
nirmalan
கருத்துக்கள பார்வையாளர்கள்-
Posts
539 -
Joined
-
Last visited
-
Days Won
4
nirmalan last won the day on January 29 2011
nirmalan had the most liked content!
Profile Information
-
Location
Canada
-
Interests
Web Browsing
Recent Profile Visitors
1765 profile views
nirmalan's Achievements
-
ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - சேரமானின் ஆவி
nirmalan replied to கிருபன்'s topic in எங்கள் மண்
இவ்வளவு நாளும் அவன்-இவன் கூறித்தான் எழுதினேன் என்கின்றார். அப்படியானால் இவ்வளவு படிப்பு படித்தும் சொந்தப் புத்தி இல்லாமல்தானே இருந்து இருக்கின்றார். முன்னர் எழுதியபோது எல்லாம் பிறர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி எழுதியுள்ளார். அப்படியானால் இவரால் அவதூறாக குற்றம் சாட்டப்பட்ட பல குடும்பங்களின் மன உளைச்சல்களுக்கு இவர் எத்தகைய பதிலை வழங்குவார்? 'புதினம்' இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார். அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தினை நாம் நகர்த்த வேண்டும் என்று வழுதி எழுதிய போது- அந்த இணையத்தளம் மீதும் அதனை எழுதியவர் மீதும் இல்லாத - பொல்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்களே அதற்கு என்ன பதிலை வழங்க போகின்றார்? சிங்கள அரசினாலோ அல்லது இந்திய அரசினாலோ அச்சறுத்தலுக்குள்ளாகாத அந்த இணையத்தளத்தினை மூட வைத்த பெருமைக்குரியவர்களாக புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளுக்காக பணி புரிந்தவர்கள் என்பதுதான் இங்கே சோகமான விடயம். காலம் ஒருநாள் யாவற்றுக்கும் பதில் கூறும் என்பார்கள். அதில் ஒன்று சேரமான் என்கின்ற பாம்பு புற்றுக்குள்ளில் இருந்து வெளிவந்து விட்டது. மிக விரைவில் யாவும் வெளிவந்தே தீரும். காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. கவலை என்னவெனில், இவர்களின் பணத்தாசைக்கு பாவம் அப்பாவி முன்னாள் போராளிகள்தான் இன்று நடுத்தெருவில் வாழ்ந்து வருகின்றனர். இனியாவது அனைவரும் விடுதலைப் புலிகளுக்காக புலத்தில் பணியாற்றுவதாக கூறுபவர்களின் கதைகளை நம்பாது தெளிவோடு செயற்பட்டால் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் மண்ணையும் மக்களையும் காப்பாற்றலாம். -
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள்? நீண்ட காலத்திற்கு பின்னர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பேசியிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் ஊடகவிலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எந்தவொரு சொத்தும் என்னிடமில்லை. அவர்கள் (விடுதலைப் புலிகள் அமைப்பு) எவ்வாறான சொத்துக்களை விட்டுச் சென்றனர் என்று எனக்கு தெரியாதென்றும் அவர் பதிலளித்திருக்கின்றார். 12 வருடங்களுக்கு முன்னர், 2009 ஓகஸ்ட் மாதம், கே.பி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வைத்து, கைதுசெய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது, பல சர்வதேச ஆங்கில ஊடகங்களில், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்றே செய்திகள் வெளியாகிருந்தன. ஒரு வேளை, கே.பி வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்திருந்தால், அவர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் புதிய தலைவராகத்தான் இருந்திருப்பார். இன்றிருக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்திருக்கும். ஏனெனில் கே.