Jude

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    1,676
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Jude last won the day on September 18 2014

Jude had the most liked content!

Community Reputation

308 ஒளி

About Jude

  • Rank
    Advanced Member

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

2,232 profile views
  1. தகுதியுள்ள ஒரு தமிழரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.
  2. அவலத்துக்குள் தள்ளிய நாடுகளுள் இந்தியா, சீனா, சிறி லங்கா அடங்கவில்லையா? அவலத்துக்குள் தள்ளியவர்களுக்கு, அவலத்தை தீர்த்து வைக்கும் கடப்பாடு.. உண்டு என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் அப்படி நினைப்பதாக தெரியவில்லையே? அவர்கள் ஒதுங்கி நிற்க முடியாது என்றும் நீங்கள் தான் சொல்கிறீர்கள், அவர்கள் ஒதுங்கித்தான் நிற்கிறார்கள், என்ன செய்ய முடியும் உங்களால்?
  3. சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து தீர்வு கிடைத்ததா?
  4. மற்றவர்களை குறைவாக மதிப்பிட்டு, உங்களை நீங்களே அதியுயர்வாக கருதி, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக்கொண்டு “என்னைப்போல சாதனை செய்தவன் எவனுமே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதில் உள்ள சந்தோசம் இருக்கிறதே, அதற்கு நிகராக எதுவுமே இல்லை.
  5. முடியாது .... ? அவர் எங்கே இதெல்லாம் முடித்து வைப்பேன் என்றார்? கோத்தா தன்னால் முடியும் என்று சொன்னதெல்லாம் முடித்து வைத்ததுதான் வரலாறு.
  6. சிங்களவர்கள் தோன்றிய நாடு இலங்கை. தென்னிந்திய தமிழ் மன்னர்கள் தமது பெரும் எண்ணிக்கையையும் பணபலத்தையும் கொண்ட படை எடுப்புகள் மூலம் இந்த சிங்கள மக்களை எப்படி வாட்டி இருக்கிறார்கள் என்பதை அந்த தாயின் வேண்டுகோளில் இருந்தும் இந்த சிறுவனின் கவலையில் இருந்தும் அறிய முடிகிறது. மனிதர்கள் எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள். இனவெறுப்பும், கொலைவெறியும் கடும் பாதிப்புகளாலும் இயலாத்தன்மையாலுமே ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் இலங்கையில் யாழ்ப்பாணமே குற்றங்கள் மிகக்குறைந்த, அமைதியான, அறிவாளிகள் வாழும் செல்வந்த நகராக இருந்தது. கடும் பாதிப்புகளாலும் இயலாத்தன்மையாலும் இதே யாழ்ப்பாணத்தவர் உலகில் பல நாடுகளின் எத்தனையோ சட்டங்களை மீறி தாமும் தமது உறவுகளும் வாழ வழி தேட வேண்டியவர்கள் ஆனார்கள். மேலும் பல யாழ்ப்பாணத்தவர்கள், அதில் இளம் பெண்களும் சிறுவர்களும் கூட, தாம் கனவிலும் நினைத்திராத பயங்கரவாத கொலைகளை செய்ய வேண்டியவர்களானார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் அந்த சிறுவன் காமினி, படைகளை கொன்று உயிர்களை அழிக்காமல், தான் தனியே எல்லாள மகராசனுடன் மோதி, வெற்றி பெற்றபின் அந்த அரசனுக்கு சமாதியும் கட்டி, இன்று வரை அதை கடக்கும் எவரும் வாகனத்தில் இருந்து இறங்கி பாதணிகளை களற்றி, மரியாதை செலுத்தி செல்ல வைத்திருக்கிறான். அவனது பெயரான துட்டு (பல் முன்தள்ளிய) காமினி என்பதை இனவெறித்தமிழர் “துட்ட காமினி” என்றாக்கி, அவனை கூடாதவனாக காட்டி, பல தலைமுறைகளாக இனவெறுப்பை தமிழருக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். சிங்களவரும், ஈழத்தமிழரும் இந்த தீவில் வாழ வேண்டியது அவர்களின் தலைவிதி. இந்த இரு இனங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மற்றவரை மதித்து வாழ முயலாவிட்டால் அழிவதை தவிர வேறு எதிர்காலம் இல்லை. “அவர்கள் தான் எங்களை புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் ஒன்றும் அப்படி புரிந்து கொள்ள தேவையில்லை“ என்று தமிழர்கள் நினைக்கும் வரை அழிவு தொடரும். யாராலுமே உதவமுடியாது.
  7. அந்த ஆவணம் பற்றிய திரியில் தொடர்புக்கான அமெரிக்க அதிகாரியின் பெயர், பதவி, இணையம், மின்னஞ்சல் எல்லாம் தந்திருக்கிறேன், பார்க்கவில்லையா? மின்னஞ்சல் அனுப்பியிருப்பீர்கள் தானே? கிடைத்த பதிலை ஏன் எங்களுக்கு மறைக்கிறீர்கள்? உண்மையை மறைக்கலாமா?
