அபராஜிதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,052
 • Joined

 • Last visited

 • Days Won

  6

Everything posted by அபராஜிதன்

 1. மனங் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள்..
 2. யாழ் மருத்துவ மனையில் உள்ள நரம்பியல் நிபுணர் மிகநல்ல அறிவு அனுபவம் கொண்டவர் அண்மையில் எனது உறவு முறையானவர் சத்திர சிகிச்சையின் போது மூளைச்சாவு அடைந்தார் அவர் கூறிய காரணம் MRI ஸ்கான் இருந்து இருந்தால் என்னால் காப்பாற்றியிருந்திருக்க முடியும் ,யாழ் ஆஸ்பத்திரியில் இன்னும் இல்லை தெற்கு பகுதிகளிலும் சில வைத்தியசாலை களில் மட்டுமே உண்டு ( இவை எனது உறவினர்கள் அந்த டாக்டர் கூறியதாக எனக்கு கூறியவை சில தகவல் பிழைகள் இருக்க கூடும்) மகரகம (புற்று நோய்) வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வாங்குவதற்கு (100கோடி ரூபா) பணம் சேகரிக்க முனையும் ஒன்லைன் விளம்பரம்/ தகவல் ஒன்றை அண்மையில் பார்த்தேன் (தமிழில தான் முன்னெடுப்போரும் தமிழர்கள் போல் இருந்தது)
 3. யாழில் பன்றி சாப்பிடுற யாரும் இல்லை போல
 4. தில்லானா மோகனாம்பாள்.. சின்னத்துளி சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் .. 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள். இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர். ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான். கொத்தமங்கலம் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்த மிஸ் மாலினி(1947) படத்தில்தான் ரங்கசாமி கணேசன் என்பதை குறிக்கும் ஆர்.ஜி.என்று டைட்டில் கார்டு வரும். அவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெமினி கணேசன்தான். துண்டு ரோலில் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.. இதே படத்தின் கதாநாயகியான புஷ்பவள்ளியை பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்ததுதான் இந்தி நடிகை ரேகா. சரி, கொத்தமங்கலம் சுப்பு விவகாரத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதிவந்தார். வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்துவிட்டுப்போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும் தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம். சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது. தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்தநல்லூர் ஜெயலட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள். எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை. தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார். ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார் வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்துவிட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவான் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார். உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார். ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது.. கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான். அடுத்து கதாநாயகி? ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி. வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார். சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான். நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள். அதேபோல மோகனாவுடன்மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே.. இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும். வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை. சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான். 1962ல் ஜெமினி, சாவித்திரி நடித்த கொஞ்சும் சலங்கை படத்தில் நாதஸ்வரம் முக்கிய பங்காற்றியது. எஸ்.ஜானகி பாடும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், ஜானகி என்ற புல்லாங்குழலுக்கும் உண்மையான நாதஸ்வரத்துக்கும் இடையிலான சரிக்கு சமமான போட்டி என்ற அளவுக்கு இருந்தது. தமிழ் சினிமாவில் நாதஸ்வர இசையால் ஒரு பாடல், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவுக்கு தெறி ஹிட்டாக அமைந்தது என்றால் அது சிங்கார வேலனே தேவா பாடல்தான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் இசையமைப்பாளரான எஸ்எம் சுப்பையாநாயுடு, நாதஸ்வர இசைக்காக அவர் நாடியது நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார். இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர். நாட்டியப்பேரொளி பத்மினிக்கு நடன மங்கை மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்கதெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா? இதற்காக எம்பிஎன் சகோதரர்களே நேரடியாய் தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்குமாத ரிகர்சில் பங்கேற்றனர். நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன் விளக்கிக்காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு, ஆஹா மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள். தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழியை பார்த்து அப்படி உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான். நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியே சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய்மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது, தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’ பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள். நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம். அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி, நலந்தானா பாடலை வரிக்குவரி அலசினால் அண்ணாவின் உடல்நலத்தை பற்றி கண்ணதாசன் உருகிஉருகி விசாரிப்பது தெரிய வரும். திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும் உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள். அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு படத்தில் ஆழ்ந்துபார்த்தால், நலந்தானா பாடலில் நாதஸ்வரம், நாட்டியம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு காதலுக்காக உருகும் காதலர்களின் நடிப்பே அதிகம் தெரியவரும். நாட்டியமாடியபடியே ’’என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நான் அறியேன்’’ என்று பாடி ‘’புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண்பட்ட பாட்டை யார் அறிவார்?’’ என்று மார்பில் லேசா அடித்துக்கொண்டே கைகளை நெற்றியில் கொண்டுபோய்வைத்து தலையை கவிழ்த்து துயரத்தை பத்மினி வெளிப்படுத்துவார். அதைக்காணும் தவில்வித்வான் டிஎஸ் பாலையா, பக்கத்தில் வாசிக்கும் சிவாஜியின் தொடையை லேசாக தட்டி, ‘’எப்படிப்பட்ட பாசக்கார பெண் உனக்கு காதலியா கிடைச்சு உருகு உருகுன்னு உருகராய்யா. உண்மையிலேயே நீ கொடுத்துவச்சவன்யா’’ என்று சொல்லாமல் சொல்வார். இணைப்பில் உள்ள யூடியூப் காட்சியை பார்த்தீர்களானால் அந்த பொக்கிஷமான காட்சி உங்களுக்கு புரியவரும் என்ன மாதிரியான கலைஞர்களெல்லாம் நம் தமிழ் சினிமாவை ஆண்டுவிட்டு போயிருப்பார்கள் என்ற வியப்பே மேலோங்கும். https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது.. தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார். அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டு போனகாலமெல்லாம் உண்டு.. பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார். சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும் பாலையாவுக்காக தவில் வாசித்தவர்கள் இருவர். ஒருவர், திருவிடைமருதூர் வெங்கடேசன்.. இன்னொருவர் பாலையாவுக்கு பயிற்சி அளித்த, மதுரை டி. சீனுவாசன் என்கிற சீனா குட்டி அவர்கள். திருவிளையாடல் படத்தில், பாட்டும் நானே, பாவமும் நானே.. சிவாஜிக்காக தவிலில் கைவிளையாடிது இவருடையதுதான். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பாடத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டின் ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தும் அந்த தவில் பிட்டுகூட சீனு குட்டி அவர்களின் கைவண்ணமே.. இத்தகைய திறமைமிக்க தவில் வித்வான்களின் விரல்கள் பேசிய பாஷையை அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா ஒரு அருவிபோல் பாயவிட்டார். அதனால்தான்,தில்லானாவில் ஆரம்ப காட்சியில் வரும் அந்த ஐந்து நிமிட நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக பாலையாவின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனார்கள். தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான். நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும். ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர், படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்? அதிலும் மோகனாவின் தாயாராக வடிவாம்பாள் கேரக்டரில் வரும் சிகே சரஸ்வதியும் நாகேஷும் ஒன்றாக தோன்றும் காட்சிகளெல்லாம் அவ்வளவு ஜாக்கிரதையாக, நேர்த்தியாக இருக்கும்படி அமைத்திருந்தார் இயக்குநர் ஏபிஎன் அவர்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மோகனாவை வளைக்க துடிக்கும் மிட்டாதாரர் நாகலிங்கமான ஈ.ஆர் சகாதேவன்,, சிங்கபுரம் மைனரான பாலாஜி, மதன்பூர் மகாராஜாவான நம்பியார் ஆகிய மூவரிடமும் மோகனாவை கொண்டுசொல்ல வைத்தி போடும் திட்டங்களும் அதற்கு தோதாக மோகனாவின் தாயை ஆடம்பர வாழ்க்கை ஆசைகாட்டி எல்லாவற்றிற்கும் உடன்பட வைப்பதற்காக பேசும் வசனங்களும்.. ‘’ஐயோ சிங்கபுரம் மைனர் நிக்கறாரே..என் கால் வலிக்குதே வைத்தி’’… என்று சிகே. சரஸ்வதி சொல்வதும், ‘’பாருங்க. நீங்க நிக்கறீங்க..அவா கால் வலிக்குதுன்றா’’ என்று நாகேஷ் நக்கலடிப்பதும் எத்தனையெத்தனை காட்சிகள். மற்ற கேரக்டர்களிடம் டாமினேட் எப்படி செய்யவேண்டும், மாட்டிக்கொண்டால் வெட்கமேபடாமல் தரைரேஞ்சக்கு எப்படி இறங்கிவிடவேண்டும் என்பதற்கெல்லாம் இந்த படத்தின் வைத்தி கேரக்டர்தான் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி, ஏண்டாப்பா என்று ஷண்முகசுந்தரத்தை ஒருமையில் அழைத்துவிட்டு சிவாஜி முறைத்ததும் பின்வாங்குவதும், முன்பின் அறிமுகமே இல்லாமல் வடிவாம்பாளை முதன் முறையாக சந்திக்கும்போதே சிங்கபுரம் மைனரின் செல்வாக்கை சொல்லி அவரின் தோளைத்தொட்டு பேசும் அளவுக்குபோவதும் எவ்வளவு ஸ்பீடான மூவ்மெண்ட்ஸ் நாகேஷிடம்.. நாகேஷ் இப்படி என்றால் ஆச்சி மனோரமா சும்மாவிடுவாரா? ஜில் ஜில் ரமாமணி என்ற பாத்திரத்தை அவர் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாவே மாற்றிவிட்டார். இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிக்க முதலில் மறுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். புக் செய்தவற்காக டைரக்டர் ஏபிஎன் அணுகியபோது, சிவாஜி, பத்மினி பாலையா நாகேஷ், சிகே சரஸ்வதி அதற்கப்புறம் பெரிய பட்டாளமே இருக்கும்போது, படத்தில் எனக்கென்ன முக்கியத்துவம் வந்துவிடப்போகிறது என்று சொல்லி தவிர்த்தார். ஆனால் ஏபிஎன் விடவில்லை. ‘’மோகனாவுக்கு ஆடத்தெரியும், சண்முக சுந்தரத்திற்கு வாசிக்க தெரியும். ஆனால் படத்தில் நடனம், பாட்டு, நாடகம் என சகலமும் தெரிந்த கேரக்டர் என்றால், அது உன்னுடைய ஜில்ஜில் ரமாமணிமட்டுந்தான். இந்த கேரக்டர் உன்னை காலாகாலத்திற்கும் பேசவைக்கும் என்று சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டார். ஏபி நாகராஜன் சொன்னபடியே ஜில்ஜில் ரமாமணி கேரக்டர்.. அதை விவரிப்பது என்பது தங்கக்குடத்திற்கு பொட்டு வைத்துதான் அழகு பார்க்கவேண்டுமா என்பது மாதிரி.. நொந்துபோன பாத்திரமாய் சிரிக்கவைத்துக்கொண்டே வரும் மனோரமா, தவறான தகவல் அடிப்படையில் பிரிந்து நிற்கும் காதலர்களான மோகனாவையும் சண்முகசுந்தரத்தையும் சேர்த்துவைக்கும்போது, அவர்கள் இருவரையும் மட்டும் அல்ல ரசிகர்களையும் உருகவைத்துவிடுவார். அதுதான் ஆச்சி மனோரமா.. தில்லானா நாயகன் சண்முக சுந்தரம் என்றதும் இங்கே இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டாகவேண்டும், படத்தில் சிவாஜிக்கு உற்ற தம்பியாக வந்து எப்போதும் பக்கத்தில் அமர்ந்து தங்கரத்தினமாய் நாதஸ்வரம் வாசிக்கும் நடிகர் ஏவிஎம் ராஜனின் சொந்தப்பெயர்தான் சண்முகசுந்தரம். தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்கள் அதில் உண்டு. மதன்பூர் மகாராஜா எம்என் நம்பியாரின் மகாராணியாக வரும் அம்பிகா, 50களிலும் 60களிலும் மலையாள உலகில் கொடிகட்டி பறந்த முன்னணி கதாநாயகி. மலையாளத்தின் முதல் வண்ணப்பட நாயகி. நடிகை பத்மினி, ராகினி, லலிதாவின் தாயாரான சரஸ்வதியை உடன்பிறந்த சகோதரியின் மகள்தான் இந்த அம்பிகா. இயக்குநர் பீம்சிங்கை மணந்துகொண்ட நடிகை சுகுமாரிக்கும் சகோதரி. தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷை படாதபாடு படுத்தும் அந்த பாட்டிதான் சுகுமாரி என்று சொன்னால்தான் இப்போதைய தலைமுறைக் தெரியும். பாசமலர் படத்தில் வாராயோ என் தோழி வாராயோ பாடலில் நடனமாடி அதன் பின் புகழ்பெற்ற சுகுமாரி என்றால் தெரியாது. சுகுமாரியும் அம்பிகாவும் ஒரு மலையாள படத்தில் போட்டிபோட்டுக்கொண்டு ஆடிய பாம்பு நடனம் அந்தக்கால கேரள ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பை பெற்ற ஒன்று என்பார்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தை பொறுத்தவரை பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியிருக்கும். படத்தின் உயிர்நாடியான கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவின் மனைவியான நடிகை எம்எஸ் சுந்தரிபாய்க்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் விட்டார் ஏபிஎன் என்பதுதான் புரியவில்லை.. வில்லியாகவும் குணச்சித்திரமாகவும் அடித்து நொறுக்குவதில் கில்லாடி எம்எஸ் சுந்தரிபாய் சிவாஜி,பாலையா, டி.ஆர் ராமச்சந்திரன், நாகையா சாரங்கபாணி, ஏவிஎம்ராஜன், தங்கவேலு, பாலாஜி, நாகேஷ் ஏகப்பட்டபேர் கதாநாயகன் அந்தஸ்த்து கொண்டவர்கள். அத்தனைபேருக்கும் மனசு கோணாதபடி முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் என்றால் ஏபி நாகராஜன் என்பவர் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்திருக்கவேண்டும்., தில்லானாவில் விடுபட்டபோன சுந்தரிபாய், ரங்காராவ், விகே.ராமசாமி எம்வி ராஜம்மா, சோ போன்றோருக்காகவே அதன் இரண்டாவது பார்ட்டை ஏபி நாகராஜன் உருவாக்கியிருக்கக்கூடாதா என்ற ஆசை அடிக்கடி வந்துவிட்டு போகிறது.. https://m.facebook.com/story.php?story_fbid=2438447952868595&id=100001102422976&sfnsn=mo