பிக்கு உத்தரவிடக் கூடியளவிற்கு வேறு எந்தவொரு தகுதியான மூத்த உறுப்பினரும் உயிரோடு இல்லை. கே.பியால் பிள்ளையார் சுழியிடப்பட்ட நாடு கடந்த அரசாங்கம்தான், இப்போது விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் இயங்கிவருகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரன் உயிரோடு இருக்கின்ற போதே, அவரது கையெழுத்துடன் சர்வதேச விவகாரங்களை கையாளுவதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரேயொரு நபரென்றால் அது கே.பி மட்டும்தான். இந்த பின்புலத்தில் நோக்கினாலும், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருப்பதற்கான முழுத் தகுதியும் கே.பிக்கு மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் இன்று கே.பி இலங்கை அரசின் கைதி. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுமாயின், கே.பியையும் விசாரிக்க முடியும். அப்படியொரு விசாரணை இடம்பெற்றால். கே.பி கைது செய்யப்பட்ட போது, அவரிடம் பெருந்தொகையான பணம் இருப்பதாக ஒரு கதை உலவியது. ஆனால் நாட்கள் வாரங்களாக, மாதங்களாக கழிந்துசென்ற போது, அவரது கட்டுப்பாட்டின் கீழ் எதுவுமில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஒரு வேளை கே.பியின் கட்டுப்பாட்டில் பெரும்தொகை பணம் இருந்திருந்தால், புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் கே.பியை விமர்சிக்கவோ, தள்ளிவைக்கவே துணிந்திருக்காது. கே.பியுடன் இணைந்து பணியாற்றிய பலர் அரசியலிருந்தே ஒதுங்கி, தற்போது முகவரியை தொலைத்தவர்களாகவே வெளிநாடுளில் வாழ்ந்துவருகின்றனர். ஒரு காலத்தில், கே.பியுடன் நாங்கள் தொடர்பிலிருந்தோம், என்று சொல்லுவiயே, இப்போது பலரும் விரும்புவதில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் பெரும் தொகை நிதி சிலரிடம் முடங்கியிருக்கும் என்பதில் அதிச்சியடைய ஒன்றுமில்லை. அவ்வாறானவர்கள் எவருமே அந்த நிதியை தாயக மக்களின் நல்வாழ்விற்காக வழங்கப் போவதுமில்லை. அப்படியான தமிழ் தேசிய பொறுப்புணர்வுடன், அவர்கள் செயற்பட்டதற்கான எந்தவொரு சான்றையும் இதுவரை காணமுடியவில்லை. மனிதநேயமுள்ள பல புலம்பெயர் உறவுகள், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். இப்போதும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் இப்படியான சிறிய உதவிகளை கொண்டு தாயக மக்களை பொருளாதார ரீதியாக தூக்கிவிட முடியாது. வடக்கு கிழக்கின் பொருளாதாரத்துக்கு வலுவான அடித்தளத்தை போட முடியாது. மாகாண சபை நிர்வாகத்தோடு புலம்பெயர் சமூகம் கைகோர்த்து செயற்பட்டால், பொருளாதார ரீதியில் நல்ல விடயங்களை செய்ய முடியும். ஆனால், கடந்த 12 வருடங்களில், புலம்பெயர் அமைப்புக்கள் அல்லது தனிநபர்கள், வடக்கு கிழக்கில் பெருந்தொகை நிதியில் தொழிற்முயற்சிகளை மேற்கொண்டதாக, எந்தவொரு தகவலுமில்லை. பெருந்தொகை என்பது நூறு, இரு நூறு கோடிகளை முதலீடாகக் கொண்ட திட்டங்கள். விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது அடிப்படையில் தாயக மக்களின் சொத்துக்கள். அவற்றை கோருவதற்கான முழு உரிமையும் தாயகத்திலுள்ள ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் உண்டு. யாழில் இருந்து வெளிவரும் 'ஈழநாடு' நாளேட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (12.10.2021) வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்.
