Jump to content

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  2867
 • Joined

 • Last visited

 • Days Won

  4

Everything posted by கற்பகதரு

 1. தமிழ் மக்களுக்கும் நிறைய சட்ட உதவிகள் தேவையாக உள்ளதல்லவா? இவர்களிடம் கேட்கலாமா? நீராவியடி பிள்ளையாருக்கும், திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும், விரிவுரையாளர் கண்ணதாசனுக்கும் சுமந்திரன் உதவினார். அவரையும், கள்ளவாக்கு என்று அரச பக்கம் அனுப்பியாச்சு. குருபரன் ஒன்று இரண்டு செய்கிறார். மற்றவர்களுக்கு எங்களிடம் சட்டத்தரணிகள் இல்லாததால், எங்களையும் தமிழ் பேசும் சகோதரர்கள் என்று கருதி உதவுமாறு இந்த முஸ்லிம் சட்டத்தரணி தம்பதிகளுடம் கெஞ்சிக் கேட்டு பார்க்கலாமா?
 2. இங்கே நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் இலங்கையில் தனியார் புலனாய்வு நினுவனம் ஒன்றை ஆரம்பிக்க நிதி தேடும் விளம்பரம் போல தெரிகிறதே? திட்டம் ஏதும் உள்ளதா, அல்லது ஆரம்புத்து விட்டீர்களா?
 3. நாங்கள் இருவருமே அங்கஜனின் வெற்றியை ஆதரிக்கிறோம். மகிழ்ச்சி. அங்கஜனின் வாக்குகள் நேர்மையாக கிடைத்தவை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தியது இன்னும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் ... எங்கே? தேசியம்... ? நாறல்... ? என்ன உளறல் இது?
 4. இவை எல்லாமே உண்மைகள். விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார். நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள். சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம். கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம். வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம். இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.
 5. போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான் STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின் சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது.
 6. சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா?
 7. உலக சுகாதார நிறுவனம் சேகரித்து வெளியிட்டுள்ள தகவலின்படி கொரோனா வைரஸ் 56 பாகை செல்சியஸில் 15 நிமிடத்தில் 10,000 வைரஸ்கள் என்ற அளவில் அழிகிறது எமது மக்கள் சளி கூடினால் வேதி பிடிப்பது வழக்கம். கொதி நீராவியை சுவாசிப்பதை வேதி பிடிப்பது என்கிறோம். நீர் கொதிப்பது 100 பாகையில் என்பதால், கொதி நீராவி 56 பாகை செல்சியஸிலும் கூடவாக இருக்கும். உலக சகாதார நிலைய தரவின் இணைப்பு: https://www.who.int/csr/sars/survival_2003_05_04/en/
 8. யாரவர்? “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?
 9. படித்த தமிழர் என்று பட்டம் வாங்கியவர்களால் பாதை சரியாகப் போட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் படிக்காத தமிழர் பலர் பாதை போட முயன்றார்கள். அந்த பாதை முள்ளிவாய்க்கலை நோக்கி போனது வரலாறு. இப்போது நீங்கள் பாதை போடுகிறீர்கள். முயற்சி செய்வது நல்லதே. இலங்கைத் தமிழரின் பிரச்சினையையும், உலகத்தமிழரின் அவாவான, தமிழர் தேசத்துக்கும் முடிச்சு போட்டு, அதை தமிழீழமாக்கி, இலங்கைத் தமிழரின் பிரச்சினையை தீர்க்க முடியாத அளவு சிக்கலாக்கியதில் பலருக்கும் பங்கு உண்டு. இலங்கைத் தமிழரின் பிரச்சினையை தீர்க்க முதல் படி, அதனை மற்ற பிரச்சினைகளின் சிக்கலில் இருந்து விடுவிப்பது. இரண்டாவது படி, இலங்கையில் தமிழர் வடக்கு - கிழக்குக்கு வெளியிலும் பெருமளவில் வாழ்கிறார்கள், அவர்களும் தீர்வில் சமபங்கு கொள்ளவேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வது. மூன்றாவது படி, என்ன தீர்வு வந்தாலும், சிங்களவர் என்ற பெரும்பான்மை மக்களின் பக்கத்தில் நிம்மதியாக வாழ வேண்டிய தேவையை விளங்கிக் கொள்வது. நான்காவது படி, தமிழரை போலன்றி, சிங்களவர் இலங்கையிலேயே தோன்றிய இனம் என்பதை வெளிப்படையாகவும், உண்மையாகவும் ஏற்றுக் கொண்டு அதற்குரிய மதிப்பையும் தகமையையும் கொடுப்பது.