 5. ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ?
 6. ,நன்றி கருத்துக்கும் வருகைக்கும்
 7. அரசியல் வாதிகள் தீர்வு நோக்கி என்ன செய்கிறார்களோ என ஆராய்வதை விட எமது மக்கள் தாயகப்பகுதிகளில் தமது இருப்பை மற்றும் வளங்களை தக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என எழுதினால் மிகப் பயன் உள்ளதாய் இருக்கும் என நினைக்கிறேன் .. நான் தாயகத்திலிருந்து( கிராமத்திலிருந்து) வெளியேறி கிட்டத்தட்ட13 ஆண்டுகள் அப்போதிருந்த நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது அப்போது இயக்கம் இருந்தது எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும் எனும் நிலை மாறி கிராம மக்கள் தங்களிற்கிடையே குழுக்களை அமைத்து ( கமக்கார அமைப்பு / வேறு ) தமது வளங்களை / இருப்பை தக்க வைக்க போராட தொடங்கி உள்ளனர் நான் அறிந்த வரையில் எனது கிராமத்தில் இப்போது வயல் நிலங்களை நிரவி வீடுகள் ஆக்குதல் முற்றாக தடை ( அனுமதி எடுக்கவே ரொம்ப கஸ்டம். தகுந்த காரணங்கள் காட்டி கமக்கார அமைப்பின் கடிதம் கொண்டுபோகணும் மண் ஏற்றுதல்/ மணல் ஏற்றுதல் தடை அண்மையில் ஒருவர் பொலிஸக்கு காசு கொடுத்து மண் ஏற்றி உள்ளார் கமக்கார அமைப்பின் தலையீட்டினால் ,பொலிஸ் வேறு வழியின்றி அவரை கைது செய்ததுடன் ஏற்றி்ய மண் அவ்வளவையும் ஏற்றிய இடத்தில் திரும்ப போட உத்தரவு குழாய் கிணறு அடிக்க அனுமதி பெற வேண்டும் நீர் மட்டத்தை பேணுவதற்கு குழாய்கிணற்று மூலம் பாசனம் செய்வது முற்றிலும் தடை குடியிருப்புகள் சூழ்ந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் கோழிபண்ணை வைக்க்தடை மரம் வெட்ட அனுமதி பெற வேண்டும் அத்துடன் ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிலும் ஊர்பொடியள் தான் முன் நிக்கிறார்கள் என்கிறார் அம்மா யாரும் ஒரு புது முகம் சந்தேகப்படும்படி ஊரில் நடமாடினால் உடனே மறித்து யார் வீட்டிற்கு வந்துள்ளீர்கள் என்பது போன்ற விபரங்களை கேட்கிறார்கள், யுத்தம் முடிந்த காலப்பகுதியில் அதிகரித்து காணப்பட்ட திருட்டு கசிப்பு காய்சல் என்பன அறவே குறைந்துள்ளன.குடித்து விட்டு வந்தாலோ/ சாராயம் எடுத்து வந்தாலோ பொலிஸ் கைது செய்கிறார்கள்... இவை எமது கிராமத்தில் தற்போது உள்ள சில நடைமுறைகள் கரையோரக்கிராமங்களில் கூட நீங்கள் கேள்விப்படிருப்பீர்கள் சட்டநடவடிக்கை மூலம் சட்ட விரோத மீன்பிடி / கடல்லட்டை பிடிப்போரை வெளியேற்றியமை அங்குள்ள மக்கள் தெளிவாகவே உள்ளார்கள் ,என்னைப்பொறுத்தளவில் அரசியல்வாதிகளை நம்புவதை விட மக்களை நம்பலாம், சமூக மட்டத்தில் உள்ள அமைப்புக்களை வலுப்படுத்தலாம் ஊருக்கு போய் ஆடு வெட்டி பந்தா காட்டுவதை விட அங்கு உள்ள இளைஞர்களின் விளையாட்டு அமைப்புகளிற்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்கலாம் கோயில்களிற்கு வழங்கும் பணத்தை குறைத்து பாடசாலைகளிற்கான ஒரு கிணறு அமைக்கவோ மாணவர்களிற்கான தரமான கழிப்பறை அமைக்கவோ ,கிராமத்தில் உங்கள் மறைந்த பெற்றோர் நினைவாக பஸ் நிலையம் அமைத்தோ கொடுக்கலாம் வெறுமனே அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவதால் என்ன நடக்க போகிறது? இப்போதைக்கான தற்காலிக தீர்வு அங்குள்ள மக்களின் இருப்பை தக்கவைத்தலும் எமது நிலம் / வளம் பறி போகாமல் காத்தலும் எமது மக்களை பொருளாதார ரீதியில் உயர்த்தலும் பொருளாதார அபிவிருத்திக்கு மனோகணேசன் / விஜயகலா போன்றோரினை ஏதோவொரு வழியில் பயன்படுத்தலாம் இது சம்பந்தமாக ஊரில் உள்ளோர் இன்னும் விரிவாக எழுதலாம் . என நம்புகிறேன் இது இத்திரிக்கு தொடர்பில்லாமலும் இருக்கலாம் அப்பிடி எனில் மன்னிச்சுக்க
 8. என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்பார் சின்ன வெங்காயம் போட்டு. பினிஷிங் டச்சாக இரண்டு நைஸ் ஊத்தாப்ப்பமும் உண்டு. மார்கழி மாதங்களில் என் தெருப் பையன்கள் எல்லோரும் பட்டையோ நாமத்தையோ போட்டுக்கொண்டு பொங்கல்,சுண்டல் வாங்க கோவிலுக்கு கிளம்பும் போது நான் வாளியை தூக்கிக் கொண்டு குள்ளி டீக்கடைக்கு போவேன். அங்கே டீ மட்டும் தான் கிடைக்கும். வடை,பஜ்ஜி எதுவும் இருக்காது. தென் மாவட்ட டீக்கடைகளில் காலையில் பறக்கும் மாநிலகொடியான தினத்தந்தி கூட அங்கே வாங்க மாட்டார்கள். ஆனாலும் வியாபாரம் அனல் பறக்கும். போடும் டீ அப்படி. சில மாலை வேளைகளில் ஸ்ரீராம் ஸ்வீட் ஸ்டாலில் இருந்து ஓமப்பொடி,நவதானிய மிக்சர்.இப்படியாக நாளொரு சாப்பாடும், பொழுதொரு டிபனுமாக போய்க் கொண்டிருந்த என் வாழ்க்கையில் திடீரென பருவக்காற்று வீசியது. எங்கள் தெருவுக்கு இரண்டு தேவதைகளுடன் ஒரு வங்கி அதிகாரி குடி வந்தார். ஒற்றுமையாய் இருந்த தெருப் பையன்களுக்கிடையே சண்டை வரத் தொடங்கியது. எப்படியாவது என் வயதில் இருந்த இரண்டாவது பெண்ணின் காதலைப் பெற்றுவிட வேண்டுமென்று துடித்தேன். ஒருநாள் என் வருங்கால மாமனார் என் வீட்டிற்க்கு வந்தார். என் தந்தை பணிபுரியும் அலுவலகம் தொடர்பான வேலைக்காக.இரண்டு நாள் கழித்து, என் தந்தை என்னை அழைத்து கையில் ஒரு கவரை கொடுத்து தேவதையின் வீட்டில் போய் கொடுக்கச் சொன்னார். சரி என்று உற்சாகமில்லாமல் தலையாட்டி விட்டு வெளியே வந்தேன். அங்கு போகாமல் ஒளிந்து கொண்டேன். என் தந்தை வெளியே கிளம்பியதும் என் பேவரைட் டிரஸ் அணிந்து ஒப்பனையிட்டு கிளம்பினேன். ஸ்டைலாக நடந்து சென்று அவர்கள் வீட்டு கதவைத் தட்டினேன். வருங்கால மாமியார் கதவைத் திறந்தார். ஹாலில் பாம்பே சகோதரிகளை தோற்கடிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். கவரை கொடுத்ததும் அந்த அம்மாள் கேட்டார்" அவர் பையனா நீ?, சும்மா வாளிய தூக்கிக்கிட்டே திரியுறனால ஏதோ கடைப் பயைன்னு நினச்சோம்".அப்போது ஹாலில் பிசாசுகள் சிரிக்கும் சத்தம் கேட்டது.பின்னர் தெருவில் ஆழமாக விசாரிக்கையில் தான் தெரிந்தது, இரண்டு முரளி இருப்பதால் எப்பொதும் ஜலதோசத்தால் அவதிப்படுவனை சளி முரளி என்றும் என்னை வாளி முரளி என்றும் மக்கள் அழைத்துவருவது. இனி தெருவில் நம் பப்பு வேகாது, வெளியூரில் இருக்கும் நம் உறவுப் பெண்களையாவது லவ்வலாம் என்று தீர்மானித்தேன். அங்கும் என் தந்தையின் போஜனப் பிரியம் குறுக்கே வந்தது. நானும் ஆசை அசையாக உறவினர் திருமணங்களுக்கு முதல் நாள் மாலையே கிளம்பி செல்வேன்.