Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கற்பகதரு

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,303
 • Joined

 • Last visited

 • Days Won

  4

கற்பகதரு last won the day on May 11

கற்பகதரு had the most liked content!

Community Reputation

485 ஒளி

About கற்பகதரு

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

3,146 profile views
 1. அது எப்போதோ ஆரம்பமாகி 20 ஆவது சட்டத்திருத்தத்தில் சூடுபிடித்திருக்கிறது. கோத்தாவின் வியத்மகா கோத்தாவுக்கு அசுரபலத்தை கொடுக்க கொண்டுவந்த இந்த சட்டதிருத்தத்தை எதிர்க்க சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கத்தொலிக்க கார்டினல் வரை இவ்வளவு துணிச்சல் பெற்றதற்கு பின்னணியில் இந்த சட்டதிருத்தத்தால் பலமிளக்க இருக்கும் மகிந்த ராஜபக்ச இருப்பது யாழ் களத்துக்கு புரியவில்லையே?
 2. ஜேர்மனியில இல்லாத பிரச்சினையா? பிரச்சினை இல்லாத இடமில்லை. பிரச்சினை எண்டு சாட்டு சொல்லி அங்கை இருக்கிற சனம் தங்கட உரிமைகளை பேரம் பேசி விற்றுப்போட்டு ஓடிவரவில்லை. இப்பிடியான அப்பாவியா நீங்கள்? இன்னமும் மாவையும் சம்பந்தனும் சொல்லுறதை நம்பிறீங்களா? அரசியல்தான் அவர்களுக்கு வருமானம். இப்பிடி போராட்டம் என்று புலம்பாவிட்டால் நீங்கள் அள்ளி அள்ளி கொடுப்பீர்களா? இல்லைதானே? அதனால்தான் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கே வாழ்வுரிமை இல்லாவிட்டால் இப்பிடி போராட்டம் வெடிக்கும் என்று புலம்பிக்கொண்டு வாழ முடிந்திருக்குமா? இவர்கள் அனுபவிக்கும் வாழ்வுரிமையை அங்கே போய் நீங்களும் அனுபவிக்க
 3. ஊரிலே வாழ்வுரிமையும் வாக்குரிமையும் கொண்டு வாழ்கிறார்கள், புலம்பெயர்ந்த நீங்கள் உரிமையை பேரம் பேசுகிறீர்கள். உரிமைகள் வேண்டாம் என்றா ஓடிவந்தீர்கள்?
 4. உடையார், பனம் பொருள் அபிவிருத்தி சபை இணைத்தளம் பூஞ்சணத்தில் இருந்து பாதுகாக்கவும் நிறத்தை பேணவும் சில இரசாயனங்களை பரிந்துரைத்துள்ளனர். அவர்களிடம் இதற்கான ஆய்வுகூடமும் உள்ளது. இந்தியாவில் மஞ்சள் நீரில் குருத்தோலைகளை அவிப்பதாகவும் விளக்கி உள்ளனர். நன்றி.
 5. நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.
 6. நல்ல தகவல்ளுக்கு நன்றி. மேலும் ஒரு ஆய்வாளரை சம்பளத்துக்கு அமர்த்தி இன்றைய விலைகள், இலவசமாக பனையேறக் கூடிய இடங்களை ஆய்வு செய்ய நினைக்கிறேன். பனையோலையை கடதாசியால் 6 மாதங்களுக்கு மூடிவிட்டால் குருத்து போல வெளிறிவிடும் என்று யாழ். பல்கலைக்கழக ஆய்வு தெரிவிப்பதாக பனம்பொருள் அபிவிருத்தி சபை தகவல் பரிமாறியுள்ளது. ஆகவே குருத்தோலை கிடைக்கும் அளவை கூட்டவும் முடியும். கீழே உள்ளது போன்ற ஏணியை உள்ளூரில் உற்பத்தி செய்தால் பனையேற உதவும் போல தெரிகிறது. இது 21 அடி உயரம்.
 7. தகவல்களுக்கு நன்றி. பனைமரங்களின் சொந்தக்காரருக்கு எப்படி பணம் கொடுக்கப்படுகிறது என்று தெரியமா? வருடம் காணிக்கு குத்தகை மாதிரியா? அல்லது மரத்துக்கு பணம் கொடுக்கப்படுகிறதா? மரம் ஏறும் தொழில் இலாபமற்றது என்பது புரிகிறது. பனையை பணம் தரும் பயிராக்க மரம் ஏறும் இயந்திரங்கள் பற்றிய ஆய்வுகள் தொடங்கி இருக்கின்றன. இவற்றில் கவனம் செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும் போல தெரிகிறது.
