• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கற்பகதரு

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  2,098
 • Joined

 • Last visited

 • Days Won

  4

கற்பகதரு last won the day on May 11

கற்பகதரு had the most liked content!

Community Reputation

431 ஒளி

About கற்பகதரு

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

2,949 profile views
 1. அரசியலுக்கு அப்பாற்பட்ட விதத்திலேயே அபிவிருத்தி சாத்தியமாகும். உள்ளூர் - வெளிநாட்டு சமூக சேவை நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் பொருத்தமான வகையில் ஒன்றிணைந்து, அரசியல்வாதிகளுக்கும், ஏனையாருக்கும் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படும் இலஞ்சத்தையும் கொடுத்து, கோவிட்-19 காரணமாக பரம ஏழை நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வேகமான அபிவிருத்தியை பொருத்தமான தொழில்நுட்ப முயற்சிகள் மூலம் முன்னெடுக்க புலம்பெயர்ந்த தமிழரும் அவர்தம் அமைப்புகளும் முன்வர வேண்டும்.
 2. என்ன அண்ணை, இந்த சின்ன சங்கதி கூட புரியவில்லையா? எல்லாருக்கும் “மேலே” வர ஆசை தானே? ****** ****** சில கொசுறு செய்திகள்: யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னர் இருந்த விரிவுரையாளர் கனகராஜா (இப்போது கனடிய பல்கலைக்கழகம் ஒன்றில் பெயர் கண்ட நினைவு) யாழ்ப்பாணத்து சாதிகள் பற்றி விரிவான ஆய்வு செய்தார். அதன்படி எல்லா சாதிகளிலும் அவர்களுக்கு கீழாக தாழ்த்தப்பட்ட சாதி ஒன்று உண்டு. அதியுயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட தங்களுக்குள் உயர்வான சாதி, கீழான சாதி என்று உபசாதி பிரிவுகளை கொண்டுள்ளார்கள். புலம்பெயர்ந்து பணபலமுள்ள நாட்டுக்கு போனால், அவர்கள் வேகமாக “மேலே வந்து” வெள்ளாளரிலும் உயர்வான சாதியாகி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், புலம்பெயர்ந்த நாடுகளில் வெள்ளாளர் செய்யும் தொழில்கள் உள்ளூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்ட்ட தொழில்கள். தமிழ்நாட்டில் வெள்ளாளர் தாழ்த்தப்பட்ட சாதி. ஈழத் தமிழ் கலாச்சாரத்தின் பெரும்தூண்கள், ஆறுமுகநாவலர் போன்றவர்கள் - தமிழ்கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக சாதியத்தையும், சாதி ஏற்றதாழ்வுகளையும் கருதி பிரச்சாரம் செய்தார்கள். அதை இன்றும் சமுதாயத்தின் பல தூண்கள் நம்புகிறார்கள் - ஆனால் போர்க்கால பாதிப்பால் பெருமளவில் பகிரங்கமாக பேசுவதில்லை.
 3. ம்.... வாக்காளப் பெருமக்களுக்கு எதை தருவதாக சொல்லி தூதரகங்கள் வாக்கு கேட்டிருப்பார்கள்? கனடாவில் அகதி அந்தஸ்து? இந்தமுறை கனடா குடியுரிமை போலும்? எம் வாக்காள பெருமக்கள் அபிவிருத்திக்காக அங்கஜனுக்கு வாக்களிக்காமல் இப்படியான தமிழ்மக்களின் “பிறப்புரிமைகளுக்காக” வாக்களிப்பது நல்லதுதானே? தமிழ் தேசியம் கனடாவில் வாழ்கிறதுதானே?
 4. இந்த உண்மையை சிங்கள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் போருக்கு முற்பட்ட காலத்திலேயே வடகிழக்கில் அதிக இராணுவ கடற்படை முகாம்களை அரசு நிறுவியது. மகாவலி குடியேற்றங்கள் மூலம் வடக்கு கிழக்கை ஊடறுக்க திட்டமிட்டதற்கும் இதுவே காரணம். போருக்கு பிந்திய காலத்தில் இராணுவமுகாம்களை அகற்ற மறுப்பதற்கும் சிங்கள குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரிப்பதற்கும் கூட இந்த பயமே காரணம். “சிறுபான்மை மனநிலை கொண்ட பெரும்பான்மை” என்று சிங்களவரை சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மையானாலும், உலகத்தமிழர் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையின் முன்னால் அழிந்துவரும் தாம் இலங்கையில் தோன்றிய, வேறெங்கும் வாழாத, ஆதிவாசிகள் என்று சிங்களவர் தம்மை கருதுகிறார்கள். ஆகவே தம்மை பெரும்பான்மை தமிழரினதும், பெரும்பான்மை முஸ்லிம்களினதும் ஊடுருவலில் இருந்து பாதுகாக்க எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். சிங்களவரின் இந்த பயமே தமிழரின் அழிவுக்கு காரணம். சிங்களவருக்கு இந்த பயம் உள்ளவரை தமிழரின் அழிவு தொடரும் சாத்தியம் அதிகம். தமிழரும் சிங்களவரும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ தேவையான முயற்சி சிங்களவரின் இந்த பயத்தை போக்குவதே. இணைந்திருந்தாலும் அழிவு, பிரிய முயன்றாலும் அழிவு, பிரிந்த பின்னும் அழிவு. ஆகவே, அழிவுக்கு காரணம் இணைவதோ, பிரிவதோ அல்ல. மேலே எழுதியபடி, சிங்களவரின் பயமே காரணம். அதுவே அகற்றப்பட வேண்டியது.
 5. சுமந்திரன் தான் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்த செய்தியை படித்திருந்தேன். சொன்னது போல செய்யாமல் விடவும் கூடும்.
 6. இந்த பேட்டியில், 21 கோடி ரூபா பற்றிய தகவல் தனக்கு எப்படி கிடைத்தது என்று திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் விளக்கமாக கூறியிருக்கிறார். திருகோணமலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றுக்கு போன இருவர் (அவர்களின் பெயர்களையும் கூறியுள்ளார்.) திரு குகதாசனின் கணணியில் அவர் காட்டிய தகவலை பின்னர் திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபனுக்கு தொலைபேசியில் கூறியுள்ளனர். அந்த தகவலின் படி 212 கோடி ரூபா என்றே பார்த்த இருவரும் கூறியுள்ளனர். பார்த்தவர்கள் 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்ததன என்பதை எண்ணவில்லை என்றும் கூறியிருப்பதாக திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் விளக்கி, அதனால் தானே 212 கோடியை 21 கோடியாக குறைத்ததாக சொன்னார். எப்போது இருந்து எப்போது வரை இந்த காசு வழங்கப்பட்டதாக இந்த கணக்கு காட்டி இருந்தது என்பதும் தெரியாது என்றே குறிப்பிட்டார். எவருக்கு எங்கே வைத்து கொடுக்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் வடக்கில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் கணக்காளர் இப்படி கனடா காசு பற்றி செய்திகள் வருகின்றன, யார் கனடாவில் காசு வாங்கியவர் என்று கேட்டபோது, சுமந்திரன் தான் வாங்கியதாகவும் மற்றவர்களும் வாங்கலாம் என்று சொன்னதாகவும் திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் குறிப்பிட்டார். ஆகவே இந்த சுமந்திரன் வாங்கிய காசு அந்த குகதாசன் காட்டிய 212 கோடியாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன், 212 கோடியை 21 கோடியாக குறைத்து (சைவர்களை எண்ணாத படியால்) , இவ்வளவையும் சுமந்திரன் களவெடுத்துவிட்டார் என்ற முடிவுக்கு வந்தார். இது நடந்து நாலு மாதங்களாக, குகதாசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 212 க்கு பின்னால் எத்தனை சைவர்கள் இருந்தன என்றோ, யாரிடம் இந்த 212 கோடியையும் அவர் கொடுத்தார் என்றோ, இந்த 212 கோடியும் தமிழரசு கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து சேர்த்த காசா, அல்லது கனடா பிரிவு தொடங்கிய காலத்தில் இருந்து சேர்த்த காசா, அல்லது வரும் தேர்தலுக்காக சேர்த்த காசா, அல்லது இவர் சொன்னது போல போரினால் பாதிக்கப்ட்ட மக்களுக்காக சேர்த்த காசா என்று விளக்கம் கேட்கவில்லை என்றும் திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் கூறினார். அப்படி தொலைபேசி மூலமோ, இணையம் மூலமோ தொடர்பு கொள்ளாததற்கு காரணம் கொரோணா வைரஸ் பரவி விடும் என்ற பயம் என்பதையும் தெளிவு படுத்தி, அதற்கு மாற்றீடாக ஊடகவியளாளரை அழைத்து நேரடியாகவே அவர்களை சந்தித்து, தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக விளக்கினார். திருமதி விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் இவ்வளவு புத்திசாலியாக இருப்பதால், சுமந்திரன் தொடர இருக்கும் மானநஷ்ட வழக்கையும் வெற்றிகரமாக எதிர்கொள்வார் என்று நம்பலாம்.
 7. நான் இவை எதையும் எழுதவும் இல்லை சொல்லவும் இல்லை. பொய்யும் புனைகதையும் சொல்லும் இந்த வடைக்கடைக்காரர் இப்படி எத்தனை கற்பனை கதைகளை தமக்கு பின்னால் உள்ள நிறுவனத்தின் தேவைக்காக சொல்லுவாரோ தெரியாது. இப்படியும் ஒரு பிழைப்பு தேவையா?