கல்யானம் நடத்துபவர்கள் என்னை பார்த்ததும் கேட்பது" அப்பாவுக்கு புரமோஷனாமே?, காலையிலாவது வருவாரா?,"அடுத்து உடனே" எப்பவும் அவர் தான் ஸ்டோரையும்,சமையல்காரங்களையும் பார்த்துப்பார், நீதான்பா அவர் இடத்தில இருந்து பார்த்துக்கணும்"திருமணத்திற்க்கு வரும் பெண்கள் அதற்கெனவே ஒளித்து வைத்திருக்கும் சிறப்பு உடைகளுடனும், ஒப்பனைகளுடனும் வளைய வந்து கொண்டிருப்பார்கள். என் உறவுப் பையன்களெல்லாம் நூல் விட்டுக் கொண்டிருப்பார்கள். நானோ இங்கே இந்த எண்ணெயில வடை சுட்டா காரலா இருக்கும் மாத்துங்க என்று சமையல்காரர்களிடம் நூல் விட்டுக் கொண்டிருப்பேன்.பந்தி விசாரணையின் போது,ஒருமுறை என் அத்தை பெண்னிடம் இந்த கூட்டு வச்சுக்கங்க, ரசத்துக்கு நல்ல காம்பினேஷன் என்று சொல்லப் போக அவள் சொன்னது" நாங்க வாழ்றதுக்காக சாப்பிடுறவங்க, சாப்பிடறதுக்காக வாழ்றவங்க இல்லை".என் காதல் என்னிடமே தங்கிவிட்டது. பரிமாறாத சாதத்துக்கு என்ன மதிப்பு?பின்னர் ஊரிலேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். ஒருமுறை என் நண்பனுக்கு அட்டஸ்டேஷன் வாங்குவதற்க்கு தந்தை அலுவலகம் சென்றிருந்த போது பியூன் என்னைக் காட்டி கிளார்க்கிடம் சொன்னார்," சாமானியமா லீவே எடுக்க மாட்டாரு நம்ம சாரு, மகனுக்கு மஞ்சள் காமாலைன்ன உடனேயே மூணு மாசம் லீவு போட்டதுமில்லாம, மகன் சாப்பிடுற கஞ்சித்தண்னிய தான் குடிச்சுக்குட்டு இருந்தாரு".அதுவரை என் தந்தையிடம் எனக்கு ஏற்படாதிருந்த பாசம் கண்ணின் வழியே கங்கையாய் வெளியேறியது.காதல் தான் என் தந்தையால் கிடைக்கவில்லை. ஆனால் கல்யாணம் கிடைத்தது. இப்போது கூட வேலை முடிந்து வீட்டிற்க்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். கதவை பையன் வந்து திறக்கிறான். என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? என்று கேட்ட படியே உள்ளே நுழைகிறேன். தைல வாசனை. மதியம் இருந்து ஒரே தலைவலிங்க என்கிறாள் மனைவி. சரி சரி நல்லா ரெஸ்ட் எடு, சூடா காப்பி போட்டுத் தர்றேன். டிபன் வெளியில வாங்கிக்கிடலாம். என்ற படி சமையலறைக்குள் நுழையு போது மனைவி என்னை கனிவு கலந்த காதலோடு பார்க்கிறாள். பெண் பார்க்கும் போதோ, நிச்சயத்தின் போதோ, கல்யாணத்தின் போதோ இந்த காதல் பார்வையை நான் எதிர்கொண்டதில்லை. போகோவில் சோட்டா பீமை பார்த்துக் கொண்டே என்னைப் பார்க்கிறான் என் மகன். டீக்கடை -ட்விட்டர்
 9. “ச்சீய்..” ஜனனியை அடையாளம் கண்டு கொள்ள இரண்டு விஷயங்கள். சுலபத்தில் விட்டுத் தர மாட்டாள். அவள் பக்க நியாயங்களைப் பட்டியலிட்டு.. குரலெழுப்பாமல்தான்.. கைகட்டி காத்திருப்பாள் பதிலுக்கு. உண்மையை ஒப்புக் கொண்டால் பிழைத்தோம். இல்லையேல் தொலைந்தோம். அடுத்தது 'ச்சீய்'.. செல்லமாய். கலாய்த்தால் ரசிப்பதுடன் அவளின் ஃபேவரிட் வார்த்தையைச் சொல்லி விடுவாள். உதடு சுழித்து இமைகள் சிறகடிக்க ச்சீய் சொல்லும் அழகிற்கே.. 1000 மார்க் தரலாம். இன்றைய சண்டை எதிர்பாரா தருணத்தில் ஆரம்பித்தது. 'பூக்கள் பூக்கும் தருணம்' ரிங் டோன் ஒலித்தால் அவள். எனக்கோ மீட்டிங். பாஸ் பேச்சின் நடுவில் முறைத்து விட்டு (ஏன்.. ஆஃப் பண்ணல) அவர் உரையைத் தொடர்ந்தார். மெசேஜ் அனுப்பினேன். 'கால் யூ லேட்டர்'. இன்னொரு தரம் பூக்கள் பூத்தன. பாஸின் நெற்றிக்கண் இப்போது என் மேல். ஹெட் ஆபிஸ் அழைப்பு போல பந்தா காட்டி வெளியே வந்தேன். "என்னம்மா" "வெட்டி கூட்டத்துல இருந்தியா" "ப்ஸ்.. பாஸ் கடிச்சார்" "ஊசி போட்டுக்கோ.. இன்னிக்கு ஈவ்னிங் பார்க்கணும்" "அதெல்லாம்..." சொல்லி முடிக்குமுன் கட் ஆகிவிட்டது. உள்ளே போனபோது பாஸ் முடித்திருந்தார். "கேசவ்.. அந்த பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷனைப் போடுங்க" திரை ஒளிர்ந்தது. என்னென்னவோ எண்கள்.. ஆங்கிலம்.. அரை மணி அனல் பறந்தது. பேப்பர் ப்ளேட்டில் பிஸ்கட்டுகள். கரம் சாய். அடுத்த கூட்டத்தில் விவாதிக்க எல்லா முன்னேற்பாடுகளையும் செய்த மாதிரி அன்றைய கூட்டம் கலைந்தது. "ஈவ்னிங் ஓடிராதே.. இன்சைட் பேக்டரி போறோம்" என்றார் கடைசியாய்க் கிளம்பும்போது. மாலையா.. பேக்டரி விசிட்டா.. தேவுடா.. "என்ன முழிக்கிற" "அம்மாவை செக்கப் கூட்டிப் போகணும்" "எப்ப பார் ஒரு சால்ஜாப்பு.. நோ எக்ஸ்கியூஸ்..நைட் கூட்டிப் போ.." போய் விட்டார். தொலைந்தேன். ஜனனி.. என்ன கிழி கிழிக்கப் போறாளோ.. நாலரை மணிக்கு அதிர்ஷ்ட தேவதை உதவிக்கு வந்தாள். "போலாமா சார்" "இல்லப்பா.. நாளைக்குத்தான். இன்னிக்கு இன்னொரு மீட்டிங் அட்டெண்ட் பண்னனுமாம்.. " என்றார் எதையோ தேடிக் கொண்டு. "நான் கிளம்பறேன்..அம்மாவை.." தலை நிமிராமல் சம்மதித்தார். "ஃபைவ் மினிட்ஸ் லேட்" என்றாள். "கோவத்துல கூட நீ அழகா இருக்கே" "கட் தட் கிராப்" "ம்ம்" "போன வருஷம் ஒரு பையனுக்கு கண் ஆபரேஷன் பண்ணோம்ல" "நான் எங்கே பண்ணேன்.. அர்விந்த்ல பண்ணாங்க" முறைத்தாள். "உதவி பண்ணீல்ல.. இப்போ இன்னொரு கேஸ்.. எட்டு வயசு.. மாறு கண் ப்ளஸ் பார்வை பிரச்னை" "ஏம்பா நீ லூசா.. அந்த ஆபரேஷன் ஆகி.. அவன் பார்வை சரியானதும் அவன் அம்மா.. முதல்ல உதவி கேட்டவங்க.. எதிர்ல பார்த்தா பேசாம கூட போனாங்கன்னு நீதானே சொன்னே" "அது வேற..அதுக்காக உதவி செய்யாம இருக்க முடியுமா" அதான் ஜனனி ! "அழகுடி நீ" கொஞ்சலுக்கு நேரமில்லை. ஜனனி சொன்ன விலாசத்திற்குப் போனோம். பார்க்கவே பாவமாய். வலது கண் தன்னிச்சையாய் மூடித் திறந்தது. இடது கண் இலக்கின்றி அலைந்தது. குத்து மதிப்பாய் குரல் வந்த திசையில் வணக்கம் சொன்னான். "உங்கிட்ட போன வாரம் 2000 பணம் வாங்கினேன்ல.. அது இவனை செக்கப் கூட்டிப் போகத்தான்.. பார்த்தாச்சு. ரெண்டு ஆபரேஷன் பண்ணனுமாம். இப்போ ஒண்ணு.. நாலஞ்சு மாசம் கழிச்சு ஒண்ணு.. " "ம்ம்" "20000 ஆகுமாம்" "ஜானு..எனக்கு எதற்கு கணக்கு.. எப்போ தரட்டும்" "பணம் கொடுக்கிற மவராசன்.. தெரிஞ்சுக்கணுமில்ல" 'இருடி.. உன்னை அப்புறம் வச்சுக்கிறேன்' என்கிற பார்வையைப் படிக்காதவள் போல பையனின் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். "நாளைக்கு அட்மிட் பண்ணிரலாம்மா" வெளியே வந்து விட்டோம். "காபி உண்டா" என்றேன். "ஒன்லி ஃபைவ் மினிட்ஸ்" "காதலனுக்கு அவ்வளவுதான் டைம்..ஹ்ம்ம்.. பேசாம என் கண்ணும் நொள்ளையா இருந்திருக்கலாம்" ஜனனி விருட்டென்று எழுந்ததும்தான் என் வாய்த் துடுக்கு புரிந்தது. "ஏடிஎம் ல பணம் ட்ரா பண்ணித் தரியா" "ப்ளீஸ் ஜானு" "த்ரீ மினிட்ஸ்" எதிரிலிருந்த ஏடிஎம் செண்டருக்குள் போனேன். பணத்துடன் திரும்பினேன். "இந்தா" எண்ணிப் பார்க்கக் கூட இல்லை. போய்விட்டாள்..ராட்சசி. "பூக்கள் பூக்கும் தருணம்.." "ஏய்.. உன் போன் தான்.. எடு" கால் வந்தது கூடத் தெரியாமல் எக்ஸெல் கணக்கில் மூழ்கி இருந்தேன். பாய்ந்து எடுத்தேன் சார்ஜில் இருந்த ஃபோனை. "இன்னிக்கு ஈவ்னிங்.. அந்தப் பையன் வீட்டுக்கு வா.. தேங்க்ஸ் சொல்லணுமாம்" "அதெல்லாம்..." கட் ! பேஸ்து மாதிரி போனேன். தருணின் அம்மா கண்களில் நீருடன் நன்றி சொன்னாள். தருண் சாக்லேட் நீட்டினான். "பத்திரமா பார்த்துக்குங்க" வெளியே வந்ததும் ஜனனி கேட்டாள். "என்ன சாக்லேட்னு பார்த்தியா" ஸில்க். என் ஃபேவரிட். தருணுக்கு எப்படித் தெரியும்.. ஓ.. ஜனனியின் வேலையா.. "காபி குடிக்கணுமா" கன்னுக்குட்டி போலப் பின் தொடர்ந்தேன். "கோவமா.. லூசு மாதிரி பேசினா யார் பொறுத்துப்பா" "ம்ம்" "இந்த மூஞ்சி உனக்கு சூட் ஆகல.. சிரிச்சாலே சகிக்காது" "என்னைத் தவிர எல்லார் மேலயும் பிரியம் கொட்டற.. என்னைப் பிடிக்கணும்னா நான் என்னதான் பண்ணனும்" என்றேன் சீரியசாய். சொல்லி விட்டு கண் சிமிட்டினேன் என்னையும் மீறி. "ச்சீய் " #மீள் ரிஷபன் FB
