அபராஜிதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,952
 • Joined

 • Last visited

 • Days Won

  6

அபராஜிதன் last won the day on July 28 2018

அபராஜிதன் had the most liked content!

Community Reputation

447 ஒளி

About அபராஜிதன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

13,164 profile views
 1. வாழ்க்கை .................. தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம் தனக்குப்பிடித்த நாடகத்தை தியாகம் செய்வாள் அக்கா ................. மகள் முள்ளை எடுக்கச் சிரமப்படுவாள் தலையை தான் எடுத்துவிட்டு வால் பகுதியை மகளுக்கு விட்டு வைப்பார் அப்பா ................... வளருகிற பெடியனுக்குச் சத்துத் தேவை கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த மீன் சினைகளை மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள் அம்மா ........................... தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும் தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான் அண்ணன் .......................... அக்கா சொகுசாய் வாழவேண்டும் கடன்காரனாகிப்போவான் தம்பி ........................ அவள் நீண்டநாளாய் ஆசைப்பட்ட சாரியை வாக்கிக்கொள்ளட்டும் தனக்கு சாரன் மட்டும் போதுமென்று பொய் சொல்வார் அப்பா ......................... புருஷன் மாதக்கடைசியில் மோட்டர் சைக்கிளுக்கு பெட்ரோல் போடவே கஷ்டப்படுவார் என்று தெரிந்தே ஒவ்வொருநாளும் மரக்கறிக்காரனுடன் பேரம்பேசி சிலநூறுகளைச் சேமித்து வைத்திருப்பாள் மனைவி ............................. விபத்தில் இறந்த‌ அக்காவின் பிள்ளைகளை தன் பிள்ளைகளென்றே சொல்கிறாள் சித்தி ............................. பேரப்பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காகவே தன் முந்தானையில் சில்லறைகளை முடிந்து வைத்திருப்பாள் பாட்டி ............................... ஊன்றுகோல்கள் தேவைப்படுவதில்லை பேரப்பிள்ளைகளின் கைகளைப்பிடித்துக்கொண்டே நடப்பார்கள் தாத்தாக்கள் .............................. வாழ்க்கையென்றால் என்ன‌ என்பவர்களிடம் சொல்ல இவற்றைவிட‌ வேறில்லை என்னிடம். முகநூல்
 2. Tribute to the profound personality who created Ariviyalnagar University Complex - தமிழை ஏந்திய திருமகனார் - தடங்களை வரிக்கும் பெருங்கவிதை! ******-*****-******-******-******-*****-****** தாயகத்துப் பயணத்திலே வழித்துணையாய் வாழ்ந்தவன் தலைமகனுக்கோர் அண்ணனாகி தனித்துவனாய் நின்றவன்!. கருத்தினிலே கண்ணியத்தை குருத்தினிலே கண்டதனால் உருத்துடனே உத்தமனின் உறவுமாகிக் கொண்டவன்! பெருத்தவோர் வங்கியை அழுத்தமாய் ஆண்டதால் பொருத்தமாய்ப் பொறுப்பினை விருத்தமாய்ப் பெற்றவன்! நிதித்துறை என்றவோர் நிகருயர் அலகினை மதிப்புடன் ஆண்டிடும் பொறுப்பினைப் பெற்றவன்!. இரண்டு பவுண் தங்கத்தினால் திரண்டு வந்த பங்களிப்பால் இருண்ட எங்கள் கிழக்கினுக்கோர் இன்பவொளி ஏற்றுவித்தான்!. விதவிதமாய்ப் பாடுபட்டுச் சதக்கணக்கில் சேர்த்தபணம் வீண்விரையம் ஆகிடாமல் வினைத்திறனாய்ச் சேகரித்தான்!. பட்டகடன் தீர்த்துவைக்கப் பகலிரவாய் உழைக்க