Nitharsan

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    732
  • Joined

  • Last visited

Community Reputation

53 Good

About Nitharsan

  • Rank
    உறுப்பினர்
  • Birthday ஞாயிறு 14 டிசம்பர் 1986

Contact Methods

  • Website URL
    http://www.gaspricetalk.com
  • ICQ
    0
  • Skype
    Nitharsan_143

Profile Information

  • Gender
    Male
  • Location
    Canada
  • Interests
    புதிய விடங்களைஅறிதல், மற்றும் உருவாக்குதல்
  1. 5 reasons to eat more cherries 1. Ease aching joints Cherries’ rich red colour comes from anthocyanins—the antioxidants found in grapes (and red wine)—that inhibit enzymes associated with inflammation, and may help soothe soreness linked to muscle and joint pain. 2. Guard your colon These mighty fruits also contain quercetin, which is a flavonoid with anti-carcinogenic activity. New research in the Journal of Nutrition found it helps prevent damaging lesions—thought to be a predictor of tumours—from forming in the colon. 3. Control cholesterol All cherries are high in pectin—a soluble fibre that helps to prevent heart disease by lowering “bad” cholesterol. 4. Help your eyesight Sour cherries contain 19 times the amount of beta-carotene found in blueberries. A precursor to vitamin A, it helps maintain eyesight and healthy skin. 5. Improve your sleep Cherries, part of the stone fruit family that includes apricots, peaches and plums, are one of the few known food sources of melatonin, a naturally occurring hormone that helps to regulate the body’s circadian rhythms and our sleep patterns. http://www.besthealthmag.ca/best-eats/nutrition/5-reasons-to-eat-more-cherries
  2. இணைப்புக்கு நன்றி, நமது ஊடகங்கள் பல வீரா அண்ணாவை மறந்திருக்கலாம்....!
  3. கார் வாங்கும் போது...நாம பாக்கிறது 1. வருடம் 2. நிறம் 3. கிலோ மீற்றர் 4. காரின் வரலாறு பெரும்பாலும் ஜேர்மன் கார்களும்... அமெரிக்க வாகனங்களுமே வாங்க பிடிக்கும்... ஜேர்மனி கார்களில் பிடிக்காத விடயம் அதன் மெயின்ரெனன் .... யானை விலை.... குதிரை விலை... உதிரிப்பாகங்கள்...$120 மணித்தியால லேபர். BMW விட Audi உள்ளும் வெளியும் நன்றாக இருக்கும்.... ! வாங்குங்க... ஏ 8 8 சிலின்டர்....4.2 லீட்டர் இன்ஜின்.... பறக்கலாம் அதிவேக பாதையில்..... சோகம் என்ன என்றா....12மாதத்தில் 11 ஸ்பீடிங் ரிக்கற்.... (சத்தியமாக)
  4. கண்டிருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம்... high school : Nelson A boylen C,I (Jane and falstaff, North York) இங்கு தமிழ் மாணவர்கள் என்று ஒரு 10 -15 மட்டும் தான். college: centennial college progress campus. (இங்க நம்ம ஆக்கள் நிறைய கண்டிருக்க சந்தர்ப்பம் இருக்கு)
  5. ஆதை விட யாழின் மூலம் இணைந்த ஜேர்மனியை சேர்ந்த சோழியன் அண்ணா, அப்போது இங்கிலாந்தில் இருந்த கணிணிப்பித்தன், தற்போதும் கருத்தெழுதும் குருவி அண்ணா, தமிழினி, கனடாவிலிருந்து சந்திக்க முடியாமல் போன கவிதன் அண்ணா, விஸ்னு, பிரியசகி, இலங்கையில் இருந்து எழுதிய ஹரி அண்ணா,(எனக்கு ஜீ மெயில் அழைப்பை அனுப்பியவர் இவர் தான்) நிலா அக்கா, கனடாவிலிருந்து எழுதிக சிறிரமணன், பிரித்தானியாவிலிருந்து எழுதும் சனியன் அண்ணா…! அனைவரும் தொலை தூரங்களில் இருந்தாலும் ஒரு குடும்பமாய் மாலைத் பொழுதில் எம்.எஸ்.என்னில் அரட்டை அடிப்போம்…