 10. மருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்! Dr. Hariharan V MBBS, MD., Diet consultant. 2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன். பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. "டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப வலி, பெத்திடின்-பினர்காண் ஊசி போட்டா வலி போயிடும், ஊசி போட்டா ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில் மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும் மூச்சிரைப்புடன் இருக்கும் குழந்தையை அவன் அம்மா காட்டினார். உடனே எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஊசி போட சொன்னேன். அடுத்த பதினாறு வாரங்கள், வாரம் ஒரு முறை அதே போல் வருவார்கள், பதினேழாவது வாரம், பேரன்ட்ஸ் மட்டுமே வந்தார்கள். "ரொம்ப நன்றி டாக்டர். குழந்தை வலியில்லாமல் இறந்தான்". நான் தூங்க இரண்டு நாளானது. இன்றைக்கு அந்த பெற்றோர் முகம் எனக்கு நினைவில் உள்ளது. அப்பர் மிடில் கிளாஸ் ஆட்கள். அவர்கள் நிலைமையில் என்னை நினைத்து வருந்திய நாட்கள் அதிகம். இதே போல இன்னும் பதினைந்து இறப்புகள். ஒரு வருடத்தில். என் வயது 25. அவசர சிகிச்சை மற்றும் ஐசியு இரவு டூட்டிகள். பொட்டலம் மாதிரி தூக்கிக் கொண்டு வருவார்கள். என்னென்னவோ செய்வோம். ஒரு நேரத்தில், ஆறு நர்ஸ்கள் எனக்கு உதவிய காலங்கள் உண்டு. எப்படியாவது இவரை காப்பாற்றிட மாட்டோமா என போராடுவோம். பேஷண்டை மாமன் மச்சானாய் தான் நினைப்போம். அடுத்த நாள், நாம் என்ன செய்து அவரைக் காப்பாற்றினோம் என அவருக்கு தெரியாது, "குட் ஈவ்னிங் டாக்டர்" என்பார். புன்னகைத்தபடியே நகர்வேன். இரவில் நர்ஸ்களுடன் உணவு சாப்பிடும் போது, அவர்கள் என்னை வெகுவாக பாராட்டுவார்கள், நான் அவர்களின் நல்ல செய்கை மற்றும் அன்று அவர்கள் செய்த தவறுகளை சொல்வேன். இருபது வருடம் அந்த மருத்துவமணைகளில் வேலை பார்க்கும் மிக சீனியர் நர்ஸ்கள் கூட என்னை மதித்து, அந்த உணவு வேளைகளில் கலந்து கொள்வர். உயிரை காப்பாற்றும் தருணங்களில், அடுத்த நாள் காலை வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது, ஹெல்மட் மண்டையை மேலே தூக்கியபடி வண்டி ஓட்டுவேன். இன்றளவும் மனதில் இருக்கும் தருணங்கள் அவை. காப்பாற்ற முடியாத தருணங்களில், இரண்டு நாட்களுக்கு மனதை உழப்பிக் கொண்டே இருப்பேன். ஓனர் டாக்டர், "ஹரி, கரெக்டா தாம்பா செஞ்ச. அமெரிக்காவில் அவன் இந்த நேரம் போயிருந்தாலும், அங்க என்ன செய்வாங்களோ அதை தான் செஞ்ச. அதுக்கு மேல அவன் தலை விதி. விடு" என்பார். நான் செய்யும் வேலையை பார்த்து இரண்டே மாதத்தில் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார் ஒரு ஹாஸ்பிடல் ஓனர் டாக்டர். இழப்பின் வலி அவருக்கு தெரியும். அவர் டாக்டர் மனைவி ரத்தப் புற்றுநோய் வந்து லட்சக்கணக்கில் செலவு செய்தும் இறந்தார். ஒரு வருடத்திற்கு மேல் முடியவில்லை. நிறைய கற்றுக் கொண்டாலும், சில மரணங்கள் என்னை அலைக்கழித்தன. மன அழுத்தத்தில் எனக்கு பிரஷரும், தூக்கமின்மையால் உடற்பருமனும் வந்தது. சமூகத்திற்கு நான் ஆற்றிய கடமை போதும் என கொஞ்சம் டென்ஷன் கம்மி தரும் வேலைக்கு வந்து, பின்னர் எம்டி படித்து, திருமணம் முடித்து, மெடிக்கல் காலேஜ் வாத்தியார், டயட் டாக்டர் என டென்ஷன் கம்மி வேலைகளில் செட்டில் ஆகி விட்டேன். இன்றளவும், நான் மிகப்பெரும் டாக்டர்களாக மதிப்பது, தங்கள் ஆரோக்கியம், சந்தோஷங்களை தொலைத்து பல்வேறு மருத்துவமனைகளில் வெறும் இருபத்தைந்தாயிரம், முப்பதாயிரம் ரூபாய்க்காக நைட் டூட்டி பார்க்கும் காஷுவாலிட்டி மற்றும் ஐசியூ நைட் டூட்டி டாக்டர்களையே. உங்கள் உயிரையோ, அல்லது உறவினர் நண்பர் உயிரை அவர் காப்பாற்றியிருந்தாலும் சரி, போராடி உயிரை காப்பாற்ற முடியாவிட்டாலும் சரி, அவருக்கு ஒரு smsசிலோ, வாட்ஸப்பிலோ, போன் செய்தோ, நேரிலோ, ஒரு கடிதம் மூலமாகவோ நன்றி செலுத்துங்கள். அவர் அடையும் சந்தோஷமே வேறு. உங்களை நன்றாக நினைவு வைத்திருப்பார். இன்றும் நான் காப்பாற்றியவர்கள் யாரும் நினைவில் இல்லை. இழந்தவர்கள் அனைவரும் என் நினைவில் பத்திரமாக உள்ளனர். டாக்டர்களை அடித்தல். அந்த பதினாறு மரணங்களில் ஒரு மரணம், ஒரு கவுன்சிலருடையது. அவர் அடிப்பொடிகள் மருத்துவமனையை அடித்து உடைத்தார்கள். நான் என் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கென்ன பயம்? நான் ஒரு தவறும் செய்யவில்லை. அவரை காப்பாற்ற முழு முயற்சி செய்தும் முடியவில்லை. என்னை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லாவற்றையும் நொறுக்கினார்கள். பின் தான் தெரிந்தது, கவுன்சிலர் தன் மகளுக்கு உயிலில் ஒன்றும் வைக்காமல் எல்லாவற்றையும் மகன்கள் பேருக்கு எழுதி வைத்து விட்டார் என. அந்த மகளின் கோபத்தின் வடிகாலே எங்கள் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது. சொத்து கிடைத்த இரு மகன்களும், சைலண்டாக பாடியை வாங்கிச் சென்று விட்டார்கள். அடிவாங்காமல் நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம். இறந்த நபரின் முகம் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அவர் மகளின் நினைவில் அந்த முகம் இருக்குமா? தன் சொந்தம், நட்பை இழத்தல் ஒருவருக்கு தரும் அதே சோகத்தை, அந்த பேஷண்டை அட்டென்ட் செய்யும் டாக்டருக்கும் தருகிறது. சிறிய மருத்துவமனைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நம்மூர் டாக்டர், நம்மை நம்பி ஆரம்பித்த மருத்துவமனை. அதற்கு பதிலாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டியிருந்தால், அது முன்னேறி, இன்றைக்கு ஒரு அரசியல் தலைவர்/ காண்டிராக்டர் ஆகியிருப்பார். மக்களுக்காக அவர் கட்டி, இரவும் பகலும் நோயாளிகளுக்காக அவர் பாடுபட்ட அந்த மருத்துவமனை இன்று விற்பனைக்கு. வாங்க ஆளில்லை. அவர் மகன்கள்/ மகள்கள் மெரிட்டில் மருத்துவம் கிடைக்காமல், மேனேஜ்மெண்ட் சீட்டில் சேர்க்க காசில்லாமல், இன்று வேறு கோர்ஸ்களில் சேர்கிறார்கள். அந்த டாக்டர் நாற்பது வருடங்களாக சம்பாதித்தது, அந்த பில்டிங்கை தவிர வேறில்லை. அதையும் விற்க முடியவில்லை. இன்னும் இருபது வருடங்களில், உங்கள் அருகில் இருக்கும் உங்களுக்கு பழக்கமான சிறிய மருத்துவமனைகள் இருக்காது. இன்றைக்கே ஒரு "நன்றி டாக்டர்" மெசேஜ் தட்டுங்கள். செய்யும் முதலீட்டிற்கு