வைத்தே மீட்புநிதி மீளளிப்பில் மீண்டுபெரு மூச்சு விட்டான்!. வருவாய்க்கோர் பகுதியினை பெருவாயாய் உருவாக்கி வரியாலே நிதியீட்டும் வளம்தன்னைக் காட்டுவித்தான்!. ஆயத்தின் அலகுக்கோர் ஆளுகையை அமைத்தன்று ஆடம்பரம் அத்தனைக்கும் ஆயத்தீர்வை விதிக்க வைத்தான்!. வந்த வருவாயை வைத்து சொந்தமாக உழைத்திடவே அந்த நாளின் மன்னர்பேரில் வாணிபங்கள் பலவும் வைத்தான்!. காட்டு நிலம் பண்படுத்தி மேட்டுநிலமாய்ப் பெருக்கி வாட்டும்பசி வதையைப்போக்க தோட்டங்களும் தோற்றுவித்தான்! கால்நடைகள் வளம்பெருக்க கால்நடையாய்க் காடலைந்து கண்ணயர்வைத் தள்ளிவைத்து பண்ணைகளைப் பெருக்குவித்தான்! சதக்கணக்கும் சிதறிடாமல் முழுக்கணக்கும் செவ்வையிட அதற்கெனவோர் கணக்காய்வை அழுத்தமாகத் தானமைத்தான்!. கணக்கியலும் கணக்காய்வும் நிதியாள்கைக் கொள்கையதும் நுணுக்கங்களை ஆய்ந்தறியக் கல்லூரிகள் தோற்றுவித்தான்!. நாமுழைத்த உழைப்பில்வந்த நாலு தேட்டம் சேர்த்துவைக்க நமக்கெனவோர் வைப்பகத்தை நம்ம நாட்டில் தந்துவைத்தான்!. சேரமன்னன் பேரினிலோ செம்மையுறு வணிகம் வைத்தான் சேர்ந்து பலர் பணிபுரிய செயலுறநெல் ஆலைவைத்தான்! சோழமக ராசன் பேரில் சொந்தமாகக் கடைகளிட்டான் சோற்றுப் பஞ்சம் தீர்த்துவைக்க சோர்வுநீங்கி உழைக்கவைத்தான்! பாண்டியனார் பேரில்நல்ல பல்சரக்கைப் போட்டுவித்தான் வேண்டியநம் தேவைகளை ஒருகுடையில் வாங்கவைத்தான்!. வன்னியனின் வளப்பெயரால் வலைத்தளத்தை வளர்த்துவிட்டான் வன்னியரின் தேவைக்கேற்பத் தோலைபேசித் தொடர்புமிட்டான்!. இளவேனில் என்றபெரு விருட்சமொன்றை நாட்டுவித்தான் அதனடியில் அந்தரித்தோர் இழைப்பாற இடம்கொடுத்தார்!. தாயகத்தில் தனித்துவமாய் தங்கநகைத் தளங்களிட்டான் தரம்குறையாத் தங்கங்களைத் தக்கவிலைக் குவந்தளித்தான்!. வன்னியெங்கும் வலம்வரவே வசுவண்டிச் சேவையிட்டான் ஆக்கபூர்வச் சேவையாகப் போக்குவரவுக் கழகம் வைத்தான்!. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பெருந்திரளாய் நாட்டிவைத்தான் பெருந்தோட்டப் பகுதியினால் பெரும் இலாபம் ஈட்ட வைத்தான்!. வணகவள நலன் பெருக்க நலன்பேணல் நிருவகித்தான்! வாணிபத்தால் வளம்பெருக்க ஒன்றியத்தை ஒருங்கமைத்தான்!. நாட்டில் நல்ல வளத்தையாக்கி நாலுடைமை சேர்த்துவைத்தான் கடமையினில் கண்ணைவைத்தே உடமைப் பகுதி தோற்றுவித்தான்!. நிலங்களெங்கும் பரந்தபேர்க்குத் தேவைகளைத் தீர்த்துவைத்தான் வளங்களதைப் பகிர்ந்தளிக்க வழங்கல் பகுதி ஆக்கிவைத்தான்!. தரிசுநிலத் தரையிலெல்லாம் தக்கபயிர் விதை விதைத்தான் தெரிவுசெய்த நிலத்திலெல்லாம் போகப் பயிர் பலவளர்த்தான்!. காசுப் பயிர் கண்டாய்ந்து காரியத்தை முன்னெடுத்தான் "கயூ" மரத்தில் காடுவைத்தே காசுழைக்க முனைப்பெடுத்தான்! வேப்பமர விலையறிந்து வேப்பங்காடும் வளர்த்தெடுத்தான் புளியமரப் பயனறிந்து புளியங்காடும் புனரமைத்தான்!. தேக்குமரத் தேவைதீர்க்கத் தெருவில்கூடத் தேக்குவைத்தான் பூக்குமரத் தரவையெங்கும் பயன்மரத்தை ஊக்குவித்தான்! தாய்நிலத்தில் தன்நிறைவாய்ப் பல்மரத்தை நாட்டுவித்தான் தன்வாழ்வில் துணையுமின்றித் தனிமரமாய்த் தனித்துநின்றான்!. தமிழ்விந்தில் பிறந்தவர்க்குத் தமிழ்ப்பெயரைச் சூட்டு