Jump to content

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2867
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Posts posted by கற்பகதரு

  1. 6 hours ago, goshan_che said:

    புலிகள் சுனாமி நேரத்தில் PTOMS என்ற ஒரு கட்டமைப்பை கோரினார்களே, நியாபகம் உள்ளதா?

    அதை இலங்கை நிராகரிக்கவும் இதுதான் காரணம். வெளிநாட்டு பண வரவை கையாளும் சுதந்திரம் தமிழர் கைகளில் இருக்க கூடாது.

    எனது நினைவு வித்தயாசமாக இருக்கிறதே? மிகுந்த அளவிலன பேரம்பேசலின் பின்னர் ரனில் PTOMS இடைக்கால நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு சீமேந்தும் தொலைதொடர்பு சாதனங்களும் தமிழீழம் செல்ல அனுமதித்ததும், அந்த வார இறுதியில் சந்திரிக்கா மகிந்தவின் நிர்ப்பந்தத்தில்  அதனால் ரனில் அரசை கலைத்ததும், அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை அமோக வெற்றி பெற செய்ததும், அடுத்து வந்த மாவீரர் நாள் செய்தியில் மகிந்த ஏதோசெய்வார் என்ற நம்பிக்கை வெளிப்பட்டதுமே எனது நினைவு.... அறளை பெயர்ந்து விட்டதோ என்ற பயம் வருகிறது. 🤫

    • Sad 1
  2. 2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

    சிவராம் அவர்கள் தனது உயிருக்கு ஆபத்து என முன்னமே அறியவில்லையா?

    சம்பவங்களை வாசிக்கும் போது தனக்கு ஒன்றும் நடக்காது அல்லது ஒருவரும் தனக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று அசட்டு தைரியத்தில் இருந்தாரோ என எண்ணத்தோன்றுகின்றது. 

    சிவராம் என்னிடம் நேரடியாக நீங்கள் சொன்னது போலவே சொன்னார். 

  3. 4 hours ago, குமாரசாமி said:

    முழங்கால்  சத்திர சிகிச்சை செய்தவர்களும் இந்த ஓட்ட பயிற்சியை செய்யலாமா?

    வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால்  சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும். 

    • Like 3
    • Thanks 3
  4. 2 hours ago, Kandiah57 said:

    பகிங்கரமாக உங்கள் யோசனையை  அறிவியுங்கள் தீர்வு கிடைக்கப்பெற்றபின். உங்களுக்கான  படி வழங்கப்படும். (எனக்கு முழு நம்பிக்கையுண்டு  தீர்வு கிடைக்காது ) ஆனால் இப்போதே  உறுதி தருகிறோம்  இனிமேல் உங்களை எறி மிதிப்பதில்லையென...

    ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு இன்னமும் விரக்தி, வேதனை எல்லாம் ஆரம்பமாகவில்லையா?

  5. 46 minutes ago, விசுகு said:

    இப்படி கனக்க பார்த்தாச்சு 

    புதுசா ஏதாவது விடுங்கள்

    இதை மாதிரி கதை விட்டு கொண்டு இருக்கும் சாணக்கியர் பலர் மக்களால் தூக்கி எறியப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

    கதை தொடர் எல்லாவற்றையும் 10 வருடங்களுக்கு மேலும் ஓட்ட முடியுமா என்ன??

     

    On 15/3/2021 at 06:14, விசுகு said:

    ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு  புரிந்து  கொள்வது??

    எந்தவகையில்  நீ போராடினாலும் எந்த வகையிலும்  நீ கவனிக்கப்படமாட்டாய்

    இது சிறீலங்கா சொல்வதல்ல  உலகம்

    ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது?

    இன்றைய ஈழத்தமிழினத்தின்  மௌனநிலை  என்பதும்   கூட

    மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல

    ஈழத்தமிழினம் தன்னால்  இதற்கு மேல் அழிவை  சந்திக்கமுடியாது

    இதற்கு  மேலும்  தன்னிடம்  போராடும்  வலு கிடையாது என்பதனால்  வந்தது

     

    On 17/3/2021 at 07:51, விசுகு said:

    ஐயா

    நான்  எல்லாவற்றையும் செய்து  பார்த்த வரலாற்றுடனும்

    எனது  சொந்த அனுபவத்துடனும்  இருந்து  கொண்டு

    அதன் உச்ச விரக்தியில்  பேசுகின்றேன்

    அப்படியா? என்ன செய்வது, உங்கள் விதி அப்படி. 

