• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  38
 • Joined

 • Last visited

 • Days Won

  1

தமிழ்பிரியன் last won the day on September 28 2010

தமிழ்பிரியன் had the most liked content!

Community Reputation

0 Neutral

About தமிழ்பிரியன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday September 14

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 1. கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி வழிந்தது உயிரின் துளிகள் இருள் கவிந்த இரவுப் பொழுது இன்னும் அதிகமாய் இம்சை செய்தது மொட்டவிழ்ந்த மல்லிகை வாசமாய் மோகம் வந்து ஏக்கம் வளர்த்தது மெல்லப் புரண்டு விழி மூடுகையில் சின்னதாய் ஆசை சிறகு விரித்தது மறுநாள் கனவிலும் அவள் வரவேண்டும்
 2. ந‌ம்பிக்கையுட‌ன் ந‌ட‌ப்போம் ந‌ம் விடுத‌லைக்காய். உங்க‌ள் எதிர்பார்ப்புக‌ள் நிறைவேறும் கால‌ம் ஒருநாள் வ‌ரும் வாத்தியார்..
 3. பேச‌ முடிய‌வில்லை.. ஏக்க‌ங்க‌ளின் தாக்க‌ங்க‌ள்..
 4. இது 'வெற்றி நிச்ச‌ய‌ம்' ப‌டை ந‌ட‌வ‌டிக்கையில் (ஒப்ப‌ரேச‌ன் ஜெய‌சிக்குறு) நாங்க‌ள் இட‌ம்பெய‌ர்ந்த‌ அனுப‌வ‌ம், அதை தான் க‌டைசி வ‌ரிக‌ளில் குறிப்பிட்டிருக்கிறேன்.. அது ச‌ரி, நாம‌ வீர‌த்த‌மிழ‌ராச்சே..
 5. படிப்பு வேண்டாமென்று மூட்டை கட்டிவிட்டு பழக்க தோசத்தில் றோட்டில் நின்ற‌போது நண்பர்கள் சேர்ந்து நல்லதொரு முடிவெடுத்து படிக்க சென்றோம் தனியார் கல்விநிலையம் குறளி வித்தைகாட்டி கூஅடித்து கூட்டமாய் வாங்குமேசை தட்டி வகுப்பை குழப்பி பாடம் படிக்காமல் பின்வாங்கில் படுத்துறங்கி நாங்கள் செய்த சேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல நாளும்பொழுதும் நாசமாய் போக வாத்தி சொன்ன பாடம் வராமல் ஓடிவிட பரீட்சை வருகுதென்று செவியில் விழுந்த செய்தி பதறித் துடித்துப் படிக்க வைத்தது விட்டுவிட்ட பாடத்தை எட்டிப் பிடிக்கவென்று படிக்க தொடங்கி பாடத்தை கவனிக்க புரிய தொடங்கியது பாடம் மட்டுமல்ல படிக்காமல் விட்டுவிட்ட பகுதி பெரிதென்று நண்பர்கள் சேர்ந்து நல்லா படிக்கவென்று திட்டங்கள் போட்டு தொடங்கினோம் யுத்தம் பிரத்தியேக வகுப்பு பிரமாதமாய் போக நாட்டுவோம் வெற்றிக்கொடி நாங்கள் நம்பியிருக்க புறப்பட்டது பூகம்பம் கலைந்தது கனவுகள் வெற்றி நிச்சயம் கனவுகண்டோம் நாங்கள் அதுவே பறித்தது அகதியானோம் நாம் படிப்பை தொலைத்துவிட்டு மீண்டும் றோட்டில்
 6. அதெல்லாம் ச‌ரி, கேபாப் எப்பிடி எண்டு சொல்ல‌லையே.. அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்ச‌னை என்று தெரியாம‌ல் க‌ருத்து சொல்வ‌து பொருத்த‌மில்லை. இருந்தாலும், ஒரு ம‌னித‌ன் சுக‌போக‌ வாழ்க்கை த‌விர்ந்த‌ உண‌வு போன்ற‌ அடிப்ப‌டை தேவைக்கு உழைக்க‌ முடியாம‌ல் இருப்ப‌தை ஏற்றுக்கொள்ள‌ முடியாது..
 7. நன்றி ஐயா.. அது வாஸ்தவம்தான்.. காத்திருக்கத்தான் வேண்டும்..