கேவலமான லாபத்துடன் தொழிலை நடத்துவதற்கும், செலவழிக்கும் நேரத்திற்கும், இழந்த தூக்கத்திற்கும், அவர் குடும்பத்திற்கு நேரம் செலவழிக்காமல் இருந்ததற்கும் நம்மால் செய்யக் கூடிய ஒரே கைம்மாறு " Thanks Doctor" எனும் ஒரு வரியே. அவருக்கு அதனால் கிடைக்கும் சந்தோஷமே வேறு.. ############################## மருத்துவர்கள் தினமான இன்று எனது வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாத மருத்துவரைப் பற்றிய நினைவைப் பதிகிறேன் சுமார் பதினான்கு வருடங்களுக்கு முன்பு , 2005 ஆம் ஆண்டு, அப்போது நாங்கள் நாமக்கலில் வசித்து வந்தோம். நான் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி எனும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தேன் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் கடுமையாக உழைத்து இறுதி தேர்வுகளை அடைந்தேன். ஆனால் அங்கு எனக்கொரு மாபெரும் சோதனை காத்திருந்தது. மொழிப்பாடங்கள், இயற்பியல் ( physics) தேர்வுகள் வெற்றிகரமாக கடந்து சென்றன. சரியாக வேதியியல் ( chemistry ) தேர்வன்று ( 14/3/2005) அதிகாலை 1 மணியளவில் குளிர் நடுக்கத்துடன் கடும் காய்ச்சல் வந்துவிட்டது . என்னால் தூங்கவும் முடியவில்லை. புத்தகத்தை திருப்புதலும் ( revision) செய்ய முடியவில்லை. கடுமையான தலைவலி பிடித்துக்கொண்டது. அன்று இரவு கொடுமையான இரவாக இருந்தது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்துக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் காய்ச்சல் தலைவலி தரும் வேதனை மற்றொரு பக்கம் விடிந்தால் என் விதியை நிர்ணயம் செய்யப்போகும் பரீட்சை நான் ஒரு சமயத்தில் என் மருத்துவக் கனவு தகர்ந்தது என்றே நினைத்துவிட்டேன் காலை பரீட்சைக்கு காய்ச்சலோடு தயாரானேன் வாந்தியும் குமட்டலும் சேர்ந்து கொண்டது என் வீட்டருகே அப்போதைய எங்கள் குடும்ப மருத்துவர் மரு. பழனிச்சாமியிடம் என் தந்தை அழைத்துச் சென்றார். அவரது பார்வை நேரம் இல்லையெனினும் எனக்காக காலை 8 மணிக்கு என்னைப் பார்த்தார். இரண்டு ஊசிகளும் சில மாத்திரைகளும் கொடுத்தார் இரவு முழுவதும் உறங்காததால் நான் மிகவும் சோர்வாக இருந்தேன் அவரிடம் நான் சொன்னேன் " அங்கிள், டாக்டாராகனும்னு என் ஆசை. ஆனா இன்னைக்கு என்னால முடியுமானு தெரியல அங்கிள்" என்று அழுதுவிட்டேன் அப்போது அவர் சொன்னார் " டோன்ட் வொர்ரி டாக்டர். கவலப்படாம எழுதிட்டுவாங்க. ஐ பிலீவ் , யூ வில் பிகம் ய டாக்டர். " என்று கூறினார் இன்று நினைத்தாலும் அந்த வார்த்தைகள். என் கண்களை குளமாக்கிவிடும். அவர் வானில் இருந்து வந்த தேவதை போல எனக்குத் தெரிந்தார். எனக்கிருந்த காய்ச்சலை மூன்று மணிநேரம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். பரீட்சையில் புத்துணர்வுடன் களம் கண்டேன். வெற்றி பெற்றேன் . மருத்துவர் ஆனேன். இனிப்புகளுடன் அவரை சந்தித்தேன் நான் நன்றிகளைக் கூறினேன். அவர் மிகவும் மகிழ்ந்தார் என் வாழ்க்கையில் மிகவும் எளிதாக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் அவர் . இப்படித்தான் மருத்துவர்கள் அன்றாடம் தங்கள் பணியில் தங்களை அறியாமலே பலர் வாழ்க்கையில் மாற்றங்களை புரிகின்றனர் அவர் என்னை மறந்திருப்பார் ஆனால் என்னால் அவரை என் வாழ்நாளில் மறக்க இயலாது அவர் அன்று எனக்களித்த பரிந்துரைச்சீட்டை பத்திரமாக வைத்துள்ளேன் நான் மருத்துவராக உதவிய பரிந்துரைச்சீட்டு என் வாழ்க்கையை மாற்றிய பரிந்துரைச்சீட்டு ( நானும் என்னை சந்திக்க வரும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை காக்க வைப்பதில்லை. அவர்களுக்கு உந்துதல் தரும் வார்த்தைகளை கூறாமல் இருப்பதில்லை. இது அவரிடத்தில் கற்றுக்கொண்டது தான்) இறைவனுக்கே புகழனைத்தும் தங்களை அறியாமல் பிறர் வாழ்க்கையில் வண்ணம் தீட்டும் மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துகள் இதே போன்று உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த மருத்துவரைப்பற்றி கமெண்ட் செய்யலாம் Dr Faruk abdulla Fb
 11. வெண்முரசு தவிர ஜெயமோகனின் வேறு நாவல்கள் எதுவும் படிக்கவில்லை எனக்கு ஒரு புத்தகம் படிக்க தொடங்கி 2-3 பக்கங்களில் அதற்குள் என்னை உள்வாங்கி விடனும் அப்பிடி என்றால் மட்டுமே தொடர்ந்து படிக்க தோணும் ,உடையார் 2ம் பாகம் மேல் போக முடியாமல் தத்தளிக்கிறேன் மெலுகாவின் அமர்கள் (சிவா) ( முத்தொகுதி) இப்ப தான் தொடங்கி இருக்கு ..பார்ப்பம் எவ்வளவு போகுது என
 12. .இவர்கள் அவலை/ளை நினைத்து உரலை இடிக்கும் கோஷ்டிகள் .இவர்களைப்போன்று இணையத்தில் உலவுவர்களால் தான் எங்கள்மீது பற்று கொண்டிருந்த தமிழக உறவுகளும் வெறுத்துப்போய் எம்மீது எந்த குற்றசாட்டுகள் வைத்தாலும் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள் இவர்களை கொண்டுபோய் டான் அசோக் ,போன்ற உபிகளிடம் விடவேண்டும் பிடுங்கு படுங்கள் என
 13. மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! 1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்? 2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க? 3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்? 4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்? 5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க? 6) க்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு ப்ரச்னைன்னா ஏன் இருக்க மாட்டீங்குது? 7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க? ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க? 9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது? 10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா? #மீள் பரிசல் கிருஸ்ணா
 14. நம்மில் எத்தனை பேர் எமக்கு பாடம் சொல்லி தந்த ஆசிரியர்களை நினைவில் வைத்திருக்கிறோம்? கொஞ்சம் நீளமான பதிவு தான் ************#######* மிகச்சிறு வயதில் நான் பலமுறை பேச்சுப்போட்டிகளில் வென்றிருக்கிறேன். ( 1ம் 2ம் வகுப்பு அளவில்)" நேரு மாமா வந்தாராம்.." என்னுமளவில் இருக்கும் பேச்சுகள் அவை. மூன்றாம் வகுப்பில் இருக்கும்போது திடீரென எனக்குத் திக்குவாய் ஏற்பட்டது. கொன்னல் என்றால் மிகமிக மோசமான அளவில் இருந்தது அது. பள்ளியிலும், சொந்தக்காரர்களிடம் பேசும்போதும் "அடப்பாவமே" என்னும் பச்சாதாபமே கி ட்டியது. சரியாகப் படித்திருந்தும், இந்தத் திக்குவாய் காரணமாகவே பல முறை பதிலளிக்க முயலாமல் உள்ளே குமுறியிருக்கி றேன். 'என்னமோ படிப்பான். உருப்போட்டு எழுதுவான்' என்னுமளவிலேயே என்னைக்குறித்தான கணிப்பு ஆசிரியர்க ளிடம் இருந்தது. ஒரு கல்வி சார்ந்த, கல்வி சாராத போட்டிகளிலும் நான் பங்கெடுத்துக்கொண்டதில்லை. நானே வி லகியிருந்ததால், சீக்கிரம் விலக்கவும் பட்டேன். இந்த விஷச் சுழற்றலில் தாழ்வு மனப்பான்மை மட்டும் வளர்ந்துகொ ண்டே போனது.