  8. ரதி, மற்றவர்கள் எதிர்ப்பார்கள் என்று அஞ்சாது உங்கள் கருத்துகளை துணிவாகவும், அதேவேளை பண்பாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகச்சரியாகவும் சொல்லும் நீங்கள் பாராட்டுக்கு உரியவர்.
  9. இந்த இலக்கண, இலக்கிய தவறுகள், வேறுபாடுகள் எல்லாம் இங்கே அமெரிக்க அரச ஆவணங்களில் பொதுவாக இடம்பெறுபவை. இதற்கு காரணம் இந்த அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்ல. ஆங்கிலத்தை தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதே அவர்களின் தேவை. சந்தேகம் இருப்பவர்கள் இலகுவாக ஒரு மின்னஞ்சலுடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஏதோ என்னால் முடிந்ததை செய்து இருக்கிறேன் .
  10. Law and Policy Office, Department of Justice இணைப்பு இதோ: https://www.justice.gov/nsd/sections-offices#law தொடர்புகளுக்கு தந்து இருக்கும் இணைப்பு: CONTACT National Security Division nsd.public@usdoj.gov National Security Division தலைமை: LEADERSHIP John C. Demers Assistant Attorney General for National Security இவருக்கு கீழே இருக்கும் Law and Policy Office தலைவர் என்று தான் Christopher Hardee என்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார். இது போலியானது என்றால் அமெரிக்க அரசை பொறுத்தளவில் அது பாரிய குற்றமாகும். சர்வதேச விசாரணையை FBI உடனடியாக முடுக்கிவிடும். உங்கள் சந்தேகத்தையும், நீங்கள் வைத்து இருக்கும் ஆதாரங்களையும் John C. Demers Esq வின் கவனத்துக்கு என்று போட்டு மேற்படி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். நிச்சயமாக தொடர்பு கொள்வார்கள் (அனுபவம் பேசுகிறது ). அமெரிக்க அரசின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிரிவுக்கு பிடித்தமானவராக போகும் சந்தர்ப்பமும் உள்ளது.
  11. இவர்கள் உண்மையிலேயே இவ்வாறு நம்பினால் இவர்கள் செய்ய வேண்டியதும் செய்திருக்க வேண்டியதும் முற்றிலும் வேறானவை. தமது பிள்ளைகளை கண்டுபிடிக்க, இவர்கள் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை புலம்பெயர்ந்த தமிழரின் பண ஆதரவுடனும், இலங்கையில் வேலை வாய்ப்பு தேடும் முன்னாள் புலனாய்வாளர் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளின் பணத்துக்கு பெறத்தக்க அறிவு, தொழில் செயற்பாட்டுடனும் நிறுவி இருக்க வேண்டும். தமிழ் தேசிய அரசியல், ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாக தங்கள் பிள்ளைகளை மேற்படி நிறுவனத்தின் ஊடக ஒவ்வொருவராக முழுமையாக கவனம் செலுத்தி கண்டுபிடித்து இருக்கலாம். இப்படித்தான் யூதர்கள் இரெண்டாம் உலகயுத்தத்தின் பின் தம் உறவுகளை தேடினார்கள். இனியும் இவர்கள் இதை செய்யலாம். தமிழ் தேசிய அரசியலும் சிவாஜிலிங்கமும் இவர்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கும் ஆற்றல் அற்றவை.
  12. ஏற்கனவே சொன்னதை தான் சொல்கிறேன். அவரிடம் சிறந்த ஆற்றலும் தலைமைத்துவமும் இருக்கிறது, அவற்றை கொண்டு அவர் மக்களுக்கு மீண்டும் உதவினால் நல்லது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் அக்கறை செலுத்துவதில்லை.
  13. கோத்தபாயவுக்கு 51.66% வாக்குகள் கிடைத்துள்ளது சஜித்துக்கு 42.59% வாக்குகள் கிடைத்துள்ளது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாக்குகளால் கோத்தபாய வெற்றி பெற்றுள்ளார்.
  14. சிவாஜிலிங்கத்துக்கு வீணான வாக்குகள் 25,844?
  15. 15 மில்லியன் வாக்குகளுள் 3 மில்லியன் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளது. 89 என்பது சிறிய தொகை - 89% அல்ல. தாம் வெற்றி பெற்றுள்ளதாக இப்போது அறிவித்து இருப்பதன் நோக்கம், பின்னர் உண்மையில் இவர்களின் தோல்வி அறிவிக்கப்படும் போது, அது பொய்யானது என்று சொல்லி கலவரங்களையும் இராணுவ புரட்சியையும் ஆரம்பிக்க ஏதுவாக.