 8. நன்றி, பனங்கொட்டையிலிருந்து பனம் வடலி ஒன்று உருவாகி, குருத்தோலை தருமளவுக்கு வளர எவ்வளவு காலம் எடுக்கும்?
 9. ஏ.எல். முடிவுகளில் பல்கலைக்கழக அனுமதி பெற முடியாமல் போனவர்களுக்கு இங்கே அனுமதி கிடைத்தது. பின்னர் இடம்பெற்ற மாற்றங்களுக்கான காரணங்களை நான் ஆராயவில்லை. இந்த இணைப்புகளையும் பாருங்கள். https://en.m.wikipedia.org/wiki/Junior_University_Colleges_(Sri_Lanka) https://www.ugc.ac.lk/en/universities-and-institutes/other-recognized-degrees.html
 10. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரிலேயே இலங்கையில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. பனையோலையில் செய்யப்படும் தொப்பி, கைப்பை, இடைப்பட்டி போன்றவற்றுக்கு நல்ல சந்தைவாய்ப்பு சர்வதேச மட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த பொருட்களுக்கு தேவையான குருத்தோலை குறைவாகவே கிடைக்கிறது. இதுபற்றி தெரிந்தவர்கள் கருத்து சொல்ல முடியுமா? போரினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சமுகசேவை நிறுவனங்களூடாக உதவ இந்த கருத்துபரிமாற்றம் வழிவகுக்கலாம்.
 11. கண்டி, பொல்கொல்ல affiliated university college இன் பௌதீகவியல் ஆய்வுகூடத்தை, நான் அங்கு பணியாற்றிய போது அமைத்து கொடுத்தேன். அந்த கல்லூரி இப்போது மத்திய மாகாண பல்கலைக்கழகமாக மாறி விட்டது. வவுனியாவில் இருந்த affiliated university college இப்போது யாழ். பல்கலைக்கழகத்துடன் முழுமையாக இணைந்துவிட்டது.
 12. கோசான், நீங்கள் எழுதியதில் ஓரளவே சரியானது. கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியில் இலவசமாக Diploma கல்விநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி தனியார் நிறுவனம். யாழ்ப்பாண கல்லூரிக்கு சொந்தமானது இது. இங்கு பிரித்தானிய Charted Engineering பரிட்சைக்கான கற்கைநெறிகள் 1982இல் இருந்தே வழங்கப்படுகின்றன. Diploma கற்கை நெறிகளும் உண்டு. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான கல்லூரிகள் உண்டு. இவை தவிர பிற்காலத்தில், 1990இல் இருந்து Affiliated University Colleges அமைக்கப்பட்டன. இவற்றில் சில இன்று பல்கலைக்கழகங்களாக மாறி விட்டன. https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_உயர்_த
 13. உங்களுக்கு புரியவில்லை, இல்லையா? சீனா, இந்தியா, இலங்கை, இந்து சமுத்திர பிராந்திய வல்லரசுகளின் நகர்வுகள், கொள்கைகள் பற்றிய அறிவில் தவறிருப்பதை அடையாளம் காண நல்ல சந்தர்ப்பம் இது.
 14. சாத்தியமில்லாததை சாத்தியமாக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்றதையும் சொல்லலாமே? அதற்குள் உங்களது இன்றைய தேவை நாளை தேவையற்றதானால்... உருவாகாது, இல்லையா? உங்களது இன்றைய தேவை சாத்தியமாக எடுக்கும் காலத்தில், இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழ்மக்களுக்கு இந்த சங்கதி தேவையற்றதாகி விடும். நீங்களும் இந்த உலகுக்கு பிரியாவிடை கொடுத்து, ஆண்டுகள் பல கடந்துவிடும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.