  6. மீண்டும் பலரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தமிழ் சிறி அண்ணா, யாழில் high School படிக்கும் போது இணைந்தேன்…. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை அல்லது நான் அறிந்திருக்கவில்லை. தமிழை தட்டச்சு செய்வதற்க்கும், தமிழில் இணைங்களை உருவாக்குதற்க்கும் யாழ் கற்றுத்தந்தது. குறிப்பாக இளைஞன் அண்ணா, பொறுமையோடு எம்.எஸ்.என்னில், ஸ்ஹைப்பில் எல்லாம் வந்து சொல்லித் தருவார். முதல் முதலாக யாழில் முலம் நேரடியாக அஜீவன் அண்ணாவை சந்திக்கும் பொருட்டு நாம். ரொரன்ரோவில் ஒன்று கூடினோம், நான் அருவி, ரமா அக்கா, சினேகிதி மற்றும் ரசிகை அக்கா, இவர்களோடு அர்ஜீன் அண்ணா மற்றும் அஜீவன் அண்ணா இருவரும் இணைந்து முதல் முதலாக நேருக்கு நேர் சந்தித்தோம். அதன் பின்னரும் பலரை சந்தித்தித்தோம்… இன்று இவர்களின் பலர் யாழின் வாசகர்களாக மட்டும் மாறியிருக்கிறார்கள், நானும் அப்படியே சில காலம் எழுதவில்லை. ஆனால் மீண்டும் எழுத சந்தர்பப்ம் கிடைத்துள்ளது எழுதுகிறேன் முடிந்தளவுக்கு... இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் யாழால் இணைந்த, அருவி, ரமாக்கா, இரசிகை அக்கா, தூயவன் அண்ணா, சினேகிதி, மணிவாசன், போன்றோர் யாழுக்கு வெளியே இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். ஆனாலும் யாழில் எழுதும் கனடா வாழ் உறவுகள் பலரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப நேரங்கள் கிடைப்பது அரிது. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு உண்டு. இன்னும் பல கனடா யாழ் உறவுகளை அறிவேன் ஆனால் நெருக்கமான பழக்கம் யாழுக்கு வெளியில் இல்லை. குறிப்பாக சகாரா அக்கா, கலைஞன் அண்ணா, குளைக்காட்டான், அர்ஜுன் அண்ணா, நிழலி அண்ணா இன்னும் சிலரின் பெயரை மறந்து விட்டேன் மன்னிக்க… 2009 ம் ஆண்டு எனது சகோதரியின் வீரச்சாவின் போது பெரும்பாலான யாழ் உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஆந்த நேரத்தில் யார் யார் வந்தார்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்த முடியவில்லை மன்னிக்கவும், ஆனால் யாழ் ஒரு இனிய குடும்பம். இந்த உறவு நிலை தொடர வேண்டும்..!
  7. ஏதாவது புரியும் படி எழுத முயற்ச்சிகலாமே....சனி யரே
  8. கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் -ரொரன்ரோ
  9. இந்த அமைப்புக்கள் எங்கிருக்கின்றன? அறிக்கை விட்டவர்கள் அறியத்தருவார்களா? மாவீரர் தினத்தை தமது சுயநல அரசியலுக்கு பாவிக்கும் இருதரப்பையும் கண்டிக்க வேண்டும்..! ஒன்றாய் இருந்தவர்களுக்கு போட்டி என்றால் ரோட்டில போய் நிண்டு தெருச்சண்டை பிடிக்கட்டும் எதுக்கு மாவீரர் பெயரில் மக்களை குழப்புகின்றனர். தமிழர் நினைவெழுச்சி அகவம் சில விட்டுக்கொடுப்புக்களையும், தமிழர் நினைவு அறக்கட்டளை மேலும் அனுசரித்தும் சென்றிருக்க வேண்டும். மாறாய் தேசியத்துக்கு உண்மையாக செயற்படுவோரையும் தமது அரசியலுக்கு பலியாக்குவதை எற்றுக்கொள்ள முடியாது. இப்போதும் இருதரப்பாலும் பல்லாயிரம் டொலர்கள் வீண் விரையமாக்கப்படுகின்றது. இதையும் கவனத்தில் கொள்ளுதல் நல்லது.
  10. வரிகளும் வரிகளுக்கேற்ற வார்த்தையும்...ஒரு சிலரால் தான் முடியும;.. அது உங்களால் முடிகிறது
  11. இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையான அச்சத்தை இப்போதும் ஏற்படுத்துபவர்கள் மாவீரர்கள். தமது வீரத்தாலும் அதி உன்னத தியாகத்தாலும் இனவிடுதலைக்கு உரமானவர்களின் ஆன்மா இன்றும் விடுதலைக் கனவினை சுமந்தவாறே அந்த மண்ணை சுற்றிக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் அதன் தலைமையும் இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ அல்லது புலத்தில் இருக்கம் மக்கள் அவைகள் தேசிய அவைகள் நாடு கடந்த அரசாங்கம் போன்றவற்றை பற்றியோ அதிகம் அச்சம் கொள்ளவில்லை. மாறாக தமது இனத்தின் விடுதலைக்கா தமது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான வீரர்களின் தியாகங்கள் தான் அவர்களுக்கு இன்னும் இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதனால் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய போராளிகளில் கணிசமான தொகையினரை விடுதலை