Jump to content

ooravan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    112
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male
  • Location
    AUSTRALIA

Recent Profile Visitors

1843 profile views

ooravan's Achievements

Contributor

Contributor (5/14)

  • Dedicated Rare
  • First Post
  • Collaborator
  • Conversation Starter
  • Week One Done

Recent Badges

22

Reputation

  1. நான் மக்கள் வங்கியில் பணியாற்றி இருக்கிறேன் ஆனாலும் அதிலிருந்து விலகி இருபது வருடங்களாகிறது. நானும் சில வங்கிக் கணக்குகளை இலங்கையிலே பேணி வருகிறேன். அந்த அடிப்படையில் சில தகவல்களை உங்களுக்கும் பரிமாறலாம் என்று நினைக்கிறேன். இலங்கையில் வதிவுரிமை இல்லாத வெளிநாட்டு குடியுரிமை உள்ளவர்கள், சாதாரண வங்கி கணக்குகளை ஆரம்பிக்க முடியாது. அவர்களுக்கென்று வதியாதோர் வெளிநாட்டு கணக்கு என்பது கடந்த நீண்ட காலமாகவே இலங்கையில் இருந்து வருகிறது. அந்த வதியாதோர் நாணய கணக்கு விரும்பினால் வெளிநாட்டு நாணயத்தில் இல்லாத இலங்கை ரூபாய் ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. அதே வேலை அண்மையிலே வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக வெளிநாட்டு நாணயத்திலேயே ஆரம்பிக்கக் கூடிய கணக்கு அது தான் நீங்கள் மேலே குறிப்பிட்டவை. குறிப்பாக இலங்கையில் பிறந்தவர்களுக்கு ஒரு அடையாள அட்டை இருக்கும். அந்த அடையாள அட்டையை கொண்டு நீங்கள் எந்த வங்கிக்கு சென்றாலும் ஒரு கணக்கு திறக்கலாம். ஆனால் நீங்கள் எனக்கு வெளிநாட்டு குடியுரிமை இருக்கு என்பது அந்த வங்கிக்கு தெரியப்படுத்தக் கூடாது. இலங்கையில் உள்ள தகவல் மையப்படுத்தல் அடிப்படையில் ஒருவர் வெளிநாட்டிலே குடியுரிமை பெற்றுவிட்டார் என்பது இலங்கைக்கு அல்லது இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு தெரியாது என்பது முக்கியமானது. ஆகவே நீங்கள் ஒரு அடையாள அட்டை எடுத்துச் சென்றீர்களான இருந்தால் எந்த வங்கியிலும் கணக்கு ஆரம்பிக்கலாம் அவர்கள் உங்களை உள்நாட்டுக்காரர் என்று நினைத்துக் கொண்டே கணக்கு திறப்பார்கள். உங்கள் கணக்குகளை உங்கள் மொபைல் போனிலேயே செயல்படுத்தக் கூடியதாக அவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் நீங்கள் இங்கிருந்து பணம் அனுப்பலாம். இங்கிருந்து பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆகவே இது சம்பந்தமாக எனக்கு உள்ள அறிவை பகிர்ந்து கொண்டேன். நான் இவ்வாறு குறிப்பிடத்தக்களவு தொகைகளை சில வங்கிகளில் வைத்து நான் தேவைப்படும் பொழுது மாற்றீடுகள் செய்து கொண்டிருக்கின்றேன். முதலீடு சம்பந்தமாக பேசுவதென்றால் அதைப் பற்றி ஒரு தனி கட்டுரை என்றால் எழுத முடியும் அதை நான் இந்த இடத்தில் விவாதிக்க முன் வரவில்லை நன்றி. மற்றியது ஆன்லைனில் கணக்கு ஆரம்பிக்க முடியாது ஆனால் வங்கிக்கு குறிப்பிட்ட துணைக் களத்திற்கு எங்கள் தொலைபேசி அழைப்பு எடுத்தோம் அல்லது இமெயில் மூலம் தொடர்பு கொண்டோம் அவர்கள் உங்களுக்கு முக்கியமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் அதற்குரிய விண்ணப்பங்களையும் உங்களுக்கு அனுப்பி வைத்து அவ்வாறான வெளிநாட்டு கணக்குகளை ஆரம்பிப்பது நடைபெற்று உள்ளது. அவ்வாறு நான் இலங்கை வங்கியிலே ஒரு கணக்கை ஆரம்பித்திருந்தேன் அது டாலரில் ஆரம்பிக்க கூடிய கணக்கு மாதாந்தம் ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் உழைப்பவர்கள் மட்டுமே அந்த வபட்டிக்கான வரி செலுத்தல் வேண்டும் என்பது அரசாங்கத்தினுடைய வரி கொள்கையாகும்
  2. ஒரு (தனியார்) பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பட்டு அதனை அறிமுகப் படுத்தலுக்கு பாடுபவர்கள் , ஆடுபவர்கள் , சினிமாக்கார ர்கள் , சர்ச்சைக்குரியவர்கள் ( சர்ச்சைக்குரிய நடிகை குஷ்புவை கொண்டுவர முயற்சித்து அதனை எதிர்ப்பாக்கி , அதுவே பெரிய விளம்பரமாகி) அரசியல்வாதிகள் , ஆட்சிமட்டத் தொடர்பு மற்றும் விருந்தினர் களியாட்ட மாளிகையை அந்த கல்வி நிறுவனத்திற்காக பெற்றுக் கொள்ளுதல் போன்ற , ஒரு பொருளையோ அல்லது வியாபாரத்தையோ அறிமுகப் படுத்துவது போன்ற யுக்திகள் அரங்கேற்றப் படுகின்றன. எனக்கென்னமோ இது ஒரு உயர்கல்வி நிறுவனத்தை/ பல்கலைக்கழகத்தை அறிமுகப் படுத்தலுக்காக பொருத்தமான வழிமுறைகளாக தெரியவில்லை. அப்படியென்றால் எது சரியான அணுகுமுறை என்று நீங்கள் கேட்க கூடும். கல்விமான்களை கொண்டுவருதல், உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடனான உறவை வளர்த்தல் , உலகத்தின் முதல் தர பல்கலைக் கழகங்களுடனான கூட்டு , குறித்த பல்கலைக் கழகத்தில் கற்றால் அதன் தரம் , வேலை வாயப்பிற்கான சந்தர்ப்பம் , உலக அளவிலான அங்கீகாரம் / உலக நாடுகளுக்கு குடிபெயரந்து செல்லக் கூடிய தகமை போன்றவற்றை மையப் படுத்தியதாக அது இருத்தல் பொருத்தமானது என்று நம்புகிறே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.