என்றான் தமிழிச்சி பால்குடித்தால் தமிழ்பேசிப் பழகென்றான்!. தமிழர் நாம் அறிந்திருக்காத் தமிழ்ச் சொற்கள் காட்டுவித்தான் தமிழ்மொழியில் பிறமொழியின் கலப்படத்தை நீக்குவித்தான்!. நிதித்துறையில் ஓய்வுபெற்றே படைத்துறையில் பணியை ஏற்றான் தனித்துவமாய் படைத்துறையில் செயலரெனச் சேவையிட்டான்!. தமிழையேந்தித் தாய்நிலத்தில் தனிப்பெருமை நாட்டி நின்றான் தமிழுக்காக வாழ்ந்து இன்று தமிழ்வரலாறாகி வீழ்ந்தான்!. - நன்றி - வன்னியூர்- வரன் 10/03/2019
 3. ரொம்ப நல்ல ஒரு த்ரில்லர்,டைரக்டர் மகிழ் திருமேனிக்காகா தியேட்டர் போனன்
 4. அவர் பழைய உறுப்பினர் :) வாழ்த்துகள் ,புத்தகத்தை வாங்கி படிக்க முயற்சிக்கிறேன் :)
 5. Netflix ல knightfall பார்த்திட்டு இருக்கன் த டாவின்சி கோட் பார்த்தவர்களிற்கு தெரியும் HOlY GRAIL ( என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவு விருந்தின் போது அவர் வைன் அருந்திய பாத்திரம்) பின்னுள்ள மர்மம்,நைட் டெம்ளர்ஸ் ,பிரைரி ஒவ் சைன் , வத்திக்கான் திருச்சபையின் பின்னுள்ள மர்ம நடவடிக்கைகள்.. 1291 ஆம் ஆண்டளவில் நடைபெற்ற சிலுவைப்போரில் ( ஜெருசலேம் கைப்பற்ற கிறிஸ்தவரும் அரபுக்களும் நூற்றாண்டுகளிற்கு மேலாக நடத்திய யுத்தம்) தங்களின் இறுதியான முக்கியத்துவம்மிக்க இடத்தை டெம்ளர்ஸ் இழக்கிறார்கள் அங்கிருந்து holy Grail லுடன் தப்பிக்கும் போது அது இருந்த கப்பல் தாக்குதலில் தீப்பிடித்து எரிகிறது கப்பலுடன் அந்த புனித பாத்திரமும் கடலில் மூழ்கிறது.அங்கிருந்து தப்பியவர்கள் இப்போது ப்ரான்ஞ்சில். பிரான்சின் அரசன் பிலிப் ,அரசி ஜோன், இளவரசி இஸபெல்லா,இளவரசியை மணம்முடிக்க கேட்டு கட்டலெனியா ,மற்றும் பிரித்தானிய அரசின் தூதுவர்கள் வருகிறார்கள் இளவரசிக்கு கட்டலெனியா இளவரசனுடன் காதல் ,அரசியும் கட்டலெனியாவுடனான உறவை விரும்புகிறார், அரசனின் உதவியாளனும் ஆலோசகனும் அரசனுக்கு அடுத்த அதிகாரம் மிக்கவனுமான டீநகோராவிற்கு இளவரசி பிரிட்டனுக்கு அரசியானால் பிரான்ஸ் செல்வாக்கு கூடும் என எதிர்பார்த்து பிரிட்டனுக்கே ஆதரவு தெரிவிக்கிறான்.அரசன் முடிவு எடுப்பதற்கு அந்த நேரம் பிரான்சிற்கு வந்திருந்த புனித பாப்பரசரிடம் கேட்கிறான், இதற்கிடையே ப்ரான்சின் டெம்ளர்ஸ் மாஸ்டர் ஆக இருந்தவர் ஒரு இரகசிய பயணத்தின் போது ஒரு தனிப்பட்ட குழுவினருடன் ஏற்பட்ட சண்டையில் இறக்க அவர் தன் வாளினை ஒருவர் மூலம் தனக்கு அடுத்ததாக டெம்ளர்ஸ் மாஸ்டர் ஆக வரக்கூடிய Landry யிடம் ஒப்படைக்குமாறு கொடுத்து அனுப்புகிறார். அவரின் வாளின் கைப்பிடியில் இருக்கும் இரகசிய தகவல் மூலம் அந்தப்புனித பாத்திரம் கடலில் மறையவில்லை இப்போது ப்ரான்ஸில் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்த லன்ட்றி அத்தகவலை பாப்பரசருக்கு அனுப்புகிறான் அதை உறுதி செய்வதற்காகவே அவர் ப்ரான்ஸ்சிற்கு வந்திருந்தார்..புனித பாத்திரம் பாப் ன் கையில் கிடைத்தால் அவரிற்கு அளவிலா அதிகாரம் கிடைக்கும் அதன் மூலம் அவர் ஐரோப்பா முழுவதையும் ஒருங்கிணைத்து இன்னொரு சிலுவை போரிற்கு அறைகூவலாம். தேடல் தொடங்குகிறது. அந்தப்பாத்திரம் பாப் ன்கையில் கிடைக்க கூடாதென ஒரு இரகசிய குழு அதை தொடர்ந்து இரகசியமாகவே இருக்கவேண்டும் என அதன் இடத்தை தேடத்தொடங்க பாப் அதிகாரம் கூடக்கூடாதென அரசன் பிலிப் அதை தான் கையகப்படுத்த முயல..