 10. ஜேர்மனியில் நீங்கள் எப்படி அகதியாக புகலிடம் கேட்டீர்கள் என்று நான் கருத்து கூற உரிமையுள்ளது என்கிறீர்கள்? நீங்கள் செய்த தவறை நான் வெளிப்படுத்தினால், நீங்கள் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிப்பீர்கள் இல்லையா? தொடரலாமா எனது கருத்தை? பிறகு கவலைப்படக்கூடாது.
 11. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார். தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.
 12. என்ன துணிச்சல் இருந்தால் இப்படி தேசியத்தலைவரின் தலைமைத்துவ முடிவுகளிலே குற்றம் காண்பீர்கள்?
 13. நடக்காது என்று தெரியும் கோரிக்கையை முன்வைத்து, அதற்கு காலக்கெடுவும் விதிக்கும் அளவுக்கு அபாரமான புத்திசாலிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முதல் என்றால் பத்தாயிரம் வாக்கு சேர்த்து தருகிறோம் என்று சொல்லியாவது கேட்டிருக்கலாம்.
 14. இந்த கேள்விக்கு சிவாஜிலிங்கம் வழங்கிய சட்டரீதியான சுமந்திரனுக்கு ஆதரவான பதிலை, சசிகலா, அனந்தி, அங்கஜன், சிவாஜிலிங்கம் ஆகியோர் சசிகலா வீட்டில் இருந்து உரையாடும் காணொளியில் நீங்களும் கேட்டு மகிழலாம். சிவாஜி சட்டக்கல்லூரியில் படித்தவர். சட்ட அறிவை வைத்து பொலிஸ், இராணுவம், நாலாம் மாடியை எல்லாம் சிங்களத்திலேயே தலை சுற்ற வைப்பவர்.
 15. பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்! Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி Published: 09 July 2014 Hits: 2585 எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும். அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள்... மேதினம் என்றதும் தங்கள் நினைவில் வருவது....? முதலில் வருவது தோழர்கள் சண்முகதாஸன், இக்பால், சலீம, கே.டானியல் போன்றவர்களும் மற்றும் அடிக்கடி வந்து பழகிப்போன சிங்களத் தோழர்களும் தான. உண்மையில் அது ஒரு வசந்த காலம். மேதின ஊர்வலத்துக்குப் போகிறோம் என்ற உணர்வை விட ஏதோ ஒரு பெருவிழாவுக்குப் போகின்றோம் என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். எனது கணவரும் அவரது தோழர்களும், முதற்கிழமையே எல்லா ஆயத்த வேலைகளையும் ஆரம்பிக்க எல்லாம் களைகட்டிவிடும். எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்த சிங்களத் தோழர்களும் எம்மோடு சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள். அத்தோடு அயல் கிராமத்து தோழர் தோழியர்களை பார்க்கப் போகின்றோம் சந்திக்கப் போகின்றோம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கும். யார் அந்தத் தோழர்கள்...? எனது கணவனின் கட்சியில் இருந்த சில சிங்களத் தோழர்கள் எங்கள் வள்ளத்தில் வந்து வேலை செய்தவர்கள். எப்போதாவது கிடைக்கும் லீவு காலங்களில் மாத்திரம் ஊர் போய் வருவார்கள். அரசியல் வேலை நிமித்தம் காரணமாக எங்களோடு குடும்பமாகவே வந்து வாழ்ந்தவர்கள். இக்பால், சலீம் போன்ற முஸ்லீம் தோழர்களும் எம்மோடு வந்து அரசியல் வேலை செய்தவர்கள். பின்னர் தமிழ் இயக்கங்கள் வளரத் தொடங்க, சிங்கள தமிழ் முரண்பாடுகளும் மேலோங்க அந்தத் தோழர்கள் இருக்க முடியாத சூழல் உருவாக..... இப்ப தெரியும் தானே இன்று இந்த இருண்ட நிலைக்கு எல்லோரும் தள்ளப்பட்டிருக்கிறம். அன்றிருந்த தமிழ் சிங்கள உறவுகள், இன்றிருக்கும் தமிழ் சிங்கள உறவுகள் பற்றி இப்ப என்ன நினைக்கின்றீர்கள்....? இனிமேல் இந்த இரண்டு இனங்களும் சேர்ந்து வாழ முடியாது என்றவொரு மாயத் தோற்றத்தை சிங்களத் தலைமைப்பீடங்களும் அன்றிருந்த தமிழ்த் தலைமைப்பீடங்கள் தொடக்கம் அழிந்து போன தமிழ் இயக்கங்கள் வரை இந்த மாயையை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. காலம் காலமாக இந்த அரசுகள் எப்படி இந்த தமிழ் மக்களை ஒடுக்கி நசுக்கி அடக்கி ஆளுகின்றனவோ அப்படித்தான் சிங்கள மக்களையும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கின்றன. எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் இருக்கின்றது. அன்று ஒரு நாள் ஜே.