-
Ebay எனப்படும் ஆன்லைன் விற்பனை இணையதளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகளில் பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் விற்பனை செய்யப்படுவது தமிழர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம், உலக அளவிலான ஆயுதக் குழுக்களில் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் கடைபிடித்த ஒன்று என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் பதிவு செய்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். அமெரிக்கா மீதான இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் உலக நாடுகளின் அடிப்படை கோட்பாடுகள் அடியோடு மாறிப் போயின. தேசிய இனத்துக்கான விடுதலைப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் கூட பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதனால் உலக நாடுகள்பலவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தன. அங்கிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவும் தொடங்கிவிட்டது.புலிகள் சீருடை விடுதலைப் புலிகள் இயக்கம் முப்படைகளையும் கொண்டிருந்தது. ஒவ்வொரு படையணிக்கும் தனித்தனி சீருடைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அமைதிப் பேச்சுவார்த்தை காலம் தவிர பொதுவாக தலைவர் பிரபாகரன் முதல் சாதாரண இயக்க உறுப்பினர் வரை புலிகளின் சீருடைகளில்தான் வலம் வருவர். புலிகளின் சீருடையை புனிதப் பொருளாகவே அவர்கள் கருதினர்.பெண்களின் நீச்சல் உடைகள் அத்தகைய விடுதலைப் புலிகளின் முப்படைகளின் சீருடைகளில் தற்போது பெண்களுக்கான நீச்சல் உள்ளாடைகள் வடிவமைக்கப்பட்டு Ebay எனப்படும் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவது தமிழர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. அதுவும் Sri Lankan LTTE Sea Tigers Cactus Camouflage One-Piece Swimsuit என்ற பெயரிலேயே இந்த விற்பனையும் நடைபெற்று வருகிறது.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ebay-sales-ltte-camouflage-swimsuit/articlecontent-pf600124-434513.html
-
"ஈழத்து இசைவாரிதி" வர்ணராமேஸ்வரன் அண்ணாவின் பேரிழப்போடு இன்றைய காலை விடிந்திருக்கிறது. இதே நாளில் எம் ஈகைச் சுடர் தியாகி திலீபன் அண்ணாவின் நினைவிரங்கலைச் செய்யும் போது இப்படியொரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. ஈழத்தில் அவரின் தாயக எழுச்சிப் பாடல்களைக் கேட்ட காலம் தொட்டு அவரின் ரசிகனாகத் தொடர்ந்த பந்தம் கடல் கடந்த பின்னும் வாட்சாப் வழி தன் புதுப் புது இசைப் படைப்புகளைப் பகிர்வது வரை தொடர்ந்து இப்படிச் சடுதியாக ஓயுமென்று நினைப்பேனா? வர்ணராமேஸ்வரன் அண்ணாவுடன் 2008 இல் நிகழ்த்திய வானொலிப் பேட்டியில் எழுத்து வடிவம் http://www.madathuvaasal.com/2008/03/blog-post.html பேட்டியின் ஒலி வடிவம் பாகம் 1 https://www.youtube.com/watch?v=fVqie_3GaO8 பாகம் 2 https://www.youtube.com/watch?v=vih_dqTKS_c மாவீரர் துயிலுமில்லப் பாடல், எழுச்சிப் பாடல்கள் மற்றும் ஈழத்துப் பக்தி இசை இலக்கியங்களின் வழி அவர் எம்மில் வாழ்வார். கானா பிரபா 26.09.2021
-
ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவியின் சகோதரியான ஹேமா சமரவீரவின் மகனே மங்கள சமரவீர ஆவார்.