  6. 11 hours ago, விசுகு said:

    ஆனால்  உங்களுடைய கருத்துக்களை  பார்க்கும்போது

    சிங்களமும்  சர்வதேசமும் தமது  இரு கரங்களிலும் தீர்வை  ஏந்தியபடி தவமிருப்பது  போலவும்

    தமிழர்கள் அதை  வாங்காதிருப்பது  போலவும்


    மாற்று வழி மாணிக்கங்களான எங்கள் தீர்வுக்கான பாதைகள் உங்களுக்கு துரோகங்களாக தெரியும் என்று ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் இல்லையா? ஆகவே அவை பற்றி இந்த களத்தில் கருத்து பரிமாற்றம் சாத்தியமற்றது.

    11 hours ago, விசுகு said:

     

    அல்லது  உங்களிடம் தீர்வுக்கான  பாதை  இருப்பது  போலவும்

    அதனை  தமிழர்கள்  முழுமையாக  அழியும்வரை

    நீங்கள்  வெளியடுவதில்லை என்ற உறுதியிலிருப்பது  போலவும்

    திருட்டுத்தனமாக  இருக்கிறது

    மீண்டும், .... இந்தவிதமான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தூர விலகிவிடுவதே என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பானது.

    11 hours ago, விசுகு said:

    நாம்  தான் சொல்கின்றோமே

    எங்களையும்  சேர்த்து

    அல்லது  சேர்க்காமல் எதையாவது  செய்யுங்கள்  செயலில்  காட்டுங்கள் என்று???

    தனியொருவராக இதனை செய்ய முடியாது. சிலரோடு சேர்ந்து. செய்ய முயன்றாலும் வேகமாகவே துரோகிகளாக காட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். ஆகவே நானும் என்னை போன்ற தீர்வுக்கான பாதை தெரிந்த பலரும் ஒதுங்கி இருக்கிறோம். 

    இந்த மாற்றுவழிகளை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் ஈழத்தமிழரின் பொதுசன தொடர்புசாதனங்களையும் சமுக இணையங்களையும் மக்கள் அமைப்புக்களையும் தமது ஆதிக்கத்துள் வைத்திருப்பவர்கள் இவ்வாறாக புதியதொரு பிறப்புக்கு உண்மையாக மனச்சுத்தத்துடன் முயற்சிக்க வேண்டும். 

    முன்னர் ஈழத்தமிழரின் நிலை பற்றி சர்வதேச மாநாடுகள் நடந்தன. இப்போதும் சில இணையவழி கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மாற்று தீர்வுகள், மாற்று வழிகள் பற்றி இவை போன்ற கலந்துரையாடல்கள்   நேர்மையுடனும் உண்மையாகவே மாற்றுவழிகளையும் மாற்று தீர்வுகளையும் காணும் நோக்கத்துடனும் இடம் பெற வேண்டும்.

    இவற்றை ஏற்பாடு செய்யுங்கள், அங்கே சந்திக்கலாம்.

    3 hours ago, Kandiah57 said:

    அந்தவகை என்ன மார்க்கம் எனத் தெரியவில்லை? தெரிந்த ஒரேயாள் கற்பகதருவும் சொல்லுகிறாரிலில்லை.சில சமயம் அது விற்பனைக்குரியவிடயமே தெரியவில்லை

    விலை கொடுத்து பெறாதவற்றின் பெறுமதிக்கு நாம் மதிப்பு கொடுப்பது குறைவு. மாவீரர் நாள் நிகழ்வு முடிய மண்டபம் நிறைந்த மக்கள் வெளியேறும் போது இலவசமாக கொடுக்கப்பட்ட தேசிய தலைவரின் படம் இருந்த வெளீயீட்டின் பிரதிகள் மண்டபத்தின் தரை  எங்கும் சிதறியிருக்க, அவரின் முகத்தை ஏறி மிதித்துக் கொண்டு வெளியேறும் மக்களை கண்டு சகிக்க முடியாமல் அவர்களை ஏசி விரட்டிவிட்டு அந்த படங்களை எடுத்து மேசைமீது அடுக்கி வைத்த எனக்கு இலவசத்தின் பெறுமதி தெரியும். இத்தனைக்கும் இதே தேசியத்தலைவரே முள்ளிவாய்க்காலில் எனது உறவுகள்  பலியானதுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியதும் நானே.