ஆரின் ஆட்சியை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தின எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய பல தமிழ் தலைவர்கள் ஜே.ஆர் அரசின் விலைவாசி ஏற்றத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கஸ்டப்படுகின்றார்கள் என்றும் தமிழ் மக்கள் பட்டினியால் துன்புறுகிறார்கள் என்றும், அரசானது தமிழ் மக்களுக்கு எதிரானது என்ற கருத்துப்பட பேசிய போது, தோழர் சண்முகதாஸன் அவர்கள் தான் இந்த விலையேற்றமும் பசி, பட்டினிக் கொடுமைகளும் சிங்கள மக்களுக்கும் தான் என்று பேசிய போது அந்தக் கூட்டமே அதிரும்படி எழுந்த சிரிப்பொலியும் கரகோசமும் என்னால் இன்றும் மறக்க முடியாது. அதேநேரத்தில் விடுதலைப்புலிகளின் திண்ணைவேலித் தாக்குதலின் காரணத்தினால் தான் 83 இனக்கலவரம் ஏற்பட்டது என்று பலர் பேசிய போது அதற்கு முன்னர் நடைபெற்ற கலவரங்களுக்கு யார் காரணம் என்று கேட்டு முன்னர் நடந்த இனக்கலவரங்களுக்கெல்லாம் எங்கே விடுதலைப்புலிகள் தாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பியதோடு மட்டுமல்லாது இலங்கைக்கு ஆயுதப் போராட்டம் தான் சிறந்த வழி என்ற கருத்தையும் பகிரங்கமாகவே தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற கலவரங்களின் போதெல்லாம் பல சிங்கள மக்கள் தான் தமிழ் மக்களை காப்பாற்றி பாதுகாத்து அனுப்பி வைத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது. அவ்வளவும் நடைபெற்ற பிறகும் திரும்பவும் தமிழ் மக்கள் போய் தெற்கில் மீண்டும் வாழ்கின்றனர் தானே. காரணம் என்ன... நாங்கள் சேர்ந்து வாழலாம் என்ற அந்த நம்பிக்கை தான். நிட்சயமாக நாங்கள் சேர்ந்து வாழலாம். நானொரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாய் இருக்கிறீர்களா.......? என்று அவர் என்னைப் பார்த்துக் கேட்டார். பதிலொன்றும் பேசாது சிரித்துக் கொண்ட நான் இதையேன் என்னிடம் கேட்கிறீர்கள்....,? என்று நானே அவரிடம் திருப்பிக் கேட்டேன். இல்லை, தமிழ்ப் போராட்டம் என்று ஒன்று உருவாகுவதற்கு முன்னர் என்னுடைய கணவனும் அவரது பல தோழர்களும் ஆயுதம் எடுத்துப் போராடியது எனக்கு நன்றாகவே தெரியும். தமிழருக்கு எதிராக போராடிய போராட்டம் அது. எப்போதாவது கூட்டம் என்றும் சந்திப்புக்கள் என்றும் போய்விடுவார்.... சில நாட்கள் கழித்துத் தான் வருவார். வரும் போது சில தோழர்களும் வந்து தங்குவார்கள். அது பற்றி எனக்கு முதலில் தெரியாது பின்னர் தான் அந்த ரகசியங்கள் எனக்குத் தெரிந்தன. தமிழர்கள் மத்தியில் திறக்கப்படாத பல கோவில்கள் திறக்கப்பட்டன, பல தேநீர் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டதற்கு அந்தப் போராட்டங்கள் தான் காரணம். ஆனால் இன்று வரையும் அந்தப் பிரச்சினைகள் முடியவில்லை...... ஏன் இந்தப் புலம்பெயர் சமூகத்தில் கூட இந்தச் சாதிகளைக் கொண்டு வந்து தமிழ்ச் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது தானே. இன்று இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட நான் பெரிது நீ பெரிது என்று நினைக்கும் இந்த தமிழ் சமூகத்தை நினைக்கும் போது கவலைப்படுவதை விட அதிகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது. இன்று அந்தக் கம்யூனிஸக் கட்சியும் அதன் போராட்டங்களும் பெரிதாக முன்னிலைக்கு வராமல் இல்லாதழிந்து போனது பற்றி என்ன நினைக்கின்றீர்கள். முதலில் எங்கள் கிராமத்திலும் மற்றைய