இறுதியில் அது யார் கையில் கிடைத்தது பின்னர் என்ன நடந்தது , டெம்ளர்ர் லங்றிக்கும் அரசி ஜோன் க்கும் இடையிலான காதல் , டெம்ளர்களிற்கிடையேயான துரோகம் என மொத்தம் 10 எபிஸொட் ஒரு எபிசொட் 40-50 நிமிடங்கள் இருக்கும் . வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் பாருங்கள்
 6. இவற்றில் பாரிய பிரச்சனையாக இருக்கின்றது சுகாதாரமாக இருக்கின்றது. இவற்றில் மேலதிகமாக வடமாகாணத்தில் 05 அமைச்சுகளுக்குரிய காணப்படுகின்றது.வடமாகாணத்தில் விவசாயத்துறைக்கான மூதலீடுகளை செய்யவேண்டும்.புதிய விவசாய முறைகளை கண்டுபிடிக்கவேண்டும்.கல்வியும்,சுகாதாரமும் உழைக்கமுடியாது குருபரன் கிட்ட சொல்லணும் நல்ல ஒரு எடிட்டர் பிடிக்க சொல்லி
 7. கிட்டத்தட்ட ஸ்டார்டீவியில் அமீர்கான் நடத்திய சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை அப்பிடியே கொப்பி பண்ணி சன்டீவி நடத்தும் நிகழ்ச்சி இதில் தொகுப்பாளர் எல்லாருக்கும் பிடித்த விஜய் சேதுபதி.. அதில் சமூகத்திலுள்ள முக்கியமான பிரச்சினைகளை முன் வைத்து உரையாடினார்கள். இதில் மக்களுக்குள் இருக்கும் நல்லவர்களை இனம் காட்டும் நிகழ்ச்சி இது கடந்த ஞாயிறு நடந்த நிகழ்ச்சி, அந்த அம்மாவின் எபிசொட் விட அதற்கு பின் வரும் பகுதி தான் ரொம்ப அருமை முற்பகுதியை தவிற்பவர்கள் ஆகக்குறைந்த்து அந்த இறுதி பகுதியையாவது பாருங்கள்.
 8. இன்றைக்கு எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர்ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான். இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள 00:22 இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான். ‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ என்கிற சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பாகும். அந்தப் பாட்டில் ‘ராஜா’ என்று பெண் குரல் ஒலிக்கும். ‘ஆம்… உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அறிவிப்பு வர, பித்துப்பிடித்துப் போனார்கள் வானொலி ரசிகர்கள். மதுரக்குரல் மன்னன் என்று அழைத்தார்கள் இவரை. அறிவிப்பாளர்களின் அரசன் என்று புகழ்ந்தார்கள். அறிவிப்பு ஒருபக்கம் அள்ளும். அத்துடன் மக்களின் மனசுக்கு நெருக்கமான பாடல்களை ஒலிபரப்பப்படும். அந்தப் பாடல்களை ஒலிக்கும் நேரம்தான், மக்களின் மிகப்பெரிய ரிலாக்ஸ் நேரம். கே.எஸ்.ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, , ராஜேஸ்வரி சண்முகம், பிஹெச்.அப்துல்ஹமீது என பல அறிவிப்பாளர்கள், நமக்கும் ரேடியோவுக்கும் இலங்கை வானொலி கூட்டு ஸ்தாபனத்துக்கும் மிகப்பெரிய பந்தத்தை ஏற்படுத்தினார்கள். பொங்கும் பூம்புனல் என்றொரு நிகழ்ச்சி அந்தக் காலத்தில் மிகப்பிரபலம். அதேபோல், இரவு 10 முதல் 12 மணி வரை இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சியில், மனதைக் கட்டிப்போடுகிற பாடல்களாகப் போட்டு, ரேடியோவையும் நம் காதுகளையும் பிணைத்துவிடும் தந்திரக்காரர்களாகவே அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். அந்தக் காலத்தில், ‘இன்னிக்கி இரவின் மடியில் ‘உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட’ பாட்டு போட்டா, நம்ம காதல் ஜெயிச்சிரும்னு அர்த்தம்’ என்று ரேடியோ ஜோஸியம் பார்த்ததெல்லாம் தனிக்கதை. ‘இந்தப் படத்தில் இருந்து இந்தப் பாடல்’ என்று அறிவிப்பதும் அந்தப் பாடல் ஒலிபரப்புவதும் மட்டுமா சந்தோஷம் தரும்? இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள், பொப்பளக்கப்பட்டி செரீனா, மட்டக்களப்பு சுபாஷிணி, யாழ்ப்பாணம் தணிகை வேந்தன், அம்மம்மா, அப்பப்பா…’ என்று சொல்லும்போதே உறவில் சொக்கிப்போவோம். அதிலும் சில விநாடிகளுக்குள் முப்பது ஐம்பது பெயர்களையும் ஊர்களையும் மூச்சுவிடாமல் சொல்லுவார்கள். என்றைக்காவது காற்று அதிகம் அடித்தாலோ அல்லது காற்றே அடிக்காமல் போனாலோ ரேடியோ கொர்ராகிவிடும். திருப்பிப்பார்ப்பார்கள். தட்டிப்பார்ப்பார்கள். ஏரியல் கம்பிகளை நீட்டி இறக்கி நீட்டி பார்ப்பார்கள். வயரை இழுத்து வாசலில் வைப்பார்கள். ரேடியோவை நைஸாக காற்று வரும் திசைக்குத் திருப்பிப் பார்ப்பார்கள். இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு ரேடியோ ஸ்டேஷன் லைன் கிடைத்துவிட்டால், குலசாமிக்கு நன்றி சொன்னவர்கள்தான், இன்றைக்கு ஐம்பது ப்ளஸ் வயதைக் கொண்டவர்கள். ரேடியோ இருக்கிற வீடுகள் அப்போது வெகு குறைவு. பாடல் ஒலிபரப்பாகும் நேரத்தில், ரேடியோ இருக்கும் வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் பெருங்கூட்டம் கூடியிருக்கும். ‘இந்தா பவுனாம்பா… சித்த சத்தமாத்தான் வையேன் ரேடியோவை’ என்பார்கள். படத்தின் பெயரைச் சொல்லும் போதே, இங்கே ‘இந்தப் பாட்டுதான்’ ‘இல்ல இல்ல இந்தப் பாட்டுதான்’ என்று பட்டிமன்றமே நடக்கும். பாட்டை நேசித்த தமிழ் உலகில், பாடல்களை நமக்காக ஒலிபரப்பிய ரேடியோவை அப்படிக் காதலித்தார்கள், கடந்த தலைமுறைக்காரர்கள்! இன்று 13.2.19 உலக வானொலி தினம் https://tamil.thehindu.com/opinion/blogs/article26260370.ece
 9. நன்றி படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் தல உங்கள் போனில கிண்டில் அப் ( kindle) இறக்குங்க ,பிறகு உங்களிற்கான கணக்கை திறந்து கொள்ளுங்க ( பணம் செலுத்தும் முறை எல்லாம் குடுக்கணும்), உங்களுக்கு தேவையான புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி படிக்கலாம் என்னை விட கிருபண்ணா,மற்றும் பெருமாளிற்கு அதிக விளக்கம் இருக்கலாம் இது பற்றி
 10. இது நான் பார்த்து ரசித்த சில டிவி நிகழ்ச்சிகள் பற்றியதாகும் ஜீடீவி ல கருபழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா ..நிகழ்ச்சி ,13 இந்த பகுதி ஜோதிடம் பற்றியதாகும் ஒரு பக்கம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும்,மற்றபக்கம் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என மிக கலகலப்பாக நடந்த்து. https://www.zee5.com/ta/tvshows/details/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-6-1109/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-1-173402