 8. அவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல - ஏதோ ஒரு நிறுவனத்தின் ஊதியம் மற்றும் செலவுகளின் பொறுப்பில் தமக்கு தரப்பட்ட வேலையை செய்து இருக்கிறார்கள். சிறிலங்கா அரசு அல்லது மொட்டு கட்சியின் பின்னணியிலேயே அந்த நிறுவனம் இயங்குகிறது என்பதே எனது அபிப்பிராயம். பஸிர் காக்காவும் அந்த செயற்பாடுகளுள் அடக்கம். ஆனால் தமக்கு பின்னால் உள்ள உண்மையான பின்னணியை இவர்கள் அறியாமல் இருக்கக்கூடும்.
 9. பஸீர் காக்கா மூத்த போராளி. இத்தனை ஊடகவியலாளர் முன்னால் துணிந்து பேட்டி கொடுப்பதன் காரணம் இவருக்கு ஆட்சியில் உள்ளவர்களின் மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் நிறைவாக கிடைப்பதே. இவர் மேடையேறியுள்ள மண்டபத்துக்கும் ஒலிவாங்கிகளுக்கும் யார் செலவு பொறுப்பை ஏற்றார்கள்? புலிகள் இப்போது இல்லையே? சொந்த செலவில் இதை ஏற்பாடு செய்தார் என்றால் இவர் பெரும் பணக்காரரா? பஸீர் காக்கா சொல்வது போல போரை விரும்புபவர்கள் சுமந்திரனுக்கு ஆதரவளிக்க கூடாது. போரினால் பாதிக்கப்பட்டவர்களும், இனி போர் வரக்கூடாது என்று விரும்புபவர்களும் சுமந்திரனை ஆதரிக்கலாம். சுமந்திரனின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால் புதிய முயற்சிகள் தேவை என கருதுபவர்கள் விக்நேஸ்வரனை ஆதரியுங்கள். வேலைவாய்ப்பு, வணிக முயற்சிகளுக்கு ஆதரவு தேவையானவர்கள் அங்கஜனுக்கு ஆதரவு கொடுங்கள்.
 10. கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் சிங்கள வழக்கறிஞர்கள் கூட தோன்ற பயப்படும் நிலையில் இன்றுவரை தோன்றி வருபவர் சுமந்திரன். சுமந்திரனை தோற்கடிப்பதில் இராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் ஆர்வம் இருப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். போர்க்காலத்தில் இலங்கை அரசின் இரகசிய செயற்பாட்டு பிரிவுகள் மிகவும் சிறப்பான சக்திபடைத்த பிரிவுகளாக வளர்ந்து விட்டன. குறிப்பாக, உளவியல் யுத்தத்தில் அவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இன்று இருப்பதாலேயே, ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான தலைவர்கள் கூட உருவாகாமல் இருக்கக் கூடியதான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலேயுள்ள படங்கள் போன்றவை அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் தேசியவாதிகள் போல தோன்றும் முகவர்கள் செய்து வெளியிடுபவை போன்றே தெரிகின்றன. இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை தமிழர்கள். இந்த யாழ் களத்தில் கூட அப்படி சில “தமிழ் தேசியவாதிகள்” இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நிரூபிப்பது மிகவும் கடினமானது.
 11. மல்லாகத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில் தனது திட்டத்தை விளக்கியுள்ளார். அவருக்கே வாக்களியுங்கள். சுமந்திரனும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் மும்மொழி பாண்டித்தியமும் சட்ட அறிவும் உள்ளவர்கள். சாத்தியமான இரண்டு வெவ்வேறான பாதைகளில் முயற்சிக்கிறார்கள். ஒரே பாதையில் முயற்சிப்பதிலும் பார்க்க பல்வேறு பாதைகளில் முயற்சிக்கும் போது வெற்றிக்கான சாத்தியம் அதிகம் என்பதை நிகழ்தகவு பற்றிய அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை தவிர்ப்பது இந்த வெற்றிக்கான சாத்தியப்பாட்டுக்கு முக்கியமனது. முன்னர் போல ஒரு பாதை மட்டுமே எங்கள் வழி என்று அடம்பிடித்து, மாற்றுப் பாதைகளிகள் தீர்வு தேடுபவர்களை அழித்தொழிக்க முயற்சித்தால் தலைவர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு வரும். வெற்றிக்கான சாத்தியம் மீண்டும் பூச்சியத்தை அணுகும். ஆகவே இருவரும் மாற்றுப்பாதைகளை மதித்து மற்றவர்களையும் முயற்சிக்க விடவேண்டும். இந்த கனடா காசை சட்டவிரோதமாக இலங்கை கொண்டுவர விக்னேஸ்வரன் மறுத்ததில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு சுமந்திரன் அந்த கோபத்தை இனியாவது மக்களுக்காக மறந்துவிட வேண்டும். நன்றி.