 8. என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ தெரியவில்லை எனக்கு உன்னைப் பிரிவதென்றால் உயிர்விட்டுப் போவதுபோல் வலியொன்று உணர்கின்றேன் என் செய்வேன் நான் ஏனிந்த நிலையெனக்கு என் வீட்டு முற்றத்தில் தினந்தோறும் எழுந்து வந்து ஆனந்தமாய் அனுபவிக்கும் இளங்காலை இனிமை மஞ்சள் இளவெயிலின் தகதகக்கும் மோகனத்தில் உணர்வழிந்து உறைந்துவிடும் மாலை மயக்கங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் அழகான காலையிலே அவசரமாய் உணவு தேடி பரபரப்பாய் பறந்து வந்து பாட்டிசைக்கும் புள்ளினங்கள் பச்சை இலைகளிலே பதுங்கி ஒழிந்திருந்து கதிரவன் வெளிப்படவே ஒளிவீசும் பனித்துளிகள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் கொத்து கொத்தாய் காய்காய்க்கும் முற்றத்து மாமரங்கள் பழுத்து மணம் வீசும் பக்கத்து பலா மரங்கள் மனதுக்கு மகிழ்வு தரும் தோட்டத்து பூஞ்செடிகள் வேலியோரமானாலும் நட்டுவைத்த பனைமரங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் காற்றுக்கு கதை சொல்லும் உயர்ந்த தென்னை மரம் உச்சி வெயில் என்றாலும் குளிர்ச்சி தரும் வேப்ப மரம் ஒல்லிக்குச்சி கிளையின் மீதே ஊஞ்சலாட புளிய மரம் எக் காலம் என்றாலும் வற்றாத வாழை மரம் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் மாளிகை இல்லைதான் ஆனாலும் மனசுக்குள் ஆர்ப்பரிக்க வைக்கின்ற அன்பால் நிறைந்த வீடு நிலத்தில் பாய் விரித்து நீண்டதொரு கதை சொல்லி நிம்மதியாய் உறங்குகின்ற நிஜமான வாழ்க்கை என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் அடுத்த வீட்டில் போய் ஆசையாய் கதைத்து வர மூடிவைத்த வேலியிலே விரித்து வைத்த சிறுபொட்டு அள்ள அள்ள ஊற்றெடுக்கும் அகலமான கிணற்றுக்குள்ளே பளிங்கு போல் ஜொலித்திடும் சுவையான தண்ணீர் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் கச்சிதமாய் வரப்பு வெட்டி மொத்தமாய் விரித்துவிட்ட பச்சை வண்ண கம்பளங்கள் பச்சைபசும் வயல் வெளிகள் செடி நட்டு நீரூற்றி வெருளி கட்டி காவல் வைத்து பக்குவமாய் பராமரித்த காய்கறி தோட்டங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் பாதையோரம் படர்ந்து பல வகை பூ பூத்து விழி விரிய வைக்கும் அழகான பூங்கொடிகள் ஆளில்லா வளவுக்குள் அதிசயமாய் வளர்ந்து எச்சில் ஊற வைக்கும் இனிய கனி மரங்கள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் வரப்பு மேல் வழுக்காமல் வரிசையாய் வந்தமர்ந்து வெட்டிக்கதை பல பேசி பறக்கவிட்ட பட்டங்கள் நூலறுந்து போனதென்று வயலுக்குள் விழுந்தோடி வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்பி வந்த பொழுதுகள் என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் விளையாட்டாய் நினைத்து வித்தைகள் பல காட்டி சுறுசுறுப்பாய் பாய்ந்து வரும் சுட்டி நாய்க்குட்டி காலைச்சுற்றி வந்து தலை தூக்கி முகம் பார்த்து கொஞ்சி விளையாடும் கொள்ளை கொள்ளும் பூனைக்குட்டி என்று வரும் தெரியவில்லை என் வாழ்வில் மீண்டும் வளமான வாழ்க்கையை தொலைத்து விட்டோம் நாங்கள் பரதேசி போலவே அலைகின்றோம் தேசமெல்லாம் என் இனிய தேசமே என்று உன்னை காண்பேனோ தெரியவில்லை எனக்கு ஆனாலும் ஒருநாள் நிச்சயமாய் வருவேன் அன்று தான் என் வாழ்வில் மீண்டும் வரும் வசந்தம்.
 9. நன்றி நெடுக்ஸ் அண்ணா.. யதார்த்தத்தை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.. நன்றாக அனுபவப்பட்டிருக்கிறீர்கள் போல.. நன்றி அக்கா.. நிச்சயமாக. நன்றி வாத்தியார்.. தினம் தினம் எங்காவது நடந்துகொண்டுதான் இருக்கும்... நன்றி சஜீவன்..