    இலவசமாக கொடுத்தால் என்னையும் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போவார்கள் என்று தெரியும். ஆகவே இலவசமாக கொடுப்பதற்கு நான் அவரல்ல.

  7.  

    On 15/3/2021 at 16:31, Kandiah57 said:

    புதிய வழிமுறையை தேடுவதற்கு உங்கள். ஆலோசனை தேவை....இலங்கையரசு.  தமிழர்களப் பார்த்து  நீங்கள் பிரிந்து போங்கள் என்று கூறுவதற்கு என்ன  செய்யலாம்?

    10 hours ago, விசுகு said:

    உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியவில்லை

    வச்சுக்கொண்டா அவர் வஞ்சகம் செய்கிறார்??

    பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்??

    இப்படி எழுதும் நீங்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன குறைவு என்று ஒதுங்கி போவதே சிறப்பு.

    7 hours ago, குமாரசாமி said:

    உந்த மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்களை நினைக்கத்தான் வயிறு பத்தியெரியுது. உலக அரசியல் தெரியேல்லையாம்.சரி மற்றவனுக்கு உலக அரசியல் தெரியேல்லை எண்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே?

    கண்ணன்மாரே! பத்து வருசமாய் என்ன செய்யிறியள்?

    வன்முறை அல்லது உண்ணாவிரதம் தவிர வேறு எதை பற்றி பேசுபவர்களுக்கும் இங்கே இடம் இல்லை. அப்படியான கருத்துகளை கொண்டிருப்பவர்களை துரோகிகளாக பார்ப்பது ஈழத்தமிழரின் வழக்கம். ஆகவே உங்களுக்கு எஞ்சியுருப்பது:

    7 hours ago, விசுகு said:

    வைதனையே மிஞ்சுகிறது அண்ணா.

    இந்த கேள்வி என்னுள்ளும் உள்ளது அண்ணா ஆனால் விடைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை???

    உங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கு காரணம் நீங்கள் பார்க்க விரும்பாததே. வேறெதுவும் இல்லை.

    • Thanks 1
  8. நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி  உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. 

    மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன.

    இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.

    • Like 2
    • Thanks 1
  9. 2 hours ago, உடையார் said:

    வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் 

    இலங்கைத்தீவு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறி விட்டது. அரசைக் கையாள்வது தான் பேரரசுகளின் முதல் தெரிவாக  இருக்கும். 

    இந்தியா உட்பட.   முதலில் இலங்கை அரசாங்கத்தைக் கையாளும், அப்படி அரசாங்கத்தை கையாள முடியாமல்  போகும் போது தமிழ்மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு இலங்கை அரசாங்கத்தைப் பணிய  வைக்கும். இதைத்தான் இலங்கை இந்திய உடன்படிக்கை வரையிலும் இந்தியா செய்தது.   திரும்பியும் அப்படியொரு நிலை தான்.

    1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி.

    2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும்.

    3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.

  10. 2 hours ago, ஈழப்பிரியன் said:

    பப்பாசி தின்றால் குழந்தைப் பேறு தடைப்படலாம் என்கிறார்கள்.இதனால் குமாரசாமி இந்த முறையை தவிர்ப்பார் என்றே எண்ணுகிறேன்.

    இந்த பப்பாசி காயால் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் விரிவுரையாளராக இருந்த செந்தில்மோகன் உலகப்புகழ் பெற்றார். பிரித்தானியாவிலும் கிறீஸ்தவ ஐரோப்பிய உலகிலும் கருக்கலைப்புக்கு மருத்துவ காரணம் இல்லாவிட்டால் அனுமதி இல்லை. செந்தில்மோகன் கலாநிதி பட்டத்துக்காக தேர்ந்து கொண்ட ஆய்வு, பப்பாக்காயில் உள்ள இரசாயனங்கள் எப்படி கருக்கலைப்புக்கு உதவுகின்றன என்பதாகும். இவரது ஆய்வின் முடிவு பகிரங்கமானதும் உலகப்புகழ் பெற்றார்.

    • Like 2
    • Thanks 1
    • Haha 1
  11. 3 hours ago, தமிழ் சிறி said:

    Bildergebnis für நித்தியானந்தா

    ஜுட்டை....சுவாமி நித்தியானந்தா ஜீ  .... மதம் மாற்றி, விட்டார் போலுள்ளது. :grin:

    எனக்கு பிடித்த சுவாமிகள் ராஜ்நீஷ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர்.

