின் உபாகமங்கள் நான்கு 1) பதினெண் புராணம் - சிவன், விட்ணு, பிரமன், சூரியன், அக்கினி இவர்களின் ஆற்றல் பற்றி படிப்பறிவு குறைந்தவர்களுக்கு விளங்க வைப்பது 2) நியாயம் - வேதப் பொருளை நிட்சயிப்பதற்கு உதவுவது. 3) மீமாஞ்சை வேதப் பொருளின் தார்ப்பரியத்தை அறிய உதவுவது. 4) ஸ்மிருதி - நால் வருணம், ஆச்சிரமங்களுக்குரிய தர்மங்களைக் கூறுவது. உப வேதங்கள் நான்கு 1) ஆயுர் வேதம் - வைத்திய நூல் 2) தனுர் வேதம் - படைக்கலப் பயிற்சி பற்றிய நூல். தனுர் என்றால் வில் என்று பொருள். 3) காந்தருவ வேதம் - கடவுளுக்கும் மனிதருக்கும் உரிய இசையை அறிவிப்பது. 4) அருத்த வேதம் - - இம்மை மறுமைக்கு உரிய பொருள் சம்பாதித்தல் தொடர்பான சாத்திரங்களைக் கூறுவது. மறை பொருட் கோட்பாடுகளை அறிவுறுத்தும் உப நிடதங்களின் எண்ணிக்கை 108. அதில் 12 சிறப்பானவை. இந்த உப நிடதங்களே வேதாந்தம் என அழைக்கப்படுகின்றன. சிவாகமங்கள் 28. இவை சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று நம்பப்படுகிறது. அவை நான்கு பாதங்களைக் கொண்டவை. 1) ஞானபாதம் - முப்பொருள் உண்மை 2) யோகபாதம் - அட்டாங்க சிவயோகம் 3) கிரியாபாதம் - மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், அர்ச்சனை, ஆசாரிய, அபிசேகம் 4) சரியாபாதம் - சமயாசாரங்களை உபதேசிக்கிறது சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது, ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. ++++++ ++++ ++ + .............
 11. 01.துணைவி 02.கடகி 03,கண்ணாட்டி 04.கற்பாள் 05 காந்தை 06.வீட்டுக்காரி 07.கிருகம் 08.கிழத்தி 09.குடும்பினி 10.பெருமாட்டி 11.பாரியாள் 12.பொருளாள் 13.இல்லத்தரசி, 14.மனையுறுமகள் 15.வதுகை 16வாழ்க்கை 17.வேட்டாள் 18.விருந்தனை 19.உல்லி 20.சானி 21.சீமாட்டி 22.சூரியை 23.சையோகை 24.தம்பிராட்டி 25.தம்மேய் 26.தலைமகள் 27.தாட்டி 28.தாரம் 29.மனைவி 30.நாச்சி 31.பரவை 32.பெண்டு 33.இல்லாள் 34.மணவாளி 35.மணவாட்டி 36.பத்தினி 37.கோமகள் 38.தலைவி 39.அன்பி 40.இயமானி 41.தலைமகள் 42.ஆட்டி 43.அகமுடையாள் 44.ஆம்படையாள் 45.நாயகி 46.பெண்டாட்டி 47.மணவாட்டி 48.ஊழ்த்துணை 49.மனைத்தக்காள் 50.வதூ 51.விருத்தனை 52.இல் 53.காந்தை 54.பாரியை 55.மகடூஉ 56.மனைக்கிழத்தி 57.குலி 58.வல்லபி 59.வனிதை 60.வீட்டாள் 61.ஆயந்தி 62 – ஊடை ஆமா அதையும் சேர்த்துக்கலாம்,, 23.சையோகை,,நான் இதை சைக்கோ என்று வாசித்து விடுத்தேன்..🤣
 12. திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன. அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத் தெரியவில்லயே!" என்று பாடுகிறார். ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. (இடும்பை - துன்பம்; வறுமை) அவ்வையார் வயிற்றோடு பேசியது போல மதுரகவிராயர் என்ற புலவர் தன் வறுமையுடன் பேசுகிறார். வறுமை நோயால் மிகவும் வாடிய அவர் அக்காலத்தில் இரப்போர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கிய காளத்தியப்பர் என்ற வள்ளலைப் பார்த்துப் பாடல் பாடிப் பரிசில் பெறலாம் என்று கருதி வள்ளலின் ஊரான திருநின்றை யூர் நோக்கிச் செல்கிறார். இடைவழியில் இருட்டி விட்டது. எனவே அருகில் இருந்த ஒரு மண்டபத்தில் இரவைக் கழிக்க எண்ணிப் படுத்தார். படுத்தபடியே சிந்திக்கிறார். நாளை தன் வறுமை தன்னை விட்டு நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உண்டாகிறது. பின் தன்னை வாட்டும் வறுமையிடம் பேசுகிறார்: "ஏ வறுமையே! என்னை விட்டு நீங்காத என் நிழல்போல என்னைப் பின்பற்றி இவ்வளவு நாளும் நீ திரிந்து வருந்தினாய். நாளைக்கு நான் திருநின்றையூர் சென்று வள்ளல் காளத்தியப்பரைக் காணப்போகிறேன். தமிழ்ப் பாடல்களைப் பாடப் போகி றேன். அவ் வள்ளல் அவற்றைக் கேட்டதும் பொன்னும் பொருளும் வாரி வழங்குவார். உன்னை ஓட்டி விடுவார். பாவம்! நாளைக்கு நீ எங்கேயோ நான் எங்கேயோ? போகட்டும், இன்றைக்குச் சற்று என்னுடன் இருந்து விட்டுப் போ!" நீளத் திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல நாளைக்(கு) இருப்பையோ நல்குரவே - காளத்தி நின்றைக்கே சென்றக்கால் நீ எங்கே நான் எங்கே இன்றைக்கே சற்றே இரு. (உழன்றாய் - வருந்தினாய்; நல்குரவு - வறுமை; காளத்தி - வள்ளல் காளத்தியப்பர்; நின்றை - திருநின்றைவூர்.) உள்ளப்பிணி மட்டுமல்ல உடற்பிணிகளும் பாடல் பெற்றிருக்கின்றன. சமணத் தலைவர் தருமசேனராக நாவுக்கரசர் வாழ்ந்தபோது அவரைத் தடுத்தாட் கொள்ள சிவபெருமான் அவருக்குக் கடுமையான சூலை நோயைக் கொடுத்துச் சோதிக்கிறார். சமண வைத்தியர்கள் தாம் அறிந்த வழியிலெல்லாம் அந்நோய் தீர்க்க முயன்றும் தீர்க்கப்படாத நிலையில் அவரது தமக்கையான திலகவதியாரின் அறிவுரைப் படி திருவதிகைக் கெடில வீராட்டானம் சென்று அங்கு உறையும் வீரட்டானேஸ்வரரிடம் பாடி முறையிடுகிறார்.