அயல் கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையானவர்கள் மத்தியில் இந்தக் கம்யூனிசவாதிகள் என்றால் கடவுளுக்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள், தெய்வங்கள் இல்லையென்பவர்கள், கோவில்களுக்கு எதிரானவர்கள் போன்ற தப்பான அபிப்பிராயங்கள் சாதாரண பொது மக்களிடத்தில் இருந்தது. வழிக்கு வழி தெருவுக்குத் தெரு வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து காணப்படும் எம்மவர் மத்தியில் இவர்களது செயற்பாடுகளும் வேலைமுறைகளும் எடுபடுவது கஸ்டமான காரியம்தான். இரண்டாவதாக யாழ் மண்ணிலே வேரோடியிருக்கும் சாதிய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடும் போது அடித்தால் திருப்பி அடிப்போம் என்ற கொள்கையை முன்னெடுத்த கட்சியை எப்படி இந்த யாழ் மேட்டுக்குடியினர் ஏற்றுக் கொள்வார்கள். இது ஒரு மிக முக்கிய காரணமாய் இருந்தது. அடுத்ததாக தமிழீழ இயக்கங்களின் வளர்ச்சி. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் அகிம்சை மூலம் தான் தமிழீழம் எடுத்துத் தருவோம் என்ற போது ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இளைஞர்கள் அந்த நேரங்களில் பொலிசையும் ஆமியையும் சுட வெளிக்கிட, எங்கள் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள் என்று மக்களும் நம்பி அவர்களை ஆதரிக்க தமிழ் இயக்கங்கள் வளர இந்தக்கட்சியின் ஆதரவுகள் குறைந்தது உண்மை தான். இந்த மாற்றம் சிங்கள மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை, ஆனால் சர்வதேசப் பிரச்சினைகளால் கட்சிகளில் நிகழ்ந்த மாற்றங்களும் சண் அவர்களின் மறைவும் பெரிய காரணங்களாய் இருந்தது என்று நினைக்கின்றேன். தமிழீழ விடுதலை இயக்கங்கள் பற்றிய உங்கள் கருத்து....? இயக்க ஆரம்ப காலங்களில் பல இயக்கத்தினர், என் கணவனுடனும் அவரது மற்றைய தோழர்களுடனும் வந்து கதைப்பார்கள், பல விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அப்போது எங்கள் தோழர்கள் இந்தத் தமிழீழப் போராட்டம் பிழையானது என்றும் இது ஒரு பாரிய அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என்றும் எடுத்துக் கூறினார்கள். ஆனால் எனக்கு அது அந்த நேரத்தில் விளங்கவில்லை. காலம் அதை இப்போது எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது. அவர்கள் இந்தியாவில் சென்று பயிற்சி எடுத்த தருணங்களில் இந்தியா எமக்கு நட்பு நாடெல்ல என்றும் இவர்கள் தான் இந்த தமிழினத்துக்கே எதிரியாக இருப்பார்கள் என்றும் அடித்துக் கூறியது மட்டுமல்ல 1971 களில் ஜே.வீ.பியை அழித்தொழிக்க சிறிமா அரசுக்கு எவ்வாறு இந்திய அரசு பக்கபலமாக நின்றதோ அதே போல் இந்திய அரசும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தனி அரசை உருவாக விடாது என்று சொன்ன பொது ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவர் பிரபாகரன் அவர்கள் எனது கணவனின் பள்ளித் தோழன், மாத்தையா எனது பள்ளித் தோழன். ஒரு நாள் மாத்தையா அவர்களும் அவரது தோழர்கள் சிலரும் எங்கள் வீட்டில் நடைபெற்ற சந்திப்பின் போது சமுதாயத்தில் அந்த நேரங்களில் இடம்பெற்ற சமூகத்துரோகிகள் ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெற்ற அநியாய கொலைகள் பற்றியும் அவையெல்லாம் போராட்டத்திற்கு, மக்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தாது என்று எனது கணவர் கூறிய போது தனித்தமிழன் இருக்கும் வரை போராடியே தீருவோம் என்று ஆவேசப்பட்டார் மாத்தையா. அதே காலகட்டத்தில் இவரது தம்பியார் உட்பட வேறு சிலர் ஏற்கனவே தோன்றிய தமிழ் அமைப்புக்கள் பிழையென்று புதிய இயக்கத்தை ஆரம்பித்த போது அதுவும் பிழையான பாதைக்கே கொண்டு செல்லும் என்று அவரது தம்பியாருடன் வாதிட்டது