    அவரது ஆசிரமங்கள் இப்போதும் OSHO International Meditation Resort என்ற பெயரில் இயங்கி வருகின்றன.

  12. 24 minutes ago, புங்கையூரன் said:

    மிக்க நன்றி.....நிலாக்கா! 

    இதுக்குத் தான்....எப்பவும்   ....யாழ் களத்துக்கு ஓடி வாறது...!

    நாலு விசயம் தெரிஞ்ச சனம்....எப்பவுமே இருக்கும் எண்ட எனது நம்பிக்கை  ஒரு நாளும்   வீண் போகவில்லை!

    முதலாவது  படம் தான் ....நான் சொன்ன இனிப்பு..!

    AE1.jpg&key=df16d9d15ddc9486f240fb59d4c9

    இலங்கையில் வாங்க விரும்புபவர்கள் “புள் தோசி” என்று கேட்டு முயற்சிக்கலாம்.

    ”தனக்கடா சிங்களம், தன் புறடிக்கு சேதம்” என்பது நானறிந்த துளியளவும் கலப்படம் இல்லாத முற்றிலும் ஈழத்தில் உருவான தனித்துவமான ஒரேஒரு பழமொழி. 😃

    • Thanks 1
  13. 4 hours ago, குமாரசாமி said:

    அங்கேயும் மற்றவர்களின் முரண்பாடுகளை ஏற்க/பரிசீலிக்க தவறியவர்கள் என குற்றம் சாட்டுவதை  நிறுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

    நம்பிக்கை தானா உங்கள் தும்பிக்கை? 😍

  14. On 1/13/2019 at 8:44 AM, Justin said:

    இந்த இடத்தில் இதைக் கேட்கலாமோ தெரியவில்லை, திரிக்கு தொடர்பே இல்லாமல் பின் தொடர்ந்து வந்து காவித் திரிவோரைக் கட்டுப் படுத்த புது விதிகள் ஏதாவது இயற்ற வேண்டுமா அல்லது இருக்கிற விதிகளே போதுமா? 

    யாழ் களத்தை பொழுதுபோக்கும் களம் ஆகவே பலரும் பயன்படுத்துகிறார்கள். 

    சிலருக்கு மற்றவர்களை சீண்டி பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். எனக்கும் அப்படி பிரியமானவர்களுடன் சுரண்டி விளையாட சிலவேளைகளில் ஆர்வம் வரும். அதற்கு தான் யாழ் களம் பொருத்தமாக தெரிகிறது. தமிழ் மொழியில் உங்கள் ஆக்கங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இவ்வாறான முரண்பாடுகள் இல்லாத வேறு பல களங்கள் உள்ளன.

    சில உதாரனங்கள்

    1. Social Science Research Network (  https://www.ssrn.com/en/  )
    2. Research Gate (https://www.researchgate.net/)
    3. LinkedIn (https://www.linkedin.com/)

    இது தவிர, மாதம் 51  அமெரிக்க சதங்கள் செலவிட விரும்பினால் நீங்களே உங்கள் சொந்த தளத்தை Amazon Web Service (AWS) இல் ஆரம்பித்து கொள்ளலாம். நீங்களும் நானும் விரும்பும் வகையிலான கருத்தாடல் இந்த களத்தில் பொருத்தமானதாக தெரியவில்லை.  

     

  15. தேவாலயத்திற்கு செல்லும் ஒரு மனிதனை கிறிஸ்தவன் ஆக்க ஒரு பாதிரியார் முயற்சி செய்யாது விட்டால்.

    அது பெரும் அயோக்கியத்தனம். க்ரிசதவத்தின் ஊடாகவே ஒரு மனிதன் கடவுளின் இராச்சியத்தை அடைந்து நித்திய வாழ்வை அடையலாம் என்று முழுமையாக நம்பி தனது வாழ்வை. கடவுளுக்கு சேவை செய்ய என்று அர்ப்பணித்த ஒரு பாதிரியார் ............. காணும் மனிதர்கள் எல்லோருக்கும் கிறிஸ்தவத்தை போதிக்க வேண்டும்.

    அது அவருடைய முழு முதல் கடமை.