அற்புதமான அப்பாடல்களில் தன்னை வருத்தும் சூலை நோயின் கடுமையைச் சொல்லி இறைஞ்சுகிறார்: கூற்று ஆயினவாறு விலக்கலீர்; கொடுமை பல செய்தன அறியேன்; ஏற்றாய், அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்; தோற்றாது என் வயிற்றில் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்; அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. ++++++ ++++ ++ + .....................
 13. Album Name Lalitha Starring: Gemini Ganesan, Sujatha, Kamal Haasan Director: Valampuri Somanathan Music: M. S. Viswanathan Year: 1976 தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம் எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம் எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
 14. Movie Name: Navarathiri Starring: Sivaji Ganesan, Savithri, Nagesh, V.K. Ramasamy, J. P. Chandrababu, Manorama Music Director: K. V. Mahadevan Album Year: 1964 ரூபசித்திர மாமரக்குயிலே…. உனக்கொரு வாசகத்தை நான் உரைத்திட நாடி நிற்கிறதா அன்பினால்…இன்பமாய்…இங்கு வா….
 15. என்னத்தை சொல்லி,,இங்க ஒருத்தர் சொன்னார்..கொரோனாவை சமாளிக்கலாம்,,,........ஆனால் ...
 16. சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய திருமந்திரம் 3,027 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே' என்ற இவரது கூற்று பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தம்பிமார்க்கும் சம்மதமே. அண்ணா வேலைக்காரி திரைப்படத்தில் சாதியைச் சாடுவதற்கு திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார். தேரையர் என்ற சித்தர் எழுதிய "நோய்யணுகா விதி" சிறந்த மருத்துவ நூல் என்பர். இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள். "தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன் ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்" என்பார் அகத்தியர். 'மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே' என்பது நக்கீரர் கூற்று. தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது. 'சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்' 'சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' 'சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே' எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள். சாதிப் பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்னை இல்லை என்றார்கள். 'கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக' என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார். இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதிணென் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில சித்தர் பாடல்கள் பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது. மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கிறது! சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது. இதனால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள். சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம். 'நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?' சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல். சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது? நட்ட கல் பேசுமோ? பேசாது! இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். இவ்வாறு 534 பாடல்களில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார். சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார். சிவவாக்கியர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.