செய்துள்ளதாக கூறும் இலங்கை அரசாங்கம் மறுபுறம் மாவீரர்கள் உறங்கும் கல்லறைகளை உடைத்து சிதைத்திருப்பது ஏன் என்பதே முக்கியமானது. அந்த மாவீரர்களின் தியாகம் மட்டுமே இனி விடுதலையின் வீச்சை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்று அரசாங்கம் அஞ்சுகின்றது. அந்த தியாகத்தின் மேன்மையினை தமிழர் மனங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதன் மூலமாகவே தமிழினத்தின் மத்தியில் எரியும் விடுதலைத் தீயை அணைக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகின்றது. மறுபுறம் மாவீரர்களின் தியாகத்தின் வலிமையினை உணராதவர்களாக நாங்கள் அவர்களின் நினைவு தினத்தையும் பங்குபிரிப்பதற்கு எதிர் எதிர் அணிகளாய் மாறி நிற்கின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பு மாவீரர் தினத்தை தேசிய நினைவெழுச்சி தினமாக அறிவித்தததும் விடுதலைப் புலிகளின் தலைவரின் வருடாந்த உரையினை அதில் இணைத்தும் அதன் முக்கியத்துவத்தையும் நோக்கத்தையும் தீர்க்கமாக வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் முக்கிய பதவி நிலைகளில் இருந்தவர்களும் இன்று மாவீரர் நாளின் புனிதத்தையும் அதன் நோக்கத்தையும் மறந்து விட்டார்களோ என்ற சந்தேகங்களை தோற்றுவிக்கின்றார்கள். நமது தனிப்பட்ட கோபதாபங்களை தீர்ப்பதற்கான ஒரு ஆயுதமாக மாவீரர் நாளை பயன்படுத்த முற்படும் நிலை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியினையும் கவலையினையும் தோற்றுவித்துள்ளது. இதுவரை காலமும் மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் நடத்தியவர்கள் தாயகத்தில் வாழும் மாவீரர்களின் குடும்பங்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உரிய முறையில் உதவிகளை வழங்கவில்லை என்ற வாதம் நியாயமானது. இதற்கான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாவீரர் தின நிகழ்வுகளின் போது சேகரிக்கப்படும் பெரும் தொகை பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அந்த நிகழ்வில் தமது பங்களிப்பை வழங்கி வரும் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக அளிக்கப்படும் காணிக்கை உன்னதமான நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை பங்களிப்பாளர்களுக்கு ஏற்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் இந்த விடயத்தை அணுகினால் இது போன்ற சர்சகைகளையும் விமர்சனங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். மாறாக இதுவரை நாங்கள் தான் மிகப் பெரிய அளவில் நினைவெழுச்சி நிகழ்வினை நடத்தி வருகின்றோம் எமது நிகழ்விற்கே அதிகளவில் மக்கள் வருகின்றார்கள் எனவே நாம் நினைத்தவாறு நடக்கலாம் என்று ஏற்பட்டாளர்கள் கருதினால் இது போன்ற இன்னும் ஏராளமான பிளவுகளை எமது சமூகத்தில் ஏற்படுத்தவே அது வழிவகுக்கும். மாவீரர்களின் குடும்பங்களுக்கு உரிய வகையில் உதவிகள் செய்யப்படவில்லை என்பதோடு மட்டும் நின்று விடாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தடுக்க நினைத்தார்கள் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக செயல்பட்டார்கள் என்று தொடர்பற்ற காரணங்களை அடுக்கி தமது தரப்பினை நியாயப்படுத்த முற்படுவது தமிழர் அறக்கட்டளையினரின் தவறான நிலைப்பாடாகவே கருதப்படுகின்றது. இரண்டு விடயங்கள் அதிகம் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு. ஒன்று மாவீரர்களை இழந்து நிர்கதியாகி நிற்கின்ற அவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படத்த வேண்டும். இலங்கை அரசாங்கம் தடைகள் போடுகின்றது உதவிகளை வழங்க முடியாதுள்ளது என்ற காரணங்களை ஐந்து வருடங்களின் பின்னரும் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது அதற்கு மாற்றாக முன்னிலைப்படுத்தப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ தமிழ் மக்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அரச சார்பற்ற