    இது அவர்களது கடமை. இன்று முன்னாள் போராளிகளுக்கு உதவுவதில் முன்னின்று செயற்படுபவர்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ பாதிரிகள். அங்கு உள்ள மக்களுக்கு உதவும் நிறுவனங்களுடன் தொடர்பிருப்பவர்கள் இதை அறிவர். இவ்வாறான உதவி பெறுபவர்களை இந்த பாதிரிகள் மதம் மாற்றுவதில்லை. மாறாக அவர்களின் மத கடமைகளை செய்ய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.

     

    ஒரு நிர்க்கதியான குழந்தையை கூட்டி  சென்று விடுவதற்கு ஈழத்தில் ஏதாவது ஒரு இந்து கோவில் இருக்கிறதா??

    இருக்கிறது. துர்க்கை அம்மன் கோவிலில் மறைந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆரம்பித்து வைத்த அநாதை குழந்தைகளுக்கான நிறுவனத்தை மிகச்சிறந்த பொறுப்பான நிறுவனம் என ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி என்னிடம் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். காரணம் இவர் அவ்வளவு எளிதாக ஒரு இந்து நிறுவனத்தை இப்படி புகழ்ந்து பிரேரிப்பார் என நான் நினைத்திருக்கவில்லை.

    யாழ் களத்தில் இல்லாத மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை, மக்களுக்கு உதவுவதில் இந்துக்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் அங்கு இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.

    • கத்தோலிக்க கிறீஸ்தவ மதங்களும் இசுலாமிய மதமும் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • இந்து மதம் இந்தியா போன்ற நாடுகளின் உள்ளூர் அரசியல்வாதிகளால் அரசியல் பலம்பெற பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • இந்து மதம் ஆதிக்க வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படாத காரணத்தால் தீவிர மதமாற்றத்தை இந்து மதம் செய்யவில்லை.

    இந்து தீவிரவாதத்தை முன்வைத்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராவது மிக அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில், சிவ் சேனா இலங்கையில் உருவாக்கபடுவது, இலங்கையில் மனித உரிமை விடயங்களில் அமெரிக்க-ஐரோப்பிய ஆதரவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்யும் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத் தலைவர்கள் அஞ்சி ஒதுங்க வழிவகுக்கும்.

    நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்துக்களை முதன்மைபடுத்தும் தீர்வை தீவிரமாக அமுல்படுத்த முயலலாம். இவ்வாறான நிலை உருவானால் தமிழ் கத்தோலிக்கர் மற்றும் கிறீஸ்தவர்கள் முஸ்லிம்கள் போல இலங்கை அரசை ஆதரித்து அதன் ஆட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். போர் முடிந்த ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் இலங்கை அரசை தீவிரமாக ஆதரித்து வந்ததை இவ்விடத்தில் நினைவு கூரூவது பொருத்தமானதாகும்.

     

  16. முதலில் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்கள் தானே? அவர்கள் தாய் மொழி தமிழ் தானே? இதில் ஏன் மயக்கம்?

     

    ஒருவரின் தாய் மொழியை வைத்து மட்டுமே அவரின் இனத்தை தீர்மானிப்போம் என்றால் அமெரிக்கர்களும் கனேடியர்களும் கரிபியன் தீவினரும் ஆங்கிலேயர்கள் ஆகிவிடுவார்கள். பல ஆபிரிக்க இனத்தவர்களை இசுபானியார்களாக கருதப்பட வேண்டியிருக்கும். இலங்கை தமிழரும் இந்திய தமிழரும் ஓரினம் ஆகி அவர்களின் தாய்மண் தமிழ்நாடாக இருக்கும். ஒல்லாந்தர்கள் யாழ்ப்பாண தமிழரை மலபார் இனத்தவர் என குறிப்பிட்டு உள்ளதால் யாழ்ப்பாண தமிழரை பின்னர் வந்த தமிழருடன் கலந்த மலையாளிகள் என கருதுவோர் இருக்கிறார்கள்.

    இலங்கை முஸ்லிம்கள் தாம் அரபு வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள்.