 17. தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் 01.துணைவி 02.கடகி 03,கண்ணாட்டி 04.கற்பாள் 05 காந்தை 06.வீட்டுக்காரி 07.கிருகம் 08.கிழத்தி 09.குடும்பினி 10.பெருமாட்டி 11.பாரியாள் 12.பொருளாள் 13.இல்லத்தரசி, 14.மனையுறுமகள் 15.வதுகை 16வாழ்க்கை 17.வேட்டாள் 18.விருந்தனை 19.உல்லி 20.சானி 41.தலைமகள் 42.ஆட்டி 43.அகமுடையாள் 44.ஆம்படையாள் 45.நாயகி 46.பெண்டாட்டி 47.மணவாட்டி 48.ஊழ்த்துணை 49.மனைத்தக்காள் 50.வதூ 51.விருத்தனை 52.இல் 53.காந்தை 54.பாரியை 55.மகடூஉ 56.மனைக்கிழத்தி 57.குலி 58.வல்லபி 59.வனிதை 60.வீட்டாள் 61.ஆயந்தி 62.ஊடை 🤔🤔
 18. தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள். நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே! நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே! பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே! பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே! திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர். பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது. நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர் நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார் இடைக்காடர், போகர், புலிக்கையீசர், கருவூரார், கொங்கணர், காலாஞ்சி எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி தேரையர், குதம்பையர், சட்டைநாதர் இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன. இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள். எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள். மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார். எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒருசித்தன் இந்த நாட்டில் என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்- அச்சம் தவிர் ஏறுபோல் நட தெய்வம் நீ என்றுணர் நினைப்பது முடியும் என அடித்துச் சொல்கிறார். தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம். தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது. தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. . சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள். சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். +++++ ++ +
 19. புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 20. நல்லதுஇஅடுத்த பாடல் இது எந்த... திரைப்பட பாடலா?அல்லது வேறேதும் தனித்தொகுப்பு பாடலா ? இதுதான் இதுதான் ஸ்பரிசம் என்பதா ..........பாடல்வரிகள் நான் கூகிள் ஆண்டவரிடம் கேட்டு பார்த்தேன் விடை கிடைக்கவில்லை யாராவது முயற்சித்து பார்க்கவும் மேலே கேட்ட பாடல்களும் கிடைக்கவில்லை
 21. Amruthavarshini Thillana by Gandiva | Kavya Muralidaran | Sai Vignesh | Navin | Balaji | Nivetha
 22. Movie Kanmani Raja Starring: Sivakumar, Sumithra Director: Devaraj Mohan Music: Shankar Ganesh Year: 1974 ஓடம் கடல் ஒரம் அது சொல்லும் பொருள் என்ன அலைகள் கரையேறும் அது தேடும் துணையேன்ன. ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்.
 23. Vayasu Ponnu Starring By: Jai Ganesh, Latha, R. Muthuraman Director By: K. Shankar Music By: M.S. Viswanathan Film Year: 1978 தென் குமரிக் கடலினிலே சிவந்த மாலைப் பொழுதினிலே பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
 24. Album Name: Thirumal Perumai Starring: Sivaji Ganesan, Padmini Kolhapure, Sowcar Janaki, Sivakumar, M.N. Nambiar, Nagesh Composer: K. V. Mahadevan Album Year: 1968 கொடியேற்றி புலி விளையாட குன்றேறி புகழ் விளையாட மடியேறி மழலையர் ஆடும் மன்னவன் வாழ்க பொன்னை மறையாமல் வாரி வழங்கும் தென்னவன் வாழ்க கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு
 25. Starring: Kamal Haasan, Major Sundarrajan, Savitri, Deepa Director: Muktha Srinivasan Music: G. Devarajan Year: 1975 மன்மதனின் ரதியும் உன்னால் பொன் வதனம் பெற்றதென்னால் ஊர்வசியும் இங்கு வந்தாள் பேரழகை வாங்கிச் சென்றாள் ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.