-
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் இன்று மார்ச் 18இல் காலமானார். மேலதிக விபரங்களுக்கு: https://www.ilakku.org/?p=44947&
-
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான தனி கட்சி ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்று இலங்கை சிவசேனை இயக்கத்தின் தலைவர் மறவன்புலவு (காந்தளகம்) சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.Read more at: https://tamil.oneindia.com/news/chennai/sevanai-president-maravanpulavu-sachithananthan-announces-to-launch-bjp-in-srilanka-412299.html
-
நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு
nirmalan replied to செண்பகம்'s topic in ஊர்ப் புதினம்
எங்களுக்கு ஏன் போட்டுக் கொடுக்கின்ற வேலை. தற்போதுதானே போராட்டமும் இல்லை. வேறு சோழியும் இல்லை. இதில் எதனை காட்டிக் கொடுத்து எவனுக்கும் எதுவும் ஆகப் போவது இல்லை. வெளிநாட்டில் கனவு உலகத்தில் சஞ்சரிப்பவர்கள்தான் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அதற்கு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகராமல் நாட்டில் உள்ளவர்களையும் குழப்பிக் கொண்டு வருகின்றனர். நீங்கள் கேட்ட கேள்விக்கு வருகின்றேன். கோத்தபாய வழமையான அரசியல்வாதிகள் போன்று செய்யாமல் மகிந்த, நாமல் போன்றவர்களின் பரிந்துரை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடம் கொடுப்பவராக தெரியவில்லை. அரச திணைக்களங்களில் இலஞ்சம் தலைவிரித்து ஆடாமல் இருப்பதற்காக கடந்த காலங்களில் அமைச்சர்களினது பரிந்துரைக்கு இணங்க நியமிக்கப்படும் அரச செயலாளர்களாக இருந்தாலும் சரி, அரச திணைக்களங்களின் தலைவராக இருந்தாலும் சரி யாவற்றையும் தனது நேரடி கண்காணிப்பில் செய்து வருகின்றார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு அங்கஜன் இராமநாதன் சிறிது நாள் ஆடிய ஆட்டத்தினை கோத்தபாய எப்படி அடக்கினார் என்பதே இதற்கு சிறந்த உதாரணம். இதுவே மகிந்த அரச தலைவராக இருந்து இருந்தால் அங்கஜனின் ஆட்டத்தினை கண்டு கொள்ளளாமல் விட்டு விடுவதோடு, டக்ளசுக்கும் அங்கஜனுக்கும் இடையே மோதல் போக்கினை தொடர அனுமதித்தும் இருப்பார். இங்கே நான் கோத்தபாய புராணம் படிப்பதாக யாரும் தவறாக கருத வேண்டாம். தற்போதைய அரசியல் நிலவரத்தினையும் ஊடக நண்பர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே கூறுகின்றேன். கோத்தபாயவும் ஒரு சராசரி அரசியல்வாதியாக மாறுவாரா என்பதனை காலம்தான் பதில் கூற வேண்டும். அதுவரைக்கும் நடப்பதனை கண்டு கொள்ள வேண்டியதுதான். கோத்தபாய மிகவும் மோசமான இனத் துவேசம் பிடித்தவர். அதனை யாராலும் மறுக்க முடியாது. கோத்தபாயவின் காலத்தில் தமிழர்கள் பெரும் இன்னல்களை எதிர்காலத்தில் சந்திக்க போகின்றனர் என்பது மட்டும் உண்மை. இதனை எதிர் கொள்வதற்கான யதார்த்த அரசியலை புலம்பெயர் சமூகத்தினராகிய நாம் வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர முட்டாள்த்தனமான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வீர வசனங்கள் பேசுவதாலும் எந்தவித பயனும் ஏற்படாது. கோத்தபாய மிகவும் நன்கு திட்டமிட்ட ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் சிறந்தவர்களை தெரிவு செய்து காய் நகர்த்துகின்றார். எம்மால் இன்று வரை இந்தியாவுடனான நட்புறவை புதுப்பிக்க முடியாதவர்களாகவே இருக்கின்றோம். ராஜீவ் படுகொலைக்குப் பின்னரும் சரி, 2009 மே 19 க்குப் பின்னரும் சரி தமிழர் தரப்பு இந்தியாவுடனான நட்புறவு அவசியம் என்று கருதி மிகவும் அக்கறையாக தொடர்பு கொள்ளாமல் ஏனோ தானோ என்கின்ற ரீதியிலேயே நடந்து வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் மிகவும் கவலையுடன் எனது ஊடகத்துறை நண்பருக்கு தெரிவித்து இருந்தார். இதுதான் உண்மையும் கூட. -
நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு
nirmalan replied to செண்பகம்'s topic in ஊர்ப் புதினம்
அப்படி நீங்கள் நினைத்தால் தவறு. அரசியல் தலைவர்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகளோடு நாட்டின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுப்பவராக கோத்தபாய உள்ளார் என்று கொழும்பில் ஊடக நண்பர்களே தெரிவித்து வருகின்றனர்.