மனிதாபிமான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கு தடைகள் இருந்தால் அது குறித்து ஐநாவிடமும் ஏனைய மனித நேய அமைப்புகளிடமும் பகிரங்கமாக முறையிட வேண்டும். கண் மூடித்தனமாக இணக்க அரசியல் அரசாங்கத்திற்கு நோகாத அரசியல் செய்ய முயல்வது அரசியல் தீர்வினைக் காணப்பதற்கான பொறிமுறையாக மட்டுமே இருக்க வேண்டும். இது போன்ற அடிப்படை மனித நேய தேவைகளுக்குள் அரசியலையும் இராஜதந்திர நுட்பங்களையும் கலந்த விடாமல் இருந்தால் இதனை கூட்டமைப்பினால் சாத்தியமாக்கலாம். இரண்டாவதாக புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தவதற்கு வேண்டிய அழுத்தங்களை புலம்பெயர் சமூகம் தாயகத்தில் உள்ள உறவுகளிற்கு வழங்க வேண்டும். நீங்கள் யாருக்காக போராடினீர்களோ அந்த மக்களே உங்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்களே என்று இலங்கை அரசாங்கமும் இராணுவமும் முன்னாள் போராளிகளை வார்தைகளால் கொல்லும் நிலையை மாற்ற வேண்டும். அதே போல் அவர்கள் இயல்பு வாழ்விற்கு திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும். மாவீரர் குடும்பங்களும் முன்னாள் போராளிகளும் அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் அவலங்களை பதிவு செய்து இங்குள்ள மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். ஏட்டிக்கு போட்டியாக நிகழ்வுகளை நடத்துவதற்கும் மேடைகளை அலங்கரித்து தமிழினத்தின் தலைவர்களாவதற்கும் காட்டப்படும் முனைப்புகளில் ஒரு சிறு பகுதியாவது இந்த விடயங்களை நோக்கியதாக மாற்றப்பட்டால் அவர்களின் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் அதனை விடுத்து முன்னர் இடம்பெற்ற சம்பவங்களையும் அரசியல் விருப்பு வெறுப்புகளையும் மாவீர் தினத்துடன் இணைத்து அதன் மூலம் அரசியல் செய்ய முற்படுவது யாருக்கும் எந்த பலனையும் ஏற்படுத்தாது. இது போன்ற விடயங்கள் பொதுவெளிகளில் தொடர்ந்து உரையாடப்படுவதும் விமர்சிக்கப்வடுவதும் அதற்கான சூழ்நிலைகள் அடுத்தடுத்து ஏற்படுவதும் தமிழ் மக்கள் மத்தியில் சலிப்பினையே ஏற்படுத்தும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சுயவிமர்சனம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவை உரிய முறையில் முன்னெடுக்கப்படுவது ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவசியம். புலம்பெயர் மக்களின் பலம் மற்றும் தெளிவான செயல்பாடுகள் மட்டுமே எமக்கான நீதியினை பெற்றுத் தரும். அது எங்கள் ஒற்றுமை என்ற அத்திவாரத்தின் மீதே கட்டியெழுப்ப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் மாவீரர்களின் நினைவிடங்களை அழிப்பதன் மூலம் அவர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் அந்த தியாகத்தின் பின்னால் உள்ள உன்னத நோக்கம் குறித்தும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் அடுத்த தலைமுறையும் சிந்திக்காமல் தடுப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளையே இங்கே முரண்பாடுகளின் பெயரில் முட்டிமோதும் நாமும் முன்னெடுக்கப் போகின்றோமா ? கல்லறை மீதலெம் கைகளை வைத்தோரு சத்தியம் செய்கின்றோம் ... ! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். - ரமணன் சந்திரசேகரமூர்த்தி (கனடா) - நன்றி: செய்தி இணையம்
  12. வித்தியாசமான.. ஆனால் ஆழமான வாிகள்..!
  13. நல்ல முயற்ச்சி தொடருங்கள் நெடுக்ஸ்....
  14. நன்றி சாந்தி அக்கா, புதினத்தை கரனே நிறுத்தினாா் என்பதும், அதற்கு ” தனிப்பட்ட காரணங்களுக்காக” என்று காரணத்தையும் அவா் வழங்கியிருந்தாா். புதினத்தின் வளா்ச்சி பாதையில் பலாின் வீழ்ச்சி இருந்தமையை நான் அறிந்திருக்கவில்லை. மன்னிக்கவும்.
  15. எனக்கு தொிந்து இதுவரையில் எந்த நிதி சோ்ப்புக்கும் ஆதாரங்கள் காட்டப்படவில்லை. தற்போது நிா்வாக மாற்றங்களால் ஏதும் நடந்தால் சாி..! எல்லா கருத்துக்களுடனும் உடன் படா விட்டாலும்....! நாலு கட்டிடங்கள் மட்டும் தான் அண்ணாக்கு தொியும் போல..?