     

     

    அவர்கள் தாம் "தமிழர்கள்" தான் என்று எண்ணாதவரை இப்படி தேவையற்ற "நல்லுறவு(?), வல்லுறவு" என உறவுப்பாலம் போட்டே தமிழர்களின் சக்தி வீணாகிவிடும். :huh:

    தனித்து நின்று எந்த சிக்கலையும் தீர்க்க முடியாது என்பது முள்ளிவாய்க்கால் தந்த பாடம். இலங்கை தமிழர் இலங்கையில் பலமற்ற 11.21%. முஸ்லிம்கள் 9.23%. இலங்கையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவான தேவைகளும் சிக்கல்களும் பல இருக்கின்றன. தமிழர் ஆயுதம் ஏந்தியும் சத்தியாக்கிரகம் செய்தும் கடந்த 50 வருடங்களாக வீணாக்கிய சக்தியுடன் ஒப்பிடும் போது இந்த உறவுப்பாலத்துக்கு தேவையானது மிகவும் குறைவான சக்தியே.

    • Like 1
  17. கவிஞர் ஜெயபாலன்,

     

    நீங்கள் மீண்டும் நலமாக திரும்பி வந்தது மகிழ்ச்சிக்குரியது. நானும் சகோதரரை முள்ளிவாய்க்காலில் இறுதி நாளில் இழந்துவிட்டேன். கடந்த ஆண்டு இலங்கைக்கு போய் மீதம் இருக்கும் குடும்பத்தினரை பார்த்து விட்டு வர முடிந்தது.

    நீங்கள் எழுதிய உங்கள்  (தடுப்பு காவல் மற்றும் நாடுகடத்தல் தவிர்ந்த )அனுபவங்களுடன் எனது அனுபவங்களும் ஒத்து இருக்கின்றன. ஸ்ரீ லங்கா காவல் துறையினர் பண்பாக நடந்து கொள்வது பற்றி இரண்டு விரிவுரையாளரிடம் கேட்ட போது அவர்கள் இவ்வாறான மாற்றங்கள் 2005  இடப்பெயர்வின் பின் மக்கள் திரும்பி வந்ததில் இருந்தே ஆரம்பித்து இருந்ததாக தெரிவித்தார்கள். புலனாய்வு துறையினரின் செயற்பாடு அதிக அளவில் முக்கியத்துவம் பெற்று குறிப்பிட்ட அளவில் தமது கவனத்திற்குட்பட்டவர்களில் அரசு அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. பொது மக்களுக்கு எதிரான  குற்ற செயல்கள் அதிகரித்து இருக்கின்றன. ஆனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் காவல்துறை இருப்பாதாக தெரியவில்லை. 

     

    தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும் முஸ்லிம்களும் கூட போரினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். இலங்கையில் தமிழருக்கு மட்டும் விடிவு தேடி அது கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவானது. இன்று  11.21% (2011 சனத்தொகை ) ஆகவுள்ள தமிழர்கள்  88%மான ஏனையவர்களின் ஆதரவும் இன்றி தமக்கு ஒரு விடிவை காணும் சாத்தியம் கேள்விக்குரியது

     

    எல்லோருடைய கவனமும் இன்றைய அரசில் இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சினையை இன்றைய அரசு ஆரம்பிக்கவில்லை. இதற்கு முதல் இருந்த எல்லா அரசுகளுமே இந்த பிரச்சினைக்கு காரணமாக இருந்திருக்கின்றன. எடுத்தவுடன் இந்தியாவுக்கு ஓடும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த பெரும் அழிவின் மூலவேரில் இருக்கிறார்கள். இந்தியா தம்மை பாதித்திருப்பது பற்றி தமிழரிலும் பார்க்க சிங்களவர்கள் மிகவும் அறிந்து இருக்கிறார்கள். இவ்வாறான பொதுவான காரணிகளை அடையாளம் கண்டாவது மக்கள் ஒன்றுபட்டு ஒரு விடிவை காண தங்களை போன்ற செல்வாக்கான வழிகாட்டிகள் உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். எரிக் சொல்ஹெய்ம் முதல் நீதி அமைச்சர் ரவுல் ஹக்கீம் வரை எல்லாரும்  உங்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். நீங்கள் நினைத்தால் இந்த சிக்கலில் இருந்து எல்லா மக்களும் விடுபட உதவ முடியும். திஸ்ஸ விதாரண போன்ற அமைச்சர்கள் தங்களை போன்ற புலம்பெயர்ந்தவர்கள் இந்த சிக்கலை தீர்க்க பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஏற்கனேவே கேட்டிருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவோ செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

     

     

     

     

     

     

     

     

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.