எனக்குத் தெரியும். நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பிரச்சினைகளுக்குப் பிறகு இன்று என்ன நினைக்கின்றீர்கள்.....? ஊரில் இருந்த நேரத்தில் எனது கணவனும் இவரது சில தோழர்களும் இயக்கப் போராளிகளுக்கு தங்களால் முடிந்த சகல உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கிக் கொண்டு தான் இருந்தார்கள். இறுதிக் காலங்களில இருக்க முடியாத சூழல் உருவான போது அவரை இயக்கத்தினர் தான் இந்தியா கொண்டு வந்து விட்டார்கள். இந்தியாவிலும், பிறகு வெளிநாடு என்று வந்த பின்னரும் இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய நிலை எங்களுக்குள் இருந்தது. சில காலங்களின் பின்னர் வெளிநாடு வந்த எனது கணவரும் இறந்து விட்டார். இப்ப இயக்கப் பிரச்சினைகளும் முடிந்து விட்டது. மீண்டும் முன்பு தமிழ் தலைவர்களும் இயக்கங்களும் மக்களை ஏமாற்றியது போல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் எடுத்துத் தருவோம். புலம்பெர் தமிழர் இருக்கும் வரை எமது தமிழினத்துக்கு அழிவேயில்லை என்று பசப்பு வார்த்தைகளை கூறி; தமிழ் மக்களைப் பேக்காட்டி மேலும் மேலும் ஏமாற்றாமலும் சீமானும் வைக்கோவும் நெடுமாறனும் வந்து தமிழீழம் எடுத்துத் தருவார்கள் என்று நம்பி இன்னொரு அழிவுப்பாதைக்கு மக்களை இட்டுச் சொல்லாமலும் ஏற்கனவே சண்முகதாசன் போன்ற தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மனதிற் கொண்டு இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் சேர்ந்து வாழ ஒரு அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தான் சாலச்சிறந்தது. வேறு பல விடையங்களும் கதைத்து முடிந்தவுடன் இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் சிங்கள தமிழ் உறவுகளும் ஒற்றுமைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து வருவதை எண்ணி மனம் மகிழ்வதாக திருமதி சாந்தா சிவநாதன் குறிப்பிட நன்றியுடன் விடைபெற்று வந்தேன். முற்றும். http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9077:2014-07-09-13-15-58&catid=320&Itemid=238
 16. இது பேசாப்பொருள் இல்லையோ? WebCam என்று கேள்விப்பட்டதில்லையோ?
 17. விசுகு, உங்கள் தாயார் பற்றிய இனிய நினைவுகள் என்றும் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
 18. வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் ஜோர்ஜ் பெர்னான்டசுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் வை.கோ போன்ற தமிழக அரசியல்வாதிகள் விளக்கித்தான் ஜோர்ஜ் பெர்னான்டஸ் களநிலையை அறிய வேண்டிய நிலையில் இருந்தார் என்பது சாத்தியக் குறைவானதாக தெரிகிறது. இதற்கு காரணம் வை.கோ போன்றே ஜோர்ஜ் பெர்னான்டசும் தனிப்பட்ட முறையில் இலங்கைத் தமிழர் மீது இரக்கம் கொண்டவராக இருந்ததுடன், மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சர் என்ற அளவில் செய்மதிகள் முதல் அனைத்து உளவுப்பிரிவுகளினதும் சேவைகளை பெற்றுக் கொண்டவராக இருந்தார். ஆகவே அவர் தானாகவே களநிலை பற்றி போதிய அறிவை பெற்றுக் கொண்டிருந்தார் - தமிழகத்தில் அதற்கு தங்கி இருக்கவில்லை என்றே தெரிகிறது.
 19. மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சின் ஆதரவு ஒன்றே எல்லாவற்றையும் தீர்மானித்தது. குழந்தைப்பிள்ளைகளுக்கு கூட தெரியக்கூடியதை அறியாமல் இருக்கும் சிலர் யாழ் களத்தில் இருக்கிறார்கள் - ஆதாரம் இதோ:
 20. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் பெரும் இழப்புகளை சந்தித்து வாழும் எம் மக்களை இப்படி “அடிமைகள் சோம்பேறிகள்” என்று சொல்கிறீர்களே? நியாயமா?
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.