இது பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது. தூத்துக்குடி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி. பத்தாம் வகுப்பில் (10 H வகுப்பு)எனக்கு வகுப்பாசிரியராக வந்தார் ஜோசப் ஜெயராஜ் சார். வகுப்பு ஆசிரியர் என்பதோடு இல்லாமல் ஆங்கிலமும் எடுப்பார். 10 B வகுப்பிற்கு அவர் சரித்திரம் எடுத்தார். சிறிது தடித்த சரீரம். உருண்டு உருண்டு அவர் வகுப்பறை தாழ்வாரத்தில் நடந்து வருவதை எளி தில் தெரிந்துகொண்டு, அவர் வகுப்பு ஆரம்பமாகுமுன் அவரவர் இடத்தில் போய் அமர்ந்துவிடுவோம். நான் முன்பெஞ்சு( 'கண்ணாடி போட்ட பையன்களெல்லாம் முன்னால வாங்கல' - என்று அவர்தான் முன்னால் உட்கார வைத்தார். அதுவரை 2வது 3வத் பெஞ்சு ஒரு மூலையில் யார் கண்ணுலயும் படாம உட்கார்ந்திருப்பேன்). Tempest ஒரு பாடமாக உரைநடையில் இருந்தது. ஒருநாள் கதை சொல்லிக்கொண்டே வந்தவர் திடீரென நிறுத்தினார். வகுப்பின் பின்பெஞ்சுகளில் சலசலப்பு காரணமாக இருக்கும். "இங்க்லீசு எல்லாம் படிச்சிட்டீய? பாடம் நடத்த வேண்டாம்.என்னலா? சரி. சரித்திரம் தெரியுதான்னு பாக்கேன்" அவர் சொல்லவும், விவகாரம் முத்துகிறது என அனைவருக்கும் புரிந்தது. " வெள்ளைக்காரன் ஏன் இந்தியாவுக்கு கடல் வழி கண்டுபிடிக்கணும்-னு முனைப்பா நின்னான்?" வகுப்பு மெளனமா னது. பிரம்பைச் சுழற்றிக்கொண்டே பெஞ்சுகளுக்கு இடையில் நடந்தார் " எவனுக்குல தெரியும்? எந்திரி..பாப்பம்" மீண்டும் மயான அமைதி. எனக்கு பதில் தெரியும். மனசு மோதுகிறது..சொல்லிவிடவேண்டும்.. கையைத் தூக்கு...கையைத் தூக்கு... வழக்கமான பயம் என்னை வென்றது. என் முகத்தில் அவர் ஏதோ கண்டிருக்கவேண்டும். நின்றார். " ஏல, கண்ணாடி.. எந்திரு." எழுந்தேன். " நீ சொல்லு" வாய் திறந்தேன். வழக்கம் போல வார்த்தைகள் வரவில்லை . உதடுகள் மட்டும் துடித்துக்கொண்டிருந்தன.. "இ..இ..இ..." இஸ்தான்புல் நகரை ஓட்டாமான் துருக்கியர் கைப்பற்றினர் எனச் சொல்லவேண்டும்- இஸ்தான்புல் இ..இ.இ ய்ல் நின்றது அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். " சார் அவனுக்கு திக்குவாயி. இன்னிக்கு பூரா அப்படியே நிப்பான்" பின்னாலிருந்து எவனோ சொன்னான். ஒரு சிரி ப்பலை மோதியது. கையை மேலே தூக்கி, கண்களைத் துடைத்துக்கொண்டேன். வாய் மட்டும் துடித்துக்கொண்டிருந்தது. அருகே வந்தார். " சாயங்காலம் வீட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னைப் பாத்துட்டுப் போ. வெளங்குதா?' சரியென தலையாட்டினேன். " உக்காரு" என்றவர் வகுப்பு முழுதையும் எழுந்து பெஞ்சு மேல் நிற்கச் சொன்னார். அந னவருக்கும் கையில் இரண்டு அடி - செமத்தியாக.. "வெக்கமாயில்ல? உங்கூடப் படிக்கிற பயலுக்கு திக்குவாயின்னா சிரிக்கேங்களே? நீங்கெல்லாம் ஓவியமோ?அடுத்தவன் கஷ்டத்தப்பாத்து சிரிக்கவால சொல்லிக்கொடுத்திருக்கு ? சோத்தத் திங்கீயளா ** யத் திங்கீயளா?" அவர் போட்ட சத்தத்திலும் அடியிலும் வகுப்பு உறைந்து தலை குனிந்தது. சாயங்காலம் , ஆசிரியர் அறையில் அவரைப் பார்க்கப் போனேன். கிளம்பியிருந்தார். சைக்கிள் ஸ்டாண்டு வரை அவருடன் நடந்தேன். "நீ பேசணும்டா. நிறையப் பேசணும்.. தைரியமா பேசு.பேசப்பேசத்தான் நீ புத்திசாலின்னு தெரிஞ்சுக்குவாங்க?" அவரது வார்த்தைகளில் விம்மினேன். "இல்ல சார். எனக்கு படிப்பு வராது. நான் மக்குளி சார்." " இல்லடே. நீ படிப்பே. ஒரு நாளு நீ மேடைல பேசுவ. பெரிசா பரிசெல்லாம் வாங்குவ பாரு. " அன்போடு தோளில் கை போட்டு அழுத்தினார். "எங்கேந்துடே வார?" "ஹார்பர் குவார்டர்ஸ் சார்" " கடற்கரைக்குப் போ. தனியா நீ பாட்டுக்கு கத்தி கத்திப் பேசு. என்னதான் பேசணும்னு இல்ல. நீ படிச்ச பாடத்தை உரக்கச் சொல்லிப்பாரு. உம்-முன்னால இருக்கிற மணலெல்லாம் ஆளுங்கன்னு நினைச்சுக்க." என் தலையில் வலக்கையை வைத்தார் " என் பிள்ளேள் எவனும் சோடைபோனதில்ல. போவ விடமாட்டேன். கர்த்தர் இருக்காரு. தைரியமா இரு ராசா" கிளம்பினவனை மீண்டும் நிறுத்தினார் " திக்குவாயி நோயில்ல தம்பி. தைரியமாப் போராடு. ஓடியே போயிரும். முதல்ல உன்னை நம்பு" மறுநாள் தனியே கடற்கரைக்குப் போனேன். அலைகள் சோம்பலாக அடித்துக்கொண்டிருந்தன.தெரிந்த கேள்வி பதில்களைச் சொல்லத்தொடங்கினேன். முதலில் வெட்கமாக இருந்தது. 'கோட்டிக்காரங்கணக்கா என்னல தனியா பினாத்திக்கிட்டு கிடக்கே?'ன்னு எவனாச்சும் கேட்டான்னா? யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அருகில் இருந்த இராவணன் மீசை முட்களைப் பார்த்து கொஞ்சம் கத்திப் பேசத் தொடங்கினேன். நானே கேள்வி கேட்டேன். நானே பதிலும் சொன்னேன். சில சமயங்களில் கையைத் தூக்கியும் "சார் சார்" எனக் கூவி சொல்லிப்பார்த்துப் பழகினேன். கொஞ்சம் கொஞ்சமாக வெட்கம் விட்டு , சுவாரசியமாக ஆனது. பேசுமுன் ஒரு முறை மனதுள் " பொறுமை.பொறுமை" எனச் சொல்லிக்கொண்டு நிதானமாகப் பேசத் தொடங்கினேன். இருநாட்களில் அம்மா ஆச்சரியப்பட்டாள். " என்னடா, இன்னிக்கு கொன்னலே இல்லையே?!" அண்ணன் சந்தோஷத்தில் முதுகில் தட்டினார். தனிமையான கடற்கரைப் பேச்சுப் பயிற்சி மறைமுகமாகத் தொடர்ந்தது. கொஞ்சம் கொஞ்சம ஡க என் பேச்சு தெளிவானது. திக்குவாய் நின்றே போனது. இரு வருடங்கள் பின் கல்லூரியில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம் என மேடையேறி பரிசுகளை வென்றேன். ஒவ்வொரு முறையும் ஜோசப் ஜெயராஜ் சாரை மனத்துக்குள் நினைத்துக்கொள்வேன். இன்று வருடங்கள் பல கழிந்து, கோப்பைகளுடன் நான் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கையில் அவர் நினைவு வந்தது. அதுதான் இப்பதிவின் உந்துதல். "இறைவனுக்கு எந்த மொழி தெரியும்?" என யாராவது என்னிடம் கேட்டால், சொல்லுவேன். " அராமிக்கோ, அரபியோ, சமஸ்க்ருதமோ அல்ல. தமிழ்.. தூத்துக்குடித் தமிழ்”// சுதாகர்.க
 15. ஒரு பெரிய டிவி கம்பனியில் ஆன்கர் (Primary anchor) ஆகவேண்டும் என்பது என் ஆசை. ஆனால் எந்த ஜர்னலிசம் டிகிரியும் என்னிடம் இல்லை. பொலிட்டிகல் சயன்ஸ் டிகிரி படித்துவிட்டு ஏபிசி சேனலில் டெலிபோன் அட்டண்டர் ஆக வேலைக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுகூட கிடைக்கவில்லை. அதன்பின் பள்ளிக்கூட மாணவர்களுக்கு செய்திகளை தொகுக்கும் சேனல் ஒன் எனும் தொலைகாட்சியில் செய்திகளின் உண்மை நிலவரத்தை செக் செய்யும் ஃபேக்ட் செக்கர் எனும் வேலையில் சேர்ந்தேன். நான் செய்யும் வேலையை 10 வருடமாக செய்யும் நபர்கள் இருந்தார்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமே பார்க்கும் தொலைகாட்சியில் பணியாற்றினால் மிகப்பெரிய ஒரு சானலில், உலகம் அறிந்த செய்தி ஆங்கர் ஆகவேண்டும் எனும் ஆசை எப்படி நிறைவேறும்? அது மிகப்பெரும் போட்டிகள் நிறைந்த ஒரு உலகம். எனக்கு தொலைபேசி அட்டண்டர் வேலையை கூட அவர்கள் கொடுக்க முன்வரவில்லை. எதாவது ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் இப்படியே இருக்கவேண்டியதுதான் என உணர்ந்தேன். அதன்பின் நானாக எனக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்துகொண்டேன். நாமே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியின் விடியோ தொகுப்பை தயாரித்தால் என்ன என? பர்மா கிளம்பினேன். அங்கே போராடும் தாய்லாந்து தீவிரவாத இயக்கத்தினரை சந்தித்து விடியோ எடுக்க திட்டமிட்டேன். லீவு போட்டுவிட்டு என்னிடம் இருந்த காசை எல்லாம் வைத்து ஒரு விடியோ காமிரா வாங்கிக்கொண்டு பர்மா போனேன். நான் ஒரு செய்திதொலைகாட்சி நிபுனர் என பொய் சொன்னேன். பர்மாவில் கரப்பான்பூச்சிகள் ஊறும் ஓட்டலில் மாதக்கணக்கில் தங்கி தொடர்புகளை உண்டாக்கி கடைசியில் தீவிரவாதிகளை கண்டுபிடித்து போய் பேட்டியும் எடுத்தேன். காமிராமேன், பேட்டி எடுப்பாவ்ர் எல்லாமே நாந்தான். அதன்பின் அமெரிக்கா வந்து நான் வேலை செய்த சானலுக்கு அந்த விடியோவை இலவசமாக கொடுத்தேன். முதல் முதலாக பள்ளீ மாணவர்களுக்கு என்னுடைய அந்த செய்திதொகுப்பு ஒளீபரப்பானது. அதன்பின் "என்னுடைய தங்கும் செலவு, உணவை மட்டுமாவது ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு செய்தி தொகுப்பாளர் வேலை கொடுங்கள்" என சானலிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார்கள். வியட்நாம், ருவாண்டா, ஆப்காகிஸ்தான் என யாருமே போகதயங்கும் நாடுகளுக்கு போனேன். அதிபயங்கரமான தீவிரவாதிகளை சந்தித்து பேட்டி எடுத்தேன். சில வருடம் இப்படி எந்த சம்பளமும், வருமானமும் இன்றி உணவும், தங்குமிடமும் மட்டும் போதும் என வேலை செய்தேன். ருவாண்டாவில் நிகழ்ந்த 10 லட்சம் பேர் படுகொலை நிகழ்வின் போது அங்கே இருந்ததால் எனக்கு பெயர் கிடைத்தது. திரும்பி வந்தேன். சி.என்.எனில் துவக்கநிலை ஆன்கராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தனியாக ஸ்லாட் எதுவும் கிடைக்கவில்லை. மற்ற பெரிய ஆங்கர்கள் பேசுகையில் அருகே நின்று "ஆமாம் சாமி" என தலையாட்டும் வேலை, அவர்கள் லீவு போட்டால் ஸ்லாட்டை நிரப்பும் வேலை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, நள்ளிரவு 2 மணி ஸ்லாட் என யாருமே செய்ய தங்கும் வேலைகளை, நாட்டின் எந்த மூலைக்கும் பறந்து சென்று செய்தேன். ஆபத்தான அசைன்மென்டா, கேவலமான அசைன்மெண்டா, மோசமான டைம் ஸ்லாட்டா, கிரிஸ்துமஸ் தினத்தன்று வேலையா? கூப்பிடுங்கள் ஆண்டர்சனை எனும் அளவு அடிமட்ட அளவில் பணியாற்றியபின் பல ஆண்டுகள் கழித்து முதன்முறையாக காலை நேரத்தில் ஒரு ஸ்லாட்டை எனக்கென ஒதுக்கினார்கள். இந்த ஒரு வாய்ப்புக்குதான் ஆண்டாண்டு காலமாக இத்தனை அவதிப்பட்டேன்? அதை சிக்கென பிடித்துக்கொண்டேன். அதன்பின் இறங்குமுகமே இல்லை. தொடர் ஏற்றம்தான். இன்று நாடறிந்த பிரபலம் நான். ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகளுடன் நட்புறவு, அமெரிக்காவின் முதல் நிலை ஜர்னலிஸ்ட் எனும் அந்தஸ்து..அனைத்தும் இத்தனை இழப்புகளையும் தாங்கி ஆண்டாண்டு காலமாக உழைத்ததால் வந்தவையே. டெலிபோன் காலை அட்டண்ட் செய்யும் வேலையை கூட ஒடுக்க மறுத்த செய்தி நிறுவனங்களில் முதன்மை ஆங்கர் ஆக காரணம் நான் எடுத்த ரிஸ்குகள், அவமானங்களை, சோதனைகளை தாங்கி நின்ற தன்மை, என்றாவது ஜெயிப்போம் என்ற வெறி, அதற்காக உயிரையும் விட தயாராக இருந்த மனபான்மை..இவைதான். இந்த ரிஸ்குகளை நான் எடுக்காமல் இருந்தால் இன்று பள்ளி ஆண்டுவிழாவை கவர் செய்யும் வேலையை தான் செய்துகொன்டிருப்பேன். என்னுடன் ஃபேக்ட் செக்கர் ஆக பணியாற்றிய பலர் இன்னமும் சீனியர் பாக்ட் செக்கர் ஆக அதே கம்பனியில் வேலை செய்கிரார்கள். சிலர் லோக்கல் செய்தி சானலில் செய்தி வாசிக்கிறார்கள். -> ஆண்டர்சன் கூப்பர், சி.என்.என் முதன்மை செய்தி ஆன்கர் நியான்டர் செல்வன்
 16. "பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம். ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன். அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திருக்கேன். வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம். ஒரு நல்ல பிசினஸ் ஐடியா இருக்கு" என்றேன். ஆறரை மணிக்கு ஒருவன் காபியுடன் வந்து அழைத்தால் யார் மறுப்பார்கள்? ஒரு பெரிய டிரேடிங் கம்பனியின் பார்டன்ருடன் பேசியதில் ஐடியா பிடித்துபோய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் தான் தெரிந்தது..அவரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கொன்டு போய் சந்தித்திருந்தால் ஆறு மாதத்துக்கு அபாயிண்மெண்ட் கிடைத்திருக்காது என. முதலில் அவரது செக்ரட்டரியின் அபாயிண்மெண்டே எனக்கு கிடைத்திருக்காது. ஆறரை மணிக்கு காபியுடன் போனதால் அவரை வளைத்து பிடித்தேன். முதலில் அவர் "எனக்கு காபி பிடிக்காது, டீ தான் பிடிக்கும்" என்றார். "இந்த பிளாஸ்கில் டீ இருக்கு" என்றேன். "பால் சேர்த்த டீ தான் வேண்டும்" என்றார். க்ரீமரை பாக்கட்டில் இருந்து எடுத்து காட்டினேன்.."தயாராக தான் வந்திருக்கிறாய்" என சிரித்தபடி என்னுடன் உட்கார்ந்து பேசினார். பணம் கிடைத்தது.கம்பனி துவக்கினேன்..$20 பில்லியன் சம்பாதித்தேன்..இன்று நான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவன். காரணம் அதிகாலையில் காபி பிளாஸ்குடன் கம்பனி, கம்பனியாக ஏறி முன், பின் தெரியாதவர்களுடன் பேச நான் கூச்சபடாமல் இருந்ததுதான்" -> தொழிலதிபர் ப்ளூம்பெர்க் நியான்டர்செல்வன்
 17. அன்புள்ள அப்பா: இதே வாடிக்கையாய்ப் போய்விட்டது... ஒவ்வொரு தந்தையர் தினத்தன்றும் நான் எதோ புலம்பி happy Father's day in heaven என்று அழுகையாய் முடிக்க அதற்கு நாலு பேர் த்சொ த்சொ என்றபடி சமாதானப்படுத்த.... இம்முறை எதுவும் எழுதக் கூடாதென்று தான் நினைத்தேன் ...ஆனால் நாள் நெருங்க நெருங்க கத்திபாரா்சந்திப்பில்்சாலையைத் தனியே கடக்கும் குழந்தையைப் போல் ஒரு பதட்டம் இதோ எழுதியே விட்டேன் .... என்னென்னவோ மாற்றங்கள் உப்பும் தண்ணீரும் சேரச் சேர துக்கம் மறந்துதான் போகிறது நானும் மாறுகிறேன் .. சுஜாதா பாலகுமாரனை மறந்து ஜெயமோகன் எழுத்தை அடிக்கோடிட்டு வாசிக்கின்றேன். எழுத்தால் நெஞ்சில் சூடு இழுக்கிறார் . நானும் வியப்பால் அப்படியே நிற்கிறேன் நீ என் கோபத்துக்குப் பயந்த காலம் போய் நான் என் பிள்ளைகள் கோபத்துக்குப் பயப்படுகிறேன் வர வர தூக்கக் கலக்கத்தில் நானும் மோடிக்கு மாறி விடுவேனோ என்று சற்று பயமாய் இருக்கிறது... எது மாறினாலும் உன் வயதையொத்த முதுவாலிபர்களைக் கடந்து போகையில்்அவர்களைப் போல் நீயும் மைசூர் போண்டா சாப்பிட்டு , வாட்சப் செய்திகளை ஃபார்வர்ட் செய்தபடி இந்த பூமியில் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்திருக்கலாம் என்று அன்றாடம் நினைப்பது மாறவில்லை அம்மா கொச்சம் கூட மாறவில்லை..நீ்இறந்த போது நடந்து கொண்டிருந்த விஜய் டிவி சீரியல்களை விடாது மும்முரமாய்த்்தொடந்து பார்க்கறாள்... நீயென்னவோ எங்களிடம இருந்து தப்பித்து சொர்க்கத்தில் பரம சௌக்யமாய் இருப்பதாகத் தோன்றுகிறது... " பிழைத்துப் போ அனுபவி" என்று சொல்கையில் தான் விபரீத முறண் உறைக்கிறது ம் எப்படிப் பிழைத்துப் போவாய் ?....... பிழைக்காத்தால் தானே சொர்க்கத்துக்கே போனாய் Happy Fathers day in Heaven கீதா சந்ரா